Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி

Featured Replies

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி

 

nallur-cm-suport-ralley-5-300x200.jpgவடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கேள்வி – பதில் வடிவத்தில்  ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர்.

அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள்.

ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார்.

இவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை.

தேர்தல் முடிந்த போது, அதுவும் 133,000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது.

ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளிவந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.

நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.

அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன.

இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன்.

அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன்!

அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன்.

ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதி வேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன்.

உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர்  நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.

இணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன்.

இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன்.

எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.

நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும்.

இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை.

ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்”! இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ? எடே! வழக்குகள் என்னைத் தேடி வருமடா! தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன.

உள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள்.

ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக் கூடாகத் தேர்தலில் நிற்கலாம்.

ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.

எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது.

தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்க வேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது.

திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/11/news/30340

  • தொடங்கியவர்
  • மக்களும் கடவுளும் விரும்பினால் முதலமைச்சராக மீண்டும் போட்டி- விக்னேஸ்வரன்!!
 
 

மக்களும் கடவுளும் விரும்பினால் முதலமைச்சராக மீண்டும் போட்டி- விக்னேஸ்வரன்!!

நான் அடுத்த தேர்­த­லில் போட்­டி­யிடவேண்­டும் என்று பெரு­வா­ரி­யான மக்­கள் விரும்­பு­வதை நான் அறி­வேன். நான் செல்­லும் இடங்­க­ளில் எல்­லாம் மக்­க­ளி­டம் இருந்து இந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப் பட்டு வரு­கின்­றது.

எனது பயணம் தொட­ர ­வேண்­டும் என்­பது அவன் சித்­த­மும் மக்­கள் விருப் ப­மும் போலும். இந்­தப் பின் ன­ணி­யில் நான் என்ன செய்ய? மக்­கள் கருத்­தும் மகேஸ்­வ­ரனின் கருத்­துமே முக்­கியம். கட்­சி­க­ளின் அனு­மதி பெறாத, கர­வான கருத்­துக்­களைக் கொண்­டோ­ரின் கருத்துக்­க ளைக் கேட்­டுக் கல­வ­ரம் கொள்ளத் தேவை­யில்லை.

இவ்­வாறு தெரி­வித்­தி ருக்­கி­றார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். இது தொடர்­பாக அவர் தானே எழு­தி­ய­னுப்­பும் கேள்வி, பதி­லில் தெரி­வித்­தி­ருந்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக அடுத்த தடவை போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது தொடர்­பான அவ­ரது இந்­தக் கேள்வி பதி­லில் போட்­டி­யி­டு­வது குறித்து முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தெளி­வான நிலைப்­பாட்­டில் இல்லை என்­பது தெரி­வ­தாக அர­சி­யல் அவ­தா­னி­கள் தெரி­வித்­த­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக விக்­னேஸ்­வ­ரன் கள­மி­றக்­கப்­ப­ட­மாட்­டார் என்று, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அவ­ரது கருத்தை நேர­டி­யாக நிரா­க­ரிக்­காத வகை­யி­லும் அதே­ச­ம­யம் ஏற்­றுக்­கொள்­ளாத வகை­யி­லும் காய் நகர்த்­தி­யி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

கள­நி­லை­க­ளைக் கணித்து, தான் வெற்றி பெறு­வார் என்­பது உறு­தி­யா­னால் மாத்­தி­ரமே, முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அவர் போட்­டி­யி­டு­வார் என்­றும், இல்­லா­வி­டின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் பின்­வாங்­கி­ய­து­ போல் பின்­வாங்­கி­வி­டு­வார் என்­றும் அர­சி­யல் அவ­தா­னி­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

முத­ல­மைச்­ச­ரின் கேள்வி பதில் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நடந்­தது என்ன ?
கேள்வி – எதிர்­வ­ரும் மாகாண சபைத் தேர்­த­லில் உங்­களை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்த விருப்­பம் இல்­லா­தது பற்றி சுமந்­தி­ரன் கூறி­யுள்­ளார்­கள். அது பற்றி உங்­கள் கருத்து என்ன?

பதில்: என்­மேல் இருக்­கும் உருக்­கத்­தி­னால், பாசத்­தி­னால், பரி­வி­னால் என்­னைக் துன்­பப்­ப­டுத்­தக் கூடாது என்ற மனோ­நி­லை­யில் என் மாண­வர் கார­ணங்­களை அடுக்­கி­யுள்­ளார். அதன் முழுத்­தாற்­ப­ரி­யத்­தை­யும் மக்­கள் அறிந்து கொள்ள வேண்­டும். 2013ஆம் ஆண்டு தேர்­த­லில் நிற்க முடி­யாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமா­தா­னப்­ப­டுத்தி தேர்­த­லில் நிற்க வைப்­ப­தற்­கா­கப் பல மாற்று யோச­னை­கள் முன் வைக்­கப்­பட்­டன.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மட்­டும் நில்­லுங்­கள். பிறகு இன்­னொ­ரு­வர் ஏற்­றுக் கொள்­வார் என்று சிலர் கூறி­னார்­கள். ஒரு நண்­பர் ‘உனக்கு என்ன பிரச்­சனை இருந்­தா­லும் நாங்­கள் தான் இருக்­கின்­றோமே’ என்று கூறி­விட்டு தேர்­தல் முடிந்­த­தும் வெளி­நாடு சென்று விட்­டார். வியா­பா­ரத்­துக்­கான பசப்பு வார்த்­தை­கள் போன்­றவை அவை. ‘குடி­கா­ரன் பேச்சு விடிந்­தால்ப் போச்சு’ என்­பது போல் காரி­யம் முடிந்­த­தும் அந்­தக் கூற்­றுக்­க­ளுக்கு மதிப்­பில்லை.

