Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவாலயக் காணி எல்லைத் தூண்களை நொறுக்கி சிலர் அடாவடி!

Featured Replies

தேவா­ல­யக் காணி எல்­லைத் தூண்­களை நொறுக்கி சிலர் அடா­வடி!

பொலி­ஸார் பாரா­மு­கம் எனக் குற்­றச்­சாட்டு

 
தேவா­ல­யக் காணி  எல்­லைத் தூண்­களை நொறுக்கி சிலர்  அடா­வடி!
 

மன்­னார் பெரிய கரி­சல் கிரா­மத்­தில் நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில் நடப்­பட்ட எல்­லைத் தூண்­கள் அடித்து உடைக்­கப்­பட்­டன. அத்­து­டன் மனு­தா­ரர் தரப்­பின் வீடு ஒன்­றின் மீது பெற்­றோல் குண்டு வீசப்­பட்­ட­தால் அங்­கி­ருந்த உட­மை­கள் எரிந்து நாச­மா­கின என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யும் நேற்­று­முன்­தி­ன­மும் இடம்­பெற்­றுள்­ளன. சந்­தே­க­ ந­பர்­க­ளைப் பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை என்­றும் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

மன்­னார் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெரிய கரி­சல் கிரா­மத்­தில் முஸ்­லிம் மக்­க­ளும் சிறிய கரி­சல் கிரா­மத்­தில் தமிழ் மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். பெரி­ய­க­ரி­சல் கிரா­மத்­தில் ஒரு தேவா­ல­யம் நீண்ட கால­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. அதற்­கான காணி உறு­தி­யும் உள்­ளது. எனி­னும் இரு தரப்­பி­ன­ரும் அந்­தக் காணிக்கு உரிமை கோரி­வந்­த­னர்.

இது தொடர்­பில் தேவா­ல­யத்­துக்­குச் சார்­பா­ன­வர்­கள் மன்­னார் நீதி­மன்­றில் வழக்­குத் தொடர்ந்­த­னர். தேவா­ல­யக் காணிக்­கு­ரிய உறு­தி­யும் விசா­ர­ணை­யின்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­கள் தரப்­பில் சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணம் மன்­றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அத­னைப் பரி­சீ­லித்த நீதி­மன்று குறித்த காணி தேவா­ல­யத்­துக்கு உரி­யது என்று தீர்ப்­ப­ளித்­தது. காணி­யைத் தேவா­ல­யத்­துக்கு வழங்­கு­மா­றும் அந்­தப் பணியை நேர­டி­யா­கச் சென்று நிறை­வேற்­று­மா­றும் நீதி­மன்­றப் பதி­வா­ள­ருக்கு மன்று கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது.

அதன்­படி கடந்த வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் பொலி­ஸா­ரு­டன் சென்று காணிக்கு எல்­லைப்­ப­டுத்­திய பகு­தியை உறு­திப்­ப­டுத்­தி­னார். இதன்­பின்­னர் கற்­தூண்­கள் நடப்­பட்டு முட்­கம்­பி­கள் வரி­யப்­பட்டு அது எல்­லைப்­ப­டுத்­தப்­பட்­டது.
அவ்­வாறு எல்­லைப்­ப­டுத்­திய பின்­னர் பதி­வா­ள­ரும் பொலி­ஸா­ரும் அந்த இடத்­தி­லி­ருந்து சென்ற சில நிமி­டங்­க­ளில் அங்கு நடப்­பட்ட கற்­தூண்­கள் அடித்து நொருக்­கப்­பட்­டன.

