Jump to content

Recommended Posts

Posted

ரத்த மகுடம்-118

‘‘மன்னா... ஒரு நிமிடம்...’’ சட்டென விக்கிரமாதித்தரின் கரங்களில் இருந்த தன் கச்சையை சிவகாமி வாங்கினாள்.‘‘ஏன் சிவகாமி..? பார்க்க வேண்டும் என்றுதானே கொடுத்தாய்..?’’ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் புன்னகைத்தன.‘‘அது...’’ சங்கடத்துடன் நெளிந்தவள் கணத்தில் சுதாரித்தாள். ‘‘நானே உயர்த்திப் பிடித்துக் காட்டுகிறேன் மன்னா... அப்பொழுதுதான் நீங்கள் மட்டுமல்ல... குருநாதரும் இளவரசரும் கூட அதைப் பார்க்க முடியும்...’’விக்கிரமாதித்தர் வாய்விட்டுச் சிரித்தார்.

நாசிகள் அதிர, கன்னங்கள் சிவக்க, மன்னரிடம் இருந்து பெற்ற கச்சையை கையில் ஏந்தியபடி அறையின் கோடிக்கு சிவகாமி வந்தாள். தாழ்களை நீக்கி கதவைத் திறந்தாள்.சூரிய வெளிச்சம் அறைக்குள் பாய்ந்தது.தன் கரத்தில் இருந்த கச்சையை இருபக்கமும் ஏந்தி உயர்த்தி கதிரவனின் கதிர்கள் அதன் மீது விழும்படி பிடித்தாள். ‘‘குருநாதரே... இளவரசே... நன்றாகப் பாருங்கள்... தாங்கள் இருவரும் இதைக் காண வேண்டும் என்றுதான் உங்களிடம் கொடுத்தேன்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும், விநயாதித்தனும் அவளுக்குப் பின்னால் வந்து நின்றார்கள். சூரிய ஒளியில் தகதகத்த சிவகாமியின் கச்சையைப் பார்த்தார்கள்.

மெல்லிய சிவப்பு நிற பருத்தி நூலினால் நெய்யப்பட்ட அந்தக் கச்சையில் குறுக்கும் நெடுக்குமாக... மேலும் கீழுமாக கோடுகள் தென்பட்டன. கோடுகள் ஒன்றின் மீது மற்றொன்று பிணைந்த இடங்களில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன.‘‘இவை...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் இழுத்தார்.
‘‘கோடுகள்...’’ சிவகாமி சட்டென பதில் அளித்தாள்.‘‘அதுதான் பார்த்தாலே தெரிகிறதே...’’ விநயாதித்தன் எரிந்து விழுந்தான்.

சிவகாமி தன் இமைகளை மூடித் திறந்தாள். ‘‘இளவரசே... உங்கள் கோபம் சரியானது... நியாயமானது. மதுரையில் நான் நடந்து கொண்ட விதத்தை நீங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது... அதனால்தான் நான் எது சொன்னாலும் உங்களுக்கு அது தவறாகவே தெரிகிறது... அதுவேதான் இப்பொழுது எதிரொலிக்கவும் செய்கிறது.

உங்கள் பணிப்பெண்ணாக தங்களை நான் புரிந்துகொண்டுள்ளதைப் போலவே, ஓர் இளவரசனாக, ஒற்றர் படைத்தலைவியான என்னையும் என் செய்கைகளையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன்...’’‘‘விநயாதித்தன் அதை ஏற்றுக்கொண்டான் சிவகாமி...’’ விக்கிரமாதித்தர் நின்ற இடத்தில் இருந்தே குரல் கொடுத்தார். ‘‘அந்த கோடுகளுக்கு விளக்கம் சொல்...’’‘‘மன்னா... தங்களுக்குத்தான் அதன் அர்த்தம் தெரியுமே..?’’‘‘எங்கள் மூவருக்குமே கோடுகளின் பொருள் தெரியும். பரவாயில்லை... உன் வாயால் அதைச் சொல்...’’ சாளுக்கிய மன்னர் கட்டளையிட்டார்.

‘‘உத்தரவு மன்னா...’’ அறைக்குள் நுழைந்த சிவகாமி கச்சையை தன் வலது கரத்தில் சுருட்டினாள். ‘‘இந்தக் கச்சையில் இருக்கும் கோடுகள் போர் வியூகத்தைக் குறிப்பவை. அதுவும் அசுரப் போர் வியூகம். இந்த வியூகத்தை அமைத்தவர் நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதி!’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அதிர்ந்தார்கள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘பரஞ்சோதி அமைத்ததா..?’’ கேட்ட சாளுக்கிய போர் அமைச்சர், சிவகாமியிடம் இருந்து கச்சையை வாங்கி அறைக்குள் பாய்ந்த சூரிய ஒளியில் மீண்டும் அதைப் பார்த்தார்.‘‘ஆம் குருநாதரே...’’ சிவகாமி நிதானமாக பதில் சொன்னாள். ‘‘இந்த வியூகப்படிதானே வாதாபியில் பரஞ்சோதி போர் புரிந்தான்...’’ விநயாதித்தன் படபடத்தான். ‘‘அதே வியூகப்படிதான் இம்முறையும் பல்லவப் படைகள் நம்மை எதிர்கொள்ளப் போகிறதா..?’’‘‘இல்லை இளவரசே...’’ என்ற சிவகாமி, ராமபுண்ய வல்லபர் ஆராய்ந்துகொண்டிருந்த தனது கச்சையைச் சுட்டிக் காட்டினாள். ‘‘இதிலுள்ள அசுர வியூகத்தை பரஞ்சோதி அப்பொழுது பயன்படுத்தவில்லை...’’

‘‘புரியவில்லை... சற்று விளக்கமாகச் சொல்...’’ விநயாதித்தனின் கண்கள் சுருங்கின.‘‘இளவரசே... வாதாபியை அழிக்க பல்லவப் படைகள் புறப்பட்டபோது பரஞ்சோதியின் கைவசம் மூன்று அசுர வியூகங்கள் இருந்தன. மூன்றுமே அவரால் தயாரிக்கப்பட்டவை. சாளுக்கியப் படைகளின் போர்த் திறத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டவை. அந்த மூன்று அசுரப் போர் வியூகங்களில் ஒன்றைத்தான் நரசிம்மவர்ம பல்லவர் தேர்வு செய்தார். மற்ற இரண்டையும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த இரண்டில் ஒன்றுதான் இது...’’சிவகாமி இப்படிச் சொன்னதுமே விநயாதித்தன் பாய்ந்து ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் இருந்து கச்சையைப் பிடுங்கினான். தன் கண்களுக்கு அருகே அதைக் கொண்டு வந்து ஆராய்ந்தான்.

‘‘ஒரு பெண் அணிந்த கச்சையை எதற்காக நான் பார்க்க வேண்டும் என்று சீறினாயே விநயாதித்தா... இப்பொழுது நீயே அதை உன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்து ஆராய்கிறாயே..!’’ விக்கிரமாதித்தர் நகைத்தார்.‘‘மன்னா...’’ ‘‘வாழ்க்கையில் பதற்றமும் படபடப்பும் கூடாது விநயாதித்தா... அதுவும் நாட்டை ஆளப் போகும் இளவரசன் எல்லா தருணங்களிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும்... சிவகாமி யார்..? நம்மைச் சேர்ந்தவள். நமது போர் அமைச்சரால் உருவாக்கப்பட்ட ஆயுதம்.

நம் நலனுக்காக தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்திருக்கிறாள். அப்படிப்பட்டவளின் நடவடிக்கைகள் சமயங்களில் நமக்கு எதிரானதுபோல் தெரியும். ஆனால், அவை எல்லாம் நடிப்பு. நம் இலக்கை நோக்கிப் பயணப்பட இப்படி அவள் நடந்துகொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும்... எல்லோரையும் சந்தேகிக்க வேண்டும்தான்... அதேநேரம் சந்தேகமே தீர்ப்பாக எழுதப்படக் கூடாது. இக்கரையில் இருந்து அக்கரையைக் காண்பது போலவே அக்கரையில் நின்றபடியும் இக்கரையைப் பார்க்க வேண்டும்...’’
விநயாதித்தன் தலைகுனிந்தான்.

விக்கிரமாதித்தர் அவனை நெருங்கி அணைத்தார். தட்டிக் கொடுத்தார்.‘‘இந்த விஷயம் உனக்கெப்படித் தெரியும் சிவகாமி..?’’ யோசனையில் இருந்து மீண்ட ராமபுண்ய வல்லபர் சட்டெனக் கேட்டார்.‘‘எனக்குத் தெரியாது குருநாதரே...’’‘‘அப்படியானால்..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் சுருங்கின.‘‘நான்தான் சொன்னேன் போர் அமைச்சரே...’’ விக்கிரமாதித்தன் முற்றுப்புள்ளி வைத்தான். ‘‘பரஞ்சோதியை எதிர்கொண்ட நமது சாளுக்கிய படைத்தளபதி இறக்கும் தருவாயில் இந்த ரகசியத்தை என்னிடம் தெரிவித்தார். அப்பொழுது முதல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மற்ற இரு அசுரப் போர் வியூகங்களைத் தேடி வருகிறேன்...’’‘‘எதற்காக மன்னா..?’’
 

‘‘பழிவாங்கத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... எந்த அசுரப் போர் வியூகத்தைக் கையாண்டு சாளுக்கிய தலைநகரை பல்லவ சேனாதிபதி கொளுத்தினானோ... அதேபோன்ற ஓர் அசுரப் போர் வியூகத்தை... அதுவும் அவனாலேயே உருவாக்கப்பட்ட இன்னொரு அசுரப் போர் வியூகத்தை நாம் பயன்படுத்தி... நம்மை அழித்த அதே பல்லவப் படைகளை நாம் சிதறடித்து நசுக்க வேண்டும்...
 
அப்பொழுதுதான் என் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்...’’‘‘எல்லாம் சரி மன்னா... ஆனால்...’’ விநயாதித்தன் கரங்களில் இருந்த சிவகாமியின் கச்சையை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பிடுங்கினார். ‘‘இது அசுரப் போர் வியூகமா..?’’‘‘அதிலென்ன சந்தேகம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... போர் அமைச்சரான நீங்கள் இப்படியொரு சந்தேகத்தைக் கிளப்பலாமா..?’’

‘‘இல்லை மன்னா... இது அசுரப் போர் வியூகம் அல்ல! போலி! முக்கியமாக இது பரஞ்சோதி தயாரித்தது அல்ல...’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.

இதைக் கேட்டு அங்கிருந்த மூவரும் அதிர்ந்தனர்.‘‘என்ன... என்ன... போலியா... இது போலியா..?’’ சிவகாமியின் குரல் நடுங்கியது. அறையை விட்டு ஓட முயற்சித்தாள்.ஒரு கரம் பாய்ந்து அவளைப் பிடித்தது. ‘‘ஆம்... உன்னால் தயாரிக்கப்பட்ட போலியேதான்... பல்லவ ஒற்றர் படைத்தலைவியே... உண்மையைச் சொல்... பரஞ்சோதி தன் கைப்பட எழுதிய மற்ற இரு அசுரப் போர் வியூகங்கள் எங்கே..?’’ கேட்டவனை சிவகாமி பார்த்தாள்.சிவந்த நயனங்களுடன் கரிகாலன் அவள் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17311&id1=6&issue=20201004

  • Replies 171
  • Created
  • Last Reply
Posted

ரத்த மகுடம்-119

‘‘கரிகாலா... நிறுத்து...’’ சாளுக்கிய மன்னர் கர்ஜித்தார். ‘‘என் முன்னால் எனது ஒற்றர் படைத் தலைவியின் கழுத்தை நெரிக்கும் துணிச்சல் உனக்கு எங்கிருந்து வந்தது..?’’‘‘மன்னிக்க வேண்டும் மன்னா...’’ சிவகாமியின் கழுத்தி லிருந்து தன் கரங்களை கரிகாலன் எடுத்தான். ‘‘உங்கள் உத்தரவில்லாமல் இவளைக் கொல்ல முயன்றது பிழைதான்...’’‘‘பிழை என்றால்... தவறு இல்லை என்கிறாயா..?’’ சாளுக்கிய இளவரசனின் கண்கள் கூர்மையடைந்தன.
‘‘ஆம் இளவரசே!’’ பதற்றமின்றி கரிகாலன் பதில் அளித்தான்.

‘‘என்ன... இது உனக்குத் தவறாகப்படவில்லையா..?’’ விக்கிரமாதித்தர் நிதானத்தை வரவழைத்தபடி கேட்டார்.‘‘படவில்லை மன்னா... ஏனெனில் இது...’’ தன் கரங்களில் இருந்த கச்சையை உயர்த்தினான் கரிகாலன். ‘‘போலி...’’ ‘‘எந்த விதத்தில் இதைப் போலி என்கிறாய் கரிகாலா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் குறுக்கிட்டார்.‘‘போர் அமைச்சரான நீங்கள் இந்த வினாவைத் தொடுக்கலாமா..?’’ புருவத்தை உயர்த்தினான் கரிகாலன். ‘‘காலாட் படையும் காலாட் படையும் மோதுவதும்; புரவிப் படையை புரவிப் படை எதிர்கொள்வதும்தான் தர்மப்படி நடக்கும் போர் முறை.

இதற்கு மாறாக காலாட் படையை புரவிப் படையும்; புரவிப் படையை யானைப் படையும் எதிர்கொள்வது அதர்மப் போர்; அசுரப் போர். கொம்பு ஊதி அறிவித்தபிறகே போரைத் தொடங்க வேண்டும்... சூரிய அஸ்தமனத்துக்குப் பின்... குறிப்பாக இரவில் யுத்தம் செய்யக் கூடாது... என்ற நியாயங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு நள்ளிரவிலும் எதிர்த் தரப்பினர் மீது பேயாட்டம் ஆடுவதுதான் அசுரப் போர்.

நச்சு நீரில் ஊற வைத்த கற்களை எதிர்த் தரப்பினர் மீது வீசுவது... கந்தகக் குண்டுகளை பந்தத்தில் கொளுத்தி பகை நாட்டின் வீரர்கள் மீது வீசுவது... எதிரி நாட்டின் குடிநீரில் விஷத்தைக் கலப்பது... விவசாய நிலங்களை அழிப்பது... செயற்கையாக யானைகளுக்கு மதம் பிடிக்க வைத்து அவற்றை வேளாண் நிலங்களில் குதறவிட்டு எக்காலத்திலும் அந்தப் பிரதேசத்தில் பயிர் செய்ய முடியாதபடி நிலத்தை மலடாக்குவது... அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பது... காட்டு விலங்குகளையும் பறவைகளையும் எதிரிப் படைகள் மீது ஏவுவது... இவை எல்லாம்தான் அசுரப் போர் வகையில் சேரும்.

அசோகச் சக்கரவர்த்தி அப்படியொரு அசுரப் போரைத்தான் கலிங்கத்தின் மேல் தொடுத்தார். நரசிம்மவர்ம பல்லவர் வாதாபி மீது பாய்ந்ததும் அப்படித்தான். அப்படிப்பட்ட கொடூரமான போர் வியூகத்தை மூன்று விதங்களில் பரஞ்சோதி தீட்டினார். அதில் ஒன்று இதில் இருப்பதாக நினைக்கிறீர்களா..?’’ ‘‘இல்லை என்கிறாயா கரிகாலா..?’’ கண்களை விரித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘ஆம்... இதிலிருக்கும் கோடுகள் தவறான இடங்களைச் சுட்டிக் காட்டுகின்றன... தமிழக நிலப்பரப்புகளை நன்கு அறிந்த எவர் ஒருவரும் இது உண்மையைப் போல் தோற்றமளிக்கும் போலி என்பதைக் கண்டு கொள்வார்கள்...’’ விக்கிரமாதித்தர் திரும்பினார். ‘‘கரிகாலனின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறாய் சிவகாமி..?’’ தன் கழுத்தைத் தடவியபடி சுவாசத்தைச் சீராக்கிக்கொண்ட சிவகாமி நிமிர்ந்தாள். ‘‘அபாண்டமாக என் மீது சோழ இளவரசர் பழி சுமத்துகிறார் மன்னா... இதிலிருக்கும் வியூகம் பொய் என்றால்... பரஞ்சோதியே போலியாக இப்படியொரு அசுர வியூகத்தை அமைத்தார் என்றுதான் பொருள்!’’

‘‘உனது திருட்டுத்தனத்தை மறைக்க பரஞ்சோதி மீது பழியைப் போடுகிறாயா..?’’ கரிகாலன் ஆவேசத்துடன் கேட்டான்.
‘‘இந்த மிரட்டலை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள்... இன்னொரு முறை என் கழுத்தை நெரிக்க நீங்கள் முற்பட்டால்... மூட்டு வரை மட்டுமே உங்களுக்குக் கை இருக்கும்!’’ ‘‘வெட்டி விடுவாயா..?’’‘‘அறுத்து விடுவேன்!’’ சிவகாமியின் நயனங்கள் சிவந்தன.

‘‘ஏய்...’’ கரிகாலன் கோபத்துடன் அவளை நோக்கி நடந்தான்.விக்கிரமாதித்தர் அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தார். ‘‘இரண்டாவது முறையாக ஆணையிடுகிறேன்... இனியொரு முறை என் முன்னால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் வீழ்த்திக் கொள்ள முயன்றால்... விநயாதித்தா... உத்தரவுக்குக் காத்திராமல் இருவரின் சிரசையும் சீவி விடு...’’சாளுக்கிய இளவரசன் தன் வாளை உருவினான்.

‘‘மன்னா...’’ சிவகாமி தன் கோபத்தை அடக்கினாள். ‘‘சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன்...’’

உதட்டைக் கடித்தவள் சில கணங்களுக்குப் பின் நிமிர்ந்து தன்னைச் சுற்றி நிற்பவர்களை ஒரு பார்வை பார்த்தாள்.‘‘இது உறையூர் விருந்தினர் மாளிகை. அதாவது சோழ சிற்றரசுக்கு உட்பட்ட மாளிகை. இங்கு கரிகாலர் இருப்பார் என்று எனக்குத் தெரியும்.
 
தெரிந்தும் இங்கு நான் ஏன் உங்களைச் சந்திக்கவும் இந்த அசுரப் போர் வியூகத்தைக் கொடுக்கவும் வந்தேன்..? உண்மையாக இருப்பதால்தானே..? போலியாக நான் ஒன்றைத் தயாரித்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு இங்கு... அதுவும் கரிகாலர் இருக்கும் சமயத்தில் வந்திருப்பேனா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கரிகாலனின் பார்வையும் விக்கிரமாதித்தரின் கருவிழிகளும் சிவகாமியையே இமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தன.‘‘மன்னா... பயன்படுத்தப்படாத பரஞ்சோதி அமைத்த இரு அசுரப் போர் வியூகங்கள் குறித்த தகவல் உங்களுக்குக் கிடைத்ததும் அதைக் கைப்பற்ற நீங்கள் திட்டமிட்டீர்கள்.
 
இதற்கு சாளுக்கியர்களைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை. மாறாக உங்களை காஞ்சிக்கு வரவழைத்த... பல்லவ அரியணையில் நீங்கள் அமர காரணமாக இருந்த... உள்ளுக்குள் உங்கள் நலவிரும்பியும் வெளிப்பார்வைக்கு பல்லவ உபசேனாதிபதியுமான கரிகாலரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தீர்கள்.

உண்மையில் மிகப்பெரிய ராஜதந்திரம் இது. இந்த பாரத தேசத்திலேயே உங்கள் அளவுக்கு நுண்ணுணர்வு கொண்ட இன்னொரு மன்னரைப் பார்ப்பது அரிது. ஏனெனில் எந்த பல்லவ சேனாதிபதி சாளுக்கியர்களை அழிக்க அசுரப் போர் வியூகத்தை அமைத்தாரோ அதே வியூகத்தை அதே பல்லவ உபசேனாதிபதியைக் கொண்டே கைப்பற்றி பல்லவர்களை வேரோடு சாய்க்க காய்களை நகர்த்துகிறீர்கள்.
 
இந்தப் பணியில் அடியேன் வெறும் துரும்புதான். ஆனால், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல்... இதோ... நீங்கள் பல ஆண்டுகளாகப் பெறக் காத்திருந்த பரஞ்சோதி அமைத்த அசுரப் போர் வியூகத்தை லாவகமாகக் கைப்பற்றி வந்து உங்களிடம் கொடுத்திருக்கிறேன்...’’
 

நிறுத்திய சிவகாமி கணத்துக்கும் குறைவான நேரத்தில் இமைகளை மூடித் திறந்தாள். ‘‘மன்னா... பரஞ்சோதி அமைத்த மூன்று அசுரப் போர் வியூகங்களையும் பார்வையிட்டு அலசி ஆராய்ந்த நரசிம்மவர்ம பல்லவர், அதில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்தார். மற்ற இரண்டும் சீனத்தின் மெல்லிய பட்டில் வரையப்பட்டு காஞ்சி பொக்கிஷ அறையின் நிலவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாதாபியை எரித்து தீக்கிரையாக்கியதும் நரசிம்மவர்ம பல்லவர் செய்த முதல் காரியம்... பயன்படுத்தப்படாமல் இருந்த பரஞ்சோதி யின் மற்ற இரு அசுரப் போர் வியூகங்கள் வரையப்பட்ட சீனப் பட்டை எரித்துச் சாம்பலாக்கியதுதான்.ஆனால், பரஞ்சோதி அசுரப் போர் வியூகத்தைத் தீட்டும்போதே உடனிருந்து கவனித்த ஒரு வீரன் முழுமையாக அதை... பயன்படுத்தப்படாமல் இருந்த இரு அசுர வியூகங்களையும்... தன் உள்ளத்தில் செதுக்கிக் கொண்டான்.

பேராசைக் குணமிக்க அந்த வீரன், களவுக் குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு காஞ்சியின் பாதாளச் சிறையில் அடைக்கப்
பட்டான். ஆனாலும் போர்க் காலங்களில் பல்லவர்களுக்கு விசுவாசமாக அவன் இருந்ததால் காஞ்சியின் அறங்கூர் அவை, அவனுக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கவில்லை. மாறாக, நாடு கடத்தியது.

பல்லவ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த வீரன், நேராக பாண்டிய நாட்டுக்குச் சென்றான். அங்கும் களவையே மேற்கொண்டான். பிடிபட்டு மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். அச்சிறையிலேயே மரணமும் அடைந்தான்.ஆனால், உயிர் விடுவதற்கு முன் அந்த வீரன், பரஞ்சோதியின் பயன்படுத்தப்படாத இரு அசுரப் போர் வியூகங்களையும் தன் நினைவில் இருந்து தீட்டினான் என்ற நம்பத்தகுந்த தகவல் உங்களுக்குக் கிடைத்தது.

அந்த வியூகம் உங்களுக்குத் தேவை. எனவே அதை எடுத்து வரும்படி கரிகாலருக்கு கட்டளையிட்டீர்கள். சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியான என்னை, இவருக்கு... இந்த சோழ இளவரசருக்கு... துணையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டீர்கள்.

பாரத தேசத்திலுள்ள அனைத்து பாதாளச் சிறைகள் குறித்த விவரங்களும்... அதன் வரைபடங்களும் காஞ்சிக் கடிகையிலுள்ள நூலகத்தில் சுவடிக் கட்டுகளாக இருக்கின்றன.எனவே கரிகாலர் அந்த சுவடிக் கட்டுகளை கடிகையில் இருந்து எடுத்தார். முதலில் காஞ்சி பாதாளச் சிறைக்குச் சென்றார். அங்கு பரஞ்சோதியின் இரு அசுரப் போர் வியூகங்களும் இல்லை. எனவே மதுரைக்குப் பயணப்பட்டார். பாண்டிய இளவரசர் முன் நாடகமாடி என்னை மதுரை பாதாளச் சிறையில் அடைக்கும்படி செய்தார்.

அங்குதான் பரஞ்சோதி தீட்டிய இரு அசுரப் போர் வியூகங்களும் கிடைத்தன. பாதாளச் சிறையின் சுவரில் தன் கை நகத்தால் அந்த வீரன் செதுக்கி வைத்திருந்தான். அதை அப்படியே எனது கச்சைகளில் வரைந்து எடுத்து வந்திருக்கிறேன்.  ஒரு வியூகத்தை முன்பே உங்களுக்கு அனுப்பிவிட்டேன்... இரண்டாவது வியூகத்தை காபாலிகனிடம் இருந்து நீங்கள் கைப்பற்றி விட்டீர்கள்...’’நிறுத்திய சிவகாமி அனைவரது கண்களையும் நேருக்கு நேர் சந்தித்தாள்.

‘‘அப்படியானால்... இங்கு நீ கொண்டு வந்த இது..?’’ தன் கையில் இருந்த கச்சையை உயர்த்திக் காட்டிவிட்டு அங்கிருந்த நாற்காலியின் மீது அதை கரிகாலன் வைத்தான். ‘‘மூன்றாவது அசுரப் போர் வியூகம்! இதன்படிதான் நரசிம்மவர்ம பல்லவரின் படைகள் போரிட்டு வாதாபியை எரித்தன! பொறுங்கள்...

உடனே பின் எதற்காக சற்று நேரத்துக்கு முன் இந்த அறையை விட்டு வெளியேற முயற்சித்தாய் என்றுதானே கேட்க வருகிறீர்கள்..? அரும்பாடுபட்டு இதைக் கொண்டு வந்த என்னைத் திரும்பத் திரும்ப நீங்கள் சந்தேகப்பட்டு ‘போலி’ என்று சொல்லி குற்றவாளியாக்கினால்..? உங்கள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஓட முயன்றேன்... இதோ இப்பொழுதும்... வருகிறேன் மன்னா... பிறகு உங்களைச் சந்திக்கிறேன்...’’ சொல்லிவிட்டு விடுவிடுவென சிவகாமி வெளியேறினாள்.

‘‘சிவகாமி... நில்...’’ அழைத்தபடியே கரிகாலன் அவளைப் பின்தொடர்ந்தான்.விக்கிரமாதித்தரும் விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சிலையாக நின்றார்கள்.அடுத்த ஒரு நாழிகையில் கரிகாலனின் பரந்த மார்பில், கச்சையில்லாமல் தன் கொங்கைகளை அழுத்தியபடி சிவகாமி படுத்திருந்தாள்.
கரிகாலனின் கரங்களில் அவளது கச்சை இருந்தது.அவனது மார்பில் வளர்ந்த ரோமங்களைக் கடித்தபடி சிவகாமி முணுமுணுத்தாள்... ‘‘இதுதான் உண்மையான அசுரப் போர் வியூகம்!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17332&id1=6&issue=20201011

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

18 Oct 2020

ரத்த மகுடம்-120

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதுதானா..?’’ சிவகாமியின் செவியை தன் நாவினால் வருடியபடியே கரிகாலன் தன் கரங்களில் இருந்த கச்சையை முழுமையாக அலசினான்.
அதிர்ந்த தன் உடலுக்கு அடைக்கலம் தேடி அவனது பரந்த மார்பில் சிவகாமி மேலும் ஒன்றினாள். ‘‘ஆம்...’’ அவளது செவித் துவாரத்தினுள் ஊதினான். ‘‘மற்றொன்று..?’’ சிவகாமியின் மேனி சிலிர்த்தது. ‘‘அதுதான் கடந்த முறை உங்கள் கண்களை எனது கச்சையினால் மூடிக் காண்பித்தேனே...’’
‘‘எதை..?’’ கரிகாலனின் வதனத்தில் அப்பாவித்தனம் அளவுக்கு அதிகமாக வழிந்தது.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201023/23.jpg
தன் தலையை உயர்த்தி அவனது நாசியைக் கவ்வினாள். ‘‘அன்று காண்பித்தேனே... அதை...’’‘‘எதை..?’’ மறுபடியும் கரிகாலன் அதே வினாவைத் தொடுத்தான்.பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். ‘‘கச்சையில் வரையப்பட்டிருந்த அசுரப் போர் முறையை...’’
நந்தவனமே அதிரும்படி கரிகாலன் நகைத்தான்.சட்டென்று அவன் உதடுகளைத் தன் உதடுகளால் மூடினாள். ‘‘யாருக்காவது கேட்டுவிட்டால் ஆபத்து...’’
‘‘வாய்ப்பில்லை சிவகாமி...’’ அவளது கேசங்களை வருடினான்.

‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ காற்றுப்புகாத வண்ணம் அவன் தேகத்தோடு குழைந்தாள். ‘‘இந்த நந்தவனம் அவ்வளவு ரகசியமானதா..?’’
‘‘ஆம்... இது சோழ அரச குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரிந்த நந்தவனம்... இப்படியொரு பகுதி இருப்பது சோழ வீரர்களுக்குக் கூடத் தெரியாது...’’
கரிகாலன் இப்படிச் சொல்லி முடித்த மறுகணம் -‘‘மன்னிக்க வேண்டும் கரிகாலரே...’’ என்ற குரல் எழுந்தது.
தன் தலையை உயர்த்தி கரிகாலனைப் பார்த்தாள் சிவகாமி.நான்கு நயனங்களும் கணங்களுக்கும் குறைவான நேரம் உறவாடின.
‘‘இந்த இடம் அடியேனுக்கும் தெரியும்...’’ மீண்டும் அதே குரல்.கரிகாலனும் சிவகாமியும் நகைத்தார்கள்.

‘‘வரலாமா..?’’ குரல் கேட்டது.‘‘பொறு...’’ சொன்ன கரிகாலன் தன் கையில் இருந்த கச்சையை விரித்து இமைக்கும் பொழுதில் சிவகாமியின் மார்பை மூடினான். முதுகில் முடிச்சிட்டான். ‘‘கரடியே... வா...’’‘‘நல்லவேளையாக நாகரீகமான சொற்களால் திட்டிவிட்டீர்கள்... எங்கே தேவி உபாசனை தடைப்பட்ட கோபத்தில் சொற்களைக் கொட்டிவிடுவீர்களோ என்று பயந்தேன்...’’ நகைத்தபடியே வந்தாள் நங்கை.

‘‘அதெல்லாம் கடிகை பாலகனின் கல்யாண குணங்கள்! உன்னை ஆராதிக்கும்போது யார் குறுக்கே வந்தாலும் அநாகரீகமான சொற்களை அவனே உதிர்ப்பான்...’’ நாசி அதிர சிவகாமி சிரித்தாள்.நங்கையின் வதனம் சிவந்தது. சமாளித்தபடி இருவரின் அருகில் அமர்ந்தாள்.

‘‘வேளிர்களின் தலைவனை சிறைச்சாலையாக மாறியிருக்கும் சத்திரத்துக்கு அனுப்பிவிட்டாயா..?’’ கேட்டபடியே தன் இடுப்பில் இருந்து புத்தம் புதிதான சிவப்பு நிற கச்சை ஒன்றை எடுத்த கரிகாலன் மடமடவென்று அதில் அரக்கினால் கோடுகளை முன்னும் பின்னும்... மேலும் கீழுமாகத் தீட்டினான்.

சிவகாமி பிரமித்தாள். அவள் அணிந்திருந்த கச்சையில் இருக்கும் அசுரப் போர் வியூகத்தை அப்படியே பிரதி எடுத்துக் கொண்டிருந்தான்... எனில் பூரணமாக வெளிப்பட்ட தன் கொங்கைகளை அவன் காணவேயில்லை... வியூகத்தை மட்டுமே உள்வாங்கியிருக்கிறான்... அன்றைய தினம் போலவே...
சிவகாமிக்குப் பொங்கியது. தன்னையும் அறியாமல் அவனை ஒட்டியபடி அமர்ந்தாள்.

உள்ளுக்குள் நகைத்த நங்கை, வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இதே உணர்வை அவளும்தானே கடிகை பாலகனிடம் அனுபவிக்கிறாள்...
‘‘என்ன நங்கை... விடையளிக்காமல் மவுனமாகி விட்டாய்..?’’ தலையை உயர்த்திக் கேட்ட கரிகாலன், தன் கரத்தில் இருந்த கச்சையை அவளிடம் கொடுத்தான்.   

‘‘வார்த்தைகளற்று சிவகாமியுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்...’’ முத்துக்கள் கொட்டியது போல் கலகலத்த நங்கை, கரிகாலனிடம் இருந்து அந்தக் கச்சையைப் பெற்றுக் கொண்டாள். ‘‘புலவர் தண்டியின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்... வேளிர்களின் தலைவர் இப்பொழுது காபாலிகருடனும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரர் அனந்த வர்மருடனும் அச்சத்திரத்தில்தான் சிறைப்பட்டிருக்கிறார்...’’ ‘‘நல்லது... என்னை...’’‘‘நம்ப வேண்டாம் என புலவர் சொன்னதாக அவரிடம் தெரிவித்துவிட்டேன்... இந்த விவரங்களை என்னைக் காண நீங்கள் வந்த அன்றே தெரிவித்துவிட்டேன்...’’‘‘அதனால் என்ன... மறுமுறை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறொன்றுமில்லையே... எனது கட்டளையை நிறைவேற்றி விட்டாய்... நன்றி நங்கை...’’ கரிகாலன் எழுந்து நின்றான். ‘‘இப்பொழுது உன்னிடம் கொடுத்த கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி, பதினாறு இடங்களில் நெய்யக் கொடுத்து விடு...’’‘‘ஆகட்டும் கரிகாலரே...’’ நங்கையும் எழுந்து நின்றாள். ‘‘மொத்தம் இரு கச்சைகள்... முப்பத்திரண்டு துண்டுகள்... கணக்கு சரிதானே..?’’‘‘உன் கணக்கு எப்பொழுது தவறியிருக்கிறது..?’’ நங்கையை அணைத்து சிவகாமி முத்தமிட்டாள்.
 
‘‘நானொன்றும் கரிகாலர் அல்ல...’’ நங்கை சிணுங்கினாள்.‘‘தெரியும்... அதனால்தான் உன்னை அனுப்பிவிட்டு கரிகாலருக்கு உரியதை
அவருக்கு கொடுக்கப் போகிறேன்...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘இவளை எப்படிச் சமாளிக்கிறீர்கள் கரிகாலரே..?’’ நங்கை தன் நெற்றியில் அடித்துக் கொண்டாள். ‘‘முடியவில்லை நங்கை... அதனால்தான் சிவகாமியை வேறொரு இடத்துக்கு அனுப்பப் போகிறேன்...’’சுண்டிவிட்டது போல் நங்கையும் சிவகாமி யும் நிமிர்ந்தார்கள். ஒருசேர கரிகாலனை ஏறிட்டார்கள். இருவரின் வதனங்களிலும் இப்பொழுது குறும்புகள் கொப்பளிக்கவில்லை. கம்பீரமே பூத்திருந்தது.

கரிகாலன் இமைக்காமல் அவர்கள் இருவரையும் பார்த்தான்.‘‘வருகிறேன் நங்கை... சந்திப்போம்...’’ சட்டென விடைபெற்று நகர்ந்த சிவகாமி
நான்கடி எடுத்து வைத்ததும் நின்று கரிகாலனைத் திரும்பிப் பார்த்தாள். நயனங்களால் உரையாடினாள். அகன்றாள்.
‘‘சிவகாமி எங்கு செல்கிறாள்..?’’ ஆச்சர்யத்துடன் நங்கை கேட்டாள்.‘‘நான் அனுப்ப நினைத்த இடத்துக்கு...’’ கரிகாலன் நிதானமாக பதில் அளித்தான்.
‘‘எந்த இடம் என்று நீங்கள் சொல்லவில்லையே..?’’‘‘சிவகாமியிடம் சொன்னேனே...’’
‘‘எப்பொழுது..?’’

‘‘இப்பொழுதுதான்!’’
‘‘நானிருக்கும்போதா..?’’
‘‘ஆம்...’’
‘‘எனக்கு எதுவும் கேட்கவில்லையே..?’’
‘‘சிவகாமிக்கு கேட்டால் போறாதா..!’’
‘‘கரிகாலரே...’’
‘‘நங்கையே...’’

‘‘அங்கு சென்று என்ன செய்யப் போகிறாள்..?’’
‘‘அசுரப் போர் வியூகத்தை நிறைவேற்றப் போகிறாள்!’’
‘‘வியூகங்கள் என்னிடம் அல்லவா இருக்கின்றன..?’’
‘‘அவளல்லவா அவற்றைச் சுமந்து செல்கிறாள்!’’
‘‘கரிகாலரே...’’
‘‘நங்கையே...’’
‘‘விளையாடுகிறீர்களா..?’’
‘‘ஆம்...’’

‘‘புலவர் தண்டி அதை அனுமதிக்கவில்லை...’’
‘‘தெரியும்...’’
‘‘என்ன தெரியும்..?’’
‘‘அவர் உன்னிடம் இட்ட கட்டளை!’’
நங்கை கூர்மையுடன் கரிகாலனைப் பார்த்தாள். ‘‘தெரிந்துமா...’’

‘‘அறிந்தே சிவகாமியை அனுப்பியிருக்கிறேன்! என்னையும் சிவகாமியையும் பல்லவ இளவரசர் இருக்கும் இடத்துக்குச் செல்லும்படி புலவர் தண்டி கட்டளையிட்டிருக்கிறார் அல்லவா..?’’
‘‘ஆம்...’’
‘‘அப்படிச் சென்றால் பல்லவ இளவரசர் எங்கள் இருவரையும் கைது செய்ய மாட்டாரா?!’’
நங்கை அதிர்ந்தாள். ‘‘கரிகாலரே... பல்லவ இளவரசர் ஏன் உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்..?’’
‘‘தெரியாதது போல் கேட்கிறாயே நங்கை...’’ அருகில் வந்து அவளது தலைக் கேசத்தைத் தடவினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்ததே நான்தான் என்ற உண்மையை புலவர் தண்டி கண்டுபிடித்துவிட்டார் என்பதை அறியாமலா இப்பொழுது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்...’’

‘‘கரிகாலரே...’’
‘‘உன் வழியாக புலவரிடம் மட்டுமல்ல... சாளுக்கிய மன்னரிடமும் பரஞ்சோதி உருவாக்கிய... அதுவும் பயன்படுத்தப்படாத இரு அசுரப் போர் வியூகங்களின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறேன்... ம்ஹூம்... சிவகாமியையும் இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்... எனவே கொடுத்திருக்கிறோம் என்று சொல்வதே சரி... இரு தரப்பினரிடமும் கொடுத்திருக்கும் அசுரப் போர் வியூகங்களில் எந்த மாற்றத்தையும் நாங்கள் செய்யவில்லை... இப்பொழுது பல்லவர்கள் வசம் இருப்பதும் சாளுக்கியர்களின் கையில் கொடுத்திருப்பதும் சாட்சாத் பரஞ்சோதியால் உருவாக்கப்பட்ட உண்மையான அசுரப் போர் வியூகங்கள்தான்... இரு தரப்பினருக்கும் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கிறோம்... இவை எல்லாம் ராஜத் துரோகக் குற்றங்கள் அல்லவா..? எனக்கும் சிவகாமிக்கும் சிரச்சேதம்தானே இதற்கான ஒரே தண்டனை..?’’
‘‘கரிகாலரே...’’ நங்கை தழுதழுத்தாள்.

‘‘அரசியல் சதுரங்க ஆட்டத்தை மன்னர்களும் ராஜ தந்திரிகளும் மட்டுமல்ல... ஒற்றர்களும் உபசேனாதிபதிகளும் கூட ஆடுவார்கள்... காய்களை நகர்த்துவார்கள்... வெட்டுவதற்காக மட்டுமல்ல... வெட்டுப்படுவதற்காகவும்! அந்த வகையில் இப்பொழுது நான் வெட்டுப்படுவதற்காகவே ஒரு காயை நகர்த்தியிருக்கிறேன்! அதுவும் முக்கியமான ஒரு காயை! இதுதான் எனது ராஜ தந்திரம்! இதுதான் கரிகாலனின் ஆட்டம்! முடிந்தால் உனது ஆசானான புலவர் தண்டி யிடம் சொல்லி அந்தக் காயை வெட்டுப்படாமல் காப்பாற்றச் சொல்!’’ நிறுத்திய கரிகாலன் அலட்சியமாக நங்கையைப் பார்த்தான்.

‘‘ஏன் தெரியுமா..? வெட்டுப்படுவதற்காகவே நான் நகர்த்தியிருக்கும் காய் வேறு யாருமல்ல... சிவகாமிதான்! வெட்டுப்படத்தான்... வெட்டுப் பாறைக்குத்தான்... அவளை அனுப்பியிருக்கிறேன்! இதற்கான புள்ளியை மதுரையில் இட்டேன்... இந்நேரம் பாண்டிய மன்னரும் பாண்டிய இளவரசரும் அப்புள்ளியில் கோடு கிழித்திருப்பார்கள்! அது வலையாக மாறி விரைவில் காஞ்சியின் மீது விழும்!’’

‘‘மந்திராலோசனை முடிந்ததுமே என்னை வந்து சந்திப்பாய் என்று நினைத்தேன் ரணதீரா...’’ பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நிதானமாக ஏறிட்டார்.இரணதீரன் எதுவும் பேசவில்லை. தன் இடுப்பில் இருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து அரிகேசரி மாறவர்மரிடம் கொடுத்தான்.‘‘இப்பொழுது உனக்கு உண்மை புரிந்திருக்குமே..?’’ பாண்டிய மன்னரின் புருவங்கள் உயர்ந்தன.

இரணதீரன் நிமிர்ந்து தன் தந்தையை உற்றுப் பார்த்தான். ‘‘இது சிங்களர்களின் முத்திரை மோதிரம். இதை உங்களிடம் கொடுத்தது கரிகாலன். எங்கு..? மதுரை பாதாளச் சிறையில். யாரிடமிருந்து இதைக் கைப்பற்றியதாகச் சொன்னான்..? சிவகாமியிடம் இருந்து. சிவகாமி யார்..? அவள் பல்லவ இளவரசியா அல்லது சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியா என்ற சர்ச்சை இன்னமும் பல்லவ, சாளுக்கியர்களுக்கு மத்தியில் நிலவுகிறது! சரி... கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் என்ன உறவு மன்னா..?’’

‘‘காதலர்களாகவும் அவர்களைப் பார்த்திருக்கிறார்கள்... பகைவர்களாகவும் கண்டிருக்கிறார்கள்...’’‘‘அதாவது யாருக்குமே இதுவரை அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன உறவு நிலவுகிறது என்று தெரியாது... அப்படித்தானே மன்னா..?’’அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘ம்...’’‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது மன்னா?!’’
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 

 

ரத்த மகுடம் 121

 

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘அதுதானே ரணதீரா காலம்தோறும் எல்லா நிலப்பரப்புகளிலும் அரங்கேறி வருகிறது..?’’ சட்டென்று பதில் அளித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மன்.‘‘அடியேன், கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் இடையிலான உறவு முறை குறித்து வினவினேன் மன்னா...’’ பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘அதற்குத்தான் விடையளித்தேன் இளவரசே...’’ மன்னர் நகைத்தார்.
‘‘எப்படி... பிரபஞ்சம் தழுவியா..?’’
http://kungumam.co.in/kungumam_images/2020/20201030/20.jpg
‘‘பூரணத்திலிருந்து கிள்ளப்பட்ட துளியும் பூரணம்தானே..!’’‘‘அதுபோல்தான் என்கிறீர்களா..?’’‘‘எதுபோலவும்தான் என்கிறேன்!’’ நெருங்கி வந்து இரணதீரனை தோளோடு அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாய்... இதை வியந்தாய் என்றும் கொள்ளலாம். ஆனால், எல்லா காலங்களிலும் எல்லா தேசத்தின் நிலப்பரப்புகளையும் வடிவமைப்பவர்களும் உறவுமுறையை வகுத்துச் சொல்பவர்களும் வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்துக்கு வருபவர்கள்தான்... இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்...’’

