Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னப் பறவைகள், தாராக்கள் மற்றும் கடல் நாரைகள்: நான் எடுத்த சில புகைப்படங்கள்

Featured Replies

ஜீவன் சிவா கனடாவுக்கு வந்து எம்மை சந்தித்த வேளையில் என் கமராவை வாங்கி பார்த்து விட்டு இதில் வெறுமனே ஆட்டோ செட்டிங்கில் படம் எடுக்காமல் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் படம் எடுத்து பழகச் சொல்லி சில அடிப்படை விடயங்களை சொல்லி புரிய வைத்தார்.

அன்றில் இருந்து இதை எப்படியாவது பழக வேண்டும் என்று நினைச்சுக் கொண்டு கமராவை தூக்கிக் கொண்டு போனாலும், சோம்பேறித்தனத்தால் போனில் இருக்கும் கமராவில் தான் படம் எடுப்பதை வழக்கமாக செய்து கொண்டு இருந்தன்

ஆனால் இந்த முறை விடக் கூடாது என்று போய் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் இவை.

பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். உங்கள் விமர்சனமும் உபயோகமான குறிப்புகளும் என் எடுக்கும் திறமையை வளப்படுத்த உதவும்

1r9fd1.jpg

2zjckyd.jpg

18lw81.jpg

28mlpau.jpg

10dzcxx.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நன்றாக இருக்கிறது  தொடருங்கள் ஆவலாக இருக்கிறது  நல்ல  படங்களை பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சீவா இன்னொருக்கா கனடா வரவேணும்போல கிடக்குதே.... :grin: 

முதல் இரண்டு படங்களும் ஓகே.

மற்றவை.....

ம்.. முன்னேற இடமுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்கள், சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிக நன்றாக இருக்கின்றன,   முதலாவது படம் அலகு ... கடைசிப் படம் அழகு......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கலர் கலராக எந்த படத்தைப் போட்டாலும் நன்றாகவே இருக்கும்.

முனி சொன்னது போல் முதல் படங்கள் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிகள்!?

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, படங்கள் நன்றாக உள்ளன!

இருந்தாலும்....கமராவில் ஏற்கனேவே....ப்ரோக்ராம் செய்யப்பட்ட ..Mode களில் மாற்றி...மாற்றி எடுத்திருக்கிறீர்கள் போல உள்ளது!

படங்கள் நன்றாக வந்துள்ளன!

Aperture ஐ மாற்றி.....படத்தின்  Depth of the field ஐ குறைத்தும் ...அதிகரித்தும் பழகுங்கள்!

ஜீவன் தனது படங்களில் இந்த நுணுக்கத்தை ..அடிக்கடி உபயோகிப்பதை கண்டிருக்கிறேன்!

பின வரும் படத்தைப் பாருங்கள்! 

Depth of the Field  ஐக் குறைத்துக்.....குருவியையும் ..மலர்களையும் ...புகைப்படம் எடுத்தவர் முன்னிலைப்படுத்தியுள்ளார்!

ஜீவனின் படங்களை  உதாரணமாகக் காட்ட முயற்சித்தேன்...!

படங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

அடுத்த முறை.....நல்ல பிள்ளை மாதிரி....பின்வருமாறு ஒரு படத்தை எடுத்துக் காட்டவும்!

இது முதலாவது பாடம்...தான்....நிழலி!tw_blush:

Beautiful-Birds-beautiful-nature-2381368

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

1r9fd1.jpg

முதலாவது படம், எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. நிழலி.
காரணம்.... அந்த அன்னத்தின் வாயிலிருந்து ஒழுகும் நீர், கீழே உள்ள தண்ணீரில் பட்டு தெறிக்கும் நீர்த் துவலைகளும்,  நீரலைகளும் மிகத்  துல்லியமாக தெரிவதுடன், அதற்கு... முன் அன்னம்... என்ன செய்திருக்கும் என்பதை, எங்களால்... ஊகிக்க  முடிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

Image result for birds

Image result for birds

Image result for birds

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

Image result for birds

நாதம்.....இந்தப் படத்தை எடுக்க என்ன அளவு  சூம் லென்ஸ் .பாவிச்சது எண்டு சொல்லுவீங்களா?

அல்லது அதுவும் வியாபார இரகசியமோ?tw_blush:

  • தொடங்கியவர்
On 9/27/2017 at 1:29 PM, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் நன்றாக இருக்கிறது  தொடருங்கள் ஆவலாக இருக்கிறது  நல்ல  படங்களை பார்க்க

நன்றி

On 9/27/2017 at 2:38 PM, Nathamuni said:

ஜீவன் சீவா இன்னொருக்கா கனடா வரவேணும்போல கிடக்குதே.... :grin: 

முதல் இரண்டு படங்களும் ஓகே.

மற்றவை.....

