Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் சீனாவின் தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்தியா:-

Featured Replies

வடக்கில் சீனாவின் தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்தியா:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

 

இலங்கையின் வடக்கில் சீனாவில் தலையீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் விசேட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு பயணம்  செய்து, இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையின் வடபகுதிக்குள் சீனா பிரவேசிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.தெற்கில் அபிவிருத்திகளில் சீனாவை சம்பந்தப்படுத்திக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் சீனாவை வடக்கு பக்கம் நோக்கி திருப்பி விடுவது இந்தியாவுக்கு பிரச்சினையாக அமைந்து விடும் என இந்திய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சீனாவின் அனுசரணையில் மேற்கொள்ள உத்தேசியக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு திட்டம், விமான நிலைய திட்டம் போன்றவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பாரதூரமான பிரச்சினையாக அமையும் என்றும் இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.இதற்கு அமைய வடக்கு பகுதிக்கான அபிவிருத்தித் திட்டங்களை சீனாவிற்கு வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் இருந்து வருகிறார். வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அவரது பொறுப்பின் கீழ் வருகிறது. இந்த திட்டத்திற்கான விலை மனு கோரப்பட்டிருந்தது. எனினும் இறுதி விலை மனு கோரலை புறம் ஒதுக்கி விட்டு, அந்த திட்டம் சீனாவின் சைனா ரயில்வே நிறுவனத்திற்கு வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

சீனா ரயில்வே விலை மனுக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.இவ்வாறான நிலையில் எப்படி அந்த திட்டம் சைனா ரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என விலை மனுகோரலை முன்வைத்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் சீனா மற்றும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் இறையாண்மை என்பது தொடர்ந்தும் பேசப்பட கூடிய விடயம் அல்ல தெளிவாகியுள்ளது. தெற்கு சீனாவுக்கும் வடக்கு இந்தியாவுக்கும் உரித்தான பின்னர் நடக்க போவதை மக்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.எவ்வாறாயினும் சீனா ஏற்கனவே இலங்கைக்குள் புகுந்து விட்டது. சீனாவை நாட்டுக்குள் விட்டவர்கள் வேறு யாருமல்ல. தற்போது விகாரை விகாரையாக சென்று நாட்டின் இறையாண்மை பற்றி அழுது புலம்பும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே, சீனா, இலங்கைக்குள் கால் பதிக்க காரணமாக இருந்தார். இந்த பாவத்தை தற்போது நாட்டு மக்கள் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://globaltamilnews.net/2018/90386/

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் சொல்லிறது......தானும் படான்.......தள்ளியும் படான்! எண்டு....!

  • தொடங்கியவர்

சீனாவின் முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பு- இந்தியா கவலை

 

 

இலங்கையில் சீனாவின் முதலீடு அதிகரிப்பது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது என இந்து நாளிதழின்  பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசினஸ்லைன் மேலும் தெரிவித்துள்ளதாவது

சீனா இலங்கையின் துறைமுகங்களில் முதலீடு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ள அதேவேளை இந்தோ பசுவிக்கில் கால்பதிப்பதற்கு தனது அயல்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை  இந்தியா கரிசனையுடன் பார்க்கின்றது.

சீனா சமீபத்தில் கடற்படை கலமொன்றை வழங்கியிருந்தது.

ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் மோதிக்கொள்ளும் களமாக இலங்கை  உருவெடுத்துள்ளது என இந்திய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் சீனாவும் இலங்கையின் துறைமுக அதிகார சபையும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

harbour.jpg

சீனா இலங்கைக்கு சமீபத்தில் வழங்கிய கடற்படை கப்பல் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகாத போதிலும் சீனா 053 வகை கடற்படை கப்பலை அல்லது சீ 28 பி அல்லது சீ13 வகை கப்பலை வழங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா இந்த வகை யுத்த கப்பல்களையே உலக நாடுகளிற்கு ஏற்றுமதி செய்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்து சமுத்திரத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் சீனாவின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்கவேண்டும் என தெரிவிக்கும் அதிகாரிகள் அதேவேளை இராணுவரீதியிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் இவ்வாறான கப்பல்கள் வழங்கப்படுவது வழமை  இந்தியாவும் இவ்வாறான கப்பல்களை வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் துறைமுகங்களிற்கான நிதியை வழங்குவதன் மூலம் சீனா அதிவேக இலாபத்தை பெறலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் பல திட்டங்களிற்கு இலங்கையில் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையை இராணுவ நோக்கங்களிற்கான தளமாக பயன்படுத்தலாம் என அமெரிக்கா இந்தியா உட்பட பல நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

அடுத்த மூன்று வருடங்களில் சீனா இந்தியாவிடமிருந்து இலங்கை புதிய முதலீடுகளை பெறவுள்ளது.

இந்தியா இலங்கையின் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு 400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக சீனா மேலதிகமாக 974 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

http://www.virakesari.lk/article/37755

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா வடக்குக்கிழக்கில் எதனை தான் அனுமதித்தது..

தமிழர்களை அழித்தது.. தமிழர் சொத்துக்களை அழித்தது.. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தது.. உரிமையையும் அழித்தது.. போர்க்குற்றங்களையும் அழித்தது... இனப்படுகொலை ஆதாரங்களையும் அழித்தது... இன்று குறைந்த பட்ச அபிவிருத்திகளையும் அழிக்கிறது..

தமிழர்கள் பிச்சைக்கார ஹிந்தியாவுக்கு பின்னால் இன்னும் போய்க்கொண்டிருப்பதைவிட.. உலகின் இரண்டாவது பொருளாதார பலமான சீனாவின் பின்னால் போவது குறைந்தது குறைந்த பட்ச அபிவிருத்திக்காவது உதவும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைபெண்ணுக்கும் இரண்டு கள்ளப்புருசர்கள்...

இரண்டு பேரையும் கிறங்க, கிருகிறுக்க வைக்கிறதே வேலையா போட்டுது. ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா .. பாகிஸ்தானுக்கு பஸ் நிலையம் ..ரஷ்யாவுக்கு ரொக்கட் நிலையம் ..நீ கலக்கு சித்தப்பூ..?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதுவந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் ஆக போவதில்லை :35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எல்லா விதத்திலும் எமக்கு தலைவலி தான்.?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

 

12 hours ago, நவீனன் said:

இந்தியா இலங்கையின் வடக்கில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு 400 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

 

http://www.virakesari.lk/article/37755

வெடிக்கத்தான் வேண்டும் ஆனால் ஒரு அளவில்லையா வீரகேசரிக்கு?

எந்தவித சர்வதேச முக்கியத்துவமும் பெறாத காங்கேசந்துறை துறைமுகத்திற்கு 

 ஒரு பில்லியன் நூறுகோடி எனும்போது ...400 பில்லியன் டொலரை  இந்தியா செலவிடபோகிறதா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.