Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ ராஜ சோழன்

Featured Replies

Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 1/5

Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 2/5

 

https://dai.ly/x276ecahttps://dai.ly/x276ecahttps://dai.ly/x276eca

Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 3/5

".. this bronze is made for Raja Raja when Europe still languishing in the dark ages incapable of producing  anything approach to beauty and technical accomplishment of this piece ..  "

 

Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 4/5

".. women in southern India practice ritual bathing every day, this is where Europe learned that it might be good idea to take a bath more than once a year .."

 

Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 5/5

".. that tittle goes to Srirangam which is so vast that it could comfortably hold the Kremlin, US senate building and houses of parliament, and still have room for palace of Versailles and St. Peter's in Rome .."

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெயர் ஆங்கிலத்தில் Raja of Rajas or Rajas' Raja என்று தான் வர வேண்டும், இல்லையா, என்று நினைப்பதுண்டு...

தமிழில் கூட ராஜாக்களின் ராஜா என்றே வந்திருக்க வேண்டும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லச் சொல்ல முடியாத... சோழர் பெருமையின் இன்னுமொரு ஆளுமை.

  • தொடங்கியவர்
10 hours ago, தமிழ் சிறி said:

சொல்லச் சொல்ல முடியாத... சோழர் பெருமையின் இன்னுமொரு ஆளுமை.

 

சோழமகாராஜன் காதை (?) எம்குல மன்னர்கட்கு பாடசாலை

  • 2 months later...
  • தொடங்கியவர்

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

தமிழர்களின் கட்டுமான கலை,  மற்றும் சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த சான்று.
நேர் கோட்டில்... துல்லியமாக கட்டப்பட்ட,  தஞ்சை பெரிய கோவில் கோபுரம்... !!!

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மறத் தமிழனின், உலக அதிசயம்.  மிரள வைக்கும், தஞ்சை பெரிய கோவில்.

  • கருத்துக்கள உறவுகள்

சோழர், அன்றே தற்கொலை படையை வைத்திருந்தனர்.  படையின் பெயர் ஆபத்து தாவிகள்.

சோழர் அன்று பலம் பெற்றதற்கு காரணம், இன்று நாம் பார்க்கும் ராணுவ விஞ்ஞானத்தை அன்றே சோழர் வளர்த்திருந்தனர்.


இன்னுமோர் காரணம், உலோக வார்ப்பு தொழிநுட்பத்தை சேரர், சோழர் விஞ்ஞானமாக வளர்த்திருந்தனர்.

இன்று நாம் கேள்விப்படும்  டமாஸ்கஸ் மற்றும் வூட்ஸ் உலோக கலப்பு வார்ப்பு முறை, ஆயினும் உண்மையான கலப்பு வார்ப்பு முறையை இன்றும் முழுமையாக கண்டுபிடிக்கமுடியவில்லை, சோழரின் போர்க்கருவிகள் ஒப்பீட்டளவில் அதிக நிறை இல்லாமலும், பராமரிப்பு தேவையில்லாமல், மிகவும் வலுவுடையாதாகவும் இருந்தது.

ஆயினும், தொழில் நுட்ப வளர்ச்சியால், சோழர் படைக்கலையை விடவில்லை. சோழர் ஒரு விதமான mobile warfare ஐ பெரிய யுத்த களத்திலும் பாவித்தார்ட்கள். இதற்கு உலோக தொழில் நுட்ப வளர்ச்சி உறுதுணையாக இருந்தது.       

புண் கிழித்து மடியும் மாறம் சோழரிடமும்  இருந்ததாகவே தெரிகிறது.  பாளையங்கள் தனிப்பட்ட அல்லது சிறு குழு சண்டையின் சிறப்பு திறனை வளர்ப்பதற்கு பாவிக்கப்பட்டது.


சோழரிடம் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தின் பின்னிப்பிணைந்த தன்மையின் அறிவும், அதை எவ்வாறு செயலாக்கம்  செய்வது என்பது பற்றிய நிர்வாக திறனும், ஆளுமையும் நிறையவே காணப்பட்டது.

சோழரிடம், கடற்படை கலங்கள் கட்டும் முறை, முக்கியமாக தனிப்பட்ட, வெவ்வேறு  அறைகளை கொண்ட கலம் அமைக்கும் முறை மிகவும் முன்னேறியிருந்தது. இந்த முறை பிரித்தானியாரால் அன்றைய இந்திய நிலப்பரிப்பில் இருந் ராச்சியங்களில் இருந்த்து திருடப்பட்டதாகவும், அதன் பின்பே பிரித்தானிய கடற்படை வளர்ச்சி பெற்றதாகவும் சரித்திரவியல் ஆய்வளார்கள் இன்றும் சான்றுடன் ஓர் வாதத்தை முன்வைக்கின்றனர். உதாரணமாக, அமெரிக்காவே இதை 1900 - 1930 இல் விமானந்தாங்கி கட்டும் முயற்சியில் கண்டறிந்தது.

