Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!!

Featured Replies

துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!!

 
துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!!
 

மூன்றாம் இணைப்பு :

வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

image-0-02-06-a21846b6b51ca0e68502277f08

image-0-02-06-47ca751e9af573559e3dc04738

இரண்டாம் இணைப்பு: 

வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

image-0-02-06-d21e961782241bd905932ac7a3

image-0-02-06-fa8316e8d02e95092e13f1b0b2

image-0-02-06-562b572f89d18583d9064808b6

 

முதலாம் இணைப்பு:

வடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன.

இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் துன்னாலைப் பகுதியை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

image-0-02-06-debc0a044d15ac23884111f387

இன்று காலையில் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

image-0-02-06-148dfd0a1529df3a05e1862c7c

image-0-02-06-ae302f936111f5292d0fd160f1

 

http://newuthayan.com/story/16525.html

  • தொடங்கியவர்

துன்னாலையில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு

Published by Vijithaa on 2017-08-05 12:30:11

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ்பிரிவில் துன்னாலைப்பகுதியில் பொலிஸாரும் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

20641608_10207914431093381_1556181620_o.

கடந்த காலங்களில் இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வால் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுப்பட்டமை போன்ற செயற்பாடுகளில்  ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

20641967_10207914430493366_439645541_o.j

குறித்த சுற்றி வளைப்பானது இன்று அதிகாலை முதல்  காலை 9.30 மணி வரை  இடம்பெற்றுள்ளது.  இதன் போது மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கென்டர் வகை வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/22773

  • தொடங்கியவர்

நிறைவுக்கு வந்தது தேடுதல் நடவடிக்கை; மூவர் கைது

 
நிறைவுக்கு வந்தது தேடுதல் நடவடிக்கை; மூவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆறு கண்டர் ரக வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற நிலையில் பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸாருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யும் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர், நெல்லியடி, மற்றும் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் இணைந்து இன்று காலை துன்னாலை பிரதேசத்தை சுற்றிவளைத்ததுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்

இதன்போது  ஆறு கண்டர் ரக வாகனங்கள் மற்றும் 10 மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுமதிப்பத்திரங்கள் அற்ற வாகனங்களையே தாம் எடுத்துச்சென்றதாகவும், உரிமையாளர்களை உரிய அனுமதிப்பத்திரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து அதனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும்  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலே இன்றைய தினமும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/end-Search-operation-Three-arrest

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில் இதெல்லாம் சகஜமப்பா. 

சிங்களவன் இப்படி தமிழ் மக்களை அடக்கி ஆளனும்.. அடிமைப்படுத்தி வைச்சிருக்கனும் என்று தானே... சில பல சர்வதேச சக்திகளும் விரும்பினம். வந்து போய் ஆலோசனைகளும் கொடுக்கினம்.

சிங்களவனுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்குது. என்ன கொடுமை செய்தாலும் யாரும் கேட்க மாட்டினம். 

எல்லாம்.. சொறீலங்காவின் பூகோள அமைவிடமும்.. தமிழர்களிடம் உள்ள காட்டிக்கொடுப்புக் குணமும் தான்.. அவனுக்கு அந்த மச்சமாக மாறியுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20641608_10207914431093381_1556181620_o.

77...... 80களில் நாம் கண்ட கண்கொள்ளா காட்சி மீண்டும் ஆரம்பமாகின்றது.
ஆரம்பகாலங்களிலும் இப்படித்தான் சிங்கள இராணுவம் அதிகாலையில் கருங்காலி கொட்டன் வைத்திருந்தவனையும் , குருவி சுட கட்டுத்துவக்கு வைத்திருந்தவனையும் காவோலையை தூக்கிப்பார்த்து தேடியலைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் காலத்தில் லலித் அத்துலத்முதலியால் உருவாக்கப்பட்ட இந்த STF தமிழ் மக்கள் மீது கடந்த காலங்களில் எண்ணிலடங்காத கொடுமைகளை நிகழ்த்தியுள்ளது. கிழக்கில் பல படுகொலைகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. இன்று வரை இவர்கள் மேற்கொண்ட எந்த மனித உரிமை மீறல்களும்.. போர்க்குற்றங்களும் இனப்படுகொலைகளும்.. விசாரிக்கப்பட்டதும் இல்லை நீதி வழங்கியதும் இல்லை.

அப்படியான சூழலில்.. எம் சில அரசியல்வாதிகளும் இவர்களின் இருப்பை வரவேற்றதற்கான பலாபலன்களாக இவை காட்சி அளிக்கின்றன.

மேலும்.. சொறீலங்கா  சிங்களப் படைத்துறை ஆக்கிரமிப்பு என்பது எவ்வளவு ஆழமாகவும் படர்ந்தும் தமிழர் தாயகத்தை சூழ்ந்து கொண்டுள்ளது என்பதற்கு இவை சாட்சி.

இதில்.. இன்னொரு விடயம்.. STF க்கு ஆயுதப் பயிற்சி அமெரிக்க - பிரித்தானிய அதிகாரிகளாலும் வழங்கப்பட்டிருந்தன.. ஒரு காலத்தில்.

இவர்களும் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு துணை போனவர்களே. :rolleyes:

வடமராட்சியில் மண் கடத்தலை ஆரம்பித்தது டக்கிளசின் மகேஸ்வரி. அவருக்கு துணை போனது சிங்களப் படை. அதேபோல் யாழில் வாள் வெட்டுக் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்ததும் சிங்களப் படைகளாகும்.

