Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது

Featured Replies

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

in02.jpg

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தல‍ைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ta.jpg

tar.jpg

01.jpg

அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/38520

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி  வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில்  இன்று புதன்கிழமை   காலை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

01__1_.jpg

 யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

01__4_.jpg

அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன், வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்  , மக்களுடனான  தொடர்பாடல் மற்றும் இந்திய புலமைப் பரிசில்கள் பற்றியும்   உரையாற்றினார்.

01__5_.jpg

உரையினைத்  தொடர்ந்து  யாழ் பல்கலைக்கழக நடனத்துறையினரின்  "பாரத சுதந்திரம்" நாட்டிய நாடகம்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. 

01__12_.jpg

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள், உட்பட  பலர் கலந்துக் கொண்டனர்

01__9_.jpg

http://www.virakesari.lk/article/38546

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

archeological-exhumation-in-Allaipitty-3

காங்கேசன்துறை  தொடக்கம்  வவுனியா வரைக்கும் இருக்கிற உள்ள வடலியள்,பனங்கூடல் எல்லாத்தையும் சீனனுக்கு காட்டுங்கோப்பா......

அப்பதான் தேவையில்லாத இடத்திலை சுதந்திரதினம் கொண்டாடுற கிந்தியனுக்கு வயிறு எரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இற்றைவரை இலங்கையில் சாதித்தவைகள்

1. இந்திரா காந்தி காலத்தில் மேற்கு நோக்கி ஒட்டிக்கொண்டிருந்த இலங்கைக்கு பாடம் புகட்ட வலிந்து தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுத , பண , பயிற்சி உதவிகளை வழங்கியது.

2. அவ்வாறு தான் வழங்கிய உதவிகளைப் பெற்றுக்கொண்டு போராளிகள் தனது சொல்லைக் கேட்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

3. போராளிகளைத் துரும்புச் சீட்டாக வைத்து இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

4. தன்னால் கொடுக்கப்பட்ட உதவிகளைக் கொண்டு போராளிகள் ஈழம் பெறும் தறுவாயை அடையமுதல், அதைத் நிறுத்தி தமிழர் ஈழம் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது.

5. 1987 இல் தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற போர்வையில் 125,000 இந்திய ஜவான்களை தமிழர் தாயகத்தில் களமிறக்கியது.

6. தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் உந்தப்பட்டு, காக்க வந்த மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்து, மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் தனது ராணுவம் நிலைகொண்டிருந்த வெறும் இரண்டரை வருடங்களில் செய்துமுடித்து, முகத்தில் கரிபூசியபடி அவமானத்துடன் வெளியேறியது.

7. 1991 இல், தனது நம்பிக்கை நட்சத்திரமான வருங்காலப் பிரதமரை தமிழ்நாட்டில் பலிகொடுத்தது.

8. தொடர்ந்தும் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டினை தனது வெளையுறவுக்கொள்கையாக வரிந்துகொண்டு 18 வருடங்கள் காத்திருந்தது.

9. 2008 - 2009 காலப்பகுதியில், தனக்குச் சார்பான சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்புப் போர் ஒன்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்து முடித்ததுடன், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் மிகவும் பயங்கரமான போர்க்குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையாக இருந்ததுடன், வெளியுலகிலிருந்து வந்த அழுத்தங்களை தனது பிராந்திய ராஜதந்திர பலத்தின் மூலம் தடுத்து நிறுத்தி முற்றான இனக்கொலை ஒன்றினை முன்னின்று நடத்தியதுடன் அதை மூடி மறைத்தது.

10. தமிழர்களைப் பழி வாங்குவதற்காக தனது பரம வைரிகளான சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் நாட்டின் ராணுவ, அரசிய பிரசன்னத்தை இலங்கையில் காலூன்ற அனுமதித்தது. 

11. இற்றைவரை தமிழர் மீதான இனவழிப்பின் தனது காத்திரமான பங்கினை மூடி மறைத்து வருவதுடன், தொடர்ந்தும் சிங்களத்திற்கு ஆதரவாகச் செயற்படுவது.

12. சொந்தப் பழிவாங்கலுக்காக ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி மிகப்பெரும் துரோகத்தை தமிழருக்குச் செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு பொம்மை அரசை வைத்துக்கொண்டு, தமிழகத்தின் வாயை அடைத்து மூடியது.