மனித சிந்தனை வளத்தை மற்றும் வலுவை (brain power  & labour) உபயோகத்தை,   சோழர் காலத்தில் மிகவும் புதுமையாக இருந்திருக்கும், ஏனெனில் சோழரின் கடற்படை ஆராய்ச்சி பிரிவில்  சீனர், அராபியர் இருந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது.   

இப்படி பல புதுமைகளை, தூர நோக்கோடு, புகுத்தியதால் தான் சோழரால் பேரரசை கட்ட முடிந்தது.

இது, சிங்கிஸ் கான், மொங்கோலியா பேரரிசிலும் தெரிகிறதது, ஏறத்தாழ சோழர் காலம்.

ஆயினும், சோழர் மொங்கோலியா பேரரிசிலும் பார்க்க, சோழர்  மிகவும் தீர்க்கதரிசனத்துடன், பொருளாதார, அரசியல், ராஜதந்திர, படைபலம், கலாசார அதிகாரங்களை  ஒருங்கிணைத்து, உகந்த, அதி உச்ச, தனக்கு சார்ந்த விளைவுகளை பெற்றனர்.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

ராஜ ராஜ சோழனின்... படைப் பிரிவுகள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

ராஜ ராஜ சோழன், தனது எந்தப்  போரிலும் தோற்றது இல்லை.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and outdoor

 

 தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா....

எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு..." பதில் சொல்லிடுவாங்க.

ஆனா, ராஜ ராஜ சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்...

அதற்க்கு *'தஞ்சை பெரிய கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜ ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்...

ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும்,

பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்...

நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை...

நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள்.

நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன்.

அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார்.

நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..." என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர்குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சி தான்... நான் அல்ல... 
இதற்கு இறைவனே சாட்சி என்றான்...

குறிப்பு:இடைச்சி என்றால் எந்த ஜாதி குறிப்படவில்லை..அது ஒரு சங்க காலச் சொல்.

இடைச்சி கல்"..
தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் கல்லே "இடைச்சி கல்".
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.

முக நூலில் இருந்து...
இதிலிருந்து தான் "கழிக்கப்பட்ட கல் மூலக்கல் ஆகும்" என்கிற சொற்றொடர் வழக்காகியது என எங்கோ வாசித்த ஞாபகம்.....

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை பெரிய கோயிலின்  அடித்தளம் வெறும்  "நான்கு அடி" மட்டும் தான்.. என்று காணொளியில் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுகள், இது போன்றவை எமது அடுத்த தலை முறையினருக்கு தமிழின் தொன்மையை எடுத்து சொல்ல உதவும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2018 at 9:16 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

ராஜ ராஜ சோழன், தனது எந்தப்  போரிலும் தோற்றது இல்லை.

இவ்வாறு. இருந்த. சோழ பேரரசு அழிந்த. காரணம்.  யாருக்கும். தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Jude said:

இவ்வாறு. இருந்த. சோழ பேரரசு அழிந்த. காரணம்.  யாருக்கும். தெரியுமா?

வேறு என்ன? வழமை போல காட்டிக் கொடுத்திருப்பார்கள்.

இல்லை காட்டிக்கொடுக்க படவில்லை. பார்ப்பனர்களால் அழைக்கப்பட்டார். நாம் எப்போதும் தமிழர்களையே குறை சொல்வோம். ஆனால் இரெண்டு தமிழர்களை மோதவிட்டு அழிப்பது பார்ப்பான். இன்று சுப்ரமணியசாமி, கருணா போல. கருணாவைதான் காட்டி கொடுத்ததாக நினைப்போம். இல்லை பார்ப்பான் சுப்ரமண்யசாமிதான் கொலை செய்ய திட்டம் போட்டவன். பிறர் எல்லோரும் வெறும் பகடை காய்.

மேலும் சாதி இல்லை என்று சப்பைக்கட்டாமல், ராஜராஜ தேவர் என்று சொல்லுங்கள். அருள்மொழி தேவர் அவரது பெயர். பிற தமிழர்களுக்கு அது பிடிக்காது. சோழன் என்பது அவரது குடும்ப பட்டம். அவரது மரபு களர். அதை கள்ளர் என்று ஆக்கியவன் பார்ப்பான் மூலம் தெலுங்கன் குலோத்துங்கன். அவன் சோழன் கிடையாது. அதுவும் பார்ப்பானின் பொய். 

களர் என்றால் களத்தில் நின்றவர். களரில் ஒவ்வொவொரு பட்டபெயரும் அவர்கள் களமாடிய களத்தை குறிக்கும். இன்றும் கண்டியர் என்று தஞ்சையில் பட்டபேர் களரில் உண்டு. அவர்கள் ஈழத்தில் கண்டியில் பணிபுரிந்தவர்கள். சாதி என்று இல்லை. அது குலம். களர் means soldier. அவ்வளவே. Why deny, hide that ? History should be left as history. Not distort and lie. 

“சோழர், அன்றே தற்கொலை படையை வைத்திருந்தனர்.  படையின் பெயர் ஆபத்து தாவிகள்.” 

