Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..!

Featured Replies

யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..!

5971e5e049b8e-IBCTAMIL.jpg
5971e5e0d80dd-IBCTAMIL.jpg
 
5971e53a0c8f5-IBCTAMIL.jpg
5971e5ded5c93-IBCTAMIL.jpg
5971e5e049b8e-IBCTAMIL.jpg
5971e5e0d80dd-IBCTAMIL.jpg

யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது .

ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான மாப்பிள்ளை யாழ்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தம்பதிகள் இருவரும் மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

தமிழர்களே மேலைத்தேய சார்பு திருமணங்களுக்கு மாறிவரும் இக்கால கட்டத்தில் ஜேர்மனியைச் சேர்ந்த ஒருவர் தமிழ்ப் பெண் ஒருவரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Foreigner-married-in-tamil-culture

  • தொடங்கியவர்

மாட்டு வண்டியில் வந்த ஜேர்மன் மாப்பிள்ளை ; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு சமூகவலைத்தளங்களிலும் பிரபலமாக பேசப்படுகின்றது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

யாழ். மீசாலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஜேர்மன் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.இவர்கள் திருமணம் நேற்று மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாட்டு வண்டியில் வருகை தந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

திருமணக் கோலத்தில் இருவரும் தம்பதிகளாக மாட்டு வண்டியில் செல்வதை அப்பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், ஆச்சரியமடைந்துள்ளனர்.

20258367_1415733765171057_66230642140616

குறித்த மணமகனுடன் வருகை தந்திருந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர் பாரம்பரியத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20155689_1415733338504433_58634203009882

Tags

http://www.virakesari.lk/article/22211

இதிலை என்ன புதிசாய் இருக்கு  எல்லாம் சர்வசாதாரணமாய் நடப்பது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பவோ நடந்த பழசு போல கிடக்கு. இல்லை ஒரே ஆள் தான் ஒவ்வொரு வெள்ளைக்காரனைக் கட்டுதோ..?! 

மேலும்.. எங்கட ஒரு தலைமுறை.. ஊரில இருந்த வெள்ளைக்காரனை வெளியேறனும் என்று விடாப்பிடியா நின்டிச்சுது.. இன்னொரு தலைமுறை ஊருக்கு வெள்ளைக்காரனை கூட்டி வருவதில் பெருமையா நினைக்குது.

அவன் பாட்டுக்கு ஒன்றில் ஆக்கிரமிப்பாளனா வாறான்.. இல்லை உல்லாசப்பயணியா வாறான். இதுங்க தான் அப்பவும் இப்பவும் நாடோடியாவே அலையுதுங்க.. சாதாரணத்தையும்.. புதினமாப் பார்க்குதுங்க.. tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இருவர்  விரும்பி

அதிலும்   மற்றவரது கலை கலாச்சாரங்களை  மதித்து

திருமணம்  செய்வதென்பது நல்லவிடயமே

அதை  நாம்  இன்னும் ஏற்காமலிருப்பது

நமது  பின்தங்கலுக்கான அறிகுறியன்றி......???

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இருவர்  விரும்பி

அதிலும்   மற்றவரது கலை கலாச்சாரங்களை  மதித்து

திருமணம்  செய்வதென்பது நல்லவிடயமே

அதை  நாம்  இன்னும் ஏற்காமலிருப்பது

நமது  பின்தங்கலுக்கான அறிகுறியன்றி......???

நாம் இதை சாதி மத இன வேறுபாடுகளுக்கு அப்பால் எப்பவோ ஏற்றுக் கொண்டிட்டம். ஆனால்.. அதிலும் பெருமைப்படுவதில் தான் குறியாக இருக்கிறம்.

இதெல்லாம் சாதாரணம், செய்தியே ஆக்கப்பட முடியாதவை.

செய்தி ஆக்குவது தான் தவறு.

மற்றும்படி.. தோல் நிற அடிப்படையில்..  எமக்குள் உள்ள தாழ்வுமனப்பான்மையை தான் இவ்வாறான சாதாரண விடயங்களை செய்தி ஆக்குவது காட்டுது.

