Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்…

Featured Replies

சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்…

இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு…

Namal-Rajapaksha.jpg?resize=697%2C452
இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கியத்தை கட்டியெழுப்புதவற்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் படையினர் தமிழ் மக்களுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நிலை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றொழித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/72418/

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத்தான் இந்தியாவுடன் உறவு கொண்டாட துடிக்கிற மாதிரி இருக்கு,,,இனி புலி புராணம் உங்களுடைய சர்வேதச அரசியலுக்கு எடுபடாது

2 hours ago, putthan said:

ரொம்பத்தான் இந்தியாவுடன் உறவு கொண்டாட துடிக்கிற மாதிரி இருக்கு,,,இனி புலி புராணம் உங்களுடைய சர்வேதச அரசியலுக்கு எடுபடாது

எந்த வல்லரசு வந்தாலும் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா தான் கிங் மேக்கர் என்பது இப்ப தான் விளங்குது போல ....!!!!!!

1 hour ago, Dash said:

எந்த வல்லரசு வந்தாலும் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா தான் கிங் மேக்கர் என்பது இப்ப தான் விளங்குது போல ....!!!!!!

காலம் மாறுகிறது!
இந்திய அரச பயங்கரவாதக் கும்பலின் நாட்டாண்மை சீனாவால் மெல்ல மெல்ல முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

  • தொடங்கியவர்

இலங்கைக்கு தேசிய மட்டத்திலான தமிழ்த் தலைவர்கள் அவசியமாகின்றனர்

07-af28bfff25c3fa4971ea14645526c07c968f66c4.jpg

 

இரண்டாம் நிலை தமிழ் தலைவர்களுக்கு வெற்றிடம் என்கிறார் நாமல் எம்.பி. 

(நமது விசேட நிருபர்)

புலம்பெயர் மக்கள் இல ங்கை தமிழ் மக்கள் தொடர்பில் உண்மையில் கவலைப்படுபவர்களாக இருப்பின் அவர்கள் இலங் கைக்கு   வந்து தமிழ் மக்களுக்கு உதவவேண்டும். என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  

நீண்டகால அரசியல் தீர்வுக்கு அரசியல்கட்சிகள் இளம் தமிழ் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். தீர்மானம் எடுப்பதில் இளம் தலைவர்கள் பங்கெடுக்கவேண்டும். இதனூடாகவே நல்லிணக்கம் இடம்பெறும். நீங்கள் பிராந்திய அரசியல் அக்கறையை நம்பிக்கொண்டிருந்தால் உங்கள் அக்கறை பிராந்திய ரீதியாகவே இருக்கும் எனவே எமக்கு தேசிய மட்டத்திலான தமிழ் தலைவர்கள் அவசியமாகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே நாம் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்த செவ்வியின் விபரம் வருமாறு:

கேள்வி: உங்கள் குடும்பத்தின் அடுத்த சந்ததி அரசியல்வாதியாக நீங்கள் பார்க்கப்படுகின்றீர்கள், உங்கள் அரசியல் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

 

பதில்: அதே என்னுடைய தலைவிதியைப் பொறுத்ததாகும். இன்று பரம்பரை ரீதியான அரசியல் மக்கள் மத்தியில் செல்லாது. பரம்பரை என்பது ஆசிய கலாசாரம். ஆனால் யார் தலைமைத்துவத்திற்கு வரப்போகிறார் என்பதே பார்க்கப்படவேண்டும். நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள், எவ்வாறு வேலை செய்கின்றீர்கள், மக்களுடனும் உங்கள் தொகுதியுடனும் எவ்வாறு வேலை செய்கின்றீர்கள் என்பவையே அரசியலில் நீங்கள் நீடிப்பதற்கான காரணத்தை கொடுக்கிறது. நான் தொடர்ந்து நிச்சயமாக அரசியலில் இருப்பேன். அது என்னை எங்கே கொண்டு செல்கின்றது என்று பார்ப்போம்.

