Jump to content

அரோஹரா!ஆறுமுகா!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அரோஹரா!ஆறுமுகா!

அந்தக் கூட்டத்துக்குள்ளை நேற்று உன்னைக் காணேல்லைதிங்கட்கிழமை வேலை இடத்தில் மரியா என்னைக் கேட்ட போது, எந்தக் கூட்டத்தை அவள் சொல்கிறாள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை.

 அவளே தொடர்ந்தாள். “இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய் அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ”

 “நீ என்ன சொல்ல வாறாய்?”

 நேற்று, போக்குவரத்து வீதியை மறிச்சு தடை போட்டிருந்தார்கள். அதாலை அடுத்த வீதியாலை போகவேண்டி வந்திட்டுது. என்ரை காரைத் திருப்பிக் கொண்டு அடுத்த வீதிக்குப் போற பொழுதுதான் பார்த்தன், உன்ரை நாட்டுக்காரர்கள் நிறையப் பேர் வீதியிலை ஊர்வலம் போலை வந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் எல்லாம் கலர் கலராக உடுப்புகள் போட்டிருந்தார்கள். முதலிலை உன்ரை நாட்டு 'கார்ணிவேல்' என்றுதான் நினைச்சன். ஆண்களெல்லாம் தெருவிலை தேங்காய்களை போட்டு உடைச்சுக் கொண்டே பெரிசா ஒன்றை இழுத்து கொண்டு வந்தார்கள். தக்காளி விழாபோலை தேங்காயாலை ஆளாளுக்கு அடிச்சுக் கொள்ளுவார்களோ என்று முதலிலை பயந்து போனன்'

 மரியா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதுதான் புரிந்தது, அவள் குறிப்பிடுவது எங்களது தேர்த்திருவிழா என்று.

 “‘கூடுஎன்று நீங்கள் மேரி மாதவை ஊர்வலமாக கொண்டு போவீங்களே, அதுபோலத்தான் நாங்களும் எங்கடை கடவுள்களை வீதியிலை ஊர்வலமாக கொண்டு போவம். எத்தனை காலத்துக்கு எங்கடை சாமிகள் கோயிலுக்குள்ளையே அடைபட்டுக் கிடக்கிறது. அவையளும் காத்து வாங்க வேண்டாமோ?” மெதுவாகச் சமாளித்துக் கொண்டேன்.

 “தேங்காய் 1.70க்கு கடையிலை விற்கிறார்கள். அந்த விலைக்கு வாங்கி இப்பிடி தெருவிலை போட்டு உடைக்கோணுமோ?”

 “நீ சொல்லுற விலை சுப்பர் மாக்கெற்றில். எங்கடை நாட்டுக் கடைகளுக்குப் போய்ப் பார், ஒரு யூரோவுக்கு கிடைக்கும்

 “தெருவிலை போட்டு வீணாக உடைக்கிறதுக்கு ஒரு யூரோ என்றாலும் அதிகம்தான்

 நாட்பட்ட தேங்காய்களை தட்டி விடுவதற்கு கடைக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பாக தேர்த்திருவிழாவை, கடவுள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்தது

 மரியா கேட்டதிலும் அர்த்தம் இருந்தது. இவ்வளவு விலை கொடுத்து எதற்காக தேங்காய்களை தெருவில் போட்டு உடைக்க வேண்டும்? மணலில் தேரினது மரச்சில்லுகள் உருளுவதில் இருக்கும் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே  எமது முன்னையவர்கள் எங்களது நாட்டில், தேரின் முன்னால் தேங்காய்களை போட்டு  உடைத்தார்களோ தெரியவில்லை. சரியான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள்தான் யேர்மனியின் தார்வீதிகளில் தேங்காய்களை வீணே சிதறடித்துக் கொண்டிருக்கிறோமா? யாராவது அறிஞர்கள், தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது

 கடவுளை தேரில் வைத்து இழுப்பதற்காக நாங்கள் Audi, Mercedes, BMW கார்களில் வந்து கோவிலின் வாசலில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். காலங்காலமாக பாவப்பட்ட ஜென்மமாக கடவுள் மட்டும் மரத்தேரில் பவனிக்க வேண்டி இருக்கிறது என்பதை நினைக்கையில் நெஞ்சு வெம்புகிறது. அதுவும் மனிதன் இழுத்தால்தான் கடவுள் அமர்ந்திருக்கும் தேரே நகரவேண்டிய நிலையும் இருப்பது அந்தோ பரிதாபம்.