ம்.. முன்னேற இடமுண்டு

நன்றி நாதம்

படங்களில் என்னென்ன குறைகள் இருக்கு, அவரை எப்படி தவிர்க்கலாம் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும். இந்த படங்கள் தான் நான் வாழ்வில் முதன் முதலாக Manual settings இல் எடுத்த படங்கள். இன்னும் பயணிக்க வெகு தூரம் இருக்கு

On 9/27/2017 at 2:52 PM, தமிழரசு said:

அருமையான படங்கள், சிறப்பு. 

நன்றி நண்பா

On 9/27/2017 at 5:59 PM, யாயினி said:

பகிர்வுக்கு மிக்க நன்றிகள்!?

நன்றி யாயினி

  • தொடங்கியவர்
On 9/27/2017 at 7:03 PM, புங்கையூரன் said:

நிழலி, படங்கள் நன்றாக உள்ளன!

இருந்தாலும்....கமராவில் ஏற்கனேவே....ப்ரோக்ராம் செய்யப்பட்ட ..Mode களில் மாற்றி...மாற்றி எடுத்திருக்கிறீர்கள் போல உள்ளது!

இல்லை புங்கை. இது நாள் வரை அப்படித்தான் எடுத்து வந்துள்ளேன். Portrait, Sports, Landscape, night landscape, closeup , macro என்று நிறைய Nikon D7000 இல் இருக்கு . அதில் ஒன்றை நேரம் மற்றும் இடத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி எடுப்பது வழக்கம். ஆனால் அவற்றில் எனக்கு பெரிய திருப்தி வரவில்லை. நான் நினைச்ச மாதிரி படங்கள் எடுக்க முடியவில்லை.

இப் படங்கள் முற்றிலும் Manual Settings கில் எடுக்கப்பட்டவை.  ISO  180 to 600 , shutter speed 320 மற்றும் focal 14 to 18 (F14 to F18). இவற்றுக்கான விகித வேறுபாடுகள் (Ratio) இன்னும் எனக்கு சரியாக பிடிபடவில்லை. அத்துடன் எனக்கு aperture settings பற்றி சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இவை பற்றி சரியான தெளிவு வர இன்னும் சில காலம் எடுக்கும்.

இப்படங்கள் ஒரு சிறு குளத்திலும் கடல் ஏரியிலும் எடுக்கப்பட்டவை. அன்னங்களும் தாராக்களும் இருந்த இடங்கள் வெயிலும் நிழலும் மாறி மாறி வந்த பொழுதில் எடுக்கப்பட்டவை. கடல் நாரைகளின் படங்கள் படகு வேகமாக செல்லும் போது அதில் நின்று கொண்டு எடுக்கப்பட்டவை

On 9/27/2017 at 7:03 PM, புங்கையூரன் said:

இது முதலாவது பாடம்...தான்....நிழலி!tw_blush:

Beautiful-Birds-beautiful-nature-2381368

தெய்வமே.... இப்படியான படம் முற்றிலும் மனுவல் செட்டிங்கில் எடுக்க எனக்கு இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும். ஆனால் கண்டிப்பாக எடுப்பேன் எனும் நம்பிக்கை உள்ளது (இடையில் சாவு குறுக்கிடாவிடின்)

21 hours ago, தமிழ் சிறி said:

முதலாவது படம், எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. நிழலி.
காரணம்.... அந்த அன்னத்தின் வாயிலிருந்து ஒழுகும் நீர், கீழே உள்ள தண்ணீரில் பட்டு தெறிக்கும் நீர்த் துவலைகளும்,  நீரலைகளும் மிகத்  துல்லியமாக தெரிவதுடன், அதற்கு... முன் அன்னம்... என்ன செய்திருக்கும் என்பதை, எங்களால்... ஊகிக்க  முடிகின்றது. 

எனக்கும் இப் படம் மிகவும் பிடித்துக் கொண்டது. முக்கியமாக வாயில் நீர் துளி வடிவதுடன் கடைக்கண்ணால் என்னை பார்க்கின்றது (அனேகமாக பெண் அன்னமாக தான் இருக்கும்....சைட் அடிக்குது என்னை)

6 hours ago, Nathamuni said:

Image result for birds

Image result for birds

Image result for birds

நீங்கள் எடுத்த படங்களா நாதம்? ஓம் என்றால் இலேசாக ரகசியத்தை என் காதில் மட்டுமாவது சொல்ல முடியுமா (புங்கைக்கு கேட்காமல்)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இல்லை புங்கை. இது நாள் வரை அப்படித்தான் எடுத்து வந்துள்ளேன். Portrait, Sports, Landscape, night landscape, closeup , macro என்று நிறைய Nikon D7000 இல் இருக்கு . அதில் ஒன்றை நேரம் மற்றும் இடத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி எடுப்பது வழக்கம். ஆனால் அவற்றில் எனக்கு பெரிய திருப்தி வரவில்லை. நான் நினைச்ச மாதிரி படங்கள் எடுக்க முடியவில்லை.