தேர்­தல் முடிந்­த­போது அது­வும் ஒரு லட்­சத்து 33 ஆயி­ரத்­துக்கு மேலான மக்­கள் வாக்­கு­கள் கிடைத்த பின்­னர் எவ­ருமே அது பற்­றிப் பேச­வில்லை. முடுக்கி விட்ட இயந்­தி­ரப் பொம்­மை­கள், முடுக்­கி­ய­வர் முன்­மொ­ழி­வு­க­ளுக்கு ஏற்ப வட­மா­காண சபை­யில் கூத்­தாட்­டத்­தில் ஈடு­பட்­ட­போ­து­தான் இவ்­வி­ட­யம் முதன் முத­லில் பேசப்­பட்­டது. அப்­பொ­ழுதே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வத்­தின் மத்­தி­யில் குடி­கொண்­டி­ருந்த சர்­வா­தி­கா­ரப் போக்கு வெளி­வந்­தி­ருந்­தது. கூட்­ட­மைப்பு கூட்­டா­கத் தீர்­மா­னங்­களை எடுத்­த­தைக் காண்­பது அரி­தாக இருந்­தது.

எங்­க­ளின் சுபா­வம்
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைக்­கவோ சிதைக்­கவோ நட­வ­டிக்­கை­கள் நான் எடுக்­க­வில்லை. அதன் தலை­மைத்­து­வத்­தின் பிழை­யான நட­வ­டிக்­கை­க­ளைச் சுட்­டிக் காட்­டவே நட­வ­டிக்­கை­கள் எடுத்து வந்­துள்­ளேன்.

அர­சி­ய­லுக்கு வரு­வேன் என்று நான் நினைத்­தி­ருக்­க­வில்லை. ஆனால் இறை செய­லால் நான் அர­சி­ய­லுக்­குள் வந்­து­விட்­டேன். வந்த பின் எனது மக்­க­ளின் பேரா­த­ர­வும் அன்­பும் என்னை நெகிழ வைத்­து­விட்­டன. இது­வரை என்­னால் முடிந்­த­ள­வுக்கு செய்­யக்­கூ­டி­ய­வற்றை செய்­துள்­ளேன். பல விட­யங்­களை செய்­ய­மு­டி­யா­மல் அதி­கார வரை­யறை, ஆட்சி அமைப்பு முட்­டுக்­கட்­டை­கள், குழி­ப­றிப்­புக்­கள் என்று பல தடை­களை எதிர்­கொண்­டுள்­ளேன். அதி­கா­ரம் ஓச்­சும் கட்­சிக்­குள்­ளேயே இருந்து கொண்டு சிலர் பல விட­யங்­களை நாம் செய்ய விட­வில்லை.

ஏன்! அடுத்த ஆறு மாதங்­க­ளி­னுள் எமது மக்­க­ளி­டையே மன­மாற்­றம் ஏற்­ப­டும் என்று எதிர்­பார்க்­க­லாமா? முடி­யாது. பழைய பாணி­யில் எமக்கு மீண்­டும் கடு­மை­யான எதிர்ப்­புக்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டும். அடுத்து உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லும் இந்­த­வா­றான நட­வ­டிக்­கை­களை எதிர் பார்க்­க­லாம். இது எங்­கள் சுபா­வம் போல்த் தெரி­கின்­றது.

என்­னால் முடி­யாது
எமது மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­களை, படு­கொ­லை­களை, போர்க்­குற்­றங்­களை எல்­லாம் யாருக்கோ உதவி செய்­யும் நோக்­கில் எம்­ம­வர் சிலர் மறைக்க முற்­ப­டு­வ­து­போல் என்­னால் மறைக்க முடி­யா­தி­ருக்­கின்­றது. உண்­மையை உல­கம் உணர வேண்­டும் என்­பதே எனது எதிர்­பார்ப்பு. அவற்றை வெளிக்­கொண்டு வரு­வ­தற்கு என்­னால் இய­லு­மா­ன­ளவு செயற்­பட்­டி­ருக்­கின்­றேன். ஏகோ­பித்த வட­மா­கா­ண­சபை இனப்­ப­டு­கொ­லைத் தீர்­மா­னம் இதற்­கொரு உதா­ர­ணம்.

எமக்­கான உத­வி­களை சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் செய்­து­தர முன்­வ­ரா­மை­யால் எம் புலம்­பெ­யர் சொந்­தங்­க­ளி­டம் எமக்­கான உத­வி­க­ளைப் பெற்று போரி­னால் நலி­வுற்­றி­ருக்­கும் எம்­மக்­க­ளின் துயர்­களை துடைக்க முத­ல­மைச்­சர் நிதி­யம் ஒன்­றுக்­கான ஒப்­பு­த­லைத் தரும்­படி 4 ஆண்­டு­க­ளாக வேண்டி நிற்­கி­றோம். மாகாண சபை­யின் ஆயுள்­கா­ல­மும் முடி­வுக்கு வரு­கி­றது. ஆனால் இன்று வரை அதற்­கான ஒப்­பு­தல் அளிக்­கப்­ப­ட­வில்லை.

நாடா­ளு­மன்­றத்­தில் செயற்­ப­டும் எமது எந்த தமிழ்த் தலை­வ­ரா­வது இதனை வலி­யு­றுத்தி இருக்­கின்­றார்­களா? போரி­னால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஒன்­றும் கிடைக்­காது போனா­லும் பர­வா­யில்லை தனி­யொ­ரு­வ­னுக்­குப் பெயர் வந்து விடக்­கூ­டாது என்ற மனோ­பா­வத்­தின் வெளிப்­பாட்டை நான் அவ­தா­னிக்­கின்­றேன்.

