Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கியாயிற்று என்றே வைத்துக்கொள்வோம், இதனால் என்ன பயன்?

 

புலிகள் இருந்த காலத்தில் இத்தடை நீக்கப்பட்டிருந்தால் எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டு 8 வருடங்கள் வரை காத்திருந்து, இனிமேல் வரமாட்டார்கள் என்று உறுதிசெய்துகொண்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். 

 

இந்தத் தடை நீக்கமானது, புலிகளின் போராட்டம் நியாயமானது, அடக்கப்பட்ட ஈழத்தமிழரின் உரிமைக்காகவே அவர்கள் போராடினார்கள், ஆகவே அவர்கள் ஒரு பயங்கரவாத இயக்கமாகக் கருதப்பட முடியாதவர்கள், ஆகவே அவர்களைத் தடை செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு நீக்கப்பட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.

 

ஆனால், அவர்கள் பாரிய அசம்பாவிதங்களில் ஈடுபட்டார்கள், அதனால் தடைசெய்தோம், 8 வருடங்களில் அவர்களின் எந்தவித அசம்பாவிதங்களும்   இருக்கவில்லை, ஆகவே தடையை நீக்குகிறோம் என்று கூறி நீக்கியிருக்கிறார்கள். ஆகவே நாம் சந்தோசப்படுவதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

அவர்கள் இன்று ஹமாஸ் எனும் அமைப்பை எப்படிப் பார்க்கிறார்களோ, அப்படித்தான் இதுவரை புலிகளையும் பார்த்து வந்தார்கள். ஹமாஸ் தொடர்ந்தும் ஆயுத போராட்டத்தில் உள்ளதால் அதன் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, புலிகள் இல்லாததால் தடை நீக்கப்பட்டிருகிறது. 

 

இத்தடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை உற்றுநோக்கினால் சந்தோசப்படவேண்டுமா, அல்லது பேசாமலிருக்க வேண்டுமா என்பது புலப்படும்.

 

என்னுடைய தாழ்மையான கருத்து இது. 

  • கருத்துக்கள உறவுகள்

துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்பதுபோல் ஐ.நா வின் அறிக்கையில் சிறு துரும்பும் தமிழருக்கு சாதகமாக இருப்பது தெரிந்தால்... அத் துரும்பையும் தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதமாக்கும் முயற்சியில் அரசியல் திறனுள்ள தமிழர்கள் ஈடுபடவேண்டும். :rolleyes: :rolleyes:  

  • தொடங்கியவர்

ஐரோப்பாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்

 
ஐரோப்பாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ள போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

‘’தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகவே கருதுவதுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அவ்வாறே நீடிக்கும்’’ என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.   

இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக தோற்கடித்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமுலில் உள்ள தடையை நீக்குமாறு யூலை 26 ஆம் திகதியான நேற்றைய தினம் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன் முடக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் சொத்துக்களையும் விடுவிப்பதாகவும் அறிவித்திருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்காக கடைபிடிக்கப்பட்ட நடைமுறையை உச்ச நீதிமன்றின் தீர்ப்பு கேள்விக்கு உட்படுத்தியிருக்கின்றதே ஒழிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கும், அதன் சொத்துக்களை முடக்குவதற்கும் அடிப்படையாக அமைந்த விடையங்களை நீதிமன்றின் தீர்ப்பு உள்ளடக்கவில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதமாக அமைந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஆட்சி நிலவும் தற்போதைய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு ஐரோப்பிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீதான தடை நீக்கம் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கே பொருந்தும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான பயங்கரவாத அமைப்புக்களின் தடைப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் உள்ளடக்க தாம் எடுத்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் நேற்றைய தீர்ப்பு பொருந்தாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய செய்திக் குறிப்பில் மிகத் தெளிவாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஐரோப்பிய உச்ச நீதிமன்றின் தீர்ப்பை கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்படும் அமைப்புக்களை எதற்காக உள்ளடக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அனைத்து சட்ட வரையரைகளும் தெளிவாக ஆராயப்பட்டு உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நடைறைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.

