Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்// காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தார் சம்பந்தன்

Featured Replies

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர்  சந்தித்தார்

 

 

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

tna.gif

கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு  கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில்  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,  மாகாணசபை உறுப்பினர்கள்  கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி  உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21791

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

குருகுலராஜா சம்மின் வலது கையாகிவிட்டாரோ???

  • தொடங்கியவர்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சம்பந்தன் சந்தித்தார்
 

- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 143ஆவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம், நிரந்தர அரசியல் தீர்வைப்பெறவேண்டிய தேவையுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/வன்னி/காணாமலாக்கப்பட்டோரின்-உறவினர்களைச்-சம்பந்தன்-சந்தித்தார்/72-200427

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தார் சம்பந்தன்

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தார் சம்பந்தன்
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று கிளிநொச்சி சென்றார். அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் இறுக்கமான போக்கையே கடைப் பிடிக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் தமிழ்க் கூட்டமைப்பி்ன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே தற்போது கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

http://uthayandaily.com/story/11050.html

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர்  சந்தித்தார்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சியினர் தமது கட்சி உறுப்பினர்களை  சந்திப்பதை

எதற்கு எதிர்க்கட்சி  தலைவர் என எழுதவேண்டும்??

அப்போ

தனது கட்சி  உறுப்பினர்களுக்கே எதிர்க்கட்சி  தலைவரா??

புரியல...

  • தொடங்கியவர்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் கடுமையாக நிற்போம் – கிளிநொச்சியில் எதிர்க்கட்சி தலைவர்

IMG_0149.jpg


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம், எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய  பிரச்சினைகள் தொடர்பில்  நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை  பயணம்  செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி  ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்

காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை  சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன்.என்னுடைய மக்களுக்கு முடிவுச் சொல்ல வேண்டும் என்றும்  கேட்டிருக்கிறேன்.  கொஞ்சம் பொறுங்கோ ஒரு முடிவு தருகின்றோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம், காணாமல் போனோர் விடயம் குடியேற்றம் விடயம் மக்களின் ஏனைய பிர்சசினைகள் எல்லாம் தீரவேண்டும்.  யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஸ்  ஆட்சியில் எதுவுமு; நடைப்பெறவில்லை, ஆனால் தற்போது சிலர கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆனாலும்  அதில்  தாமதங்கள் இருக்கின்ற பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும், எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.

நாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன். காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை முயற்சி எடுக்கின்றோம்  ஆனால் இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும் இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம். முறையான விசாணை நடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் விடயத்தில்  என்ன நடந்தது  என அறியப்பட்டு  அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கபட்டு அவர்களின் வாழக்கையில் அமைதி நிம்மதி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்கு ஒரு திட்டம்  உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம் இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்

இச் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,  ஆகியோரும் கலந்துகொண்டனர்

IMG_0124.jpg

 

IMG_0134.jpg

 

IMG_0150.jpg

 

IMG_0108.jpg

http://globaltamilnews.net/archives/32598

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

IMG_0108.jpg

கோவிந்தா

கோவிந்தா

தமிழருக்கு கோவிந்தா

அடுத்த கட்டத்துக்கு ஆளை தயாராக்கிட்டன்

இன்னும்  50  வருடங்களுக்கு 

கோவிந்தா

கோவிந்தா

தமிழருக்கு கோவிந்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_0150.jpg

IMG_0149.jpg

 

எங்கடை சனத்துக்கும் வேறை வழியில்லையெண்டது வருத்தத்துக்குரிய விசயம்.

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்பது முக்கியமல்ல

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்பது முக்கியமல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது யார் என்பது முக்கியமல்லவென சுட்டிக்காட்டியுள்ள அந்த கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அந்த கட்சி ஒற்றுமையாக செயற்பட வேண்டியதே எதிர்காலத்தின் தேவையெனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தனியாகவும், ஏனைய கட்சிகள் தனியாகவும் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/politics/TNA-should-work-with-cooperation

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள்  இப்ப வெளிக்கிட்டதற்க்கு வலுவான ஏதோ காரணம் இருக்கிரது பின்னுக்கு  அதுவரை .........................

