Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு இணைத்து ஏழு மணி நேரம் ஆச்சு, எங்கள் தேச கவிஞனுக்கு வாழ்த்து சொல்ல எவருமே வரவில்லையா? பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே! இந்த தேசிய கவிஞனின் சாயலில் கவி படைக்ககூடிய ஒரேயொரு கள  உறவு ‘புங்கையூரான்’, இவர் பிறந்த நாளுக்காய் ஒரு கவிதை இதே இடத்தில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

குறையொன்றுமில்லை..சில தழும்புகளை தவிர எந்தத் துயரும் காலத்தால் சிறிது சிறிதாக மங்கிவிடும்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெருங் கவியே!!

புதுவை இரத்தினதுரை
இப் பெயர்....
ஒரு காலக் கவிதையின் எச்சம் அல்ல
ஈழப் புரட்சியின் உச்சம்!!

என் பெருங்கவியை அறியாது
ஈழத்தில் ஒரு பிள்ளை இருந்தால்
அது பிறப்பின் சாபம்
இவரை பணியாத ஈழத்து
கவிஞனின் கவிதை கவிதை அல்ல
துரோகம்!

உலகநாட்டின் சிப்பாய்களுக்கு
போர்க்காலத்தில் போதை
மருந்து கொடுப்பது வழக்கம்

ஈழத்து புலிப்படையும்
இதற்கு விதிவிலக்கல்ல
எங்கள் படைக்கு கொடுக்கப்பட்ட
போதை இரத்தினதுரையின் கவிதை!

மடிந்து கிடந்த தன்மான உணர்வை
நிமிர்த்தி வைத்த கவிதை நெம்பு!!
உலக இலக்கியம் ஒருநாள்
உயரத்தில் வைக்கவிருக்கும்
ஈழக் கவிஞன் இவர்தான் நம்பு!!

களத்தில் மலர்ந்தவை கேட்டவர்க்கு
தெரியும் ஏவுகணைகளைவிடவும்
கூரிய ஆயுதம் இரத்தினதுரையின்
கவிதை என்று

உரிந்த சதைகளை எடுத்து ஒட்டாது
உரித்து எறிந்துவிட்டு
போர்க்களம் செல்ல வைத்த
வீரக் கவிதைகள் தந்த மகோன்னதன்

துயர் பரந்த காட்டில்
குடல் அறுந்த நாளின் 
சத்துணவு மருந்து
வியாசனின் கவிதைகள்

புதுவை என்பது வெறும் பெயரல்ல
அது உணர்வுத் தமிழனின்
உயிர் மூச்சு
பேரவல தேசத்தில் சரியாத
பெருத்த ஆலமரம்

கட்டிலில் கிடந்து காதலைத்
தொழுது 
முத்தம் பரிமாறி மோக இதழ் சுவைத்து
அத்தி பூத்தாற்போல
ஆண்டுக்கொரு சமூகக் கவிதை எழுதும்
சமகால கவிஞர் போல் அல்ல
இவர் சமர்க்களத்தில் நின்று
கவி தந்த சகாப்தம்

வரியுடை தரித்து வரிகள்
நெய்ததால் 
புலியுடைத் தலைவனின்
செல்லக் கவிஞன்
வலியுடை தரித்து வலிகள்
கொய்ததால்
மக்கள் மனதிலும் வாழும் புலவன்

கவிதை எழுத இச்சை 
இருந்தால் எதற்குத் தாமதம்
இவர் கவி படி
எழுதும் கவிதையில் தனித்துவம்
இருந்தாலும் 
ஓரிடத்திலேனும் தலைகாட்டும்
இவர் சொல்லடி

ஆஸ்தான கவியின் கவிதைகள்
கற்பனைகளின் சேர்க்கை அல்ல
புரட்சி நிரப்பி உலாவந்த யாக்கை
கத்தியும் ஏந்த வைக்கும்
போராடும் சக்தியும் அள்ளித்தரும்

மெத்தப் பகைவர் உடல் மீது
கிலி படரக் கத்திக் கவிதை தந்த
கவி மன்னன் பிறந்த தினம் இன்று