இப் படங்கள் முற்றிலும் Manual Settings கில் எடுக்கப்பட்டவை.  ISO  180 to 600 , shutter speed 320 மற்றும் focal 14 to 18 (F14 to F18). இவற்றுக்கான விகித வேறுபாடுகள் (Ratio) இன்னும் எனக்கு சரியாக பிடிபடவில்லை. அத்துடன் எனக்கு aperture settings பற்றி சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இவை பற்றி சரியான தெளிவு வர இன்னும் சில காலம் எடுக்கும்.

இப்படங்கள் ஒரு சிறு குளத்திலும் கடல் ஏரியிலும் எடுக்கப்பட்டவை. அன்னங்களும் தாராக்களும் இருந்த இடங்கள் வெயிலும் நிழலும் மாறி மாறி வந்த பொழுதில் எடுக்கப்பட்டவை. கடல் நாரைகளின் படங்கள் படகு வேகமாக செல்லும் போது அதில் நின்று கொண்டு எடுக்கப்பட்டவை

நல்லது...நிழலி!

நான் தான் தவறாகப் புரிந்து விட்டேன்!

நவீன கமராக்களில் முன்பு போல ....focusing  க்கு அதிக நேரம் மினக்கடத் தேவையில்லை!

Shutter Speed உம், Aperture Settings உம்  தான் முக்கியமானவை என்று நினைக்கிறேன்!

ஒவ்வொரு படமாக எடுத்து ...அவற்றை ...ஒவ்வொன்றாக...ஆராய்ந்து பார்த்தால் தான்...எமது தவறுகள் தெரியவரும்!

ஒவ்வொன்றாகப் பழக வேண்டியது தான், ஒரே வழி!

கனன், நிக்கன் போன்ற கமராக்களில்....எடுத்த படங்களை analyse  பண்ணும் tools  இருக்கின்றன!

ஒரு படம் நீங்கள் நினைத்த மாதிரி ..அல்லது நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக வரும் போது வரும் மகிழ்ச்சி இருக்கின்றதே.....அது உங்கள் முதலாவது குழந்தையை...முதலில் பார்ப்பது போன்ற மகிழ்ச்சிக்கு நிகரானது!

அதுவே உங்களுக்கு...மிகுந்த  தன்னம்பிக்கையையும் தரும்!

படங்களை எங்களுடன்...பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

வாழ்த்துக்கள்...நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2017 at 9:12 PM, நிழலி said:

1r9fd1.jpg

2zjckyd.jpg

படதின் ஆழம் நனறாக உள்ளது.

நானும் சமீபத்தில் ரமலான் பண்டிகையின் விழாக்கால சலுகையில் நிக்கான் D5300 இரு லென்ஸ் தொகுப்புகளோடு வாங்கினேன்..  காமிரா தொழிற்நுட்பம் பற்றிய அறிய ஆவல் இருந்தாலும், வேலைப் பளுவால் நேரமில்லை.. புது காமிரா அப்படியே தூங்குகிறது. இந்த பதிவில் காமிரா செட்டிங்கை எப்படி கையாள வேணுமென்று நிபுணர்கள், கற்பவர்கள் சொல்லிக்கொடுத்தால் நன்று.

8 hours ago, Nathamuni said:

Image result for birds

Nice shot..!

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2017 at 3:03 AM, புங்கையூரன் said:

Beautiful-Birds-beautiful-nature-2381368

புங்கை, நீங்கள் சொல்லியுள்ள மாதிரி துபாய் நகைக்கடைகளின் முன் என் வீட்டம்மா நிற்பது போன்று படம் ஒன்றை எடுத்தேன்..

எனது பார்வையில் படம் மிக நன்றாக வந்துள்ளது.. ஆனால் பின்னாலுள்ள நகைக்கடையில் தொங்கும் 'நகை அடுக்குகள்' காமிராவில் மங்கலாக(Out of focus - மேலேயுள்ள குருவி படம் மாதிரி) பதிந்துள்ளதால், என் தலையில் குட்டுகள் விழுந்து அங்கே நரைமுடியும் கொட்டிவிட்டது சாமி..!

இந்த மாதிரி 'வீட்டு ஆபத்து'களிலிருந்து தப்பிக்க காமிராவின் செட்டிங்கில் எப்படி நுணுக்கமாக கையாளவேண்டுமென அறியத் தாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இல்லை புங்கை. இது நாள் வரை அப்படித்தான் எடுத்து வந்துள்ளேன். Portrait, Sports, Landscape, night landscape, closeup , macro என்று நிறைய Nikon D7000 இல் இருக்கு . அதில் ஒன்றை நேரம் மற்றும் இடத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி எடுப்பது வழக்கம். ஆனால் அவற்றில் எனக்கு பெரிய திருப்தி வரவில்லை. நான் நினைச்ச மாதிரி படங்கள் எடுக்க முடியவில்லை.