 

கேள்வி: இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்திற்கும் இடையில் முரண்பாடு நிலவுகிறது. இந்த இலங்கையின் இனவாத முகத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

 

பதில்: இனவாதம் எங்கும் இருக்கிறது. இஸ்லாமிய, பெளத்தக்குழுக்களில் மட்டுமே அது இருப்பதாக கூற முடியாது. ஆனால் அரசாங்கம் இவற்றை கையாழுகின்றது என்பதே முக்கியமானதாகும். உதாரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் பலமடைவதாக எண்ணி அரசாங்கம் பௌத்தத்தின் பக்கமாக இருந்து செயற்பட்டாலும், மாறாக இஸ்லாமியக்குழுக்களின் பக்கம் இருந்து பௌத்தக்குழுக்களைப் புறந்தள்ளினாலும் அது அரசாங்கத்தின் செயற்பாடாக இருக்க முடியாது. அரசாங்கம் எப்போதும் பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும். அரசாங்கம் அடிப்படைவாத பிரிவுகளை பின்பற்ற முடியாது. இதனூடாகவே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

 

கேள்வி: உங்களுக்கு சிங்கள அடையாளம் எவ்வளவு ஆழமானது?

பதில்: ஒவ்வொருவரும் தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் நம்பிக்கைவைக்கின்றனர். உங்கள் நம்பிக்கையையும் கலாசாரத்தையும் பாதுகாப்பது அடிப்படைவாதமல்ல. எப்போமே ஒரு கலாசாரத்தைப் பின்பற்றுவது அவசியமாகும். எமது அடுத்த பரம்பரைக்காக அதனை முன்கொண்டு செல்வது அவசியமாகும்.

 

கேள்வி: யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சமத்துவமாக பார்க்கப்பட்டனரா?நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் சிந்தீர்களா?

 

பதில்: நல்லிணக்கமானது முன்னெடுக்கப்படுவதற்கு காலம் தேவையாகும். ஒரே இரவில் காயங்களை ஆற்றமுடியாது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தமானது சிங்கள இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடம்பெற்றதல்ல, மாறாக இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதத்திற்குமிடையில் இடம்பெற்றது. நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் எமது வலுவான தமிழ் அரசியல்வாதிகள் தேவைப்படுகின்றனர். மிகவும் துரதிஷ்டவசமாக எமது நாட்டில் இரண்டாம் நிலை தமிழ் தலைவர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்றது. புத்திஜீவிகள் மற்றும் செயற்றிறனான தமிழ் தலைவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர். நீண்டகால அரசியல் தீர்வுக்கு அரசியல்கட்சிகள் இளம் தமிழ் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். தீர்மானம் எடுப்பதில் இளம் தலைவர்கள் பங்கெடுக்கவேண்டும். இதனூடாகவே நல்லிணக்கம் இடம்பெறும். நீங்கள் பிராந்திய அரசியல் அக்கறையை நம்பிக்கொண்டிருந்தால் உங்கள் அக்கறை பிராந்திய ரீதியாகவே இருக்கும் எனவே எமக்கு தேசிய மட்டத்திலான தமிழ் தலைவர்கள் அவசியமாகின்றனர்.

 

கேள்வி: இந்தியா , சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடான உறவை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: இலங்கை எப்போதுமே அதன் முன்னுரிமைகள் குறித்தே கவனம் செலுத்தும் எனது தந்தையின் முதன்மை நோக்கமாக யுத்தத்தை முடிக்கும் செயற்பாடே காணப்பட்டது. நாங்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, போன்ற நாடுகளுடன் எமது நோக்கத்தை அடைந்துகொள்ள செயற்பட்டோம். எமது முதன்மை நோக்கமாக அபிவிருத்தி காணப்படுகின்றது. நாங்கள் இந்திய தனியார் நிறுவனங்களை அழைத்து முதலீடு செய்யுமாறு கோரினோம். சங்கரில்லா ஹோட்டலுக்கு பக்கத்திலேயே இந்திய முதலீடுகள் உள்ளன. இந்தியா எமது குடும்ப உறுப்பினர் போன்ற நாடாகும். சீனாவுடனான உறவானது மதம், கலாசாரம் மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை அடிப்படையாகக் கொண்டது.

கேள்வி: இந்தியாவின் அரசியல் மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் உங்கள் பார்வை?

 

பதில்: இந்தியாவின் உள்ளக அரசியலானது அந்த நாட்டைப் பொறுத்தானதாகும். எனினும் பிரதம் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா ஒரு சர்வதேச பிரசன்னத்தைக் காட்டி வருகின்றது. அதே விடயத்தையே மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள ராகுல்காந்தியும் முன்னெடுத்துள்ளார். மோடியின் அராங்கத்திற்கு எதிராக இலங்கையில் சில விமர்சனங்களும் உள்ளன. பிரதமர் மோடியின் சில திட்டங்களை எமது ஜனாதிபதி பின்பற்றுவதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊழலுக்கு எதிரான சில செயற்பாடுகள், எதிர்க்கட்சியினரை கையாளும் விதம் என்பன மோடியைப்போன்றே உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் மிகப்பெரிய விடயமாக பார்க்கும்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்பாடலை ஏற்படுத்த நாங்கள் உதவலாம்.