‘‘நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள் மன்னா...’’ மரியாதையுடன் தன் கைகளைக் கட்டியபடி இரணதீரன் வார்த்தைகளை உதிர்த்தான்.
‘‘எல்லா காலங்களும் நிகழ்காலம்தான் ரணதீரா... கடந்த காலத்தைப் பற்றி எப்பொழுது பேசினாலும் அதை நிகழ்காலமாகவே மனிதன் கருதுகிறான்... போலவே எதிர்காலக் கனவுகளை விவரிக்கும்போதும் நிகழ்காலத்துடனேயே அதை இணைக்கிறான்...

எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நாடோடி களாக அலைய ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு சவுகரியமான இடத்தில் தங்க ஆரம்பித்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே ஒரு பரப்பில் வசிப்பவர்களுடன் இரண்டறக் கலப்பதும், மனிதனின் காலடி படாத நிலத்தை வசப்படுத்தி அங்கு வாழத் தொடங்குவதும்தான் மனிதனின் இயல்பு.  

சற்றே சிந்தித்துப் பார்... தமிழகத்துடன் யவனர்கள் வணிகம் செய்யத் தொடங்கியது எப்போது..? அறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் சங்க காலத்திலேயே இந்த வணிகப் போக்குவரத்து ஆரம்பித்து விட்டதல்லவா..? அப்படி இங்கு வந்த யவனர்களில் எத்தனை பேர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள்..? தமிழகத்திலிருந்து யவனத்துக்குச் சென்ற வணிகர்களில் எத்தனை பேர் அந்தந்த தேசங்களிலேயே தங்கிவிட்டார்கள்..? அவர்கள் எல்லாம் அந்தந்த தேசங்களுடன் இரண்டறக் கலந்துவிடவில்லையா..? அந்தந்த நாட்டின் வரைபடங்களை வரையறுப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் தங்கள் உழைப்பைச் செலுத்தவில்லையா..?

இதனால்தானே இம்மண்ணின் கவி ஒருவன் பல நூறாண்டுகளுக்கு முன்பேயே ‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்...’ என்றான்?! எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம் இது...’’நிறுத்திய தன் தந்தையை இமைக்காமல் பார்த்தான் இரணதீரன்.‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய் மகனே..?’’ அரிகேசரி மாறவர்மரின் குரலில் வாஞ்சை வழிந்தது.‘‘எந்த விதத்தில் கரிகாலன் உங்களைக் கவர்ந்தான் என்று யோசிக்கிறேன் தந்தையே...’’
‘‘பொறாமைப்படுகிறாயா..?’’
‘‘அது தவறு என்கிறீர்களா..?’’
‘‘எதிரியாகவே இருந்தாலும் சக வீரனை வியப்பதும் அவனுக்கு மரியாதை செலுத்துவதும் பண்பல்லவா..?’’

‘‘அந்தப் பண்பினால் நமது வீரத்தையும் மானத்தையும் மரியாதையையும் பறிகொடுக்கும் விதமாக நடந்து கொள்வது தவறல்லவா..?’’
‘‘நடந்து கொள்வதைப் பற்றிப் பேசுவதைவிட அப்படி நடந்து கொள்வதால் பெறும் பலனைக் குறித்து ஆராய்வது சரியல்லவா..?’’
‘‘பாண்டியர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்...’’

‘‘அதிகமாக எடை போடுவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறேன்...’’
‘‘ஆபத்துக்கு அஞ்சுபவன் நாட்டை ஆள முடியாது...’’
‘‘நாட்டை ஆள்பவன் தன் நிலப்பரப்பை ஒருபோதும் பறிகொடுக்கக் கூடாது...’’
‘‘பறிகொடுத்திருப்பவர்கள் பல்லவர்கள்... பாண்டியர்களல்ல...’’
‘‘பாண்டியர்களுக்கு அப்படியொரு நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை...’’
‘‘அளவுக்கு மீறி மிகைப்படுத்துகிறீர்கள்...’’

‘‘அளவுக்கு அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறேன்...’’
‘‘அதற்காக எப்பொழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?’’
‘‘தற்காப்பு நடவடிக்கையில் மட்டும் இப்பொழுது இறங்கினால் போதும் என்கிறேன்...’’
‘‘உங்கள் அகராதியில் தற்காப்புக்கான அர்த்தம் என்ன மன்னா..?’’

‘‘எல்லா இலக்கண நூல்களிலும் அதற்கான பொருள் ஒன்றுதான்... விழிப்புடன் இருப்பது...’’
‘‘நாம் விழித்திருக்கிறோமா..?’’‘‘உறக்கத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை ரணதீரா...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், சாளரத்தின் அருகில் சென்று மதுரை வீதிகளைப் பார்த்தார்.அவரே பேசட்டும் என கொந்தளிக்கும் மனதுடன் இரணதீரன் மவுனமாக நின்றான்.

சில கணங்களுக்குப் பின் அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகனைப் பார்த்தார். ‘‘நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கியப் போரில் பாண்டியர்களும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறாய்... அதன் வழியாக பாண்டியப் பரப்பை விஸ்தரிக்கலாம் என்பது உன் எண்ணம்... ஓர் இளவரசனின் கனவு இப்படித்தான் இருக்க வேண்டும்... ஆனால், எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும் வல்லமை கனவுக்கு இருப்பதால் எந்தவொரு மன்னனும் கனவு காணக் கூடாது ரணதீரா... அவன் பாதங்கள் பூமியிலேயே ஊன்றியிருக்க வேண்டும்...’’இரணதீரனின் உதடுகள் துடித்தன.

‘‘தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களை தெற்கே நாமும் வடக்கே பல்லவர்களும் வீழ்த்தினோம். தனித்தனியாக அதுவும் சுதந்திரமான ராஜ்ஜியங்கள் அமைத்தோம். இதன் வழியாக சங்க காலப் பேரரசு களில் ஒன்றான பாண்டிய வம்சம் மீண்டும் தலைநிமிர்ந்தது. ஆனால், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் இருந்த சோழர்கள் மட்டும் இப்பொழுது வரை தலைதூக்கவே இல்லை. சிற்றரசர்களா அல்லது குறுநில மன்னர்களா என்று இனம் காண முடியாத அளவுக்கு இன்று சுருங்கியிருக்கிறார்கள்.

காரணம், களப்பிரர்களுக்கு எதிராக பாண்டியர்களும் பல்லவர்களும் போரிட்டபோது சரியான நிலைப்பாட்டை சோழர்கள் எடுக்கவில்லை. வெற்றி பெறுபவர்களின் பக்கம் அவர்கள் இணையவில்லை. எனவேதான் இப்பொழுது அவர்களுக்கு இந்த நிலை.இதை மாற்ற இப்போதைய சோழக் குடிகள் முயற்சி எடுக்கிறார்கள். வெற்றி பெறுபவர்களின் பக்கம் நின்று சுதந்திரத்தை சுவாசிக்க நினைக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாகவே சோழ இளவரசனான கரிகாலன் காய்களை நகர்த்துகிறான். சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்தது கூட அவன்தான் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அவன் சாளுக்கிய உளவாளியா அல்லது பல்லவர்களின் உபசேனாதிபதியா என்ற குழப்பம் இரு தேசத்திலும் நிலவுகிறது.

இந்த ராஜதந்திரத்தை நான் ரசிக்கிறேன் ரணதீரா... அதற்குக் காரணம் கரிகாலன் என் மைத்துனரின் மகன் என்பதல்ல... அவன் சோழர்களின் வித்து என்பதால்! இந்த தமிழகத்தின் மைந்தன்தான் அவனும் என்பதால்! பாண்டியர்கள் போலவே சோழர்களுக்கும் சங்க காலம் தொட்டே வேர் இருப்பதால்!

இதனால்தான் அவன்மீது அன்பு அதிகரிக்கிறது. அதற்காக பாண்டிய அரியணையை அவனுக்குக் கொடுத்துவிட மாட்டேன்! இந்த அரியணை... இந்த பாண்டிய நாடு... உனக்குத்தான் சொந்தம். இதில் அமர உனக்கு மட்டுமே வீரம், தீரம் உட்பட சகல தகுதிகளும் இருக்கின்றன.அதேநேரம் சோழர்கள் தலைதூக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்... அது, நமக்கு எதிரியாக யார் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதன் ஒரு பகுதிதான்!
 

உன்னைப் போலவே எனக்கும் பல்லவர்களைப் பிடிக்காது. பல்லவர்களை வீழ்த்த வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனாலேயே பால்யத்தில் பல்லவர்கள் மீது நானும் போர் தொடுத்தேன். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நம் பாண்டிய வீரர்களை கணிசமான அளவுக்கு பறிகொடுத்ததுதான் மிச்சம்.
 
ஏனெனில் பல்லவர்கள் வலிமையாக இருக்கிறார்கள். ஆம். நாட்டைப் பறிகொடுத்த இந்த நேரத்திலும் பல்லவர்கள் அதே வலிமையுடன்தான் திகழ்கிறார்கள். இதையும் மிகைப்படுத்தி நான் சொல்வதாகக் கருதாதே! சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் காஞ்சியை போரிட்டுக் கைப்பற்றவில்லை என்பதை நினைவில் கொள்.


எனவே, முன்பு பாண்டிய சேனை சேதப்பட்டது போல் இப்பொழுதும்... சாளுக்கியர்களுடன் பல்லவர்கள் போரிடப் போகும் இந்த சமயத்தில் மூக்கை நுழைத்து... சேதமடைய வேண்டாம்... அமைதியாக இருங்கள்... என சூட்சுமமாக கரிகாலன் அறிவுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறான். இதோ இருக்கிறதே சிங்கள மோதிரம்... இது உணர்த்தும் செய்தி அதுதான்.

சிங்களவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருக்கிறது. வேறு எந்த தமிழ் மன்னருக்கும் இல்லாத தொப்புள் கொடி உறவு அது. சிங்களர்களின் ‘மகாவம்சம்’ இந்த ஜென்மாந்திர தொடர்பைத்தான் விளக்குகிறது.ஆனால், நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இது தலைகீழாக மாறியது. வாதாபியை எரித்தபின் தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த சிங்கள மன்னனான மானவர்மனை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தன் கப்பற்படையையே நரசிம்மவர்ம பல்லவன் அனுப்பினான்.

லட்சக்கணக்கான பல்லவ வீரர்கள் சிங்களத்துக்கு சென்று போரிட்டார்கள். விளைவு... பல்லவர்களிடம் அடைக்கலம் தேடி வந்த மானவர்மன் மீண்டும் சிங்கள அரியணையில் அமர்ந்தான்.இப்பொழுது சிங்கள அரியணையில் அமர்ந்திருப்பவன் மானவர்மனின் மகன். பல்லவர்கள் மீதான நன்றி அவனுக்குள்ளும் தளும்புகிறது.இந்த வரலாற்றைத்தான் கரிகாலன் இந்த முத்திரை மோதிரத்தின் வழியே சுட்டிக் காட்டுகிறான்.

அதாவது இப்பொழுது சிங்களமும் பல்லவர்களும் நட்பு நாடுகள்... எனவே, பல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்... அப்படி நீங்கள் செய்தால் தெற்கே சிங்களப் படை வந்து உங்களைத் தாக்கும். அதுமட்டுமல்ல... தென் தமிழகத்தில் பாண்டியர்களுக்கு எதிராக கலகங்கள் உருவாகக் காத்திருக்
கின்றன. அதை அடக்குங்கள்... உங்கள் அரியணையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்... என குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறான்...’’
பெருமூச்சுடன் நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நெருங்கி வந்து அவனது இரு தோள்களையும் பற்றினார்.
 

‘‘பல்லவ இளவரசனான ராஜசிம்மனுடன் ஒரு சீனன் சுற்றுகிறானே... அவன் யார்... எதற்காக தமிழகம் வந்திருக்கிறான்... என்று உனக்குத் தெரியுமா ரணதீரா..? ‘உறவுமுறையே தெரியாத கரிகாலனும் சிவகாமியும் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவுமுறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாயே...
 
தமிழக கடல்பரப்பின் எல்லையை சீனர்களோடு சேர்ந்து வகுக்க முற்படுகிறானே ராஜசிம்மன்... அது குறித்து என்ன நினைக்கிறாய்..? நிலமென்னும் நல்லாளை போலவே சமுத்திரம் என்னும் அன்னையும் பல்லவர்களை அரவணைக்கிறாளே ரணதீரா... இந்த நேரத்தில் அல்லவா மீன் எச்சரிக்கையுடன் நழுவ வேண்டும்! அப்போதுதானே வலையில் சிக்காமல் இருக்க முடியும்!’’ அதிர்ச்சியுடன் தன் தந்தையை ஏறிட்டான் இரணதீரன்!

 

(தொடரும்)  

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்த மகுடம்-122

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதையும் நான் மிகைப்படுத்திச் சொல்வதாக நினைக்காதே ரணதீரா! நம் வணிகர்கள் தெரிவித்த கருத்துகளைத்தான் மாலை கோர்ப்பது போல் கோர்த்துச் சொல்கிறேன்...’’ பாண்டிய இளவரசனின் கண்களை சில கணங்கள் உற்றுப் பார்த்துவிட்டு சாளரத்தின் வழியே தன் பார்வையைச் செலுத்தினார் பாண்டிய மன்னர்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201106/14.jpg
‘‘கடலுக்குப் பெயரில்லை... ஆனால், அந்தந்த தேசத்தில் இருக்கும் முக்கியமான துறைமுகங்கள் சார்ந்து அப்பக்கத்து கடலுக்கு ஒரு பெயர் உண்டு. இப்பெயரை அந்தந்த தேசத்தவர்கள் சூட்டினாலும் வந்து செல்லும் பிற தேசத்து வணிகர்களே சம்பந்தப்பட்ட கடலுக்கும் கரையில் இருக்கும் துறைமுகத்துக்கும் நிலையான பெயரை வழங்குகிறார்கள். வரலாற்றிலும் அதுவே பதிவாகிறது...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகன் கோச்சடையன் இரணதீரனை ஏறிட்டார்.

‘‘சரித்திரம் எழுதப்பட ஆரம்பித்த காலம் முதலே நம் பாண்டிய தேசத்தைச் சார்ந்த கொற்கைத் துறைமுகம் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. யவனர்களும், சோனர்களும், அராபியர்களும், சீனர்களும் கடாரத்தைச் சேர்ந்தவர்களும் நாள்தோறும் சாரி சாரியாக நம் துறைமுகத்துக்கு வருகிறார்கள்; முத்துக்களை வாங்கிக் கொண்டு கலங்களில் ஏறி தத்தம் நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

சொல்லப்போனால் பாண்டிய நாட்டின் வருவாயே கொற்கையை நம்பித்தான் இருக்கிறது. அதனால்தான் சங்க காலம் முதலே பாண்டிய இளவரசர்கள் கொற்கைக்கு அனுப்பப்படுகிறார்கள். தென் தமிழகத்தை ஆளும் பொறுப்பும் இளவரசர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் அனுபவமே பிற்காலத்தில் அவர்கள் பாண்டிய அரியணையில் அமரும்போது இந்த மண்ணை ஆட்சி செய்ய உதவுகிறது.

சங்க காலம் முதலே தொடரும் இந்த வழக்கம்... பழக்கம்... இன்றும் தொடர்கிறது. இத்தனைக்கும் நடுவில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம் பாண்டிய நாட்டை களப்பிரர்கள் ஆண்டார்கள். நம் மூதாதையரான கடுங்கோன் மன்னர் களப்பிரர்களுடன் போரிட்டு பாண்டிய நாட்டை மீட்டதும் மீண்டும் அந்த வழக்கமே தொடர்ந்தது... அதாவது இளவரசு பட்டம் சூட்டப்பட்டதும் பாண்டிய அரச குடும்பத்தினர் கொற்கைக்கு செல்லும் மரபு.
ஏன்... உனது அரண்மனை கூட கொற்கையில்தானே இருக்கிறது..? சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனும் சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் மதுரைக்கு விருந்தினர்களாக வந்ததை ஒட்டித்தானே மதுரைக்கே நீயும் வருகை தந்தாய்..?’’

இரணதீரன் இமைக்காமல் தன் தந்தையையே பார்த்தான். சகலரும் அறிந்த விஷயத்தை எதற்காக இவ்வளவு விரிவாக விளக்குகிறார் என்ற வினா அவனுக்கும் எழவே செய்தது. ஆனால், காரணமில்லாமல் பாண்டிய மன்னர் எதையும் பேசமாட்டார் என்பதால் காரணத்தை அறியும் பொருட்டு அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்தான்.

அதற்கேற்ப அரிகேசரி மாறவர்மரும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த காரணத்துக்கு வந்தார். ‘‘கொற்கை... முத்துக் குளிப்புக்கு பெயர் பெற்ற கொற்கை... நம் தேசத்தில் இருக்கிறது... பாண்டியர்களின் துறைமுகமாக கம்பீரமாக உலக மகுடத்தில் திகழ்கிறது... இன்று நேற்றல்ல... கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்றால்... மூத்த துறைமுகம் நம் கொற்கை... நம் பகுதியில் கிடைக்கும் முத்துக்களை வாங்குவதற்காகவே உலக அரச குடும்பத்தினர் தத்தம் நாடுகளில் மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூல் செய்கிறார்கள். அந்தளவுக்கு நம் முத்துக்களும் நம் கொற்கைத் துறைமுகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்குகிறது...

ஆனால், ரணதீரா... உலகின் முக்கியமான பெரும் துறைமுகங்களில் ஒன்றாக கொற்கையை எவரும் கருதுவதில்லை... ஏன் என்று எப்பொழுதாவது யோசித்தாயா..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மரின் வதனத்தில் சோகத்தின் ரேகைகள் படர்ந்தன. ‘‘கொற்கைக்கு நிகராக சங்ககாலத்தில் சோழர்களின் காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்று விளங்கியது. ஆனால், கடற்கோளால் அத்துறைமுகப் பட்டினம் அழிந்தது. கொற்கை அப்படியே கம்பீரத்துடன் இப்பொழுது வரை இருக்கிறது.

என்றாலும் பல்லவர்களின் எழுச்சிக்குப் பிறகு புகழ்பெற ஆரம்பித்த மல்லைத் துறைமுகம்தான் இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கியமான துறைமுகக்  கேந்திரம். இதைச் சொல்வது பாண்டியர்களான நாம் அல்ல... யவனர்கள், சீனர்கள், அராபியர்கள் போன்ற வெளிநாட்டவர்கள்.
காரணம், பூகோள ரீதியாக மல்லைத் துறைமுகமே அந்த நாடுகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தப் பக்கம் இருக்கும் கடாரம் உள்ளிட்ட தேசங்களுக்கும் மல்லையே மலர் மாலை சூட்டுகிறது.

கொற்கை..? சிங்களத்துடன் கூப்பிடும் தொலைவில் இருப்பதால் சிங்களத் துறைமுகங்களுக்கு தரும் புகழில் பாதியையே இந்த தேசங்கள் கொற்கைக்கு வழங்குகின்றன. அதேநேரம் கொற்கையின் முத்துக்களை மட்டும் பாய்ந்து வந்து வாங்குகின்றன.இதையெல்லாம் இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்று பார்க்கிறாயா..? மீன் தன்னைத் தற்காத்துக்கொண்டு நழுவவேண்டும் என்றுதான்.

ரணதீரா... அராபியர்கள் காலம் காலமாக வணிகப் பொருட்களைக் கைமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள். இதன் வழியாகவே கடல் பகுதிகளை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தேசத்தில்... அவர்களது பகுதிகளில் எப்பொருளும் விளைவதில்லை... எப்பொருளுக்கும் நம் கொற்கை முத்துக்கள் போல் அவர்கள் தனி உரிமை கொண்டாடுவதில்லை.

ஆனால், நம் கொற்கை முத்துக்களை மொத்தமாக அராபியர்களே கொள்முதல் செய்து அதை மற்ற நாடுகளுக்கு விற்கிறார்கள். ஒருவகையில் மற்ற தேசங்கள் இதை தங்களுக்கு சாதகமாகவே பார்க்கின்றன. ஏனெனில் கடல் பகுதிகளில் கொள்ளையர்கள் அதிகம். அவர்களுடன் போர் புரிய தங்கள் நாட்டு மரக்கலங்களுடன் வீரர்களை அனுப்ப வேண்டும்... அந்த வீரர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் அராபியர்களிடம் இருந்து விலை கொடுத்து பொருட்களை வாங்க மற்ற தேசங்களும் அந்நாட்டு வணிகர்களும் தயாராக இருக்கின்றனர்.

இதை அராபியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் பொருட்டே தங்கள் பிரதேசத்தில் மிகப்பெரிய வணிக சாத்தை ஜித்தாவில் அராபியர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் மெக்கா இருக்கிறது. மதீனாவுக்கு செல்ல ஜித்தாவைக் கடக்க வேண்டும்.

செங்கடலில் இருந்து மரக்கலங்களில் வரும் பொருட்கள் மட்டுமல்ல... வட பாரதத்தின் பகுதியில் இருந்து சீனம் வழியாக நிலவழியில் - பட்டுச் சாலையில் - கொண்டு செல்லப்படும் பொருட்களும் ஜித்தாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய வணிக சாத்துகளில்தான் மற்ற தேசத்து வணிகர்களுக்குக் கை மாறுகின்றன.

இப்படி கை மாற்றி விடுவதன் வழியாகவே அராபிய தேசம் சீரும் சிறப்புமாக வாழ்கிறது. அளவுக்கு மீறி கொழிக்கும் இந்த வருவாய், அவர்களை அதர்மத்தின் பக்கம் மெல்ல மெல்ல திருப்ப ஆரம்பித்திருக்கிறது...’’நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், மெல்ல நடந்து வந்து தன் மகனின் தோளில் கைவைத்தார். ‘‘ஆம் ரணதீரா... நம் வணிகர்களிடம் இருந்து கிடைத்திருக்கும் செய்திகள் இதைத்தான் உணர்த்துகின்றன. திபெத்தியர்களுடன் கூட்டணி வைத்து அராபியர்கள் கடல் பகுதிகளில் அராஜகம் புரியத் தொடங்கியிருக்கிறார்கள். வேறு நாட்டு வணிக மரக்கலங்கள் தங்கள் அனுமதியில்லாமல் கடலில் பயணிக்கவே கூடாது என்ற நிலையை சிருஷ்டித்திருக்கிறார்கள்.

இதனால் தமிழக வணிகர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அதே அளவுக்கு சீனர்களும் அல்லல்படுகிறார்கள். எப்படி நம் கொற்கை முத்துக்களுக்கு தனிச் சிறப்பு இருக்கிறதோ அப்படி சீனத்தில் உருவாகும் பட்டுக்கும் உலக நாடுகள் மத்தியில் தனிச் சிறப்பு உண்டு. சீனப் பட்டை வைத்துதான் சீனர்கள் செல்வம் கொழிக்கிறார்கள்.

இப்பொழுது திபெத்தியர்களும் அராபியர்களும் சேர்ந்து சீனத்தின் பட்டு ஆதிக்கத்துக்கும் வேட்டு வைக்க முற்படுகிறார்கள்.இதை முறியடிக்க சீனத்தின் தாங் வம்ச அரசன் பல்லவர்களின் உதவியை நாடியிருக்கிறான்... புரிகிறதா ரணதீரா! பாண்டியர்களான நம் உதவியை சீன மன்னன் நாடவில்லை... சிங்களத்திடம் உதவி கேட்கவில்லை... வட பாரத தேசங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, பல்லவர்களின் கூட்டணியை விரும்புகிறான்... இதன் வழியாக திபெத்திய - அராபியர்களின் கடல் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறான்.

இதன் காரணமாகவே தன் தளபதியை பல்லவ தேசத்துக்கு சீன மன்னன் அனுப்பியிருக்கிறான். அந்த சீன சேனாதிபதிதான் பல்லவ இளவல் ராஜசிம்மனுடனும் கரிகாலனுடனும் இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கிறான்.நம் ஒற்றர்கள் அந்த சீனனை... சீனத் தளபதியை... நம் மதுரை மாநகரத்தில் சில தினங்களாகப் பார்த்து வருகிறார்கள்; பின்தொடரவும் செய்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் எந்த நடவடிக்கையிலும் அவன் இறங்கவில்லை. என்றாலும் அந்த சீனன் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்.

எதார்த்தம் இதுதான் ரணதீரா. பாண்டியர்களான நாம் சுதந்திர அரசமைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் பேரரசாகவில்லை. பொறு... நடைபெறவிருக்கும் சாளுக்கிய - பல்லவப் போரில் யார் பக்கம் பாண்டியர்கள் நின்றாலும் அது நம் தேசத்துக்கு எந்த வகையிலும் பயனளிக்காது... பாண்டியர்களைப் பேரரசு நிலைக்கும் உயர்த்தாது.

பல்லவர்கள் தங்கள் நிலத்தை இன்று சாளுக்கியர்களிடம் பறிகொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிரந்தரமாக அல்ல. எதன் காரணமாகவோ வேண்டுமென்றே சாளுக்கியர்கள் வசம் தங்கள் தேசத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இப்பொழுது மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.
எதற்காக சாளுக்கியர்களிடம் காஞ்சியை ஒப்படைத்தார்கள்... இப்பொழுது ஏன் அதை மீட்கும் போரில் இறங்குகிறார்கள்... ஆரம்பத்திலேயே ஏன் சாளுக்கியப் படைகளைத் தடுத்து நிறுத்தவில்லை..?

விருட்சங்களாக வளரும் எந்தக் கேள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. காரணமில்லாமல் பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் இப்படிச் செய்யமாட்டார்... ஆதாயம் இல்லாமல் கரிகாலன் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் இறங்க மாட்டான். ஆனால், என்ன காரணம்... என்ன ஆதாயம்..? தெரியவில்லை. தெரியாமல் காலை விடுவது ஆபத்தில் முடியும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அமைதி காக்கச் சொல்கிறேன். இப்பொழுது நாம் நம் நிலப்பரப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் மட்டும் கவனம் செலுத்துவதே புத்திசாலித்தனம்...’’வாஞ்சையுடன் இரணதீரனின் கேசங்களை அரிகேசரி மாறவர்மர் தடவினார். ‘‘உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன் ரணதீரா! நிச்சயம் உன் காலத்தில் பாண்டிய நாடு மேலும் விரிவடையும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உனக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைக்காமல் அப்படியே பொத்திப் பொத்தி பாதுகாத்து வா. நம் சந்ததிகளிடமும் அதைக் கடத்து. பேரரசு நிலைக்கு பாண்டியர்கள் உயரவேண்டும் என்ற விதையை விதைத்துக்கொண்டே இரு. என்றேனும் ஒருநாள் அது நிறைவேறும்.

இப்பொழுது... மனதை அலைபாய விடாமல் கொற்கைக்குச் சென்று உன் இளவரசு பணிகளைத் தொடரு. அதேநேரம் பல்லவ - சாளுக்கிய நிலைகளை நோட்டமிட்டபடியே இரு. குறிப்பாக சோழர்களை... அதுவும் கரிகாலனின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிரு... இது பாண்டிய மன்னனின் கட்டளையல்ல... உனது தந்தையின் வேண்டுகோள்!’’புரிந்ததற்கு அறிகுறியாக கோச்சடையன் இரணதீரன் தலையசைத்தான். குனிந்து தன் தந்தையின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

அரிகேசரி மாறவர்மர் அவனை அள்ளி அணைத்தார். இரணதீரனின் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிட்டார்.
‘‘கொற்கைக்கு இன்றே புறப்படுகிறேன் தந்தையே...’’‘‘சென்று வா... பாண்டியர்கள் வெல்லும் காலம் தொலைவில் இல்லை...’’ பாண்டிய மன்னர் ஆசீர்வதித்தார்.இரணதீரன் வெளியேறினான்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலய மணி ஒலித்தது!
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’
‘‘இது மார்கழி மாதம்...’’
‘‘ம்...’’
‘‘இது பின்னிரவு நேரம்...’’
‘‘ம்...’’
‘‘குளத்து நீர் ஜில்லிட்டிருக்கிறது... ஆனால், உன் மேனி கொதிக்கிறது... என்ன காரணம்..?’’
‘‘நீங்கள்தான்... என் தேகத்தில் அலைபாயும் உங்கள் கரங்கள்தான்... நீரும் புகாத வண்ணம் என் உடலோடு இழையும் உங்கள் உடல்தான்...’’ என சிவகாமியால் எப்படிச் சொல்ல முடியும்..?மவுனமாக குளத்து நீரில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி நீந்தினாள்.

கரிகாலனும் அப்படித்தான் இருந்தான். ஆனால், நீருக்குள் மூழ்கியிருந்த அவன் உடல், அவளது தேகத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
எதிர்த்திட முற்பட்ட சிவகாமியின் உடல் ஒரு கட்டத்தில் குழைந்து குழைந்து சரணடைய ஆரம்பித்தது.ஆடைகள் விலகத் தொடங்க... இரு தேகங்களும் உரசி உரசி பற்றி எரியத் தொடங்கின.அதேநேரம் மதுரை தச்சர்கள் வீதிக்குள் சீனன் நுழைந்து கொண்டிருந்தான்!
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 

ரத்த மகுடம் - 123

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிவகாமி சட்டென நீருக்குள் மூழ்கினாள். புன்னகைத்த கரிகாலன், மறுகணம் தானும் மூழ்கினான்.நீருக்கு அடியில் இருவரது தேகங்களும் உராய்ந்தன. குழைந்தன. இழைந்தன. எரிந்தன.மற்ற சமயம் என்றால் நாழிகைக் கணக்கில் சிவகாமி தன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீருக்குள் அமிழ்ந்திருப்பாள். இப்பொழுது அவளால் அது இயலவில்லை. காரணம் அவளோடு ஒட்டி உறவாடிய கரிகாலன் சட்டென தன் கரங்களால் அவளை நீருக்குள் அணைத்து இறுக்கினான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201113/20.jpg
சுதாரித்து அவள் மீள்வதற்குள் அவளது முதுகில் இருந்த அவன் கரங்கள், கச்சையின் முடிச்சை நெகிழ்த்தின. சுதாரிப்பதற்குள் இடுப்பு முடிச்சை நெகிழ்த்தி, பின்னோக்கித் தள்ளின.சிவகாமியின் தேகமும் அதற்கு ஏற்ப ஈடுகொடுக்கத் தொடங்கியதும் அவளது புத்தி விழித்துக் கொண்டது. சட்டென தன் தலையை குளத்து நீரில் இருந்து உயர்த்தினாள். வாயைத் திறந்து சுவாசித்தவள் தன் கரங்களால் கரிகாலனைத் தள்ள முற்பட்டாள். ‘‘இது நேரமல்ல...’’ கொங்கைகள் விம்ம முணுமுணுத்தாள்.

‘‘இதுதான் நேரம்...’’ தன் தலையையும் குளத்துக்கு மேலே கொண்டு வந்த கரிகாலன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
தன் கண்களுக்கு நேராக தென்பட்ட கரிகாலனின் கருவிழிகளுக்குள் சிவகாமி ஊடுருவினாள். ‘‘இதுதான் நேரமா..?’’
‘‘ஆம்...’’ தடையற்று பதிலளித்த கரிகாலன், அணைத்திருந்த அவளது பரந்த முதுகைத் தடவினான்.‘‘இங்கு யாரும் வரமாட்டார்களா..?’’ நெளிந்த தன் உடலைக் கட்டுப்படுத்தாமல் வினவினாள்.‘‘மாட்டார்கள்...’’
‘‘நங்கை கூடவா..?’’‘‘புலவர் தண்டி உட்பட ஒருவரும் வரமாட்டார்கள்...’’

‘‘அதனால்தான்... அந்த தைரியத்தில்தான்...’’ மேற்கொண்டு வாக்கியத்தைத் தொடராமல் சிவகாமி நிறுத்தினாள்.‘‘ஆம்...’’ சொன்ன கரிகாலனின் கரங்கள் அவளது பின்னெழுச்சியை கெட்டியாகப் பிடித்தன. இடுப்பில் இருந்த அவள் ஆடையின் முடிச்சை அவிழ்த்து சற்றே கீழ்நோக்கி நகர்த்தின.கண்கள் தெறித்துவிடுவதுபோல் அவனைப் பார்த்த சிவகாமியின் நயனங்களில் அச்சத்தின் ரேகைகள் படரத் தொடங்கின.

‘‘வேண்டாம்...’’ என்று சொல்ல வாயைத் திறந்த அவள் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான். இருவரது உமிழ்நீர்களும் சங்கமிக்கத் தொடங்கியபோது தன் உதடுகளை அவளது செவியின் மடல் அருகே கரிகாலன் கொண்டு சென்றான்.
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’

அவள் நிலை அவனுக்குப் புரிந்தது. எனவே அவளது செவி மடலை தன் பற்களால் கடித்தான்.உதறிய அவளது தேகத்தில் இருந்து பிறந்த செய்தி, அவள் மயக்கத்தில் இருந்து விடுபடுவதை உணர்த்தியது. இதற்காகவே காத்திருந்ததுபோல் அவள் செவியில் முணுமுணுக்கத் தொடங்கினான். ‘‘சிவகாமி... நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது... அடுத்து நீ செல்ல வேண்டிய இடம் எது என்பதை அறிவாய் அல்லவா..?’’

சிவகாமியின் புத்தி விழித்துக் கொண்டது. குளத்துக்குள் சரசமாட கரிகாலன் முற்படவில்லை என்பதையும், எதையோ ரகசியமாக சொல்வதற்காகவே இப்படி தன்னுடன் இழைகிறான் என்பதையும், யார் தங்களை இந்தக் கோலத்தில் கண்டாலும் ஜலக்கிரீடை செய்வது தோன்றும் என்பதையும் புரிந்து கொண்டாள்.

எனவே அவனது இழுப்புக்கு ஏற்ப அவளும் செல்லத் தொடங்கினாள். ‘‘அறிவேன்...’’ நாடகத்தின் பாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடிக்கத் தொடங்கினாள். தன் நாவின் நுனியால் அவன் நாசியைத் தடவினாள். ‘‘இடம் மாறிவிட்டதா..?’’‘‘இல்லை...’’ சொன்னவன் அவள் நாவின் நுனியை கணத்துக்கும் குறைவான நேரம் தன் உதடுகளால் உறிந்துவிட்டு அவள் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தான். ‘‘பாதை நினைவில் இருக்கிறதல்லவா..?’’

‘‘இ...ரு...க்...கி...ற...து...’’ கொதிக்கத் தொடங்கிய உடல், தன் புத்தியை சிறைப் பிடிக்க முடியாதபடி பார்த்துக் கொள்ள அதிகம் மெனக்கெட்டாள்.
‘‘இருப்பதை உன் மனதில் கல்வெட்டாகப் பொறிக்கிறேன்...’’ அவள் மனம் இருந்த இடத்தில் தன் கரங்களை அழுத்தினான்.
சுண்டி விட்டதுபோல் அவள் உடல் உதறியது. அணைத்து அதை சாந்தப்படுத்தியவன், அவள் முதுகை நீவினான்.
மெல்ல மெல்ல அவள் உடல் சமநிலைக்கு வந்தது.

‘‘இப்போது நாம் மல்லைக் கடற்கரையில் இருக்கிறோம்...’’
‘‘இல்லை... இது உறையூருக்கு அருகில் இருக்கும் குளம்...’’

சொன்ன சிவகாமியின் நயனங்களை உற்றுப் பார்த்த கரிகாலனின் கண்களின் சிவப்பு ஏறியது. ‘‘புத்தியைச் சிதறவிடாதே...’’ பற்களைக் கடித்தவன், அவளை மேலும் இறுக்கியபடி தன் கரங்களை அவள் முதுகில் பரப்பினான். ‘‘மல்லைக் கடற்கரையில் ரவிவர்மனைச் சந்தித்தோம்... பிறகு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மரை... அவருடன் குகை ஒன்றுக்கு சென்றோம்...’’‘‘அங்கு சாளுக்கிய போர் அமைச்சர் ராம புண்ய வல்லபர் நம்மை வரவேற்றார்...’’ வாக்கியத்தை முடித்த சிவகாமியின் மனதுக்குள்
ஆரம்பகாலக் காட்சிகள் விரிந்தன.

கரிகாலன், தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். தன் போக்குக்கு அவள் வரத் தொடங்கிவிட்டது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ‘‘அங்கிருந்து தப்பி வனம் ஒன்றுக்குள் புகுந்தோம்... மரம் ஒன்றின் மீது அமர்ந்தோம்... உன் முதுகில் நான் சிலவற்றை எழுதினேன்...’’நிறுத்திய கரிகாலன் குளத்துக்குள் அவளை அணைத்தபடியே அவள் முதுகில் இப்பொழுதும் தன் ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல கோடு இழுக்கத் தொடங்கினான்.

அதற்கு ஏற்ப சிவகாமியின் குரல் ஒலித்தது. ‘‘இதுதான் தொண்டை மண்டலம்... வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ பிரமித்த கரிகாலன் தன் நக நுனியை அவள் பின்பக்க மேட்டின் அருகில் கொண்டு சென்றான்.

சிவகாமி சிரித்தாள். ‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென்சுபா.

இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வடகிழக்காகச்
செல்கிறது...’’ ‘‘பிரமாதம் சிவகாமி...’’ தன் உதடுகளால் அவளது அதரங்களை மூடி முத்தமிட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.

அவன் நகங்கள் அவள் பின்பக்கம் நகர்ந்தபடி இருக்க... சிவகாமி அதற்கு ஏற்ப சொற்களைச் சிந்தினாள். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு. ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.

‘‘பலே...’’ என்றபடியே தன் நகத்தை மேலும் கீழுமாக அவள் முதுகில் கீறினான்.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம்...’’ நிறுத்திய சிவகாமி, ‘‘கரத்தை முன்னோக்கிக் கொண்டு வராதீர்கள்!’’ நாசி அதிர சிரித்தவள், தொடர்ந்தாள். ‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் ஜவ்வாது குன்றுகள் இருக்கின்றன.

இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன. வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன...’’  ‘‘நன்றி சிவகாமி...’’ அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தினான்.

‘‘அன்று சொன்னதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறாய்... அந்தப் பாதையில்தான் நீ செல்ல வேண்டும்...’’  
நான்கு உதடுகளும் இணைந்தன!மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் இடுப்பில் பதினாறு துண்டுகளாக வெட்டப்பட்ட கச்சை ஒன்று இருந்தது!
 

(தொடரும்)   

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்த மகுடம்-124

பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் முகத்தில் புன்முறுவல் விரிந்தது. எதிர்பார்த்தது போலவே நான்கு பாண்டிய வீரர்கள் வீதியின் முனையில் காவலுக்கு நின்றிருந்தார்கள்.தயக்கமேதுமின்றி அவர்களை சீனன் நெருங்கினான். சற்று இடைவெளிவிட்டு மூன்று வீரர்கள் மரியாதையுடன் நிற்க... நடுவில் அலட்சியமாக நின்றிருந்த... பார்த்ததுமே தலைவன் போல் தென்பட்டவனின் அருகில் சென்று சீன பாணியில் வணங்கினான். ‘‘இது தச்சர்கள் வீதிதானே..?’’
http://kungumam.co.in/kungumam_images/2020/20201120/20.jpg
தலைவனின் முகத்தில் வியப்பு விரிந்தது. பிசிறில்லாமல் ஒரு சீனன் தமிழில் பேசுகிறானே... ‘‘ஆம்...’’ உதடுகளும் உச்சரித்தன. தலையும் அசைந்தன.
‘‘செல்லலாம் அல்லவா..?’’ பவ்யமாக சீனன் வினவினான்.‘‘செல்லக் கூடாது என நாங்கள் தடுக்கவில்லையே...’’ மீசை அதிர தலைவன் சிரித்தான். ‘‘செல்வதற்குத்தானே வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன..?’’

‘‘காவலுக்கு நிற்கிறீர்களே... ஒருவேளை செல்ல அனுமதியில்லையோ என்று நினைத்தேன்...’’ மீண்டும் தலைவனை வணங்கிய சீனன், வீதியில் நடக்கத் தொடங்கினான்.‘‘யாரைப் பார்க்க வேண்டும்..?’’
நின்று திரும்பி தலைவனை ஏறிட்டான் சீனன். ‘‘வீரபாண்டிய தச்சரை...’’
‘‘என்ன விஷயமாக..?’’

‘‘கடல் பயணத்தில் அராபியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள சில பொறிகளை புதிதாக உருவாக்கி கலத்தில் பதிக்க வேண்டும்...’’
காவலர் தலைவனின் கண்கள் இடுங்கின. ‘‘உங்கள் மரக் கலத்தை எங்கு நிறுத்தியிருக்கிறீர்கள்..?’’‘‘கொற்கையில்! அங்குள்ள துறைமுகக் காவலர்களுக்கு சின் மங் சின் என்றால் தெரியும்... அதுதான் எனது பெயர். மரக்கலத்தின் அடிப்பகுதியில் படிந்த பாசிகளை அங்கு அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். பழுதடைந்த மரப் பலகைகளை நீக்கிவிட்டு புதிய பலகைகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பணிகள் முடிய எப்படியும் ஒரு திங்களாகும். அதற்குள் வீரபாண்டிய தச்சரை சந்தித்து புதிய பொறிகளை வாங்கிச் செல்லலாம் என்று மதுரைக்கு வந்தேன்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கொற்கைக்கு ஆள் அனுப்பி நீங்கள் விசாரிக்கலாம்...’’

சீனனை ஏற இறங்கப் பார்த்த தலைவன், பதிலேதும் சொல்லவில்லை. மாறாக கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘‘கொற்கையில் தச்சர்களே இல்லையா..?’’
‘‘இருக்கிறார்கள்... ஆனால், தமிழகத்தில் இருக்கும் தச்சர்களில் யாருமே வீரபாண்டிய தச்சருக்கு ஈடாக மாட்டார்கள்...’’
‘‘... என்று யார் சொன்னது..?’’ வீரர் தலைவன் இடைவெட்டினான்.

‘‘எங்கள் மன்னர்!’’ கம்பீரமாக பதில் அளித்தான் சீனன்.‘‘சீன மன்னரா..?’’
‘‘ஆம்... தாங் வம்சத்து மன்னர்!’’தலைவனின் கண்கள் நகைத்தன. ‘‘வீரபாண்டிய தச்சரின் இல்லம் தெரியுமல்லவா..? இல்லையெனில் அடையாளம் காட்ட வீரன் ஒருவனை அனுப்புகிறேன்...’’

‘‘தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இடதுபுறம் ஏழாவதாக இருக்கும் இல்லம்தான் வீரபாண்டிய தச்சரின் வசிப்பிடம். இந்த நேரத்தில் என்னை வரச் சொன்னதே அவர்தான். தவிர...’’‘‘தவிர..?’’‘‘இதற்கு முன்பும் ஒருமுறை வந்திருக்கிறேன்...’’
‘‘எப்பொழுது..?’’

‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறந்தபோது!’’ சொன்ன சீனன், வீரர் தலைவனை பழையபடி வணங்கிவிட்டு வீர பாண்டிய தச்சரின் இல்லம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.எட்டு கண்கள் தன்னை சல்லடையிட்டு சலிப்பதை உணர்ந்தபோதும் சீனன் திரும்பவில்லை. அதே கம்பீர நடையுடன் இடதுபுறம் ஏழாவதாக இருந்த இல்லத்தை நெருங்கினான். வீட்டைச் சுற்றிலும் மூங்கில் படல் அமைக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஆள் நுழையும் அளவுக்கு வழியுமிருந்தது.

அதனுள் நுழைந்தவனை சின்னஞ் சிறிய நந்தவனம் வரவேற்றது. மலர்களின் மணத்தை ஆழ்ந்து நுகர்ந்தபடியே நடந்தவன், வாயிலை அடைந்தான். கதவைத் தட்டினான்.நான்காவது முறை தட்ட கையை ஓங்கியபோது கதவு திறந்தது.கண்களால் தன்னைப் பின்தொடரும்படி சைகை செய்த பணியாளன், உட்புறமாக நடந்தான். அவனைத் தொடர்ந்த சீனன், முதலிரண்டு அறைகளைக் கடந்து தாழ்வாரத்தை அடைந்ததும் அதிர்ந்தான்.
சீனனை வரவேற்க அங்கு காத்திருந்தவர் வீரபாண்டிய தச்சரல்ல.

சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்!சீனனை உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் கண்களால் ஆராய்ந்த விக்கிரமாதித்தர், தன் கரத்தை நீட்டினார். ‘‘கச்சையைக் கொடு...’’
‘‘...’’
புன்னகையுடன் தன் உதடுகளைத் திறந்து அந்தச் சொல்லைத் தனித்தனியாக சாளுக்கிய மன்னர் உச்சரித்தார்... ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’நங்கை இதை உச்சரித்ததுமே காஞ்சியில் இருந்த புலவர் தண்டியின் மாளிகைக் கதவுகள் அகலமாகத் திறந்தன.‘‘புலவர் பூஜை அறையில் தங்களுக்காக காத்திருக்கிறார்...’’ என்றபடி நங்கையை வணங்கினாள் பணிப்பெண்.

தலையசைத்த நங்கை பழக்கப்பட்ட பாதையில் நடந்து மாளிகையின் கொல்லைப் புறத்தை அடைந்தாள். சுமந்து வந்த மூங்கில் கூடையை இறக்கி வைத்துவிட்டு கிணற்றை அடைந்தவள் தண்ணீரை இறைத்து தன் முகம் கை கால்களைக் கழுவினாள். நங்கையின் மனம் முழுக்க ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ...’ என்ற சொல்லுக்கு இருந்த மகிமையைக் குறித்தே சுற்றிச் சுற்றி வந்தது.

செ-லி என்றால். நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம போத்தவர்மன். பல்லவ இளவரசரான ராஜசிம்மரை சீனர்கள் தங்கள் மொழியில் இப்படித்தான் அழைத்தார்கள். இந்த அழைப்பே பல்லவ ஒற்றர்களுக்கான அடையாளச் சொல்லாகவும் அமைந்துவிட்டது.

பரவசத்துடன் முந்தானையால் தன் முகத்தைத் துடைத்த நங்கை, தான் இறக்கி வைத்த மூங்கில் கூடையைத் திறந்தாள். பாரிஜாதமும் நந்தியாவட்டையும் தாமரைகளும் கூடை முழுக்க நிரம்பியிருந்தன.அவற்றைத் தனித்தனியாக பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த மூன்று பூஜைத் தட்டிலும் வைத்த நங்கை, தாமரை மலர்கள் இருந்த தட்டை மட்டும், தான் எடுத்துக் கொண்டாள்.

மற்ற இரண்டையும் இரு பணிப்பெண்கள் ஏந்த பூஜை அறைக்குள் நங்கை நுழைந்தாள்.சாம்பிராணி புகைக்கு நடுவே பஞ்சமுக விளக்கில் நெய் தீபம் எரிய... சுடரென ஒளிர்ந்தபடி மகா மேருவுக்கு புலவர் தண்டி சந்தன அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.கண்களால் பணிப்பெண்களுக்கு நங்கை ஜாடை காட்டினாள். ஓசை எழுப்பாமல் தாங்கள் சுமந்து வந்த தட்டை வைத்துவிட்டு பணிப்பெண்கள் பூஜை அறையைவிட்டு வெளியேறினார்கள்.

அபிஷேகம் முடிந்து அஸ்திரத்தால் மகாமேருவைத் துடைத்து புலவர் பொட்டிட்டார். மகாமேரு கம்பீரமாக அமரும் அளவுக்கு இருந்த சின்னஞ்சிறிய தங்க சிம்மாசனத்தின் மீது அதை பக்தியுடன் வைத்த புலவர் தண்டி, திரும்பிப் பார்க்காமல் தன் கையை நீட்டினார்.தாமரைப் பூக்கள் இருந்த பூஜைத் தட்டை எடுத்து பயபக்தியுடன் நங்கை கொடுத்தாள்.தாமரைப் பூக்களின் இதழ்களை பக்தியோடு விரித்த புலவர், அவற்றை ஒவ்வொன்றாக மகாமேருவைச் சுற்றிலும் வைத்தார்; அலங்கரித்தார்.

பின்னர் பாரிஜாதப்  பூக்களாலும் நந்தியாவட்டை மலர்களாலும் மகாமேருவுக்கு அர்ச்சனை செய்தார். தீபாராதனை காண்பித்து முடித்ததும் திரும்பி நங்கையைப் பார்த்து புன்னகைத்தார்.வணங்கிய நங்கை, தாம்பாளத் தட்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள். தட்டின் மீது கச்சை இருந்தது!
‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் சென்று விட்டார்களா..?’’ கேட்டபடியே தட்டில் இருந்து கச்சையை எடுத்தார் புலவர்.
பதில் சொல்லாமல் நங்கை தலையைக் குனிந்தாள்.

நங்கையை இமைக்காமல் பார்த்த புலவர் தண்டியின் கண்கள் சுருங்கின. ‘‘எதிர்பார்த்ததுதான். என் கட்டளையை அவர்கள் மதித்திருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்...’’ பூமி பிளந்து தன்னை விழுங்கிவிட வேண்டுமென்று அம்பாளிடம் பிரார்த்தனை செய்தாள் நங்கை.
‘‘தனிமையில் உன்னிடம் கரிகாலன் என்ன சொன்னான்..?’’புலவரை நிமிர்ந்து பார்த்த நங்கையின் கண்கள் கலங்கியிருந்தன.
‘‘வெட்டுப்படுவதற்காகவே, தான் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் காயை நகர்த்தியிருப்பதாக சொன்னானா..?’’
உதடுகள் துடிக்க ஆம் என நங்கை தலையசைத்தாள்.

‘‘சிவகாமி வெட்டுப்படப் போகிறாள்... அதற்காகவே கரிகாலன் அவளை அனுப்பியிருக்கிறான்...’’ முணுமுணுத்த புலவரின் பார்வை சட்டென தன் கையில் இருந்த கச்சையின் மீது படிந்தது. அதை உயர்த்தி விளக்கின் ஒளியில் பார்த்தார். முன்னும் பின்னு மாக வரையப்பட்டிருந்த கோடுகளைக் காணக் காண அவரது கண்கள் விரிந்தன.‘‘இந்தக் கச்சையை உன்னிடம் யார் கொடுத்தது..? கரிகாலனா சிவகாமியா..?’’ புலவரின் கண்கள் கூர்மையடைந்தன.‘‘கரிகாலர்...’’‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
‘‘கரிகாலருக்கு அருகில்...’’
‘‘இதில் இருக்கும் கோடுகள்..?’’

‘‘என் கண் முன்னால் கரிகாலர் தீட்டியது... புத்தம் புதிதான கச்சையில் அவர் தீட்டினார்...’’
‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
‘‘கரிகாலருக்கு அருகில்...’’புலவரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘அதாவது இந்தக் கச்சை சிவகாமி அணிந்திருந்தது அல்ல... சரியா..?’’
‘‘ஆம்... அவள் அணிந்திருந்ததை உங்களிடம் கொடுத்திருப்பேனா..? அந்த பாவ காரியத்தை நான் செய்திருப்பேனா..?’’
உற்சாகத்துடன் அவளை ஏறிட்டார். ‘‘நங்கை...’’
‘‘சொல்லுங்கள் புலவரே...’’

‘‘மதுரை பாதாளச் சிறைக்கு சிவகாமி ஏன் சென்றாள்..?’’
‘‘அசுரப் போர் வியூகத்தை பிரதி எடுக்க...’’
‘‘மொத்தம் எத்தனை அசுரப் போர் வியூகம்..?’’
‘‘இரண்டு...’’

‘‘இரண்டையும் தன் கச்சையில் பிரதி எடுத்தது சிவகாமிதானே..?’’
‘‘ஆம்...’’‘‘அதை தனித்தனியாக இரு கச்சைகளில் வரைந்து உன்னிடம் சேர்த்தது யார்..?’’
நங்கையின் புருவங்கள் விரிந்தன.

‘‘சொல் நங்கை...’’
‘‘க...ரி...கா...ல...ர்...’’
‘‘இதற்கு முன் கடிகை பாலகன் வழியாக உன்னிடம் வந்து சேர்ந்த கச்சை எங்கிருக்கிறது..?’’
‘‘அதை கரிகாலர் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்
களிடம் ஆளுக்கு ஒரு துண்டாகக் கொடுத்திருக்கிறார்...’’‘‘இந்தக் கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்களிடம் கொடுக்கும்படி சொன்னார்களா..?’’  ‘‘ஆம்... சிவகாமி அப்படிச் சொன்னாள்...’’‘‘இதேபோன்று இரு கச்சைகளை கரிகாலனும் சிவகாமியும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் கொடுத்திருக்கிறார்களா..?’’‘‘புலவரே...’’
‘‘அதிர்ச்சியடையாமல் பதில் சொல் நங்கை...’’

‘‘ஆம்...’’
‘‘இந்தத் தகவலை சிவகாமி இல்லாதபோது தனிமையில் உன்னிடம் கரிகாலன் சொன்னானா..?’’
‘‘ஆ...ம்...’’தாடியை நீவியபடி சில கணங்கள் மவுனமாக இருந்த புலவர், ஒரு முடிவுடன் தன் கரத்தில் இருந்த கச்சையை உயர்த்தினார். ஆராய்ந்தார்.
பின் நிதானமாக அந்தக் கச்சையை அருகில் இருந்த விளக்கில் காண்பித்தார்.கச்சையின் நுனியில் தீப் பிடித்தது.
 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 

ரத்த மகுடம்-125

பிரமாண்டமான சரித்திரத் தொடர்
 

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’ அழுத்தமாக உச்சரித்த சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தன் முன்னால் பிரமை பிடித்து நின்ற சீனனை உற்றுப் பார்த்தார். ‘‘நீ தேடி வந்தது வீரபாண்டிய தச்சரையா அல்லது பல்லவ இளவல் ராஜசிம்மனையா என்பது முக்கியமல்ல...

http://kungumam.co.in/kungumam_images/2020/20201127/21.jpg

அடையாளச் சொல்தான் பிரதானம்! அதை பிசிறில்லாமல் உச்சரிப்பவருக்கு கட்டுப்பட வேண்டியது உன் கடமை! உனது தாங் வம்சத்து சீன மன்னர் இதைச் சொல்லித்தானே உன்னை தமிழகத்துக்கு அனுப்பினார்..? பிறகென்ன தயக்கம்..?!’’அளவுக்கு அதிகமாக சீனனின் கண்கள் சுருங்கின.

 

‘‘தெள்ளத் தெளிவாக உச்சரித்துவிட்டேன்! கச்சையை எடு!’’ நிதானமாகச் சொன்னார் விக்கிரமாதித்தர்.சீனன் அசையவில்லை.சாளுக்கிய மன்னர் அவனைப் பொருட்படுத்தவும் இல்லை. அடி மேல் அடி எடுத்து வைத்து சீனனை நெருங்கினார். அவனது இடுப்பில் இருந்து கச்சையை எடுத்தார்.
 
இரு நுனிகளையும் தன் இரு கைகளிலும் பிடித்தார். அறையில் இருந்த அகல் விளக்கின் ஒளி வழியே அதை ஆராய்ந்தார். தலையசைத்தார். சீனனைப் பார்த்தார். தன் புருவத்தை உயர்த்தினார். கருவிழிகளால் நகைத்தார்.


அடுத்த கணம் கச்சையின் ஒரு நுனியை விளக்கில் காண்பித்தார்.கச்சை தீப்பிடித்து எரியத் தொடங்கியது!அதிர்ச்சியும் ஆச்சர்யமும் திகைப்புமாக... விவரிக்க இயலாத உணர்வுகளுடன் கச்சை எரிவதை நங்கை பார்த்துக் கொண்டிருந்தாள்; பார்த்தபடியே சிலையாக நின்றாள்.இதற்காகத்தானே சிவகாமி தன் உயிரையும் பணயம் வைத்தாள்... மதுரை பாதாளச் சிறையில் இருளில் அடைந்து கிடந்தாள்... இதற்காகத்தானே கரிகாலர்...

நங்கையின் நாசியும் உதடுகளும் துடித்தன. புகைமூட்டமாக கரிகாலனும் சிவகாமியும் மாறி மாறி அவள் மனக்கண்முன்னால் தோன்றினார்கள்; ஏதேதோ உரையாடினார்கள். ‘‘நங்கை...’’புலவர் தண்டியின் அழைப்பு அவளை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. ‘‘புலவரே...’’
‘‘இந்த சாம்பலைத் திரட்டி அந்த சிறிய வாழை இலையில் வை...’’வைத்தாள்.

‘‘அதை மடித்து நாரினால் லேசாகக் கட்டு...’’கட்டினாள்.‘‘எடுத்து இந்த வெள்ளித் தாம்பாளத் தட்டில் வை...’’வைத்தாள்.திருப்தியுடன் தலையசைத்த புலவர், மகாமேருவுக்கு அர்ச்சனை செய்திருந்த பாரிஜாத மலர்களையும் நந்தியாவட்டை பூக்களையும் கொஞ்சமாக எடுத்து அதே தட்டில் வைத்தார். நிமிர்ந்து நங்கையைப் பார்த்து கண்சிமிட்டினார். விக்கிரமாதித்தர் கனைத்ததும் பத்துக்கும் மேற்பட்ட தச்சர்கள் நுழைந்தார்கள்.

அவர்கள் தச்சர் வேடத்தில் இருக்கும் சாளுக்கிய வீரர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சீனனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
‘‘இதைத் திரட்டுங்கள்...’’ தன் காலடியில் இருந்த சாம்பலை சாளுக்கிய மன்னர் சுட்டிக் காட்டினார்.

திரட்டினார்கள்.‘‘இந்த சிறிய வாழையிலையில் சாம்பலைக் குவியுங்கள்...’’குவித்தார்கள்.‘‘இதை மடித்து நாரினால் லேசாகக் கட்டுங்கள்...’’
கட்டினார்கள்.திருப்தியுடன் தலையசைத்த விக்கிரமாதித்தர், நிமிர்ந்து சீனனைப் பார்த்து கண்சிமிட்டினார். ‘‘நங்கை... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’இமைக்காமல் புலவரைப் பார்த்தாள். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினாள். ‘‘ஆம் புலவரே... எதை
உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’

‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’
நங்கையின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’
‘‘அப்படியானால் உன் இடத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
‘‘ஆம் புலவரே... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’

‘‘அப்படியானால் அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து விடுகிறாயா..?’’ வெள்ளித் தாம்பாளத் தட்டை எடுத்து நங்கையிடம் கொடுத்தார். ‘‘அவசியம் அளிக்கிறேன் புலவரே...’’ சொன்ன நங்கை குனிந்து தாம்பாளத் தட்டில் இருந்த புஷ்பங்களையும் வாழையிலைப் பொட்டலத்தையும் எடுத்து தன் முந்தானையில் முடிச்சிட்டாள்.

‘‘வருகிறேன் புலவரே...’’ முழந்தாளிட்டு அவரை நமஸ்கரித்தவள், எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் காஞ்சி ஆதுரச் சாலைக்கு செல்...’’‘‘வீரனே... அடிவயிற்றில் உனக்கு வலிக்கிறதல்லவா..?’’ தச்சனின் வேடத்தில் இருந்தவனைப் பார்த்து விக்கிரமாதித்தர் அக்கறையுடன் கேட்டார்.

இமைக்காமல் மன்னரைப் பார்த்தான் அந்த வீரன். அவர் கண்கள் சொன்ன செய்தியை உள்வாங்கினான். ‘‘ஆம் மன்னா... எதை உண்டாலும் அது ஜீரணமாகாமல் வெளியில் வந்து விடுகிறது...’’‘‘அடடா... இதனால் மயக்கம் வருமே...’’வீரனின் முகம் தெளிந்தது. ‘‘சரியாகச் சொன்னீர்கள்... நடக்கும்போது கண்கள் இருளடைகின்றன...’’‘‘அப்படியானால் உன் இல்லத்துக்குச் செல்வதற்கு முன் ஆதுரச் சாலைக்குச் செல்வாய் அல்லவா..?’’
‘‘ஆம் மன்னா... தலைமை மருத்துவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன்...’’‘‘அப்படியானால்  அவரிடம் ‘நான் கொடுத்ததாக’ச் சொல்லி இந்த பிரசாதத்தை கொடுத்து  விடுகிறாயா..?’’ வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து அந்த வீரனிடம் கொடுத்தார் விக்கிரமாதித்தர்.  

‘‘அவசியம்  அளிக்கிறேன் மன்னா...’’ சொன்ன வீரன், மரியாதையுடன் அதைப் பெற்றுக் கொண்டு விக்கிரமாதித்தரை வணங்கினான்.
‘‘வருகிறேன் மன்னா...’’ ‘‘நடை தள்ளாடும்... அடிக்கடி பசியால் மயக்கம் வரும்... எச்சரிக்கையுடன் மதுரை ஆதுரச் சாலைக்கு செல்...’’
புலவர் தண்டியின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை நங்கை பூரணமாக உள்வாங்கினாள். புரிந்து கொண்டதற்கு
அறிகுறியாக தலையசைத்தாள்.

பூஜையறையை விட்டு வெளியே வந்தவள், நிதானமாக மாளிகையைவிட்டு வெளியே வந்தாள். சாலையில் கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டாள். அவ்வப்போது மயக்கம் வந்ததால் தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள். தள்ளாடினாள். நின்றாள். சமாளித்தாள். நடந்தாள்.
இப்படியே ஒரு நாழிகை நடந்து காஞ்சியின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தாள்.

நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைத்தையும் கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் நங்கை நுழைந்தாள். ஆசனத்தில் அமர்ந்திருந்த
தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தாள்.அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தாள்.

நங்கை என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாளோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும் என எண்ணினாளோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவளுக்குப் பின்புறமிருந்து உச்சரித்தார்கள்!‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய நங்கை, தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்த மனிதரைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தாள்.

சாளுக்கிய மன்னரின் சொற்களில் புதைந்திருந்த கட்டளையை அந்த வீரன் முழுமையாக உள்வாங்கினான். புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தான்.அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன், நிதானமாக வீரபாண்டிய தச்சரின் இல்லத்தை விட்டு வெளியே வந்தான். வீதியில்  கால் வைத்ததும் நடக்கவே சிரமப்பட்டான். அவ்வப்போது மயக்கம் வந்ததால்  தள்ளாடினான். நின்றான். சமாளித்தான். நடந்தான். தள்ளாடினான். நின்றான்.  சமாளித்தான். நடந்தான்.

இப்படியே ஒரு நாழிகை நடந்து மதுரையின் ஆதுரச் சாலைக்கு வந்து சேர்ந்தான். நோயாளிகளின் நாடியைப் பார்த்து பரிசோதித்தபடி அவர்களுக்கு பச்சிலையை மருத்துவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.அனைத்தையும்  கவனிக்காதது போல் தலைமை மருத்துவரின் அறைக்குள் அந்த வீரன் நுழைந்தான்.  ஆசனத்தில் அமர்ந்திருந்த தலைமை மருத்துவரைப் பார்த்து புன்னகைத்தான்.
 

அவரை நெருங்கி எதையோ சொல்வதற்காக வாயைத் திறந்தான்.அவன் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ... எந்த சொற்களை உச்சரிக்க வேண்டும்  என எண்ணினானோ... அதே சொல்லை... சொற்களை... யாரோ அவனுக்குப் பின்புறமிருந்து  உச்சரித்தார்கள்!
 

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’திகைப்புடன் திரும்பிய அந்த வீரன், தனக்குப் பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவனைக் கண்டதும் உறைந்தான்.
 

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே நங்கை!’’ கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதர், தன் வலது கையை நீட்டினார். ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ நங்கை தடுமாறினாள்.‘‘அடிவயிறு வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!
 
பசி மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதர், நங்கையை நெருங்கினார். ‘‘புலவர் தண்டியின் பூஜை பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கியவள், பிறகு தன் முந்தானையில் சுருட்டி வைத்திருந்த பூக்களை எடுத்து அந்த மனிதரிடம் கொடுத்தாள்.‘‘வாழையிலைப் பொட்டலம்..?’’ அந்த மனிதரின் கண்களில் இருந்து ஜ்வாலை வீசியது.  

 

உதட்டைக் கடித்தபடி அதையும் எடுத்துக் கொடுத்தாள்.பூக்களைத் தரையில் உதறிய அந்த மனிதர், வாழையிலைப் பொட்டலத்தை எடுத்து தன் நாசிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆழமாக முகர்ந்தார். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவர் நங்கையை நிமிர்ந்து பார்த்தார்.
 
‘‘கெட்டிக்காரன்தான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னான்... பல்லவ உபசேனாதிபதியும் பல்லவ இளவலின் ஆருயிர் நண்பனும் புலவர் தண்டியின் அணுக்க சீடனுமான கரிகாலன்!’’ கருவிழிகள் மின்ன நகைத்தார்.

அவர் சாளுக்கிய போர் அமைச்சரான ராம புண்ய வல்லபர்!
 

‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ! அடையாளச் சொல் சரிதானே வீரனே!’’  கண்களில் குரூரம் படர நகைத்த அந்த மனிதன், தன் வலது கையை நீட்டினான்.  ‘‘கொடு...’’‘‘எ...தை... நான்... நான்... சிகிச்சைக்காக வந்தேன்...’’ வீரன் தடுமாறினான்.‘‘அடிவயிறு  வலிப்பதற்காகவா..! எதை உண்டாலும் ஜீரணமாகாமல் இருப்பதற்காகவா..!
 
பசி  மயக்கத்தால் தடுமாறித் தடுமாறி நீ நடப்பதற்காகவா!’’ ஆதுரச் சாலையே இடிந்து  விழும் அளவுக்கு வாய்விட்டுச் சிரித்த அந்த மனிதன், அச்சத்துடன் நின்றிருந்த வீரனை நெருங்கினான். ‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் கொடுத்து அனுப்பிய பிரசாதத்தைக் கொடு!’’கணத்துக்கும் குறைவான நேரம் தயங்கிய அந்த வீரன், பிறகு இடுப்பிலிருந்து வாழையிலைப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தான்.

 

அதை வாங்கிய அந்த மனிதன் தன் நாசிக்கு  அருகில் கொண்டு சென்றான். ஆழமாக முகர்ந்தான். ‘‘சாம்பல் மணக்கிறது! எரிந்தது கச்சையல்லவா!’’ சொன்னவன் வீரனை உற்றுப் பார்த்தான்.  ‘‘கெட்டிக்காரிதான்... இந்தக் கணத்தில் வாழையிலைப் பொட்டலத்துடன் இங்கு நீ  வந்து நிற்பாய் என்று சரியாகவே கணித்துச் சொன்னாள்... சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியான சிவகாமி!’’ என்றபடி கருவிழிகள் மின்ன நகைத்தான்.
 
அவன் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன்!சிவகாமி நிமிர்ந்தாள். மலை உச்சியில் இருந்த கோட்டை நிலவொளியில் பளபளத்தது. தன் முன்னால் இருந்த கொடியை இழுத்தாள். பலமாக இருந்தது. சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கொடியைப் பிடித்தபடி ஏறத் தொடங்கினாள்!

 

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமையலைவிட்டுவிட்டு தொடர்களை வாசிக்க தொடங்கி விட்டீர்கள் போல் உள்ளது,😀

உங்கள் தோட்ட வேலைகள் எப்படி போகின்றது இப்ப

 வீட்டுபின் சிறிய பயன் தரு காட்டை உருவாக்கிவிட்டேன், இரண்டு வருடத்தில் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, உடையார் said:

சமையலைவிட்டுவிட்டு தொடர்களை வாசிக்க தொடங்கி விட்டீர்கள் போல் உள்ளது,😀

உங்கள் தோட்ட வேலைகள் எப்படி போகின்றது இப்ப

 வீட்டுபின் சிறிய பயன் தரு காட்டை உருவாக்கிவிட்டேன், இரண்டு வருடத்தில் தெரியும்

இது தொடர்ந்து வாசித்த தொடர். இடையில் நிறுத்திவிட்டதாக நினைத்தேன். அதுதான்தேடி எடுத்துக் போடுகிறேன். இப்ப இங்கு குளிர் காலம். அதனால் கோவா, பூசணி வெங்காயம் என்பன இருக்கின்றன. ஆனால் மற்றவை எதுவும் நட முடியாதே. இன்னும் நான்கு மாதங்கள் பொறுக்க வேண்டும். அதன்பின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

உங்கள் பயிர்களைப் படம் பிடித்துப் போடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது தொடர்ந்து வாசித்த தொடர். இடையில் நிறுத்திவிட்டதாக நினைத்தேன். அதுதான்தேடி எடுத்துக் போடுகிறேன். இப்ப இங்கு குளிர் காலம். அதனால் கோவா, பூசணி வெங்காயம் என்பன இருக்கின்றன. ஆனால் மற்றவை எதுவும் நட முடியாதே. இன்னும் நான்கு மாதங்கள் பொறுக்க வேண்டும். அதன்பின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

உங்கள் பயிர்களைப் படம் பிடித்துப் போடுங்கள்

உள்ளி போடுங்க அந்த மாதிரி வரும் உள்ளி ஒரு குளிர் விரும்பி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, பெருமாள் said:

உள்ளி போடுங்க அந்த மாதிரி வரும் உள்ளி ஒரு குளிர் விரும்பி .

கடந்த வருடம் போட்டோம் விளையவில்லை.பின் மார்ச்சில் நட்டதும் தண்டு மட்டும் பெரிதாக வந்தது. உள்ளி விளையவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்த மகுடம் 126 கண்டுபிடிக்கவே முடியவில்லை. யாராவது கண்டுபிடித்தால் பகிர்ந்துவிடுங்கள்.

 

ரத்த மகுடம்-127

பிரமாண்டமான சரித்திரத் தொடர்
 

‘‘என்ன...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் அதிர்ந்தார். ‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்தான் வெள்ளெருக்கு வளருமா..?’’

http://kungumam.co.in/kungumam_images/2020/20201211/23.jpgசாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். வாழையிலைப் பொட்டலத்தில் இருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து சாளுக்கிய போர் அமைச்சரின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார். ‘‘தேவ மூலிகை வளர்ந்த இடத்தைத் தோண்டினால் தங்கம், வைரம், வைடூரியங்கள், நவரத்தினங்கள் உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்துமோ கிடைக்கும்!’’

ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் உயர்ந்தன. அவர் வதனத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. குறுக்கும் நெடுக்குமாக காஞ்சி ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவருக்கான அறையில் நடந்தவர், சட்டென நின்றார். ‘‘நங்கை...’’சிலைக்கு உயிர் வந்ததுபோல் நங்கை நிமிர்ந்து சாளுக்கிய போர் அமைச்சரைப் பார்த்தாள்.

‘‘உனக்கு ஏதாவது புரிகிறதா..?’’ நங்கை அமைதியாக நின்றாள்.‘‘கச்சையை உன்னிடம் கொடுத்து புலவர் தண்டியிடம் ஒப்படைக்கச் சொன்னவள் சிவகாமி... சரிதானா? சரிதான்... கரிகாலன் அனைத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டான்!’’ சுண்டி விட்டதுபோல் நங்கையின் மூளை அதிர்ந்தது. விழித்துக் கொண்டாள். தன்னிடம் கச்சையை ஒப்படைத்தது கரிகாலர். ஆனால், சாளுக்கிய போர் அமைச்சரிடம் சிவகாமி என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால்...

‘‘உன் வழியாக வந்த கச்சையை புலவர் எரித்து சாம்பலாக்கி அதை காஞ்சி ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார்... எதற்காக..? தேவமூலிகையால் நெய்யப்பட்ட கச்சையா என்று பரிசோதிக்கவா..?’’யாருக்கும் தெரியாதபடி நங்கை உதட்டைக் கடித்தாள்.

 எச்சொல்லும் உதிராதபடி பார்த்துக் கொண்டாள்.‘‘கரிகாலனுக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியாதா..?’’ சாளுக்கிய போர் அமைச்சர் தன் கண்களை உருட்டினார். ‘‘புலவரிடம் இருந்து ‘ஒரு பிரசாதத்தை நீ... அதாவது நங்கை... கொண்டு வருவாய்... அதை சோதித்துப் பாருங்கள்...’ என்று மட்டுமே சொன்னான். இதை வைத்துப் பார்த்தால் கரிகாலனுக்கே எதுவும் தெரியாது என்பது புலனாகிறது... இல்லை... ஒரேயடியாக அப்படியொரு தீர்மானத்துக்கு வர முடியாது.

ஒருவேளை... ஆம்... அப்படித்தான் இருக்க வேண்டும்... புலவரிடம் இருந்து வரும் பிரசாதம் தேவ மூலிகை என்பதை கரிகாலன் அறிந்திருக்கிறான்... அதை சாளுக்கியர்களாகிய எங்களுக்கும் அறிவிக்கவே சோதித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறான்...’’தன் முகமெங்கும் படர்ந்த மகிழ்ச்சியை மறைக்க நங்கை தலைகுனிந்தாள். ‘‘சரி... நீ செல்லலாம்...’’ ராமபுண்ய வல்லபர் கட்டளையிட்டார்.

நங்கை நிமிர்ந்தாள்.
‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய்..? உன்னை ஏன் சிறை செய்யவில்லை என்றா..? அவசியமானது வந்து சேர்ந்துவிட்டது...’’ கண்களால் சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் ஏந்தியிருந்த வாழையிலைப் பொட்டலத்தைக் காண்பித்தார். ‘‘இதற்கு மேல் உன்னை சிறை வைத்து பராமரிப்பதால் சாளுக்கியர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. செலவுதான். எனவே...’’ கைகளை உயர்த்தி அறையின் வாயிலைக் காண்பித்தார்.நங்கை மவுனமாக காஞ்சி தலைமை மருத்துவரின் அறையை விட்டு வெளியேறினாள்.

‘‘போர் அமைச்சரே...’’ அதுவரை அமைதியாக இருந்த விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் தன் வாயைத் திறந்தார். ‘‘எதற்காக நீங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொன்னீர்கள்..? குறிப்பாக கரிகாலன் உங்களுக்கு செய்தி அறிவித்த விஷயத்தை..?’’

‘‘காரணமாகத்தான் மருத்துவரே...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் நகைத்தார். ‘‘நிற்கும் மானை விட ஓடும் மானைத் துரத்தி வேட்டையாடவே சிறுத்தைகள் விரும்பும். ஏன் தெரியுமா..? அப்பொழுதுதான் உணவு ருசிக்கும்! நங்கை அல்ல... புலவர் தண்டிதான் எனக்கு முக்கியம். அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டுமென்றால் நங்கை சுதந்திரமாக நடமாட வேண்டும்... யாரங்கே...’’ குரல் கொடுத்தார்.

சாளுக்கிய வீரன் ஒருவன் உள்ளே நுழைந்து தலை வணங்கினான். ‘‘நங்கையைப் பின்தொடரு... அவளது ஒவ்வொரு நடமாட்டத்தையும் கவனி...’’  
மீண்டும் ஸ்ரீராமபுண்ய வல்லபரை வணங்கி விட்டு அந்த சாளுக்கிய வீரன் அகன்றான்.காஞ்சி ஆதுரச் சாலையை விட்டு வெளியே வந்த நங்கையின் புருவங்கள் உயர்ந்தன.வெள்ளை நிறத்தில் ஒரு புரவியும் சற்றுத் தள்ளி சாம்பல் நிறத்தில் ஒரு புரவியும் தனித்தனியே மரங்களில் கட்டப்பட்டு நின்றிருந்தன.

சாம்பல் நிற புரவியை நெருங்கிய நங்கை அதைத் தட்டிக் கொடுத்தாள். கட்டை அவிழ்த்து அணைத்தாள். முத்தமிட்டாள். குதிரையின் மீது தாவி ஏறினாள். புரவி பறந்தது.‘புலவர் பலே பேர்வழிதான்... தன் பணியாளர்கள் வழியாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறப் புரவிகளை இங்கு அவர் நிறுத்தியதற்குக் காரணம், தான் சென்ற காரியம் காயா பழமா என்று அறியத்தான். வெள்ளை நிறம் காரிய வெற்றியை உணர்த்தும். சாம்பல் நிறம் சென்ற காரியம் பிசகி விட்டது என்பதை தெரியப்படுத்தும். சாம்பல் நிறப் புரவியை, தான் தேர்வு செய்ததன் வழியாக புலவருக்கு ஆதுரச் சாலைக்குள் நடந்ததைத் தெரியப்படுத்திவிட்டாள்.

இனி புலவர் பார்த்துக் கொள்வார்...’நிம்மதியுடன் புரவியில் சென்ற நங்கையின் உள்ளம் கரிகாலனை நினைத்துக் குழம்பியது. ‘கத்தி மேல் கரிகாலர் நடக்கிறார்... பல்லவர்களிடமும் சாளுக்கியர்களிடமும் உண்மையும் பொய்யும் கலந்து பேசுகிறார்... அவர் மனதில் என்னதான் இருக்கிறது..? உண்மையில் அவர் யார் பக்கம்..?’ பெருமூச்சு விட்டவள் சட்டென தன்னைத்தானே உதறிக் கொண்டாள்... இரு சொற்கள் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தன. ‘தேவ மூலிகையால் நெய்யப்பட்ட கச்சை... பொக்கிஷங்கள்...’ இதற்கு என்ன அர்த்தம்..?‘‘என்ன...’’ கோச்சடையன் இரணதீரன் அதிர்ந்தான்.
 

‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்தான் வெள்ளெருக்கு வளருமா..?’’மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார். வாழையிலைப்  பொட்டலத்தில் இருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து பாண்டிய இளவரசனின் நயனங்களை நேருக்கு நேர் சந்தித்தார்.
 
‘‘தேவ மூலிகை வளர்ந்த  இடத்தைத் தோண்டினால் தங்கம், வைரம், வைடூரியங்கள், நவரத்தினங்கள்  உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது அனைத்துமோ கிடைக்கும்!’’இரணதீரனின் புருவங்கள் உயர்ந்தன. அவன் வதனத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.  குறுக்கும் நெடுக்குமாக மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவருக்கான  அறையில் நடந்தவன், சட்டென நின்றான். ‘‘சாளுக்கிய வீரனே...’’சிலைக்கு உயிர் வந்ததுபோல் அந்த வீரன் நிமிர்ந்து கோச்சடையன் இரணதீரனைப் பார்த்தான்.


‘‘உனக்கு ஏதாவது புரிகிறதா..?’’
சாளுக்கிய வீரன் அமைதியாக நின்றான்.‘‘கச்சையை  சீனனிடம் கொடுத்து வீரபாண்டிய பெருந்தச்சரிடம் ஒப்படைக்கச் சொன்னவன் கரிகாலன்...  சரிதானா? சரிதான்... சிவகாமி அனைத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டாள்! அதைக் கைப்பற்றிய சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அக்கச்சையை எரித்து சாம்பலாக்கி அதை இங்கு கொடுக்கும்படி கூறியிருக்கிறார்... எதற்காக..? தேவமூலிகையால்  நெய்யப்பட்ட கச்சையா என்று பரிசோதிக்கவா..?’’‘‘...’’‘‘சிவகாமிக்கு  இந்த விஷயம் தெரியுமா தெரியாதா..?’’ இரணதீரன் தன் கண்களை  உருட்டினான். ‘‘விக்கிரமாதித்தரிடம் இருந்து ‘ஒரு பிரசாதத்தை நீ...

அதாவது சாளுக்கிய வீரனான நீ...  கொண்டு வருவாய்... அதை சோதித்துப் பாருங்கள்...’ என்று மட்டுமே சொன்னாள்.  இதை வைத்துப் பார்த்தால் சிவகாமிக்கே எதுவும் தெரியாது என்பது  புலனாகிறது... இல்லை... ஒரேயடியாக அப்படியொரு தீர்மானத்துக்கு வரமுடியாது.  ஒருவேளை... ஆம்... அப்படித்தான் இருக்க வேண்டும்... சாளுக்கிய மன்னரிடம் இருந்து  வரும் பிரசாதம் தேவமூலிகை என்பதை சிவகாமி அறிந்திருக்கிறாள்... அதை பாண்டியர்களாகிய எங்களுக்கும் அறிவிக்கவே சோதித்துப் பார்க்கச்  சொல்லியிருக்கிறாள்...’’
‘‘...’’

‘‘சரி... நீ செல்லலாம்...’’ இரணதீரன் கட்டளையிட்டான். ‘‘என்ன  அப்படிப் பார்க்கிறாய்..? உன்னை ஏன் சிறை செய்யவில்லை என்றா..? அவசியமானது  வந்து சேர்ந்துவிட்டது...’’ கண்களால் பாண்டிய மன்னரின் அந்தரங்க  மருத்துவர் ஏந்தியிருந்த வாழையிலைப் பொட்டலத்தைக் காண்பித்தான். ‘‘இதற்குமேல் உன்னை சிறை வைத்து பராமரிப்பதால் பாண்டியர்களுக்கு எந்தப் பலனும்  இல்லை. செலவுதான். எனவே...’’ கைகளை உயர்த்தி அறையின் வாயிலைக்  காண்பித்தான்.

அந்த சாளுக்கிய வீரன் மவுனமாக மதுரை தலைமை மருத்துவரின் அறையை விட்டு வெளியேறினான். ‘‘இளவரசரே...’’ அதுவரை அமைதியாக இருந்த மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரும் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மரின் அந்தரங்க  மருத்துவருமான பெரியவர் தன் வாயைத் திறந்தார். ‘‘எதற்காக நீங்கள் மனதில் நினைத்ததை  எல்லாம் அந்த சாளுக்கிய வீரனிடம் சொன்னீர்கள்..? குறிப்பாக சிவகாமி உங்களுக்கு  செய்தி அறிவித்த விஷயத்தை..?’’‘‘காரணமாகத்தான் மருத்துவரே...’’ இரணதீரன் நகைத்தான்.

அந்த நகைப்பைக் கேட்டபடியே மதுரை ஆதுரச் சாலையை விட்டு வெளியேறிய சாளுக்கிய வீரன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்து தச்சர் வீதியை அடைந்தான்.நல்லவேளையாக அந்தப் பக்கம் பாண்டிய வீரர்கள் காவலுக்கு நிற்கவில்லை.விரைந்து வீரபாண்டிய தச்சரின் இல்லத்தை அடைந்தவன், திகைத்தான். அதிர்ந்தான். சிலையென நின்றான்.காரணம், சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் அங்கில்லை.

மாறாக, அங்கிருந்த ஆசனத்தில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தவர் தன் வாயைத் திறந்தார்!‘‘என்ன தச்சர் வேடத்தில் சென்ற சாளுக்கிய வீரனே! மதுரை ஆதுரச் சாலையில் பாண்டிய இளவரசரை சந்தித்தாயா..? கச்சையின் சாம்பல், தேவ மூலிகையான வெள்ளெருக்கு என்பதை கோச்சடையன் இரணதீரன் அறிந்துகொண்டாரா..?’’கேட்டவர் வேறு யாருமல்ல... பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்தான்!

தன் மாளிகையில் வந்து நின்ற வெள்ளை நிறப் புரவியைக் கண்டதும் புலவர் தண்டியின் முகம் மலர்ந்தது. ‘இப்படித்தான் நடக்கும் என்று நினைத்தேன்... கரிகாலா... ராஜதந்திரங்களை உனக்கு கற்றுக்கொடுத்த என்னிடமே உன் ஆட்டத்தை நடத்துகிறாயா... குருவை மிஞ்சிய சீடன் இல்லை என்பதை விரைவில் உனக்கு உணர்த்துகிறேன்...’நிதானமாக தன் பணியாளனை நோக்கி கண்சிமிட்டினார்.

அடுத்த கணம், காஞ்சியின் மீது ஐந்து புறாக்கள் பறந்தன!ஒரே அளவில் கட்டப்பட்ட நான்கு மூட்டைகளுடன் அந்தப் புரவி சீறிப் பாய்ந்தது.
அதன் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தாள் சிவகாமி!
 

(தொடரும்)


செய்தி:கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்
 
Posted

ரத்த மகுடம் 126

 

 

ரத்த மகுடம் 126


நங்கை கவனித்துக் கொண்டேயிருந்தாள். வாழையிலைப் பொட்டலத்தை தன் வலது உள்ளங்கையில் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் ஏந்தியதையும்இ அதன் எடையைப் பார்ப்பதுபோல் சைகை செய்ததையும். அடுத்து அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணித்தாளோ அதையேதான் செய்தார். கனைத்தார்.அடுத்த கணம்இ மறைந்திருந்த சாளுக்கிய வீரர்கள் வெளிப்பட்டார்கள்.
‘‘அழைத்து வாருங்கள்...’’ கட்டளையிட்டார்.

தலைவணங்கி அகன்றவர்கள் சில கணங்களுக்குப் பின் தலைமை மருத்துவருடன் வந்தார்கள்.வந்தவர் காஞ்சியின் தலைமை மருத்துவர் அல்ல. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.

காஞ்சியில் சாளுக்கிய மன்னர் நகர் உலா வந்தபோதெல்லாம் இவரும் உடன் வந்ததை நங்கை பார்த்திருக்கிறாள்.‘‘இந்தாருங்கள்...’’ தன் கரத்தில் இருந்த வாழையிலைப் பொட்டலத்தை  ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவரிடம் வழங்கினார்.பெற்றுக் கொண்ட விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் எச்சரிக்கையுடன் வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்தார்.

தன்னை ஏன் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சாளுக்கிய போர் அமைச்சர் கட்டளையிடவில்லை என்ற வினாவே நங்கைக்குள் எழவில்லை. நடப்பதற்கு சாட்சியாகஇ தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் தீர்மானித்திருக்கிறார் என்பதை அந்த அறைக்குள் நுழைந்த கணமே புரிந்துகொண்டாள். அதற்கு ஏற்பவே அவரது நடவடிக்கைகள் இருந்தன் இருக்கின்றன. புலவர் தண்டியை விடஇ தான் சிறந்த ராஜதந்திரி என்பதை நிரூபிக்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்படுகிறார்.