அதேவேளை நாளைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடைப் பட்டியலில் வைத்திருப்பதற்கான விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றும் வெளிவரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Ban-on-the-LTTE-in-Europe-continues

  • கருத்துக்கள உறவுகள்

மேல ரகு சொன்னது தான் யதார்த்தம்.இப்ப டுக்கியம் தாயகத்தில் மக்களின் இருப்பும் அதுக்கான வழி முறைகளும் தான்.அதற்க்காக புலிகளின்(தலைமை)தியாகத்தை யாரும்  கொச்சை படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் ஐரோப்பிய வாழ் தமிழர்களையும் குளிப்பாட்டி 
சிங்கள பேரினவாதிகளையும் குளிப்பாட்டுவது என்பது இப்படித்தான்.

எனது முதுகில் இருக்கும் ஊத்தை எனக்கு தெரிவது கஷ்ட்டம் 
ஆனால் அருகில் இருப்பவரின் ஊத்தை இலகுவாக தெரிவதுபோல் 

உணர்ச்சிவசபட்டு கொண்டு இருந்ததால் எமது சண்டையின் ஆழம் புரியவில்லை.

இப்போ சிரியாவை பார்த்து கொண்டு இருந்தால் ....உக்காரனை பார்த்து 
கொண்டு இருந்தால் ....... இங்கே நாம் உணர்ச்சிவச படாமல் என்ன நடக்கிறது என்பதை 
பார்க்க முடிகிறது......... என்ன நடக்கிறது என்றால்.

போராளிகள் என்ற பெயரில் ...... அல்லது அரசு என்ற பெயரில்  மேற்கு உலகம் 
ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் ஒரு குழுவை களம்  இறக்குகிறது.
ரஷியா சீனா ஈரான் மற்ற குழுவை களம் இறங்குகிறது .......இரண்டும் சேர்ந்து சொந்த நாட்டை 
சுடலை ஆக்குகிறது ...........ஏதும் அற்று சுடலையில் கிடக்கும் போது 

தேவதை வடிவெடுத்து அதே குழுக்கள் வருகிறது ...... அதை கட்டுகிறோம் 
இதை கட்டுகிறோம் ......... அந்த உதவி செய்கிறோம் இந்த உதவி செய்கிறோம் என்கிறது 
எமக்கும் வேறு எந்த வழியும் இல்லை. 
கட்டுமானம் தொடங்குகிறது ............. உலக வங்கி ..... ஐரோப்பிய வங்கி .... சீன  மத்திய வங்கி  ... தெற்காசிய அபிவிருத்தி  வங்கி  (பெயர்கள்தான் இவை ... இவை எல்லாமே பிரைவேட் வங்கிகள்)  கடனை கொடுக்கிறது.
யாருக்கு கொடுக்கிறது ? நியூ யோர்கில் உள்ள உலக வங்கி தனது பணத்தை ........... நியூ யோர்கில் உள்ள 
ஒரு கட்டுமான நிறுவனத்தின் வங்கி கணக்க்கிற்கு காசை போடுகிறது. கடன் இலங்கை சிரியா லிபியா எகிப்து போன்ற நாடுகளின் தலையில் வீழ்கிறது.

(இந்த இடைவெளிக்குள் ......... மைத்திரி பால் ஊத்துறார் ...... சுமந்திரன் மையிலிட்டியை விடுவித்தார் சம்மந்தன் மயிர் புடுங்கி விட்டார்  ரணில் ரயில் விட்டார் என்று இன்னொரு அலுப்பறை இன்னொரு பக்கம் )

