Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவேகம் படத்திற்காக யாழ்ப்பாணத்தில் வலம் வரும் அஜித்!

Featured Replies

imageedit_10_6884634088.jpg

அண்மையில் தென்னிந்திய நடிகர் அஜித்தின் விவேகம் படம் உலகெங்கிலும் வெளியாகியது.

அத்திரைப்படம் யாழ்ப்பாணத்திலும் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் இரசிகர்கள் அவர்மீது கொண்ட மோகத்தினால், யாழ் நகரில் அவரது கட்டவுட்டினை உந்துருளிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

இன்றைய இத்தலைமுறையினரின் இச்செயற்பாடானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாபெரும் விடுதலைப் போராட்டம் ஒன்று நடந்த மண்ணில், வியப்பூட்டும் கதாநாயகர்கள் வாழ்ந்த மண்ணில் நடிகர்களுக்கு விழா எடுக்கும் தலைமுறை வளர்வது யாழ். மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு நடிகர்களுக்கு விழாவெடுக்கும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

 

21032302_975197045954787_239605027615736

20994010_975197105954781_821338207861619

 

http://thuliyam.com/?p=77152

  • தொடங்கியவர்

21032320_10155057442903002_9174048299071

20992858_10155057442983002_9766465035575

21034335_10155057442993002_2236347961719

20992978_10155057605538002_8785776014396

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளே!!!!
பஞ்சம் வந்தாலும் தயவுசெய்து இந்த கலாச்சாரத்தை மட்டும் உள்ளே நுழைய விடாதே.

ஆமை புகுந்தால்.....எனும் பழமொழியைவிட மோசமானது.
மக்களே! திரைப்படங்களை பாருங்கள்..அனுபவியுங்கள்.

அடிமையாகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விவேகம் வேகமாய் இணையத்தில் ரிலீஸ் ஆகிவிட்டுது தொடக்கத்தில் அவ்வளவு வசூல் இப்படி வசூல் என்று பில்டப் காட்டுவினம் பின்பு அசித் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துவினம் காசு தா எண்டு இப்ப இதெல்லாம் தமிழ் சினிமா வழக்கம் தமிழர்களை சினிமா போதையில் வைத்து கொள்ளையடித்த கூட்டம் இன்னமும் முயற்ச்சி பண்ணுது இந்த நவீன உலகு முற்றாக மாறிவிட்டதை அவர்கள் உணரவில்லை போல் உள்ளது .இதற்க்கு புலியை பார்க்காத தலைமுறை உண்டு யாழில் 95பின் பிறந்தவர்கள் புலியின் வீரமும் நேரில் பார்க்க குடுத்து வைக்காதவர்கள் அவர்களுக்கு அசித்து ,விசை அவர்கள்தான் வீரர்கள் வேறு வழியில்லை கொஞ்ச காலத்தில் தானாகவே திருந்துவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கடவுளே!!!!
பஞ்சம் வந்தாலும் தயவுசெய்து இந்த கலாச்சாரத்தை மட்டும் உள்ளே நுழைய விடாதே.

ஆமை புகுந்தால்.....எனும் பழமொழியைவிட மோசமானது.
மக்களே! திரைப்படங்களை பாருங்கள்..அனுபவியுங்கள்.

அடிமையாகாதீர்கள்.

உன்மைதான் ஆனால் அடிமையாகிறார்கள் போல் தோன்றுகிறது  கு.சாமி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

உன்மைதான் ஆனால் அடிமையாகிறார்கள் போல் தோன்றுகிறது  கு.சாமி அண்ணை 

பெடியளுக்கு ஒன்று நிஜய "தல" தேவைப்படுகின்றது அல்லது நிழல் "தல" தேவைப்படுகிறது....உதுகள் தங்கன்ட சொந்த தலையை பாவிக்கிற மாதிரி தெரியவில்லை ....எதோ வாளை தூக்காமல் அஜித்தின் கட்டவுட்டை தூக்குதுகள் என்று சந்தோசப்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கடவுளே!!!!
பஞ்சம் வந்தாலும் தயவுசெய்து இந்த கலாச்சாரத்தை மட்டும் உள்ளே நுழைய விடாதே.

ஆமை புகுந்தால்.....எனும் பழமொழியைவிட மோசமானது.
மக்களே! திரைப்படங்களை பாருங்கள்..அனுபவியுங்கள்.

அடிமையாகாதீர்கள்.

என்ன அண்ணருக்கு... நல்லூர் ஒவியர் மணியம் வீட்டில் இருந்து ஊர்வலமாக தியேட்டருக்குப் போன அடிமைப்பெண் எம்ஜீஆர்... கவுரவம் சிவாஜி.... கட்டவுட்... எல்லாம் மறந்து விட்டதோ?

வசந்தமாளிகை..... ரசிகமணிகள் 250 வது நாளன்று பண்ணிண அலம்பரை தெரியாதா? 

உங்கண்ட காலத்தில் கரும்பு... இப்ப பாவக்காயா?

யாழ் ராணி தியேட்டர் அடிமைப் பெண் கட்டவுட் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

தலயாம்.. தல.. ம்...

இது மார்கெற்றிங் வேலைகள்.....

வாங்கின காசுக்கு செய்கிறார்கள்... ?

Edited by Nathamuni

31 minutes ago, Nathamuni said:

என்ன அண்ணருக்கு... நல்லூர் ஒவியர் மணியம் வீட்டில் இருந்து ஊர்வலமாக தியேட்டருக்குப் போன அடிமைப்பெண் எம்ஜீஆர்... கவுரவம் சிவாஜி.... கட்டவுட்... எல்லாம் மறந்து விட்டதோ?

வசந்தமாளிகை..... ரசிகமணிகள் 250 வது நாளன்று பண்ணிண அலம்பரை தெரியாதா? 

உங்கண்ட காலத்தில் கரும்பு... இப்ப பாவக்காயா?

யாழ் ராணி தியேட்டர் அடிமைப் பெண் கட்டவுட் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

தலயாம்.. தல.. ம்...

இது மார்கெற்றிங் வேலைகள்.....

வாங்கின காசுக்கு செய்கிறார்கள்... ?

உண்மையான விடயம் அது தான், இது புரியாமல் தமிழ் நாட்டு கலாச்சாரம் வந்து விட்டது என்று குப்பாடு போடுவது தவறு.....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அஜித்துக்கு ஏன் புலிகளின் சீருடை போல் ஒன்று போடப்பட்டுள்ளது. இவர் என்ன வரிப்புலியா?

கேவலமான சினிமா மாயையிலிருந்து சினிமா ஹீரோக்களின் விசிறித்துவத்திலிருந்து ஈழத்தமிழர் மீண்டு, பிரபாகரன், விபுலானந்தர், தந்தை செல்வா, அலெக்சாண்டர், ஐன்ஸ்டின், தோமஸ் ஆல்வா எடிசன், பாரதியார், வ.உ.சி. போன்ற சமூக முன்னேற்றத்துக்கு உழைத்த ஈடுநிலையற்ற சாதனையாளர்களை சதாவதானி கதிரவேற்பிள்ளை, நீச்சல் வீரன் நவரத்தினசாமி போன்ற சாதனையாளர்களை தமது முன்மாதிரிகளாக கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.