அது தொடர்­பில் நீதி­மன்­றுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் அறி­விக்­கப்­பட்­டது. அன்று பிற்­ப­கல் அந்த இடத்­தில் 3 பொலி­ஸார் கட­மை­யில் அமர்த்­தப்­பட்­ட­னர். நேற்­று­முன்­தி­னம் மதி­யம் எஞ்­சி­யி­ருந்த கற்­தூண்­கள் நொருக்­கப்­பட்­டன. அங்கு கட­மை­யி­லி­ருந்த 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் முன்­பா­கக் கற்­தூண்­கள் நொருக்­கப்­பட்டு, முட்­கம்­பி­கள் அறுத்­தெ­றி­யப்­பட்­டன என்­றும் தொழு­கை­யின் பின்­னர் பள்­ளி­வா­ச­லில் இருந்து சென்­ற­வர்­களே இந்த நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர் என்று மனு­தா­ரர்­க­ளான தேவா­ல­யத் தரப்­பி­ன­ரால் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து வழக்கை முன்­னெ­டுத்­தி­ருந்த தேவா­ல­யத் தரப்­பி­ன­ரைச் சேர்ந்த ஒரு­வ­ரின் வீடு மீது பெற்­றோல் குணடு வீசப்­பட்­டது. அத­னால் வீட்­டி­லி­ருந்த தொலைக்­காட்சி, கட்­டில் உள்­ளிட்ட பல பொருள்­கள் எரிந்து வீடு கரிப்­பி­டித்­துள்­ளது. அது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் மனு­தா­ரர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இ.சாள்ஸ் நிர்­ம­ல­நா­த­னின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­ற­னர். சம்­பவ இடத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பார்­வை­யிட்டு வன்­னிப் பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­றார்.

கற்­தூண்­கள் உடைத்த குற்­றச்­சாட்­டில் மனு­தா­ரர் தரப்­பி­ன­ரால் ஒரு­வர் பிடித்­துப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். அவ­ரைப் பொலி­ஸார் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு சென்­ற­னர். ஆயி­னும் அமைச்­சர் ஒரு­வ­ரின் வாக­னம் பொலிஸ் நிலை­யத்­துக்­குச் சென்று அவ்­வாறு பிடித்­துக் கொடுக்­கப்­பட்­ட­வரை மீட்­டுச் சென்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டி­னார்.

குறித்த பகு­தி­யில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலையை அடுத்து அந்த இடத்­தில் மேல­தி­க­மா­கப் பொலி­ஸார் நிறுத்­தப்­பட்­ட­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் மன்­னார் ஆயர் இல்­லத்­தில் நேற்று மாலை கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. மன்­னார் பொலி­ஸார் பக்­கச் சார்­பாக நடந்­த­மையே இந்­தப் பிரச்­சினை வளர்­வ­தற்­குக் கார­ணம் என்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தார்.

நீதி­மன்­றத் தீர்ப்பை மீறி­ய­வர்­கள், சட்­டத்தை மீறி­ய­வர்­கள் அனை­வ­ரும் அர­சி­யல் பாகு­பா­டின்­றிக் கைது செய்­யப்­ப­டு­வர் என்­றும், அதற்­கா­கச் சிறப்­புக் குழு­வி­னர் அமர்த்­தப்­பட்டு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்­றும் வவு­னியா பிர­திப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கலந்­து­ரை­யா­ட­லில் உறு­தி­ய­ளித்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://uthayandaily.com/story/10403.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இதெல்லாம் சகஜமப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

சிறீலங்காவில் இதெல்லாம் சகஜமப்பா 

இனிமேல் இது சகஜம் ஆகிடும் 

எல்லாறும் நல்லா கவனியுங்கள் முஸ்லிம்களின் அடாவடி வடக்கிலும் தொடங்கி விட்டது. இனிமேல் என்னவெல்லாம் நடக்க போகுதொ !!!!!

நல்லுர் கந்தா உனக்கு புல்டோசர் கமிங் வெர்ரி சூன் !!!!!!

 

புலம் பெயர் புண்ணியவான்கள் எல்லாம்  கோடை காலம் என்பதால் தேர் இழுப்பதில் பிசி

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

எல்லாறும் நல்லா கவனியுங்கள் முஸ்லிம்களின் அடாவடி வடக்கிலும் தொடங்கி விட்டது. இனிமேல் என்னவெல்லாம் நடக்க போகுதொ !!!!!

நல்லுர் கந்தா உனக்கு புல்டோசர் கமிங் வெர்ரி சூன் !!!!!!

 

புலம் பெயர் புண்ணியவான்கள் எல்லாம்  கோடை காலம் என்பதால் தேர் இழுப்பதில் பிசி

புலம்பெயர் புண்ணியவான்கள் என்ன ஐயா செய்யலாம் இந்த விடயத்தில்......