ஆபத்துதவிகள் என்பது பாண்டியர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் அல்லவா??!! 

சோழர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் வேளக்காரர்கள் அல்லவா??!!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பழுவூர் கிழான் said:

ஆபத்துதவிகள் என்பது பாண்டியர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் அல்லவா??!! 

சோழர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் வேளக்காரர்கள் அல்லவா??!!

அறிந்த வரையில், சரி என்றே நினைக்கிறன்.

ஆபத்துதாவிகள் படை,  போர்க்களத்தில் மன்னருக்கும் மற்றும் களத்தில் ஏற்படும் இக்கட்டான, ஆபத்து நிலைமைகளை தாண்டுவதற்கு என்றே அறிந்ததாக நினைவு உண்டு.

ஆனாலும், சரியானா புரிதலை தேடுகிறேன்.  

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிட கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பது தமிழர்களாகிய எமக்கு பெருமை தான். ஐரோப்பாவில் எங்கு போனலும் 15 ம் 16 ம் நூற்றாண்டு கோட்டைகளை பார்க்க முடியும்.  தமது கட்ட‍ட கலையை கோட்டைகளை கட்டி  ஆட்சி புரிந்த மக்கள் தமக்கு என்று இறையையுடன் கூடிய நாடுகளை இன்று ஆட்சி புரிந்து வருகிறார்கள். ஆரிய பார்பனர்களின் சொல்லை கேட்டு  கட்டிட கலையில் திறமையை கோவிலைகளை  மட்டும் தமிழ் மன்னர்கள் கட்டியதால் அவ‍ர்களின் சந்த‍தி தமக்கு என்று இறைமையுள்ள நாடு இல்லாமல் இன்றும் அடிமைகளாய் வாழ்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

Thirukarupariyalur4.JPG

உண்டியல் காசு இந்து சமய அறநிலை துறைக்கும் தட்சனை காசு அர்ச்சகருக்கும் நன்கொடை காசு தர்ம கர்த்தவுக்கும் , "சிவன் சொத்து குல நாசம்" ?  நாம் நன்றாக இருந்தால் போதும்  குலமாவது  குட்டையாவது என்று கோயில் நிலங்கள்  , இடங்கள் தனியாரிடமும் போக ..பல சோழர் கால கோயில்கள் சுண்ணாம்பு அடிக்க , பராமரிக்க , ஒரு வேளை பூஜை செய்ய கூட இயலாத பரிதாப நிலையில் இருக்கின்றன .. 😢

On 12/12/2018 at 7:04 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Thirukarupariyalur4.JPG

உண்டியல் காசு இந்து சமய அறநிலை துறைக்கும் தட்சனை காசு அர்ச்சகருக்கும் நன்கொடை காசு தர்ம கர்த்தவுக்கும் , "சிவன் சொத்து குல நாசம்" ?  நாம் நன்றாக இருந்தால் போதும்  குலமாவது  குட்டையாவது என்று கோயில் நிலங்கள்  , இடங்கள் தனியாரிடமும் போக ..பல சோழர் கால கோயில்கள் சுண்ணாம்பு அடிக்க , பராமரிக்க , ஒரு வேளை பூஜை செய்ய கூட இயலாத பரிதாப நிலையில் இருக்கின்றன .. 😢

சிவ‍னுக்கு பூமியில் சொத்துக்கள் இருக்கின்றதா?   இந்த உலகில் பற்ற‍ற்ற வாழ்க்கை வாழ துணை புரிபவன் தான் கடவுள் என்று கூறுவார்களே. மக்களை பற்ற‍ற்றவர்களாக வாழ சொல்லி விட்டு மக்களின் சொத்துகளை சிவன் அபகரித்து கொண்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

சிவ‍னுக்கு பூமியில் சொத்துக்கள் இருக்கின்றதா?   இந்த உலகில் பற்ற‍ற்ற வாழ்க்கை வாழ துணை புரிபவன் தான் கடவுள் என்று கூறுவார்களே. மக்களை பற்ற‍ற்றவர்களாக வாழ சொல்லி விட்டு மக்களின் சொத்துகளை சிவன் அபகரித்து கொண்டாரா?

தோழர் , துணை பொருளில் இருந்து கரு பொருளுக்கு இந்த திரி வேண்டாம் " உயிரின் அடுத்த நிலை என்ன " ? மற்றும்  இறந்தவுடன் எடுத்து செல்லபடுவதாக கூறப்படும் பாவ / புண்ணியம் மற்றும் தங்கள் மேலான கருத்துக்களை பேசாப்பொருள் பகுதியில் இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன் ☺️

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • 2 weeks later...

ராஜராஜ சோழன் நாடுகளைப் பிடித்து வரும் போது பிடித்த இடங்களில் பெரும்படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பாக தாய்லாந்தில் ராஜராஜசோழன் பற்றி மோசமான பதிவுகள் உள்ளதாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இன்றைய தமிழின் அழிவும் அந்தப்படுகொலைகளின் சாபம் தான் என்று அவர் உறுதியாக நிற்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.