ஆனால்இ ராமபுண்ய வல்லபர் எட்டடி பாய்ந்தால் புலவர் தண்டி பதினாறடி அல்லவா பாய்கிறார்..? ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல் மீண்டும் சில தினங்களுக்கு புழக்கத்தில் இருக்கும் என புலவரின் அந்தரங்க ஊழியன் அவளிடம் சொன்னபோதே இந்தப் பாய்ச்சலை உணர்ந்துவிட்டாள்.

ஏனெனில் ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்லின் மர்மம்இ சாளுக்கியர்களுக்குத் தெரிந்து விட்டது... எனவே இனி அதைப் பயன்படுத்த வேண்டாம் என சில திங்களுக்கு முன் அறிவித்ததே புலவர் தண்டிதான். அப்படியிருக்க மீண்டும் அதை புழக்கத்தில் விடுகிறார் என்றால்... வலையை விரித்திருக்கிறார் என்று பொருள். இப்போது ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் அதில் சிக்கியிருக்கிறார். ஆனால்இ சாளுக்கிய போர் அமைச்சருக்காக விரிக்கப்பட்ட வலை அல்ல இது... எனில்இ யாருக்காக விரிக்கப்பட்ட வலை..?படர்ந்த சிந்தனையை அறுத்துவிட்டு நடப்பதை நங்கை கவனிக்கத் தொடங்கினாள்.

சாளுக்கிய வீரன் கவனித்துக் கொண்டேயிருந்தான். வாழையிலைப் பொட்டலத்தை தன் வலது  உள்ளங்கையில் பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரன் ஏந்தியதையும்இ  அதன் எடையைப் பார்ப்பதுபோல் சைகை செய்ததையும். அடுத்து அவனது நடவடிக்கை என்னவாக இருக்கும் என கணித்தானோ அதையேதான் இரணதீரன் செய்தான். கனைத்தான்.அடுத்த கணம்இ மறைந்திருந்த பாண்டிய வீரர்கள் வெளிப்பட்டார்கள்.
‘‘அழைத்து வாருங்கள்...’’ கட்டளையிட்டான்.தலைவணங்கி அகன்றவர்கள் சில கணங்களுக்குப் பின் தலைமை மருத்துவருடன் வந்தார்கள்.

வந்தவர் சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவர் அல்ல. மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர். பாண்டிய மன்னர் நகர் உலா வந்தபோதெல்லாம்  இவரும் உடன் வந்ததை அந்த சாளுக்கிய வீரன் பார்த்திருக்கிறான்.‘‘இந்தாருங்கள்...’’ தன் கரத்தில் இருந்த வாழையிலைப் பொட்டலத்தை இரணதீரன் அவரிடம் வழங்கினான்.

பெற்றுக் கொண்ட மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் எச்சரிக்கையுடன் வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்தார்.தன்னை  ஏன் கைது செய்து சிறையில் அடைக்கும்படி பாண்டிய இளவல்  கட்டளையிடவில்லை என்ற வினாவே சாளுக்கிய வீரனுக்குள் எழவில்லை. நடப்பதற்கு சாட்சியாகஇ  தான் இருக்க வேண்டும் என்று இரணதீரன் தீர்மானித்திருக்கிறான்  என்பதை அந்த அறைக்குள் நுழைந்த கணமே புரிந்துகொண்டான். அதற்கு ஏற்பவே  அவனது நடவடிக்கைகள் இருந்தன் இருக்கின்றன. சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைவிடஇ தான் சிறந்த  ராஜதந்திரி என்பதை நிரூபிக்க இரணதீரன் முற்படுகிறான்.

ஆனால்இ பாண்டிய இளவல் எட்டடி பாய்ந்தால் சாளுக்கிய மன்னர் பதினாறடி அல்லவா  பாய்கிறார்..? ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்  மீண்டும் சில தினங்களுக்கு புழக்கத்தில் இருக்கும் என மன்னரின் அந்தரங்க  ஊழியன் தன்னிடம் சொன்னபோதே இந்தப் பாய்ச்சலை உணர்ந்துவிட்டான்.

ஏனெனில்  ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ’ என்ற அடையாளச் சொல்லின் மர்மம்இ  சாளுக்கியர்களான தங்களுக்குத் தெரிந்து விட்டது... எனவே இனி அதைப் பயன்படுத்த  வேண்டாம் என சில திங்களுக்கு முன் பல்லவ ஒற்றர் படையினர் முடிவு செய்து விட்டார்கள் என்பதை அறிவித்ததே சாளுக்கிய  அப்படியிருக்க மீண்டும் அதை புழக்கத்தில் விடுகிறார் என்றால்... வலையை  விரித்திருக்கிறார் என்று பொருள். இப்போது பாண்டிய இளவரசன் அதில்  சிக்கியிருக்கிறான். ஆனால்இ இரணதீரனுக்காக விரிக்கப்பட்ட  வலை அல்ல இது... எனில்இ யாருக்காக விரிக்கப்பட்ட வலை..?

படர்ந்த சிந்தனையை அறுத்துவிட்டு நடப்பதை அந்த சாளுக்கிய வீரன் கவனிக்கத் தொடங்கினான். நங்கை கவனித்துக் கொண்டேயிருந்தாள்.
வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்த சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்இ தன் கண்களுக்கு அருகில் அந்தச் சாம்பலைக் கொண்டு சென்றார். சாம்பல் பறக்காத வகையில் தள்ளி வைத்து ஆழ்ந்து அவரது புருவங்கள் உயர்ந்தன.

பிரித்த வாழையிலையை எச்சரிக்கையுடன் தன்னருகில் இருந்த மர நாற்காலியில் வைத்தவர்இ தன் இடுப்பில் இருந்து விரலளவு கொண்ட சுரைக்காய் குடுவையை எடுத்தார். சில கணங்கள் அதை நன்றாகக் குலுக்கியவர்இ குடுவையின் நுனியில் அழுத்தமாகப் புதைக்கப்பட்டிருந்த மரத் துணுக்கை எடுத்தார். லேசாகச் சாய்த்தார்.

குடுவையிலிருந்த பச்சிலைச் சாற்றின் துளிகள் வாழையிலையில் இருந்த சாம்பலில் விழுந்தன.ஐந்து துளிகள் விழுந்ததும் பழையபடி குடுவையை மூடி தன் இடுப்பில் வைத்துவிட்டு வலது கை ஆள்காட்டி விரலினால் சாம்பலைக் குழைத்தார்.சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவரின் முகம் மலர்ந்தது.

நிமிர்ந்து ராமபுண்ய வல்லபரைப் பார்த்துப் புன்னகைத்தார்.சாளுக்கிய வீரன் கவனித்துக் கொண்டேயிருந்தான். வாழையிலைப் பொட்டலத்தைப் பிரித்த மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர்இ தன் கண்களுக்கு  அருகில் அந்தச் சாம்பலைக் கொண்டு சென்றார். சாம்பல் பறக்காத வகையில் தள்ளி  வைத்து ஆழ்ந்து நுகர்ந்தார்.

அவரது புருவங்கள் உயர்ந்தன.பிரித்த  வாழையிலையை எச்சரிக்கையுடன் தன்னருகில் இருந்த மர நாற்காலியில் வைத்தவர்இ  தன் இடுப்பில் இருந்து விரலளவு கொண்ட சுரைக்காய் குடுவையை எடுத்தார். சில  கணங்கள் அதை நன்றாகக் குலுக்கியவர்இ குடுவையின் நுனியில் அழுத்தமாகப்  புதைக்கப்பட்டிருந்த மரத் துணுக்கை எடுத்தார். லேசாகச் சாய்த்தார்.குடுவையிலிருந்த பச்சிலைச் சாற்றின் துளிகள் வாழையிலையில் இருந்த சாம்பலில் விழுந்தன.

ஐந்து துளிகள் விழுந்ததும் பழையபடி குடுவையை மூடி தன் இடுப்பில் வைத்துவிட்டு வலது கை ஆள்காட்டி விரலினால் சாம்பலைக் குழைத்தார்.
மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவரின் முகம் மலர்ந்தது.நிமிர்ந்து பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘‘தேவ மூலிகை...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.

‘‘அப்படியென்றால்..?’’ நங்கைக்குள் கேள்வி எழுந்தது.
அதை ராமபுண்ய வல்லபர் வாய்விட்டு கேட்டார்.
‘‘வெள்ளெருக்கை  இந்தப் பெயரில்தான் மருத்துவம் அழைக்கிறது...’’ பட்டென்று சொன்னார் அந்தரங்க மருத்துவர்.

‘‘எருக்கன் செடியைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘இல்லை போர் அமைச்சரே...’’ பச்சிலைத் துளியில் குழைத்த சாம்பலை சில கணங்கள் பார்த்துவிட்டு ராமபுண்ய வல்லபரை நேருக்கு நேர் பார்த்தார் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர்.‘‘அப்படியென்றால் வெள்ளெருக்கு என்பது வேறா..?’’‘‘வேறு மட்டுமல்ல... அபூர்வமான அரிதான மூலிகை. ஒருவகையில் குப்பை மேடுகளிலும் தரிசு நிலங்களிலும் விளையும் எருக்கன் செடியின் குடும்பத்தைச் சார்ந்ததுதான் இந்த வெள்ளெருக்கு.

ஆனால்இ எல்லா இடங்களிலும் இந்த மூலிகை விளையாது...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கருவிழிகளில் சிந்தனை படர்ந்தது. ‘‘அப்படிப்பட்ட தேவ மூலிகையால்தான் கச்சை நெய்யப்பட்டிருக்கிறதா..?’’‘‘தேவ மூலிகையை நூலாக்க முடியும் என்பதே அடியேனுக்கு வியப்பாக இருக்கிறது... அப்படிப்பட்ட நூலில் இருந்து எதற்காக கச்சையை நெய்தார்கள்..?’’

‘‘உங்கள் வினாவுக்கான விடை விரைவில் கிடைக்கும். அதற்கு முன்...’’ நிறுத்திய ஸ்ரீ ராமபுண்ய வல்லபர்இ நங்கையைப் பார்த்தபடியே சாளுக்கிய மன்னரின் அந்தரங்க மருத்துவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். ‘‘தேவ மூலிகை அபூர்வமானது அல்லவா..?’’
‘‘அரிய வகையும் கூட...’’‘‘எல்லா இடங்களிலும் விளையுமா..?’’‘‘இல்லை... குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தேவ மூலிகை விளையும்...’’
‘‘எந்தெந்த இடங்கள்..?’’

பயபக்தியுடன் விக்கிரமாதித்தரின் அந்தரங்க மருத்துவர் சொன்னார்... ‘‘பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்!’’
‘‘தேவ மூலிகை...’’ நிதானமாகச் சொன்னார் மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர்.‘‘அப்படியென்றால்..?’’ சாளுக்கிய வீரனுக்குள் கேள்வி எழுந்தது.

அதை இரணதீரன் வாய்விட்டுக் கேட்டான்.‘‘வெள்ளெருக்கை இந்தப் பெயரில்தான் மருத்துவம் அழைக்கிறது...’’ பட்டென்று சொன்னார் தலைமை மருத்துவர்.‘‘எருக்கன் செடியைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘இல்லை இளவரசே...’’ பச்சிலைத் துளியில் குழைத்த சாம்பலை சில கணங்கள்  பார்த்துவிட்டு இரணதீரனை நேருக்கு நேர் பார்த்தார் தலைமை மருத்துவர்.

‘‘அப்படியென்றால் வெள்ளெருக்கு என்பது வேறா..?’’
‘‘வேறு  மட்டுமல்ல... அபூர்வமான அரிதான மூலிகை. ஒருவகையில் குப்பை மேடுகளிலும்  தரிசு நிலங்களிலும் விளையும் எருக்கன் செடியின் குடும்பத்தைச்  சார்ந்ததுதான் இந்த வெள்ளெருக்கு. ஆனால்இ எல்லா இடங்களிலும் இந்த மூலிகை  விளையாது...’’

இரணதீரனின் கருவிழிகளில் சிந்தனை படர்ந்தது. ‘‘அப்படிப்பட்ட தேவ மூலிகையால்தான் கச்சை நெய்யப்பட்டிருக்கிறதா..?’’
‘‘தேவ  மூலிகையை நூலாக்க முடியும் என்பதே அடியேனுக்கு வியப்பாக இருக்கிறது...  அப்படிப்பட்ட நூலில் இருந்து எதற்காக கச்சையை நெய்தார்கள்..?’’

‘‘உங்கள்  வினாவுக்கான விடை விரைவில் கிடைக்கும். அதற்கு முன்...’’ நிறுத்திய இரணதீரன்இ சாளுக்கிய வீரனைப் பார்த்தபடியே தலைமை  மருத்துவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான். ‘‘தேவ மூலிகை அபூர்வமானது  அல்லவா..?’’
‘‘அரிய வகையும் கூட...’’‘‘எல்லா இடங்களிலும் விளையுமா..?’’‘‘இல்லை... குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தேவமூலிகை விளையும்...’’
‘‘எந்தெந்த இடங்கள்..?’’

பயபக்தியுடன் மதுரை ஆதுரச் சாலையின் தலைமை மருத்துவர் சொன்னார்... ‘‘ பொக்கிஷங்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேல்!’’
கோட்டைக்குள் சிவகாமி நுழைந்ததுமே வீரர்கள் சுற்றி வளைத்தார்கள்.தன் கால்களையும் கைகளையுமே ஆயுதமாக்கி அவர்களை சிவகாமி பந்தாட ஆரம்பித்தாள்.கோட்டைக்குள் விளைந்திருந்த வெள்ளெருக்குச் செடிகள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன!

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி muththu 86......இங்கு ஏதாவதில் சிறு தடங்கல் ஏற்படும்போதெல்லாம் ஒரொருவர் வந்து அந்த இடத்தை நிரப்பி விடுகின்றனர். அதுதான் யாழின் சிறப்பம்சம்......!   🌹  🙏

Posted

ரத்த மகுடம்-128

பல்லவர்களின் பிரதான துறைமுகமாக இருந்தபடியால் காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே ராஜபாட்டை அகலமாகவே அமைக்கப்பட்டிருந்தது.
அரச வம்சத்தவர் அடிக்கடி காஞ்சியிலிருந்து மல்லைக்கு சென்று வந்தபடியால் அந்த ராஜபாட்டையை பல்லவர்கள் மட்டுமல்ல... இப்போது காஞ்சியை ஆளும் சாளுக்கியர்களும் முக்கியமாகவே கருதினார்கள்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/27.jpg
எனவே சிறிதளவு பழுது கூட ஏற்படாதவண்ணம் அந்த ராஜபாட்டையை பராமரித்தார்கள். குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு காவல் கோபுரம் வீதம் அந்த ராஜபாட்டை முழுக்கவே பல காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களும் தத்தம் குழுவினருடன் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் கோபுரத்தில் இருந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அதற்கு காரணமும் இருந்தது.

மாமல்லபுரத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் வந்து சேரும் சரக்குகள் காஞ்சி மாநகரத்துக்கு அந்த ராஜபாட்டை வழியாகவே வரவேண்டியிருந்தது. சாலையின் இரண்டு ஓரங்களிலும் பார வண்டிகளில் சரக்குகள் வந்து போய்க் கொண்டிருந்ததாலும், அந்த வண்டிகளோடு வணிகர்கள் பயணம் செய்ததாலும் காஞ்சி - மல்லை ராஜபாட்டை, ஒருவகையில் வணிகர் சாலை போலவே காட்சியளித்தது.

அப்படிப்பட்ட ராஜபாட்டையில்தான் அந்தப் புரவி நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.அதன் மீது சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் பதற்றம் பூத்திருந்தது. புரவிக்கும் அது தொற்றியது. எனவே ராஜபாட்டையில் அது பறந்தது.ஆங்காங்கே காவல் கோபுரத்தில் நின்றிருந்த சாளுக்கிய வீரர்களும், ராஜபாட்டையில் முன்னும் பின்னுமாக குதிரைகளில் சென்று கொண்டிருந்த அவ்வீரர்களின் தலைவர்களும் விநயாதித்தனைக் கண்டதும் ஆச்சர்யம் அடைந்தார்கள். தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தார்கள்.

அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் விநயாதித்தன் இல்லை. அவன் மனம் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. என்னதான் சோழ இளவரசனான கரிகாலன், தங்கள் உளவாளி... பல்லவர்களுக்குள் ஊடுருவியபடி சாளுக்கிய நலனுக்காக பாடுபடுபவன்... என தன் தந்தையும் சாளுக்கிய மன்னருமான விக்கிரமாதித்தர் தெரிவித்திருந்தாலும் அதை விநயாதித்தனால் ஏற்க முடியவில்லை.

மதுரையில் நடைபெற்ற சம்பவங்களும், தன் கண்களால் கண்ட காட்சிகளும், சாட்சியாக, தானே நின்ற நிகழ்வுகளும் அவனைத் தொந்தரவு செய்தன; கரிகாலன் நம்பத்தகுந்தவன் அல்ல என்பதை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டிருந்தன. போலவே சிவகாமியின் நடவடிக்கைகளும். என்னதான் அவள் தங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரின் ஆயுதமாக இருந்தாலும், பல்லவ இளவரசியாக பல்லவர்கள் மத்தியில் நடமாடியபடி தேவையான விவரங்களை அவ்வப்போது தங்களுக்குத் தெரிவித்தாலும் அவள் மர்மம் நிறைந்த பெண்ணாகவே தென்பட்டாள். எந்தளவுக்கு அவள் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் விநயாதித்தனுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனாலேயே அவளை சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக அவனால் ஏற்க முடியவில்லை.

இதையெல்லாம் தன் தந்தையிடம் சூட்சுமமாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டான். ஆனாலும் அதை அவர் நம்பியது போல் தெரியவில்லை. அத்துடன் முன்பை விட அதிகமாக கரிகாலன் - சிவகாமியின் பேச்சைக் கேட்கவும் தொடங்கி விட்டார்.எனவே, சொல்வதை விட செயலில்... அதுவும் தகுந்த ஆதாரங்களுடன் கரிகாலனையும் சிவகாமியையும் அம்பலப்படுத்தினால்தான் அவர் நம்புவார் என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டான். அதன் ஒரு பகுதியாகவே இப்பொழுது ராஜபாட்டையில் விரைந்து கொண்டிருக்கிறான்.சரியாக இரு நாழிகைகள் பயணம் செய்தபிறகு திருக்கழுக்குன்றத்தை அடைந்தான்.

தொலைவில் இருந்து பார்த்தால் அந்த மலை சூலத்தைப் போல் காட்சியளிக்கும். அதனாலேயே சூலம் என்னும் சொல்லை உணர்த்தும் ‘கழு’ அம்மலையின் பெயரில் இணைந்தது. ஈசன் அங்கு கோயில் கொண்டிருந்ததால் அது ‘திருக்கழுக்குன்றம்’ ஆனது.கழுகுப் பட்சிகள் இரண்டு தினமும் அங்கு வந்து குன்றின் உச்சியில் அமர்ந்து பிரசாத உணவை அருந்திவிட்டு அங்குள்ள கோயிலையும் தீர்த்தத்தையும் வலம் வரும். இதனால் அம்மலைக்கு ‘பட்சி தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு.

போலவே மலையின் ஒரு பக்க தோற்றம் காக்கையைப் போல் காணப்பட்டதால் ‘காக்கைக் குன்றம்’ என்றும்; நான்கு விதமான வேதங்களே மலை வடிவாக இருந்து வருவதாகக் கருதப்பட்டதால் ‘வேதகிரி’ என்றும் திருக்கழுக்குன்றம் அழைக்கப்பட்டது.இதெல்லாம் காஞ்சியில் அவனுக்கு சொல்லப்பட்ட தகவல்கள்.

அனைத்தையும் அசை போட்டபடி மலையடிவாரத்தில் புரவியை விட்டு இறங்கியவன், அங்குள்ள கொட்டடியில் குதிரையைக் கட்டிவிட்டு மலையேறத் தொடங்கினான்.சிவபெருமானால் பிரம்மபுத்திரர்கள் எட்டு பேர் கழுகுகளாகும்படி சபிக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் கிருத யுகத்தில் கழுகுகளாக சில காலம் இக்குன்றில் இருந்து சாப விமோசனம் அடைந்தார்கள். அதேபோல் திரேதா யுகத்தில் இருவரும், துவாபர யுகத்தில் இருவரும் கழுகுகளாக இக்குன்றுக்கு வந்து சாப விமோசனம் பெற்றார்கள்.

இப்போது கலி யுகத்தில் எஞ்சியிருக்கும் புஷா, விதாதா ஆகியோர் கழுகுகளாக வந்து தினமும் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் - தாங்களும் சாப விமோசனம் பெற வேண்டுமென்று.இது உண்மையா அல்லது கட்டுக் கதையா என்று தெரியாது. ஆனால், இந்த கர்ண பரம்பரைக் கதையை மக்கள் நம்பினார்கள்; மதித்தார்கள்.

எனவே, தினமும் இந்த மலைக்கு வந்து பெருமானை வணங்கிவிட்டு நடுப்பகலில் பட்சி தரிசனத்தையும் முடிப்பதை கடமையாகக் கருதினார்கள்.
அப்படித்தான் அன்றும் விநயாதித்தன் மலையேறத் தொடங்கியபோது பட்சி தரிசனம் முடித்துவிட்டு மக்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் சாளுக்கிய இளவரசனை வணங்கினார்கள்; வேறு சிலர் புன்னகைத்தார்கள்; மற்றவர்கள் தங்கள் உடல் மொழியில் மரியாதையை வெளிப்படுத்தினார்கள்.

ஒரேயொரு மனிதன் மட்டும் விநயாதித்தனை நெருங்கி வணங்கினான். ‘‘வணக்கம் இளவரசே...’’சிந்தனை அறுபட சாளுக்கிய இளவரசன் நிமிர்ந்தான். தன் முன்னால் நின்றவனுக்கு வயது அதிகபட்சம் முப்பதிருக்கும் என்பதை பார்வையால் உணர்ந்தான். மூங்கில் கூடையை முதுகில் சுமந்து கொண்டிருந்தவனை முன் எப்போதும், தான் கண்டதில்லை என்பதை உணர்ந்தான். இருந்தாலும் மரியாதை நிமித்தமாகத் தலையசைத்து அந்த வணக்கத்தை ஏற்றான்.

‘‘குடைவரைக் கோயிலுக்கு செல்கிறீர்களா..?’’
ஆம் என்றோ இல்லை என்றோ பதில் அளிக்காமல் அந்த மனிதனை உற்றுப் பார்த்தான்.‘‘பிரமாதமான கோயில்... வாதாபியை எரித்து தீக்கிரையாக்கினாரே நரசிம்ம வர்மர்... அவர் எழுப்பிய குடைவரை ஆலயம் அது...’’ சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அந்த மனிதன் இறங்கத் தொடங்கினான்.

விநயாதித்தனின் நயனங்கள் தீப்பிழம்பாகின. ‘வாதாபியை எரித்த’ என்ற சொற்கள் அவனை தகித்தன. ‘சாதாரண குடி மக்களில் ஒருவன் ஓர் இளவரசனைச் சீண்டுகிறான்... அவனை... வேண்டாம்... மனமே அமைதி கொள்... காலம் வரும்... போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன... யுத்தத்தில் பல்லவ வம்சத்தையே எரித்துச் சாம்பலாக்கிக் காட்டுவோம்... அப்பொழுது இவன் என்ன சொல்கிறான் என்று பார்க்க வேண்டும்... அதற்காக இதே திருக்கழுக்குன்றத்துக்கு வரவேண்டும்...’ உணர்வுகளை வெளிப்படுத்தாத முகத்துடன் மலையேறினான்.

விநயாதித்தன் மட்டும் திரும்பி தன்னைச் சீண்டிய மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார்த்திருந்தால் இந்தக் கதையின் போக்கே மாறியிருக்கும்!ஏனெனில் இறங்கிய அந்த மனிதன், பத்தடிகள் சென்றதும் நின்று திரும்பினான்.சாளுக்கிய இளவரசன் மலை மீது ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது.சில கணங்கள் அப்படியே நின்று பார்த்தவன், பிறகு தன் முதுகில் இருந்த கூடையை இறக்கினான். கூடைக்குள் இருந்த புற்களை வெகு எச்சரிக்கையாக எடுத்து மலை மீது தூவுவது போல் வீசத் தொடங்கினான்.

பாதி கூடை காலியானதும் மீண்டும் சில கணங்கள் தன்னைச் சுற்றிலும் ஆராய்ந்தான்.யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும் கூடையைப் பார்த்தான்.அதனுள் ஐந்து வெள்ளைப் புறாக்கள் இருந்தன.ஒவ்வொன்றாக எடுத்து பறக்கவிட்டான். பின்னர் நிதானமாக கூடையைச் சுமந்தபடி இறங்கத் தொடங்கினான்.மலையின் உச்சியை நெருங்கிய விநயாதித்தன், அங்குள்ள குடைவரைக் கோயிலுக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. பரம எதிரி உருவாக்கிய ஆலயத்தினுள், தான் ஏன் நுழையவேண்டும்..?

உதட்டைச் சுழித்தவன் வலப்புறமாகத் திரும்பினான். மனிதர்களின் பாதங்கள் படாத புதர்களைக் கடந்தான்.பழமையான ஆலமரம் அவனை வரவேற்றது.அதன் முன் பத்மாசனத்தில் அவன் தேடி வந்த நபர் அமர்ந்திருந்தார்.நரம்புகளும் எலும்புகளும் தெளிவாகத் தெரிய... தாடியும், ஜடைகளும் விழுதுகளைப் போல் வளர்ந்திருக்க... அந்த வயதான மனிதர் தியானத்தில் இருந்தார்.அவர் முன் சென்று விநயாதித்தன் நின்றான்.

சரியாக அந்த நேரம் பார்த்து ஐந்து புறாக்கள் பறந்து வந்து தியானத்தில் இருந்தவரின் தலை மீது ஒன்றும், தோள்களில் இரண்டும், தொடைகளில் இரண்டுமாக அமர்ந்தன.வியப்புடன், அமர்ந்த புறாக்களை சாளுக்கிய இளவரசன் பார்த்தான்.அவை வெள்ளைப் புறாக்கள் அல்ல.சாம்பல் நிற புறாக்கள்!கடகடவென்று கரிகாலன் நகைத்தான். ‘இப்படித்தான் நடக்கும் என்று நினைத்தேன் புலவரே... ராஜதந்திரங்களை அடியேனுக்கு கற்றுக் கொடுத்தது நீங்கள்தான்... அதற்கான குருதட்சணையை உங்களுக்கு வழங்கப் போகிறேன் - குருவை மிஞ்சிய சீடன் என்று பெயர் வாங்கி! நீங்கள் அனுப்பியது வெண்மை நிற புறாக்கள்... அடியேன் அனுப்பியிருப்பது சாம்பல் நிற புறாக்கள்! யாருடைய ஆட்டம் களை கட்டுகிறது என்று பார்ப்போம்!’
  • 1 month later...
Posted

ரத்த மகுடம்-129

ஐந்து சாம்பல் நிற புறாக்களும் அந்த மனிதர் மீது வீற்றிருந்ததை சில கணங்கள்தான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் கண்டான்.அது தொடர்பான சிந்தனைகள் அவனுக்குள் விருட்சமாக வளர்வதற்குள் அந்த மனிதர் தன் கண்களைத் திறந்தார்.‘‘வணக்கம்... பறவை சித்தர் என்பது தாங்கள்தானா..?’’ முன்னால் வந்து அவரை வணங்கினான் விநயாதித்தன்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201225/21.jpg
‘‘மற்றவர்கள் இந்த எளியவனை அப்படி அழைக்கிறார்கள்... மற்றபடி அடியேன் சித்தனல்ல... அந்த நிலையை எட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவன்...’’
சாளுக்கிய இளவரசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை, தான் காண வந்த மனிதர் இவரில்லையோ..? சங்கடத்துடன் தன் இடுப்பைத் தடவினான். ஓலை பாதுகாப்பாக இருந்தது.

பறவை சித்தரின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘ஓலையா..?’’
விநயாதித்தனின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘ஆம்...’’‘‘அனுப்பியது யார்..?’’சில கணங்கள் அமைதியாக இருந்தவன், ஒரு முடிவுடன் சொன்னான். ‘‘எங்கள் ஒற்றர் படையைச் சேர்ந்தவர்...’’‘‘ஆணா பெண்ணா..?’’வியப்பின் உச்சியில் சாளுக்கிய இளவரசன் ஊசலாடினான். ‘‘ஆண்...’’
‘‘இந்த எளியவனைச் சந்திக்கும்படி அதில் எழுதப்பட்டிருக்கிறதா..?’’
விநயாதித்தன் தன்னையும் அறியாமல் ‘ஆம்’ என தலையசைத்தான்.

தன் மீது அமர்ந்த புறாக்களை கணத்துக்கும் குறைவான நேரம் பறவை சித்தர் அளவிட்டார். ‘‘ஐந்து புறாக்கள்...’’ முணுமுணுத்தவர் தன் முன்னால் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்தவனாக நீ இருக்கவேண்டும்...’’
‘‘அத்தேசத்தின் இளவரசன் நான்...’’பறவை சித்தர் நகைத்தார். ‘‘ஐந்து புறாக்கள் என் மீது அமர்ந்தபோதே இதைப் புரிந்துகொண்டேன்... எல்லா ரகசிய நடவடிக்கைகளுக்கும் சாளுக்கியர்கள் ஐந்து புறாக்களைத்தானே பறக்க விடுவார்கள்..?’’

இமைக்காமல் அவர் முகத்தையே விநயாதித்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பறவை சித்தர் சக்தி வாய்ந்தவர் என எல்லோரும் சொல்கிறார்கள் இளவரசே... எதிர்காலத்தை அப்படியே சொல்லும் வல்லமை அவருக்கு இருக்கிறதாம்... ஒருமுறை அவரை நீங்கள் சந்தித்தால் நல்லதென்று தோன்றுகிறது...’ என தனக்கு அனுப்பப்பட்ட... இப்பொழுது தன் இடுப்பில் பாதுகாப்பாக இருக்கும் ஓலையில் எழுதப்பட்ட... வாசகங்களை நினைவுகூர்ந்தான். ‘‘நண்பர்களைக்கூட ஒற்றர் படையைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடும் வழக்கம் இளவரசருக்கு இருக்கிறது போல் தெரிகிறது...’’
அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள விநயாதித்தன் சிரமப்பட்டான்.  

‘‘ஓலையை அனுப்பியவரும் ஒரு தேசத்தின் இளவரசர்தானே..?’’
அதுவரை தன் முன் இருப்பவர் நம்பத்தகுந்தவரா இல்லையா என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய இளவரசன், தன் முன் வீசப்பட்ட இக்கேள்விக்குப் பின் ‘இவர் பறவை சித்தர்தான்’ என்ற முடிவுக்கு வந்தான். சரியாகச் சொல்லிவிட்டாரே! ‘‘ஆ...ம்... கங்க நாட்டு இளவரசன்... என் நண்பன்...’’

பறவை சித்தர் தன் இமைகளை சில கணங்கள் மூடி, பின் திறந்தார். ‘‘இந்த எளியவனைக் காண வந்ததன் காரணம்..?’’
இனி உண்மையைப் பேசுவதே நல்லது என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டதால், ‘‘பல்லவர்களை நாங்கள் பூண்டோடு அழிக்க வேண்டும்... நடைபெறும் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற வேண்டும்... அதற்கு உங்கள் ஆசி தேவை...’’ என்றான்.பறவை சித்தர் அமைதியாக இருந்தார்.

‘‘ஏன் ஆசி வழங்க மறுக்கிறீர்கள்..?’’
‘‘கோரிக்கை அப்படி...’’ ‘‘என் கோரிக்கையில் என்ன தவறு...’’
‘‘கோரிக்கையே தவறுதான்... அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்...’’‘‘ஒரு நாட்டின் இளவரசன் வேறு எப்படிப்பட்ட கோரிக்கையை வைப்பான் என்று நினைக்கிறீர்கள்..? எப்படி உங்கள் இயல்பு எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் என்று நினைப்பதோ அப்படித்தானே எதிரி நாட்டை அழிக்க வேண்டும் என ஓர் இளவரசன் விரும்புவதும்...’’
‘‘அதற்காகத்தானே உன் தந்தை அசுரப் போர் வியூகத்தைக் கைப்பற்றியிருக்கிறார்..?’’

நரம்புகள் அதிர விநயாதித்தன் அப்படியே சிலையானான். இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகம் வெளிப்படுத்தியது. ‘‘அதை நம்பச் சொல்கிறீர்களா..?’’
‘‘ஏன் நம்பக் கூடாது என்று நினைக்கிறாய்..?’’
‘‘அதைக் கொண்டு வந்தவன் கரிகாலன்...’’
‘‘கரிகாலன் யார்..?’’

‘‘எங்கள் எதிரி நாட்டு உபசேனாதிபதி. நாடே இல்லாத சோழர் குலத்தின் இளவரசன்...’’
‘‘அவன் ஏன் அந்த அசுரப்போர் வியூகத்தைக் கைப்பற்றி உங்களுக்குத் தரவேண்டும்..?’’

‘‘அவன் சாளுக்கியர்களின் நண்பன் என்று என் தந்தை நினைக்கிறார்... பல்லவர்களுடன் இருந்தபடியே அவர்களுக்கு எதிராக அவன் குழிபறித்துக் கொண்டிருப்பதாக நம்புகிறார்...’’‘‘அதை நீ நம்பவில்லையா..?’’‘‘இல்லை... பல்லவர்கள் நலனுக்காக சாளுக்கியர்களுடன் நட்பு பாராட்டும் வேடதாரிதான் அந்த கரிகாலன்...’’ ‘‘உன் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா..?’’விநயாதித்தன் தயங்கினான். ‘‘இல்லை... உள்ளுணர்வு கரிகாலனை நம்பவேண்டாம் என எச்சரித்தபடி இருக்கிறது...’’‘‘அதே உள்ளுணர்வு அசுரப் போர் வியூகம் குறித்து என்ன சொல்கிறது..?’’சாளுக்கிய இளவரசன் உதட்டைக் கடித்தான்.
 

தன் வலது தொடையில் அமர்ந்திருந்த புறாவை எடுத்து பறவை சித்தர் தடவிக் கொடுத்தார். ‘‘வினாவுக்கான விடை இந்தப் புறாக்கள்தான்... ஐந்து புறாக்கள்... இவை சாளுக்கியர்கள் ரகசிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் உபாயம் மட்டுமல்ல...’’ நிமிர்ந்து விநயாதித்தனைப் பார்த்தார்.
 
அவரே தொடரட்டும் என சாளுக்கிய இளவரசன் அமைதியாக நின்றான்.‘‘மணிமங்கலம் போர் நினைவில் இருக்கிறதா..?’’  
 
மணிமங்கலம் ஊரின் பழமையான ஆலமரத்தின் கீழே பத்மாசனமிட்டு கரிகாலன் அமர்ந்திருந்தான். சீரான பிராணாயாமத்தில் இருந்தவனின் மனக்கண்ணில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த குருக்ஷேத்திரப் போர்க் காட்சிகள் விரிந்தன.

குறிப்பாக தன் உறவினர்களுக்கும் ஆசான்களுக்கும் எதிராக போர் புரியமாட்டேன் என தன் காண்டீபத்தை தேரில் வைத்துவிட்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுனனும் பாஞ்சஜன்யம் சங்கை தன் வலது கையில் ஏந்தியபடி அவனுக்கு அபயம் அளிக்கும் பகவான் கிருஷ்ணரின் தோற்றமும்.அக்காட்சியையே கரிகாலன் உன்னிப்பாக தன் அகத்தில் கவனிக்கத் தொடங்கினான்...

‘‘எப்படி உன்னால் மறக்க முடியும்..? சாளுக்கியர்களால் மட்டுமல்ல... தமிழகத்தைச் சேர்ந்தவர்களாலும் எக்காலத்திலும் அப்போரை மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா..? விந்திய மலைக்கு தென்புறப் பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என்றால் அது மணிமங்கலம் போர்தான்...’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சொன்ன பறவை சித்தர், தன்மீது அமர்ந்திருந்த ஐந்து புறாக்களையும் ஒவ்வொன்றாக எடுத்து தடவிக் கொடுத்து அவற்றைப் பறக்கவிட்டபடியே தொடர்ந்தார்.

‘‘சாளுக்கிய மன்னர்... மாமன்னர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள் அல்லவா... அவர்... இரண்டாம் புலிகேசி... நான்கு முறை பல்லவர்களை வெற்றி கொண்டார். ஐந்தாவது முறையாகப் படை திரட்டி வந்த அவரை மணிமங்கலத்தில்தான் அப்போதைய பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் எதிர்கொண்டான்...’’ என்றபடி ஐந்தாவது புறாவைப் பறக்கவிட்டார்.

‘‘அதனால்தான் இந்த ஐந்து புறாக்கள்தான் விடை என்றேன்... அந்த மணிமங்கலம் போரில் பல்லவப் படைக்குத் தலைமை தாங்கியவன் பரஞ்சோதி. அவன் மூன்று அசுரப் போர் வியூகங்களை சாளுக்கியர்களுக்கு எதிராக வகுத்தான்... அவற்றில் ஒன்றைத்தான் பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் தேர்வு செய்தார்.

அந்த வியூகத்தின் அடிப்படையில் நடைபெற்ற போரில் முதல் முறையாக சாளுக்கியர்கள் தோற்றார்கள்... நான்கு முறை சாளுக்கியர்கள் பெற்ற வெற்றிக்கு பழிவாங்கும் விதமாக பல்லவப் படை அந்த வெற்றியை ருசித்தது... தோற்று ஓடிய சாளுக்கியப் படைகளையும் உங்கள் பாட்டனார்... மாமன்னர்... இரண்டாம் புலிகேசியையும் பரஞ்சோதி தலைமையிலான பல்லவப் படை துரத்திக் கொண்டே சென்றது... எதுவரை..? சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி வரை!

வாதாபியை அடைந்த பல்லவப் படை பரஞ்சோதியின் வழிகாட்டுதலுடன் அந்நகரையே தீக்கிரையாக்கியது... அதனால்தான் மணிமங்கலத்தில் தொடங்கி வாதாபி வரை பல்லவப் படை நிகழ்த்திய கொடூரத்தை இப்பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என மக்கள் குறிப்பிடுகிறார்கள்...’’ நிறுத்திய பறவை சித்தர், சில கணங்கள் இமைக்காமல் விநயாதித்தனைப் பார்த்தார்.

சாளுக்கிய இளவரசனுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘அப்படிப்பட்ட அசுரப் போரால்... அதுவும் பரஞ்சோதி வகுத்த ராட்சஷப் போர் வியூகத்தால்... அதே பல்லவர்களை எதிர்கொண்டு பழி தீர்க்க வேண்டும் என உன் தந்தையும் சாளுக்கிய தேசத்தின் இப்போதைய மன்னரும் இரண்டாம் புலிகேசியின் புதல்வருமான விக்கிரமாதித்தர் விரும்புகிறார்... அதற்காக இன்றைய பல்லவ தேசத்தின் உபசேனாதிபதியான கரிகாலனை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்... ஒரு மன்னரின் கடமை எதுவோ அதை அவர் நிறைவேற்றுகிறார்... இதை ஏன் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறாய்..?’’
 
‘‘அப்படியானால் நடைபெறவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரில் பரஞ்சோதி வடிவமைத்த... இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும்... அசுரப் போர் வியூகத்தை நாங்கள் பயன்படுத்தினால் வெற்றி பெறுவோம் என்கிறீர்களா..? இதையே உங்கள் ஆசியாகக் கருதலாமா..?’’ பதிலேதும் சொல்லாமல் பறவை சித்தர் எழுந்து அருகிலிருந்த புதர் பக்கமாகச் சென்றார்...நாழிகை நகர்ந்ததே தவிர அவர் வரவில்லை.
 
விநயாதித்தன் அந்தப் புதரை அடைந்து ஆராய்ந்தபோது அங்கு எந்த மனிதரும் இருப்பதற்கான - இருந்ததற்கான - அறிகுறி தெரியவில்லை!கரிகாலன் தன் கண்களைத் திறந்தான்.அகத்தில் தெரிந்த அர்ஜுனனுக்கு அபயம் அளிக்கும் கிருஷ்ணரின் தோற்றம் புறத்திலும் தெரிந்தது.
 
‘இதே தோற்றத்தில் பகவான் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கோயிலை நான் இந்த மண்ணில் கட்டுவேன்... என்னால் முடியவில்லை என்றால்... எனது சந்ததி... சோழர் குலம்... வருங்காலத்தில் இதே மணிமங்கலத்தில் ஆலயம் எழுப்பும்...’ தரையில் அடித்து சத்தியம் செய்தான்.இரண்டு நாழிகைகளுக்குப்பின் பூனை போல் அடியெடுத்து வைத்து பறவை சித்தர் வந்தார்.விநயாதித்தன் அங்கில்லை.
 

‘அப்பாடா...’ பெருமூச்சு விட்டார். ‘சித்தராக நடிப்பது எவ்வளவு கடினம்... சித்தர்கள் எப்படி உரையாடுவார்கள் என்று தெரியாமல் நம் போக்கில் வார்த்தைகளை விட்டிருக்கிறோம்... நல்லவேளையாக சாளுக்கிய இளவரசன் நம்பிவிட்டான்...’நிம்மதியுடன், அருகில் இருந்த மரத்தில் ஏறி, மூன்று கிளைகளுக்கு இடையில் கை கால்களும் வாயும் கட்டப்பட்டு இருந்த ஒரு மனிதனை இறக்கி கட்டுகளை அவிழ்த்தார்.

கட்டப்பட்ட மனிதனும் நரம்புகளும் எலும்புகளும் தெரிய... ஜடை முடியுடன் சித்தர் கோலத்தில்தான் இருந்தான்.‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்...’’ கை கால்களை உதறியபடி அந்த மனிதன் சீறினான். ‘‘நாம் இருவருமே பல்லவ ஒற்றர்கள். கரிகாலர்தான் என்னை இங்கு அனுப்பி சாளுக்கிய இளவரசனிடம் பேசச் சொன்னார்... கெடுத்து விட்டாயே...’’‘‘இல்லை... நிறைவேற்றிவிட்டேன்...’’ பறவை சித்தராக விநயாதித்தனிடம் உரையாடியவன் சிரித்தான். ‘‘என் தலைவி சிவகாமியின் கட்டளைப்படி!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17566&id1=6&issue=20201220

ரத்த மகுடம்-130

‘‘என்ன... பல்லவ நாட்டின் சக ஒற்றனால் வாய் அடைக்கப்பட்டு; கை, கால்கள் கட்டப்பட்டு; மரத்தின் கிளையில் சிறை வைக்கப்பட்டாயா..?’’
நிதானமாகக் கேட்ட கரிகாலனை பிரமிப்புடன் பார்த்தான் அந்த மனிதன்.தான், எதுவும் சொல்லாமல் நடந்த அனைத்தையும் ஏதோ நேரில் பார்த்தது போல் சொல்லும் திறமைசாலி, பல்லவப் படையின் உபசேனாதிபதியாக இருக்கும் வரை சாளுக்கியர்கள் மட்டுமல்ல... வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாலும் பல்லவ நாட்டைக் கைப்பற்ற முடியாது...மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வாயைத் திறந்து ‘‘ஆம்...’’ என்றான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20210101/19.jpg
‘‘வந்தவன் யார்..?’’
‘‘எனது தம்பி...’’
‘‘பொன்னனா..?’’
அந்த மனிதனின் கண்கள் விரிந்தன. ‘‘ம்...’’
‘‘நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்பது நமக்கு சாதகமான அம்சம்...’’
‘‘...’’
‘‘உன் சகோதரன் விநயாதித்தனிடம் என்ன சொன்னான்..?’’
‘‘மரத்தின் கிளையில் என்னை அடைத்ததால் அவர்கள் உரையாடல் துல்லியமாக என் செவியில் விழவில்லை...’’
‘‘விழுந்தவரை சொல்...’’சொன்னான்.