18 minutes ago, putthan said:

புலம்பெயர் புண்ணியவான்கள் என்ன ஐயா செய்யலாம் இந்த விடயத்தில்......

அப்படி கேளுங்கோ.........

நிறைய விடயம் எழுதலாம், ஒரு சின்ன உதாரணம்

சிங்களவனை எதிர்த்து என்ன செய்தோம் அதையே முஸ்லிமைம் எதிர்த்து  செய்ய வேண்டியது தான்........!!!

ஒரு புத்தர் சிலை வைத்தால் ஜெனீவாவுக்கு போறம்

 ஆனால் பள்ளிவாசல் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

அப்படி கேளுங்கோ.........

நிறைய விடயம் எழுதலாம், ஒரு சின்ன உதாரணம்

சிங்களவனை எதிர்த்து என்ன செய்தோம் அதையே முஸ்லிமைம் எதிர்த்து  செய்ய வேண்டியது தான்........!!!

ஒரு புத்தர் சிலை வைத்தால் ஜெனீவாவுக்கு போறம்

 ஆனால் பள்ளிவாசல் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரிக்கிறம்.

அதை தாயக மக்கள் நீதிமன்றம் மூலம் செய்கின்றார்கள் ,ஐ.நா.செல்வதையும் அவர்கள் தான் செய்ய வேண்டும் பாரளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்களின் உதவியுடன்.....

புலம் பெயர் நாடுகளில் இருந்து பஸ்ஸுல் ஏற்றி கொண்டு போவது யார் ??

 

ஜ. நாமுன்றலில் ஆர்ப்பாட்டம் பண்ணுவது யார் ??

 

தாயக மக்களா ?? இல்லையே 

அது ஏன் சிங்களவ்னுக்கு ஒரு சட்டம், முஸ்லீமுக்கு ஒரு சட்டம் ??

 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க வணக்கஸ்தலம் மற்றும் முஸ்லிம் மையவாடி தொடர்பில் தோன்றியுள்ள பிரச்சினையினை வன்முறையைக் கொண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டாம்

 

மன்னார் கரிசல் கிராமத்தில் கத்தோலிக்க வணக்கஸ்தலம் மற்றும் முஸ்லிம் மையவாடி ஆகிய இரு காணிகளின் எல்லைகள் தொடர்பில் தோன்றியுள்ள பிரச்சினையினை வன்முறையைக் கொண்டு தீர்க்க இரு சமூகத்தவரும் முயலக் கூடாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் கரிசலில் முஸ்லிம் மக்களினதும் கிறிஸ்த்தவ மக்களினதும் மதரீதியான காணி விடயத்தில் நீண்டகாலமாக சர்ச்சைகள் நிலவி வருகின்றன; இதனை சுமூகமாகத் தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக நீதிமன்றுக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது, அதன் பிரகாரம் குறித்த கிறிஸ்த்தவ வணக்கஸ்தலத்திற்கான எல்லைகளை நீதிமன்று வரையறை செய்திருந்தது. அந்த எல்லைகளை நீதிமன்ற அலுவலர்கள் அடையாளமிட்டும் இருந்தனர்.

அதன் பிரகாரம் எல்லை வேலிகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த எல்லை வேலிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அத்தோடு வீடொன்றின் அறைக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதற்றமான சூழ்நிலையில் பல்வேறு கட்டுக்கதைகளும் வதந்திகளாக உலாவருகின்றன. இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளும் திரைமறைவில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப்பிரச்சினையினை சுமூகமாகத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பிலும் விட்டுக்கொடுப்புகள் அவசியப்படுகின்றன, இவ்விடயத்தை அரசியல் ரீதியாக நோக்காது சமூகரீதியாக மத ரீதியாக மதத்தலைவர்களின் மத்தியஸ்த்தத்தோடு அணுகுவது சிறப்பானதாகும்.

நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியில்லையென்றால் அதனை மேல்முறையீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும். நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய அமைக்கப்பட்ட சுற்றுவேலிகளை தகர்த்தமை குற்றமாகும்; அதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் அவசியம். அவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதமாக செயற்பட்டவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும்போது அதற்குக் குறுக்காக அரசியல் தலைவர்கள் செயற்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். அதேபோன்று கிறிஸ்த்தவத் தேவாலய அமைப்புக்கு எதிராக குரல்கொடுக்கின்ற முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதமாக அல்லது மதவாதமாக நோக்கி அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளையும் நாம் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படல்வேண்டும். எது எவ்வாராயினும் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினை சுமூகமாகத் தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என்று இரண்டு சமூகத்தவர்களையும் அன்போடு கேடுக்கொள்கின்றேன். என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. – தகவல்; என்.எம்.அப்துல்லாஹ் –

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=147720 .



 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு எதிராக போராடவில்லை சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடினோம் அதை ஐ.நா சபையும் செவிமடுக்கும்,ஆனால் ஒரு மதகுழுவினருக்கு எதிராக ஐ.நாடுகள் சென்று போராடவேண்டிய நிலை இல்லை என்பது எனது கருத்து..

  • தொடங்கியவர்

தேவாலயம் மீது இன்றும் கல் தாக்குதல் – மன்னாரில் பதற்றம்!!

 
தேவாலயம் மீது இன்றும் கல் தாக்குதல் – மன்னாரில் பதற்றம்!!
 

மன்னார் – கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்ப்பட்டது.

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.  அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது.

அசாதாரணை சூழல் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அடுத்து மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோர் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

http://uthayandaily.com/story/10464.html

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Dash said:

புலம் பெயர் நாடுகளில் இருந்து பஸ்ஸுல் ஏற்றி கொண்டு போவது யார் ??

 

ஜ. நாமுன்றலில் ஆர்ப்பாட்டம் பண்ணுவது யார் ??

 

தாயக மக்களா ?? இல்லையே 

அது ஏன் சிங்களவ்னுக்கு ஒரு சட்டம், முஸ்லீமுக்கு ஒரு சட்டம் ??

 

சிங்களவர்களுக்கு எதிராக போராடவில்லை சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடினோம் அதை ஐ.நா சபையும் செவிமடுக்கும்,ஆனால் ஒரு மதகுழுவினருக்கு எதிராக ஐ.நாடுகள் சென்று போராடவேண்டிய நிலை இல்லை என்பது எனது கருத்து..

Edited by putthan

12 minutes ago, putthan said:

சிங்களவர்களுக்கு எதிராக போராடவில்லை சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடினோம் அதை ஐ.நா சபையும் செவிமடுக்கும்,ஆனால் ஒரு மதகுழுவினருக்கு எதிராக ஐ.நாடுகள் சென்று போராடவேண்டிய நிலை இல்லை என்பது எனது கருத்து..

புத்தன், நாம் ஜ.நா வரை செல்ல வேண்டியது இல்லை, எமது கட்டுபாட்டில் உள்ள பிரதேசம், அனால் சிங்களவன் கூட செய்ய துணியாததை முஸ்லிம் செய்கிறான்.

அண்மயில் ஒட்டுசுட்டான் பகுதியில் முஸ்லிம் குடியேற்றதுக்கு எதிராக மக்கள் போராடினர்,

மாகாணசபை உறுப்பினர் சிவகரன் சென்று வாக்குவாதபட்டார்

ரிஷாடே வெளிப்படையாக சீ.வீ மீது குற்றம் சுமத்தினான்

முஸ்லிம்களால் வடக்கு மாகாணம் மீது அறிவிக்கபடாத யுத்தம் ஒன்று ஆரம்பிக்கபட்டு உள்ளது !!!!!

இதற்கு மக்கள் ஈடுபட வேண்டும்!!!!

