Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

Featured Replies

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!
 
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.

தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/16450.html

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் சாரதியில் தான் பிழை,ரயில் சாரதி ரயிலை நிறுத்தியிருக்க வேண்டும்....மருத்துவர் பிழை விட்டிருக்கமாட்டார் 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

யாழில் ரயில் விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பெண் மருத்துவர்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள புகையிரதக் கடவையில் சற்றுமுன்னர் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.

accident.jpg

குறித்த புகையிரதக்கடவையை பெண் மருத்துவர் ஒருவர் காரில் கடக்க முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையிலும் காரைச் செலுத்திச்சென்ற 40 வயதுடைய பெண் மருத்துவரான கிரிஷாந்தி என்பவர் எவ்வித பாதிப்புளுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

20624289_10207907881729651_1646749294_n.

வீதியின் இரு மருங்கிலும் இருந்த புகையிரத்கடவை பழுதடைந்த போதிலும் கடமையில் இருந்த புகையிரதக்கடவை ஊழியர் புகையிரதக் கடவையை கடக்கும் வாகனங்களை கொடியினைக்காட்டி கையால் மறித்தே கடமையிலீடுபடுவதாகவும் புகையிரதக்கடவை தொடர்பில் பலமுறை முறையிட்டபோதும் திருத்திக்கொடுக்கபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

20643999_945733192244717_452256590_n.jpg

இவ் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

20632637_945733195578050_1398805527_n.jp

20631623_945733188911384_1437353463_n.jp

http://www.virakesari.lk/article/22742

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவைப் பார்த்தபோது குறித்த ரயில் காரை மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடி விட்டதாகத் தெரிகிறது. முப்படையும் தற்போது யாழில் நிற்பதால் தப்பியோடிய ரயில் கட்டாயம் பிடிபட்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. :rolleyes:

பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி. :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் மட்டுறுத்தினர்களில் யாரோ மேற்படி டாக்குத்தருக்கு உறவினர்போல அதுதான் நான் இதுபற்றி எழுதிய கருத்தை உடனேயே தூக்கிப்போடினம்

அங்கு நடக்கும் விசையங்களை நான் நேரில போய்ப்பார்த்தனான் எனக்கு எல்லாமே தெரியும் எனக்குறாவிட்டாலும் ஓரளவு தெரியும்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Elugnajiru said:

யாழ் களத்தின் மட்டுறுத்தினர்களில் யாரோ மேற்படி டாக்குத்தருக்கு உறவினர்போல அதுதான் நான் இதுபற்றி எழுதிய கருத்தை உடனேயே தூக்கிப்போடினம்

அங்கு நடக்கும் விசையங்களை நான் நேரில போய்ப்பார்த்தனான் எனக்கு எல்லாமே தெரியும் எனக்குறாவிட்டாலும் ஓரளவு தெரியும்

பாஸ் நான் ஊரில் இருக்குறதால நேரில் கன பேரை பார்க்கிறன்  குறிப்பா பெண்கள்  வாகனங்கள் செலுத்தும் போது பதட்டமாவே இருக்கிறார்கள் அதுவும் நம்ம தமிழ் பெண்கள் ஸ்கூட்டி முதல் கார்வரைக்கும் .

மீண்டும் ஒழுங்கா ஒரு எட்டு போட சொன்னால்  எட்டாது 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆட்டோ நிறுத்தி இருந்ததாகவும்

தனக்கு வழிவிடவே ஆட்டோ நிறுத்தப்படுவதாக நினைத்த  காரை ஓட்டியவர்

வேகமாக முன்னே  சென்ற போது ரயில் வந்து விபத்து நடந்தாகவும் தெரிகிறது

இது போன்ற  நிலை காரை ஓட்டுபவர்களுக்கு வருவதுண்டு

ஒரு சில விநாடிகளில் எமது கவனம் வேறெங்கும் இருக்கும் போது

இவ்வாறு திடீர் முடிவுகளை  எடுக்க வேண்டி வருகிறது

யாரில் பிழை  சொல்வது??

வைத்தியரை  காப்பாற்றிய  கடவுளுக்கா....

அவ்வாறே  இருக்கக்கடவது..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தண்டவாளம் இருக்கும் இடத்தில் கடவை இல்லாமல்  இருக்கிறது சில இடங்களில் ஆனால் பதாகை இருக்கிறது அதை அவர் கவனிக்காமலுமிருந்திருக்கலாம் கவனக்குறைவ்வே விபத்து நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது சிலருக்கு  இன்னும் உயிர் வாழ அதிஸ்ரம் கொடுக்கப்படுகிறது அந்த வகையில் வைத்தியரின் சேவை இன்னும் நாட்டுக்கு தேவைப்படுகிறது போல்  தெரிகிறது  இனிமேல் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது  அவா 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகர் எழுதுகிறியள் அனேகமாக இந்தபாதையை பாவிக்கும் வாகனசாரிகளோ பாதசாரிகளோ புதியவர்களாக இருக்கமாட்டார்கள் காரணம் அவ்வீதியின் அமைவிடம் அப்படி உங்களுக்கு நினைவிருக்கலாம் நீர்வேலிப்பகுதியைச் சேர்ந்த யாழ் இந்து மாணவன் ஒருவர்ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டமை. அம்மாணவன் பாடசாலையில் பத்திரிகைத் துறையை மூன்றாவது விருப்புப்பாடமாகத் தெரிவுசெய்து யாழ் உதயன் பத்திரிரிகையில் பயிற்சி மாணவனாகத் தன்னை இணைத்துக்கொண்டவர் சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள் அவருடன் இணைந்த ஏனைய மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட பயிற்சி சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளைவிடுதலை செய்யச்சொல்லி  இலங்கை அதிபருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக  மர்மமான முறையில் இறந்த அம்மாணவனின் மரணத்தை அரசியலாக்கியது உதயன் பத்திரிகை சரி அதை விடுங்கோ அதே இடத்துக்கு அண்மையில்தான் இவ்விபத்து நடந்தது.

