Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரமணர்கள் தமிழரல்ல, என்பது விதண்டாவாதம் மட்டுமல்ல, வெறும் மோசடி!

Featured Replies

தூயவன்! நீங்கள்தான் இங்கே காவோலை போன்ற நடக்கின்றீர்கள்.

தந்தை பெரியார் இளவயது பெண்ணை திருமணம் செய்தது குறித்து பேசியும், அவர் சொன்ன கருத்துக்களை முழுவதும் படிக்காமல் சில பகுதிகளை மட்டும் எடுத்தும் காவோலை போன்று நடக்கிறீர்கள்.

இங்கு பேசப்படும் காவோலை என்பது ஏற்புடையது அல்ல என்பது எனது பணிவான கருத்து, காவோலையால் எதையும் ஏந்தி வைத்திருக்கமுடியுமா? காவோலை என்பது பனையினது காய்ந்துபோன ஓலை எனப்படுவது.

இக்கருத்துக்கு பொருத்தமானது பன்னாடைதான். பன்னாடைக்கு அது பொருத்தமானது, பன்னாடை என்ன செய்யுமென்றால் நல்லவற்றை எல்லாம் போக விட்டு கஞ்சல்களை எல்லாம்பிடித்து வைத்திருக்குமாம், நல்லவிடயங்களை விட்டு கெட்ட விடயங்களை கதைப்பவர்களை பன்னாடை என்று பேசுவதுதான் எமது ஊர் வழக்கம், ஊருக்கு ஊர் வித்தியாசம் இருக்கிறதோ தெரியவிலை. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமன் இருக்கின்ற காலத்தில் கடவுளாக்கப்படவில்லை. அவன் மரணித்த பிறகு தான், அவனது வரலாற்றைக் கேட்டு மக்கள் மதிப்புக் கொண்டார்கள். வழிபடவும் தொடங்கினார்கள்.

அவ்வாறு அவனை வழிபாடு செய்கின்ற மக்களைக் கேட்டால் தெரியும். அவன் ஒரு ஒழுக்கசீலன் என்பதற்காகத் தான், வழிபடுகின்றோம் என்று.

என்ன இழவு இது.

இராமாயணத்தில் அயோத்தியாக் காண்டம் எட்டாவது அத்தியாயம், இராமன் தனது காம இன்பத்திற்காக, அரச பழக்க வழக்கங்களுக்கு இணங்க பலதார மணம் புரிந்தான் என்று கூறுகிறது. இது இராமனின் ஒழுக்கக் கேட்டைப் பறை சாற்றுவதுடன் இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை நகைப்புக்குரியதாக்குகிறது.

அது மட்டமா ஒரு சூத்திரன் தவம் செயக்கூடாது என்று சம்புகனை கொன்றான்.

பாவம் சீதை! பல மாதங்கள் சிறையில் இருந்து தனது ஆசை நாயகனிடம் ஒடி வர இந்தக் கயவாளிப் பயல் ராமன் என்ன செய்தான் என்பது ஊரறிந்த விடயம். இவனுக்கும் கடவுள் தன்மைக்கும் என்ன இருக்கிறது??????

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் பிராமணரைத் தமிழரில்லை என்று ஒதுக்கி வைத்ததால் தான், பிராமணர்கள் மத்திய அரசின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்தார்கள் என்பதே சொல்லவருவது. சொல்லப் போனால், அவர்களைத் தமிழர்களில்லை என்று அன்னியப்படுத்தி வைத்தது பெரியார் தான் என்பதே! தமிழீழத்துக்கு ஆதரவாக இருந்த காலங்களில் அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். எதிராகப் போன போது எதிரானார்கள்.

