Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

 

இது ஒரு கறுப்பு வெள்ளைக் கதை. பல வருடங்களுக்கு முந்தியது. நான், பாடசாலை முடிந்து வந்து மாலையில் கிளித்தட்டோ, கிரிக்கெற்றோ விளையாடிய காலம்.

‘டவடிவில் அமைந்த ஒரு காணிதான் எங்கள் விளையாட்டுத் திடல். காணியின் ஒரு பக்கம் மரங்கள் எதுவுமின்றி வெளியாக இருக்கும். மற்றைய பக்கத்தில்  பனைமரங்கள் நிறைய இருக்கும். அது பீற்றர் குடும்பத்துக்கு சொந்தமானது.

கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச்சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்குசுழல் கக்கூஸ்என்ற செல்லப் பெயர்) பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடு. இந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

அன்ரன் என்னைவிட இரண்டு வயது கூடியவன். ‘ஊருக்கு வீரன் உள்ளத்தில் கோழைஎன்பது அவனுக்குப் பொருத்தமானது. தேவாலயத்துக்குப் பக்கத்தில் சேமக்காலை இருப்பதால் அந்தப் பக்கம் பாராமலேயே தேவாலயத்துக்குள் ஓடிவிடுவான். சேமக்காலையில் உள்ள பேய்கள் தன்னை பிடித்துவிடும் என்ற பயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  என்ன காரணம் சொல்லி தேவாலயத்துக்குப் போகாமல் இருக்கலாம் என்று யோசிப்பவன். அவனது தந்தை பெனடிக் மெகா குடிகாரன். வேலை முடிந்து வரும்போதோ அல்லது அந்தப் பக்கமாகப் போகும் போதோ கள்ளுக் கொட்டில் ஓரம் அவர் ஒதுங்காமல் இருந்தது கிடையாது. எப்போதும் அவர் பானை வயிறுடையோன்தான்.

கள்ளுத் தவறணைகள் வருவதற்கு சற்று முன்னரான காலம். ஆங்காங்கே கள்ளுக் கொட்டில்கள் இருந்தன. கள்ளுக் கொட்டில்களுக்குப் போனால், தங்கள் தரம் குறைந்து விடுமென்று கள்ளை வீட்டுக்கு வரவழைத்து மேட்டுக்குடிகள் குடிப்பார்கள். சாதாரண மெகா குடிகளுக்கு கொட்டில்தான் சுவர்க்கபுரி. கிடுகுகளால் வேயப்பட்ட அந்த சொரக்கபுரியில் நாலு பக்கமும் இருந்து குடிக்க வசதிகள் இருக்கும். நாலு பக்கத்தில் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை அவதானிப்பதற்கு கிடுகுகளில் சின்ன சின்ன யன்னல்கள் இருக்கும். மணலை குவித்து அதில் மெலிதான பள்ளம் ஏற்படுத்தி  அதற்கு மேலே பிளா நிறைந்த கள்ளை வைத்து இன்ரெநெற் இல்லாமலே ஊர்ப்புதினங்களை நாள் முழுதும் மெண்டு கொண்டிருக்கலாம். போதாததற்கு, பொன்னையா அண்ணனின் மெதுவடை, பருத்தித்துறை வடை, மரவள்ளிக்கிழங்குப் பொரியல், பொரித்த றால், வதக்கிய கும்பிளா மீன் எல்லாம் நாங்கள் உனக்குத் துணைக்கு நிற்கிறோம்  நீ எவ்வளவு  கள்ளையும் உள்ளே தள்ளு என்று  உற்சாகம் தரும்.

 

சொல்லுறதைக் கேள் கிட்டவா

“அன்ரன், கிட்ட போகாதையடா மனுசன் கொண்டு போடும்

“பப்பா இனி  செய்யமாட்டன்” 

“வாடா கிட்ட

“அன்ரன் ஓடுடா. எங்கையாவது போய் துலை. ஓடு

அன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பொழுது அன்ரன் வீடு அமர்களமாக இருந்தது.

எங்கள் வீட்டில் என்ன குழறுபடிகள் இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் நடக்கும் பிரச்சனை என்றால்  மழை மேகம் கண்ட மயில்கள்தானே நாங்கள். விளையாட்டை விட்டு விட்டு பூராயம் பாரக்கப் போனோம். நாங்கள் போன போது எல்லாம் முடிந்து விட்டது. அன்ரன் தெருவில் ஓடிக்கொண்டிருந்தான். அவனை துரத்திப் பிடிக்க முடியாதளவுக்கு வயதும், வயிற்றில் இருந்த கள்ளும் பெனடிக்கைத் தடுத்து விட்டன.

“எங்கை போகப் போறாய்? வீட்டுக்கு வருவாய்தானே அப்ப பாக்கிறன்பெனடிக் சத்தமா  சொன்னபடி வீட்டுக்குள்ளே போனார்.

நடந்தது என்னவென்று அறிய முடியாமல் எங்களுக்கு அன்றைய விளையாட்டுபோர்தான்.