ஐயா புதுவையரே
எமை வழி நடத்தும் விண்மீனே
எங்கே இருக்கின்றாய் 
ஏதும் தெரியவில்லை

உள்மனசு சொல்கிறது
உத்தமனே நீயிருப்பாய்
ஒருநாள் வெளிப்படுவாய்
எம் உயிர் மீட்டும் கவி தருவாய்

பாசறை முழக்கத்தில் ஒலித்ததுன் பரணி
பாசத் தலைவனுக்கு என்றும் பக்கத் துணைநீ
போற்றும் உன் வரிகள் தீ தெளிக்கும் தேனி
நேற்றில்லை என்றென்றும் எம் கவிதை கோ நீ

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!!

அன்புடன் மகன்...
- அனாதியன்-

 நன்றி முக புத்தகத்தில்; இருந்து 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

குறையொன்றுமில்லை..சில தழும்புகளை தவிர எந்தத் துயரும் காலத்தால் சிறிது சிறிதாக மங்கிவிடும்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

17 hours ago, valavan said:

இந்த தலைப்பு இணைத்து ஏழு மணி நேரம் ஆச்சு, எங்கள் தேச கவிஞனுக்கு வாழ்த்து சொல்ல எவருமே வரவில்லையா? பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே! இந்த தேசிய கவிஞனின் சாயலில் கவி படைக்ககூடிய ஒரேயொரு கள  உறவு ‘புங்கையூரான்’, இவர் பிறந்த நாளுக்காய் ஒரு கவிதை இதே இடத்தில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

 இன்னும் சில வருடங்களில்  who is the black sheep    என்று பலர் கேட்பார்கள். அவர்கள் அப்பொழுதும் தமிழர் என்று தம்மை கூறி கொள்வார்கள்??

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

தமிழீழத்தின் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, valavan said:

இந்த தலைப்பு இணைத்து ஏழு மணி நேரம் ஆச்சு, எங்கள் தேச கவிஞனுக்கு வாழ்த்து சொல்ல எவருமே வரவில்லையா? பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞரே! இந்த தேசிய கவிஞனின் சாயலில் கவி படைக்ககூடிய ஒரேயொரு கள  உறவு ‘புங்கையூரான்’, இவர் பிறந்த நாளுக்காய் ஒரு கவிதை இதே இடத்தில் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

செம்பாட்டு மண்ணில்,

ஆச்சி நட்ட கறுத்தக் கொழும்பான்,

இண்டைக்கும் காய்க்கிறது!

ஆனால்....,

ஆச்சி தான் உயிரோடு இல்லை!

 

முத்தத்தின் ஓரத்தில்,

அப்பு வைத்த தென்னம்பிள்ளை,

குலை தள்ளிச் சிரிக்கின்றது!

கோவில் காரன்...,

என்னைக் கேட்காமலே,

கோவிலுக்கு நேர்ந்து விடுகிறான்!

ஆனால்...,

அப்பு தான் உயிரோடில்லை!

 

திரளி மீனின் சுவையும்,

கரிக்குருவியின் அழகும்..,

காவோலைச் சங்கீதமும்,

வலையிழுப்பவனின் வலியும்..,

உனக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது!!

அது மட்டுமல்ல...,

மகாவலி கூட அழகென்று,

எரிச்சல் படாமல் சொல்லியிருக்கிறாய்!

எல்லாமே இருக்கின்றன!

 

நீ மட்டும் .....,

எங்கள் கண்ணுக்குத் தெரியாத...

தோன்றாத ஒளியாய்..,

எங்கோ மறைந்திக்கிறாய்!

எங்களுக்குத் தெரியும்...!

காலனைக் கூடக்..,

காலால் உதைக்கும் துணிவுள்ளவன் நீ!

 

வாழ்த்துக்கள் கவிஞனே!

 

 

 

 

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெருங்கவியே.
நான்  புனித யாத்திரைக்கு யோர்தான் இஸ்ரயேல் பலஸ்தீனம் சென்றிருந்தேன்.இன்றுதான் யாழ்இணையத்தைப் பார்க்க முடிந்தது.
தேசீயக் கவிஞனுக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.