உதாரணமாக முஸ்லிம் கள்ள காணி பிடித்தால் அவர்கள் வெளியேறும் வரை போராட வேண்டும். அதர்குறிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது மக்கள் எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிரார்கள் 

  • தொடங்கியவர்

மன்னாரில் பதற்றம்: தேவாலய வளாகத்தில் பொலிஸார் குவிப்பு

 

மன்னார்  - கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கப்பலேந்தி மாதா ஆலயத்திற்கு சொந்தமான காணியின் உரிமம் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்துவரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா தேவாலய காணியின் உரிமம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை  காலை 10 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தேவாலய காணி  எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து  வெளியேறிய சிறிது நேரத்தில் பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்த வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது மீண்டும் அடையாளம் தெரியாத  நபர்கள் தேவாலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்மையினால் மக்கள் மத்தியில்  கடும் விசனத்தை ஏற்படுத்தியதுடன், அங்கு பதற்றமான நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியர்கசர், உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோர் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்தரையாடியதோடு மக்களை அமைதி காக்குமாறு வேண்டு கோள் விடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வேறு மதமொன்றைச் சேர்ந்த குழுவினர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கப்பலேந்திய மாத தேவாலய காணிக்கு போடப்பட்டிருந்த வேலித்தூண்களை உடைத்ததாகவும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் கரிசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

-எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.

-மேலும் தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட நபர்கள், கரிசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் வீட்டின் பின்புறம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்திருந்தனர்.

இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இதன் போது குறித்த வீட்டில் காணப்பட்ட மாதாவின் திருச்சுருபமும் எரியூட்டிருந்தது.

இதனால் கடந்த சில தினங்களாக கரிசல் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த மற்றுமொரு மதத்தவர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

மக்கள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், வன்முறையை தூண்டி விட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்ய போதிலும் முக்கிய அமைச்சர் ஒருவரின் அரசியல் அழுத்தம் காரணமாக அவரை பொலிஸார் விடுவித்துள்ளதாக கரிசல் கிராம மக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.

மேலும் குறித்த கிராமத்தில் வன்முறையை ஏற்படுத்தியவர்களை பொலிஸார் கைது செய்யாத நிலையில் அவர்கள் சுதந்திரமாக நடமாடித்திரிவதாக கரிசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் வன்முறையை தூண்டி விட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Mannar-Police-concentration-church-premises

  • தொடங்கியவர்
கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தாக்குதல்
 

image_7ee3d3740f.jpg-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று (09) காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக, மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில், கடந்த வியாழக்கிழமை (06)  காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணி  எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற பதிவாளர், குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (07) பகல், குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து, குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களையும் உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்ற குறித்த நபர்கள், அவ்வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

இதனால், கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸிம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

மக்களினால் அடையாளம் காணப்பட்ட வன்முறையை தூண்டி விட்ட பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை மக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்த போதும் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த நபரை பொலிஸார் விடுவித்துள்ளதாக, கரிசல் கிராம மக்கள் குற்றஞ்சட்டியுள்ளனர்.

இந்தநிலையில், பலத்த பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில், இன்று (09) காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபோது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்ற நிலை நிலவியது.

இதையடுத்து,  கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக் கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சர்க உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, நிலைமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், வன்முறையை தூண்டி விட்டவர்களை முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கருசல் மற்றும் பெரிய கருசல் கிராமங்களில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/கருசல்-கப்பலேந்தி-மாதா-ஆலயத்தில்-தாக்குதல்/72-200206

தேவாலய உடைப்பும் வீடு தீவைப்பும் கடும் கண்டனத்துக்குரியது.

கள்ளக்காணிக் கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகள் தாமதமின்றி கட்டுப்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பின்புலம் அங்கே அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது  ஒன்று செய்ய இயலாது

7 minutes ago, தனி ஒருவன் said:

அரசியல் பின்புலம் அங்கே அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது  ஒன்று செய்ய இயலாது

மக்கள் ஒன்று கூடி போராடினால் அரசியல் பின்புலத்தால் ஒன்றும் செய்ய இயலாது. அது போராடியவர்களுக்கு வெற்றியை பெற்று தரும்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் போராட்டம் வெற்றிகளை பெற்று தர தொடங்கி உள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் கூட முஸ்லிமை எதிர்கொள்ள முடியாது என்றால் தமிழராகிய  நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

மக்கள் ஒன்று கூடி போராடினால் அரசியல் பின்புலத்தால் ஒன்றும் செய்ய இயலாது. அது போராடியவர்களுக்கு வெற்றியை பெற்று தரும்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் போராட்டம் வெற்றிகளை பெற்று தர தொடங்கி உள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் கூட முஸ்லிமை எதிர்கொள்ள முடியாது என்றால் தமிழராகிய  நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.