கரிகாலனின் நயனங்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. சில கணங்கள்தான். பிறகு சட்டென ஒளிர்ந்தன. ‘‘உத்தமா...’’
‘‘கட்டளையிடுங்கள் கரிகாலரே...’’

‘‘இரட்டைப் பிறவிகள் என்பதால் பொன்னனும் நீயும் அச்சு அசலாக ஒரே உருவமாக இருப்பீர்கள்...’’
கரிகாலன் முடிப்பதற்குள் உத்தமன் இடைமறித்தான். ‘‘நாசியின் அளவு மட்டுமே வேறுபடும்... அது கூட சிறிய அளவில்தான்...’’
‘‘அதாவது யார் உத்தமன்... யார் பொன்னன் என்பதை சட்டென கண்டுபிடிக்க முடியாது... அப்படித்தானே..?’’
‘‘எங்கள் உறவினர்களே பல நேரம் குழம்பியிருக்கிறார்கள்...’’

கரிகாலன் புன்னகைத்தான். ‘‘இது போதும். அடுத்த ஆட்டத்தைத் தொடங்கலாம்... உத்தமா நேராக காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு செல்... அங்குதான் இப்பொழுது விநயாதித்தன் இருக்கிறான். அவன் மட்டுமல்ல...’’
உத்தமன் இமைக்காமல் கரிகாலனைப் பார்த்தான்.

‘‘கடிகை பாலகனும், காபாலிகனும், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரரான அனந்தவர்மரும்கூட அங்குதான் இருக்கிறார்கள்...இதே பறவை சித்தராக அங்கு செல்... விநயாதித்தனைச் சந்தித்து...’’ என்றபடி உத்தமனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை கரிகாலன் முணுமுணுத்தான்.
உத்தமனின் வதனம் மலர்ந்தது. ‘‘இம்முறை வெற்றியுடன் திரும்புகிறேன் கரிகாலரே...’’கரிகாலன் புன்னகைத்தான்.

‘‘சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்றீர்கள் மன்னா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபர் வந்தார்.
விக்கிரமாதித்தர் அலட்சியமாக அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.
‘‘செல்ல வேண்டிய இடத்துக்கு...’’
‘‘கணிகையர் இல்லத்துக்கா..?’’
சாளுக்கிய மன்னரின் நயனங்கள் தீயைக் கக்கின. ‘‘யாரிடம் உரையாடுகிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா..?’’
‘‘எங்கள் மன்னரிடம் பேசுகிறோம் என்று தெரிந்துதான் உரையாடுகிறேன்...’’

‘‘அறிந்துமா இப்படியொரு வினாவைத் தொடுத்தீர்கள்..?’’
‘‘தொடுத்ததற்கு உரிய பதில் வராதபோது, இதுவாக இருக்கலாமோ என்று இன்னொரு கேள்வியை எழுப்பினேன்...’’
‘‘எழுப்பப்பட்ட வினா தவறானது...’’
‘‘எனில் சரியான விடையைப் பகிரலாமே...’’
‘‘பதில் சொல்ல விருப்பமில்லை... நீங்கள் செல்லலாம்...’’
‘‘அறிந்து கொள்ளாமல் செல்ல முடியாது மன்னா...’’
‘‘நான் மன்னன்...’’

‘‘அதனால்தான் எங்கு சென்றீர்கள் என்று கேட்கிறேன்...’’
ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.
அப்பார்வையை எதிர்கொண்டு அசையாமல் நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.
‘‘ஒரு மன்னனுக்கு இந்த உரிமை கூட இல்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’

‘‘காரணம்..?’’
‘‘நாம் எதிரி நாட்டில் இருப்பதால்...’’
இதைக் கேட்டு கடகடவெனச் சிரித்தார் விக்கிரமாதித்தர். ‘‘இந்த காஞ்சி மாநகரம் இப்பொழுது சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது... இன்று பல்லவ நாட்டின் மன்னனும்் நான்தான்...’’
‘‘பெயர் அளவுக்கு...’’

‘‘என்ன சொன்னீர்கள்..?’’
‘‘பெயர் அளவுக்கு பல்லவ நாட்டை நாம் ஆள்கிறோம் என்று சொன்னேன்...’’
‘‘இப்படிச் சொல்பவர் எனக்கு
அமைச்சராக இருக்கிறார்...’’

‘‘சின்ன திருத்தம் மன்னா... ஏதோ ஒரு துறையின் அமைச்சராக அல்ல... போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்...’’
‘‘எனில் சாளுக்கியர்கள் கோழைகள் என்கிறீர்கள்...’’
‘‘பல்லவப் படை இன்னும் அழிக்கப்படவில்லை என நினைவுபடுத்துகிறேன்...’’
‘‘எனவே எங்கு சென்றாலும் உங்களிடம் உத்தரவு பெற்றுவிட்டுச் செல்லவேண்டும் என கட்டளையிடுகிறீர்கள்...’’
‘‘மன்னரின் உயிரைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்கிறேன்...’’

‘‘தனியாக வருபவனைக் கொல்லும் அளவுக்கு பல்லவர்களின் நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’
‘‘யுத்தத்தில் தரம் தாழ்தல்... அறம்... தர்மம்... என எதுவும் கிடையாது மன்னா... சொல்லப்போனால் போர்க்களத்தில் பொது விதி என்றே எதுவும் இல்லை... எது எப்படி எந்த விதத்தில் நடந்தாலும் சகலமும் ராஜதந்திரமாகவே கருதப்படும்...’’
‘‘... என்கிறதா சாஸ்திரம்...’’
‘‘... என்கிறது அனுபவம்...’’

‘‘எனவே, ஒரு நாட்டின் மன்னன் தன் போர் அமைச்சருக்கு கட்டுப்பட்டவன்... அப்படித்தானே?’’
‘‘தன் படைகளுக்கு கட்டுப்பட்டவன்...’’ தலை நிமிர்ந்து சொன்னார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னருக்காகத்தான் படைகள்... மன்னரால்தான் படைகள்... மன்னரைச் சுற்றித்தான் படைகள்... படைகளின் அச்சாணியே மன்னர்தான் என்னும்போது அச்சாணியைப் பாதுகாக்க வேண்டியது படைகளின்... படைவீரர்களின் கடமை... அப்படைகளின்... படை வீரர்களின் தலைவனான போர் அமைச்சரின் பொறுப்பு...’’
‘‘அந்தப் பொறுப்பின் பொருட்டுதான் என்னை நிற்கவைத்து விசாரணை நடத்துகிறீர்களா..?’’
‘‘வழிநடத்துகிறேன் என்று சொல்வது சரியாக இருக்கும் மன்னா...’’


‘‘எப்படி..? தன் மன்னரையே வேவு பார்ப்பதன் வழியாகவா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரை நெருங்கி வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களால் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்
அமைச்சரே...’’

‘‘நன்றி மன்னா... என் கடமையை நான் சரிவர செய்கிறேன் என்பதை தாங்கள் புரிந்து கொண்டதற்கு...’’
விக்கிரமாதித்தரின் உதட்டில் இகழ்ச்சி வழிந்தது. ‘‘நான் எங்கு சென்றேன் என தங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் ‘எங்கு சென்றீர்கள்’ என என்னிடமே கேட்கிறீர்கள்... இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்..?’’
‘‘உண்மையை... சென்ற இடத்தில் நடந்ததைச் சொல்லுங்கள்...’’
‘‘உங்களால் அனுப்பப்பட்டவர்கள் எதுவும் சொல்லவில்லையா..?’’
‘‘இல்லை...’’

‘‘ஏன்... அவர்கள் சரிவர பணியாற்றவில்லையா..?’’
‘‘சாளுக்கிய குடிமகன் தன் பணியை சரிவர செய்வதுபோல் வேறு எந்த தேசத்தவனும் தன் கடமையைச் செய்வதில்லை...’’
‘‘அப்படியானால் எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்..?’’
‘‘மன்னரின் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வதுதான் அவர்களது பணியே தவிர பாண்டிய மன்னருடன் என்ன பேசினார் என ஒட்டுக் கேட்பதல்ல...’’

‘‘ஆக, நான் மதுரைக்கு ரகசியமாகச் சென்றது உங்களுக்குத் தெரியும்...’’
‘‘அரிகேசரி மாறவர்மருடன் தனிமையில் என்ன பேசினீர்கள் என்று தெரியாது...’’
‘‘தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்...’’
‘‘பாண்டிய நாட்டு மன்னருடன் எங்கள் சாளுக்கிய மன்னர் என்ன பேசினார் என்று தெரிய வேண்டியது சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சரின் கடமை...’’

‘‘சொல்ல மறுத்தால்..?’’
‘‘தன் நாட்டின் நலனுக்காகவும், தன் குடிமக்களின் மகிழ்ச்சிக்காகவும், தன் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காகவும் வாழும் எங்கள் மன்னர் ஒருபோதும் தன் பொறுப்பில் இருந்து மீற மாட்டார்...’’
‘‘கடமை... பொறுப்பு... விசாரணை... நானும் மனிதன்தானே..?’’
‘‘மன்னன் ஒருபோதும் மனிதனல்ல... அவர் தன் தேசத்தின்... நாட்டு மக்களின் பிரதிநிதி...’’
விக்கிரமாதித்தர் பெருமூச்சு விட்டார். ‘‘உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்...’’

‘‘சீனனை மதுரை தச்சர் வீதியில் தாங்கள் சந்தித்தது... கச்சையை எரித்தபோது கிடைத்த தேவ மூலிகையின் சாம்பல்... பொக்கிஷங்கள் தொடர்பான குறியீடுகள்... இவை எல்லாம் உங்கள் போர் அமைச்சரான அடியேனும் அறிவேன்... காஞ்சியிலும் அதேபோன்று நிகழ்ந்தது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் தன் மன்னரை சங்கடத்துடன் நோக்கினார். ‘‘அறிந்துகொள்ள விரும்புவது பாண்டிய மன்னர் தங்களிடம் என்ன சொன்னார் என்பதை...

காரணம், விருந்தினராக நீங்கள் மதுரைக்குச் செல்லவில்லை... பகையாளியாகவும் நுழையவில்லை... ரகசியமாகச் சென்றீர்கள்... உங்களை எதிர்கொண்டு உபசரித்து அதே ரகசியத்துடன் அரிகேசரி மாறவர்மர் அனுப்பி வைத்திருக்கிறார்... இதற்கு நடுவில் பரம ரகசியமாக உங்களுடன் உரையாடியிருக்கிறார்... அந்த உரையாடலில், நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போர் குறித்து பேச்சு இடம்பெற்றதா..?’’
‘‘இல்லை...’’‘‘அப்படியானால்..?’’‘‘போர் குறித்து உங்களிடமும் விநயாதித்தனிடமும் என்ன சொன்னாரோ அதையேதான் உறுதிப்படுத்தினார்... ஆனால், வேறொரு தகவலைச் சொன்னார்...’’

‘சொல்லுங்கள்’ என்பதுபோல் அவரையே பார்த்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘பல்லவ இளவரசியான சிவகாமியை நாம் சிறைப்பிடித்து... அவள் போலவே இருக்கும் நம் ஒற்றர் படைத்தலைவியை ‘சிவகாமி’யாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டிருக்கிறோம் அல்லவா... அதுவே நாம் செய்த பெரிய பிழை என்கிறார் பாண்டிய மன்னர்...’’‘‘இதில் என்ன பிழையை அவர் காண்கிறார்..?’’

‘‘பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு இரத்த சம்பந்தமாக மட்டுமல்ல... வளர்ப்பு ரீதியிலும் மகளே கிடையாதாம்...’’
‘‘அதுதான் தெரியுமே மன்னா... நரசிம்மவர்ம பல்லவனின்
காதலியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப்
பேத்திதானே இந்த சிவகாமி...’’‘‘இல்லை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்...’’
‘‘என்ன...’’ அதிர்ந்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘ஆம் அமைச்சரே... வாதாபி தீக்கிரையாகட்டும் என சபித்து... அந்த சபதம் நிறைவேறியதைப் பார்த்து ரசித்த நடன மங்கையான சிவகாமி... எந்த பெண்பிள்ளையையும் வளர்க்கவும் இல்லையாம்... பேத்தியாகக் கருதவும் இல்லையாம்... மாறாக ஓர் ஆண்
மகவை தன் பேரனாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினாராம்!’’

‘‘உத்தமனை காஞ்சி - மல்லைக்கு இடையில் இருக்கும் சத்திரத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா..?’’ தலையை
உயர்த்தி சிவகாமி கேட்டாள்.பதிலேதும் சொல்லாமல் அவள் இதழில் கரிகாலன் முத்தமிட்டான்.
‘‘நானும் பொன்னனை அதே இடத்துக்கு விநயாதித்தனைச்
சந்தித்துப் பேசும்படி அனுப்பியிருக்கிறேன்!’’ என்றபடி கரிகாலனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் பதித்து ஒன்றினாள்!
Posted

ரத்த மகுடம்-131

‘‘இதற்காகவா நிலைகுலைந்திருக்கிறீர்கள்..?’’ நிதானமாகக் கேட்டார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்..? விளையாடுகிறீர்களா..?’’ படபடத்த விக்கிரமாதித்தர் சாளரத்தை நோக்கித் திரும்பினார். கீழே தெரிந்த காஞ்சி மாநகரத்தின் நடமாட்டத்தை அவரது கருவிழிகள் ஆராயவில்லை. மாறாக வானில் தெரிந்த வெளியை சலனமற்று பார்த்தன.அவரது நடமாட்டத்தையே ஸ்ரீராமபுண்ய வல்லபரின் கண்கள் ஆராய்ந்துகொண்டிருந்தன.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210108/24.jpgகணங்கள் யுகங்களாயின. வானில் பறந்த ஐந்து புறாக்கள் விக்கிரமாதித்தரை நடப்புக்கு இழுத்து வந்தன. இமைக்காமல் பறந்த புறாக்களையே பார்த்தவர் சட்டென திரும்பினார்.

முன்பு அவர் திரும்பி ஸ்ரீராமபுண்ய வல்லபரை ஏறிட்டபோது அந்தப் பார்வையில் வெறுமை படர்ந்திருந்தது. இப்பொழுதோ கூர்மை பரவியிருந்தது. ‘‘போர் அமைச்சரே...’’ என்று அவர் அழைத்தபோது அந்த அழைப்பில் தோரணை வெளிப்பட்டதை சாளுக்கிய போர் அமைச்சர் உணர்ந்து கொண்டார். அதற்கேற்ப ‘‘உத்தரவிடுங்கள் மன்னா...’’ என்று அவர் பதிலளித்தார். விக்கிரமாதித்தரின் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘‘இங்கு வாருங்கள்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவர் அருகில் சென்றார்.‘‘ஐந்து புறாக்கள் பறக்கின்றன...’’ சாளுக்கிய மன்னர் சுட்டிக் காட்டினார்.

‘‘ஆம் மன்னா... அது என்றும் நம் மாமன்னராகத் திகழும் தங்கள் தந்தையார் இரண்டாம் புலிகேசி அவர்களின் போர் முறையை நமக்கு உணர்த்துகிறது... நடக்கவிருக்கும் சாளுக்கிய - பல்லவப் போரில் நாம் வெற்றிபெறுவோம் என அறிவிக்கிறது...’’
‘‘உண்மையாகவா..?’’‘‘சத்தியமாக...’’‘‘எனக்கென்னவோ வேறொன்று தோன்றுகிறது...’’மன்னரே சொல்லட்டும் என அமைதியாக நின்றார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘என் தந்தையார் ஐந்து முறை பல்லவர்கள் மீது போர் தொடுத்தார்... அதில் நான்கு முறை சாளுக்கியர்களே வெற்றிபெற்றார்கள்... ஐந்தாவது முறை...’’
‘‘அந்த நிலை இப்பொழுது ஏற்படாது மன்னா...’’ சட்டென சாளுக்கிய போர் அமைச்சர் இடைவெட்டினார். ‘‘ஆறாவது முறை வெற்றி நமக்குத்தான்... அதாவது ஐந்து வெற்றிகள்... பறக்கும் புறாக்கள் அதைத்தான் உணர்த்துகின்றன...’’
‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’
‘‘தீர்மானமாகச் சொல்கிறேன்...’’

‘‘ஆனால், நம் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் என்கிறாரே பாண்டிய மன்னர்..?’’
‘‘அவரால் அப்படித்தான் சொல்ல முடியும்...’’
‘‘அப்படியா..?’’

‘‘ஆம் மன்னா... தட்சிணப் பிரதேசத்தில் இருந்து வரும் படைகளிடம் ஒரு தமிழ் மன்னர் தோற்பதை இன்னொரு தமிழ் மன்னர் விரும்பமாட்டார்... ஏனெனில் வெற்றி பெறும் தட்சிணப் பிரதேச படைகள் அடுத்து தன்னைத்தான் குறி வைக்கும் என்பது அவருக்குத் தெரியும்...’’
‘‘பல்லவர்கள் தமிழர்களா..?’’‘‘தமிழர்களாக நிலைபெற்றவர்கள்...’’

‘‘எப்பொழுது முதல்..?’’‘‘தங்கள் தந்தையாரால் தோற்கடிக்கப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன் காலம் முதல்... அவன் எப்பொழுது சமணத்தை கை
கழுவி சைவத்தை ஏற்றானோ அப்பொழுதே அவனையும் தமிழனாக மக்கள் ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள்...’’
‘‘சாளுக்கியர்களான நாமும் சைவர்கள்தானே..?’’

‘‘ஆம்... அதனால்தான் பல்லவர்களைத் தோற்கடித்து தட்சிணப் பிரதேசம் முதல் உறையூர் வரை தமிழர் ஆட்சியை நிறுவப் போகிறோம்... காலூன்றி நிலைபெற்றதும் பாண்டியர்களையும் வீழ்த்தி தென்னகம் முழுக்க கோலோச்சப் போகிறோம்... சக்கரவர்த்தியாக நீங்கள் முடிசூடப் போகிறீர்கள்...’’
‘‘அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சி பிழை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்... சிவகாமியை ஓர் ஆயுதமாக நாம் உருவாக்கியது நாம் செய்த பெரும் தவறு என சுட்டிக் காட்டுகிறார்...’’‘‘நாம் செய்தது சரி என காலம் அவருக்குப் புரிய வைக்கும்...’’
‘‘எப்படி..?’’

‘‘இப்படித்தான் மன்னா...’’ என்றபடி விளக்க ஆரம்பித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘முதன் முதலில் நம் மாமன்னரும் தங்கள் தந்தையாருமான இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தபோது மகேந்திர வர்மர் மன்னராக இருந்தார். அப்போது நரசிம்மவர்ம பல்லவன் பதின் பருவத்து இளைஞன்; இளவரசன். அக்காலத்தில்தான் பல்லவ நாட்டில் கற்கோயில்கள் எழுப்பப்பட்டு வந்தன. தலைமைச் சிற்பியாக ஆயனச் சிற்பி இருந்தார். அவரது மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியை அன்றைய பல்லவ இளவரசரான நரசிம்மவர்மன் விரும்பினான். அவளையே உங்கள் சிறிய தந்தையும் சாளுக்கிய ஒற்றராக பல்லவ நாட்டில் பவுத்த துறவியாக நடமாடியவருமான நாகநந்தியும் விரும்பினார்.

ஆனால், சிவகாமி நேசித்தது பல்லவ இளவரசனை. எனவே அவளை நாகநந்தி நம் தலைநகரான வாதாபிக்கு கவர்ந்து சென்றார். நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் ஆசியுடன் அவளைச் சிறை வைத்தார்.அவளை மீட்க நரசிம்மவர்மன் முடிவு செய்தான். பல்லவ நாட்டின் மன்னனாக, தான் பதவியேற்றதும் பெரும் படையைத் திரட்டி சாளுக்கியர்களான நம் மீது போர் தொடுத்தான். அந்த யுத்தத்துக்கு பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி தலைமை வகித்தான்.
 
குருேக்ஷத்திரப் போரில் பாண்டவர்கள் கையாண்டது போன்ற... கலிங்கத்தை அசோகச் சக்கரவர்த்தி நசுக்கியது போன்ற... அசுரப் போர் வியூகத்தை அமைத்து நம் தலைநகரான வாதாபியை பல்லவர்கள் தாக்கினார்கள்... தீ வைத்துக் கொளுத்தினார்கள். சிவகாமியை மீட்டுச் சென்றார்கள்.
 

அப்போரில் சாளுக்கியர்களான நாம் தோல்வி அடைந்ததற்கும் அந்த யுத்தத்தில் நம் மாமன்னரான இரண்டாம் புலிகேசியின் சிரசு சீவப்பட்டதற்கும் காரணம் பல்லவர்கள் அல்ல...’’

‘‘என்ன சொல்கிறீர்கள் போர் அமைச்சரே... பல்லவர்கள் அப்போரில் வெற்றி பெறவில்லையா..?’’ விக்கிரமாதித்தரின் புருவம் உயர்ந்தது.
‘‘இல்லை மன்னா...’’‘‘பிறகு யார் வெற்றி பெற்றார்கள்..?’’‘‘ஆயனச் சிற்பியின் மகள்... உங்கள் சிறிய தந்தையால் விரும்பப்பட்ட நாட்டியத் தாரகை... சிவகாமிதான் வெற்றி பெற்றாள்... ‘என்னை சிறை வைத்திருக்கும் இந்த வாதாபியை தீக்கு உணவாக்குகிறேன்...’ என்று அவள் செய்த சபதம்தான் வெற்றி பெற்றது...’’‘‘ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதை ஏற்றாலும்... அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு..?’’

‘‘இதற்கு என தாங்கள் குறிப்பிடுவது அந்த நாட்டியத் தாரகை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியாக நாம் இன்று உலவ விட்டிருக்கும் சிவகாமியை... நமது ஆயுதத்தைக் குறிப்பிடுகிறீர்களா..?’’

‘‘ஆம் போர் அமைச்சரே... அப்படி நாம் நடமாடவிட்டதே பிழை என சுட்டிக் காட்டுகிறார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர். ஏனெனில், ஆயனச் சிற்பியின் மகள் எந்தப் பெண்ணையும் வளர்க்கவும் இல்லையாம்... எந்த சிறுமியையும் தன் வளர்ப்புப் பேத்தியாக அறிவிக்கவும் இல்லையாம்... மாறாக ஒரு சிறுவனைத்தான் தன் பேரனாக வளர்த்தாராம்...’’‘‘அதனால் என்ன மன்னா..?’’ சலனமின்றி கேட்டார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... நாம் உருவாக்கிய ஆயுதமே அல்லவா தவறாகப் போய்விட்டது... அதனால்தானே நான் நிலைகுலைந்து தவிக்கிறேன்...’’‘‘அதற்கு அவசியமே இல்லை மன்னா... நாம் உருவாக்கிய ஆயுதம் சரியானது... அது இலக்கை நோக்கிப் பாய்ந்து தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது... தங்களை சமாதானப்படுத்த இப்படிச் சொல்லவில்லை. உள்ளதை உள்ளபடி அறிவிக்கிறேன்...’’ கம்பீரமாகச் சொன்னார் சாளுக்கிய போர் அமைச்சர்.விக்கிரமாதித்தர் அவரை உற்றுப் பார்த்தார்.

‘‘மன்னா... நீங்கள் தடுக்கத் தடுக்க சிவகாமி என்னும் இளம்பெண்ணைத் தயார் செய்து... அவளை சாளுக்கியர்களின் ஆயுதமாக உருவாக்கி... அவள் ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியால் வளர்க்கப்பட்ட பேத்தி என அறிவித்து... இப்போதைய பல்லவ மன்னனான பரமேஸ்வரனின் வளர்ப்பு மகள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி... பல்லவர்கள் மத்தியில் ஊடுருவவிட்டது யார்..?’’
‘‘நீங்கள்தான்...’’

‘‘நான் யார் மன்னா..?’’
‘‘எனது அமைச்சர்... என் மகனின் குரு...’’
‘‘விநயாதித்தனுக்கு நான் குருவாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... தங்கள் அமைச்சரவையில் எந்தத் துறைக்கு நான் அமைச்சன் மன்னா..?’’
‘‘போர் துறைக்கு...’’

‘‘இதை ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா..?’’
‘‘எப்போது அதை நான் மறுத்தேன்..?’’
‘‘நல்லது மன்னா... நமது மாபெரும் சைன்யத்தை என் பொறுப்பில் விட்டிருக்கிறீர்கள்... பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்... இதை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கும் நான் உங்களைத் தலைகுனிய வைப்பேனா..?’’

‘‘போர் அமைச்சரே...’’
‘‘மன்னா... பாண்டிய மன்னர் தங்களிடம் அந்தரங்கமாக இத்தகவலைச் சொன்னது இருக்கட்டும்... அதைக் கேட்டு நீங்கள் நிலை
குலையலாமா..? எங்கள் போர் அமைச்சர் தவறு செய்யமாட்டார் என்று அல்லவா நீங்கள் நம்பியிருக்க வேண்டும்!’’
‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’

 ‘‘...’’
‘‘மன்னா... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி எந்தப் பெண்ணையும் வளர்க்கவும் இல்லை... எந்த சிறுமியையும் தன் பேத்தியாகக் கருதவும் இல்லை என்பதைக்கூட அறியாமலா உங்கள் போர் அமைச்சன் இருப்பான்..?’’
‘‘...’’
‘‘தெரிந்தேதான் ஒரு ‘சிவகாமி’யை உருவாக்கியிருக்கிறேன்... அவளையும் பல்லவர்கள் மத்தியில் ஊடுருவவிட்டிருக்கிறேன்... எதற்குத் தெரியுமா மன்னா..? பழைய சிவகாமி வாதாபியை எரித்தாள்... நம் சிவகாமி பல்லவர்களைப் பூண்டோடு எரித்துச் சாம்பலாக்குவாள்... அந்த சிவகாமி சாளுக்கியர்களுக்கு தோல்வியைக் கொடுத்தாள். இந்த சிவகாமி பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற உங்கள் சபதத்தை நிறைவேற்றுவாள்... ஒரு சிவகாமியால்் நிகழ்ந்தது இன்னொரு சிவகாமியால் சரிசெய்யப்பட்டால்தான் அது சாளுக்கியர்களுக்குப் பெருமை சேர்க்கும்.

அதற்காகத்தான் பாடுபடுகிறேன். என்னை நம்புங்கள்...’’ தழுதழுத்த ஸ்ரீராமபுண்ய வல்லபரை நெருங்கி தன் மார்போடு அணைத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களிடம் தெரிவிக்காமல் நான் மதுரை சென்றதும்... சில கணங்களுக்கு முன் உரிய பதில்களை உங்களுக்கு நான் தெரிவிக்காததும் எனது தவறுதான். மன்னித்து விடுங்கள்...’’‘‘மன்னா... என்ன இது... என்னிடம் போய்...’’‘‘உங்களிடம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் யார்..? சாளுக்கிய தேசத்துக்காகவே வாழும் எங்கள் போர் அமைச்சர்... நான் யார்..? உங்கள் பிரதிநிதி... அப்படியிருக்க மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு..?’’
‘‘மன்னா...’’‘‘இப்போது சொல்லுங்கள்... நீங்கள் தயாரித்த ஆயுதமான ‘சிவகாமி’ யார்..?

பல்லவ இளவரசி என்று கருதி ரகசியமாக நாம் அடைத்து வைத்திருக்கும் ‘சிவகாமி’ யார்..? ஆயுதமான சிவகாமியும் பல்லவ இளவரசியான சிவகாமியும் ஒரே உருவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன..?’’‘‘அது மட்டும் போதுமா மன்னா அல்லது ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி எந்த சிறுவனை தனது பேரனாக வளர்த்தார் என்றும் தங்களுக்குத் தெரியவேண்டுமா..?’’ கேட்டுவிட்டு தன் கண்களைச் சிமிட்டினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.   

‘‘கரிகாலரே...’’‘‘ம்...’’ என்றபடி சிவகாமியின் கொங்கைகளுக்கு இடையில் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்.‘‘உங்களைக் காண ஒருவர் துடிக்கிறார்...!’’‘‘யார்..?’’ கேட்ட கரிகாலனின் கரங்கள் அவளது பின்னெழுச்சிகளை அழுத்தின.‘‘நம் பாட்டி. ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி!’’

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17613&id1=6&issue=20210103

ரத்த மகுடம் -132

‘‘நம் பாட்டியா..?’’ சிவகாமியின் கொங்கைகளுக்கு இடையில் முணுமுணுத்த கரிகாலன், மெல்ல தன் கீழ் உதட்டால் அவளது கச்சையை மேல் நோக்கி நகர்த்த முற்பட்டான். ‘‘ஆம்... நம் பாட்டி... நம்மிருவரின் பாட்டி...’’ கரிகாலனின் காது மடல்களைக் கவ்வியவள், அவனது கரங்கள் தன் பின்னெழுச்சியை அழுத்தியதும் ‘‘ம்...’’ கொட்டினாள்.சிவகாமியின் சுவாச வெளியேற்றம் அவனது செவிக்குள் ஊடுருவியதும் அவன் தேக நரம்புகள் அதிர்ந்தன. அந்த சப்தஸ்வரங்களை அவளது தேகம் பரிபூரணமாக ரசித்தது. இழைந்தது. லயித்தபடியே தன் தலையை உயர்த்தி அவனது கேசத்தை கோதினாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210115/16.jpg
கரிகாலனின் கருவிழிகள் அவளது நயனங்களை ஆராய்ந்தன.‘‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்..?’’ தன் நாவினால் அவனது நாசியை அளந்தாள்.
‘‘கணந்தோறும் மலர்கிறாய்...’’
‘‘மலர வைக்கிறீர்கள்...’’
‘‘நானா..?’’

‘‘பின்னே இல்லையா..?’’ கேட்டவளின் உதடுகள் அவனது கீழ் உதட்டைக் கடித்தன.
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’
‘‘பாட்டியை எப்பொழுது சந்தித்தாய்..?’’
‘‘என்னையா கேட்கிறீர்கள்..?’’
‘‘இல்லை... இதனிடம் கேட்கிறேன்...’’
http://kungumam.co.in/kungumam_images/2021/20210115/16a.jpg
கேட்டவனின் பார்வை சென்ற திக்கைக் கண்டதும் புன்னகைத்தாள். ‘‘அலுக்கவே இல்லையா..?’’
‘‘அதுதான் சொன்னேனே..?’’
‘‘எப்பொழுது..?’’
‘‘சில கணங்களுக்கு முன்...’’
‘‘என்னவென்று..?’’
‘‘கணந்தோறும் மலர்கிறாய்... கணந்தோறும் ரசிக்கிறேன்...’’

‘‘ஆளைப் பார்...’’ முழுமையாக அவன் உதட்டை ஆக்ரமித்தவளின் உமிழ்நீரை முழுமையாகச் சுவைத்தான். ஊற்று வற்றுவதில்லை. எனவே சுவைப்பதும்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு சிவகாமியே தன்னை விடுவித்துக் கொண்டாள். அவன் மீது கவிழ்ந்திருந்தவள் விலகி அவன் அருகில் படுத்தாள். ‘‘விட்டால் கடித்துத் தின்றுவிடுவீர்கள்... பிறகு எதுவும் மிஞ்சாது...’’ ‘‘அப்படியொரு நிலை உனக்கு ஏற்படாது...’’
‘‘ஏனோ..?’’

‘‘கடிக்க கடிக்க வளரும் வரத்தைப் பெற்றவளல்லவா நீ..?’’ திரும்பி தன் கரங்களை அவளது கொங்கைகளின் மீது வைத்தான்.நகராதபடியும் சில்மிஷங்கள் செய்யாதபடியும் அவன் கையை கெட்டியாகப் பிடித்தாள். கைகள் சொன்ன செய்தி கரங்களுக்குப் புரிந்தது. வைத்த கையை எடுத்துவிட்டு மல்லாந்து படுத்தான். ‘‘சொல் சிவகாமி...’’கருவிழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ‘‘நீங்கள் ஆபத்தானவர். என் சொற்களை மட்டுமல்ல... சொற்களுக்குள் புதையுண்ட வாக்கியங்களையும் அறிந்து கொள்கிறீர்கள்... செய்கையை வைத்தே பதிலைச் சொல்லி விடுகிறீர்கள்... தேகத்தின் அசைவை உணர்ந்தே நடக்கிறீர்கள்...’’‘‘இதைச் சொல்வதற்காகத்தான் என் கரங்களைப் பிடித்தாயா..?’’

‘‘இல்லை...’’ சிவகாமி எழுந்து அமர்ந்தாள். ‘‘பாட்டிக்கு உடனடியாக உங்களைக் காண வேண்டுமாம். அதுவும் அவசரமாக...’’
கரிகாலன் தன் தலையை உயர்த்தி அவள் மடி மீது சாய்த்தான். ‘‘பாட்டி எப்படியிருக்கிறாள்..?’’
‘‘தெரியாது...’’ அவனது குழலுக்குள் அவள் விரல்கள் அலைபாய்ந்தன. ‘‘பாட்டியை நான் சந்திக்கவில்லை...’’
‘‘ஏன்..?’’

‘‘நீங்கள் இல்லாமல் அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை...’’ குனிந்து அவன் தலையில் முத்தமிட்டாள். ‘‘செல்லலாமா..?’’
‘‘பாட்டியின் உடல்நிலை எப்படியிருக்கிறதாம்..?’’ முகத்தை திருப்பி அவள் மடியில் மல்லாந்து படுத்தான்.

‘‘பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் சொன்னவர் அதைத்தானே முதலில் குறிப்பிட்டிருப்பார்..?’’‘‘எனில் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பொருள்...’’‘‘ஆம்...’’ அவன் வதனத்தை தன் ஆள்காட்டி விரலால் வட்டமிட்டாள்.

‘‘அப்படியானால் சரி... இப்பொழுது பாட்டியைச் சந்திக்க வேண்டாம்... முக்கியமான செய்தி என்றால் தகவல் சொல்பவரின் வழியாகவே தெரிவிக்கும்படி சொல்லிவிடு...’’ தன் முகத்தை அவளது தொடைகளுக்கு இடையில் புதைக்க முற்பட்டான்.

சிவகாமி அதைத் தடுத்தாள். ‘‘இது தவறு... நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது...’’‘‘கூடாதா..?’’‘‘கூடவே கூடாது. வயதானவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமை... அதுவும் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு பேரனுக்கு இருக்கிறது! அதுவும் அவராக உங்களைக் காண வேண்டும் என்று சொல்லி அனுப்பிய பிறகும் சந்திக்காமல் இருப்பது மிகப் பெரிய தவறு. உடனே பாட்டியைப் பார்க்க புறப்படுங்கள். நானும் உடன் வருகிறேன்...’’‘‘இப்பொழுது வேண்டாம் சிவகாமி...’’ கரிகாலன் எழுந்து அமர்ந்தான். ‘‘கடைசியாக நாம் பாட்டியை எப்பொழுது பார்த்தோம் என்று நினைவில் இருக்கிறதா..?’’

‘‘நன்றாக. வரும் சித்திரை வந்தால் மூன்று ஆண்டுகள்...’’
‘‘இடைப்பட்ட காலத்தில் நாம் ஏன் பாட்டியைச் சந்திக்கவில்லை..?’’
சிவகாமி பதில் அளிக்கவில்லை.

அவள் முகத்தை தன்னிரு கரங்களிலும் ஏந்தினான். ‘‘காரணம் புரிகிறதல்லவா..?’’
அவன் நயனங்களுடன் தன் கருவிழிகளைக் கலந்தாள், ‘‘ம்...’’‘‘உனது சபதம் இன்னும் நிறைவேறவில்லை சிவகாமி... அது நிறைவேறிய பிறகு நாம் பாட்டியைச் சந்திப்பதுதான் அவர்களுக்கு கவுரவமாக இருக்கும். பெருமையும் சேர்க்கும்...’’சிவகாமியின் உதடுகள் துடித்தன.

தன் விரல்களால் அவளது உதடுகளை நீவினான். ‘‘நீயும் நானும் யார்..? பாட்டியால் வளர்க்கப்பட்டவர்கள். அப்பொழுது எனக்கு வயது பத்து. உனக்கு எட்டு. நம்மிருவருக்குமே விவரம் தெரிய ஆரம்பித்த பருவம் அது. அக்கணம் முதல் பாட்டியுடன்தான் இருந்தோம். நமக்கு உணவு ஊட்டியது முதல் தன் மடியில் படுக்க வைத்து நம்மை உறங்க வைத்தது வரை சகலமும் பாட்டிதான்.

நாள்தோறும் பாட்டியிடம் கதை கேட்போம். அவரும் சலிக்காமல் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்வார். ஆனால், நம் இருவருக்கும் பல்லவர்களின் வீரத்தைக் குறித்து கேட்கத்தான் ஆசை. பாட்டிக்கும் அதுவேதான் விருப்பம். எனவே பல்லவர்களின் பெருமையை... கற்கோயில்கள் கட்ட ஆரம்பித்த மகேந்திரவர்மரின் கனவை... நரசிம்மவர்மரின் வீரத்தை... பரஞ்சோதியின் விசுவாசத்தை... உணர்ச்சிபூர்வமாகச் சொல்வார்.

அனைத்தையும் கேட்ட பிறகும் நாம் சமாதானம் ஆக மாட்டோம். இறுதியாக ‘நீங்கள் சபதம் செய்ததைப் பற்றிச் சொல்லுங்கள் பாட்டி’ என்று ஒவ்வொரு முறையும் கேட்போம். பாட்டியும் பெருமூச்சுடன் மீண்டும் மீண்டும், தான் ‘வாதாபியை தீக்கிரையாக்குவதாகச் செய்த சபதம்’ குறித்து சொல்வார். விவரிப்பார். கண்கள் விரிய அதைக் கேட்டபடியே அவர் மடியில் உறங்குவோம்.

அப்படி வளர்ந்த நமக்கு... அதுவும் எனக்கு... சபதத்தின் அருமையும் அவசியமும் முக்கியத்துவமும் தெரியும் சிவகாமி. எனவேதான், நீ செய்திருக்கும் சபதத்தை என் மனதில் தாங்கியிருக்கிறேன்... கல்வெட்டாக பதித்திருக்கிறேன்... சாளுக்கியர்கள் காஞ்சியைக் கைப்பற்றிய தகவல் மல்லையில் நான் இருந்தபோது கிடைத்தது. அப்பொழுதுதான் நம் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரின் வளர்ப்பு மகள் நீ என்ற அடையாளத்துடன் மற்றவர்கள் முன்னிலையில் எனக்கு அறிமுகமானாய்.

நாம் இருவருமே இப்பொழுது வரை மல்லையில் முதன் முதலில் அறிமுகமானவர்களைப் போல்தான் நடித்துக் கொண்டிருக்கிறோம்... அதனால்தான் ‘உனது சுயரூபம் வேறு... உன் சபதத்தை அறிந்தால் நான் நிலைகுலைவேன்...’ என பல்லவ மன்னரின் தாயாதியான ஹிரண்ய வர்மர் முதல் சாளுக்கிய மன்னர் வரை பலரும் சொன்னபோதும், ‘உன்னிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி’ அறிவுறுத்தியபோதும், மனதுக்குள் சிரித்தேனே தவிர வெளியில் ‘அப்படியா’ என புதியதாகக் கேட்பது போலவே நடமாடினேன்.

நாம் இருவரும் பால்யம் முதலே அறிமுகமானவர்கள் என்பதோ பால்ய காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்பதோ ஒருவருக்கும் தெரியாது. நம் இருவரின் நடிப்பும் அந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு காரியங்களை நம்மால் நிகழ்த்தவும் முடிந்திருக்கிறது.

இன்னும் சில காலம்தான் சிவகாமி... அதுவரை நம் பழைய வாழ்க்கையை ஒருவரும் அறியாதபடி நாம் நடந்து கொள்வதுதான் சரி. சொல்லப்போனால் முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இனிதான் நாம் இருக்க வேண்டும். முக்கால் கிணறு தாண்டியிருப்பது பெரிதல்ல. மிச்சமிருக்கும் கால் கிணற்றையும் பாதிப்பின்றி தாண்ட வேண்டும்.

இந்த கரிகாலன் உனக்கானவன்... உன்னுடையவன்... உன்னில் கலந்தவன்... உனக்கு மட்டுமே சொந்தமானவன்... உனது சபதத்தை நிறைவேற்றத்தான் இவ்வளவு முயற்சிகளையும் மேற்கொள்கிறேன்... நரசிம்மவர்மருக்கும் பரஞ்சோதிக்கும் எப்படி நம் பாட்டியின் சபதம் முக்கியமாகத் தெரிந்ததோ... அந்த சபதம் நிறைவேற எப்படி அவர்கள் அல்லும் பகலும் முயற்சித்தார்களோ... அப்படி இந்த கரிகாலனுக்கு இந்த சிவகாமியின் சபதம்...’’
அவளது கண்களை நோக்கி தன் உதடுகளைக் கொண்டு சென்றான்.

சிவகாமி தன் இமைகளை மூடினாள். அவள் நயனங்களில் அழுத்தமாக முத்தமிட்டான். ‘‘சபதத்தின் அருமை நம்மை விட நம் பாட்டிக்கு நன்றாகத் தெரியும்... எனவே அவரை நாம் சந்திக்காமல் இருப்பதற்கான காரணத்தை அவர் புரிந்து கொள்வார்...’’
சிவகாமியை தன் மார்பில் சாய்த்து இறுக்கி அணைத்தான்.

அவன் மார்பில் அவள் ஒன்றியபோது சட்டென விலக்கினான்.புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.‘‘இப்படிப் பார்க்காதே சிவகாமி... பிறகு நான் அனைத்தையும் மறந்துவிடுவேன்... புறப்படு... சென்று வென்று வா. இந்த முறை நீ கொடுக்கும் அடியில் ராமபுண்ய வல்லபரின் தலை சுழல வேண்டும்...’’ ‘‘உங்களுக்குத் தெரியுமா..?’’ விக்கிரமாதித்தர் படபடத்தார்.

கண்களைச் சிமிட்டினார் ராமபுண்ய வல்லபர்.‘‘ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத்தாரகையுமான சிவகாமி எந்த சிறுவனை தன் பேரனாக வளர்த்தார் என்பதை தாங்கள் அறிவீர்களா..?’’சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார்.