நாடு யாருக்கும் தெரியாமல் மேற்கு சீனா போன்ற நாடுகளின் குத்தகை காணி ஆகிறது 
தேவதைகள் ........ மீண்டும் கருணை உள்ளம் வடிவாகி கொஞ்ச கடனை தள்ளுபடியும்  மீதிக்கு 
தவணையும் கொடுக்கிறது ...... சுடலையில் நிற்பவர்கள் எதை கொடுப்பது. தேவைகள் புத்தி மதி கூறி 
அந்த அந்த நாட்டு கனிம வளங்களை அள்ளிக்கொண்டு போகிறது. 2035- 2045 இடைப்படட கால பகுதியில் 
மூன்றாம் உலகின் மொத்த கனிமமும்  ஜி 20 நாடுகளால் அள்ள பட்டிருக்கும் ....... அதன் பின்பு மீண்டும் சுடலையில்  நிற்போம் .......... அப்போ தேவதைகள் வருவதுக்கு காரணம் இல்லாததால் தேவைகள் வர மாட்ட்டார்கள். சில பிரமுகர்கள் அப்போதும் வருவார்கள் ......... ஏன் என்று எமக்கு முன்னரே நாடுகளை சுடலை ஆக்கிய வியட்நாம் கிழக்கு தீமோரை பார்த்தால் சொந்த சகோதரிகளை விலைக்கு விக்கும் 
விபச்சார சந்தை கொடி கட்டி பறக்கும் .......... அப்போதும் கற்போடு இருந்தால் 10 வயது சிறுமிக்கு மட்டுமே மவுசு .......... கருணை உள்ளம் கொண்ட தேவைதைகளின் எச்சங்கள் அல்லவா ? சிறுமிகளை சீராட்டி பார்க்கிறது . 


இந்த எருமைகளின் காட்டில் (கோட்டில்) தடை இல்லாமல் இருப்பதை விட இருப்பதே 
சிறப்பு .......... இடைவெளி கொஞ்சம் என்றாலும் இருக்கும். 

6 hours ago, Maruthankerny said:

இந்த எருமைகளின் காட்டில் தடை இல்லாமல் இருப்பதை விட தடையுடன்  இருப்பதே சிறப்பு

சரியாய் சொன்னிங்கள் மருதண்ணை .:grin:

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடரும்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு மஹிந்தவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் செல்வாக்கே காரணமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/07/2017 at 10:21 AM, ragunathan said:

தடை நீக்கியாயிற்று என்றே வைத்துக்கொள்வோம், இதனால் என்ன பயன்?

 

புலிகள் இருந்த காலத்தில் இத்தடை நீக்கப்பட்டிருந்தால் எமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டு 8 வருடங்கள் வரை காத்திருந்து, இனிமேல் வரமாட்டார்கள் என்று உறுதிசெய்துகொண்டு தடையை நீக்கியிருக்கிறார்கள். 

 

இந்தத் தடை நீக்கமானது, புலிகளின் போராட்டம் நியாயமானது, அடக்கப்பட்ட ஈழத்தமிழரின் உரிமைக்காகவே அவர்கள் போராடினார்கள், ஆகவே அவர்கள் ஒரு பயங்கரவாத இயக்கமாகக் கருதப்பட முடியாதவர்கள், ஆகவே அவர்களைத் தடை செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு நீக்கப்பட்டிருந்தால் மிக்க மகிழ்ச்சி.

 

ஆனால், அவர்கள் பாரிய அசம்பாவிதங்களில் ஈடுபட்டார்கள், அதனால் தடைசெய்தோம், 8 வருடங்களில் அவர்களின் எந்தவித அசம்பாவிதங்களும்   இருக்கவில்லை, ஆகவே தடையை நீக்குகிறோம் என்று கூறி நீக்கியிருக்கிறார்கள். ஆகவே நாம் சந்தோசப்படுவதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

அவர்கள் இன்று ஹமாஸ் எனும் அமைப்பை எப்படிப் பார்க்கிறார்களோ, அப்படித்தான் இதுவரை புலிகளையும் பார்த்து வந்தார்கள். ஹமாஸ் தொடர்ந்தும் ஆயுத போராட்டத்தில் உள்ளதால் அதன் தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, புலிகள் இல்லாததால் தடை நீக்கப்பட்டிருகிறது. 

 

இத்தடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கான காரணத்தை உற்றுநோக்கினால் சந்தோசப்படவேண்டுமா, அல்லது பேசாமலிருக்க வேண்டுமா என்பது புலப்படும்.

 

என்னுடைய தாழ்மையான கருத்து இது. 

 

பச்சையில் இருப்பது  தமிழரின் எதிர்பார்ப்பு

அது ஒரு நாள் வரும்

சிவப்பிலிருப்பது அவர்களது தவறான முடிவுக்கான அலட்டல்கள்

அது மாறிக்கொண்டே வரும்

 

நீங்கள்  சொல்வதில் உண்மையிருக்கிறது  ரகு

ஆனால் இதற்கு ஒரு மறுபுறமும் உண்டு

அதை நாம் மறந்தே  விட்டோம்

அல்லது அது நமக்கு தேவையற்றதாகிவிட்டது..

