Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதனைப் பெண்கள் (இ.வலம்) : விஜயகுமாரி, நகுலேஸ்வரி, தமிழ்ச்செல்வி

வடபகுதியில் புதைக்கப்பட்ட 6000 கண்ணிவெடிகளை அகற்றி, பல உயிர்களை ஊனமாகாமல் காக்கும் அரிய பணி செய்யும் பெண்கள் இவர்கள்.

 

28870944_10159904605795212_3362316743406

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய்க்குலங்களுக்கு குமாரசாமியின் இதயபூர்வமான வாழ்த்துக்கள். :295_rose:

 

DXr20rOUMAA5Tua.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

China Women Soldiers Parade In Celebration Of INTERNATIONAL WOMEN’S Day (March8,2018)

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

China Women Soldiers Parade In Celebration Of INTERNATIONAL WOMEN’S Day (March8,2018)

 

 

 

பொம்புளையள் இதிலை உள்ள நேர்த்தி அடுப்படியிலை இல்லை..:grin:

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8

53514172_10213459378980912_6547993017905

53530426_10213459379180917_8718381468797

53306905_10213459379780932_2025199417912

53674814_10213459380100940_5557016755592

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

à®®à®à®³à®¿à®°à¯ தின நல௠வாழà¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் இயக்குனர்களுக்கு.....மகளிர் தின வாழ்த்துக்கள்..!

ஆட்டுவித்தால்...யாரொருவர் ஆடாதாரோ கண்ணா...!

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு மங்கையர்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

 

இன்று உலக மகளிர் தினம் (International Women's Day). ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. 

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/51437

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து சகோதரிகளுக்கும் பெண்களுக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்...பெண்களை,சக மனிசியாக நீங்கள் மதிக்கப் பழகுங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

மகளிருக்கு அவர்கள் தின நல் வாழ்த்துக்கள்.......கொஞ்சம் லேட்தான், பரவாயில்லை...... அவங்கள் மட்டும் என்ன நேரத்துக்கு சாப்பாடு தாறாங்களா அல்லது நேரத்துக்கு வெளிக்கிட்டுதான் வாறாங்களா ......!   🙋‍♀️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

மகளிருக்கு அவர்கள் தின நல் வாழ்த்துக்கள்.......கொஞ்சம் லேட்தான், பரவாயில்லை...... அவங்கள் மட்டும் என்ன நேரத்துக்கு சாப்பாடு தாறாங்களா அல்லது நேரத்துக்கு வெளிக்கிட்டுதான் வாறாங்களா ......!   🙋‍♀️

அடப்பாவி மனுசா.......Super Thumbs Up GIF - Super ThumbsUp Vadivelu GIFs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.