 போர் முடிந்து ஒன்பது வருடங்களாகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வழங்கும் நிதியை நேரடியாகப் பெற்று, அந்த நிதியைப் பயன் படுத்தி பாதிக்கப்பட்டவர்களது வாழ்வை மேம்படுத்தவோ, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவோ, யாரிலும் தங்கியிராது சுயமாக வாழும் நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவோ முடியாதவகையில் மாகாணசபையை சிறீலங்கா அரசு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

ஒரு பொது அமைப்பை தாயகத்தில் உருவாக்கி அதனூடாக உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து உதவிகளைச் செய்யவிடாமலும் சிங்கள அரசு தடுக்கிறது. போரினால் பாதிக்கப் பட்டவர்கள் மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் சிந்திக்க வேண்டிய நாங்கள் பக்திக்குள் பரவசம் காண நினைக்கிறோம்

 ‘கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கும் ஈசன் உணவளிப்பான்என்று, தெரியாமல் படித்து விட்டோம். அதனால்தான் எல்லாவற்றையும் தூரப்போட்டுவிட்டு  கடவுள்களுக்கு இன்று புலம் பெயர்ந்த நாடுகளில்  கோயில்களை உருவாக்கி அர்ச்சனைகள்  செய்து கொண்டிருக்கிறோம்.

 இதற்குள், கோவில்களில் எரியும் விளக்குகளுக்கு தாங்களும் எண்ணெய் விடுகிறோம் என்று ஒரு ஊடகம்ஆன்மீகத் தொலைக்காட்சி’  ஒன்றை மார்ச் 10ம்  திகதி தொடங்க இருப்பதாக பெருமையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் பிரச்சனைகளை பேச்சுக்கு மென்று துப்பிக் கொண்டு அந்த ஊடகம் மோடியின் ஆன்மீகத்துக்குள் வந்து விட்டதோ என்ற அச்சம் ஏனோ தானாகவே வருகிறது.

 இப்படியே போனால், “படைத்தவன் இருக்கிறான். பார்த்துக் கொள்வான்என்று சொல்லிக் கொண்டு, தாயகம், சுதந்திரம் என்று சத்தமிட்ட குரல்களெல்லாம், ‘அரோஹரா, ஆறுமுகாஎன்று ஒலிக்க ஆரம்பித்து விடும்.

 கவி அருணாசலம்

06.03.2018

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசரி தங்காளியும் காசு கொடுத்துத்தானே வாங்கவேண்டும்?    அவுஸ்திரெலியாவில் கோயில்வீதிகளில்தான் தேர் இழுப்பார்கள்.  போக்குவரத்து வீதிகளில் இழுப்பதில்லை.  கனடாவில் தூக்குக்காவடிகளை போக்குவரத்து வீதிகளில் காணலாம். ஆனால் அவுஸ்திரெலியாவில் கோயில்களிலும் காணமுடியாது.  

கடவுள் என்றால் விழுந்து விழுந்து  காசு கொடுப்பார்கள்.  போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்றால், "ஊரில  சனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைத்திரி மாமாவும் ரணில் சித்தப்பாவும் நல்ல பெரிய  வீதிகள்,  விடுதிகள் எல்லாம் கட்டி , சுற்றுலா செல்ல அழகாக வைத்திருக்கிறார்கள்." என்று சொல்லுவார்கள்.  இல்லாதவர்களுக்கு உதவும் போது இறைவனைக்காணலாம்,

கோயில்களில் சென்று இறைவனை வழிபடுவதைவிட,   வீட்டில் இருந்து  மனதாலும் இறைவனை வழிபடலாம்   என்று திருமூலதேவ நாயனார்  பாடியிருக்கிறார்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே ."