‘‘யார் அவன்..?’’
நிதானமாக அதேநேரம் அழுத்தமாகச் சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘எந்த பாலகன் காஞ்சி கடிகையில் படித்துக் கொண்டிருந்தானோ... எந்த பாலகனுக்கு வேளிர்களின் தலைவனாக ரகசியமாக முடிசூட்டினீர்களோ... எந்த பாலகனை கரிகாலனுடன் நட்பு பாராட்டும்படி கேட்டுக் கொண்டீர்களோ... அந்த பாலகன்தான் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியால் வளர்க்கப்பட்ட பேரன்!’’
சாளுக்கிய மன்னரின் கண்கள் விரிந்தன. ‘‘அவனது பூர்வீகம் என்ன போர் அமைச்சரே..? எப்படி அவன் சிவகாமியின் வளர்ப்பு பேரனாக மாறினான்..?’’

‘‘அவனது தாத்தாவின் வழியாக!’’
விக்கிரமாதித்தரின் கண்கள் இடுங்கின.‘‘ஆம் மன்னா... அவன் தாத்தாதான் அவனை வளர்க்கும் பொறுப்பை ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியிடம் ஒப்படைத்தார்...’’‘‘அவன் தாத்தா யார்..?’’‘‘மணிமங்கலம் போரை பல்லவர்கள் சார்பாக தலைமையேற்று நடத்திய... வாதாபி வரை சாளுக்கியர்களைத் துரத்திய... வாதாபி நகரைத் தீக்கிரையாக்கும் திட்டத்தை வகுத்த... தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக அசுரப் போர் வியூகத்தை வகுத்து அதைத் திறம்பட அரங்கேற்றிய... பரஞ்சோதி!’’
 
Posted

ரத்த மகுடம்-133

ஆனால், சிவகாமி புறப்படவில்லை.எழுந்து நின்றவள் கரிகாலனை ஒரு பார்வை பார்த்தாள்.புருவங்கள் சுருங்க அவள் பார்வையை எதிர் கொண்டான்.தன் வலது கையை நீட்டினாள்.கரிகாலன் அதைப் பற்றியபடி எழுந்தான்.கரங்களைக் கோர்த்தபடி சிவகாமி நடந்தாள்.தேகங்கள் உரசின. தீ பற்றியது. அணைக்கும் விதமாக முப்பதடி தொலைவில் இருந்த தடாகத்தை நெருங்கினாள். தன் கரத்தை விடுவிக்காமல் கரிகாலன் நின்றான். அவளையும் நிறுத்தினான். ‘‘இப்பொழுது ஸ்நானம் அவசியமா..?’’
http://kungumam.co.in/kungumam_images/2021/20210122/17.jpg

‘‘இப்பொழுதுதான் அவசியம்..?’’அவள் நயனங்களை உற்றுப் பார்த்தான்.‘‘ராமபுண்ய வல்லபருக்கு சரியான அடி கொடுக்க வேண்டும் என்றீர்கள் அல்லவா..?’’‘‘ம்...’’‘‘கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டீர்களே தவிர கொடுத்ததைப் பார்க்கவில்லையே... அடுத்து கொடுக்க வேண்டிய அடியை குறித்துக் கொள்ளவில்லையே..?’’ ஆச்சர்யத்தின் ரேகைகள் கரிகாலனின் விழிகளில் படர்ந்தன. ‘‘வாருங்கள் காட்டுகிறேன்...’’
 
‘‘தடாகத்தில் எதற்கு..? முன்பு அமர்ந்த இடத்திலேயே அமர்வோம்... பார்க்கிறேன்...’’தன் இடது கை விரல்களால் அவன் நாசியை வலிக்காமல் திருகினாள். ‘‘அங்கு சென்றால் என்னை நான் மறந்துவிடுவேன்...’’‘‘தடாகத்தில் இறங்கினால் என் நிலையை நான் இழப்பேன்...’’
‘‘ஆனால், என் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இங்குதான் விழித்திருக்கும்... தவிர...’’‘‘தவிர..?’’

‘‘காண்பிக்கும் இடத்தை முதலில் நீரில் சுத்தம் செய்ய வேண்டும்...’’ ‘‘அப்படியா..?’’‘‘ஆம்... அப்படித்தான்!’’ கலகலவென நகைத்தவள் கரிகாலனை அழைத்துக்கொண்டு தடாகத்தில் இறங்கினாள்.இருவரும் இடுப்பளவு நீர் இருக்கும் வரை நடந்தார்கள். கரிகாலன் சுற்றிலும் பார்த்தான். வலுவான மரக்கிளை ஒன்று தடாகத்தை முத்தமிட்டபடி இருந்தது.அதை நோக்கி சிவகாமியை அழைத்துச் சென்றவன், அவள் இடுப்பைப் பிடித்துத் தூக்கி மரக்கிளையில் அவளை அமர வைத்தான்.தன் கால்களால் தடாக நீரை சிவகாமி அளக்க ஆரம்பித்தாள்.‘‘காட்டு...’’ ‘‘என்ன..?’’‘‘காண்பிக்கிறேன் என்றாயே... காட்டு...’’

சொன்னவனின் பார்வை சென்ற திக்கைக் கண்ட சிவகாமியின் முகம் சிவந்தது.தடாக நீரை தன் கால்களால் உதைத்தாள். சிதறிய நீர்த்துளிகள் அவன் முகத்தை அறைந்தன. ‘‘எப்பொழுதும் ஒரே நினைப்புதானா..?’’ சிவகாமியின் நாசி அதிர்ந்தது. ‘‘ஆம்... உன் சபதத்தை எப்படி முழுமையாக நிறைவேற்றுவது என்றுதான் எப்பொழுதும் யோசிக்கிறேன்... அதற்கான வழிமுறைகள் குறித்துதான் அலசுகிறேன்... தியானிக்கிறேன்... ஏனெனில் அதில் உன் மகிழ்ச்சி மட்டுமல்ல... பல்லவர்களின் பெருமையும் சோழர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது...’’சிவகாமியின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தாண்டவமாடின.

கரிகாலன் அவளது இரு கால்களுக்கும் இடையில் புகுந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். ‘‘ம்...’’‘‘என்ன ம்..?’’ கொஞ்சியபடியே தன் விரலால் அவனது பரந்த மார்பில் சிவகாமி கோலமிட்டாள்.‘‘காட்டு...’’தன் விரல்களால் அவனது மார்பு ரோமங்களைச் சுருட்டி இழுத்தாள். ‘‘தங்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக் கூடாது என்றுதான் இப்படி என்னை மறைத்தபடி நிற்கிறீர்களா..?’’‘‘காவலனின் கடமையை சரிவர செய்கிறேன்...’’ புன்னகைத்தான். ‘‘பரஞ்சோதியின் அசுரப் போர் வியூகத்தை உன் கச்சையில் வரைந்து எடுத்து வந்தாய்... அதை எனக்கு காண்பித்தாய்...’’சிவகாமி தன் புருவத்தை உயர்த்தி இறக்கினாள்.

‘‘இப்பொழுது வேறு எதை வரைந்து வந்திருக்கிறாய்..? அதை எந்த இடத்தில் பதித்து... பதுக்கி வைத்திருக்கிறாய்..?’’ கேட்டவன் தன் பார்வையால் அவளது முழு உடலையும் மேய்ந்தான்.‘‘ஆசையைப் பார்...’’ தன்னிரு உள்ளங்கைகளையும் அவன் மார்பில் பதித்து அப்படியே தள்ளினாள்.மல்லாந்தபடி கரிகாலன் தடாகத்தில் விழுந்தான்.சமாளித்து நீருக்குள் தன் இரு கரங்களையும் ஊன்றினான். அமர்ந்தான்.

அவன் மார்பின் பாதி அளவு நீரில் மூழ்கியிருந்தது. ‘‘பார்த்து... பார்த்து...’’ சிவகாமி பதறினாள்.‘‘நீருக்கடியில் பாறை இருக்கிறது... அதன் மீதுதான் அமர்ந்திருக்கிறேன்... கவலைப்படாதே...’’ கரிகாலனின் நேர் எதிரே கிளைகள் மீது அமர்ந்திருந்த சிவகாமி தன் வலது கால் பாதத்தை உயர்த்தி கரிகாலனின் முகத்தின் மீது வைத்தாள்.பாதத்தை முத்தமிட்டபடி தன் நாவினால் கோடு கிழித்தான்.
 
கூச்சத்தில் சிவகாமி நெளிந்தாள். அவளது தேகத்தில் இருந்த ரோமக் கால்கள் அனைத்தும் குத்திட்டன.சட்டென கரிகாலன் அவள் கால்களை மடக்கினான். பாதத்தை தன் கண்களுக்கு எதிரே கொண்டு வந்தான்.இமைக்கவும் மறந்து ஆச்சர்யத்தில் மிதந்தான்.நீரில் நன்கு அலசப்பட்டிருந்ததால் அவளது பாதம் ஸ்படிகம் போல் காட்சியளித்தது.கரிகாலனின் கண் முன்னால் விரிந்தது அவளது பாத ரேகைகள் மட்டுமல்ல!
 
‘‘என் முதுகில் வரைபடம் வரைந்து பாகங்களைக் குறித்து அனுப்பினீர்கள்... கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து ஜெயத்துடன் திரும்பிவிட்டேன்... அத்துடன் சென்ற இடத்தில் கண்டதை...’’தன் பாதத்தின் கட்டை விரலை அவனது உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றாள்.கரிகாலன் அதைக் கவ்வினான்.

‘‘...மூலிகைத் தைலத்தால் பாதத்தில் வரைபடம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறேன்... அதனால்தான் இக்கணம் வரை அவை அழியாமல் இருக்கின்றன... இம்முறை கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு...’’அவள் பாதத்தில் இருந்த ஐந்து விரல்களையும் மாறி மாறிக் கவ்வி உறிஞ்சினான். ‘‘கட்டளையை நிறைவேற்றுகிறேன் சிவகாமி...’’ உணர்ச்சி பொங்கச் சொன்ன கரிகாலன், அவள் பாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளி முழுமையாக அதைப் பார்த்தான். தனக்குள் உள்வாங்கினான்.
 
எழுந்தவன் சிவகாமியின் இடுப்பைப் பிடித்து தடாகத்தில் இறக்கினான். ‘‘புறப்படு... இப்பொழுது நீ கொடுக்கும் அடியில் ஸ்ரீராமபுண்ய வல்லபரின் தலை சுழலவேண்டும்... நீ சுட்டிக்காட்டிய இடங்களுக்குச் சென்று நான் கொடுக்கும் அடியில் சாளுக்கிய தேசமே அலற வேண்டும்...’’
 
கரிகாலனை நெருங்கினாள். அவள் கொங்கைகள் அவன் மார்பை அழுத்தின. அவன் உதட்டைக் கவ்வியவள் அதைக் கடித்துச் சுவைத்தாள். பூத்த குருதியை தன் நாவினால் எடுத்தவள் சப்புக் கொட்டினாள். நிமிர்ந்து கரிகாலனின் கருவிழிகளைப் பார்த்தாள். சட்டென விலகி தடாகத்தை விட்டு வெளியேறி தென் திசையை நோக்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

அவளைப் பின்தொடர்ந்து தடாகத்தை விட்டு வந்த கரிகாலன் வட திசையை நோக்கி நடந்தான்.சிவகாமியின் பாத ரேகைகள் அவனுக்கு வழிகாட்டின!‘‘இரணதீரா... உன் உணர்வுகள் புரிகின்றன... ஆனால், அதை வெளிப்படுத்தவும் செயல்படுத்தவும் இது நேரமல்ல. பாண்டியர்களின் ரத்தம் உனக்குள் ஓடுகிறது. பாண்டிய அரியணையில் அமர்பவர்களின் கனவும் இப்பொழுதே உன்னைத் துரத்துகிறது. அதனால்தான் பாண்டிய நாட்டை விஸ்தரிக்க நினைக்கிறாய்.உன் எண்ணமும் நினைப்பும் சரிதான். அதில் பிழையோ தவறோ எதுவும் இல்லை.

ஆனால், அதே கனவும் உணர்ச்சியும் உணர்வும் இப்போதைய பாண்டிய மன்னனான எனக்குள் இருக்காது என நினைத்திருக்கிறாயே... நினைத்துவிட்டாயே... அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.ஒன்றை புரிந்து கொள்... நம்மிடம் வீரம் இருக்கிறது. பாண்டியர்களின் வீரம் எந்த தேசத்தின் வீரத்துக்கும் குறைச்சலில்லை.

ஆனால், வீரம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது... படை பலமும் பொறிகளின் வல்லமையும் சேரும்போதே வீரம் பேசு பொருளாகும்.அதனால்தான் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் நடைபெறப் போகும் போரை சற்றே விலகியிருந்து வேடிக்கை பார்க்கச் சொல்கிறேன். அந்த அவகாசத்துக்குள் நம் படைபலத்தை அதிகரிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறேன்... இதுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக நாம் எடுத்திருக்கும் முடிவு.

பல்லவ இளவரசன் ராஜசிம்மனின் நண்பனும் சோழ இளவரசன் கரிகாலனின் தோழனுமான சீனன் இப்பொழுது மதுரையில்தான் இருக்கிறான். பாண்டிய நாட்டின் பெரும் மரத்தச்சரை வைத்து சீனர்களின் எந்திரப் பொறிகளை அவன் உருவாக்கப் போகிறான்.இது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு.
 
சீனனின் வேண்டுகோளை ஏற்று மரப் பொறிகளை அவர் உருவாக்கும் அதேநேரம் பாண்டியர்களுக்கும் பொறிகளை தயாரிக்கப் போகிறார். சாளுக்கியர்களுடன் மோதப் போகும் பல்லவப் படைகள் என்ன பொறிகளைப் பயன்படுத்தப் போகிறதோ அதே பொறிகள் பாண்டியர் வசமும் இருக்கப் போகிறது.
 
ஒவ்வொரு எந்திரப் பொறியும் ஆயிரம் வீரர்களுக்கு சமம் என்பதை இளவரசனாக அல்ல... வீரனாகவே நீ உணர்வாய் என்று தெரியும்... அதனால்தான் இந்த உண்மையை அழுத்திச் சொல்கிறேன்.ஒரு தந்தையாக உன்னை கொற்கைக்கு போகச் சொன்னேன்... மகனுக்குரிய துடிப்புடன் அதை மீறி மதுரையிலேயே மாறு வேடத்தில் சுற்றுகிறாய். ரகசியமாக வந்த சாளுக்கிய மன்னரையும் சந்தித்துப் பேச முற்படுகிறாய்.


ஒரு தந்தையாக உனது துடிப்பு புரிந்து உன் செய்கைகளை நான் அனுமதித்தாலும் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மனாக உனது நடமாட்டத்தை ஏற்க முடியாது. அது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு நாட்டின் மன்னனே தலைவணங்கித்தான் ஆக வேண்டும் என்னும்போது இளவரசன் மட்டும் அதை எப்படி மீற முடியும்..?எப்படி சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் ரகசியமாக மதுரைக்கு வந்தாரோ அதே ரகசியத்துடன் அவரைச் சந்தித்து பாதுகாப்பாக காஞ்சிக்கும் அனுப்பி வைத்துவிட்டேன்.

பாண்டிய ஒற்றர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து கொண்டு வரும் செய்திகள் மலைக்க வைக்கின்றன. இன்னமும் அச்செய்திகள் காஞ்சியில் இருக்கும் சாளுக்கிய மன்னரைச் சென்றடையவில்லை. அடையும்போது நிச்சயம் எரிமலையாக வெடிப்பார். அந்தளவுக்கு சாளுக்கியர்களை நிலைகுலைய வைக்கும் காரியத்தை சிவகாமி சாதித்திருக்கிறாள்.அறிந்த பிறகு தனது ஒற்றர் படைத் தலைவியாக இருக்கும் சிவகாமியை கண்டிப்பாக சாளுக்கிய மன்னர் சிரச்சேதம் செய்வார். போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் அதைச் செய்ய வைப்பார்.

நினைத்தது, கணித்ததை விட கரிகாலன் ஆபத்தானவனாக இருக்கிறான்.யோசித்துப் பார்... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரும் பல்லவ இளவல் இராஜசிம்மனும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒற்று அறிவதில் பெயர்போன பாண்டிய ஒற்றர்களாலும் அவர்கள் இருவரது இருப்பிடத்தையும் அறிய முடியவில்லை.வலைகள் பின்னப்பட்டு விரிக்கப்படுகின்றன ரணதீரா... ஒருபோதும் மீன் அதில் சிக்கக் கூடாது.
முதலும் இறுதியுமாகச் சொல்கிறேன்... கொற்கைக்குச் செல். இது உன் தந்தையின் வேண்டுகோள் அல்ல. பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மரின் ஆணை!’’

காற்றைக் கிழித்தபடி தென் திசையை நோக்கி புரவியில் சென்று கொண்டிருந்த கோச்சடையன் இரணதீரனின் மனதில் ஓலையில் கண்ட தன் தந்தையின் எழுத்துக்களே அலை அலையாக மேலெழும்பின. மோதின. பாண்டிய இளவல் கொற்கை நோக்கிச் செல்வதை மறைந்திருந்து பார்த்த சீனன் தனக்குள் புன்னகைத்தான்.ஒரேயொரு புறாவைப் பறக்கவிட்டான்!‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள்...’’ என்றபடி புயலென ஸ்ரீராமபுண்ய வல்லபரின் மாளிகைக்குள் நுழைந்தாள் சிவகாமி!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17648&id1=6&issue=20210117

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர் தொடர்வதற்கு நன்றி சதீஷ் .....தொடருங்கள்......!   🌹

  • 2 weeks later...
Posted

ரத்த மகுடம்-134

‘‘என்ன சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதிர்ந்தார். ‘‘இல்லாத வேளிர்களுக்கு தலைவனாக என்னால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட கடிகை பாலகன், என் தந்தையும் நமது மாமன்னருமான இரண்டாம் புலிகேசியின் இறப்புக்குக் காரணமானவரும், நம் தலைநகரான வாதாபியை எரித்து தீக்கிரையாக்கிய நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தவருமான பரஞ்சோதியின் பேரனா..?’’சாளுக்கிய போர் அமைச்சர் ‘ஆம்’ என தலையசைத்தார்.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210129/23.jpg
‘‘அந்த கடிகை பாலகனைத்தான் ஆயனச் சிற்பியின் மகளும், நாட்டியத் தாரகையும், என் சிறிய தந்தையால் விரும்பப்பட்டவளும், வாதாபியில் சிறை வைக்கப்பட்டவளுமான சிவகாமி வளர்த்தாளா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் நேருக்கு நேராக சாளுக்கிய மன்னரைப் பார்த்தார். பதிலேதும் சொல்லவில்லை.அப்பார்வையை எதிர்கொண்ட விக்கிரமாதித்தர் மெல்ல மெல்ல சமநிலைக்கு வந்தார். தேகமெங்கும் எதிரொலித்த அகத்தின் அதிர்வு கரைந்தது. ‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’

‘‘இந்த உண்மைகள் அனைத்தும் தங்களுக்குத் தெரியும்...?’’
‘‘ஆம்...’’‘‘ஆனால், என்னிடம் இருந்து மறைத்திருக்கிறீர்கள்...’’
‘‘...’’‘‘இதுதான் ஒரு போர் அமைச்சர் தன் மன்னனுக்கு செலுத்தும் மரியாதையா..? உண்மைகளை மறைக்கும் உங்களை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை ஒப்படைத்திருக்கிறேனா..? மன்னனுக்கு தெரியாமல் தனி ராஜாங்கம் நடத்தும் உங்களை வைத்துக்கொண்டுதான் பல்லவர்களை எதிர்கொள்ளப் போகிறேனா..? உள்ளொன்று வைத்து புறமொன்று நடக்கும் தங்கள் வியூகத்தை நம்பித்தான் சாளுக்கியப் படைகளை வழிநடத்தப் போகிறேனா..?’’‘‘...’’

‘‘தட்சிண பாரதத்தின் தலைசிறந்த மன்னரான என் தந்தையின் சிரசை வெட்டிய... சாளுக்கிய மக்கள் இரவு பகல் பாராமல், தேவையான ஓய்வு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மாபெரும் நகராக வளர்த்தெடுத்த வாதாபியை அக்னிக்கு உணவாகக் கொடுத்த பல்லவப் படைகளைப் பூண்டோடு அழிக்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் சபதம் செய்திருக்கிறான்... அதனால்தான் தன் உற்றார் உறவினர் குடும்பத்தை விட்டு பல திங்களாக தொண்டை மண்டலத்தில் முகாமிட்டிருக்கிறான்... ஒவ்வொரு சாளுக்கிய வீரனின் குருதியும் ஒவ்வொரு பல்லவ வீரனின் ரத்தத்தைக் குடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது...’’
‘‘...’’
‘‘இதையெல்லாம் அறிந்திருந்தும்... இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வமான சைன்யத்தின் அமைச்சராக வலம் வரும் நீங்கள் அனைவருக்கும் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்...’’‘‘மன்னா!’’‘‘காட்டிக் கொடுப்பதும் இங்கு நடப்பதை அங்கு சொல்வதும் மட்டுமே துரோகமல்ல... அறிந்த, தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தாமல் மவுனம் சாதிப்பதும்கூட துரோகம்தான்... சொல்லப் போனால் இதுதான்... நீங்கள் நடந்து கொள்வதுதான்... துரோகச் செயல்களிலேயே முதன்மையான துரோகம்...’’

ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன.‘‘உங்களுக்கு உரிய மதிப்பளித்து மாபெரும் சாளுக்கிய தேசத்தின் மன்னருக்கு சமமான அந்தஸ்தை வழங்கியிருக்கிறேன்... வருங்கால சாளுக்கிய மன்னரான என் புதல்வனையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்... அப்படியிருந்தும் உண்மைகள் அனைத்தையும் மறைத்து எங்கள் எல்லோரையும் முட்டாளாக்கியிருக்கிறீர்கள்... இதைச் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது..?’’     
 
உடல் நடுங்க தன் உதடுகளைப் பிரித்து ஸ்ரீராமபுண்ய வல்லபர் பதில் சொல்ல முற்பட்டபோது விக்கிரமாதித்தரின் குரல் அதைத் தடுத்தது.‘‘இப்படியெல்லாம் நான் கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்களா ராமபுண்ய வல்லபரே...’’ நெருங்கி வந்து சாளுக்கிய போர் அமைச்சரின் தோள்களை ஆதரவாகப் பற்றினார் விக்கிரமாதித்தர். ஸ்ரீராமபுண்ய வல்லபரின் உடல் துடித்தது.

குறிப்பறிந்து தன் மார்போடு அவரை இறுக அணைத்தார் சாளுக்கிய மன்னர். ‘‘ஒருபோதும் அப்படி கேட்கவும் மாட்டேன்... மனதாலும் நினைக்க மாட்டேன் ராமபுண்ய வல்லபரே... பிறந்த கணமும் தவழ்ந்த காலமும் நினைவில் இல்லை... ஆனால், நினைவு தெரிந்த காலம் முதல் இக்கணம் வரை நடந்தவை எல்லாம் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்திருக்கிறது...

அவை அனைத்திலும் நீக்கமற தாங்களே நிறைந்திருக்கிறீர்கள்... என் தாய் தந்தையுடன் நான் இருந்த நேரத்தை விட... சாளுக்கிய பட்டத்தரசியுடன் நான் கழித்த பொழுது களைவிட... தங்களுடன் இருந்த காலங்களே அதிகம்... அவையே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கின்றன... என்ன... நான் அனுமன் இல்லை... அப்படியிருந்திருந்தால் என் மார்பைப் பிளந்து அக்கல்வெட்டுகளை நீங்கள் படிக்குமாறு காண்பித்திருப்பேன்!’’

குலுங்கிய தன் போர் அமைச்சரின் முதுகை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்கள் ஒவ்வொரு நாடியும் நரம்பும் பல்லவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனையும் அவன் மகன் இராஜசிம்மனையும் பூண்டோடு அழிக்க ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புடன் திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள்... உறக்கத்திலும் விழிப்புடன் இருப்பது எப்படி என்பதை உங்களிடம்தான் நான் கற்றேன்... கற்கிறேன்...’’போர் அமைச்சரின் முதுகைத் தட்டியபடியே அணைப்பிலிருந்து அவரை விடுவித்த சாளுக்கிய மன்னர், அவர் கண்களை உற்றுப் பார்த்தார்.

‘‘இதையெல்லாம் உங்களைவிட நான் நன்றாக அறிவேன் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... ஒருவேளை என் உடலின் அணுக்கள் கூட என்னையும் அறியாமல் சில தருணங்களில் பல்லவர்பால் அனுதாபம் காட்டலாம்... ஆனால், உங்கள் உடல் அணுக்கள் பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் சபதத்தில் இருந்து எத்தருணத்திலும் பின்வாங்காது... இந்த உண்மை மற்றவர்களைவிட... ஏன், உங்களை விட... எனக்கு நன்றாகத் தெரியும்... என் அகத்தைக் கூட நான் சந்தேகப்படுவேன்... ஆனால், உங்களை ஒருபோதும் சந்தேகப்படவே மாட்டேன்...’’ தத்தளித்த கண்ணீரை அடக்கும்விதமாக தன் இமைகளை மூடினார் சாளுக்கிய போர் அமைச்சர்.

‘‘உண்மைகளை வெளிப்படுத்துவது முக்கியமல்ல... ஆனால், வெளிப்படுத்தும் கணமும் தருணமும் மிக மிக முக்கியம். உண்மைகளின் உண்மையான மதிப்பு தெரிய வேண்டுமென்றால் அதை தெரியப்படுத்த வேண்டிய நேரத்தில் சொல்வதே சரி... உங்களுக்குள் நீங்கள் மறைத்திருக்கும், சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் உண்மையை... உண்மைகளை... இறக்கி வைப்பதற்கான சமயத்துக்காகக் காத்திருக்கிறீர்கள்... கவலைப்படாதீர்கள்.

நண்பன் என்ற உரிமையில் அன்பு காட்டியோ, மன்னன் என்ற முறையில் அதிகாரத்தைச் செலுத்தியோ உங்களை நிர்ப்பந்திக்க மாட்டேன்... நானும் காத்திருக்கிறேன். சொல்ல வேண்டிய நேரத்தில் நீங்கள் சொன்னால் போதும்...’’நிறுத்திய விக்கிரமாதித்தர் பெருமூச்சுவிட்டார். ‘‘வாள் பயிற்சி... போர்ப் பயிற்சி... சகோதர யுத்தம்... அரியணையைக் கைப்பற்றுதல்... எரிந்த வாதாபியைப் புனரமைத்தல்... படை திரட்டல்... பல்லவர்கள் மீது போர் தொடுத்தல்... என நம் இருவரின் பெரும்பகுதி வாழ்க்கையும் கழிந்துவிட்டது... மனம்விட்டுப் பேசியிருக்கிறோம்... சிரித்திருக்கிறோம்...

கோபப்பட்டிருக்கிறோம்... ஆனால், உணர்ச்சிவசப்பட்டு நாம் இருவரும் தத்தளித்ததில்லை... நண்பர்களுக்கு இடையில் இந்த மாதிரியான தழுதழுப்பும் தேவை... அது நம்மிருவருக்கு இடையில் நிகழவில்லையே என்று கவலைப்பட்டேன்... அந்தக் குறையை இன்றைய தினம் போக்கிவிட்டது... உங்களிடம் தெரியப்படுத்தாமல் மதுரைக்கு நான் சென்றதுதான் இதற்கான விதை... இதற்காகவே உங்களுக்குத் தெரியாமல் அடிக்கடி எங்காவது செல்லலாம் என்று தோன்றுகிறது...’’‘‘மன்னா...’’‘‘பதற்றம் வேண்டாம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... அப்படி எதுவும் இனி நான் செய்ய மாட்டேன்...’’
‘‘நம்பலாமா..?’’

‘‘சாளுக்கிய மக்கள் மேல் ஆணை... முழுமையாக நம்பலாம் போர் அமைச்சரே... இனி உங்களிடம் தெரிவிக்காமல்... உங்கள் அனுமதியில்லாமல் ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்... போதுமா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.  அதைப் பார்த்து விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘இதற்காவது பதில் சொல்லுங்கள்... பல்லவ மன்னனின் வளர்ப்புப் புதல்வியை ஏன் யாருக்கும் தெரியாமல் மலைக் குகையில் அடைக்கச் சொன்னீர்கள்..? அவளைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணை எதற்காக நம் சாளுக்கிய தேசத்தின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்தீர்கள்..? பல்லவ இளவரசியும் அவளைப் போலவே தோற்றமளிக்கும் பெண்ணும் யார்..?

இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் காட்சியளிக்கிறார்களே... இருவரும் ஒரு பெற்றோருக்குப் பிறந்த இரட்டையர்களா..? ஆம் என்றால் இருவரது பெற்றோரும் யார்..? முக்கியமாக இவர்கள் இருவரது பெயரும் ‘சிவகாமி’யாக இருக்கிறதே... இவர்களுக்கும் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் வாதாபி எரிந்ததற்குக் காரணகர்த்தாவாக இருந்தவளுமான ‘அந்த’ சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..?’’

சாளுக்கிய போர் அமைச்சர் தன் மன்னனை நிமிர்ந்து பார்த்தார். ‘‘இன்னும் ஒரு திங்கள் கூட இல்லை... சில நாட்கள்தான் மன்னா... இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்... பூர்த்தியானதும் எல்லா உண்மைகளையும் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்...’’  ‘‘அதுவரை நான் என்ன செய்ய வேண்டும்..?’’‘‘நடிக்க வேண்டும்! எதுவும் தெரியாமல் இப்பொழுது எப்படி இருக்கிறீர்களோ... நடந்து கொள்கிறீர்களோ... அப்படியே இருங்கள்...’’
‘‘உத்தரவு...’’ விக்கிரமாதித்தர் நகைத்தார்.

ஸ்ரீராமபுண்ய வல்லபர் சங்கடத்துடன் நெளிந்தார்.‘‘பரவாயில்லை... ஆணையிடுங்கள்!’’
‘‘மன்னா...’’‘‘தயங்காமல் சொல்லுங்கள்...’’‘‘அழிக்கத்தான் ஆயுதத்தையே உருவாக்குகிறோம்... இல்லையா மன்னா..? என்னால் உருவாக்கப்பட்ட ஆயுதம் இப்பொழுது என் கையால் அழிவதற்காக இங்கே வரப் போகிறது!’’சாளுக்கிய மன்னரின் புருவம் உயர்ந்தது.‘‘வந்ததும் ஒரு வேண்டுகோளை வைக்கும்! அதை பிறகு நிறைவேற்றலாம். அதற்கு முன் என் ஆயுதத்தை காஞ்சி சிறையில் அடையுங்கள்! என் ஆயுதத்தின் விருப்பமும் அதுவேதான்!’’

‘‘அப்படியானால் மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுத்தது போலவே காஞ்சி சிறையில் இருந்தும் உங்கள் ஆயுதம் ஒரு பொருளை எடுக்கப் போகிறதா..?’’ராமபுண்ய வல்லபர் கண்சிமிட்டினார்.‘‘ஏன் முதல் முறை சென்றபோது அப்பொருளை எடுக்கவில்லை..?’’
‘‘சோழ மன்னரை விடுவிக்கும் பணி முதன்மையாக இருந்ததால்... தவிர அப்பொழுது இதன் முக்கியத்துவம் பெரியதாகத் தெரியவில்லை...’’
‘‘இப்பொழுது அதன் அருமை தெரிந்துவிட்டதா..?’’

‘‘ஆம் மன்னா... மதுரை பாதாளச் சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளின் மறுபாதி காஞ்சி சிறையில் இருக்கிறதே!’’ராமபுண்ய வல்லபர் இப்படிச் சொல்லி முடித்ததும் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அறைக்கதவைத் திறந்துகொண்டு புயலென சிவகாமி நுழைந்து தன் வேண்டுகோளை வைத்தாள்.‘‘உடனடியாக என்னை சிரச்சேதம் செய்யுங்கள் மன்னா!’’காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருந்த சத்திரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பொன்னனின் தோளை யாரோ தொட்டார்கள்.

திரும்பினான். அவனது இரட்டைப் பிறப்பில் ஒருவனான உத்தமன் நின்று கொண்டிருந்தான். இருவருமே பறவைச் சித்தர் தோற்றத்தில் இருந்தார்கள்.

‘‘பொன்னா... உடனடியாக உன்னை காஞ்சிக்கு... குறிப்பாக சிறை இருக்கும் பகுதிக்கு செல்லச் சொன்னார்...’’‘‘யார்..? கரிகாலரா..?’’
 
‘‘இல்லை...’’ ‘‘சிவகாமியும் அப்படியேதும் என்னிடம் சொல்லவில்லையே..?’’ பொன்னன் குழம்பினான்.‘‘இவர்கள் இருவருக்கும் மேலானவர் உத்தரவிட்டிருக்கிறார்...’’ உத்தமன் உறுதியாகச் சொன்னான்.‘‘புலவர் தண்டியா..?’’‘‘இல்லை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்!’’
 
  • 2 weeks later...
Posted

ரத்த மகுடம்-135

‘‘உடனடியாக உன்னை சிரச்சேதம் செய்ய வேண்டுமா..?’’ நிதானமாகக் கேட்டார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.அருகில் நின்றிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கு பெருமையாக இருந்தது. தான், கூறிய உண்மைகள் அனைத்தையும் சில கணங்களுக்கு முன் செவிமடுத்தவர், இப்பொழுது எவ்வளவு நாசூக்காக அவை அனைத்தையும் சிவகாமியின் உதடுகளில் இருந்தே வரவழைக்க தூண்டில் வீசுகிறார்...
http://kungumam.co.in/kungumam_images/2021/20210205/26.jpg
சிரமப்பட்டு தன் முகத்தில் அகம் பிரதிபலிக்காதபடி பார்த்துக் கொண்டார். மன்னர் அரங்கேற்றும் நாடகத்தின் கதாபாத்திரமாக பங்கேற்க முடிவு செய்தார். சிவகாமியை திகைப்புடன் காண்பதுபோல் பார்த்தார். மன்னருக்கு அவள் அளிக்கவிருக்கும் பதிலுக்காகக் காத்திருந்தார்.   ‘‘ஆம் மன்னா...’’ விடையளித்தாள் சிவகாமி.

‘‘சிரச்சேதம் என்றால் என்னவென்று தெரியுமா..?’’
‘‘அறிவேன் மன்னா... தலையைச் சீவுவது!’’
‘‘எதற்காக உன் சிரசைச் சீவ நான் உத்தரவிட வேண்டும்..?’’
‘‘சாளுக்கியர்களின் பொக்கிஷங்களை நான் கொள்ளை அடித்திருப்பதால்!’’

‘‘புரியவில்லையே..?’’ விக்கிரமாதித்தரின் புருவங்கள் சுருங்கின. ‘‘பொக்கிஷங்களை நீ கொள்ளையடித்தாயா..?’’
‘‘அப்படித்தான் சாளுக்கிய வீரர்கள் சொல்கிறார்கள்...’’
‘‘யாரிடம்..?’’‘‘தங்களிடம்!’’

‘‘என்னிடம் யாரும் அப்படி ஏதும் கூறவில்லையே..?’’
‘‘கூறப் போகிறார்கள்... அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன...’’
‘‘கண்ணாரக் கண்டாயா..?’’
‘‘காதாலும் கேட்டேன்!’’
‘‘தீர விசாரிக்க மாட்டேனா..?’’

‘‘விசாரணை நடைபெறும் வரையில் என்னை காஞ்சி சிறையில் அடையுங்கள்!’’
‘‘வேறு சிறையில் அடைக்கக் கூடாதா..?’’
‘‘காஞ்சி சிறைதான் பாதுகாப்பானது மன்னா...’’
‘‘யாருக்கு..?’’
‘‘காஞ்சியை ஆளும் சாளுக்கியர்களுக்கு!’’

‘‘ஏன்... வீட்டுக் காவலில் வைக்கக் கூடாதா..?’’
‘‘அப்படிச் செய்தால் சாளுக்கிய வீரர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழப்பார்கள்...’’
‘‘தங்கள் மன்னர் மீது நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு சாளுக்கிய வீரர்கள் பலவீனமானவர்களா..?’’
‘‘பலம் வாய்ந்தவர்களையும் பலவீனப்படுத்தும் ஆற்றல் கரிகாலனின் சொல்லுக்கு உண்டு!’’
‘‘அச்சொல்லால் என் மீது என் வீரர்கள் நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு எனது செயல்பாடுகள் இருக்கிறதா..?’’

‘‘அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் மன்னா...’’
‘‘அப்பிரசாரத்தை முறியடிக்கும் வார்த்தை என்னிடம் இல்லையென்று நம்புகிறாயா..?’’
‘‘இருக்கிறது என்று நம்புவதால்தான் மன்னா உடனடியாக சிரச்சேதம் செய்யாவிட்டாலும், முடிவு எட்டும் வரை என்னை சிறையில் அடைக்கச் சொல்கிறேன்...’’‘‘பதட்டத்தில் இருப்பதால் படபடவென்று பேசுகிறாய் சிவகாமி... நிதானித்து என்ன நடந்தது என்று சொல்...’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் குறுக்கிட்டார்.

‘‘குருவே...’’
‘‘என்னையா அழைக்கிறாய்..?’’ ராமபுண்ய வல்லபர் ஆச்சர்யப்பட்டார்.
‘‘நீங்கள்தானே என் குரு... எனக்கு பயிற்சியளித்து ஆளாக்கி சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக நியமித்து பல்லவ இளவரசியாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டது தாங்கள்தானே?’’

‘‘ஆம் நானேதான்...’’
‘‘எனவேதான் தங்களை குரு என்று அழைக்கிறேன்... அழைக்கலாம் அல்லவா..?’’
‘‘அழைப்பில் என்ன இருக்கிறது..?’’‘‘மரியாதைதான் முக்கியம் என்கிறீர்களா..? அதுவும் சரிதான்... உள்ளம் முழுக்க நிரம்பி வழியும் மரியாதையுடனேயே தங்களை குருவே என்று அழைக்கிறேன்...’’

‘‘விஷயத்துக்கு வா சிவகாமி... என்ன நடந்தது என்று சொல்...’’ விக்கிரமாதித்தர் இடைமறித்தார். குரலில் இருந்த கட்டளை சுற்றி வளைத்து பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ‘‘மன்னா... குருவே... மதுரை பாதாளச் சிறையில் இருந்து பரஞ்சோதியால் வடிவமைக்கப்பட்ட, இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இரு அசுரப் போர் வியூகங்களை எனது கச்சையில் எழுதி எடுத்து வந்தேன் அல்லவா..?’’
‘‘ம்...’’

‘‘அந்த வியூகங்களை நான் அரக்கின் வழியாகவோ அல்லது வேறு கருவிகளாலோ எனது கச்சையில் தீட்டவில்லையாம்...’’
‘‘ம்...’’‘‘தேவ மூலிகையால் தீட்டினேனாம்!’’‘‘அப்படியா..?’’ ராமபுண்ய வல்லபரின் குரலில் திகைப்பு.
‘‘ஆம் குருவே... பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தில்தான் தேவ மூலிகைகள் வளருமாம்... எனவே போர் வியூகம் என்னும் பெயரில் நான் வைத்த புள்ளிகள் அனைத்தும் படைகளை நகர்த்தும் வழிமுறைகள் அல்லவாம்... மாறாக சாளுக்கிய தேசத்தின் பொக்கிஷங்கள் எந்தெந்த இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவிக்கும் இடங்களாம்...’’

‘‘என்ன போர் அமைச்சரே இது... ஒரு மர்மக் கதையைக் கேட்பது போல் இருக்கிறதே..?’’ ராமபுண்ய வல்லபரை புருவம் விரிய பார்த்தார் விக்கிரமாதித்தர். ‘‘எனக்கு தேவதைக் கதைகளைக் கேட்பது போல் இருக்கிறது மன்னா...’’ தன் சிரசில் இருந்த பட்டுத் தலைப்பாகையைத் தடவினார் சாளுக்கிய போர் அமைச்சர்.

‘‘இதற்கே அசந்துவிட்டால் எப்படி குருவே... இன்னும் விஷயம் இருக்கிறது...’’ சிவகாமி தன் இமைகளைச் சிமிட்டினாள்.
‘‘அப்படியா! சொல்... சொல்...’’‘‘உங்களிடம் நான் வழங்கியவை பரஞ்சோதியால் வடிவமைக்கப்பட்ட அசுரப் போர் வியூகங்களே அல்ல... நான் நாடகமாடுகிறேன்... என்றெல்லாம் கரிகாலன்...’’‘‘இரண்டாவது முறையாக ‘ன்’ விகுதியை உச்சரிக்கிறாய் சிவகாமி...’’ விக்கிரமாதித்தரின் உதடுகள் நகைத்தன. ‘‘எந்தச் சூழ்நிலையிலும் ‘ர்’ விகுதியுடன் கரிகாலர் என்றுதானே அழைப்பாய்..?’’‘‘அது... அது... அவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது மன்னா..?’’ அழுத்தம்திருத்தமாக ‘ன்’ விகுதியை சிவகாமி பயன்படுத்தினாள்.

‘‘சரி... மேலே தொடரு...’’‘‘... எங்கு நிறுத்தினேன்... ஆம்... என்றெல்லாம் கரிகாலன் உங்களிடம் பொய் சொன்னதும் நான் கோபித்துக்கொண்டு சென்றேன் அல்லவா..? நேராக சாளுக்கிய தேசத்துக்குச் சென்று பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருந்து அவற்றைக் களவாடி பல்லவர்களிடம் ஒப்படைத்தேனாம்...’’‘‘இப்படிச் சொல்வது கரிகாலரா... இல்லை இல்லை... கரிகாலனா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் கண்களால் நகைத்தார்.‘‘ஆம் குருவே! அவனேதான்! இந்தப் பிரசாரத்தை எப்படி சாளுக்கிய படைகளுக்குள்...’’‘‘அதாவது ‘நம்’ படைகளுக்குள்...’’ விக்கிரமாதித்தர் குறுக்கிட்டார்.

‘‘ஆம் மன்னா... ‘நம்’ படைகளுக்குள் பரப்பினான் என்று தெரியவில்லை... ஆனால், தொண்டை மண்டலம் முழுக்க பரவியிருக்கும் சாளுக்கிய வீரர்கள் அனைவரும் இது குறித்துதான் தங்களுக்குள் பேசி விவாதித்து வருகிறார்கள்... எல்லோரும் என்னை குற்றவாளி போல் பார்க்கிறார்கள்... என்னைக் குறித்து எவ்வளவு அவதூறு செய்தாலும் பரவாயில்லை... அதை நான் தாங்கிக் கொள்வேன்... ஆனால், இதை மையமாக வைத்து நம் மன்னரின்...’’
‘‘...என்னையா குறிப்பிடுகிறாய்..?’’ சாளுக்கிய மன்னர் இடைமறித்தார்.

‘‘ஆம் மன்னா! நீங்கள் ஒருவர்தானே எனக்கு மன்னர்! கரிகாலனின் பிரசாரத்தால் உங்களுக்குத்தானே இழுக்கு..?’’
‘‘அது எப்படி நம் மன்னருக்கு இழுக்காகும்..?’’ ‘‘என்ன குருவே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்..?’’ ராமபுண்ய வல்லபரை ஏறிட்டாள் சிவகாமி. ‘‘சாளுக்கிய தேசத்தின் பொக்கிஷங்களைக் களவாடிய ஒரு பெண்ணை இன்னமும் சாளுக்கிய மன்னர் நம்புகிறார் என்பதை எப்படி ஒவ்வொரு சாளுக்கிய வீரனும் ஏற்பான்..?’’‘‘ஏற்காமல் எப்படி சந்தேகப்படுவான் சிவகாமி..?’’கேட்ட விக்கிரமாதித்தரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவகாமி.