வடக்கு – கிழக்கு இணைப்பு
இணைந்த வடக்கு – கிழக்­கில் சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்வு என்ற எமது தீர்­வுக் கோரிக்­கையை இல்­லா­மல் செய்து தமிழ்த் தேசி­யக் கோட்­பாட்­டைச் சிதைக்­குந் திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கை­களை எதிர்க்­கும் நிலைக்கு நான் கடந்த 4 ஆண்­டு­க­ளில் தள்­ளப்­பட்­டி­ருந்­தேன். இவ்­வா­றான சிதைக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக என்­னால் முடிந்­த­ள­வுக்­குச் செயற்­பட்டு ‘இணைந்த வடக்கு – கிழக்­கில் சுய­நிர்­ணய உரிமை’ என்ற அர­சி­யல் கருத்து வினைப்­பாட்டை மீள நிலை­நி­றுத்­தி­யுள்­ளேன். எவர் முத­ல­மைச்­சர் பத­விக்கு வந்­தா­லும் இவற்­றைத் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்­டும். அவர்­கள் சுய­ந­ல­மொன்றே குறிக்­கோ­ளாக வைத்­தி­ருப்­பின் எமது போராட்­டம் பிசு பிசுத்­துப் போய்­வி­டும். ஆலை­க­ளுக்­கும் சாலை­க­ளுக்­கும் ஆசைப்­பட்டு அடிப்­படை உரி­மை­க­ளைத் தவ­ற­விட்டு விடு­வோம்.

மக்­கள் கருத்து முக்­கி­யம்
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும். இதுவே எனது வழி­பாடு. எமது மக்­க­ளுக்கு நாம் செய்­ய­வேண்­டிய பணி­கள் ஏரா­ளம் உள்­ளன. தற்­போது பொரு­ளா­தார ரீதி­யா­கப் பல செயல்­திட்­டங்­களை மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யுள்­ளேன்.
நான் அடுத்த தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டும் என்று பெரு­வா­ரி­யான மக்­கள் விரும்­பு­வதை நான் அறி­வேன்.

நான் செல்­லும் இடங்­க­ளில் எல்­லாம் மக்­க­ளி­டம் இருந்து இந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனது பய­ணம் தொட­ர­வேண்­டும் என்­பது அவன் சித்­த­மும் மக்­கள் விருப்­ப­மும் போலும். இந்­தப் பின்­ன­ணி­யில் நான் என்ன செய்ய? மக்­கள் கருத்­தும் மகேஸ்­வ­ர­னின் கருத்­துக்­க­ளுமே முக்­கி­யம். கட்­சி­க­ளின் அனு­மதி பெறாத, கர­வான கருத்­துக்­க­ளைக் கொண்­டோ­ரின் கருத்­துக்­க­ளைக் கேட்­டுக் கல­வ­ரம் கொள்­ளத் தேவை­யில்லை.

பதவி தேடி­வ­ரும்
ஜீ.ஜீ பொன்­னம்­ப­லம், இரத்­தி­ன­பு­ரி­யில் கிரி­மி­னல் வழக்­கொன்­றில் முன்­னி­லை­யாகி குற்­றம் சாட்­டப்­பட்­ட­வரை விடு­வித்­துக் கொடுத்­தார். விடு­த­லை­யான அந்த நபர் உடனே ஜீ.ஜீயி­டம் சென்று “சேர்! இனி எந்த வழக்கு வந்­தா­லும் உங்­க­ளி­டமே நான் அதைக் கொண்டு வரு­வேன்” என்று மகிழ்ச்­சி­யா­கக் கூறி­னார். ஜீ.ஜீக்கு இது பிடிக்­க­வில்லை. ‘‘என்ன சொன்­னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வரு­வாயோ? அடே! வழக்­கு­கள் என்­னைத் தேடி வரு­மடா! தேடி வரும்” என்­றார். ஆகவே பத­வி­கள் வரு­வ­தாக இருந்­தால் அவை தேடி வரு­வன.

கண்­ணா­டி­யில் பார்த்து கார­ணம் கண்­ட­றி­யுங்­கள்
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ் அர­சுக் கட்­சிக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வுக்கு என்­னையே கார­ணம் காட்­டு­கின்­றார்­கள். சிலர் தம்­மைத் தாமே கண்­ணா­டி­யில் பார்த்­துக் கார­ணங்­க­ளைக் கண்டு பிடிக்­கா­மல் என்னை வைகின்­றார்­கள்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் தமிழ் அர­சுக் கட்­சி­யி­டம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்­தி­யம் இல்லை. எனவே மக்­கள் நன்மை கருதி கொள்கை ரீதி­யாக எம்­மு­டன் உடன்­ப­டும் வேறு ஒரு கட்­சிக்­கூ­டா­கத் தேர்­த­லில் நிற்­க­லாம். ஆனால் கடந்த கால அனு­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் மூலோ­பாய ரீதி­யா­க­வும் நடை­முறை அடிப்­ப­டை­யி­லும் அவ்­வாறு நிற்­ப­தால் பல பிரச்­சி­னை­கள் இடை­யூ­று­கள் ஏற்­பட வாய்ப்­புக்­கள் உள்­ளன.

புதிய கட்சி
புதிய கட்சி ஒன்­றைத் தொடங்­கு­மாறு பல­ரும் ஆலோ­சனை வழங்கி வரு­கின்­றார்­கள். கொள்கை ரீதி­யாக உடன்­ப­டும் அனை­வ­ரு­ட­னும் கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யி­ட­லாம் என்­கின்­றார்­கள். அதற்­கு­ரிய காலம் கனிந்து விட்­டதோ நான் அறி­யேன்.

எமது அர­சி­யல், பொரு­ளா­தார, சமூக மற்­றும் கலா­சார வேண­வாக்­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பய­ணப் பாதை­யைத் தனி­ந­பர்­கள் தீர்­மா­னிக்­கா­மல் அறிவு ஜீவி­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் ஒரு நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­யல் செயற்­பாட்டை இது­வரை கால­மும் முன்­னெ­டுத்­தி­ருப்­போ­மா­னால் எம்­மி­டையே பிள­வு­கள் ஏற்­பட்­டி­ருந்­தி­ருக்­காது. தெற்­கில் எவர் வரப்­போ­கின்­றார் என்ன நடக்­க­போ­கின்­றது என்ற மனக்­கி­லே­சங்­க­ளுக்கு உள்­ளாக வேண்­டி­யி­ருந்­தி­ருக்­காது.

