Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பெண்களால் லண்டனில் நடத்திச் செல்லப்படும் பிரபல உணவகம்

Featured Replies

லண்டனில் உள்ளவர்கள் சிறந்த முறையில் உயிர்வாழ உதவும் இலங்கை பெண்கள்!

இலங்கை பெண்களால் லண்டனில் நடத்திச் செல்லப்படும் பிரபல உணவகம் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டனில் Papi’s Pickles என்ற உணவகம் இயங்கி வருகின்றது. இங்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரிச் சென்ற தமிழ் பெண்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

2014 ஆம் ஆண்டில் அபி ரமணன் என்ற பெண்ணினால் இந்த உணவகம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வித்தியாசமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. லண்டனில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இலங்கை மற்றும் தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுகின்றது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

இலங்கையை விட்டு வெளியேறிய பெண்களால் அங்கு உணவு தயாரிக்கப்படுகின்ற நிலையில், அதன் மூலமான வருமானங்களால் அவர்களின் வாழ்க்கை நிலை மாறி விடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தின் மூலம், பெண்களுக்கு லண்டன் வாழ்க்கை ஊதியம், பயிற்சி மற்றும் ஆதரவுகளை பெற முடியும். பின்னர், அவர்கள் அனைத்து இலாபங்களையும் மீண்டும் முதலீடு செய்கிறார்கள்.

ரமணன் தனது நிறுவனத்தைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் தகுதிகள் உள்ளதென்பதனை அவர் நம்புகின்றார்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

புலம்பெயர்ந்தோர்களுக்கு லண்டன் பிரதான நகரமாக மாறியுள்ளது. எனினும் புலம்பெயர்ந்தோர் கொண்டு வரும் பெரும் நிலைப்பாடுகள் போதுமானதாக இல்லை என கூறப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரமணன் 14 பெண்களுடன் பணி புரிந்து வந்தார். தற்போது அவர் நான்கு பகுதி நேர பயிற்சிப் பணியாளர்களுடன் பணியாற்றுகிறார்,

ரூபி, ராகினி, கிரிஷாந்தி மற்றும் இந்துமதி ஆகியோர் 1000 பவுண்ட் சம்பளத்துடன் 5,868 மணி நேரம் வேலை செய்து 5,000 மணி நேரம் பயிற்சி வழங்குகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

ஒரு குடிபெயர்ந்தவராகவும், ஒரு தமிழராகவும் இருக்கும் போது லண்டனில் தொழில் வாய்ப்பு பெற்று கொள்வதென்பது கடினம் என்பதனை ரமணன் அறிந்திருந்தார்.

ஆவணப்படம் தொடர்பில் ஆராயும் போதும், தொண்டு வேலைகளை மேற்கொள்ளும் போதும், அவர் பிரித்தானியாவில் பல இலங்கையர்களை சந்தித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகங்களில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாக பெண்களிடையேயும், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு என்பது செயல்பாட்டிற்கு முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

Papi's Picklesஇல் வேலை செய்யும் பெண்கள் ஒரு புதிய நாடு, புதிய கலாச்சாரம் மற்றும் புதிய மொழிக்கு மாற வேண்டிய நிலை காணப்பட்டது.

இருப்பினும், ரமணனின் தலைமை சமையல்காரர்களான ரதி மற்றும் ஷாந்தினி, தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள்.

இது வேலையை எளிதாக்க உதவியது. எதிர்காலத்தில், அவர்களுக்கு ஆங்கிலம் மொழி வகுப்புகள் வழங்கும் நோக்கமும் காணப்படுவதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/uk/01/157169

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலை இருக்கிற ஆக்கள் ஆரெண்டாலும் போய் சாப்பிட்டு பாத்தியளோ?????  tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

லண்டனிலை இருக்கிற ஆக்கள் ஆரெண்டாலும் போய் சாப்பிட்டு பாத்தியளோ?????  tw_smiley:

இது சிட்டிக்குள் இருக்கிறது அவர்களின்  வெப்பில் சவுத் இந்தியன் உணவுகளே முதன்மையாக உள்ளது நம்ம ஆட்க்களுக்கு தோசை சுட்டு களைத்து வெள்ளைகளை குறிவைக்கிறார்கள் போல் உள்ளது தமில்வின்னும் போகிறபோக்கில் அடிச்சு விடுது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது இன்னும்  பிரபலப்படுத்தலாம்  இன்னும் பலருக்கு தொழில் வாய்ப்பு  கொடுக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனி ஒருவன் said:

நல்லது இன்னும்  பிரபலப்படுத்தலாம்  இன்னும் பலருக்கு தொழில் வாய்ப்பு  கொடுக்கலாம்

தம்பியின்ரை  வேண்டுதலும் நல்ல மனமும் நலமே நடக்க உகந்தைமுருகன் அருள்புரியட்டும்....அரோகரா ...

