Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும்

October 4, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

pancaha-eswatram.jpg?zoom=3&resize=335%2

இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் ,அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் போது. உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக பிரேரணையொன்றை  முன்மொழிந்தார். குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம்,  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலய பிரதேசங்களை புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது.

திருகோணமலை சேரூவில பௌத்த ஆலய பிரதேசம் இலங்கை அரசினால் புனித பிரதேசமாக அண்மையில் பிரதமரினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.  அண்மையில் மன்னார் மடு மாதா ஆலய பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமைக்காக இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண சபை நன்றி தெரிவிக்க விரும்புகிறது.

திருகோணமலை திருக்கோனேஸ்வரம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற இந்துக்களின் கோரிக்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுவதோடு மேற்குறிக்கப்பட்ட ஐந்து ஆலயங்களின் பிரதேசங்களை புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்!

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.

எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

பà®à¯à®à®ªà¯à®¤ ஸà¯à®¤à®²à®®à¯:

பஞ்சபூத ஸ்தலம்:

நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்

ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்

காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

à®à®¯à®¿à®°à®®à¯ à®à®£à¯à®à¯à®à®³à¯ பழà¯à®®à¯:

ஆயிரம் ஆண்டுகள் பழைமை:

சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத்:  

கேதார்நாத்:

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

ஆயிரம் மைல்கள்:  

ஆயிரம் மைல்கள்:

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும்.

இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

தà¯à®°à¯à®à¯à®à®°à¯à®à¯ நிலà¯:

தீர்க்கரேகை நிலை:

1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)

3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

? ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)

à®à®©à¯à®¯ à®à®¿à®µà®¾à®²à®¯à®à¯à®à®³à¯:
 
 
இலங்கையையும் சேர்த்தால்.... இந்த நேர்கோட்டு ...மர்மம் இன்னும் நீடிக்கிறதே.. 
 
தà¯Âà®°à¯Âà®Âà¯Âà®Âà®°à¯Âà®Â௠நிலà¯Â:
 
 
pancaha-eswatram.jpg?zoom=3&resize=335%2

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டேஸ்வரன்.....இப்ப புத்தேஸ்வரன் ஆக மாறிவிட்டார் ...

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, putthan said:

தொண்டேஸ்வரன்.....இப்ப புத்தேஸ்வரன் ஆக மாறிவிட்டார் ...

இல்லை புத்தன்..

உப்புல் வண்ண தெய்யோ... என்று, ஆச்சரியப்பட த்க விதத்தில் கேரள ஆலய கட்டிட அமைப்பில்... விஸ்ணுவின் ஆலயமாக உள்ளது, மாத்தறையில்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில்

ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, திருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்கு ஈஸ்வரங்களைப் போலவே, காலத்தால் மிகவும் முற்பட்டது. இதன் ஆதிகாலத் திருக்கோயிலின் உருவாக்கம் பற்றி இன்று அறிய முடியவில்லை. ஆயினும், இபின் பத்தூட்டா முதலிய பிற நாட்டு யாத்திரீகர்களும் வந்து, பார்த்து, வியந்து பாராட்டி, தமது வரலாற்று ஏடுகளில் எழுதி வைத்துச் செல்லுமளவுக்கு இத் திருக்கோயில் அழகிலும், செல்வாக்கிலும், தெய்வீகத்திலும் சிறந்து விளங்கியிருக்கின்றது.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், அத் திருக்கோயில் சைவ, வைஷ்ணவ பேதங்களுக்கு இடமளிக்காமல், எல்லா இந்து மதத்தவர்க்கும் பொதுவாக விளங்குமாறு, சிவபெருமான், மகா விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் ஒரே வளாகத்துள்ளேயே கோயில்களைக் கொண்டு அமைந்திருந்தது என்பதாகும். ( இதேபோல், தமிழகத்தில் தில்லைச் சிதம்பரம் முதலான சில சிவன் திருக்கோயில்களில் மகா விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் அமைந்து, "ஹரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று காஞ்சிப் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதை மெய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இத் திருக்கோயில், இலங்கைத் தீவின் தெற்கு முனைப்பகுதியில், மாத்தறை என்னும் கடலோர நகரத்தில் அமைந்திருந்தது. இத் திருக்கோயில் 'தேவன்துறை கோயில்', 'நாக ரீச நிலாக் கோயில்' ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் 'சந்திர மௌலீஸ்வரர்' என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் இத்திருக்கோயில் 'தெவுந்தர தேவாலே' என்று அழைக்கப்படுகின்றது.