 

இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் செயற்பாட்டாளர்கள்

அவர்களது குடும்பங்கள்

இதுவரை தண்டனை  அனுபவித்தவரும் இவர்களும் 

அடுத்த சந்ததியும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ...?

அவர்களுக்காவது ஒரு விடுதலை  கிடைக்கட்டும்

அடுத்து எங்கு சென்றாலும் எம்மை பயங்கரவாதி  என்போராவது வாயை  மூடட்டுமே...

அல்லது மூடச்செய்யலாமே..

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

தடை நீக்கம் உதவக்கூடும்

 

விடுத­லைப் புலி­கள் இயக்­கத்­தின் மீதான தடையை நீடிப்­ப­தற்கு முகாந்­தி­ரங்­கள் எது­வும் இல்லை என்று கூறி ஐரோப்­பிய நீதி ஆயம் தீர்ப்­ப­ளித்­தி­ருக்­கி­றது. ஆனால், புலி­கள் இயக்­கத்­தின் மீதான தடை நீடிக்­கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் அறி­வித்­துள்­ளது.

புலி­கள் இயக்­கம் இப்­போ­தும் அபா­ய­க­ர­மான ஒன்று என்று நிரூ­பிப்­ப­தற்­குத் தேவை­யான ஆதா­ரங்­களை ஐரோப்­பிய ஒன்­றி­யம் முன்­வைக்­க­வில்லை என்­பதே தடை நீக்­கத்­திற்­கான கார­ணம். பத்­தி­ரி­கைச் செய்­தி­கள், துண்­ட­றிக்­கை­கள் என்­ப­வற்­றின் அடிப்­ப­டை­யி­லேயே ஒன்றியத்தின் தடை நீடிக்­கப்­பட்டு வரு­கின்­றது என்­ப­தை­யும் நீதி ஆயம் சுட்­டிக்­காட்டியது. அதனாலேயே அந்தத் தடையை நிராகரித்தும்விட்டது.

2009ஆம் ஆண்­டில் தமது ஆயு­தங்­களை அமை­தி­யாக்­கு­வ­தாக விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் அறி­வித்­த­தன் பின்­னர் அந்த இயக்­கத்­தால் எந்­த­வி­த­மான வன்­மு­றைத் தாக்­கு­தல்­க­ளும் இலங்­கை­யிலோ இலங்­கைக்கு வெளி­யிலோ நடத்­தப்­ப­ட­வில்லை.

அதி­லும் குறிப்­பா­கப் புலி­கள் இயக்­கத்­தில் இருந்த 12 ஆயி­ரம் பேரை மறு­வாழ்­வுக்­குப் பின்­னர் சமூ­கத்­து­டன் இணைத்துள்ளதாகக் கொழும்பு அறி­வித்­துள்ள நிலை­யில் அவர்­க­ளால் எந்­த­வித அச்­சு­றுத்­தல்­க­ளும் ஏற்­ப­ட­வில்லை.

சிற்­சில சம்­ப­வங்­கள் இடம்­பெற்­ற­ன­வா­யி­னும் அவற்­றின் ஊடாக விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் மீளு­ரு­வாக்­கம் பெற்­றது என்றோ வன்­முறை வழி­யில் அந்த இயக்­கம் நாட்­டம் கொண்­டி­ருக்­கின்­றது என்றோ நிரூ­பிக்­கப்­பட்­ட­தில்லை.

எனவே விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் இனி­யும் அபா­ய­க­ர­மான இயக்­க­மாக இருக்­கின்­றது என்று சொல்­வ­தில் அர்த்­தம் இல்லை. ஆனால், இந்த நியா­யங்­களை எல்­லாம் புறந்­தள்ளி விடு­த­லைப் புலி­கள் மீதான தடை தொட­ரும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் அறி­வித்­துள்­ளது.

நீதி­ ஆயத்தின் தீர்ப்பு, தற்­போது நடை­மு­றை­யில் உள்ள தடைக்கு முந்­திய பரு­வ­கா­லத் தடை மீதான பார்வை என்­று­கூறி தீர்ப்பை நடை­மு­றைப்­ப­டுத்த ஒன்­றி­யம் மறுத்­து­விட்­டது.