இப்ப அதனை நீக்க அவற்றின் இருப்பை கோருவது என்பது எமது முழு முட்டாள் தனம் என்பதை இந்தச் சம்பவங்கள் எம்மவர்கள் சிலருக்கு உணர்த்தினால் நல்லது.

சிங்களத்தின் எந்தப் படைத்துறைக் கட்டுமானமும்.. தமிழர் நிலத்தில்.. உண்மையான சிவில் நிர்வாகத்தை கொண்டு வர முடியாது. அது தமிழர்களால் தமிழர் நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகும். 

  • தொடங்கியவர்

STF, பொலிஸ் வளையத்துக்குள் மீண்டும் துன்னாலை! – பெருமளவில் குவிப்பு!!

 
STF, பொலிஸ் வளையத்துக்குள் மீண்டும் துன்னாலை! – பெருமளவில் குவிப்பு!!காலையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது
 

வடமராட்சி துன்னாலையில் தற்போது மீண்டும் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் சுற்றிவளைப்பில் ஈடுபடுபட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இன்று காலை துன்னாலைப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் அகன்றனர். தற்போது மீண்டும் அவர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வேம்படிச் சந்தியில் இருந்து கலிகைச் சந்திவரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாலையில் பயணிப்போரிடம் அவர்கள் சோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

http://newuthayan.com/story/16723.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஹொலிடே போனவையள் எப்படி அங்கு என்று கேட்டால் ? ஆமி பேருக்குத்தான் நிக்கிறான் என்று சொல்வினமோ இல்லையோ என்பதுதான் எனது குழப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் செய்யவேண்டிய வேலைக்கு அதிரடிப்படையை பாவிப்பது தமிழரை அச்சமூட்டும் செயற்பாடு. சண்டியரை அடக்க பொலிஸ் காணாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இனி  அடங்குமா?

அல்லது  தூண்டி  விடப்படுமா??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பொலிஸ் செய்யவேண்டிய வேலைக்கு அதிரடிப்படையை பாவிப்பது தமிழரை அச்சமூட்டும் செயற்பாடு. சண்டியரை அடக்க பொலிஸ் காணாதா?

பொலிஸ் மீதே வாள் வெட்டு நடந்தது அண்மையில் வவுனியாவில் பொலிசார்  சண்டையை விலக்க விலக்க தமிழ் இளைஞர்கள் சண்டை போட்டார்கள்  காணொளிபார்க்க வில்லையா ஆனால் பொலிசாரினால் சில வற்றை அடக்க முடியாது  அதற்க்காக விசேட படைதான் வேண்டும் என்றில்லை   நாடு தளம்பல் நிலையில் இருக்க வேண்டும் என்று ஒரு சத்தி  இயங்குகிறது போல் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

நல் ஆட்ச்சி மிகவும் மிகவும் நல்ல ஆட்ச்சியாக போகுதுபோல ...... நல் ஆட்ச்சியை விரும்பிறவை சந்தோசப்படட்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பெருமாள் said:

இந்த முறை ஹொலிடே போனவையள் எப்படி அங்கு என்று கேட்டால் ? ஆமி பேருக்குத்தான் நிக்கிறான் என்று சொல்வினமோ இல்லையோ என்பதுதான் எனது குழப்பம் .

நேற்று.....
கனம் நீதிபதி அவர்களே! நான் சிறிலங்காவிலையிருந்து வந்திருக்கிறன்.  உங்களிட்டை அகதி தஞ்சம் கோரி விண்ணப்பிக்கிறன். அங்கை எங்கடை ஊரிலை சிங்கள ஆமியளாலை பிரச்சனை. அடிக்கிறாங்கள்....என்ரை குடும்பத்திலை நாலு பேரை சுட்டுப்போட்டாங்கள்....தமிழர் எண்டாலே அடிக்கிறாங்கள்...சுடுறாங்கள். நான் அங்கை போகேலாது. அதாலை இஞ்சை தொடர்ந்திருக்க அனுமதியளிக்குமாறு வேண்டுகிறேன்.

இன்று.....
அவங்கள் உண்மையிலையே நல்லவங்கள் இஞ்சையிருக்கிற சனங்கள்தான் சும்மா தேவையில்லாமல் கதைக்குதுகள். நான் கொண்டு போன சிக்ரெட்டிலை ஒரு பக்கற்றை குடுத்தன் சந்தோசமாய் வாங்கி பத்திக்கொண்டு போறாங்கள்.

  • தொடங்கியவர்

இன்றும் சுற்றிவளைப்பு: துன்னாலையில் 10 பேர் கைது!

 
இன்றும் சுற்றிவளைப்பு: துன்னாலையில் 10 பேர் கைது!
 

வடமராட்சி துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

http://newuthayan.com/story/16771.html

  • தொடங்கியவர்
யாழ். துன்னாலையில் இன்று 10 பேர் கைதாகினர்
 

- கே. மகா

image_7adad62c0d.jpg

யாழ்ப்பாணம், துன்னாலையிலுள்ள கடவத்தை, வேம்படிப் பகுதிகளில், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் இன்று நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, பல்சர் மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-துன்னாலையில்-இன்று-10-பேர்-கைதாகினர்/71-201886

தமிழரை படுகொலைசெய்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை கைது செய்ய முயலாத சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் இன்னொரு அராஜக நடவடிக்கை!

இதன் விளைவுகள் மிகக் கடுமையாகவே இருக்கும்!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படும் வரை தமிழர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.