இப் படங்கள் முற்றிலும் Manual Settings கில் எடுக்கப்பட்டவை.  ISO  180 to 600 , shutter speed 320 மற்றும் focal 14 to 18 (F14 to F18). இவற்றுக்கான விகித வேறுபாடுகள் (Ratio) இன்னும் எனக்கு சரியாக பிடிபடவில்லை. அத்துடன் எனக்கு aperture settings பற்றி சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இவை பற்றி சரியான தெளிவு வர இன்னும் சில காலம் எடுக்கும்.

இப்படங்கள் ஒரு சிறு குளத்திலும் கடல் ஏரியிலும் எடுக்கப்பட்டவை. அன்னங்களும் தாராக்களும் இருந்த இடங்கள் வெயிலும் நிழலும் மாறி மாறி வந்த பொழுதில் எடுக்கப்பட்டவை. கடல் நாரைகளின் படங்கள் படகு வேகமாக செல்லும் போது அதில் நின்று கொண்டு எடுக்கப்பட்டவை

தெய்வமே.... இப்படியான படம் முற்றிலும் மனுவல் செட்டிங்கில் எடுக்க எனக்கு இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும். ஆனால் கண்டிப்பாக எடுப்பேன் எனும் நம்பிக்கை உள்ளது (இடையில் சாவு குறுக்கிடாவிடின்)

எனக்கும் இப் படம் மிகவும் பிடித்துக் கொண்டது. முக்கியமாக வாயில் நீர் துளி வடிவதுடன் கடைக்கண்ணால் என்னை பார்க்கின்றது (அனேகமாக பெண் அன்னமாக தான் இருக்கும்....சைட் அடிக்குது என்னை)

நீங்கள் எடுத்த படங்களா நாதம்? ஓம் என்றால் இலேசாக ரகசியத்தை என் காதில் மட்டுமாவது சொல்ல முடியுமா (புங்கைக்கு கேட்காமல்)

இரகசியம்: பொறுமை, மகாபொறுமை..... 59 வது செக்கனிலும் பொறுமைக்கு ஏமாற்றம் வரலாம்.

அந்த பொறுமை உங்களை, உங்கள் கமராவுடன் நெருங்க வைக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2017 at 1:03 AM, புங்கையூரன் said:

நிழலி, படங்கள் நன்றாக உள்ளன!

இருந்தாலும்....கமராவில் ஏற்கனேவே....ப்ரோக்ராம் செய்யப்பட்ட ..Mode களில் மாற்றி...மாற்றி எடுத்திருக்கிறீர்கள் போல உள்ளது!

படங்கள் நன்றாக வந்துள்ளன!

Aperture ஐ மாற்றி.....படத்தின்  Depth of the field ஐ குறைத்தும் ...அதிகரித்தும் பழகுங்கள்!

ஜீவன் தனது படங்களில் இந்த நுணுக்கத்தை ..அடிக்கடி உபயோகிப்பதை கண்டிருக்கிறேன்!

பின வரும் படத்தைப் பாருங்கள்! 

Depth of the Field  ஐக் குறைத்துக்.....குருவியையும் ..மலர்களையும் ...புகைப்படம் எடுத்தவர் முன்னிலைப்படுத்தியுள்ளார்!

ஜீவனின் படங்களை  உதாரணமாகக் காட்ட முயற்சித்தேன்...!

படங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை!

அடுத்த முறை.....நல்ல பிள்ளை மாதிரி....பின்வருமாறு ஒரு படத்தை எடுத்துக் காட்டவும்!

இது முதலாவது பாடம்...தான்....நிழலி!tw_blush:

Beautiful-Birds-beautiful-nature-2381368

15 hours ago, நிழலி said:

தெய்வமே.... இப்படியான படம் முற்றிலும் மனுவல் செட்டிங்கில் எடுக்க எனக்கு இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும். ஆனால் கண்டிப்பாக எடுப்பேன் எனும் நம்பிக்கை உள்ளது  (இடையில் சாவு குறுக்கிடாவிடின்)

Kein automatischer Alternativtext verfügbar.

புங்கையூரான்.... இந்தப் பாம்பு படம் எடுக்கிறதை, படம் எடுத்தவரும்....  :D:
நீங்கள்  சொன்ன "ரெக்குனிக்குவை " பயன் படுத்தியுள்ளார் என நினைக்கின்றேன். :)
அதே... மாதிரி, நிழலி  விரைவில் படம் எடுக்க வேணும். 
அதுக்கு அவர்.... இரண்டு வருச கால அவகாசம் கேட்பது கொஞ்சம் அதிகம். :grin:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.