பெரும்பாலான பிராமணர்கள் ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் அவர்கள் ஆண்டாண்டு காலமாக அரச சேவைகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது ஆகும். இங்கு ஆட்சி எனப்படுவது சோழர் ஆட்சி முதல் இந்திய மத்திய அரசு ஆட்சி வரையான ஆட்சிகளாகும். தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்புக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் 3 வீதமான பிராமணர்கள் பெரும்பாலான அரச பதவிகளிலும் நீதித்துறையிலும் இடம்பிடித்திருப்பது மற்ற சாதிகளில் இருந்து வந்த அரசியல்வாதிகள் கற்றறிந்தவர்களுக்கு தவறாக தெரிவதாகும். இதற்கு முடிவுகட்டவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களிலும் அரச சேவையிலும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளது. இந்த இ;டஒதுக்கீடு இலங்கையில் உள்ள பிரதேச வாரியான இடஒதுக்கீட்டுக்கு ஒத்தாகும். பிரித்தானியர் காலத்தில் இலங்கை அரச சேவையில் ஆதிக்கம் செய்து வந்த இலங்கைத்தமிழர் இந்த இட ஒது;கீட்டை "தரப்படுத்தல்" என்று எதிர்த்து போராட்டம் செய்து தமிழீழம் கோருவதில் அதுவும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.

பெரும்பாலான பிராமணர்கள் ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் அவர்கள் ஆண்டாண்டு காலமாக அரச சேவைகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது ஆகும். இங்கு ஆட்சி எனப்படுவது சோழர் ஆட்சி முதல் இந்திய மத்திய அரசு ஆட்சி வரையான ஆட்சிகளாகும். தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்புக்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் 3 வீதமான பிராமணர்கள் பெரும்பாலான அரச பதவிகளிலும் நீதித்துறையிலும் இடம்பிடித்திருப்பது மற்ற சாதிகளில் இருந்து வந்த அரசியல்வாதிகள் கற்றறிந்தவர்களுக்கு தவறாக தெரிவதாகும். இதற்கு முடிவுகட்டவே சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களிலும் அரச சேவையிலும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளது. இந்த இ;டஒதுக்கீடு இலங்கையில் உள்ள பிரதேச வாரியான இடஒதுக்கீட்டுக்கு ஒத்தாகும். பிரித்தானியர் காலத்தில் இலங்கை அரச சேவையில் ஆதிக்கம் செய்து வந்த இலங்கைத்தமிழர் இந்த இட ஒது;கீட்டை "தரப்படுத்தல்" என்று எதிர்த்து போராட்டம் செய்து தமிழீழம் கோருவதில் அதுவும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.

தூயவன், ஜூட் எங்கு கொண்டுவந்து எதை? செருகி எதுக்கு? எப்படி? ஆப்பு வைக்கிறார் என்று புரிகிறதா? :lol::lol::lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வக்கிரமான வாதத்திற்குக் கூறப்படுகிற காரணம் என்ன? பிராமணன் சமஸ்கிருதத்தை ஏற்கிறான் என்பது தான். லத்தீன் மொழியில் ஒதப்படுகிற சொற்களைக் கிறிஸ்தவர்கள் ஏற்றாலும் அவர்கள் தமிழர்களே, அரபு மொழியில் பெயரும் வைத்துக் கொண்டு, அரபு மொழியில் ஓதப்படுகின்ற விடயங்களை முஸ்லீம்கள் ஏற்றாலும் அவர்கள் தமிழர்களே, ஆனால் சமஸ்கிருத மொழியில் ஒதப்படுகின்ற மந்திரங்களை ஏற்பதால், பிராமணன் தமிழன் அல்ல, பிதற்றல் அல்லவா?

முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள் யாராயினும் மதகுருவாக வரமுடியும் ஆனால் நம்ம இந்து இருக்குதல்ல அதில பிராமண குடும்பத்தில பிறந்தவங்க மட்டும் தான் மதகுருவா வரமுடியும் நேரடியா இறைவனிட்ட பேசமுடியும்,அது ஏனுங்க???

தமிழை சுத்தமாக பேசுவோரெல்லாம் தமிழரல்ல மாறாக தமிழ் உணர்வுள்ளோர் மட்டுமே தாமிழராக அடையாளம் காட்டப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இழவு இது.

இராமாயணத்தில் அயோத்தியாக் காண்டம் எட்டாவது அத்தியாயம், இராமன் தனது காம இன்பத்திற்காக, அரச பழக்க வழக்கங்களுக்கு இணங்க பலதார மணம் புரிந்தான் என்று கூறுகிறது. இது இராமனின் ஒழுக்கக் கேட்டைப் பறை சாற்றுவதுடன் இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை நகைப்புக்குரியதாக்குகிறது.