‘‘நீ சாதாரணப் பெண்ணல்ல சிவகாமி... சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவி... நம் தேசத்தின் பொக்கிஷங்களை நீ எடுக்கிறாய்... எடுத்திருக்கிறாய் என்றால்... அதற்குப் பின்னால் வலுவான காரணமிருக்கும் என்றுதானே சாதாரண சாளுக்கிய வீரனும் நினைப்பான்..?’’
‘‘அது... அது மன்னா...’’‘‘அதீதமாக குழம்பியிருக்கிறாய் என்று நினைக்கிறேன்... கொஞ்சம் சூரணமும் ஒரு குவளை கஷாயமும் குடித்தால் சரியாகி விடுவாய்...’’ சொன்ன விக்கிரமாதித்தர், ‘‘மருத்துவரே...’’ என்றழைத்தார்.

திரை மறைவில் இருந்து சாளுக்கியர்களின் தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.சிவகாமியை விட ராமபுண்ய வல்லபர் அதிகம் அதிர்ந்தார். மன்னரைப் பார்க்க அறைக்குள், தான் நுழைந்தது முதல் இவர் இங்குதான் மறைந்திருந்தாரா... அப்படியானால் மன்னருக்கும் தனக்கும் நிகழ்ந்த அனைத்து உரையாடல்களையும் அவர் கேட்டிருப்பார் என்றுதானே பொருள்... எதற்காக இவரை திரைக்குப் பின்னால் மறைந்திருக்க வைத்துவிட்டு தன்னிடம் மன்னர் அப்படிப் பேசினார்... நெகிழ்ந்தார்..?‘‘சிவகாமிக்கு சூரணமும் கஷாயமும் கொடுங்கள்...’’‘‘வேண்டாம் மன்னா... நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்...’’ சிவகாமி சொல்லச் சொல்ல தலைமை மருத்துவர் அவளை உடும்பாகப் பிடித்து திரைக்குப் பின்னால் இழுத்துச் சென்றார்.

‘‘மன்னா...’’மருத்துவரும் சிவகாமியும் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தர், திரும்பி ராமபுண்ய வல்லபரைப் பார்த்தார். ‘‘என்ன நடக்கிறது மன்னா..?’’‘‘அறிவதற்காகத்தான் நம் தலைமை மருத்துவரை பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறேன்... பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை கொண்டு வந்த கச்சையை எரித்ததும் தேவ மூலிகையால் அவை எழுதப்பட்டிருப்பதை... நெய்யப்பட்டிருப்பதைக் கண்டீர்கள் அல்லவா..?’’
‘‘ஆம் மன்னா...’’‘‘மதுரையில் நான் கண்டது வேறு! அங்கு கச்சையைக் கொண்டு வந்தவன் கரிகாலனின் நெருங்கிய நண்பனான சீனன்.

மதுரை தச்சர் வீதிக்கு வந்த அவனிடம் இருந்த கச்சையில் வரையப்பட்டிருந்தது அசுரப் போர் வியூகம் அல்ல! எந்திரப் பொறிகள்! அந்தக் கணத்தில்தான் நம்மைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையை உணர்ந்தேன்... போர் அமைச்சரே... உண்மையிலேயே பரஞ்சோதி மூன்று அசுரப் போர் வியூகங்களை அமைத்தாரா... அதில் இரண்டை நரசிம்மவர்ம பல்லவன் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாரா என்று தெரியாது... ஆனால், அப்படியொரு செய்தியை கசிய விட்டு கரிகாலன் மிகப்பெரிய நாடகம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறான்... எதற்கு என்றுதான் தெரியவில்லை...’’
‘‘மன்னா...’’

‘‘காஞ்சியை நோக்கி நாம் படைதிரட்டி வந்தது எதிர்பார்க்கக் கூடியது... என் தந்தையும் நம் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி அடைந்த
படுதோல்விக்கும் நம் தலைநகர் வாதாபி தீ வைத்துக் கொளுத்தப்பட்டதற்கும்... என் தந்தையின் சிரசு வெட்டப்பட்டதற்கும் ஒரு மகனாக மட்டுமல்ல, இன்றைய சாளுக்கிய தேசத்தின் மன்னனாகவும் நான் பழிவாங்குவேன் என்பது ஒவ்வொரு பல்லவ குடிக்கும் தெரியும்... எதிர்பார்த்தே காத்திருந்தார்கள்... ஆனால்... பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் மட்டும் ஏன் நம்மை எதிர்பார்க்காதது போல் நடந்துகொண்டான்..? நாம் வருவதை அறிந்து நம்மை படையுடன் எதிர்கொள்ளாமல் ஏன் காஞ்சியை நம்மிடம் விட்டுவிட்டு மறைந்தான்..?’’

‘‘மன்னா...’’ ‘‘இப்பொழுது ஏன் நம்மை வீழ்த்த படை திரட்டுகிறான்..? இதை ஏன் இத்தனை காலங்களாக அவன் செய்யவில்லை..?’’
‘‘மன்னா...’’‘‘கரிகாலன் ஏன் என்னை தொடர்பு கொண்டு படை திரட்டி வரும்படி சொன்னான்..? சிவகாமி ஏன் உங்களைச் சந்தித்து உங்கள் நம்பிக்கையைப் பெற்று சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியாக உயர்ந்தாள்..?’’

‘‘...’’‘‘அனைத்துக்கும் மேல்... இப்பொழுது ஏன் சாளுக்கியர்களின் பொக்கிஷங்கள் குறித்து இந்தப் பெண் பேசவேண்டும்..?’’ விக்கிரமாதித்தர் இப்படிக் கேட்டு முடித்ததும் திரை மறைவில் இருந்து தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.‘‘மன்னா... நீங்கள் சந்தேகப்பட்டது சரி... இந்த அறைக்கு இப்பொழுது வந்தவள் நம் ஒற்றர் படைத் தலைவியான சிவகாமி அல்ல! மூலிகைத் தைலத்தால் தன் முகத்தை சிவகாமி போல் மாற்றிக்கொண்ட பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை!’’  அதேநேரம் -சாளுக்கிய தேசத்தில் எதிர்ப்பட்ட சாளுக்கிய வீரர்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான் கரிகாலன்!அவன் பார்வை பதிந்த இடத்தில் தேவ மூலிகை வளர்ந்திருந்தது!
 

ரத்த மகுடம்- 136

‘‘மன்னா...’’ அதிர்ச்சியுடன் அழைத்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ஆயிரம் இடிகள் ஒரு சேர இறங்குவதைக் காணும் மனிதன் எப்படி நிலைகுலைவானோ அப்படி அவர் நிலைகுலைந்திருந்தார். அவரது உடலும் உள்ளமும் எந்தளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அடுத்து அவர் பேசிய வாக்கியங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. ‘‘அப்படியானால் இதுநாள் வரை உங்கள் பணியாளராக... சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சராக... நான் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரா..? அதனால் ஒரு பயனும் இல்லையா..?’’
http://kungumam.co.in/kungumam_images/2021/20210212/23.jpg
‘‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே..?’’ சாளுக்கிய மன்னரின் குரலில் பரிவு வழிந்தது. ‘‘ஒரு நாழிகைக்கு முன், மன்னனான எனக்கே பாடம் நடத்தினீர்கள்... சில கணங்களுக்கு முன் உற்சாகத்துடன் உங்களது திட்டங்கள் அனைத்தையும் விளக்கினீர்கள்... இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று இப்படி விரக்தியின் உச்சியில் நிற்கிறீர்கள்..?’’

‘‘இன்னும் என்ன நடக்க வேண்டும் மன்னா...’’ சாளுக்கிய போர் அமைச்சரின் குரல் மட்டுமல்ல... உடலும் துவண்டுவிட்டதை அவரது உடல்மொழி பறைசாற்றியது. ‘‘வாழ்க்கையே நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான ஊசலாட்டம்தானே? நம்பிக்கையுடன் ஒரு மனிதன் பேசுகிறான் என்றால் அடுத்த சில கணங்களிலேயே அவநம்பிக்கை அவனைச் சூழப் போகிறது என்பதுதானே விதி..?’’

‘‘இந்த விதி தட்சிண பாரதத்தின் மாபெரும் ராஜதந்திரியான தங்களுக்கும் பொருந்துமா..?’’
‘‘இப்பிரபஞ்சத்திலுள்ள ஆறறிவு விலங்கான அனைத்து மனிதனுக்கும் பொருந்தும்...’’
‘‘அப்படி பொருந்தும் விதிதான் இப்படி உங்களைப் பேச வைக்கிறதா..?’’
‘‘ஆம் மன்னா...’’

‘‘விதியை மதியால் வெல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியாதா..?’’

‘‘தெரிந்ததால்தானே மதியான உங்கள் முன்னால் விதியான நான் மண்டியிட்டு இறைஞ்சுகிறேன்!’’
 
‘‘ராமா!’’ வாஞ்சையுடன் அழைத்தார் விக்கிரமாதித்தர்.அந்த ஒரு சொல்,ஸ்ரீராமபுண்ய வல்லபரை முழுமையாக நிமிர வைத்தது. அதுவரை அவரது அகத்தில் சூழ்ந்திருந்த பனி விலகியது. வெளிச்சம் பாய்ந்தது. அவரது கண்கள் ஒளிர்ந்தன.

பால்ய காலத்தில் தன் தோள் மீது கைபோட்டபடி விக்கிரமாதித்தர் நடந்த வாதாபியின் தெருக்கள் அனைத்தும் அவரது மனதில் நிழலாடின. அப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை ‘ராமா...’ என்றுதான் அழைப்பார். மாமாங்கத்துக்குப் பின்னர் இப்பொழுது அதே சொல்...
சிலிர்த்தபடி நிமிர்ந்து தன் மன்னரைப் பார்த்தார்.‘‘விதியின் பிடியில் சிக்கி நான் மதிகெட்டிருந்தபோது என்னை நீ தேற்றினாய்... இப்பொழுது உன்னைத் தேற்ற என்னை அழைக்கிறாய்! கேள் ராமா! உனக்கு என்ன தெரிய வேண்டும்..?’’
‘‘என் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறதா..?’’

‘‘இல்லை நண்பா!’’ விக்கிரமாதித்தரின் கருவிழிகளில் சிந்தனையின் ரேகைகள் படர்ந்தன.
‘‘என்னை ஆற்றுப்படுத்த இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், நடப்பவை அனைத்தும் என் கூற்றுக்குத்தானே வலு சேர்க்கிறது..?’’‘‘நடப்பவற்றை நாம் அனைவருமே அவரவர் கோணத்தில் இருந்துதானே அணுகுகிறோம்... புரிந்து கொள்கிறோம்..?’’

தலையசைத்து அதை ஆமோதித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.  ‘‘அப்படி கரிகாலன் ஒன்றைப் புரிந்துகொள்கிறான்... நீங்கள் வேறொன்றைப் புரிந்துகொள்கிறீர்கள்... ஆனால், நடப்பவை மட்டும் நிகழ்வுகளாக மட்டுமே அரங்கேறி கரைகின்றன...’’
‘‘...’’
‘‘எந்த வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு... வினை ஏற்படுத்தும் தாக்கத்துக்கு ஏற்ப எதிர்வினை இருக்கும்... எப்படி நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மனிதன் ஊசலாடியபடியே தன் வாழ்வைக் கழிக்கிறானோ அப்படி நிகழ்வின் தாக்கத்தால் பிறக்கும் வினைக்கும்... அந்த வினையின் விளைவால் ஏற்படும் எதிர்வினைக்கும் இடையில் மனிதனின் நடமாட்டம் இருக்கிறது. சொல்லப்போனால் அவனது அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்வதே இந்த வினைக்கும் எதிர்வினைக்கும் இடையிலான அல்லாட்டம்தான்...’’

விக்கிரமாதித்தரையே உற்றுப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் கணித்து, அவை உதிர்ந்து விழும் இலைதான் என்று உணர்ந்து, தன்மீது அவற்றின் தாக்கம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்பவன் ஸ்படிகம் போல் மின்னி ஞானியாகிறான் அல்லவா..? அதைப்போலவே வினையையும் எதிர்வினையையும் கணித்து, அவற்றின் தாக்கம் தன்மீது படராதபடி பார்த்துக் கொள்பவனும்; நடப்பதில் இருந்து நடக்கப் போவதை ஊகிப்பவனும் ராஜதந்திரியாகிறான்!’’
‘‘மன்னா...’’

‘‘இதுவரை கரிகாலன் வினையாற்றினான்... நீங்களும் நானும் அதற்கு எதிர்வினையாற்றினோம்... இனி நாம் வினை ஆற்றுவோம்... கரிகாலனை அதற்கு ஏற்ப எதிர்வினை புரிய வைப்போம்... அவனது எதிர்வினை எப்படியிருக்கும் என்று யோசிக்காமல் அவனது எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டும் என நாமே தீர்மானிப்போம்!’’
‘‘...’’
‘‘அனுபவங்கள் எப்பொழுதும் வீணாவதில்லை ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’
முழுப்பெயருடன் தன்னை மன்னர் அழைத்ததும், சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார். நட்பின் வாஞ்சையில் இருந்து மீண்டுவிட்டார். தன்னையும் மீட்கும் பொருட்டு ‘ராமா...’ என்று அழைப்பதைத் தவிர்த்துவிட்டார்... இனி இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் நடைபெறப் போவதில்லை. மாறாக, ஒரு மன்னருக்கும் ஒரு போர் அமைச்சருக்கும் இடையிலான மந்திராலோசனையே அரங்கேறப் போகிறது... அதற்கு ஏற்ப தன்னை தயார்படுத்துகிறார்...

‘‘தண்ணீர் வரும் என்று நம்பி தோண்டுகிறோம்...’’ விக்கிரமாதித்தர் தொடர்ந்தார். ‘‘அங்கு நீருக்கு பதில் பாறைகள் இருந்தால் என்ன செய்வோம்..? நீருள்ள இடத்தைத் தேடி மறுபடியும் தோண்டுவோம். அதேநேரம் தோண்டிய இடத்தில் இருந்த பாறைகளை எடுத்து வீடு கட்ட பயன்படுத்துவோம் அல்லது கோட்டைச் சுவரை வலுப்படுத்துவோம்! மதியால் விதியை வெல்ல முற்படுபவனுக்கு விழலுக்கு இறைத்த நீர் என்று எதுவுமில்லை!

வாதாபியில் இருந்து நாம் புறப்பட்டது முதல் காஞ்சியை போரின்றி கைப்பற்றி ஆட்சி செய்யும் இக்கணம் வரை அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்... கரிகாலனால் நெய்யப்பட்ட நாம் பெற்ற அனுபவங்களை இழை இழையாகப் பிரித்து அதை வலுவான கயிறாக்குவோம்... அக்கயிற்றில் கரிகாலனைத் தொங்க விடுவோம்!’’
‘‘மன்னா...’’

‘‘அப்படி நான் பிரித்து சில இழைகளை எடுத்திருக்கிறேன்!’’
ராமபுண்ய வல்லபர் கண்கள் விரிய விக்கிரமாதித்தரை ஏறிட்டார்.‘‘அடுத்து நடக்கப் போவதை நம்மிடம் முன்பே கரிகாலன் அறிவிக்கிறான்!’’
‘‘அதாவது, இதைத்தான் நான் செய்யப் போகிறேன் என்பதை நம்மிடம் சொல்லிவிட்டே அவன் செய்கிறான் என்கிறீர்கள்!’’
‘‘அதேதான் போர் அமைச்சரே! அந்த வகையில் சாளுக்கியர்களின் பொக்கிஷங்களை, தான் களவாடப் போவதாக இப்பெண் வழியாக நமக்கு அவன் செய்தி அனுப்பியிருக்கிறான்!’’

‘‘மன்னா... இப்பொழுது வந்திருப்பவள்...’’
‘‘சிவகாமி அல்ல! அதை ஊர்ஜிதப்படுத்தவே நம் தலைமை
மருத்துவரை மறைந்திருக்கச் சொன்னேன்...’’
‘‘அப்படியானால், இப்படி நடக்கும் என கணித்தீர்களா..?’’
இமைகளைச் சிமிட்டினார் விக்கிரமாதித்தர்.

‘‘நீங்கள் பிரித்த மற்றொரு இழை!’’
சாளுக்கிய மன்னர் நகைத்தார். சாளுக்கிய போர் அமைச்சர் அந்தச் சிரிப்பில் கலந்துகொண்டார்.சரியாக அப்பொழுதுதான் திரைமறைவில் இருந்து தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.‘‘மன்னா! நீங்கள் சந்தேகப்பட்டது சரி... தங்களைக் காண இந்த அறைக்கு இப்பொழுது வந்தவள் நம் ஒற்றர் படைத்தலைவியான சிவகாமி அல்ல! மூலிகைத் தைலத்தால் தன் முகத்தை சிவகாமி போலவே மாற்றிக்கொண்ட பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை!’’விக்கிரமாதித்தரும் ராமபுண்ய வல்லபரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘உறுதியாகத் தெரியுமா..?’’ மன்னர் கேட்டார்.‘‘தெளிவுபடுத்திய பிறகே அறிவிக்கிறேன் மன்னா! வந்த பெண்ணுக்கு முதலில் மயக்க மருந்து கலந்த கஷாயத்தைக் கொடுத்தேன். அதைப் பருகியதும் அவள் சாய்ந்தாள். பொறுமையாகப் பரிசோதித்தேன்...’’‘‘அவளுக்கு நினைவு..?’’ ராமபுண்ய வல்லபர் இடைமறித்தார்.

‘‘திரும்ப இன்னும் ஐந்து நாழிகைகளாகும்...’’‘‘மருத்துவரே...’’ விக்கிரமாதித்தர் அழைத்தார். ‘‘மீண்டும் மூலிகைத் தைலத்தால் அவளை சிவகாமியாகவே மாற்றுங்கள்... கண் விழித்ததும் சிவகாமியிடம் உரையாடுவது போலவே அவளிடம் பேசுங்கள். மன்னருக்கு உன் மீது எந்த வருத்தமும் கோபமும் இல்லை... அவர் உன்னை ஒருபோதும் சந்தேகப்படவே இல்லை என்று சொல்லி அனுப்பி விடுங்கள்!’’‘‘உத்தரவு மன்னா...’’ தலைவணங்கிவிட்டு பழையபடி திரைமறைவுக்கு மருத்துவர் சென்றார்.

‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’
‘‘வாருங்கள்... சிறைக்குச் செல்வோம்!’’
‘‘காஞ்சி பாதாளச் சிறைக்கா மன்னா..?’’
‘‘இல்லை! கரிகாலன் நடத்தி வரும் நாடகத்தின் தொடக்கம் எங்கு ஆரம்பித்ததோ அங்கு... அந்தச் சிறைக்கு!’’
‘‘நன்றி மருத்துவரே...’’

திரைச்சீலையை விலக்கியபடியே நுழைந்த சாளுக்கிய தேசத்தின் தலைமை மருத்துவரைப் பார்த்து சிவகாமி கையெடுத்துக் கும்பிட்டாள். அவரது கால்களைத் தொட்டு வணங்கினாள்.‘‘நான் கேட்டுக் கொண்டபடியே, வந்திருப்பவள் எனது தோற்றத்தில் வந்த நங்கை என்று சாளுக்கிய மன்னரிடம் சொல்லிவிட்டீர்கள்... உங்களது இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன்...’’‘‘நங்கைக்கு ஆபத்து..?’’ மருத்துவர் இழுத்தார்.
 
‘‘வராது மருத்துவரே... புலவர் தண்டியிடம் பாடம் பயின்றவள்... பல்லவ ஒற்றர் படையில் அங்கம் வகிப்பவள்... இப்பொழுது அவள் இருக்கும் இடத்தை சாளுக்கியர்களால் கண்டுபிடிக்கவே முடியாது... ஒருவேளை அவளுக்கு ஆபத்து வந்தாலும் அவள் அதை எதிர்கொள்வாள்!’’சாளுக்கிய தேசத்தின் தலைமை மருத்துவர் தலையசைத்தார்.
 
‘‘வருகிறேன் மருத்துவரே...’’புறப்பட்ட சிவகாமி நின்றாள். திரும்பி மருத்துவரைப் பார்த்தாள். ‘‘விரைவில் ஆயனச் சிற்பியின் மகளான என் பாட்டியைச் சந்திப்பேன்... அப்பொழுது நீங்கள் செய்த இந்த உதவி குறித்து அவரிடம் தெரிவிக்கிறேன்...’’ வெளியேறினாள்.
கன்னங்களில் கண்ணீர் வழிய மருத்துவர் அப்படியே நின்றார்!

‘‘கொற்றவைத் தாயே! சிவகாமி உயிருடன் திரும்ப மாட்டாள் என்று தெரிந்தே கரிகாலர் அவளை அனுப்பியிருக்கிறார்... அவர் மீதுள்ள காதல் காரணமாக சிவகாமியும் அங்கு சென்றிருக்கிறாள்... அவளது உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது தாயே... நீதான் காப்பாற்ற வேண்டும்!’’ நங்கை மனமுருகி பிரார்த்தித்தாள்.தன் பூஜையறையில் இருந்த மகாமேருவுக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் புலவர் தண்டி தன் கண்களை மூடினார்.
கரிகாலனின் புன்னகை தவழும் முகம் அவர் அகத்தை வியாபித்தது.

‘‘கரிகாலா! வரலாறு உன்னை நினைவுகூராது... ஆனால், இனி எழுதப்படும் பல்லவ, பாண்டிய, சோழ, சாளுக்கிய சரித்திரத்தின் பிரதிகள் அனைத்திலும் உன் நாடகத்தின் தாக்கமே எதிரொலிக்கும்! வரலாற்றைத் திருத்தி எழுதும் உன்னை என் மாணவனாகப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்...’’புரவி செல்லும் திசையைக் கண்டதுமே ராமபுண்ய வல்லபருக்கு தாங்கள் செல்லும் இடம் எதுவெனப் புரிந்துவிட்டது.அதற்கு ஏற்பவே மலையடிவாரத்தில் புரவி நின்றது.

எங்கிருந்தோ வந்த சாளுக்கிய வீரன், விக்கிரமாதித்தரையும் அவரையும் வணங்கினான்.இருவரும் மலைக் குகைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் பல்லவ இளவரசி அங்கு மயக்கத்தில் இல்லை.மாறாக, பாறையில் கால் மேல் கால் போட்டபடி கம்பீரமாக அமர்ந்திருந்தாள். அத்துடன் ‘‘வாருங்கள் சாளுக்கிய மன்னரே!’’ என வரவேற்கவும் செய்தாள்!
 
  • 1 month later...
Posted

ரத்த மகுடம்-137

‘‘வாருங்கள் சாளுக்கிய மன்னரே...’’ பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த பல்லவ இளவரசி அவர்களை வரவேற்றாள். ‘‘தங்கள் வருகைக்காகத்தான் காத்தி ருக்கிறேன்...’’புன்னகையுடன் தலையசைத்து அந்த வரவேற்பை ஏற்றார் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்.பின்னால் வந்த ஸ்ரீராமபுண்ய வல்லபர், முன்னால் வந்து மன்னருக்கு அருகில் நின்றார்.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210219/28.jpg
‘‘அட... சாளுக்கிய போர் அமைச்சரும் உடன் வந்திருக்கிறாரா..?’’ புருவத்தை உயர்த்திய பல்லவ இளவரசி, இருவரையும் ஒருசேர பார்த்தாள்.நான்கு விழிகளும் தன்னையே அலசி ஆராய்வதைக் கண்டதும் அவள் உதட்டோரம் இளநகை பூத்தது. நிதானமாக தன் கால் மேல் இருந்த மற்றொரு காலை எடுத்து தரையில் ஊன்றினாள். எழுந்து நின்று இருவரையும் வணங்கினாள்.

அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டதற்கான எந்த சொல்லையும் விக்கிரமாதித்தர் உதிர்க்கவில்லை. அவரது உடல்மொழியிலும் ஏற்றதற்கான எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. நிதானமாக அந்த மலைக் குகையை ஆராய்ந்தார்.அவரது கருவிழிகள் பயணப்படும் திசைகளைக் கண்ட பல்லவ இளவரசியின் முகம் மலர்ந்தது.

‘‘எனது வருகைக்காகத்தான் காத்திருக்கிறாயா..?’’ குரலை உயர்த்தாமல், அழுத்தமும் கொடுக்காமல் சகஜமாக உரையாடலைத் தொடங்கினார் சாளுக்கிய மன்னர்.‘‘ஆம் மன்னா...’’ பல்லவ இளவரசியின் குரலிலும் அதே சகஜ ‘பா’வனை.‘‘உடன் நான் வருவேன் என்று...’’ஸ்ரீராமபுண்ய வல்லபர் முடிப்பதற்குள் பல்லவ இளவரசி இடைமறித்தாள்.‘‘உறுதியாக நினைக்கவில்லை... வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்றே நினைத்தேன்...’’‘‘வந்தது லாபமா நட்டமா..?’’

‘‘யாருக்கு போர் அமைச்சரே..?’’ பல்லவ இளவரசியின் புருவம் உயர்ந்தது.ராமபுண்ய வல்லபர் திரும்பி மன்னரைப் பார்த்தார்.
விக்கிரமாதித்தரின் பார்வை பல்லவ இளவரசியின் மீதே படிந்திருந்தது.‘‘எனக்கு என்றால்...’’ பல்லவ இளவரசியே தொடர்ந்தாள். ‘‘உங்கள் வருகையால் எனக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை...’’ பல்லவ இளவரசியின் அரிசிப் பற்கள் பளீரிட்டன.
‘‘அப்படியானால் எனது வருகை..?’’

கேட்ட விக்கிரமாதித்தரை இமைக்காமல் நிமிர்ந்து பார்த்தாள். ‘‘உங்கள் போர் அமைச்சருக்கு சொன்ன அதே பதில்தான் மன்னா... உங்கள் வருகையால் எனக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை...’’  ‘‘அப்படியிருந்தும் என் வருகைக்காகக் காத்திருக்கிறாய்...’’‘‘ஆம் மன்னா...’’‘‘எதற்கு..?’’‘‘நீங்கள் லாபமடைய!’’‘‘எனது லாபம் குறித்து நீ அக்கறைப்படுகிறாயா..?’’‘‘அக்கறைப்படுபவர் அப்படிக் கருதுகிறார்... எனவே உங்கள் வினாக்கள் அனைத்துக்கும் விடையளிக்கும்படி...’’‘‘... கேட்டுக் கொண்டிருக்கிறாரா..?’’‘‘கட்டளையிட்டிருக்கிறார் மன்னா!’’‘‘இளவரசியையே கட்டளையிடும் அளவுக்கு ஒருவர் இருக்கிறாரா..?’’‘‘தட்சிண பாரதத்தின் மன்னரையே தன் விருப்பத்துக்கு ஏற்ப அவர் அசைக்கும்போது, சொந்த நாட்டையே பறிகொடுத்தவரின் மகள் நான்... எனக்கு அவர் கட்டளையிட மாட்டாரா..?’’ நகைக்காமல் நகைத்தாள். ‘‘யார் அவர்..?’’ விக்கிரமாதித்தரின் கண்கள் கூர்மையடைந்தன.

‘‘எந்த திதி, கிழமையில் உங்களை படைகளுடன் ஆரவாரமின்றி ரகசியமாக சாளுக்கிய நாட்டில் இருந்து புறப்படச் சொன்னாரோ அவர்! எந்த திதி, கிழமையில் பல்லவ நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கும்படி சொன்னாரோ அவர்! எந்த திதி, கிழமையில் போரின்றி, குருதி சிந்தாமல் காஞ்சியை நீங்கள் கைப்பற்றும்படி பார்த்துக் கொண்டாரோ அவர்!’’ ‘‘அவரா..?’’
 

‘‘அவரேதான் மன்னா!’’ கம்பீரமாக அறிவித்தாள் பல்லவ இளவரசி. ‘‘இந்த திதி, கிழமையில்... இத்தனை நாழிகையில் கேள்விகளுடன் என்னை வந்து சந்திப்பீர்கள் என முகூர்த்தம் குறித்து இப்பாறையில் நான் எப்படி அமர்ந்து உங்களை வரவேற்க வேண்டும் என்று படம் வரைந்து விளக்கியதும் அவர்தான்!’’  வாய்விட்டுச் சிரித்தார் விக்கிரமாதித்தர்.கண்கள் இடுங்க அவரையே பார்த்தாள் பல்லவ இளவரசி.
 

சிரித்து முடித்ததும் தன் அருகில் நின்றிருந்த ஸ்ரீராமபுண்ய வல்லபரின் தோளில் கை போட்டார் சாளுக்கிய மன்னர். ‘‘இப்பொழுது என்ன சொல்கிறீர்கள் போர் அமைச்சரே..?’’

‘‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மன்னா...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் மலர்ந்தார். பல்லவ இளவரசியை ஏறிட்டார். ‘‘நீ மயக்கத்தில் இருக்க மாட்டாய்... பாறை மீது கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பாய் என்றார் மன்னர். பார்த்தால் அப்படித்தான் காட்சியளித்தாய்...’’
பல்லவ இளவரசி அதிர்ந்தாள்.‘‘அதேபோல் எங்களை வரவேற்று இப்படித்தான் பேசுவாய் என்றார் மன்னர். அச்சு அசலாக அப்படித்தான் பேசுகிறாய்! அதுவும் ஒரு சொல்... ஒரேயொரு எழுத்து கூட மாறாமல்!’’ பல்லவ இளவரசி அதிர்ந்தாள்.

‘‘இளவரசி...’’ அழைத்த விக்கிரமாதித்தரின் குரலில் கம்பீரம் வழிந்தது. ‘‘ரத்த உறவின் அடிப்படையில் நீ பல்லவ இளவரசியா அல்லது பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனின் வளர்ப்பு மகள் என்ற அடிப்படையில் நீ பல்லவ இளவரசியா என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை... உன்னை இளவரசி என பல்லவர்கள் அழைப்பதால் அப்படியே நானும் அழைக்கிறேன்...’’சொன்ன விக்கிரமாதித்தர் குகைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. சட்டென நின்று திரும்பினார்.

‘‘பூடகமாகப் பேசி விளையாடியது போதும் என நினைக்கிறேன் இளவரசி... விஷயத்துக்கு வருவோம். கரிகாலன் எழுதிய, எழுதும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக பல்லவர்களும் சாளுக்கியர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே நீ நினைக்கிறாய்..?’’

பல்லவ இளவரசி நிமிர்ந்து சாளுக்கிய மன்னரைப் பார்த்தாள். ‘‘ஒன்றும் பிரச்னையில்லை. அப்படியே நினைத்துக் கொள். ஆனால், இழுத்த இழுப்புக்கு ஏற்ப அசைய சாளுக்கிய மன்னன் ஒன்றும் பொம்மையில்லை. ரத்தமும் சதையுமான மனிதன். முக்கியமாக பல்லவர்களை வேரோடு அழிக்க சபதம் செய்திருக்கும் வெறி பிடித்தவன். அப்படிப்பட்டவன் பல்லவ உபசேனாதிபதி குறித்து தந்த திதி, கிழமையிலா சாளுக்கிய நாட்டில் இருந்து புறப்பட்டிருப்பான்..?

சற்றே சிந்தித்துப் பார்... உன்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு பெண் சாளுக்கிய தேசத்தில் தட்டுப்படுகிறாள்... எங்கள் போர் அமைச்சரின் பார்வையில் படுகிறாள்... அவரது நம்பிக்கையைப் பெறுகிறாள்... சாளுக்கிய ஒற்றர் படைத் தலைவியாக உயர்கிறாள்... சொல்லி வைத்ததுபோல் இவை எல்லாம் அடுத்தடுத்து நடக்கின்றன. இந்த இடத்திலேயே பல்லவர்கள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டாமா?!’’ ‘‘அப்படியானால்..?’’ பல்லவ இளவரசி இழுத்தாள்.

‘‘கரிகாலனின் நாடகத்தில் நடிப்பது போலவே எங்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகிறோம்... உண்மையில் கரிகாலனின் இழுப்புக்கு ஏற்ப நாங்கள் அசையவில்லை... எங்கள் அசைவுக்கு ஏற்பவே அவனை இழுக்க வைக்கிறோம்!’’ இடைமறித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘பெயருக்கு நான்கு வீரர்களுடன் வந்த உன்னை சிறை செய்து இந்தக் குகையில் அடைத்துவிட்டு அவளை... அதுதான் அந்த சிவகாமியை... பல்லவ இளவரசியாக பல்லவர்கள் மத்தியில் ஊடுருவச் செய்ததெல்லாம் எதற்கு என்று எண்ணுகிறாய்..?

வேட்டையாடத்தான்! ஓடவிட்டு துரத்தித் துரத்தி வேட்டையாடத்தான் எந்தவொரு வேட்டுவனும் விரும்புவான்!’’இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் இளவரசி.‘‘வரலாற்றில் இருந்து பாடம் கற்பவன்தான் மன்னனாகவே முடியும்...’’ அழுத்திச் சொன்னார் விக்கிரமாதித்தர். ‘‘ஆயனச் சிற்பி யின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமியை என் தந்தை வாதாபியில் சிறை வைத்தார்... அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம்... இதைப் பார்த்து வளர்ந்த நான், அதேபோன்ற செயலைச் செய்வேன் என்று கரிகாலன் நினைத்தான் பார்... அந்த இடத்திலேயே அவன் தோற்றுவிட்டான்.

அரச குடும்பத்து மகளிர் என்றில்லை... எந்தவொரு பெண்ணையும் சிறை வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. நேருக்கு நேர் போரிட்டு வெற்றி பெறவே விரும்புகிறேன். அப்படியிருந்தும் கரிகாலனின் நாடகப்படி உன்னை இந்தக்குகையில் சிறை வைத்தேன்... மயக்கத்திலேயே இருக்கும்படி செய்தேன்... இன்று உனக்கு மயக்க மருந்து தர வேண்டாம் என்று சொன்னேன்... ஏன் தெரியுமா..?’’இளவரசி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

‘‘பதிலை அவனையே கண்டறியச் சொல்! இனி இந்தக் குகையில் நீ இருக்க வேண்டியதில்லை. இதுநாள் வரை உன்னை இங்கு அடைத்துவைத்து நாங்கள் சாதிக்க வேண்டியதைச் சாதித்து விட்டோம்! இதற்கு மேல் நீ எங்களுக்கு அவசியமில்லை. எங்கு செல்ல வேண்டுமோ தாராளமாக அங்கு செல். சாளுக்கிய வீரர்கள் உன்னைப் பின் தொடர மாட்டார்கள்...’’ சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் குகையை விட்டு வெளியேறினார்.

ராமபுண்ய வல்லபர் அவரைத் தொடர்ந்து சென்றார்.தான், முன்பு அமர்ந்த பாறையின் மீது மீண்டும் அமர்ந்தாள் பல்லவ இளவரசி. அவளால் வியப்பை அடக்கவே முடியவில்லை. பொங்கிப் பொங்கி வழிந்தது.‘எவ்வளவு துல்லியமாக நாடகத்தை எழுதி எங்கள் அனைவரையும் நடிக்க வைக்கிறார்...’ எண்ணியவள் தன் இடுப்பில் இருந்து ஓலை நறுக்குகளை எடுத்தாள்.

சாளுக்கிய மன்னர் இப்பொழுது பேசிய அனைத்துச் சொற்களும் அதில் அப்படியே எழுதப்பட்டிருந்தன. ‘மன்னர் இப்படிச் சொல்லி நிறுத்தியதும் திகைப்பை வெளிப்படுத்து... ராமபுண்ய வல்லபர் இதைச் சொன்னதும் முகத்தில் அதிர்ச்சியைக் காட்டு...’ என அவளது உணர்ச்சிகள் எந்தெந்த இடங்களில் வெளிப்பட வேண்டும்... எப்படி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த ஓலை நறுக்குகளை எழுதி அனுப்பியது கரிகாலன் அல்ல! ‘‘சமயம் அறிந்து சரியாக நடித்தீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ குகையை விட்டு வெளியேறியதும் விக்கிரமாதித்தர் அமைதியைக் கிழித்தார்.‘‘புறப்படும்போதே கரிகாலன் நெய்த இழைகளைப் பிரிக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டீர்களே... அதனால்தான் என்னால் அப்படி நடிக்க முடிந்தது... தெரியாததை எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள முடிந்தது...

ஆனாலும் பல்லவ இளவரசி அப்படி பேசுவாள் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அதிர்ச்சியாக இருக்கிறது மன்னா... எந்தளவுக்கு நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்...’’‘‘நடந்ததைக் குறித்து யோசிப்பதில் பயனில்லை போர் அமைச்சரே... நடக்கவிருப்பதைக் குறித்து பேசுவோம்... இதுவரை நம்மை கரிகாலன் ஏமாற்றினான்... இனி அவன் ஏமாறுவான்...’’

‘‘தேவ மூலிகைகளால் நெய்யப்பட்ட கச்சையை எரித்து சாம்பலாக்கிய கணம் முதல் இருப்பு கொள்ளாமல் தவிக்கிறேன்... பல்லவர்களுடன் நடைபெறவிருக்கும் போரைவிட சாளுக்கியர்களின் பொக்கிஷங்கள் முக்கியம் மன்னா...’’ ‘‘பொக்கிஷங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது ராமபுண்ய வல்லபரே... நமக்கு சொந்தமான நவரத்தினங்களும் வைர வைடூரியங்களும் இப்பொழுது சாளுக்கிய தேசத்திலேயே இல்லை...’’‘‘எங்கிருக்கிறது மன்னா..?’’‘‘என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத பாதுகாப்பான இடத்தில்!’’
‘‘அப்படியானால் எந்த தைரியத்தில் கரிகாலன் அவற்றை களவாடப் போவதாகச் சொல்கிறான்..?’’
 

‘‘அதுதான் குழப்பமாக இருக்கிறது...’’ சொன்ன விக்கிரமாதித்தரின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. ‘‘எது ஒன்றையும் சொல்லிவிட்டுத்தான் கரிகாலன் செய்கிறான்... அப்படி நம் பொக்கிஷங்களைக் களவாடப் போவதாக நமக்கே தகவல் கொடுத்திருக்கிறான்... அவன் குறிப்பிட்டிருக்கும் பொக்கிஷங்கள் என்பவை நவரத்தினங்கள்...
 
வைர வைடூரியங்கள் அடங்கிய கற்களா அல்லது வேறு ஏதேனுமா..?’’‘‘எல்லோர் வீட்டிலும்தான் கூழ் தயாரிக்கிறார்கள்... ஆனால், உன் தயாரிப்புக்கு ஈடு இணையே இல்லை...’’ சப்புக்கொட்டியபடி கோட்டைக் காவல் வீரர்கள் மண்சட்டியில் இருந்து கூழைக் குடித்தார்கள். ‘‘சரி... சரி... உள்ளே போ...’’பணிப்பெண் புன்னகைத்தபடியே கூழ் பானை கூடையுடன் சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபிக்குள் நுழைந்தாள்.

ரத்த மகுடம்-138

காலம் காலமாக புழங்கும் வீட்டுக்குள் இயல்பாக நடமாடுவதுபோலவே அந்தப் பணிப்பெண் வாதாபிக்குள் நுழைந்தாள். தடுமாற்றமே இல்லை. தடுமாற வேண்டிய அவசியமும் இல்லை.வாதாபி அவளது தாய்வீடு. நினைவு தெரிந்தது முதல் இந்த நகரத்தில்தான் புழங்கிக் கொண்டிருக்கிறாள். தவழ்ந்தது, நடை பயின்றது, நடந்தது, நடப்பது எல்லாம் வாதாபியில்தான். வீதிகளின் நீள அகலத்தை அவளது பாதங்கள் அறியும். வீதிகளின் எண்ணிக்கையும் மாளிகைகளின் சுற்றளவும் இல்லங்களின் அளவும் அவளுக்கு மனப்பாடம்.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210226/28.jpg

காற்றும் புகாதபடி அவளது கண்களை இறுகக் கட்டினாலும் யார் மீதும் மோதாமல் எந்தப்புரவியின் குளம்பிலும் அடிபடாமல் கைகளை வீசி நடப்பாள். செல்ல வேண்டிய இடத்துக்கு சரியாகச் சென்றடைவாள்.பூர்வீகம்..? ஒருவருக்கும் தெரியாது.
 
பெற்றோர்..? யாரும் அறியார். உடன் பிறந்தவர்கள்..? தகவல் ஏதுமில்லை. ஆனால், வாதாபியை அவளுக்கும் அவளை வாதாபிக்கும் தெரியும். அவள்தான் வாதாபி. வாதாபிதான் அவள். அவள் தவழ்ந்தபோது இமைகளை விரித்து கண்கொட்டாமல் பார்த்து ரசித்ததும் வாதாபிதான். அவள் தத்தித் தத்தி நடந்தபோது கைதட்டி வரவேற்றதும் வாதாபிதான்.


வாதாபிதான் அவளுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா, மாமா, மாமி, தோழன், தோழி, காதலன்... எல்லாமே.  பல்லவ மன்னர் நரசிம்மவர்மர் தலைமையில் பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி படைகளை நடத்தியதாகவும், புழுதியைக் கிளப்பியபடி அப்படைகள் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி தலைமையிலான படைகளைத் துரத்தியபடியே வாதாபிக்குள் நுழைந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறாள். பார்த்ததில்லை. அப்போது அவள் ஜனித்திருக்கவில்லை.

ஆனால், ஆண்டுகள் கடந்தும் இப்பொழுது வரை அப்படையெடுப்பே வாதாபி மக்களின் பேசு பொருளாக இருக்கிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல்லவப் படைகளே காணப்பட்டதாகவும், புரவிப் படைகளும் காலாட்படைகளும் கோட்டைக்குள் நுழைந்து நகரம் முழுக்க பரவியதாகவும், யானைப் படைகள் மட்டும் கோட்டைக்கு வெளியே சாளுக்கியர்களின் நட்பு தேசப் படைகள் வராதபடி அரணாக நின்று காவல் காத்ததாகவும் சொல்வார்கள். சொல்கிறார்கள். சொல்லிக் கொண்டும் இருப்பார்கள்.
 

மறக்கக் கூடிய நிகழ்வா அது..? சாளுக்கிய மக்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை. அதேநேரம் சாளுக்கியப் படைகளை நடமாடவும் வாழவும் விடவில்லை. தென்பட்ட ஒவ்வொரு சாளுக்கிய வீரனையும் ஒவ்வொரு பல்லவப் படை வீரன் வெட்டிச் சாய்த்தான்.
 
அரச வீதியில் இருந்த ஒவ்வொரு மாளிகைக்குள்ளும் புகுந்து பல்லவ வீரர்கள் சூறையாடினார்கள். வணிகர் வீதியில் இருந்த மாளிகையின் சேமிப்புக் கிடங்குகள் துடைக்கப்பட்டன.தங்கம், வைரம், வைடூரியமல்ல... ஒரேயொரு செப்பு நாணயத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. சகலமும் பல்லவர் வசமாகின.


