Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல்

Featured Replies

பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல்

 
பொலிஸார் மீது வாள்வெட்டு – சந்தேகநபர்களுக்கு மறியல்
 

யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அதன்போதே இந்த உத்தரவு விதிக்கப்பட்டது.

அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டது.

http://uthayandaily.com/story/15836.html

  • தொடங்கியவர்

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது ஏன்? காரணம் வெளியானது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

ஆவா குழுவில் இருந்து விலகிய உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டதன் பின்னர் தப்பியோடினோம். அதன்போது இந்த பொலிஸார் தம்மை சுற்றி வளைப்பதாக எண்ணி அவர்களை வாளினால் வெட்டினோம் என சந்தேக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்களினால் ஆவா குழு உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நிலையில், காயத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/153887

 
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

இந்த சந்தேக நபர்களினால் ஆவா குழு உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நிலையில், காயத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த செய்தி முதல் வரவில்லையே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

இந்த செய்தி முதல் வரவில்லையே:rolleyes:

வருமா???tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

இந்த செய்தி முதல் வரவில்லையே:rolleyes:

முப்படைகளையும் யாழ்ப்பாணம் அனுப்புவதான திட்டம் நிறைவேறியதும் வந்துவிட்டதே இது போதாதா.....புத்தரே?

  • கருத்துக்கள உறவுகள்

அரச உதவியுடன் சில ரவுடிகள் உலா வருகிறார்கள் என்பது உண்மை தான்.அதற்க்காக எங்கள் இழசுகள் எல்லாம் பத்தரை மாத்து தங்கங்களும் இல்லை:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அரச உதவியுடன் சில ரவுடிகள் உலா வருகிறார்கள் என்பது உண்மை தான்.அதற்க்காக எங்கள் இழசுகள் எல்லாம் பத்தரை மாத்து தங்கங்களும் இல்லை:unsure:

அரச உதவியுடன் நடக்கும் சில்லறை சேட்டைகள் அன்று தொடக்கம் நடந்துவரும் சாதாரண நிகழ்ச்சிதான்.
அதற்காக அதை அரசியல்/இனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் புகுத்தப்படாது.
குப்பன் சுப்பனை குத்திவிட்டான் என்பதற்காக இராணுவமும் பயங்கரவாத சட்டமும் அவசியமில்லை.:cool:

10 hours ago, putthan said:

இந்த செய்தி முதல் வரவில்லையே:rolleyes:

நாடகத்தை மேற்கொண்டு செல்ல அவசியமான பாத்திரத்தை வேறுவழியின்றி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் இடைச் சொருகியுள்ளது. சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நீதித்துறை வேறு மார்க்கங்கள் இன்றி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆட வேண்டியது தான்.

இல்லை என்றால் அண்மையில் நேர்மையாக செயற்பட முனைந்த மன்னார் நீதிபதி க்கு ஏற்பட நிலைமை தான் ஏற்படும்.

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்கும் பொருட்டு திருகேதீஸ்வரம் புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்க உடன்படாத தமிழ் நீதிபதியின் மீது சிங்கள-பௌத்த புலனாய்வுப் பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நீதித்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

திருகேதீஸ்வரம் புதைகுழி விவகாரத்தை அனுராதபுரம் அல்லது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் எடுபிடிகளாக செயற்படும் நீதிபதியின் கீழ் அந்த வழக்கை விசாரிக்கக் கோரியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

வாள்­வெட்டு: இரு­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்

 
வாள்­வெட்டு: இரு­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்
 

பொலி­ஸாரை வாளால் வெட்­டிக் காயப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரு இளை­ஞர்­க­ளை­யும் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கு­மா­றும், அன்­றைய தினம் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­த­மா­றும் யாழ். நீதி­வான் எஸ்.சதீஸ்­த­ரன் உத்­த­ர­விட்­டார்.

கொக்­கு­வில் நந்­தா­வில் அம்­மன் கோயில் பகு­தி­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழமை கோப்­பாய் பொலி­ஸார் இரு­வர் மீது, மோட்­டார் சைக்­க­ளில் வந்த கும்­பல் வாள்­க­ளால் வெட்­டி­யது சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரண்டு இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

பொலி­ஸார் விசா­ர­ணை­களை அவர்­க­ளி­டம் மேற்­கொண்­டி­ருந்­த­னர். பொலி­ஸா­ரைத் தாம் தாக்­க­வில்லை என்று வாக்­கு­மூ­லம் வழங்­கி­யி­ருந்­த­னர். மானிப்­பா­யில் கைது செய்­யப்­பட்ட ஜூவ­ரா­ஜைச் சந்­திப்­ப­தற்­காக அவ­ரது சட்­டத்­த­ரணி கே.சுகாஸ் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­திற்கு நேற்­று­முன்­தி­னம் இரவு சென்­றார்.

ஆனால் அவ­ருக்­குப் பொறுப்­பான பதில் அளிக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. ‘‘கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­ப­ரின் சட்­டத்­த­ரணி நான். அரை மணி நேர­மா­கப் பொலிஸ் நிலை­யத்­தில் காத்­தி­ருந்­தேன். பொறுப்­ப­தி­காரி என்­னைச் சந்­திக்­க­வில்லை.

சந்­தே­க­ந­ப­ரைச் சந்­திக்க அவ­ரது சட்­டத்­த­ர­ணிக்கே அனு­மதி இல்லை என்­றால் சாதா­ரண மக்­க­ளின் நிலையை எண்­ணிப் பாருங்­கள்’’ என்று சட்­டத்­த­ரணி கே.சுகாஸ் தெரி­வித்­தார். சந்­தே­க­ந­பர்­கள் சார்­பில் சட்­டத்­த­ர­ணி­க­ளால் மன்­றில் முன்­வைக்­கப்­பட்ட பிணை விண்­ணப்­பத்­தை­யும் நீதி­வான் நிரா­க­ரித்­தார்.

http://uthayandaily.com/story/15961.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.