அது மட்டமா ஒரு சூத்திரன் தவம் செயக்கூடாது என்று சம்புகனை கொன்றான்.

பாவம் சீதை! பல மாதங்கள் சிறையில் இருந்து தனது ஆசை நாயகனிடம் ஒடி வர இந்தக் கயவாளிப் பயல் ராமன் என்ன செய்தான் என்பது ஊரறிந்த விடயம். இவனுக்கும் கடவுள் தன்மைக்கும் என்ன இருக்கிறது??????

அந்த இழவு குறித்தே நான் கவலைப்படுகின்றேன். இராமன் குறித்து மக்களுக்குப் போதித்தவர்கள், அவனது ஒழுக்கம் குறித்தே போதித்தார்களே தவிர, அவனது தவறான வாழ்க்கை பற்றிச் சொல்லவில்லை. எனவே அம்மக்கள் நல்வழிக்க அவனை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டதில் தவறில்லை.

இப்போது பெரியாரை வழிகாட்டி என்று எடுத்த நீங்கள், இளம்பெண் திருமணத்தையோ, அல்லது, ஜேர்மனியில் ஆடிய நிர்வாண ஆட்டத்தையோ, வைத்தா வழிகாட்டியாக எடுத்தீர்கள். இல்லையே! அவ்வாறு தான் இராமன் குறித்து மக்கள் கொண்டிருந்த மதிப்பு, அவர்களுக்கு ஒழுக்கசீலனாக வர்ணிக்கப்பட்டது தான். அதைக் குழப்ப வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.

மேலும், சம்புகனைக் சூத்திரன் என்பதால் தான் கொன்றதாக ஐாதி வாதம் போடுகின்றீர்கள். இந்தத் தருணத்தில் தான் ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றேன். அவன் மணம் செய்த சீதை கூட, பூமித்தாயின் பிள்ளை என்றே கண்டெடுக்கப்பட்டாளே தவிர, அவள் மிதிலை மன்னர் வம்சத்தவளாக இல்லை.

எனவே, அவள் என்ன ஜாதி என்று அறியாமலே, திருமணம் நடத்திய இராமன், சூத்திரன் தவம் செய்தான் என்று கொலை செய்ததாகக் கதை விடுவது பொருத்தமானதாக இல்லை.

இராமணயத்தை எழுதிய வான்மிகியே, ஒரு திருடனாக இருந்து, பிறகு முனிவரானவர் தான்.

சம்புகனைக் கொன்றது எதற்கு என்று ராமாயணத்தில் தெளிவாக எழுதி இருக்கிறது. படித்துப் பாருங்கள்.

அப்படியே ராமனை வழிகாட்டியாக எந்த விடயத்தில் எடுக்கலாம் என்றும் சொல்லுங்கள்!

நாமும் சரத்பென்சகோவை வழிகாட்டியாக எடுப்பது பற்றி சிந்திக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகச் சரத் பொன்சேகாவையும் வழிகாட்டியாக எடுக்கலாம். விடுதலைப்புலிகள் மாவீரர்களைக் கெளரவிக்கும் நிலையைப் பார்த்துத் தான், இப்போது சிங்கள அரசாங்கமும் சிங்களச் சிப்பாய்களையும் கெளரவிக்கின்றது. ஏன் 91 இல் ஆனையிறவில் சிறிலங்கா கடற்படையால் சமர் தோல்வியுற்றதை வைத்துத் தான், கடற்புலிகளை வளர்ச்சியடையத் தலைவர் வைத்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அது புலத்திற்கு ஓடித்தப்பாமல், முன்பை விட மூர்க்கம் கொண்டவனாகச் செயற்படுவதை நிச்சயமாக வழிகாட்டியாக எடுக்கலாம். எதிரியடிக்கின்றான் என்பதற்காக, அவன் காலில் பணியக் கூடாது என்பதற்கு எம் மக்களுக்கு வழிகாட்டியாகக் கூட அது இருக்கலாம்.

யாராவது தமிழ் கவிஞர்கள் சம்பூர் முதல் வாகரை கைப்பற்றப்பட்டதை பற்றி "பென்சகோயணம்" என்று பெயரில் காப்பியம் எழுதட்டும்.