ஆனாலும் அன்று இரவு ஊரெல்லாம்  ஒரே பரபரப்பாக இருந்தது. அன்ரனை ஊரே சேரந்து தேடியது

என்ன இருந்தாலும் பெனடிக் இப்பிடி அடிச்சிருக்கக் கூடாதுசில பெண்கள் இப்படிச் சொல்லியே அன்ரனின் தாயின் சோகத்தைக் கூட்டிசரி சரி அழாதை. சூசையப்பர் கைவிட மாட்டார்என்று சமாதானமும் செய்தார்கள். அன்றைய இரவு அன்ரனின் கள்ளுக் கொட்டில் கதையோடு கழிந்தது.

 

 டுத்தநாள் காலையில் குருவானவர் அன்ரனின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு அவனது வீட்டுக்கு வந்தார். குருவானவர் பெனடிக்கோடு கதைத்து அவரை சமாதானம் செய்து விட்டுப் போனார்

நட்பு ரீதியாக நலன் விசாரிக்கலாம் என்ற சாட்டில் என்னதான் பிரச்சனை என்பதை அறிய நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் அன்ரன் வீட்டுக்குப் போனோம்.

நாங்கள் அன்ரன் வீட்டுக்குப் போனபோது, “பகலிலேயே சேமக்காலை பக்கம் போகாத என்ரை பெடியன் ராத்திரி முழுக்க அப்பனுக்குப்  பயந்து அத்துக்குள்ளையே படுத்திருந்திருக்கிறான். சொல்லிக் குடுத்து பிள்ளை வளக்கத் தெரியாது. எதுக்கெடுத்தாலும் அடியும் உதையும்தான்அன்ரனின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் தொடர்ந்து பல தடவைகள் கேட்டதால் அன்ரன் நடந்த விடயத்தைச் சொன்னான்.

கள்ளுக் கொட்டிலில்  குடித்து விட்டு வரும் போது வீட்டில் வைத்து குடிப்பதற்கென்று ஒரு போத்தல் கள்ளு வாங்கி வருவது பெனடிக்கின் வழக்கம். அன்ரன் களவாக அதில் கொஞ்சமாக ருசி பார்க்கத் தொடங்கினான். வீட்டில் மா இடிபதற்கு அன்ரனின் தாய் வெள்ளைப் பச்சரிசி ஊறப் போட்டால் அவனுக்கு சந்தோசம். அரிசி ஊறிய தண்ணீரை எடுத்து வைத்துக் கொளவான். பெனடிக் கொண்டு வரும் கள்ளில் பாதிக்கு மேல் குடித்து விட்டு எடுத்து வைத்திருந்த அரிசித் தண்ணியை கள்ளோடு கலந்து வைத்துவிடுவான். இந்த களவுக்குடி அன்ரனுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. என்றாவது ஒருநாள் கள்ளுக்கொட்டிலுக்குப் போய் ஆறுதலாக இருந்து அனுபவித்து பிளாவில் கள்ளு குடிக்க வேண்டுமென ஆசை அவனுள் வளரத்தொடங்கியது

அதைத்தான் முதல் நாள் அன்ரன் செய்திருக்கிறான். கள்ளுக் கொட்டிலுக்குப் போய் பிளாவில் கள்ளு வாங்கி, மண் குவித்து அதில் குழியிட்டு, பிளாவை வைத்து ஆற அமர இரசித்து இரசித்து கள்ளு குடிக்கும்வரை எந்தவித பிரச்சினையும் அன்ரனுக்கு இருக்கவில்லை. பிளாவை உதறி கம்பில் மாட்டும் போதுதான் பிரச்சினையின் அரிச்சுவடி தொடங்கியது.

“காசு எவ்வளவு?” அன்ரன் கேட்ட போது பதில் கள்ளுக் கொட்டிலுக்குப் பின்னால் இருந்து வந்தது.

‘அன்ரன், அதொண்டும் நீ குடுக்க வேண்டாம். நான் குடுக்கிறன்

வயித்துக்குள் போன கள்ளு இன்னும் போதையை ஏற்றவில்லை. அதுக்குள் உடலில் இருந்த சக்தி எல்லாம் தரையில் இறங்கியது போன்று அன்ரன் உணர்ந்தான்.

“கோவிந்தன், அவனிட்ட வேண்டாதை. அவன்ரை காசையும் நான் தாரன்சொல்லிக் கொண்டே கொட்டிலின் பின்னால் இருந்து வந்த பெனடிக்கின் முகத்தைப் பார்க்காமல் அன்ரன் தலை குனிந்து நின்றான்.

