Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று மாபெரும் பேரணி !

Featured Replies

காடுகளை அழித்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று மாபெரும் பேரணி !

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர்  வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு  முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்காடழித்து  குடியமர்த்துவதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில்  மாபெரும் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் குறித்த பேரணி காடழிப்பு நிகழ்த்தபடவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நிறைவடையவுள்ளது.

குறித்த பேரணிக்காக முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா ,கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து சமூகவளைதலங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழு வருகைதவுள்ளதாக அறியமுடிகின்றது.

http://www.virakesari.lk/article/21934

  • தொடங்கியவர்

 

காடழிப்பு - சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி
முல்லைத்தீவிலிருந்து நேரலையாக...

  • கருத்துக்கள உறவுகள்

ரோசமுள்ள தமிழர்கள் இவ்வளவுதான். படம் பிடிப்பவர்கள் தான் அதிகமாக நிற்கிறார்கள்.

8 minutes ago, MEERA said:

ரோசமுள்ள தமிழர்கள் இவ்வளவுதான். படம் பிடிப்பவர்கள் தான் அதிகமாக நிற்கிறார்கள்.

மீரா இது மிக குறுகிய காலத்தில் முன்னெடுக்க பட்ட முயற்சி , நன் நினைக்கிறன் வெறும் 2-3 நாள் அவகாசம் தான் இருந்தது அதனால் தான் மக்கள் குறைவு.

 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

மீரா இது மிக குறுகிய காலத்தில் முன்னெடுக்க பட்ட முயற்சி , நன் நினைக்கிறன் வெறும் 2-3 நாள் அவகாசம் தான் இருந்தது அதனால் தான் மக்கள் குறைவு.

 

டாஷ், அங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு இன்று விடுமுறை இருந்தும் .......

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில்  மாபெரும் போராட்டமொன்று இடம்பெற்றது.

DE1bjQKV0AElPyx.jpg

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலய முன்றலில் குறித்த பேரணி ஆரம்பித்து காடழிப்பு நிகழ்த்த படவிருக்கும் கூளாமுறிப்பு பிரதேசம் வரை சென்று நிறைவடைந்துள்ளது. 

20068211_1425713620799873_948918562_n.jp

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர்  வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

20117491_1425714327466469_1502641403_n.j

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து சமூகவளைதலங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழு குறித்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

20134687_1425713307466571_1991104194_n.j

20136314_1425714344133134_21109383_n.jpg

20136784_1425713330799902_153859240_n.jp

20182569_1425717700799465_1663292037_n.j

 

http://www.virakesari.lk/article/21939

25 minutes ago, MEERA said:

டாஷ், அங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு இன்று விடுமுறை இருந்தும் .......

விடுமுறை இருந்த்தாலும் போதிய அறிவுறுத்தல் இன்றி தெரியாது தானே !!!

என்னுடைய நண்பர் ஒருவர் கூட புதுக்குடியிருப்பில் நிக்கிறார் அவருக்கு எதுவும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஏக்கர் காடுகளை அழிக்க... யார் இவர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.வில்பத்தும் அழிகிறது. இந்த சட்டவிரோத அல்லது ரகசிய திட்ட குடியேற்றங்களின் பின்னால் சிங்கள ஆளும் வர்க்கத்தின் உள்நோக்கமும் சேர்த்து கொண்டு செல்லப்படுகிறது என்றே தான் தெரிகிறது.

காடுகளை பாதுகாத்த புலிகள் பயங்கரவாதிகளா.. இயற்கையை அழிக்கும் சிங்கள அரசும்.. அதன் எடுபிடி.. இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளா..?! 

உலகில் பயங்கரவாத முத்திரை குத்தும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு.. ஏதாவது படிப்பறிவு இல்ல.. பட்டறிவாவது இருக்கா...??!  அமெரிக்க ஆதாயம் ஒன்றே அவர்களின் கொள்கை.tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நானாவுக்கு வில்பத்து வில்லங்கம் ஆக்கிவிட்டது.

வில்லங்கம் இல்லாமல் இங்கே புகுந்து விட்டார்.

மட்டக்கிளப்பு, தூசனப் பிக்கர் சுமனை தேரர், தமிழர் காணிகள் குறித்து கவலைப் படும் அளவுக்கு சம்பந்தரின் நல்லெண்ணெய் அருமை.

கிழக்கு முதல்வருக்கு அரசியல் ஆதரவு தருவது கூட்டமைப்பு? எதற்க்காக? tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மட்டக்கிளப்பு, தூசனப் பிக்கர் சுமனை தேரர், தமிழர் காணிகள் குறித்து கவலைப் படும் அளவுக்கு சம்பந்தரின் நல்லெண்ணெய் அருமை.