மாத்தறைக் கடலோரத்தில் மிகவும் பரந்த இடத்தில் அமைந்திருந்த இத் திருக்கோயில் வளாகத்தில், சந்திர மௌலீஸ்வரர் என்னும் திருநாமங் கொண்ட சிவபெருமானுக்கும், தென்னாவரம் நயினார் என்று அழைக்கப்பட்ட மகா விஷ்ணுவுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. அவற்றுடன் கூடவே, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், மகா லக்ஷ்மி தேவி, அம்மன், பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மன், மற்றும் பல பரிவார தேவதைகளுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. அத் திருக்கோயில்கள் யாவுமே, திராவிட - கேரள சிற்ப மற்றும் கட்டிடக்கலை முறைகளுக் கிணங்க, சிவாகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்டிருந்தன. எல்லாத் திருக்கோயில்களும் அதி உன்னதமான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடனும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைக் கோபுரங்களுடனும் உயர்ந்து விளங்கின. அவ்வாறு தங்க வண்ணக் கோபுரங்களுடன் இத்திருக்கோயில் கோபுரங்கள் பிரகாசமாக விளங்கியதால், கடல் மூலம் மாத்தறை மற்றும் காலித் துறைமுகங்களுக்குப் பயணம் செய்த மாலுமிகளின் பார்வையில் இத் திருக்கோயில் வளாகம் ஒரு தங்க நகரமாகக் காட்சியளித்ததாக வரலாற்று எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். கிரேக்க கடலோடியான தொலமி என்பவர் வரைந்த இலங்கைத் தீவின் வரைபடத்தில் இந்த ஐந்து ஈஸ்வரங்களும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஆறாம் நூற்றாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கைத் தீவின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதுமே தமிழ் மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக்கொண்ட அந்தப் பிரதேசம் நாகநாடு என்று அழைக்கப்பட்டது. ( உ-ம்:நாகதீபம் திருக்கோயில் முதலியன ). அவர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தீவின் கரையோரத்தில் முக்கியமான முனைகளில் அமைந்திருந்த இந்த ஐந்து ஈஸ்வரங்களும் மிகச் சிறந்த முறையில் அபிவிருத்தி அடைந்தன. சிம்ம விஷ்ணுவின் பேரனாகிய முதலாம் நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னன் இலங்கைத் தீவை ஆட்சி செய்தபோது, இதுபோன்ற மேலும் பல கருங்கற்கோயில்களைக் கட்டினான். மேலும், தமிழகத்தில் ஆட்சிசெய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருமளவு தானங்களை அளித்ததுடன் பல திருப்பணிகளையும் செய்து சிறப்பித்தார்கள்.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் மிகச் சிறந்த துறைமுக நகராகவும் விளங்கியது. வணிகர்களும், யாத்திரீகர்களும் கடல் மூலம் இத் துறைமுகத்துக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டதுடன் ( முக்கியமான வணிகப்பொருட்கள்: முத்து, கறுவாப்பட்டை முதலிய வாசனைப் பொருட்கள்) சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே வழிபட்டுக் காணிக்கைகளைச் செலுத்திச் சென்றனர். அதன் காரணமாக இத் திருக்கோயில் பெரும் செல்வ வளம் நிறைந்ததாக விளங்கியது. தமிழகத்திலிருந்து யாத்திரீகர்கள் மாதோட்டம் (திருக்கேதீஸ்வரம்), புத்தளம் (முன்னேஸ்வரம்) முதலிய துறைமுக நகரங்கள் வழியாக அத்தலங்களில் அமைந்திருந்த ஏனைய ஈஸ்வரங்களில் விழிபட்டபின்னர், அவ்வழியாக கடல்மூலம் மாத்தறை தொண்டீஸ்வரம் துறைமுகத்துக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.

1236 - 1270 ஆம் ஆண்டுக்காலத்தில், தம்பதேனியாவை ஆண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் 1301 - 1326 ஆம் ஆண்டு ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகு என்ற மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருந்தொகையான தானங்களை வழங்கியதுடன் பல திருப்பணிகளையும் செய்தார்கள். மேலும் கோட்டை என்ற நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஏழாம் புவனேகபாகு என்ற மன்னன் ( இவன் ஓர் இந்து மன்னன். தனது அரசாணைகள் யாவையும் தமிழ் மொழியிலேயே கையொப்பமிட்டான்), இத் திருக்கோயிலுக்குப் பலவித திருப்பணிகள் செய்து கோயிலை மேலும் அழகுபடுத்திச் சிறப்பித்தான்.