நாம் தொடர்ந்­தும் ஏமாற்­றப்­ப­டும் இன­மாக இருக்­க­வேண்டி வந்­தி­ருக்­காது. எமது பிர­தே­சங்­கள் தொடர்ந்­தும் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளால் பறிக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­காது. திட்­டங்­க­ளுக்கு ஏற்ப நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட மற்­றும் ஒழுக்­கம் சார்ந்த ஓர் அர­சி­யலை மேற்­கொண்டு எமது வேண­வாக்­களை வென்­றெ­டுக்க சிவில் சமூ­கத்­தி­னர், ஊட­க­வி­ய­லா­ளர்­கள், சமூ­க­வி­ய­லா­ளர்­கள், புத்­தி­ஜீ­வி­கள், மக­ளிர், இளை­யோர் மற்­றும் பொது­மக்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணை­ய­வேண்­டும்.

கூட்­ட­மைப்பே இல்லை
கேள்வி – அர­சி­யல் ரீதி­யாக இந்த வரு­டம் உங்­க­ளுக்கு முக்­கி­ய­மான ஒரு வரு­டம். தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு உங்­களை எதிர் வரும் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு முன்­வந்­தால் ஏற்­றுக்­கொள்­வீர்­களா?

பதில்: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­பது எதற்­காக யாரால் உரு­வாக்­கப்­பட்­டது என்­பது உங்­கள் எல்­லோ­ருக்­குந் தெரிந்த விட­யம். அதன் ஆரம்ப காலத்­தில் அதனை உரு­வாக்­கப் பாடு­பட்­ட­வர்­க­ளு­டன் எனக்கு நெருங்­கிய தொடர்பு இருந்­தது.

வடக்­குக் கிழக்­குக் தாய­கம், இறைமை, சுய­நிர்­ண­யம் என்ற தமிழ்த் தேசி­யத்­தின் அடிப்­ப­டைக் கூறு­களை ஐந்து கட்­சி­க­ளின் கூட்­டி­ணை­வாக முன்­வைத்து உரு­வாக்­கப்­பட்­டதே அந்­தக் கட்­சி­யா­கும். அந்­தக் கொள்­கை­க­ளுக்­கா­கவே கடந்த மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் மக்­க­ளி­டம் நாம் வாக்­குக் கேட்­டோம். மக்­க­ளும் எமக்கு அமோக வெற்­றியை பெற்­றுத்­தந்து என்­னை­யும் முத­ல­மைச்­ச­ராக்­கி­னர். அதே கொள்­கை­யு­டைய தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு இன்று இருக்­கின்­றதா? இன்று அதில் எத்­தனை உரு­வா­கக் கட்­சி­கள் உள்­ளன? அப்­படி ஓர் அமைப்பே இல்­லா­த­வி­டத்து எங்­கி­ருந்து எனக்கு அழைப்பு வரும்? – என்று அவ­ரது கேள்வி பதில் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/83720.html

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசை யாரைத் தான் விடடதுtw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழில் உள்ள சில பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன. "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி," "நுணலும் தன் வாயாற் கெடும்," " உள்ளதையும் கெடுத்தானாம் கொள்ளிக் கண்ணன்." டக்கிலஸின்ர ஆதரவு வேண்டி ஆட்சி அமைக்கும் இழி நிலையில் இருந்துகொண்டு அதிகப் பிரசங்கம் பண்ணப்போய் டக்கிளஸ் மிதிக்கிற நிலைக்கு வரப்போகினம். நிராகரிப்பின் மூலம் முதலமைச்சரை நிர்மூலமாக்கி விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு அவரை விஸ்வரூபம் எடுக்கத் தள்ளி விட்ட பெருமை பதவி ஆசை பிடித்த மாவையரையும், சிங்களத்தின்  கைக்கூலி சுமந்திரனையுமே சேரும். முதலமைச்சர் தனது பாதையில் பயணிக்க இனி ஒரு தடையுமில்லை. விமர்சிப்பவர்களும் நிலவைப் பார்த்து குரைக்கும்  ஏதோ போல் வாய் வலிக்க குரைத்து விட்டு ஒதுங்க வேண்டியதுதான். அரசியல் வாதிகள் யாராய் இருந்தாலும்  மக்களிடத்தில் முதலமைச்சருக்கு இருக்கும் மதிப்பை தங்கள் அரசியல் எதிர்கால வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டு அவரை ஓரங்கட்டவே நினைப்பார்கள். மக்கள் நலனுக்காக உழைக்கும் கூட்டணியை ஆராய்ந்து பார்த்து கூட்டுச் சேருவது நல்லது. இல்லையாயின் அவர்களும் அவரை வெறும் கறி வேப்பிலையாகவே  பயன்படுத்துவார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

பதவி ஆசை யாரைத் தான் விடடதுtw_dissapointed:

யாரை..... முன்னாள் பிரதி அமைச்சரையா சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே நினைத்தன் இந்தியாவில் காசுகுடுத்து வாங்கின பட்டத்துக்குரியவர்  சவுடால் விடேக்கிலையே இந்தாளை ஓய்வு பெற விடமாட்டாங்கள் என்று .

12 hours ago, ரதி said:

பதவி ஆசை யாரைத் தான் விடடது

தமிழ் மக்களுக்கு சேவை செய்யும்  பதவிக்கு ஆசைப்படுவது தப்பல்ல கிழக்கு மாகாணத்தை சுபிட்சமாக்கிரன்  என்றுவிட்டு இலங்கையின் முதல் பத்து செல்வந்தர்களுக்குள் தான் மட்டும் வருவது என்னவென்று சொல்வது அவர் சொன்னது போல் இன்று கிழக்கு மாகான தமிழ் மக்கள் சந்தோசமாக அவரால் இருந்து இருந்தால் நானே அவரின் புகழ் பாடியாக இருந்து இருப்பன் உங்களைபோல் மருகிக்கொண்டு மனம் வெதும்பி கருத்துக்களை உமிழ்ந்துகொண்டு இருக்க மாட்டன் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

யாரை..... முன்னாள் பிரதி அமைச்சரையா சொல்கிறீர்கள்?