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கந்தப்பு said:

இதையே தான்.....நமது வள்ளுவத் தாத்தாவும்....அழகாகச் சொல்லியுருக்கிறார்!

மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்,

பழித்தது ஒழித்து விடின்!

அதாவது....உலகம் தீயது என்று சொல்பவைகளை ...ஒழித்து விட்டால். அஸ்கிரிய பீடமோ...அல்லது சுவாமி நித்தியானந்தாவோ...உனக்குத் தேவையில்லை என்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 05/03/2018 at 9:54 PM, Kavi arunasalam said:

இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய்அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ”

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 06/03/2018 at 2:22 AM, புங்கையூரன் said:

அதுசரி தங்காளியும் காசு கொடுத்துத்தானே வாங்கவேண்டும்?

கந்தப்பு

தக்காளியும் சும்மா கிடைக்காது.

ஆனாலும், ஒவ்வொரு வருசமும் ஓகஸ்ட்டில் அதை ஒரு கேளிக்கை விளையாட்டாக ஸ்பெயினில் கொண்டாடுகிறார்கள்.பல வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டுக்கு கட்டணமும் இருக்கிறது. அதை நடத்துவதால் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இன்னுமொன்று பத்தியில் ‘இத்தாலி நாட்டில்’ என்று ஒரு தவறு விட்டிருக்கிறேன்

10 hours ago, கிருபன் said:

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 06/03/2018 at 2:13 AM, கந்தப்பு said:

உள்ளம் பெருங்கோயில்

இந்தவரியை வைத்துதான்  கண்ணதாசன் இப்படி ஒரு பாடல் எழுதினாரோ?

‘உள்ளம் ஒரு கோவில்

உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்

பெண்ணின் நாணம் அங்கு காவல்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kavi arunasalam said:

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

ஊரில சிறிய கிராமங்களில்  திருவிழாக்கள் மக்களை ஒன்றுக்கூடச்செய்கின்றது.  வேரு ஊர்களில் திருமணம் செய்தவர்கள், வேறு இடங்களில் தொழில் புரிபவர்கள் திருவிழாக்காலங்களில் சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.  மாலையில் கோவிலில் பிரசங்கம் நடைபெறும் நேரங்களில் மணலில் இருந்து கடலைக்கொட்டைகள் சாப்பிட்டுக் கொண்டு அரசியல், ஊர்க்கதைகள், குடும்ப , காதல்கதைகள் போன்றவற்றைக் கதைத்துக் கொண்டிருப்பதில் கிடைக்கும் சுகம் எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காது.  90களில் இலண்டன் ஈஸ்டம் கோவில் தேர்த்திருவிழாவிற்கு பிரான்சு, சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் இருந்து மக்கள் பலர் வருவார்கள்.  நாட்டுப்பிரச்சனையால் திக்குதிசைக்கு ஓடியவர்கள் பலர் இதில் நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்ததுண்டு.  சனம் கோயில் என்றால் காசு காசாக பணத்தினைக் கொடுப்பார்கள். ஆனால் ஊரில உதவ வேண்டுமென்றால் ஒன்றும் செய்யமாட்டார்கள். சில புலம் பெயர்ந்தநாடுகளில் இருக்கும் கோயில்கள் தாயகத்துக்கு பல்வேறு ஊதவிகள் செய்து வருகின்றன். முன்பு இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் வருமானத்தில் 1/3 பங்கு தாயகத்துக்கு உதவி செய்வதாக அறிந்தேன்(தற்போதையநிலமை  எனக்கு தெரியாது).  கோயில் திருவிழாக்கள் ஒன்றுகூடலை ஏற்படுத்தித் தருகிறது. அதேநேரத்தில் கோயிலுக்கு செலுத்தும் காணிக்கைகளை, ஊரில பணவசதியில்லாமல் அல்லல்படும் உறவுகளுக்கு உதவி செய்தால் அதிக பலனைப் பெறலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/03/2018 at 6:29 PM, Kavi arunasalam said:

கிருபன், நீங்கள் ‘அடையாளம் ‘ என்று கருதுவது நான் ‘அறியாமை’ என்று நினைக்கிறேன்.இருவரது பார்வைகளும் வேறுபடுகின்றன.