எந்த மேற்கிலாவது கறுப்பனும் ஏசியனும் வெள்ளையை கட்டிறதோ... இல்ல.. மாறிச் செய்வதோ செய்தியா வருகுதா..??!

அவர்கள் அதனை சாதாரண மனித நிகழ்வாகப் பார்க்கப் பழகிவிட்டார்கள். நாம் தான் இன்னும் அசாதாரணமாக்கி.. செய்தி ஆக்கி மிணக்கட்டுக் கொண்டு நிற்கிறோம்.. இப்படியாக  அடித்தவரின் தனிப்பட்ட விவகாரங்களை...அர்ப்பத்தனமாக செய்தியாக்கி. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

நாம் இதை சாதி மத இன வேறுபாடுகளுக்கு அப்பால் எப்பவோ ஏற்றுக் கொண்டிட்டம். ஆனால்.. அதிலும் பெருமைப்படுவதில் தான் குறியாக இருக்கிறம்.

இதெல்லாம் சாதாரணம், செய்தியே ஆக்கப்பட முடியாதவை.

செய்தி ஆக்குவது தான் தவறு.

மற்றும்படி.. தோல் நிற அடிப்படையில்..  எமக்குள் உள்ள தாழ்வுமனப்பான்மையை தான் இவ்வாறான சாதாரண விடயங்களை செய்தி ஆக்குவது காட்டுது.

எந்த மேற்கிலாவது கறுப்பனும் ஏசியனும் வெள்ளையை கட்டிறதோ... இல்ல.. மாறிச் செய்வதோ செய்தியா வருகுதா..??!

அவர்கள் அதனை சாதாரண மனித நிகழ்வாகப் பார்க்கப் பழகிவிட்டார்கள். நாம் தான் இன்னும் அசாதாரணமாக்கி.. செய்தி ஆக்கி மிணக்கட்டுக் கொண்டு நிற்கிறோம்.. இப்படியான  அடித்தவரின் தனிப்பட்ட விவகாரங்களை...அர்ப்பத்தனமாக செய்தியாக்கி. :rolleyes:

சரி

இப்பவாவது  தொடங்கினமே...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெள்ளையின்ட கலாச்சாரத்தை பின்பற்ற அவையளில் ஒன்று எங்கன்ட கலாச்சாரத்தை பின்பற்றுது என்றவுடன் ...வெள்ளைக்கு காவடி தூக்குறோம்...

  • கருத்துக்கள உறவுகள்

இது வெள்ளத்தோல் மற்றும் பொருளாதார உயர்வுநிலை மனப்பான்மை மக்களிடம் அடிமனதில் இன்னமும் தேங்கியுள்ளது..

ஈழம் மட்டுமல்ல, இங்கே மத்தியகிழக்கு நாடுகளிலும் அரபிகளிடம் வெள்ளைத்தோல்காரன் பொய் சொல்லமாட்டான், அவன் அறிவாளி என்ற மனப்பான்மை நிலவி வருகிறது.

நாம் எவருக்கும் சளைத்தவரில்லை(We are second to none!) மனமாற்றம் நம்மிடம் வரவேண்டும், தன்னம்பிக்கை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தமட்டில் இதனை நான் வரவேற்க மாட்டேன். இந்த மாதிரியான இனக்கலப்பு எங்கே போய்முடியப்போகுதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழரசு said:

என்னை பொறுத்தமட்டில் இதனை நான் வரவேற்க மாட்டேன். இந்த மாதிரியான இனக்கலப்பு எங்கே போய்முடியப்போகுதோ தெரியவில்லை.

இனக்கலப்பு  என்பது  வலுக்கட்டாயமாகஇருக்கக்கூடாது  சகோதரா

புலம்பெயர்ந்து பல மில்லியன்   மக்கள்  வாழ்ந்து கொண்டு

இதை  ஏற்க  மறுப்பது.....???