கேள்வி: யுத்தத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

 

பதில்: ஆண்களே யுத்தத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால் பெண்களும் குழந்தைகளும் உயிரிழக்கின்றனர். யுத்தத்தை ஆரம்பிக்கின்றவர்கள் ஒரு கட்டத்தில் அதன் நோக்கத்தை மறந்துவிடுகின்றனர். சேதங்கள் இன்றி உலகில் யுத்தம் எங்கும் வெற்றிகொள்ளவில்லை. எமது குழந்தைகள் இன்று ஆயுதத்தை எடுப்பதற்கு பதிலாக புத்தகப் பையை எடுத்துக்கொண்டு பாடசாலை செல்கின்றனர். யுத்தகாலத்தில் நான் பாடசாலையில் றக்பி விளையாடினேன். எனினும் ஒரு கட்டத்தில் நான் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கார்டிப் பல்கலைக்கழகத்திலிருந்து வேறு ஒரு பல்கலைக்கழகத்திற்கு மாறவேண்டி ஏற்பட்டது. அங்கு தமிழ் புலம்பெயர் மக்கள் இருக்கவில்லை மாறாக தனிமைப்படுத்தப்பட்ட புலிகளே இருந்தனர் . லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் மக்கள் இந்திய தமிழே பேசினர். யாழ்ப்பாண மொழியில் பேசினர் புலம் பெயர் மக்கள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் உண்மையில் கவலைப்படுவர்களாக இருப்பின் அவர்கள் இலங்கைக்கு வந்து தமிழ் மக்களுக்கு உதவவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-27#page-1

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Dash said:

எந்த வல்லரசு வந்தாலும் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா தான் கிங் மேக்கர் என்பது இப்ப தான் விளங்குது போல ....!!!!!!

போராளிகளும் கடைசியில் தான் புரிந்து கொண்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

எமது நாட்டில் இரண்டாம் நிலை தமிழ் தலைவர்களுக்கு வெற்றிடம் காணப்படுகின்றது.

 போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரத்தை வளர்த்ததே அதற்காகத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம்... ரவிராஜ்.. நிமலராஜன்.. என்று எல்லாரையும் போட்டுத் தள்ளினதும் புலிகள் தானே..??!

போடாங் கொய்யாலா. 

முதலில் இந்தப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்க முன்வர வேண்டும். இந்த மனித இன துரோகிகள்.. விரோதிகள் பூமியில் இருப்பதே ஆபத்தானது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்காலத்தில் கல்விகற்ற தலைவர்களாக உருவாகியிருக்க கூடியவர்களையும்,  எதிர்காலத்தில்  கல்விகற்ற தலைவர்களாக உருவாகியிருக்க கூடிய பிஞ்சுகள் முதல் இளம் சிறார்கள் மற்றும் பதின்ம வயது அப்பாவிகளை வரை சிங்கள அரசே (அரசை இயக்கியவரில் நீரும், உமது குடும்பமும், தேசமும்)  திட்டமிட்டு, ஈழத்து தமிழரின் நிகழ்கால சனத்தொகையையம், மனித வளத்தையும் அழிக்கும் நோக்கத்துடனும், எதிர் காலத்தில் ஈழத் தமிழரின் சனத்தொகை,  மனித  வள இருப்பையும், விருத்தியையும் சிதைக்கும் நோக்கத்துடன் அப்படி முடியாவிட்டால் ஈழத்து தமிழரின் சனத்தொகையை கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கு குறைபதற்கும் (manageable minority) கிந்தியவுடன் சேர்ந்து சிங்கள அரசும், தேசமும், தமிழின அழிப்பை செய்தீர்கள். அது போதாது என்று இப்பொது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள அரசும், தேசமும்  கொண்டிருக்கிறது கிந்தியாவின் நிழலில்.

தனிப்பட்ட அடிப்படையில், தமிழரை படகில் ஆஸ்திரேலியா அனுப்புவதாக சொல்லி, அவர்கள் சென்ற படகுகளை சிங்கள கரையோர ரௌடி கும்பல் நடுக்க கடலில் மூழ்கடித்து தமிழின அழிப்பை நீரே முன்னின்று செய்தீர். இது யுத்தம் முற்றாக முடவடைந்த பின்பும்.     

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.