Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா

Featured Replies

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா
 

image_e96a6ed4e4.jpg“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார்.

 

தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நண்பகல் நடைபெற்றது.

 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, 

“வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்தை செல்வாவின் கூற்றாகும். இதனை யாரும் மாற்ற முடியாது.

“மாகாண சபை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தன் ஐயாவும் தமிழர்களைக் காட்டிக்கொதுத்துவிட்டனர். முஸ்லிம் தலைமைகளும் அவ்வாறுதான் செய்தன. அதை ஏன் செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.

“எங்களுடைய கட்சி, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்ற கருத்தையே கொண்டுள்ளது” என்றார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.கமலதாஸ், முன்னாள் மாகாண அமைச்சர் கே.நவரட்ணராஜா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/வடக்கு-கிழக்கு-இணைந்தே-இருக்க-வேண்டும்-கருணா/73-205121

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் :விநாயகமூர்த்தி முரளீதரன்

Published by Vijithaa on 2017-10-07 18:06:22

 

"வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது" என கருணாம்மான் என்றழைக்கப்படும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

Local_News.jpg

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் 

விநாயகமூர்த்தி முரளீதரன்  தொடர்ந்து தெரிவிக்கையில், 

"இலங்கையில் வாழ்கின்ற தமிழ்  மக்களுக்காக எமது கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும்,  அது போன்று எமது மக்களின் விடுதலைக்காகவும் ஆணித்தரமாக செயற்படும் என்பதுடன், 20 ஆவது திருத்த சட்டம் தற்ப்பொழுது  பாராளுமனறத்தில் அமுலாக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளது ஆனால் எமது கட்சி இதை முற்று முழுதாக எதிர்க்கின்றது.

அந்த அரசியல் சாசனம் எழுதப்பட்ட போது அங்கு தமிழ் நிபுனத்துவம் அற்றவர்களே  பங்குபற்றி உள்ளார்கள்.  தந்தை செல்வா முதல் ஒஸ்லோ தீர்மானம், 13 ஆவது  திருத்த சட்டம் என பல போராட்டங்களை கடந்து கொண்டு இருக்கும் போதே பல உடன்படிக்கைகள்  வந்திருக்கின்றது.

ஆனால் எதிலும் தமிழ் மகளையோ, அல்லது தமிழர்களின் நிலத்தையோ அடகு வைத்தது இல்லை.  பல தொனிப்பொருளில் பேசப்பட்டது தனி நாடு கோரினோம், சமஸ்டியை கோரினோம் வடக்கு கிழக்கு இணைத்த தாயகமாக பேசினோம், அதே போன்று ஒருமித்த இலங்கைக்குள் உள்ளக சுய நிர்ணைய உரிமையை கோரி கூட பேச்சு வார்த்தைகளை நடத்தினோம்.   

இந்த 20 ஆவது சட்டத்தில் ஒரு வசனம் சிங்களத்தில் சேர்க்கபட்டுள்ளது அதற்கு ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு இல்லை இதற்கு சமந்தனும், சட்ட ஆலோசகர் சுமந்திரனும்  சேர்ந்து வாக்களித்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லாமல் சில முஸ்லிம் கட்சிகளும் வாக்களித்துள்ளது. ஆகவே அவர்கள் சிறு பான்மை இனமாக இருந்து கொண்டு சிறுபான்மை கட்சிகளாக இருந்து கொண்டு இதற்கு  வாக்களித்தமை எமது தலையில் நாமே மண் அள்ளி போட்டது போன்று தமிழ் மக்களை  துன்பத்தில் தள்ளியுள்ளனர்.

இதை தமிழ் மற்றும் முஸ்லிம்  மக்கள் நன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த  20 ஆவது திருத்தத்தை வடமாகாண சபை முற்று முழுதாக எதிர்த்துள்ளது. இதை நாங்கள்  வரவேற்கின்றோம் ஏன் என்றால் விக்னேஷ்வரன் ஐயா ஒரு சட்ட வல்லுநர் என்பதால் அதை புரிந்துகொண்டுள்ளார் ஆனால் கிழக்கு மாகாணசபை அதை ஆதரித்துள்ளது இவர்களுக்கு இதனுடைய நன்மை தீமை பற்றி தெரியவில்லை. 