டாஸ் வடக்கில் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு வருகிரார்கள் இவர்கள் இவர்களை தடுத்து நிறுத்த வேண்டியது அந்த மாவட்ட மக்களே 

2 minutes ago, Dash said:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் கூட முஸ்லிமை எதிர்கொள்ள முடியாது என்றால் தமிழராகிய  நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.

போராடும் வலிமையுள்ள பல தமிழர் தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்துவிட்டனர்!

புலம் பெயர்ந்தது மட்டுமல்ல அவர்களில் பலர் தாய்மண்ணில் உள்ளவர்களை அங்கு ஈர்க்க பலவழிமுறைகளில் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர். எனவே பலர் தாய்மண்ணில் உள்ளவர்களில் கணிசமானவர்கள் எப்ப, எப்படி தாய் நாட்டைவிட்டு ஓடலாம் என்ற கனவிலேயே உள்ளனர்.

இதற்கு பல கேவலமான யுக்திகளை கையாளுகின்றனர். அதிலொன்று மாமனை அல்லது ஒன்றுவிட்ட சகோதரனை திருமணம் செய்து புலம்பெயர்ந்து, பிறகு விவாகரத்து பெறுவது. இவர்கள் உருப்படுவார்களா?

எனவே தாய்மண்ணில் நடக்கும் போராட்டங்கள் வெற்றிபெறுவதில் கணிசமான பங்கு புலம்பெயர் தமிழரிலும், அவர்களின் விவேகமான நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது. 

44 minutes ago, போல் said:

போராடும் வலிமையுள்ள பல தமிழர் தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்துவிட்டனர்!

புலம் பெயர்ந்தது மட்டுமல்ல அவர்களில் பலர் தாய்மண்ணில் உள்ளவர்களை அங்கு ஈர்க்க பலவழிமுறைகளில் தொடர்ந்தும் முயற்சிக்கின்றனர். எனவே பலர் தாய்மண்ணில் உள்ளவர்களில் கணிசமானவர்கள் எப்ப, எப்படி தாய் நாட்டைவிட்டு ஓடலாம் என்ற கனவிலேயே உள்ளனர்.

இதற்கு பல கேவலமான யுக்திகளை கையாளுகின்றனர். அதிலொன்று மாமனை அல்லது ஒன்றுவிட்ட சகோதரனை திருமணம் செய்து புலம்பெயர்ந்து, பிறகு விவாகரத்து பெறுவது. இவர்கள் உருப்படுவார்களா?

எனவே தாய்மண்ணில் நடக்கும் போராட்டங்கள் வெற்றிபெறுவதில் கணிசமான பங்கு புலம்பெயர் தமிழரிலும், அவர்களின் விவேகமான நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது. 

அப்படியானால் சிங்கள இராணுவத்தை எப்படி எதிர்க்க முடியுது ????

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் ஒன்று கேட்கிறேன்.

இந்த விடயத்தில் நாம் ஏன் பொது பல சேனா போன்ற அமைப்புகளுடன், நலன்களின் அடிப்படையில், அதாவது சைவத்திடற்கும் பெளத்ததிற்கும் உள்ள கலாசார தன்மையின் ஒத்த போக்கை எடுத்துக்காட்டி, அந்தரங்க புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படக்கூடாது?

பொது பல சேனா போன்ற அமைப்புகள் தமிழ் கிறிஸ்தவர்கள் பற்றி விளங்கவதற்கு அதிக சிரமம் தேவையில்லை ஏனேனில் சிங்களவர்களிலும்   கிறிஸ்தவர்கள் உண்டு.

மேலும் முஸ்லிம்களின் அடையாளப்படி அவர்கள் தமிழ் (அல்லது டமில்) பேசுகிறார்களேயொழிய, முஸ்லிம்கள் தம்மை தமிழராக அன்றி அரபி வலி வந்தவர்களாகவே காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் அரபி மரபணு ஓர் அணுவளேவேனும் இல்லை.

    

Edited by Kadancha
correction.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.