சாளுக்கியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியதுமே வாதாபிக்கு செய்தி வந்துவிட்டது. தாங்கள் மாமன்னராகப் போற்றிய இரண்டாம் புலிகேசியின் சிரசை போரில் சீவிவிட்டார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே அரச குடும்பத்தினரும் அமைச்சர் பிரதானிகளும் சுரங்கம் வழியே வெளியேறிவிட்டார்கள். வணிகர்கள் அள்ள முடிந்த செல்வங்களுடன் தலைமறைவானார்கள்.மூர்க்கத்துடன் வாதாபிக்குள் நுழைந்த பல்லவர் படைகளிடம் சிக்கியது அப்பாவி பொது மக்கள்தான்.
 

ஆனால், ஒன்று சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெண்களை மானபங்கப்படுத்தவில்லை.
 

மாறாக ஆண்கள்தான் வேட்டையாடப்பட்டார்கள். பெண்கள் வாழும் நகரம் என்று சொல்லும் அளவுக்கு வாதாபியை மாற்றியபின்னரே பல்லவப் படைகள் ஓய்ந்தன.ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி எங்கு சிறை வைக்கப்பட்டாரோ... அங்குதான் நேராக நரசிம்மவர்ம பல்லவரும் பரஞ்சோதியும் முதலில் வந்தார்கள். சிவகாமி அம்மையாரை விடுவித்தார்கள்.

அதன் பிறகுதான் பல்லவர்களின் ரத்த வெறி உச்சத்தை அடைந்தது. எந்தக் கோலத்தில் பார்க்கவே கூடாது என்று நரசிம்மவர்மர் விரும்பினாரோ அந்தக் கோலத்தில்தான் சிவகாமி அம்மையார் இருந்தார்.பல்லவ மன்னரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.தலைவிரி கோலமாக இருந்த சிவகாமி அம்மையாரைப் பார்த்து அதிர்ந்து சிலையான பரஞ்சோதியைப் பார்த்து நரசிம்மவர்மர் கட்டளையிட்டார். இல்லை, கர்ஜித்தார் என்று சொல்வதே சரி. அதன் பிறகு அரங்கேறியது வரலாறல்ல. ரத்த சரித்திரம்.

வால்மீகி எழுதியதெல்லாம் எதுவுமே இல்லை... இலங்கையை அனுமார் தீக்கிரையாக்கியதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாதாபியை பல்லவப் படைகள் தீ வைத்துக் கொளுத்தின. நகரமே பற்றி எரிந்தது. அரண்மனை முதல் மக்களின் குடியிருப்பு வரை எதுவும் தப்பவில்லை. எதுவும் மிஞ்சவில்லை. மாளிகைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குடியிருப்புகள் எல்லாம்  இடிக்கப்பட்டன. தங்குவதற்கு அல்ல, ஒண்டக் கூட மக்களுக்கு ஓரடி நிழல் கூட  கிடைக்கவில்லை.மிஞ்சியது சாம்பல் மட்டும்தான்.
 

அதுவரை நரசிம்மவர்மர் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. உறங்கவுமில்லை. பல்லவப் படைகள் உறங்கவும் அனுமதிக்கவில்லை.வாதாபியில் வெற்றிக் கம்பத்தை நட்டு... அதில் பல்லவர்களின் வெற்றியை கல்வெட்டாக செதுக்கினார். அதன்பிறகு அவர் வந்த தேரில் சிவகாமி அம்மையாரை ஏற்றினார்.
 
அவரே சாரதியானார். மொத்தம் பன்னிரண்டு முறை. வேண்டுதல் போல வாதாபி முழுக்க தேரைச் செலுத்தினார். இடிக்கப்பட்ட... கொளுத்தப்பட்ட... மண்ணோடு மண்ணாகிப் போன வாதாபியை கண்களும் மனமும் குளிரும் அளவுக்கு சிவகாமி அம்மையாரை தரிசிக்க வைத்தார். அதன் பிறகே தன் படைகளுடன் நரசிம்மவர்மர் வெளியேறினார்...

 

பெருமூச்சுவிட்ட பணிப்பெண்ணுக்கு எப்பொழுதும் போல் அப்பொழுதும் நரசிம்மவர்மர் செய்தது சரியென்றே தோன்றியது.
 

பல்லவர்கள் மீது சாளுக்கியர்கள் படையெடுத்தது தவறில்லை. அது அரசர்களுக்குரிய தர்மம். ஆனால், பிணையாக ஒரு பெண்ணைப் பிடித்து வந்து வாதாபி யின் மத்தியில் அனைவரும் பார்க்கும் அளவு சிறை வைத்தது எப்படி சரியாகும்..?

அரச குடும்பத்து மகளிரை சிறை எடுப்பதே தவறு என்னும்போது ஏதுமறியாத... நாட்டியமாட மட்டுமே தெரிந்த... பல்லவ இளவரசரைக் காதலித்த ஒரே குற்றத்துக்காக... ஒரு சிற்பியின் மகளைக் கடத்தி வந்து பன்னிரண்டு ஆண்டுகள் வெய்யிலிலும் மழையிலும் இருக்க வைத்தது பஞ்சமா பாதகமல்லவா..? எந்த தர்மமும் இதை அனுமதிக்காதே... எந்த மறை நூல்களும் இதை நியாயப்படுத்தாதே...

அதற்கான விலையைத்தான் வாதாபி கொடுத்தது. மன்னரின் பாவங்களை மக்களே அனுபவிப்பார்கள் என்ற உண்மையையும் உலகுக்கு அறிவித்தது.

மெல்ல பணிப்பெண் கூடையைச் சுமந்தபடி நடந்தாள்.எதிர்ப்பட்ட சாளுக்கிய வீரர்களுக்கு எல்லாம் அவள் கூழ் கொடுக்கவில்லை.
 

தேர்ந்தெடுத்த இடங்களில் இருந்த வீரர்கள் முன்னால்தான் கூடையை இறக்கினாள். குவளையில் கூழை ஊற்றிக் கொடுத்தாள். குடிக்கும் அவர்களைப் பார்த்தாள். அகன்றாள். நடந்தாள்.அவள் அறியாத வாதாபியைக் குறித்து மக்கள்தான் அறிய வைத்தார்கள்.
 

ஆனால், அவள் அறிந்த... இப்பொழுதிருக்கும் வாதாபியை அவளே அறிவாள்.சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி போரில் பல்லவர்களால் தலை சீவி கொல்லப்பட்டதும் தேசமே அல்லாடியது. மன்னரில்லை. தலைநகரும் இல்லை. இளவரசர்களோ எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
 

என்ன செய்வது என்று மக்கள் தவித்தபோது இளைஞராக விக்கிரமாதித்தர் வந்து சேர்ந்தார். இரண்டாம் புலிகேசியின் மகன். ஆனால், மூத்த மகனல்ல. என்றாலும் தன் சகோதரர்களை வீழ்த்தி அரியணையைக் கைப்பற்றினார்.
 

எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண்ணாகிப் போன வாதாபியை மக்களின் துணையோடு மீண்டும் எழுப்பினார். முன்பை விட வலுவான கோட்டை கட்டப்பட்டது.இப்பணிகள் நடந்தபோது அவள் விவரம் புரியும் வயதில் இருந்தாள். எனவே வாதாபியின் வளர்ச்சியை அணு அணுவாகக் கண்டாள்.
 
அவளும் வாதாபியும் ஒருசேர வளர்ந்தார்கள்.சிற்றரசர்களைப் பணிய வைத்து, சாளுக்கிய தேசத்தைத் தலைநிமிர வைத்து, பல்லவர்களைப் பழிவாங்க பெரும் படையுடன் சில திங்களுக்கு முன் மன்னர் விக்கிரமாதித்தர் இளவரசர் விநயாதித்தருடன் புறப்பட்டபோது வாதாபியே விழாக்கோலம் பூண்டு அவர்களை வழியனுப்பி வைத்தது.


எதிர்ப்பின்றி காஞ்சியை விக்கிரமாதித்தர் கைப்பற்றிவிட்டார் என்று தகவல் கிடைத்தபோது வாதாபி மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினார்கள். தலைமறைவான பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மரும் அவர் மகன் இராஜசிம்மனும் ரகசியமாக படைகளைத் திரட்டி வருகிறார்கள் என்று அறிந்ததும் கைதட்டிச் சிரித்தார்கள். சாளுக்கியர்களை உங்களால் வீழ்த்த முடியாது என கொக்கரித்தார்கள்.

என்றாலும் மன்னரில்லாத சமயத்தில் வாதாபியை முற்றுகையிட்டு கைப்பற்ற பல்லவர்கள் முயன்றால்..? அதற்காகத்தான் விக்கிரமாதித்தருடன் செல்லாத சாளுக்கிய வீரர்கள் பகலும் இரவுமாக வாதாபியைக் காவல் காக்கிறார்கள்.அந்தப் பணிப்பெண் அனைத்தையும் அசைபோட்டபடி வாதாபியின் மத்திய பகுதியில் இருந்த கொற்றவை ஆலயத்துக்கு வந்து சேர்ந்தாள்.

முன்பு அங்கு கூரை இல்லாமல் நான்கு தூண்கள் மட்டுமே எழுப்பப்பட்ட மண்டபம் இருந்தது. அதில்தான் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையுமான சிவகாமி அம்மையாரை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்கள்.வாதாபி மீண்டும் எழுப்பப்பட்டபோது அந்த இடத்தில் கொற்றவைக்கு ஆலயம் கட்டினார் விக்கிரமாதித்தர்.கோயிலின் வாசலுக்கு வந்த அந்தப் பணிப்பெண், கூடையை இறக்கிவிட்டு நுழைந்தாள். கர்ப்பக்கிரகத்தில் சுடர்விட்ட காளியைப் பார்த்தாள். சிவகாமி அம்மையாரின் தலைவிரிகோலமே அவள் கண்முன்னால் விஸ்வரூபம் எடுத்தது.வணங்கினாள். பிரார்த்தனை செய்தாள். வெளியில் வந்து நிலைப்படியில் அமர்ந்தாள்.

கூழ் குடித்த வீரர்கள் தகவலை அறிந்திருப்பார்கள் என்பதில் அப்பெண்ணுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் கூழ் என்பது குறியீடு. ஒரு மனிதனின் வருகையை அறிவிக்கும் கட்டியங்காரனின் குரல் அது.வரவிருக்கும் அந்த மனிதனுக்காக அந்தப் பணிப்பெண் பொறுமையாகக் காத்திருக்கத் தொடங்கினாள்.அந்த மனிதன் யாரென்பதையும் எப்பணியை அவன் மேற்கொள்ளப் போகிறான் என்பதையும் அவள் அறிவாள். அதுவும் முழுமையாக.அவன், பல்லவ உபசேனாதிபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன்!

பறவைகள் தன்னைப் பார்த்துவிடக் கூடாது... மீன்கள் தன்னை அறிந்துவிடக் கூடாது என எச்சரிக்கையுடன் ஏரியில் அந்தத் தோணி நகர்ந்து கொண்டிருந்தது.நீருக்கு வலிக்காதபடி துடுப்பைச் செலுத்திக்கொண்டிருந்த சிவகாமியின் செவி மடல்கள் சட்டென தன் அசைவை நிறுத்தின.துடுப்பு போட்டபடியே சிவகாமி திரும்பினாள்.மூன்று தோணிகளில் ஐந்து சாளுக்கிய வீரர்கள் அரைவட்டமாக தன்னை நெருங்குவதைக் கண்டாள்.புன்னகைத்தாள். துடுப்பின் நுனியை லாவகமாக இழுத்தாள்.மெல்லிய வாள் அவள் வலது கையை அலங்கரித்தது.இடது கையால் துடுப்பை போட்டபடியே வலது கையில் இருந்த வாளை அசைத்து வந்தவர்களை வரவேற்றாள்!

  • 2 months later...
Posted

ரத்த மகுடம்-139

சாளுக்கிய வீரர்கள் அதிர்ந்து போனார்கள். ஆர்ப்பாட்டமின்றி, ஆரவாரம் இல்லாமல் ஏரியில் தோணியை, அதுவும் வழக்கத்தைவிட விரைவாகச் செலுத்த முடியும் என்பது அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்க்காதது; நினைத்தும் பாராதது; கற்பனையிலும் காணாதது. அத்தோணியை செலுத்துபவர், தன்னை கரையில் இருந்து யாரும் பார்த்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். தோணியின் உயரத்துக்கு ஏற்ப தன் உடலைக் குறுக்கிக் கொண்டு பதுங்கியிருந்தார்.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210312/21.jpg
எதிரி நாட்டுக்குள் ஊடுருவும் ஒற்றர்கள் இப்படி பயணப்படுவார்கள். தோணிக்குள் கால்களைக் குறுக்கி படுத்துக் கொள்வார்கள். ஆனால், தோணியைச் செலுத்துபவர், துடுப்பை வலிப்பவர் வேறொருவராக இருப்பார்.இங்கு அப்படியில்லை. பதுங்கி இருப்பவரேதான் துடுப்பையும் செலுத்துகிறார். இது எப்படி சாத்தியம்..? இதுபோன்ற வித்தையை தாங்கள் கேள்விப்பட்டதேயில்லையே...

திகைப்பும் அதிர்ச்சியும் சிந்தனையுமாக தங்கள் பாதுகாப்பில் இருந்த ஏரியில் பயணப்படும் அத்தோணியை புருவம் உயர பார்த்தார்கள். கடந்த மூன்று திங்களாக சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் அந்த ஏரி இருக்கிறது. போர்ச் சூழலை முன்னிட்டு பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அருகிலிருந்த கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டன.

மக்கள் யாரும் போர்க் கொடி உயர்த்தவில்லை. அவ்வளவு ஏன், முணுமுணுக்கவும் இல்லை. காரணம், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே வழங்கிய பொற்காசுகள்தான். அதை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டு காலத்துக்கு ஒவ்வொரு குடும்பமும் நிம்மதியாக வாழலாம்.

பாகுபாடு பார்க்கப்படவில்லை. கிராமத் தலைவராக இருந்தாலும் சரி... மீன் விற்பனை செய்பவராக இருந்தாலும் சரி... அனைவருமே எண்களாக மட்டுமே கருதப்பட்டார்கள். ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதற்கேற்ப பொற்காசுகள் வழங்கப்பட்டன.
உணவுப் பொருட்களில் சில பக்கத்து நகரங்களில் இருந்து தோணி வழியே கிராமங்களுக்கு வரவேண்டும். இப்பணியை சாளுக்கிய வீரர்களே மேற்கொண்டார்கள். அவர்களே துடுப்பு வலித்து உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து ஏரியைச் சுற்றியிருந்த கிராமங்களில் இறக்கினார்கள். சாளுக்கிய மன்னரின் கட்டளைப்படி இலவசமாகவே அப்பொருட்களை ஒவ்வொரு குடும்பத்துக்கும் விநியோகித்தார்கள்.

நிலத்தில் வேலை செய்பவர்கள் தடைசெய்யப்படவில்லை. அவர்கள் தங்கள் பணியை எப்பொழுதும்போல் மேற்கொள்ளலாம். இம்மக்களுக்கும் அவரவர் தலைக்கு ஏற்ப பொற்காசுகள் வழங்கப்பட்டன. நில வருவாய் அவர்களுக்கு உபரி.அனைத்துக்கும் சிகரமாக கிராமங்களை காலி செய்யச் சொல்லவில்லை. இடப்பெயர்வு செய்யும்படி கட்டளையிடவில்லை. அவரவர் வாழ்வை அவரவர் தொடரும்படியே அறிவுறுத்தப்பட்டார்கள்
இப்படியொரு ஏற்பாட்டை விக்கிரமாதித்தர் செய்த பிறகு மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார்கள்..?

எனவே தங்கள் தோணியை கரை ஓரமாக சாளுக்கிய வீரர்கள் காண்பித்த இடத்தில் தலைகுப்புற கவிழ்த்து வைத்துவிட்டு கிராமங்களில் நிம்மதியாகக் காலம் கழித்தார்கள். பாட்டு பாடினார்கள்; நடனம் ஆடினார்கள்; திருவிழா கொண்டாடினார்கள். கவலையின்றி உண்டு உறங்கினார்கள்.
ஏரியைச் சுற்றி இரவு பகல் பாராமல் சாளுக்கிய வீரர்கள் காவல் புரிந்தார்கள். காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் மக்களின் தோணிகள் கணக்கிடப்பட்டன.

இச்சூழலில் ஏரியில் ஒரு தோணி பயணிக்கிறது என்றால்... அதுவும் காவல் புரியும் சாளுக்கிய வீரர்களுக்குத் தெரியாமல் என்றால்... அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும்..?இரு வீரர்கள் வேகமாகச் சென்று கரையில் தலைகுப்புற கவிழ்க்கப்பட்டிருந்த தோணிகளை ஒன்றுக்கு மூன்று முறை கணக்கிட்டார்கள்.

சரியாக இருந்தது.விரைந்து வந்து தங்கள் தலைவரிடம் தெரிவித்தார்கள்.வீரர்களின் தலைவன் ஏரியில் விரையும் தோணியையே பார்த்துக் கொண்டிருந்தான்.‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’ பார்வையைத் திருப்பாமல் கேட்டான்.‘‘நம் சாளுக்கிய மன்னரின் மீது ஆணையாகச் சொல்கிறோம்... கரையில் தோணிகள் அப்படியே இருக்கின்றன...’’‘‘அப்படியானால் அந்தத் தோணியைச் செலுத்துபவர் கையோடு அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும்...’’‘‘ஆம் தலைவரே...’’‘‘இங்கிருந்து பார்க்கும்போது அந்தத் தோணியைச் செலுத்துபவர் ஒரு பெண்ணாகத் தெரிகிறார்...’’
‘‘என்ன..?’’ ஒரே குரலில் வீரர்கள் தங்கள் திகைப்பை வெளிப்படுத்தினார்கள்.

‘‘மூன்று தோணிகளில் ஐந்து வீரர்கள் ஆயுதங்களுடன் செல்லுங்கள்... அரை வட்டமாக அத்தோணியைச் சுற்றி வளையுங்கள்... பயணப்படுபவர் உயிருடன் வேண்டும்... புரிகிறதல்லவா..?’’தலையசைத்த வீரர்கள் மடமடவென்று தங்கள் தலைவரின் கட்டளையை நிறைவேற்ற செயலில் இறங்கினார்கள்.துடுப்பின் நுனியில் இருந்து வாளை உருவியதும்தான் தன் தவறை சிவகாமி உணர்ந்தாள்.

தலையை உயர்த்திவிட்டோம்... தான், யார் என அடையாளம் தெரிந்திருக்குமா..? தெரிவதில் பிரச்னையில்லை. ஆனால், தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும். வீணான சந்தேகங்கள், குழப்பங்களுக்கு வழிவகுக்கும். தடங்கல்கள் ஏற்பட்டபடியே இருக்கும்.
தன்னைக் குறித்த உண்மை இன்னமும் இப்பகுதியை எட்டியிருக்காது... ஆனாலும் அதை சோதித்துப் பார்க்க இது தருணமல்ல. வாதாபிக்குள் நுழைவதுதான் இலக்கு. அதுவும் காற்றுக்கும் தெரியாமல்.

நெருங்கும் ஐந்து வீரர்களை வீழ்த்தினால் கரையில் இருக்கும் அத்தனை வீரர்களும் நம்மைச் சுற்றி வளைப்பார்கள். இவர்கள் அனைவரையும் சமாளிக்கும் திறன் நமக்கு இருக்கிறது. ஆனால், காலம்தான் இல்லை. பாதகமில்லை... இந்த ஐவரும் நம்மை அடையாளம் கண்டிருந்தாலும் இலக்கை நாம் அடைவதை இவர்களால் தடுக்க முடியாது... தவிர நேருக்கு நேர் நம்மை இவர்கள் இன்னும் பார்க்கவில்லை... பெண் என்று மட்டுமே அறிந்திருப்பார்கள்... அப்பெண் சிவகாமியான தான்தான் என இன்னமும் இவர்கள் நிச்சயப்படுத்தவில்லை. இது சாதகமான விஷயம்...முடிவுக்கு வந்த சிவகாமி, தான் வந்த தோணியை அப்படியே கவிழ்த்தாள்.

மூன்று தோணிகளில் வந்த ஐந்து சாளுக்கிய வீரர்களும்
அத்தோணியை நெருங்கியபோது -
அது தலைகீழாக மிதந்து கொண்டிருந்தது!
 

‘‘நபர் யாரென்று தெரியவில்லை தலைவரே... ஆனால், நீங்கள் ஊகித்தது சரிதான்... அந்தத் தோணியைச் செலுத்தியவள் ஒரு பெண்தான். நாங்கள் வருவதைக் கண்டதும் தோணியைக் கவிழ்த்து ஏரியில் மூழ்கிவிட்டாள்...’’வீரர்கள் சொன்ன தகவலை தலைவனின் செவிகள் கேட்டன. பார்வை ஏரியையே அலசிக் கொண்டிருந்தது.
 
சமுத்திரம் போல் பரந்து விரிந்த ஏரி என்பதால் கரையில் இருந்து கவனித்தபோது எல்லாம் புள்ளியாகவே தெரிந்தன. ஆனால், தோணி கவிழ்ந்ததுமே தலைவனுக்கு அபாயத்தின் எல்லை புரிந்துவிட்டது. வீரர்களை விட்டு வானை நோக்கி எரி அம்பை விடச் சொன்னான். ஏரியைச் சுற்றி காவல் புரியும் வீரர்களுக்கான சமிக்ஞை. இந்நேரம் வீரர்கள் ஏரியைச் சுற்றி வளைத்திருப்பார்கள். நீந்தியபடியே கரையேறலாம் என்று அப்பெண் நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவாள்.

‘‘இந்த ஏரி நமக்கு முக்கியம்...’’ சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன்னை அந்தரங்கமாக அழைத்து மூன்று திங்களுக்கு முன் சொன்ன செய்தி அத்தலைவனின் மனதில் இப்பொழுதும் துல்லியமாக ஒலித்தது.‘‘சமுத்திரம் போல் பரந்து விரிந்திருக்கும் இந்த ஏரி, சாளுக்கிய தேசத்துக்கே இதயம் போன்றது. வாதாபியில் இருந்து பல காத தொலைவில் இந்த ஏரியை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியது எதற்குத் தெரியுமா..? எதிரிப் படைகளைத் தடுக்கத்தான். ஏரி எப்பொழுது பறிபோகிறதோ அப்பொழுதே வாதாபி நம் கையைவிட்டுப் போகிறது என்று அர்த்தம். எனவே, கண்ணை இமை காப்பதுபோல் இந்த ஏரியைக் காக்கவேண்டியது உனது பொறுப்பு.

வாதாபி தீக்கிரையானதையும் நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் சிரசு சீவப்பட்டதையும் நினைத்துப்பார்... பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என ஒவ்வொரு சாளுக்கிய குடிமகனும் சபதம் ஏற்றிருப்பதை மறக்காதே.ஏரியை அல்ல... சாளுக்கிய மக்களையே உன்னை நம்பி ஒப்படைக்கிறேன்... கவனமாக இரு...’’நாழிகைகள் கடந்து ஜாமங்கள் எட்டிப் பார்த்தன; அவையும் கடந்து பொழுதுகள் பிறந்தன.

ஆனால், நீரில் மூழ்கிய பெண் என்ன ஆனாள் என்று மட்டும் தெரியவில்லை. கரை எங்கும் வீரர்கள் சலித்துவிட்டார்கள். காலடித் தடம் கூட தட்டுப்படவில்லை. ஏரி முழுக்க தோணிகளில் வீரர்கள் பயணப்பட்டார்கள். நீளமான ஈட்டியால் ஏரியைக் கிழித்தார்கள். சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீரினுள் நீந்துபவர்கள் கூட சில கணங்களாவது மேலே வந்து மூச்சு விடுவார்கள். அப்படிக் கூட எந்தத் தலையும் ஏரியில் எட்டிப்பார்க்கவில்லை. சடலமும் மிதக்கவில்லை. கரையோரம் உடலும் ஒதுங்கவில்லை.

யார் அந்தப் பெண்..? அவள் என்ன ஆனாள்..? எப்படி மறைந்திருப்பாள்..?
கட்டப்பட்ட கண்களுடன் அடர் வனத்தில் நுழைவது போல் தலைவன் உணர்ந்தான்.மன்னருக்கு உடனடியாக இத்தகவலைத் தெரிவிக்க வேண்டும்... தூதுவனை அனுப்பலாம். ஆனால், அவன் மன்னரை அடைய நாட்களாகும். முடிவுக்கு வந்த தலைவன் உடனடியாக சாளுக்கியர்களால் பழக்கப்படுத்தப்பட்ட புறாவின் இறகு மடிப்பில் பட்டுத் துணியைச் சுருட்டி வைத்துக் கட்டினான். பறக்க விட்டான்.
கரிகாலன் பாறை மீது மல்லாந்து படுத்தபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நாணில் அம்பை இழுத்தபடி அவனது கைகள் வில்லைப் பிடித்திருந்தன.கணங்கள் நாழிகையாகி ஜாமங்களைத் தொட்டு பொழுதுகளைப் பிரசவித்தபடி இருந்தன.கரிகாலன் அசையவில்லை. கண்கள் எரிந்தன. இமைகளால் தங்களை மூடும்படி கருவிழிகள் கெஞ்சின. மணிக்கட்டு வலித்தது.உடலின் அணுக்கள் கதறுவதை அவன் பொருட்படுத்தவில்லை.வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் செவிகள் காற்றின் போக்கை... காற்றின் மாற்றத்தை அலசிக் கொண்டிருந்தன.சட்டென செவி மடல்கள் உயர்ந்தன.இழுத்துப் பிடித்திருந்த நாணுக்கு கரிகாலன் விடுதலை அளித்தான்.வானை நோக்கி அம்பு பாய்ந்தது.‘சொத்’ என ஒரு பொருள் அவன் மேல் விழுந்தது.
புறா! அதன் இறகு மடிப்பைப் பிரித்தான். மறைந்திருந்த பட்டுத் துணியை எடுத்து விரித்து படித்தான்.அது ஏரி காவல் தலைவன் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு அனுப்பிய கடிதம்!கொற்றவை ஆலயத்தில் அமர்ந்திருந்த பணிப்பெண்ணுக்கு பசித்தது.
 
கூடையை இழுத்து பானையைத் திறந்து பார்த்தாள். கூழ் இருந்தது. அதை மண் குவளையில் ஊற்றிக் குடித்தாள். மொட்டு விரிந்து மலர்வதுபோல் அவள் தேகத்தில் உற்சாகம் பூத்தது. கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.‘‘அதோ... அங்கிருக்கிறாள்... அவள்தான் நம் வீரர்களில் சிலருக்கு மட்டும் கூழ் கொடுத்தவள்... பிடியுங்கள்...’’சட்டென அப்பணிப்பெண் எழுந்தாள்.
 
ஒருவேளை ‘அந்த’ மனிதர் வரப்போகும் செய்தியை சாளுக்கிய வீரர்கள் அறிந்துவிட்டார்களா..?தப்பிக்கும் வழியறியாமல் அவள் திகைத்தபோது -கொற்றவை ஆலயத்தைச் சுற்றி சாம்பிராணிப் புகை சூழ்ந்தது.அப்புகையைக் கிழித்தபடி வெண்மை நிறப் புரவி ஒன்று அப்பணிப்பெண்ணை நோக்கி வந்தது.அக்குதிரையின் மீது யாருமில்லை!
 
(தொடரும்)
Posted

ரத்த மகுடம்-140

பணிப்பெண்ணின் கண்கள் ஒளிர்ந்தன.சில கணங்களுக்குமுன் அவளுக்குள் ஏற்பட்ட அச்சம் கதிரவனைக் கண்ட பனியைப் போல் மறைந்தது. நிமிர்ந்து கம்பீரமாக நின்றாள்.யாருமில்லாமல் வந்து நின்ற வெண்மையான புரவியும்... சூழ்ந்த சாம்பிராணிப் புகையும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தியது.
http://kungumam.co.in/kungumam_images/2021/20210319/24.jpg
செவியை கூர் தீட்டினாள். சாளுக்கிய வீரர்கள் அந்த கொற்றவை ஆலயத்தை நெருங்குவதை உணர்ந்தாள். காலடி ஓசைகளின் தடுமாற்றம் சாம்பிராணிப் புகையால் அவர்களது வேகம் தடுக்கப்பட்டதைத் தெரிவித்தது.

‘‘அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் பகலில் வாதாபிக்கு வருகிறேன். அன்றைய தினம் சாளுக்கிய வீரர்களுக்குள் ஊடுருவியிருக்கும் நம் வீரர்களுக்கு மட்டும் மறக்காமல் கூழைக் கொடு. வாதாபியில் இருக்கும் கொற்றவை ஆலயத்தில் எனக்காகக் காத்திரு. ஆம். அதே ஆலயம்தான். எந்த இடத்தில் ஆயனச் சிற்பியின் மகளும் நாட்டியத் தாரகையும் பல்லவர்களின் அன்னையுமான சிவகாமி அம்மையார் வாதாபியில் சிறை வைக்கப்பட்டாரோ... எந்த இடத்தில் அதன்பிறகு அவர் நினைவாக மக்கள் கொற்றவை ஆலயத்தை எழுப்பினார்களோ... அதே கோயில்தான்.

ஒருவேளை வாதாபிக்கு நான் வருவதும் உன்னைச் சந்திப்பதும் சாளுக்கியர்களுக்குத் தெரிந்துவிட்டால் உடனடியாக உனக்கு சமிக்ஞை செய்வேன். ஆளில்லாமல் வெண்மையான புரவி ஒன்று கொற்றவை ஆலயத்துக்கு வரும்... சாம்பிராணிப் புகை அக்கோயிலைச் சுற்றி அரணாகச் சூழும். இதுதான் அந்த சமிக்ஞை.இதைக் கண்டதும் நீ செய்ய வேண்டியது...’’ என்ற குறிப்புடன் ‘அந்த’ மனிதர் அனுப்பிய ஓலையின் வாசகங்கள் அப்படியே அவள் கண்முன்னால் விரிந்தன. இத்தனைக்கும் ஓலையைப் படித்து முடித்ததுமே விளக்கின் சுடரில் அதைப் பொசுக்கிவிட்டாள். ஆனாலும் வாசகங்கள் கல்வெட்டாக நெஞ்சில் பதிந்திருந்தன.

ஆக, இப்படி நடக்கும் என்பதை ‘அந்த’ மனிதர் ஊகித்திருக்கிறார்... அதனால்தான் முன்கூட்டியே திட்டத்தின் மறுபக்கத்தையும் தன்னிடம் சொல்லியிருக்கிறார்...புன்னகைத்த பணிப்பெண் அதன்பிறகு தாமதிக்கவில்லை. சாம்பிராணிப் புகையைக் கிழித்துக்கொண்டு கொற்றவை ஆலயத்துக்குள் சென்றவள், கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தாள். மனதில் பதிந்த ஆலயத்தின் வரைபடமும் கால்களுக்கு பழக்கமாகி இருந்த கோயிலின் வடிவமைப்பும் அவளுக்கு வழிகாட்டின. கண்களின் எரிச்சலும் புகையால் தட்டுப்படாமல் போன காட்சிகளும் அவளது நடையைத் தடுக்கவில்லை.
கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தவள் தன் இரு கரங்களையும் முன்நோக்கி நீட்டினாள்.

ஆளுயர கொற்றவையின் சிலை தட்டுப்பட்டதும் அதை இறுகப் பிடித்தவள் கரங்களால் துழாவியபடியே சிலையின் பாதத்துக்கு வந்தாள்.
கொற்றவையின் இடது காலில் அசுரன் சிக்கியிருந்தான். வலது காலைச் சற்றே கொற்றவை உயர்த்தியிருந்தாள்.உயர்த்தியிருந்த பாதத்தின் அடியில் தன் கரங்களைக் கொண்டுசென்ற அந்தப் பணிப்பெண், அப்பாதத்தின் கட்டை விரலை அழுத்தினாள். மூன்று கணங்களுக்குப் பின் ஊன்றியிருந்த இடது காலைத் திருகினாள்.

கொற்றவை பின்னோக்கி நகர்ந்தாள்.எனில் கொற்றவை முன்பு இருந்த இடத்தில் படிக்கட்டு இருக்க வேண்டும். அப்படித்தான் ‘அந்த’ மனிதர் ஓலையில் எழுதியிருந்தார்.படிக்கட்டுகள் இருக்கின்றதா..? சூழ்ந்த புகையில் எதுவும் தெரியவில்லை. பாதகமில்லை. ‘அந்த’ மனிதர் பொய் சொல்ல மாட்டார்...
நம்பிக்கையுடன் அந்தப் பணிப்பெண் தன் காலை உயர்த்தி ஊன்றினாள்.எதிர்பார்த்தது போலவே படிக்கட்டில் கால் வைத்தாள். மடமடவென்று உள்நோக்கி இறங்கினாள்.

சாம்பிராணிப் புகையின் அடர்த்தி குறையத் தொடங்கியது.வேகமாக இறங்கியவள் ஏழாவது படியில் கால் வைத்ததும் தலைக்கு மேலே ‘கரகர’வென்ற ஓசை எழுந்தது.கொற்றவையின் சிலை பழைய இடத்துக்கு நகர்கிறது... தான், இறங்கிய சுரங்கம் மூடப்படுகிறது...
அப்பாடா என்று பெருமூச்சு விட்டவள் நிதானமாக இறங்கினாள்.

பதினைந்து படிகளைக் கடந்தபின் சமதளம் வந்துவிட்டதை உணர்ந்தாள்.‘‘தரையில் கால் வைத்ததும் எச்சரிக்கையுடன் ஐந்தடி முன்னோக்கி நகர். சுவரில் முட்டிக் கொள்வாய். அச்சுவரின் நடுவில் மரக்கதவு தட்டுப்படும். அதை மூன்று முறை தட்டு...’’தட்டினாள்.கதவு திறந்தது.உள்ளே நுழைந்தாள். அதிர்ந்து நின்றாள்.சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் வீரர்கள் சூழ புன்னகையுடன் அவளை வரவேற்றான்!அந்த நண்பகல் நேரத்தில் கொற்கைத் துறைமுகம் மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்பட்டது.

கீழ்த்திசை நாடுகளில் இருந்து கிளம்பி வந்திருந்த நூற்றுக்கணக்கான கலங்கள் கரையில் இருந்து சில காத தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தன.கலங்களுக்கும் கரைக்கும் இடையில் அமைந்திருந்த தண்ணீர் பகுதியில் சிறியதும் பெரியதுமாகப் பல்வேறு படகுகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன.அச்சிறு படகுகளில் துடுப்பு வலித்துக்கொண்டிருந்த படகோட்டிகள் அத்தனை அவசரத்திலும் அடுத்தவர் படகுகளின் மேல் மோதி விடாமல், கிடைத்த இடைவெளிகளில் சாதுரியமாகத் தத்தம் ஓடங்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த அபரிமிதமான போக்குவரத்தின் காரணமாக கடல்நீர் அப்பகுதிகளில் பெரிதும் கலங்கிக் காணப்பட்டது.கடலுக்கருகில் அமைந்திருந்த உப்பங்கழிகளில் பணி துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உப்பைத் தூர்க்கும் பணியில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த பெண் தற்செயலாகக் கடலை நோக்கினாள்.அவ்வளவுதான். வாயைப் பிளந்து நோக்கியபடி அசையாமல் நின்றாள்.காரணம், கொற்கைக் கரையில் இருந்து வெகு தூரத்துக்கு விரிந்திருந்த கடலில் ஏறக்குறைய பத்து காத தூரத்தில் பிரம்மாண்டமான பாய்மரங்களை விரித்தபடி இராட்சதக் கலம் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதுவரை அங்கே நின்றிருந்த கலங்கள் எல்லாம் அந்தக் கலத்தின் பிரம்மாண்டத்துக்கு முன் சிறு பொம்மைகள் எனக் காட்சியளித்தன.
அத்தனை பெரிய கலத்தை கரைக்கருகில் செலுத்திக்கொண்டு வரமுடியாதாகையால் மாலுமிகள் வெகுதூரத்திலேயே அதனை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டார்கள்.

கலம் நிறுத்தப்பட்டதன் அறிகுறியாக பாய்மரங்கள் இறக்கப்பட்டு, பாய்மரத் தண்டின் மீது கலத்தின் கொடி விறுவிறுவென ஏற்றப்பட்டது.
இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்த காற்றில் படபடவென்று அடித்துக் கொண்டபடி உச்சியைத் தொட்ட அக்கொடியில் காணப்
படும் இராஜ இலச்சினையில் இருந்து அது சீன நாட்டிலிருந்து வந்திருக்கும் கலம் என்பது கரையில் இருந்தவர்களுக்குத் தெளிவானது.
அப்பெருங்கலம் நின்று நிதானித்து பாய்மரங்களை இறக்க ஆரம்பித்த கணமே, மலரை மொய்க்கத் தேனீக்கள் விரைவது போல் கொற்கைத் துறைமுகத்தில் நின்றிருந்த பல்வேறு படகுகளும் அந்தக் கலத்தை நோக்கி உற்சாகமாக விரைந்தன.

சரக்குகளைக் கரையேற்றும் சிறு படகுகளுக்காகக் காலையில் இருந்து காத்து நின்ற மற்ற கலங்களின் கலபதிகள் திகைத்தார்கள். இனி சரக்குப் படகுகள் தங்களுக்கு அன்று கிடைக்காது என்பது அவர்களுக்குப் புரிந்தது.ஆனால், அவர்கள் திகைத்ததற்குக் காரணம், என்றுமே கொற்கைக்கு விஜயம் செய்யாத பிரம்மாண்டமான சீனக் கலத்தின் வருகை அன்று நிகழ்ந்ததுதான்.

இப்படியாக வந்து சேர்ந்த சில கணங்களுக்குள் கொற்கைத் துறைமுகத்தில் இருந்த அத்தனை மனிதர்களின் கவனத்தையும் ‘சீன விஜயம்’ என்னும் அப்பெருங்கலம் கவர்ந்துவிட்டது.அப்பெருங்கலத்தின் நாற்புறங்களிலும் ஊழியர்கள் நின்று கொண்டு மிகப்பெரிய வெண்சங்குகளை சப்பை மூக்குக்குக்
கீழிருந்த குவித்த வாய்க்குள் பொருத்தி ‘பூம்’ என சப்தம் எழுப்பினார்கள்.

அது கலத்தின் பல தளங்களிலும் நின்றும் இருந்தும் கிடந்தும் பொருந்தியிருந்த பயணிகளைத் தட்டி எழுப்புவதற்கான ஓசை!
சங்கொலியைத் தொடர்ந்து தளங்களின் நாற்புறங்களிலும் துரிதமான நடமாட்டங்கள் தென்பட்டன. பயணிகள் தத்தம் பொருட்களை வாரிச் சுருட்டிக்கொண்டு கரையிறங்க ஆயத்தமானார்கள்.துறைமுகத்தின் சிறு படகுகள் எல்லாம் மற்ற சரக்குக் கலங்களைப் புறக்கணித்துவிட்டு அப்பெருங்கலத்தை ஆவலுடன் நெருங்கியதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது.

தமது கலத்தில் உள்ள அத்தனை சரக்குகளையும் மொத்தமாக இறக்கி வைப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையைப் படகுக்காரர்களுடன் கலபதிகள் பேசி வைத்துவிடுவார்கள்.இதில் படகோட்டிகளுக்கு அதிக லாபம் கிடைக்குமென்று கூற முடியாது.ஆனால், சீனத்தில் இருந்து வந்திருந்த அந்தப் பெருங்கலமோ நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சுமந்து வந்த பயணிகளின் கலம்! எனவே, ஒவ்வொரு பயணியையும் கரைசேர்க்கச் சிறு தொகையை படகுக்காரர்கள் பெற வாய்ப்பு இருந்தது.

நான்கு நான்கு பயணிகளாகக் கரை சேர்த்தால் கூட ஓரிரு நாழிகைகளில் பத்து கழஞ்சுகள் வரை சேர்த்துவிடலாம்!சீன விஜயத்தின் நாற்புறங்களிலும் கயிற்று ஏணிகள் மெல்ல இறக்கி கடலில் விடப்பட்டன.அவற்றைப் பிடித்துக் கொண்டு இறங்கினால் நேராக கீழே காத்திருக்கும் படகுகளில் கால்பதித்து விடலாம்.முதியோர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்காகத் தனித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர்களால் கயிற்று ஏணியைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கமுடியாது என்பதால் கலத்திலேயே இருக்கும் சிறு படகுகளில் அமர வைத்து மெல்ல கடலில் இறக்குவார்கள்.

ஏறக்குறைய ஒரு நாழிகையில் துறைமுகத்தின் பல்வேறு படகுகளும் சீன விஜயத்தை நெருங்கிவிட்டிருந்தன.படகுகள் நெருங்கும் நேரத்தில் கலத்தின் பல்வேறு தளங்களிலும் அமைந்திருந்த கதவங்கள் திறக்கப்பட... பயணிகள் ஈக்களைப் போல் அவசர அவசரமாக வெளியில் வந்து கலத்தின் மேல்தளத்தில் நின்றார்கள்.‘‘அமைதி! அமைதி! மெதுவாகச் செல்லுங்கள்...’’ என்று மாலுமிகள் நாற்புறங்களிலும் நின்றுகொண்டு தொண்டை வறளக் கதறினார்கள். ஆனாலும் அவர்கள் வார்த்தைகளை செவிமடுக்கத்தான் யாருமில்லை! பலநாட்கள் கடலில் பயணம் செய்து அலுத்திருந்தவர்களுக்கு நிலத்தை துரிதமாகத் தொட்டுவிடும் பேராவல் வெறியாகப் படர்ந்திருந்தது.

படகுகளில் இறங்குவதற்காகக் களத்தில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு குழு அனைவர் கவனத்தையும் கவர்ந்தது.மழித்த தலைகளுடனும் காவியுடையுடனும் காணப்பட்ட அக்குழு சீனத்தில் இருந்து தமிழகத்துக்குக் கிளம்பி வந்திருந்த பவுத்த பிட்ஷுக்களைக் கொண்ட குழு.மற்ற பயணிகளைப் போல் படகுகளில் இறங்க அதிக அவசரம் காண்பிக்காமல் நின்று நிதானமாக நாற்புறங்களிலும் பார்வையைச் செலுத்தினார்கள்.

‘மிக அவசரமாகச் செல்ல வேண்டுமென்றால் மெதுவாகச் செல்லவும்... மிக மிக அவசரமாகச் செல்ல வேண்டுமென்றால் மிக மிக மெதுவாகச் செல்லவும்...’ என்ற பண்டைய பவுத்த மொழிக்கேற்ப அவர்களது அசைவுகள் இருந்தன.இந்த நிதானமே மற்ற மக்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டியது.அவசரத்தில் இருந்த பயணிகள் முதலில் வந்த இருபது முப்பது படகுகளில் ஏறிப் புறப்பட்டார்கள்.

அதற்குப் பின் நிதானமாக அந்த பவுத்தக் குழு கயிற்று ஏணி வழியே இறங்கியது.இந்த பவுத்தக் குழுவை தன் படகில் ஏற்றுவதற்காக அப்பெரும் சீனக் கலத்தை ஒட்டி கடலில் துடுப்புடன் காத்திருந்தான் ஒரு படகோட்டி.அந்தப் படகோட்டி வேறு யாருமல்ல... பாண்டிய இளவரசரான கோச்சடையன் இரணதீரன்தான்!
 
(தொடரும்)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.