எந்த ஊரில் ஐயா இரயில்வே கடவையின் முன்பாக நிற்கும் வாகனத்தைத் தாண்டி பின்னால் நிற்கும் வாகனம் கவனமெடுக்காது செல்லலாம் எனப்படிப்பிக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வரும்முன்பு விபத்து நடந்த வாகனத்துக்குள் நுளைந்து யாரோ எதையோ எடுக்கிறாரே அவருக்கும் யார் அனுமதி கொடுத்தது. இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் அல்லவா பல கோணங்களில் விசாரிக்கவேண்டும்.

வாகனம் எல்லாம் நிக்குது டாக்குத்தருக்கு என்ன அவசரம் எல்லாரையும் முந்திச்செல்லவேண்டுமென. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

உண்மைதான்

இந்தக்கடவை  அந்தக்கால்திலும்  இவ்வாறு  தான்  இருந்தது..

நான் சொன்னது சில செக்கன்களில் வாகன  ஓட்டுநர்கள்  எடுக்கும் முடிவுகளே  விபத்துக்களாவது..

நீங்கள்  இடம் பொருள் பார்த்து

ஆராய்ந்து எழுதுகிறீர்கள்

உங்களது விரிவான  பார்வை சரியாகவே  படுகிறது...

12 hours ago, Elugnajiru said:

என்ன விசுகர் எழுதுகிறியள் அனேகமாக இந்தபாதையை பாவிக்கும் வாகனசாரிகளோ பாதசாரிகளோ புதியவர்களாக இருக்கமாட்டார்கள் காரணம் அவ்வீதியின் அமைவிடம் அப்படி உங்களுக்கு நினைவிருக்கலாம் நீர்வேலிப்பகுதியைச் சேர்ந்த யாழ் இந்து மாணவன் ஒருவர்ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டமை. அம்மாணவன் பாடசாலையில் பத்திரிகைத் துறையை மூன்றாவது விருப்புப்பாடமாகத் தெரிவுசெய்து யாழ் உதயன் பத்திரிரிகையில் பயிற்சி மாணவனாகத் தன்னை இணைத்துக்கொண்டவர் சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள் அவருடன் இணைந்த ஏனைய மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட பயிற்சி சிறையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளைவிடுதலை செய்யச்சொல்லி  இலங்கை அதிபருக்கு ஒரு கடிதம் எழுதுவதாக  மர்மமான முறையில் இறந்த அம்மாணவனின் மரணத்தை அரசியலாக்கியது உதயன் பத்திரிகை சரி அதை விடுங்கோ அதே இடத்துக்கு அண்மையில்தான் இவ்விபத்து நடந்தது.

எந்த ஊரில் ஐயா இரயில்வே கடவையின் முன்பாக நிற்கும் வாகனத்தைத் தாண்டி பின்னால் நிற்கும் வாகனம் கவனமெடுக்காது செல்லலாம் எனப்படிப்பிக்கிறார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வரும்முன்பு விபத்து நடந்த வாகனத்துக்குள் நுளைந்து யாரோ எதையோ எடுக்கிறாரே அவருக்கும் யார் அனுமதி கொடுத்தது. இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் அல்லவா பல கோணங்களில் விசாரிக்கவேண்டும்.

வாகனம் எல்லாம் நிக்குது டாக்குத்தருக்கு என்ன அவசரம் எல்லாரையும் முந்திச்செல்லவேண்டுமென. 

2004ம் ஆண்டு பஸ் ஒன்று சிலாபத்தில் என்று நினைக்கிறன், பல வாகனங்கள் காத்து நிற்க மற்றைய பக்கத்தால் முந்தி சென்று விபத்துக்குள்ளாகி பல பயணிகள் இறந்தனர்.

On 8/4/2017 at 10:52 PM, விசுகு said:

ஒரு ஆட்டோ நிறுத்தி இருந்ததாகவும்

தனக்கு வழிவிடவே ஆட்டோ நிறுத்தப்படுவதாக நினைத்த  காரை ஓட்டியவர்

வேகமாக முன்னே  சென்ற போது ரயில் வந்து விபத்து நடந்தாகவும் தெரிகிறது

அதாவது பிழையான தடத்தில் அவசரத்தில் கடந்து சென்றுள்ளார்!
 
பெரும்பாலும் தனியார் வைத்தியசாலையில் பணம் சுரண்டும் வைத்தியர்களே அவசர கதியில் செல்வார்கள். இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்துக்கொண்டே தரமற்ற தனியார் கிளினிக்குகளில் பணம் பறிப்பது விந்தையிலும் விந்தை.

இந்த யாழ் மருத்துவர்கள் அநேகரின் பிழைப்பு அராஜகமாகவே உள்ளது. வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை தமது தனிப்பட்ட, தனியார் கிளினிக்களுக்கு அழைத்து பணம் சுரண்டுவதே அநேகரின் பிழைப்பாக உள்ளது. கடந்த கிழமை கூட காது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை (வறிய சிறுவன்) 1 இலட்சம் தந்தால் உடன் அறுவைச் சிகிச்சை தனியார் வைத்தியசாலையில் செய்யலாம் - இல்லையென்றால் 3 மாதம் பொறுக்க வேண்டும் - அதற்குள்ள காது கெட்டுவிடும் என்று மிரட்டியுள்ளார் ஒரு யாழ் வைத்தியர். ஒரு சிறுவனுக்கு காது கெட்டுவிடும் என்று தெரிந்தால் பொது வைத்தியசாலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.