சம்பந்தனுக்கு தோல்விப்பயம் வந்துவிட்டது!

அதனாலேயே கிளிநொச்சி விஜயமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை 140 நாட்கள் திரும்பியும் பார்க்காமல் இருந்த சம்பந்தனின் திடீர் சந்திப்பு நாடகமாடலும் நடந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
‘தமிழரசுக்கட்சி தனியாக இயங்கவில்லை’
-

image_92a4248cda.jpg

தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களுடைய காலத்தில் அவர்களால் இயலுமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது என்பது முக்கியம் அல்ல. உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வருடங்களாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றது. நாங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகத் தான் எங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது தான் முக்கியமான விடயம். 

“தமிழரசுக் கட்சி தனியாவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது நாடாளுமன்ற குழு, நடவடிக்கை குழுவில் கட்சியின் சார்பில் செயற்படுவதற்காக கட்சியின் தலைவர் என்ற வகையில் என்னையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணியும் அரசியல் சாசனம் தொடர்பாக பல விடயங்களில் ஈடுபடுகின்றவர் என்ற காரணத்தாலும் இருவரையும் தெரிவு செய்தது.  

“அவ்வாறு செயற்படுவதன் காரணமாக, எமது செயலகம் சார்ந்து சில அறிக்கைகள் வெளிவரலாம். ஆனால், வேறு கட்சிகளை உதாசீனம் செய்வதாக இல்லை. உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்த போது என்னை மட்டுமே சந்திக்க விரும்பினார். ஆனால் நான் தான் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என கோரி ஏற்பாடுகளை செய்தேன். 

“மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக ஓர் உபகுழு நியமிக்கப்பட்டது. ஆக்குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தான் தலைவர். அவர்களை நாங்கள் உதாசீனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மை சமூகம் நாங்கள் பிரிந்து நிற்கின்றோம் என நினைக்க கூடாது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதாக இருந்தால் அதற்கு அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் சம்மதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நல்ல தீர்வு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக சிந்திக்கலாம்” என தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/வன்னி/தமிழரசுக்கட்சி-தனியாக-இயங்கவில்லை/72-200489

6 hours ago, நவீனன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதாக இருந்தால் அதற்கு அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் சம்மதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நல்ல தீர்வு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக சிந்திக்கலாம்” என தெரிவித்தார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடனடியாக பதிவுசெய்வது அவசியம்! இதில் சிந்திப்பதற்கு எதுவுமே இல்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நல்ல மனதுடன் சம்பந்தனுக்கு ஓர் இறுதிச் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார். அதை வைத்து சம்பந்தன் வழமையான தனது பித்தலாட்டத்தை தொடர்ந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

இல்லையென்றால் விரைவில் ஒருபிரபல சின்னத்துடன் புதிய கட்சி (கூட்டமைப்பு) உருவாகும். அது தமிழரசுக் கட்சிக்கு அதிர்ச்சியும், அவர்களின் சமாதியாகவும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அப்பா முக்கியமில்லை - சம்பந்தன் தெரிவிப்பு

2 hours ago, MEERA said:

எனக்கு அப்பா முக்கியமில்லை - சம்பந்தன் தெரிவிப்பு

ஒருவர் ஒரு சொத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார் / உருவாக்கினார் என்று கொள்ளைக்காரர்கள் கவலைப்படுவதில்லை. கொள்ளையடித்த பணத்தை வைத்து முடிந்தளவு சொகுசு வாழ்க்கையும்  மேலதிக கொள்ளை முயற்சிகளும் தான் கொள்ளையர்களின் தார்மீக மந்திரம். சம்பந்தன் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2017 at 0:31 PM, தனி ஒருவன் said:

இவங்கள்  இப்ப வெளிக்கிட்டதற்க்கு வலுவான ஏதோ காரணம் இருக்கிரது பின்னுக்கு  அதுவரை .........................

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.