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தில் ஒருவர் இருவர் இப்படி கட்டி சோ காட்டுகீனம் ஊரில் உள்ளவர்களுக்கு இது புதுமை..ஊடகங்களுக்கு ஒரு முழுப் பக்க செய்தி.இதை விட்டால் இதில் என்ன இருக்கிறது..உண்மையாக பிள்ளைகளை கஸ்ரப்பட்டு வளர்த்த எந்த தாய் தந்தையர்களும் இப்படியான ௯த்துக்களுக்கு அனுமதிக்க மாட்டார்கள்..ஆனால் ஓரளவுக்கு வெள்ளையர்களை விட நம்மவர்கள் அவர்களது நல்லது தீயது எல்லாவற்றையும் அடப்ற் பண்ணி விட்டார்கள் என்பது நன்றாக படித்த வெள்ளைக்கு தெரியும்.புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லாம் எங்கடை பெட்டையள் வெள்ளையளை கட்டுறது ஒரு பாஷனாய் வந்துட்டுது. அதிலையும் வெள்ளைமாப்பிள்ளை தெர்ப்பை போட்டு ஐயர் மந்திரம் ஓத கெட்டிமேளம் முழங்க தாலிகட்டுற அழகே தனியழகு. அதிலையும் பெட்டையின்ரை தாய்தேப்பன் விடுற ஆனந்தக்கண்ணீர் இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.

சுருக்கமாய் சொல்லப்போனால் எட்டுத்தரம் கலியாணம் கட்டுற வெள்ளையளின்ரை கலாச்சாரத்தை எங்கடை தமிழ்ச்சமுதாயமும் மெல்ல மெல்ல உள்வாங்குகின்றது.

20155689_1415733338504433_58634203009882

வெள்ளையளுக்கு எப்பவும் வித்தியாசமான முறையிலை தான் கலியாணம் கட்ட விருப்பம். பழைய முறை ரொம்ப ரொம்ப போரடிச்சு போச்சுதாம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதா என்ற இரண்டும் கெட்ட மன நிலையில் சாமியார் நான் வெள்ளைகள் எல்லாம் நல்லதும் இல்லை வெள்ளைகள் எல்லாம் கெட்டதும் இல்லை  மனதுக்கு பிடித்து  அவர்களுக்கு உன்மையாக  இறப்பு வரைக்கும் வாழ்வார்கள் ஆனால் சந்தோஷம் ஆனால் வெள்ளை வெறுத்தால் விட்டெறிந்து போய்விட கூடியவர்கள்  அதுதான் நம்மவர் நிலைக்கு பொருந்துமா இலங்கைக்கு சரிவராது வெளிநாட்டு  இலங்கை மன்னிக்கவும் ஈழத்தமிழர்களுக்கு  பொருந்தலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனி ஒருவன் said:

இதை ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதா என்ற இரண்டும் கெட்ட மன நிலையில் சாமியார் நான் வெள்ளைகள் எல்லாம் நல்லதும் இல்லை வெள்ளைகள் எல்லாம் கெட்டதும் இல்லை  மனதுக்கு பிடித்து  அவர்களுக்கு உன்மையாக  இறப்பு வரைக்கும் வாழ்வார்கள் ஆனால் சந்தோஷம் ஆனால் வெள்ளை வெறுத்தால் விட்டெறிந்து போய்விட கூடியவர்கள்  அதுதான் நம்மவர் நிலைக்கு பொருந்துமா இலங்கைக்கு சரிவராது வெளிநாட்டு  இலங்கை மன்னிக்கவும் ஈழத்தமிழர்களுக்கு  பொருந்தலாம் .

எதுக்கும்  வெள்ளையை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ தனங்கிளப்பு வயல்வெளியிலை ஏர் பூட்டி வயல் உழ ரெடியா எண்டு......:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

எதுக்கும்  வெள்ளையை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ தனங்கிளப்பு வயல்வெளியிலை ஏர் பூட்டி வயல் உழ ரெடியா எண்டு......:grin:

ஏன் அடுத்த பிளைட்டை பிடிச்சு ஓட வைப்பான் அவரை :104_point_left::10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.