அதுசரி கடையுக்கை நிக்கிறவை ஆரும் ஓமெண்டால்  தனிய நிக்கிற தம்பியும்  உந்தக்கடையிலை கூடமாட வேலைசெய்யலாமெல்லோ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

தம்பியின்ரை  வேண்டுதலும் நல்ல மனமும் நலமே நடக்க உகந்தைமுருகன் அருள்புரியட்டும்....அரோகரா ...

அதுசரி கடையுக்கை நிக்கிறவை ஆரும் ஓமெண்டால்  தனிய நிக்கிற தம்பியும்  உந்தக்கடையிலை கூடமாட வேலைசெய்யலாமெல்லோ? :grin:

நான் என்ன வேண்டாம் என்றா சொல்ல போறன் பக்கத்தில டீயாது வச்சி கொடுப்பன்  ஐ மீன் மத்திய கிழக்கில் டீ அடிச்சு கொடுத்ததாலா கொஞ்ச டீ கலவைகள் தூக்கலா போடுவன்  நல்ல சுவையாக  எதுக்கும் ஒருக்கா கேட்டு சொல்லுங்கோவன் ஊர்லயும் லண்டன்ல இருக்கிறதா பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் கு.சாமி அண்ண:10_wink:

On 9/2/2017 at 10:56 PM, நவீனன் said:

இந்த ஏரியாவில் என்ற டீ கடையை திறக்கலாம் என நினைக்கிறம் கு.சாமி அண்ணை  :10_wink:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி! சகோதரிகளுக்குப் பாராட்டுகள்! தனக்காட்டுராசாவின்ரை விண்ணப்பத்தையும் கடைக்கண்ணால் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

நல்லதொரு முயற்சி! சகோதரிகளுக்குப் பாராட்டுகள்! தனக்காட்டுராசாவின்ரை விண்ணப்பத்தையும் கடைக்கண்ணால் பாருங்கோ!

சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்......!

நொச்சி ...., தனியின் இந்தப் பெயர்கூட நல்லாத்தான் இருக்கு. மீண்டும் நிர்வாகத்துக்கு அலுப்பு இருக்கு போல.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2017 at 3:41 PM, suvy said:

சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்......!

நொச்சி ...., தனியின் இந்தப் பெயர்கூட நல்லாத்தான் இருக்கு. மீண்டும் நிர்வாகத்துக்கு அலுப்பு இருக்கு போல.....!  tw_blush:

இனி இருக்காது சொல்லிப்போட்டன் இனி தனிக்காட்டு ராஜாதான் சுவி அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
On 30.9.2017 at 12:11 PM, suvy said:

சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்......!

நொச்சி ...., தனியின் இந்தப் பெயர்கூட நல்லாத்தான் இருக்கு. மீண்டும் நிர்வாகத்துக்கு அலுப்பு இருக்கு போல.....!  tw_blush:

ஐயோ மூத்தராசா ஒரு விசிறியைத் தவறவிட்டதை இப்பிடியா! சத்தியமா நான் இன்றுதான் பார்த்தேன்!

தனம் =  செல்வம் நெடுக மாத்தியோசிகப்படாதையா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.9.2017 at 11:50 AM, தனிக்காட்டு ராஜா said:

நான் என்ன வேண்டாம் என்றா சொல்ல போறன் பக்கத்தில டீயாது வச்சி கொடுப்பன்  ஐ மீன் மத்திய கிழக்கில் டீ அடிச்சு கொடுத்ததாலா கொஞ்ச டீ கலவைகள் தூக்கலா போடுவன்  நல்ல சுவையாக  எதுக்கும் ஒருக்கா கேட்டு சொல்லுங்கோவன் ஊர்லயும் லண்டன்ல இருக்கிறதா பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் கு.சாமி அண்ண:10_wink:

இந்த ஏரியாவில் என்ற டீ கடையை திறக்கலாம் என நினைக்கிறம் கு.சாமி அண்ணை  :10_wink:

நீங்கள் இந்தப்பக்கம் வருவியளெண்டால் கடைக்கு முன்னாலை கொண்டுபோய் இறக்கி விடுறன்.......கடையுக்கை போய் தேத்தண்ணி ஆத்தி ஆளை மடக்கிறது உங்கடை பிரச்சனை...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இந்தப்பக்கம் வருவியளெண்டால் கடைக்கு முன்னாலை கொண்டுபோய் இறக்கி விடுறன்.......கடையுக்கை போய் தேத்தண்ணி ஆத்தி ஆளை மடக்கிறது உங்கடை பிரச்சனை...:grin:

ஹாஹா லண்டன் பக்கம் வருகிற ஐடியா இல்லை அண்ண  ஆனால்  மடக்கணும் என்று இருந்தால் வந்து தானே ஆகணும் ஆனால் அங்கே என்னத்தில் கொண்டு போய்விடுவியள் போய் இறங்க நல்ல ஒரு வாகனம் ரெடி பண்ணினால் நல்லது tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.