 

இலங்கையின் மேற்கு பக்கத்தில் பிறந்து,வளர்ந்து, .போர் என்டால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து, மிகப் பெரிய பதவி  வகித்து ,ஒய்வு பெற்று ,தன் பிள்ளைகளை எல்லாம் சிங்களவருக்கு கட்டிக் கொடுத்து,பேரப்பபிள்ளைகள கண்டவுடன் பொழுது போகாமல் அரசியலுக்கு வ்ந்து , தன் மருமகனோட சேர்ந்து தமிழருக்கு வரும் நிதி எல்லாம் ஆடடையைப் போடுவது பத்தாமல்  சிங்களவருக்கு  திருப்பியும்  அனுப்பிக்  கொண்டு இருக்கிறார்.
மெத்த படித்திருந்தும்,நல்ல ஆங்கில மொழி அறிவு இருந்தும, தனது மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் அந்தப் பதவியில் பொழுது போவதற்கும்,அவருடைய குடும்பத்தை வளர்க்க இப்பவும் இவருக்கு காசு தேவை என்டால்,பதவி தேவை எண்டால்;
படிக்க வேண்டிய வயசில் இயக்கத்திக்கு போய் தன்னுடைய வாழ் நாளை தலைவரது பாசறையில் கழித்த என் அண்ணர் ஆசைப்படுவதில் தப்பே இல்லை. ஆனால், அவருக்கு உந்த பதவியில் எல்லாம் ஆசை இல்லை.
முன்னாள் நீதிபதியோடு ஒப்பிடும் அளவு எந்தன் அண்ணா வளர்ந்ததை இட்டு மிக மகிழ்ச்சி:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

சுயேட்சையாக கூட போட்டியிடலாம். கூட்டமைப்பின் முகத்திரையை உடைத்தமைக்கு நன்றி. சேவை செய்ய வேண்டும் எனில் கட்சி தேவை இல்லை. முடிந்தால் யாரும்   இவருடன் போட்டியிட்டு வெல்லலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

 

இலங்கையின் மேற்கு பக்கத்தில் பிறந்து,வளர்ந்து, .போர் என்டால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து, மிகப் பெரிய பதவி  வகித்து ,ஒய்வு பெற்று ,தன் பிள்ளைகளை எல்லாம் சிங்களவருக்கு கட்டிக் கொடுத்து,பேரப்பபிள்ளைகள கண்டவுடன் பொழுது போகாமல் அரசியலுக்கு வ்ந்து , தன் மருமகனோட சேர்ந்து தமிழருக்கு வரும் நிதி எல்லாம் ஆடடையைப் போடுவது பத்தாமல்  சிங்களவருக்கு  திருப்பியும்  அனுப்பிக்  கொண்டு இருக்கிறார்.
மெத்த படித்திருந்தும்,நல்ல ஆங்கில மொழி அறிவு இருந்தும, தனது மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் அந்தப் பதவியில் பொழுது போவதற்கும்,அவருடைய குடும்பத்தை வளர்க்க இப்பவும் இவருக்கு காசு தேவை என்டால்,பதவி தேவை எண்டால்;
படிக்க வேண்டிய வயசில் இயக்கத்திக்கு போய் தன்னுடைய வாழ் நாளை தலைவரது பாசறையில் கழித்த என் அண்ணர் ஆசைப்படுவதில் தப்பே இல்லை. ஆனால், அவருக்கு உந்த பதவியில் எல்லாம் ஆசை இல்லை.
முன்னாள் நீதிபதியோடு ஒப்பிடும் அளவு எந்தன் அண்ணா வளர்ந்ததை இட்டு மிக மகிழ்ச்சி:rolleyes:

பதவி ஆசை இல்லாமல் தான்

பிரதி அமைச்சர்

சிறீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்

இப்போ ஓர் அரசியல் கட்சியின் தலைவர்

ஆனால் விக்கினேஸ்வரன் தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆகி உள்ளார்

12 hours ago, MEERA said:

பதவி ஆசை இல்லாமல் தான்

பிரதி அமைச்சர்

சிறீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர்

இப்போ ஓர் அரசியல் கட்சியின் தலைவர்

ஆனால் விக்கினேஸ்வரன் தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆகி உள்ளார்

மக்களை ஏமாற்றி ஈனப் பிழைப்பு நடத்தும் கும்பல்களுக்கு, அந்த ஈனக் கும்பல்களுக்கு ஜால்றா போடும் காட்டாக்காலிகளுக்கும் தமிழர் நலனுக்காக முழுமூச்சுடன் மிகச் சிறப்பாக செயற்பட்டவராக தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது வெறுப்பு ஏற்படுவதை விளங்கிக்கொள்ளலாம்.

தேர்தல் நெருங்குவதால் இந்த அயோக்கியர்கள் சேறுகளையும் சகதிகளையும் அள்ளி வீசத்தொடங்கியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2018 at 4:17 PM, ரதி said:

தமிழருக்கு வரும் நிதி எல்லாம் ஆடடையைப் போடுவது பத்தாமல்  சிங்களவருக்கு  திருப்பியும்  அனுப்பிக்  கொண்டு இருக்கிறார்.

இதுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா ? அவரை சுமத்திரன் போன்றதுகள் தீவிரமாய் இப்படியான விடயங்களில் மாட்டி விடுவதுக்கு என்று அலைகினம் உங்களிடம் ஆதாரம் இருந்தால் டீல் பேச நேரே லண்டனுக்கு வந்து விடுவினம் .:6_smile:

On 4/12/2018 at 4:17 PM, ரதி said:

படிக்க வேண்டிய வயசில் இயக்கத்திக்கு போய் தன்னுடைய வாழ் நாளை தலைவரது பாசறையில் கழித்த என் அண்ணர் ஆசைப்படுவதில் தப்பே இல்லை

ஆசைப்படுவது மனித இயல்பு ஆனால் தலைவர் வளர்த்துவிட  கடைசியில் தன் சுக போகத்துக்கு துரோகம்  மூலம் அந்த பாசறையே மவுனிக்க செய்தவர் பற்றி எப்படி உங்களால் இயல்பாய் எடுத்துக்கொண்டு அவர் சார்பு பட கருத்து எழுத முடிகிறது ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

 

ஆசைப்படுவது மனித இயல்பு ஆனால் தலைவர் வளர்த்துவிட  கடைசியில் தன் சுக போகத்துக்கு துரோகம்  மூலம் அந்த பாசறையே மவுனிக்க செய்தவர் பற்றி எப்படி உங்களால் இயல்பாய் எடுத்துக்கொண்டு அவர் சார்பு பட கருத்து எழுத முடிகிறது ?