கிழக்கு முதல்வருக்கு அரசியல் ஆதரவு தருவது கூட்டமைப்பு? எதற்க்காக? tw_angry:

எதிர்கட்சி தலைவர் பதவியை ஹக்கீம் கேட்காமல் இருக்கத்தான் இவ்வளவு அடக்க ஒடுக்கமும்.. முழு இனத்தையும் அடமானம் வைப்பதும். சம்பந்தன் இந்த இனத்தை கருவறுக்காமல் சாகாது. அதுதான் அதன் சாதனை. tw_angry::rolleyes:

முள்ளிவாய்க்காலின் போதும் சம்பந்தன் கள்ள மெளனம் காத்தது மட்டுமன்றி.. இன அழிப்புக்கும் துணை போனவர். tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்சும் கும்பல் கொழும்பிலையிருந்து என்ன வெள்ளி பாக்கினமே???? tw_anguished:

8 hours ago, குமாரசாமி said:

சம்சும் கும்பல் கொழும்பிலையிருந்து என்ன வெள்ளி பாக்கினமே???? tw_anguished:

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை தயார் பண்ணிகொண்டு இருபார்

8 hours ago, nedukkalapoovan said:

 

முள்ளிவாய்க்காலின் போதும் சம்பந்தன் கள்ள மெளனம் காத்தது மட்டுமன்றி.. இன அழிப்புக்கும் துணை போனவர். tw_angry:

இந்த ***** ***** தான் தமிழர் வாக்கு போடீனம்

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்க பொருத்து வீட்டு பிரச்சினையொன்றுக்கு கொழும்புக்கு சென்றி இருக்கிறார் அது வேண்டாம் எண்டு சொல்லிட்டு வாரத்துக்குள்ள அந்த இடத்தில்பள்ளி வாசல் வந்து விடும்

45 minutes ago, குமாரசாமி said:

சம்சும் கும்பல் கொழும்பிலையிருந்து என்ன வெள்ளி பாக்கினமே???? tw_anguished:

 

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் காடழிப்பின் மூலம், திட்டமிட்ட குடியேற்றங்களா? எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

mullai-pr1.jpg
 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ள உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கூழா முறிப்பு சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் மக்கள் பேரணியாக நடந்து சென்றனர்.
 
குறித்த போராட்டத்திற்கு அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி எனும் அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.
mullai-pr2.jpg
 
mullai-pr3.jpg
 
mullai-pr4.jpg
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/07/2017 at 9:44 AM, Dash said:

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை தயார் பண்ணிகொண்டு இருபார்

இந்த ***** ***** தான் தமிழர் வாக்கு போடீனம்

தமிழர்களுக்குள் பலமான எதிர்கட்சியை உருவாக்காமல் விட்டது ஒரு பெரிய வரலாற்றுத்தவறு.

இன்னும் பிந்தவில்லை.

  • தொடங்கியவர்

காடழிப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் அணி திரண்ட இளைஞர்கள்

 

 

காடழிப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் அணி திரண்ட இளைஞர்கள்
 

காடுகளை அழித்து சட்டவிரோத குடியேற்றங்களை அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி முல்லைத்தீவில் இன்று (16) போராட்டம் நடத்தப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி என்ற அமைப்பு இந்த போராட்டத்திற்கான அழைப்பை சமூக வளைத்தலங்கள் ஊடாக விடுத்திருந்தது.

இதற்கமைய முல்லைத்தீவு முள்ளியவளை – காட்டா விநாயகர் ஆலய சந்தியில் அதிகளவிலானவர்கள் இன்று முற்பகல் கூடினர்.

போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, உள்ளிட்ட சில அரசியல்வாதிகளும் வருகைதந்திருந்னர்.

எனினும் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாது திரும்பிச் செல்ல நேரிட்டது.

முள்ளியவளையிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உத்தேச, கூழாமுறிப்பு குடியேற்றப் பகுதி வரை கண்டனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

இயற்கை சமநிலையைக் குழப்பும் விதமாக காடுகளை அழித்து சட்டவிரோதமாக குடியேற்றங்களை அமைக்க வேண்டாம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கூழாமுறிப்பு பகுதியில் உத்தேச குடியேற்றத் திட்டத்திற்கான காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை கூழாமுறிப்பு காணிப்பிரச்சினை தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக கடந்த காலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

http://newsfirst.lk/tamil/2017/07/காடழிப்பிற்கு-எதிராக-முல/

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை இல்லா பிரேரரணை தமிழருக்கு எதிராக கொண்டு வர மட்டும் சம்பந்தரும் சுமந்திரனும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.