எங்கள் அடையாளம் இதுதான் என்று சேர்ட் இல்லாத வெறும் மேலில் புலிப்பல்லுச் சங்கலி தொந்தியில் சரிந்து உருள தேரிழுக்கும் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் நான் போவதில்லை. இவை காலம் போகப்போக இல்லாமல் போகும் என்று நினைத்த காலம் உண்டு. ஆனால் நம்மவர்கள் செல்வச் செழிப்பைக் காட்ட இன்னும் நிறையக் கோவில்கள் கட்டி சம்மரில் வரும் எல்லா ஞாயிறுகளிலும் தேங்காய் உடைத்து தேரிழுக்கும் நிலைதான் உருவாகும் என்று திடமாக நம்புகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

தாயகத்தில் புலிப்பல்லுக்கும் தொந்திக்கும் வசதியில்லாதவர்கள் புலம்பெயர்ந்து வந்தபின் அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

தாயகத்தில் புலிப்பல்லுக்கும் தொந்திக்கும் வசதியில்லாதவர்கள் புலம்பெயர்ந்து வந்தபின் அதனை நிறைவேற்றுகின்றார்கள்.

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

அவர்களிடம் ஏன் அய்யர் மாரிடம் கூட தைபூசம் ஏன் என்ன காரணத்துக்கு கொண்டாடுவது ?  இப்படியான இரண்டு மூன்று கேள்விகளை கேட்டுப்பாருங்கோ  அநேகமா விடை சைபர்தான் .அவர்களின் திறமை கிழமைநாளில் இருக்கிற நல்ல நாளை விட்டு விட்டு சனி சண்டே க்குள் வரும்  அட்டமி நவமிக்குள்ளும் நல்லநேரம் கண்டு பிடித்து கல்யாணம் நடத்துவதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, கிருபன் said:

சேர்ட் இல்லாத வெறும் மேலில் புலிப்பல்லுச் சங்கலி தொந்தியில் சரிந்து உருள தேரிழுக்கும்

கிருபன், ஆண்களைப் பற்றிச் சொன்னால் போதுமா? அம்மன்கள் கோபிக்கப் போகிறார்கள்.

17 hours ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் போது கோவில்களையே எட்டிப்பார்க்காதவர்கள் இங்கு கோவில்களின் பரிபாலனசபை தலைவர்/காரியதரிசி/பொருளாளர்களாக இருந்து பரிபாலிக்கின்றார்கள்.

குமாரசாமி, நீங்கள் சொன்னது உண்மைதான்

இங்கேஊரில் பள்ளிக்கூடம் போகாத ஒருவர் தமிழ் பாடசாலை நிர்வாகியாக இருக்கிறார்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/03/2018 at 8:12 AM, கிருபன் said:

எங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள இப்படியான திருவிழாக் கொண்டாட்டங்கள் தேவைதானே. 

எங்கள் அடையாளங்கள் என்றால் தமிழரதா??? இந்துக்களினதா ??? தொடர்ந்து எத்தனை நாட்கள் தக்கவைக்க முடியும்???

On 13/03/2018 at 5:38 PM, Kavi arunasalam said:

கிருபன், ஆண்களைப் பற்றிச் சொன்னால் போதுமா? அம்மன்கள் கோபிக்கப் போகிறார்கள்.

குமாரசாமி, நீங்கள் சொன்னது உண்மைதான்

இங்கேஊரில் பள்ளிக்கூடம் போகாத ஒருவர் தமிழ் பாடசாலை நிர்வாகியாக இருக்கிறார்.

பள்ளிக்கூடம் போகாத ஒருவர் அப்பள்ளியில் கற்பிப்பதுதான் தவறேயன்றி நிர்வாகத் திறமை பள்ளி செல்லாதவருக்கும் இருக்கலாம் கவி அண்ணா. எத்தனையோ கற்ற அறிவாளிகள் பலர் சமூகத்தின் மு நின்று ஒன்றைச் செய்ய முடியாத தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பதை நான் கண்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.