சுக போகக்கு துரோகம் செய்தார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?
 

9 minutes ago, பெருமாள் said:

இதுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா ? அவரை சுமத்திரன் போன்றதுகள் தீவிரமாய் இப்படியான விடயங்களில் மாட்டி விடுவதுக்கு என்று அலைகினம் உங்களிடம் ஆதாரம் இருந்தால் டீல் பேச நேரே லண்டனுக்கு வந்து விடுவினம் .:6_smile:

 

இனம்,இனத்தை காட்டிக் கொடுக்குமா .<_<..கொண்டு வந்தததே சம்மந்தர் tw_cry:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

சுக போகக்கு துரோகம் செய்தார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இதென்ன கதை வானம் நீல நிறம் என்றால் அதுக்கு என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள் போல் இருக்கு . 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இனம்,இனத்தை காட்டிக் கொடுக்குமா .<_<..கொண்டு வந்தததே சம்மந்தர் tw_cry:

கொண்டுவந்தது சம்பந்தன் ஆக இருக்கலாம் அதாவது தன்னில் உள்ள குறைகளை மறைக்க கைகள் சுத்தமான ஒருவர் தெவைபட்டார் மாட்டுபட்டது இந்தாள் அவர் உள்ளே வந்த பின்தான் தமிழரசுவின் தமிழ்மக்களுக்கு எதிரான துரோகத்தனம் கண்டு கதைக்க தொடங்க சம்பந்தன் சுமத்திரன் வகையறாக்களுக்கு பெரும் தலையிடியாய் மாறியது .

விக்கியரை தவிர்த்து ஏன் டமில் அரசின் மற்றயவர்கள் முதலமைச்சர் பதவிக்கு அப்ப போட்டியிட்டு இருக்கலாமே முடியாது அவர்களால் என்று அவர்களுக்கே தெரிந்தபடியால் தான் முன்னாள் நீதியரசரை கொண்டு வந்தவை .

இவரை விட்டால் முதலமைச்சருக்கு தகுதியானவர்கள் வேறு யாருமே இல்லையா ? தமிழ்தேசியக்கூட்டமைப்பை சுமந்திரனை எதிர்த்ததை தவிர உருப்படியா என்ன  செய்திருக்கிறார் , *** ரெக் மீள  பெரிய ஒரு பல்கலைக்கழகமாக ஆரம்பிப்பதற்கு மாகாணசபையின் ஆதரவை கேட்டு இவரை அணுகியவர்கள் சொன்னதைக்கேட்ட பிறகு இவரில் துளி கூட நம்பிக்கை இல்லை ,இவரை விட செயல்திறனும் அறிவும் குறிப்பாக மனேஜ்மன்ட் திறன் உள்ளவர்கள் வருவது மாகாணசபையை திறன்பட கொண்டுசெல்ல உதவும்  

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, அபராஜிதன் said:

இவரை விட்டால் முதலமைச்சருக்கு தகுதியானவர்கள் வேறு யாருமே இல்லையா ? தமிழ்தேசியக்கூட்டமைப்பை சுமந்திரனை எதிர்த்ததை தவிர உருப்படியா என்ன  செய்திருக்கிறார் , *** ரெக் மீள  பெரிய ஒரு பல்கலைக்கழகமாக ஆரம்பிப்பதற்கு மாகாணசபையின் ஆதரவை கேட்டு இவரை அணுகியவர்கள் சொன்னதைக்கேட்ட பிறகு இவரில் துளி கூட நம்பிக்கை இல்லை ,இவரை விட செயல்திறனும் அறிவும் குறிப்பாக மனேஜ்மன்ட் திறன் உள்ளவர்கள் வருவது மாகாணசபையை திறன்பட கொண்டுசெல்ல உதவும்  

விக்கியரின் பெரும்குறையே இந்த நிர்வாக திறமை இல்லாமைதான் என்பது பலரின் குற்றசாட்டு .ஆனால் அவரிடம் முழு அதிகாரம் செல்லாத விடத்து அவரிடம் குற்றம் காண்பது சரியாக படலை .

நீங்களே வன்னிரெக் என்று அடிக்காமல்  நட்சத்திர   குறியீடு போடுகிற கல்விசார் அமைப்பை அவரிடம் போய்   பல்கலையாய்    மாத்துவம் என்றால் எங்களால் முடியாதது அவராலும் முடியாதே .

என்ன கொஞ்சம் விடயம் தெரிந்த ஆள் என்றால் ஜோசப்பை போட்டு தள்ளியது போல்  இவரையும் போட்டு தள்ளி இருப்பினம் இளம்செeli யனுக்கே நீதிபதிக்கே பாதுகாப்பில்லா ஊரில்   இதுவரைக்கும் விட்டு வைத்திருப்பது வினோதம் தான் . 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2018 at 1:17 AM, ரதி said:

இலங்கையின் மேற்கு பக்கத்தில் பிறந்து,வளர்ந்து, .போர் என்டால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து, மிகப் பெரிய பதவி  வகித்து ,ஒய்வு பெற்று ,தன் பிள்ளைகளை எல்லாம் சிங்களவருக்கு கட்டிக் கொடுத்து,பேரப்பபிள்ளைகள கண்டவுடன் பொழுது போகாமல் அரசியலுக்கு வ்ந்து , தன் மருமகனோட சேர்ந்து தமிழருக்கு வரும் நிதி எல்லாம் ஆடடையைப் போடுவது பத்தாமல்  சிங்களவருக்கு  திருப்பியும்  அனுப்பிக்  கொண்டு இருக்கிறார்.