தனது இந்த முடிவை ஐரோப்­பிய ஒன்­றி­யம் மீளாய்வு செய்­ய­வேண்­டி­யது அவ­சி­யம். புலி­கள் மீதான தடையை விலக்கி அந்த இயக்­கத்தை, அதன் உறுப்­பி­னர்­களை மக்­கள் நீரோட்­டத்­தில் கலக்­கச் செய்­வது ஈழத் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இன்­றி­ய­மை­யா­தது. பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் நிலை சார்ந்து அது முக்­கி­ய­மா­ன­தும்­கூட.

விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் மீதான தடை நீடிப்­ப­தன் கார­ண­மாக அந்த இயக்­கத்­திற்­குச் சொந்­த­மான நிதி மற்­றும் சொத்­துக்­கள் ஐரோப்­பிய நாடு­க­ளில் முடக்­கப்­பட்­டுள்­ளன. இது மிகப் பெரும் சொத்து. வடக்கு கிழக்­கில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உத­வ­வும் பொரு­ளா­தார ரீதி­யில் இந்­தப் பகு­தியை வளப்­ப­டுத்­த­வும் இந்­தச் சொத்­துக்­க­ளை­யும் நிதி­யை­யும் பயன்­ப­டுத்த முடி­யாத ஒரு நிலையே இருக்­கின்­றது.

புலி­கள் இயக்­கம் தனது சொந்த நிதி மூலங்­கள் ஊடா­கவே கொழும்பு அர­சுக்கு எதி­ரான போரை நடத்தி வந்­தது. கிட்­டத்­தட்ட ஒரு சிறிய அர­சை­யும் மரபு சார் படை­ய­ணி­க­ளை­யும் கொண்டு நடத்­து­வ­தற்­கு­ரிய நிதி வளத்தை அது கொண்­டி­ருந்­தது.

அதில் கணி­ச­மான வளம், ஏன் பெரும்­பா­லான என்றே சொல்­ல­லாம், புலம்­பெ­யர் நாடு­க­ளி­லேயே உள்­ளன. எனவே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குப் பயன்­ப­டக்­கூ­டிய மிகப் பெரும் நிதி வளம் ஐரோப்­பா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் இருக்­கின்­றன.

இப்­போது இவை முடக்­கப்­பட்டு எந்­தப் பய­னும் அற்­ற­வை­யாக உள்­ளன. புலி­கள் மீதான தடையை நீக்­கு­வ­தன் மூலம் இந்த நிதி­யைப் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்­குப் பய­னுள்­ள­தாக்க முடி­யும். அதற்­கான கட்­ட­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு சிறந்த முறை­யில் அந்த நிதி வடக்கு கிழக்­கின் மேம்­பாட்­டுக்­குப் பயன்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­ட­வேண்­டும்.

அச்­சு­றுத்­தும் ஓர் அமைப்­பா­கப் புலி­கள் இப்­போது இல்­லா­த­போ­தும் அதன் மீதான தடையை நீடிப்­பது அதன் வளங்­கள் மூலம் கிடைக்­கக்­கூ­டிய நலன்­க­ளை­யும் தடுத்­து­வி­டும். குறைந்தபட்சம் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்காவது அந்த நிதி உதவக்கூடிய வாய்ப்பையும் தடுத்துவிடும்.

ஏற்­க­னவே புலி­க­ளின் நிதி மற்­றும் வளங்­க­ளைத் தம் வசம் வைத்­தி­ருக்­கும் தனி நபர்­கள் பலர் , அவற்­றைச் சுய­ந­ல­னு­டன் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள் என்­கிற குற்­றச்­சாட்­டும் இருக்­கின்ற நிலை­யில், புலி­க­ளின் நேர­டி­யான வளங்­க­ளை­யும் முடக்கி வைப்­பது பய­னுள்­ளது அல்ல. எனவே ஐரோப்­பிய ஒன்­றி­யம் தனது முடிவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும்.

http://uthayandaily.com/story/14426.html

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்

ltte-eu.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்  தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்   தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக   தீர்ப்பு அளித்திருந்தது.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் சொத்துக்களை முடக்குவதாக 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/34620