பல சட்ட வல்லுனர்கள் எல்லாம் இருந்தும் இந்த புதிய அரசியல் அமைப்பு பற்றிய சாதக,பாதகம் தெரியாமல் வாக்களிதுள்ளார்கள். உண்மையில் ஹிஸ்புல்லாஹ் வலு கட்டாயமாக  வாக்களிக்க சொன்னார்கள், அதை நான் விரும்பவில்லை என கூறி அதை தூக்கி எரிந்து விட்டு வந்துள்ளார்.  ஆனால் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களை கொண்டு அடகு வைத்துள்ளது. 

ஒன்று  இவ்வாறு நீங்கள் அதரவு  அளிப்பது என்றால் அமைசர் பதவி எடுத்து எமது மக்களுக்கு எதையாவது செய்திருக்க வேண்டும் அதுவும் செய்யவில்லை அரசுக்கு வால் பிடித்து ஒன்றுமே நடக்கவில்லை, இந்த ஜனாதிபதி மைத்திரி வெற்றி பெற செய்யவேண்டும் என்று மக்களது வாக்குகளை பெற்று  ஏமாற்றி உள்ளதுதான் மிச்சம்.

வடக்கில் இராணுவ முகாம் அகற்ற படவில்லை, பொருளாதரத்தில் முனேற்றம் இல்லை, இன்று பார்த்தால் இலங்கை பொருளாதரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக நாடுகளே பேசுகின்றன.

வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும், இதற்கு முஸ்லிம் மக்களும், முஸ்லிம் தலைவர்களும்  ஒத்துழைக்க வேண்டும். அத்தோடு இந்த அரசியல் சாசனத்தை எதிர்க்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிலர் இதை எதிர்க்கின்றனர்,  ஹிஸ்புல்லா,  ரிசாட் போன்ற அமைச்சர்கள் எதிர்த்துள்ளனர்,  ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்துள்ளது அது ஏன் என்று விளங்கவில்லை" என்று தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25446

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஆஹா கன நாளைக்கு பிறகு  வாங்கோ வாங்கோ எலக் ஷன் எப்பவாம் ??

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நவீனன் said:

ஒன்று  இவ்வாறு நீங்கள் அதரவு  அளிப்பது என்றால் அமைசர் பதவி எடுத்து எமது மக்களுக்கு எதையாவது செய்திருக்க வேண்டும் அதுவும் செய்யவில்லை அரசுக்கு வால் பிடித்து ஒன்றுமே நடக்கவில்லை, இந்த ஜனாதிபதி மைத்திரி வெற்றி பெற செய்யவேண்டும் என்று மக்களது வாக்குகளை பெற்று  ஏமாற்றி உள்ளதுதான் மிச்சம்.

நீங்கள் என்னத்தை புடுங்கிநீர்கள் ...மகிந்தவிற்கு வால்பிடித்து என்னத்தை நடத்திகாட்டிநீர்கள் ....சிங்கள ராவ் ஆண்டியுடன் கூத்தடித்தது தான் மிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான், தண்ணீயா, தண்ணீ இல்லாமலா கதைக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் போர்க்குற்ற வேள்விக்கு சிங்களத்தால் நேர்ந்து விட்ட கிடாய் ஆடு சுடலை ஞானமாக்கும் .

  • தொடங்கியவர்

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்

 

தமிழர்களுக்கு எதிரான மிலேச்சைத்தனமான யுத்தத்தில் ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தார் என சரத் பொன்சேகா கூறுவராயின், அந்தக் குற்றங்களுக்கு அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்வதற்காகவே ஜகத் ஜயசூரிய மீது சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டுக்களை முன்வைப்பதாக குறிப்பிட்ட முரளிதரன், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அப்போது உள்ளக விசாரணை பொறிமுறையொன்றை அமைத்திருந்தார் எனவும் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மாதந்த பொதுக்குழுக் கூட்டம் கல்லடியிலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விநாயகமூர்த்தி முரளிதரன், புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை கிளறுவதால் இன ஒற்றுமை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/Sarat-Fonseka-should-also-responsible--war-crimes

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக பொறிமுறை அமைத்ததே அதற்குள்ளால் எப்படி சுழித்து ஓடலாம் என்பதற்காகவே தவிர வேறொன்றுமாக நிச்சயமாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கதைப்பதால் தமிழர் தன்னை நம்புவார்கள், மஹிந்த எஜமானுக்கு வாக்குச்  சேகரிக்கலாம் என நாடகம் போடுறார். சம்பந்தன் கைகாட்டினவுடன் அள்ளிக்கொட்டுறோம் , இவரை விட்டு விடுவோமா என்ன, என்கின்ற எண்ணந்தான். ஊர் இரண்டு பட்டால்  கூத்தாடிக்கு கொண்டாட்டந்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.