“மீன் வேண்டினனான். நான் வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும். மீன் பழுதாப் போடும். நீ கொண்டுபோய் கொம்மாட்டை குடுபெனடிக் தந்த மீன் பையை அன்ரன் வாங்கிக்கொண்டு புறப்படப் போகும் பொழுது பெனடிக் சொன்னான், “சைக்கிளிலேயே வந்தனீ? பாத்து கவனமாக ஓட்டு

சைக்கிள் ஓட்டும் போது காற்று முகத்தில் பட உள்ளிழுத்த கள்ளு மெதுவாக தன் வேலையைத் தொடங்க, இதுதான் போதையா என்ற உணர்வோடு, கள்ளடித்ததற்கு அவனது தந்தை தந்த அங்கீகாரமும் சேரந்து கொள்ள வேறொரு உலகத்தில் அன்ரன் இருந்தான்.

வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு பெனடிக் வந்து முதல் உதை விட்ட போதுதான் அன்ரனுக்கு தந்தை தனக்குத் தந்த அங்கீகாரத்தின் மதிப்பு புரிந்தது

 

ன்ரனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

ராத்திரி முழுக்க சேமக்காலைக்குள்ளையே இருந்திருக்கிறாய். பயமா இருக்கேல்லையே?”

“அப்பன் கையிலை நேற்று மாட்டி இருந்தால் இண்டைக்கு சேமக்காலைக்குள்ளை புதைச்சிருப்பாங்கள். குருவானவர் கூட்டிக்கொண்டு வந்ததாலை உங்களோடை கதைச்சுக்கொண்டிருக்கிறன்

 

இவ்வளவு நேரமும் கறுப்பு வெள்ளையில் கதை சொன்னேன். கொஞ்சம் கலருக்கு மாத்திப்பார்க்கிறேன்.

 

இப்பொழுது அன்ரன் தனது மனைவியோடு மன்னாரில் இருப்பதாகவும்,அவனது ஒரே மகனான ஜூற் வீரமரணம் அடைந்து விட்டதாகவும் அறிந்தேன். மற்றும்படி அன்ரன் இப்பொழுது கள்ளு குடிக்கிறானா, அவனுக்கும் தகப்பனை போல பானை வயிறா போன்ற விபரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கவி அருணாசலம்

22.02.2018

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாய் எல்லா அப்பாக்களும் தங்கள் தப்பு செய்துகொண்டே பிள்ளைகள் ஒழுங்காய் இருக்க வேண்டும் என்னும் கனவுலகில் சஞ்சரிக்கின்றனர்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச்சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்குசுழல் கக்கூஸ்என்ற செல்லப் பெயர்) பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடு. இந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

எமது பாடசாலையிலும் இப்படியான பிரச்சனை இருந்தது.பந்து போனால் எடுக்கவேவிடமாட்டார்கள்.

 

15 hours ago, Kavi arunasalam said:

மீன் பழுதாப் போடும். நீ கொண்டுபோய் கொம்மாட்டை குடுபெனடிக் தந்த மீன் பையை அன்ரன் வாங்கிக்கொண்டு புறப்படப் போகும் பொழுது பெனடிக் சொன்னான்,

கிராமப்புறங்களில் தகப்பனார் குடித்துவிட்டு மகனுக்கும் மகன் குடித்துவிட்டு தகப்பனுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

 பிஞ்சில பழுத்தால் அப்பா விடுவாரா என்ன? அந்தந்த வயதில செய்யவேண்டியதைச் செய்தால் பிரச்சினை  வராதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

கவியின் கதை ....அழகு!

நாங்கள் கிறிக்கெற் விளயாடுற காலம்..பந்து போனால் நாங்கள் போய் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தானாகவே திரும்பி வரும். சரி பாதியாக!

ஈழப்பிரியன் நான் சொல்லுறது.. யோசப்பு மாஸ்ரரின்ர.. மரக்காலை வகுப்புக்குப் பக்கதில...!

 

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாதுஅந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச் ‘சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்கு ‘சுழல் கக்கூஸ்’ என்றசெல்லப் பெயர்பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடுஇந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

சுழல் கக்கூஸ் என்பதன் அர்த்தம் அதுவல்லவே...

பனை மரத்துக்கு பின்னால் குந்துவார்கள்.. யாரேனும் வந்தால், அவர்கள் வரும் திசைக்கு அமைய, எழுப்பாமலே... முதலில் ஒரு காலையும் (வலது அல்லது இடது) பின்னர் இடுப்பை நகர்த்திக் கொண்டே  அடுத்த காலையும் தூக்கி வைத்து புதிய இடத்தில், மரத்தினை சுற்றிய வாறே, வருபவருக்கு,  மறைவாக செட்டில் ஆவதே சுழல் கக்கூஸ்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வெள்ளை என்றாலும் கதை நன்றாக அன்றைய அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது . .

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2018 at 11:30 PM, ஈழப்பிரியன் said:

கிராமப்புறங்களில் தகப்பனார் குடித்துவிட்டு மகனுக்கும் மகன் குடித்துவிட்டு தகப்பனுக்கும் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பலரிடமும் உண்டு.

ஏன் இப்ப வெளினாடுகளில்   சில இடங்களில் நடக்கிறதுதானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.