13. இன்று, இலங்கை முழுதும் சீனாவின் கைகளுக்குள் போவது கண்டும் , எதுவுமே செய்யமுடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது.

14. இடையிடையே நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்கு வருடந்தோறும் சுதந்திரமில்லா தமிழர்களின் முன்னால் தனது சுதந்திரதினத்தைக் கொண்டாடி மகிழ்வது.

இதைவிடவும் வேறு ஏதும் சாதனைகள் செய்திருந்தால் கேட்க ஆசை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்துக்கு வேலை கொலைகார ஹிந்தியாவுக்கு நாட்டிய நடனம் ஆடுவதா..??!

யுத்தத்தால்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு படையால் அழிக்கப்பட்ட எம் மக்களுக்கு இன்னும்.. ஒரு ஒழுங்கான நீதி.. நியாயம் கிடைக்கக் கூட இல்லை.. இதுக்க இவை நாட்டியம் ஆடினம்.

எதுக்கு இந்த தேவையில்லாத வேலைகள். ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரம் ஆனதுக்கு நீங்கள் ஏனப்பா கொண்டாடுகிறீர்கள்..?

இவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையா..?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

பஞ்ச் வசனம் மாதிரி இருக்கு ப்ரோ 

15 minutes ago, ராசவன்னியன் said:

இந்தியா சுதந்திரம் ஆனதுக்கு நீங்கள் ஏனப்பா கொண்டாடுகிறீர்கள்..?

இவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையா..?

அடக்கி, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள் போன்று தானே ஐயா செயல்படுவார்கள்..
 
  • தொடங்கியவர்

யாழிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக பயணிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை; இந்திய துணைத் தூதுவர்

யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லையென யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார். 

01__12_.jpg

இந்திய நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் துணைத் தூதுவராலயத்தில் நேற்று காலை  9 மணிக்கு யாழ்ப்பாணம் இந்திய இல்லத்தில் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்டு  இந்திய தேசியக் கொடியை ஏற்றி  உரையாற்றும் போதே  அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுதந்திர  காலத்திற்கு முற்பட்ட  வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை   இலங்கை இந்திய உறவானது பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்தது நாம் எல்லோரும் அறிந்ததே . இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை தமது  சேவைகளை வடமாகாண மக்களுக்காக வழங்கி வருகின்றது. 

அண்மையில் பாரதப் பிரதமர்  காணொளி மூலமாக  இலங்கை பிரதமருடன் இணைந்து  திறந்து வைத்த  இலவச  சுகப்படுத்தும் சேவை  என்கின்ற  அவசர  கால  நோயாளர் வண்டிச் சேவை. ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அறுநூறு மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பணம் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடம் என்பன  வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றன   .பாடசாலைகளின்   கட்டட புனரமைப்புக்காக 187 ரூபா மில்லியன் செலவிடப்பட்டு அதில் 29 பாடசாலைகளின் கட்டடங்கள்  புனரமைக்கப் பட்டுள்ளன. 

அடுத்த கட்டமாக 250  மில்லியன் ரூபா செலவில் வடமாகாணத்தில் பாடசாலைகள்   தெரிவு செய்யப்பட்டு  வகுப்பறைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் 8 பாடசாலைகளின்  கட்டடத் தொகுதிகள்  பாடசாலை நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டுள்ளதுடன்   ஏனைய பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இலங்கையின் கல்வி  பொது தராதர உயர்தரப்  பரீட்சையில்   சித்தி பெற்ற  மாணவர்களிற்கு 150 க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்  இந்திய அரசினால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கை அரசாங்கத்தில் சேவையாற்றும் ஊழியர்கள்  தங்கள் திறமைகளை ஆளுமைகளை செயற்திரனை வளர்த்துக் கொள்வதற்கான தொழிநுட்ப  குறுங்கால  பயிற்சிக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றது. 

01__1_.jpg

சர்வதேச யோகா தினத்தில் வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் மாணவர்களை ஆரோக்கியமாக கல்வி கற்க  யோகா பயிற்சி   நடத்தவும் , மாணவர்கள் பங்கு கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை  இந்திய துணைத் தூதரகம் வழங்கி வருகின்றது.  

அண்மைய  அபிவிருத்தி திட்டங்களின் வரிசையில் 160 கோடி ரூபா செலவில் கட்டப்பபட்டு வரும் யாழ்ப்பாண கலாசார நிலையம்  கட்டட  பணிகள் விரைவு படுத்தப் பட்டுவுள்ளன . அதன்  வளர்ச்சியை நான் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. 

முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு, 150  மீன்பிடி படகுகளும், 300 மீன் பிடி வலைகளும்  150 மில்லியன் ரூபா செலவில் வழங்கப்படவுள்ளன. நான் புதிதாக கடந்த மாதம் பதவி ஏற்றமையினை தொடர்ந்து  மக்களின்  தூதரக சேவைகள்; மற்றும்  தனிப்படட  சேவைகளின் அடிப்படையில் மக்கள் சந்திப்பு  நேரமாக ஒவ்வொரு புதன்கிழமையும்  ஒதுக்கப்பட்டுள்ளது. 

மக்கள்  முன் அனுமதி இன்றி  நேரடியாக  சந்தித்து கலந்துரையாட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . மேலும் தங்களின் குறைகளை  வேண்டுகோள்களை  முன் வைக்கும் வகையில்  விசா அலுவலகத்திலும்  தூதரகத்திழும்  பரிந்துரைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மக்களின் பரிந்துரைகள் நேரடியாக என்னால் பரிசீலிக்கப்படும் , அந்த வகையில் மக்கள் எந்தவித  தயக்கமும் இன்றி  பரிந்துரைகளை கடிதத்தின்  மூலம் தெரிவிக்க முடியும் . 

வடமாகாணத்தில் பெரும்பான்மை மக்களின் மொழியாக தமிழ் மொழியே முன்னிலையில் உள்ளது . இருப்பினும்   அலுவலக மொழியாக ஆங்கில மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் , தமிழ் மொழியை பயன்  படுத்த முடியாதோ என்ற ஐயமும் தமிழ்  மக்களிடம்  உண்டு .  தூதரகத்தை பொருத்தவரையில்  மக்கள் தொடர்பாடலுக்கு எந்த வித தடையும் இல்லாமல் தமிழ்  மொழியை மக்களை பயன்படுத்த முடியும் .   

தூதரகத்தின்  தொடர்பாடல் மொழியாக தமிழ் மொழியே நடைமுறையில் இருக்கும் தூதரகத்தினால் அனுப்பப்படும் அவசரமான கடிதங்கள் தவிர்ந்த ஏனையவும்  தமிழ் மொழியில் அமையும் என்பதனை இவ்வேளையில் தெரிவிதத்துக் கொள்கின்றேன்.

கலை கலாசார பண்பாட்டினை  தேடும்  அடிப்படையில் தூதரகமானது  வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  நல்லூர் உற்சவ காலத்தில் கடந்த 6 வருடங்களாக தெய்வீக சுகானுபவம் என்னும் கலை நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. இவ்வருடமும்  இவ் நிகழ்வு இடம்பெறவுள்ளது 

எதிர்காலத்  திட்டங்களின் அடிப்படையில் யாழ் பல்கலைக் கழக இசைத்துறை , நடனத்துறை , சித்த மருத்துவ பிரிவு இந்து நாகரிக துறை முகாமைத்துவ பீடம் கணித்து துறைக்கான  பணத் தேவைக்கான வேண்டுகோள்கள்  முன் வைக்கப்பட்டுள்ளன.  அவற்றிற்கு எம்மால் இயன்ற  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . 

மேலும் வடமாகாணத்தின்  பொருளாதார  முன்னேற்றத்துக்கான முக்கிய விடயங்களாக  வடமாகாண மக்களுக்கான காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையம் என்பன இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள்  சகல வழிகளிலும் இடம்  பெற்று  வருகின்றன 

.விரைவில் யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் .கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. என்பதையும் மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்வதுடன்  யாழ் இந்திய துணைத் தூதரகமானது   தொடர்ந்தும் வடமாகாண அபிவிருத்திக்கு  பங்களிப்பினை வழங்கும்  என்கிறார். 

http://www.virakesari.lk/article/38578

14 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழகத்துக்கு வேலை கொலைகார ஹிந்தியாவுக்கு நாட்டிய நடனம் ஆடுவதா..??!

12 hours ago, Sasi_varnam said:

அடக்கி, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள் போன்று தானே ஐயா செயல்படுவார்கள்..
 
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லையென யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார். 

அதை தீர்மாணிப்பது சிறிலங்கா ஜனாதிபதி.......இந்திய துணைத்தூதுவர் அல்ல கண்டியலோ.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.