Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்

Featured Replies

விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்

 

 

(ஆர்.யசி)

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை அவர் விரைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரனுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/25263

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்

வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சிறீலங்கா அரசாங்கம் தனது தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள, இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் என, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அரசாங்கத்தை எப்போது அழைப்பார்..... ?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு லொள்ளுக் கூடிப்போச்சு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, இவர் போய் சந்திப்பதா அவரை இவர் கூப்பிடுவதா? ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இவருக்கு லொள்ளுக் கூடிப்போச்சு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, இவர் போய் சந்திப்பதா அவரை இவர் கூப்பிடுவதா? ?

அதிகாரம் எதுவுமே இல்லாத முதல்வர் என்ற நினைப்பு போல!

வடக்கு மக்களின் தேவைகளுக்கும் ராணுவத்துக்கும் என்ன தான் தொடர்பு?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்(ஆர்.யசி)

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

உலகிலே அரசைவிட இராணுவத்துக்கு அதிக முன்னுருமை வழங்கும்போது   அரசியல் வலுச்சமநிலை மாற்றமடைந்து  மக்களாட்சி  கேள்விக்குள்ளாகுவதோடு பெரும் ஆபத்தானதாகவும் அமையக்கூடியது.  ஒருவேளை  இராணுவத்தூடாக ஒரு எச்சரிக்கையை விட முனைகிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தை பொருத்தவரைக்கும் ராணுவமே சகல விடயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது அரசாங்கமும் அதையே விரும்புகிறது ஏனென்றால் ராணுவத்தை அகற்றாத போது புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் விக்கியர் உடன்பட்டு போவப்போவதுமில்லை அதற்கு ராணுவமும் உடன் பட போவதில்லை பிறகு ஏன் பேச்சு சில நேரத்தில் ராணுவத்தின் உதவிகள்  வடமாகாணசபைக்கு தேவைப்பட்டால் வழங்க இருக்கிறார் என்னவோ இவர் அதாவ்து ராணுவ தளபதி வெளிநாட்டிலிருந்து வந்தவர் மகிந்த காலத்திருக்கவில்லை ஆட்சி மாறியதும் அழைக்கப்பட்ட ஒருவர்  பழைய ராணுவத்தளபதி  என வாசித்த ஞாபகம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

இவருக்கு லொள்ளுக் கூடிப்போச்சு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, இவர் போய் சந்திப்பதா அவரை இவர் கூப்பிடுவதா? ?

சம், சும் என்று முதல்வரை நினைத்து குலைக்கிறார். முதல்வர் வாலாட்டேலை என்று உங்க பலபேர் குத்தி முறியினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.