இப்படி ஒரு பின்னணி கொண்டவர் பாதிக்கப்பட்ட அந்த மக்களோடு இருந்து  அவர்களுக்கு  சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது நாங்களே மக்களின் ஏகப் பிரதி நிதிகள் என்று காலங்காலமாய் வாக்கு வேண்டி பதவி வகித்தவர்களால் அவரோடு சேர்ந்து ஏன் பயணிக்க முடியவில்லை? விதியும், பிள்ளைகளும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை தெரிந்து கொண்டார்கள்.  அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களை முதல்வர் அரசியலுக்கு கொண்டு வரவுமில்லை, அவர்கள் அரசியல் கதைக்கவுமில்லை. அவர்களை அமைதியாக வாழ விடுங்கள்.அதை அவர் தடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியாது. முதல்வர் தானாக அரசியலுக்கு வரவில்லை அவரின் பின்னணி தெரிந்து தானே கொண்டு வந்தார்கள். ஏன் கொண்டு வந்தார்கள்? தங்களில் திறமை இல்லை என்பதை அன்று  ஏற்றுக்கொண்டார்கள். இன்று குறை கூறுகிறார்கள். வேறொரு தலைவரை தேடுகிறார்கள். தலையாட்டி பொம்மையையா?  "நிதி." அவரை கையாலாகாதவர் என்று காட்ட சில கைக்கூலிகள் எழுப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர்களின் ஏவலாளிகள் காவிக்கொண்டு திரியுதுகள். நீங்கள் சொல்வது போல் அவர் பதவி ஆசை பிடித்தவராகவே இருக்கட்டும். அப்போ  அவர்தான் மீண்டும் முதலமைச்சர். பதவி ஆசை இல்லாத எவரும் போட்டியிடப் போவதில்லை. அவர் கையூட்டுப்பெற்று நாடு நாடாய் சுற்றி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி பிழைக்கவில்லை. அவன் செய்த இனப்படுகொலையை  நிஞாயப் படுத்தவில்லை.   தன்னைத் தெரிந்தெடுத்த மக்களோடு இருந்து அவர்களுக்காக குரலெழுப்புகிறார். அவர்களுக்கு நீதி வேண்டி போராடுகிறார். அந்தளவில் அவர் நல்லவரே. அது கிடைக்கும் வரை அந்தப் பதவிக்கு அவர் ஆசைப் படட்டுமேன். அவரை தெரிவதும் தவிர்ப்பதும் மக்கள். நீங்கள் ஏன் குத்தி முறிகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎13‎/‎04‎/‎2018 at 1:29 PM, பெருமாள் said:

கொண்டுவந்தது சம்பந்தன் ஆக இருக்கலாம் அதாவது தன்னில் உள்ள குறைகளை மறைக்க கைகள் சுத்தமான ஒருவர் தெவைபட்டார் மாட்டுபட்டது இந்தாள் அவர் உள்ளே வந்த பின்தான் தமிழரசுவின் தமிழ்மக்களுக்கு எதிரான துரோகத்தனம் கண்டு கதைக்க தொடங்க சம்பந்தன் சுமத்திரன் வகையறாக்களுக்கு பெரும் தலையிடியாய் மாறியது .

விக்கியரை தவிர்த்து ஏன் டமில் அரசின் மற்றயவர்கள் முதலமைச்சர் பதவிக்கு அப்ப போட்டியிட்டு இருக்கலாமே முடியாது அவர்களால் என்று அவர்களுக்கே தெரிந்தபடியால் தான் முன்னாள் நீதியரசரை கொண்டு வந்தவை .

சம்மந்தர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்த்தும்i இல்லை, இனி மேல் செய்யப் போறதும் இல்லை .ஆனால் அவர் ஒரு கைதேர்ந்த ராஜ தந்திரி. அவர் என்ன நோக்கத்திற்காக விக்கியை கொண்டு  வந்தாரோ  அது  தான் நடக்குது.
விக்கி செயற் திறன் அற்றவர் எனத் தெரிந்து தான் கொண்டு வந்தவர்....மாவையோ,சுமத்திரனையோ கொண்டு வந்து இருந்தால் நிசசயம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்....இவர்களுக்கு ஏதாவது செய்ய விருப்பம் இருந்தாலும் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து போய் விடும்....சீ.வீ யை கொண்டு வந்தால் காலத்தை கடத்தலாம்.
உங்களை போல ஆட்கள் இவர் பின்னால் போவதற்கு கூட்டமைப்பின் மேல் உள்ள கோபம் தான் காரணம். அது தான் சம்மந்தருக்கு வேண்டும்....சீ,வீ புலம் பெயர் மக்களோட நல்ல உறவை கிரியேட் பண்ணி வைத்திருக்கிறார்.
"நீ அடிக்கிற மாதிரி அடி நான் அனைக்கின்ற மாதிரி அனைக்கின்றேன்"...என்பது இவர்களது போ மிலா....மொத்தத்தில் இவர்கள் எல்லோரும் ஒரே குடடையில் ஊறிய மடடைகள் ...பாவம் தமிழன்tw_cry:
  • கருத்துக்கள உறவுகள்
On ‎13‎/‎04‎/‎2018 at 7:23 AM, பெருமாள் said:

இதென்ன கதை வானம் நீல நிறம் என்றால் அதுக்கு என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள் போல் இருக்கு . 

பெருமாள்,இது பற்றி நிறைய எழுதியாகி விட்ட்து....முந்தி மாதிரி எழுதி வெட்டு வாங்க நேரமும்,பொறுமையும் இல்லை.
 
எண்ட அண்ணன் பிரிந்து போனதால் தான் கிழக்கு மாகாணமாவது தப்பிச்சிது.
அந்த நேரம், இவர் ஏன் இப்படி செய்கிறார் என தலைவர் ஒரு நிமிடம் சுயமாய் யோசித்து இருந்தால் வன்னியும் தப்பி இருக்கும் .
இப்ப கூட வெட்டுவேன் ,குத்துவேன் எண்டு கதைக்கிறார்களே தவிர உண்மையைத் தெரிந்து கொள்ள ஒருத்தருக்கும் விருப்பம் இல்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:
பெருமாள்,இது பற்றி நிறைய எழுதியாகி விட்ட்து....முந்தி மாதிரி எழுதி வெட்டு வாங்க நேரமும்,பொறுமையும் இல்லை.
 