அதையும் தமிழ் இலக்கியத்தில் சேர்த்து பெருமை அடைவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விதண்டாவாதங்கள் தான் தமிழினின் சாபக்கேடு. எதிரியைப் பார்த்து முன்னேறு என்பது எதிரிக்கு பணிதல் என்று அர்த்தம் கற்பிப்பது மூடத்தனம். எங்களுக்க பலம் சேர்க்கின்ற எதையும் உள்வாங்குவதில் தவறு கிடையாது.

அப்படியென்றால் என்றைக்கு இறந்து போய்விட்ட ராமனிற்கும் மட்டும் ஏன் இன்றைக்கும் பணிகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமக்குப் பொருத்தமே பார்க்கத் தெரியவில்லை. ராமனைத் தமிழர்கள் தான், அதுவும் சென்ற நூற்றாண்டில் இருந்து தான் பெரியார் பக்தர்கள் மட்டும் எதிரியாகக் கருதினார்களே தவிர, வடக்கில் உள்ள இந்துக்கள் கருதியது கிடையாது. ஆனால் சரத் பொன்சேகா எமக்கு எதிரி.

எனவே எதிரிக்கு பணியாமை என்ற கருத்து, ராமனுக்கு பொருந்தது.

கட்டு கதைகளையும்...கற்பனைகளையும்...த

வடக்கில் உள்ளவர்களுக்கு ராமன் கடவுள். அவர்கள் தெற்கில் உள்ளவர்களை வென்றதால் ராமன் தெற்கில் உள்ளவர்களுக்கும் கடவுள்.

சரத்பென்சகோ சிங்களவர்களுக்கு கடவுள். அவர்கள் தமிழர்களை வென்றால், நாளை பென்சகோ தமிழர்களுக்கும் கடவுள்.

நல்ல வேளையாக இம்முறை அப்படி நடக்காது.

வன்னிமைந்தன்! வன்னியில் உள்ள மாடுகளில் உள்ள குறிகள் பற்றியும் சில கருத்துக்களை வைத்திருக்கிறேன். அங்கு வந்த அதைப் பற்றியும் கவிதை எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சார். உங்களுக்கு இலக்கியங்கள் புராணங்கள் என்பனவற்றிற்கும் சைவ சமயம் இந்து சமயம் என்பன போதிக்கும் வாழ்வியல் மெய்யான அறிவியலுக்கும் இடையில் உள்ள வேற்றுமைகளை உணரத் தெரியாது என்பதற்காக உலகில் உள்ள அனைவரும் உங்களைப் போலவே என்று தப்புக் கணக்குப் போட்டு உளறித் திரிகிறீர்கள். இளங்கோவும் இதே வகைதான். உலகிலேயே தன்னைத் தானே பகுத்தறிவுள்ளவன் என்று சொன்ன ஒரே விலங்கு பெரியார் தான். காரணம் மனிதர்களுக்கு பகுத்தறிவு சாதாரணமானது. உங்கள் போன்றவர்களுக்கு விளக்கம் சொல்லி விளங்குமா என்பது கேள்விக்குரிய விடயம் என்பதால் தான் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை வைத்து அரைக்கிறீர்கள் இங்கு. :blink::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழமைவாத பகட்டு கதைகளின் மலட்டு தனத்தை

இங்கு கிழட்டு பருவத்தில் யாருக்கு திணிக்கிறீர்...???

பாலுணர்வின்..கவர்ச்சியால்...கவ

ர்ந்திழுக்கப்பட்டு

கற்ப்பனை மையால் செதுக்கப்பட்ட..பித்தலாட்ட..

கதைகளை யாருக்காக இங்கு...மீண்டும் மீண்டும்..அரங்கேற்றுகிறீர்கள

்...???

ஐயோ காமெடி தாங்க முடியல்லையே.. சிரிப்பில் எனக்கு வயிறு வெடிக்கப் போகிறது. இதை எழுதிய வன்னி மைந்தன் கொஞ்ச நாளுக்கு முன்னர் காமசாஸ்திரம் எண்ட கிழட்டுப் புத்தகத்தை தன்ர நடையில மொழிபெயர்த்தவர்.

வானத்திலயும் தண்ணியிலயும் மிதந்து கொண்டு எழுதுகினமோ

தமிழ் பிரமாணன் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.