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யார் கூடி தீர்மானங்கள் போட்டாலும் இவர்களது சான்றிதழை யார் எதிர்பார்த்தது? tw_smiley: 

நீங்கள் உலகப் போரில செய்த லட்சணம், ஜப்பானில அமெரிக்கா செய்த லட்சணம் எல்லாம் அறிந்துதான் இருக்குறோம். திருட்டு கம்னாட்டி கையில் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. tw_love:

  • தொடங்கியவர்

விடு­த­லைப் புலி­க­ளின் நிதி விடு­விக்­கப்­ப­டாது

அது முடக்­கப்­பட்டே இருக்­கும் என்­கி­றது ஐரோப்­பிய ஒன்­றி­யம்

 
விடு­த­லைப் புலி­க­ளின்  நிதி விடு­விக்­கப்­ப­டாது
  •  

ஐரோப்­பிய நாடு­க­ளில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் நிதி தொடர்ந்­தும் முடக்­கப்­பட்டே இருக்­கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யம் நேற்று வெளி­யிட்­டுள்ள சிறப்பு அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பேரவை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பை­யும் பயங்­க­ர­வா­தத்­து­டன் தொடர்­பு­டைய அமைப்­புக்­கள் பட்­டி­ய­லில் 2006ஆம் ஆண்டு இணைத்­தது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு இதற்கு எதி­ராக ஆரம்­பத்­தில் நீதி­மன்ற நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­போ­தும், பின்­னர் அது தொடர்­பில் கரி­சனை காட்­ட­வில்லை.

ஐரோப்­பிய பொது நீதி­மன்­றம் 2014ஆம் ஆண்டு நடை­மு­றைக் குறை­பா­டு­கள் கார­ண­மா­கத் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் மீதான தடுப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­யி­ருந்­தது. எனி­னும் எதிர்­கா­லத்­தில் நிதி­களை முடக்­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­களை கருத்­தில்­கொண்டு நிறுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளின் விளை­வு­க­ளைத் தொடர்ந்­தும் பேணு­வ­தற்­குப் பொது நீதி­மன்­றம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இந்த நிலை­யில் ஐரோப்­பிய நீதி­மன்ற ஆயம், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இரா­ணுவ ரீதி­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அந்த அமைப்பை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பயங்­க­ர­வா­தத் தடைப் பட்­டி­ய­லில் ஏன் வைத்­தி­ருக்­கின்­றது என்­பதை ஐரோப்­பிய ஒன்­றிய பேரவை தெளி­வு­ப­டுத்­தத் தவ­றி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டை­யில் விடு­த­லைப் புலி­க­ளைத் தடைப் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கி­ய­து­டன், நிதி­க­ளை­யும் விடு­வித்­தது.

இதன் பின்­னர், ஐரோப்­பிய ஒன்­றி­யம் வெளி­யிட்ட தெளி­வு­ப­டுத்­தல் அறிக்­கை­யில், 2011ஆம் ஆண்டு தொடக்­கம் 2015ஆம் ஆண்டு வரை­யி­லான காலப் பகு­திக்கே, ஐரோப்­பிய நீதி­மன்ற ஆயத் தீர்ப்பு பொருந்­தும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

இதே­வேளை, ஐரோப்­பிய ஒன்­றி­யப் பேரவை 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்­றும் 2017ஆம் ஆண்டு ஜன­வரி மாதங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் நிதியை ஐரோப்­பிய நாடு­க­ளில் முடக்கி வைக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

இதற்கு அமை­வாக, ஐரோப்­பிய ஒன்­றிய நீதி ஆயத்­தின் தீர்ப்­பி­னால் விடு­த­லைப் புலி­க­ளின் நிதி விடு­விக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும் எதிர்­கா­லத்­தில் ஐரோப்­பிய ஒன்­றி­யம் மறு ஆய்வு மேற்­கொள்­ளும்­போது, ஐரோப்­பிய ஒன்­றிய நீதி ஆயம் வழங்­கிய தீர்ப்பை கவ­னத்­தில் எடுக்க வேண்­டி­வ­ரும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

http://uthayandaily.com/story/14649.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.