எண்ட அண்ணன் பிரிந்து போனதால் தான் கிழக்கு மாகாணமாவது தப்பிச்சிது.
அந்த நேரம், இவர் ஏன் இப்படி செய்கிறார் என தலைவர் ஒரு நிமிடம் சுயமாய் யோசித்து இருந்தால் வன்னியும் தப்பி இருக்கும் .
இப்ப கூட வெட்டுவேன் ,குத்துவேன் எண்டு கதைக்கிறார்களே தவிர உண்மையைத் தெரிந்து கொள்ள ஒருத்தருக்கும் விருப்பம் இல்லை.
 

உங்கட அண்ணன் பிரிந்து போனபின்னரும் சண்டை பிடித்தவர், தமிழ் மக்களை கடத்தியவர், 2 வயது பிள்ளையை கடத்தி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தவர், இதெல்லாம் உங்களுக்கு தெரியாதோ? 

கிழக்கு மாகாணம் தப்பி இப்போ எந்தளவில் வன்னியைவிட முன்னேறி இருக்கின்றது?

ஒரு பெட்டையின் பாஸ்போட்டில் பிரித்தானியாவிற்கு வந்த வீரன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

உங்கட அண்ணன் பிரிந்து போனபின்னரும் சண்டை பிடித்தவர், தமிழ் மக்களை கடத்தியவர், 2 வயது பிள்ளையை கடத்தி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தவர், இதெல்லாம் உங்களுக்கு தெரியாதோ? 

கிழக்கு மாகாணம் தப்பி இப்போ எந்தளவில் வன்னியைவிட முன்னேறி இருக்கின்றது?

 

சண்டையைத் தூண்டியது யார் மீரா?....என்ர அண்ணா தான் 2 வயசுக் குழந்தையை பலத்துகாரம் செய்து கொலை செய்த் மாதிரி கதைக்கிறீர்கள்?... இதற்கு அண்ணா பொறுப்பு ஏற்க வேண்டுமானால் புலிகள் செய்த் எல்லாப் பிழைக்கும் தலைவர் பொறுப்பு ஏற்பாரா?
வன்னி மாதிரி கிழக்கில் உயிர் இழப்பு இல்லை.
வடக்கு மக்களை மாதிரி கிழக்கு மக்கள் வெளி நாட்டுக்கு போகவில்லை...எந்த விதமான உதவிகளும் இல்லை...ஆப்புறம் எப்படி முன்னேறும்?
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

 

சண்டையைத் தூண்டியது யார் மீரா?....என்ர அண்ணா தான் 2 வயசுக் குழந்தையை பலத்துகாரம் செய்து கொலை செய்த் மாதிரி கதைக்கிறீர்கள்?... இதற்கு அண்ணா பொறுப்பு ஏற்க வேண்டுமானால் புலிகள் செய்த் எல்லாப் பிழைக்கும் தலைவர் பொறுப்பு ஏற்பாரா?
வன்னி மாதிரி கிழக்கில் உயிர் இழப்பு இல்லை.
வடக்கு மக்களை மாதிரி கிழக்கு மக்கள் வெளி நாட்டுக்கு போகவில்லை...எந்த விதமான உதவிகளும் இல்லை...ஆப்புறம் எப்படி முன்னேறும்?

2 வயது பிள்ளையை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தது கருணா குறூப், திருமலையில் யாரை கேட்டாலும் சொல்வார்கள்.

முன்னமே அந்த பெட்டையின் பாஸ்போர்ட்டில் ஓடியிருக்கலாமே? கருணா புலிகள் சண்டையில் எவ்வளவு உயிர்கள் கொல்லப்பட்டன. இன்று தனது தம்பிக்கு மட்டும் நினைவு சின்னம் அமைத்து இருக்கிறார், மற்ற உயிர்கள் எல்லாம் சும்மாவா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

2 வயது பிள்ளையை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தது கருணா குறூப், திருமலையில் யாரை கேட்டாலும் சொல்வார்கள்.

முன்னமே அந்த பெட்டையின் பாஸ்போர்ட்டில் ஓடியிருக்கலாமே? கருணா புலிகள் சண்டையில் எவ்வளவு உயிர்கள் கொல்லப்பட்டன. இன்று தனது தம்பிக்கு மட்டும் நினைவு சின்னம் அமைத்து இருக்கிறார், மற்ற உயிர்கள் எல்லாம் சும்மாவா?

தலைவர் புத்தியைப் பாவித்திருந்தால் இந்த சண்டையும் வந்து இருக்காது.... வன்னியும் 2009யில் அழிந்து இருக்காது...அவரிண்ட குரூப் செய்தற்கு எல்லாம் அவர் பொறுப்பு எண்டால் புலிகள் செயதற்கு எல்லாம் தலைவர் பொறுப்பா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:
தலைவர் புத்தியைப் பாவித்திருந்தால் இந்த சண்டையும் வந்து இருக்காது.... வன்னியும் 2009யில் அழிந்து இருக்காது...அவரிண்ட குரூப் செய்தற்கு எல்லாம் அவர் பொறுப்பு எண்டால் புலிகள் செயதற்கு எல்லாம் தலைவர் பொறுப்பா ?
 

அவர்கள் செய்தார்கள் இவரும் செய்தார் என்றால் இவருக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?. எந்த இடத்திலும் புலிகள் 2 வயது பிள்ளையை இப்படி கொல்லவில்லை.

புலிகளின் தலைவரும் உங்கட அண்ணரை மாதிரி பெட்டையின் பாஸ்போர்ட்டில் பிரித்தானியாவிற்கு வந்திருக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அவர்கள் செய்தார்கள் இவரும் செய்தார் என்றால் இவருக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?. எந்த இடத்திலும் புலிகள் 2 வயது பிள்ளையை இப்படி கொல்லவில்லை.

புலிகளின் தலைவரும் உங்கட அண்ணரை மாதிரி பெட்டையின் பாஸ்போர்ட்டில் பிரித்தானியாவிற்கு வந்திருக்க வேண்டுமா?

 

நன்றி ...வணக்கம் மீரா :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.