மொராக்கோ என்ற நாட்டைச் சேர்ந்த யாத்திரீகரான இபின் பத்தூட்டா என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் புத்தளம் வழியாக கடல்மூலம் இத்திருக்கோயிலுக்கு வந்து, இத்திருக்கோயிலின் அழகையும், புனிதத்துவத்தையும், அங்கே வாழ்ந்துவந்த பக்தர்கள், துறவிகள் மற்றும் இறைவன் சந்நிதியில் நடனமாடிய நூற்றுக்கணக்கான தேவ நடனப் பெண்களையும் பற்றி தமது பயண நூலில் அழகுற வர்ணித்துள்ளார்.

இவ்வாறு, பல நூற்றாண்டுக்காலம் மன்னர்களாலும், பக்தர்களாலும், பிற தேச யாத்திரீகர்களாலும் சிறப்பாகப் போற்றப்பட்ட இத் திருக்கோயில், இலங்கைத்தீவைக் கைப்பற்றிய அந்நிய ஆட்சியாளர்களாகிய போர்த்துகேயர்களால் முற்றிலுமாக இடித்து, அழித்துச் சூறையாடப்பட்டது. போர்த்துக்கேயக் கடற்படைத் தளபதியான தாமஸ் டி சூசா என்பவனின் தலைமையில், பெருந்தொகையான போர்த்துகேய வீரர்கள் இத் திருக்கோயில்களையும், கோயில் வளாகம் முழுவதையும் 1588 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இடித்து அழித்ததுடன் கோயிலில் பணியாற்றிய பக்தர்கள், பூசகர்கள் முதலிய அனைவரையும் படுகொலை செய்து, திருக்கோயில்களில் நிறைந்திருந்த விலையுயர்ந்த திரவியங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தார்கள். திருக்கோயிலினுள்ளே பசுமாட்டை வெட்டி கோயிலின் புனிதத்துவத்தை இழிவுபடுத்தினார்கள்.

இத் திருக்கோயில்களின் கருங்கற்களைக் கொண்டு மாத்தறைக் கோட்டையைக் கட்டியெழுப்பினார்கள்.

அந்நாட்களுடன் இத்திருக்கோயில் தனது புனிதத்துவத்தையும், மகத்துவத்தையும் இழந்தது. அதன்பின்னர், இந்தப் பிரதேசம் தமிழ் மக்களின் கைகளை விட்டு அகன்றதால், இத்திருக்கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டித் திருப்பணி செய்து, அதன் பழைய மாட்சியை மீண்டும் நிலைநாட்ட யாருமே முன்வரவில்லை.

நீண்ட காலத்துக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டில், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் இத்திருக்கோயிலின் சிதைபாடுகளும், தெய்வத் திருவுருவச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், நான்கரை அடி உயரம் கொண்ட பூர்வீகமான சிவலிங்கமும், விநாயகர், முருகன், நந்தி, லக்ஷ்மிதேவி, துவார பாலகர்கள் முதலிய திருவுருவச் சிலைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட கருங்கற் தூண்களும், மகர தோரண வாயில்களும் அடங்கும். இப் பொருட்கள் யாவும் தற்போது பல பொருட்காட்சிச் சாலைகளில் உறங்குகின்றன.

இத் திருக்கோயில் அமைந்திருந்த வளாகத்தில் புத்த மத விகாரை அமைந்திருப்பதுடன், அவற்றின் ஒரு புறத்தில், சிங்கள பௌத்தமயமாக்கப்பட்ட விஷ்ணு தெய்வத்தின் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது. ( சிங்கள மக்கள் மகா விஷ்ணுவை 'சக்க தெய்யோ' என்று அழைத்து வணங்குகின்றார்கள். அவர் தமது கரத்தில் சக்கரம் வைத்திருப்பதால் அப்பெயர். அதேபோன்று, கணபதி என்று அழைக்கப்படும் விநாயகரை கண தெய்யோ என்றும், கண்ணகியை பத்தினி தெய்யோ என்றும் அழைக்கின்றார்கள்). இந்தக்கோயில் சிங்களக் கலாச்சார முறையில் ஒரு கூரைக் கோயிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கோயிலினுள்ளே காணப்படும் மகாவிஷ்ணுவின் திருவுருவம் நீல வண்ணத்தில், சிங்களக் கலாசார முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், கோயிலின் சுவர்களும் நீல வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. சிங்கள பௌத்த மக்கள் இத்தெய்வத்தை உப்புல்வண்ண தெய்யோ என்று அழைத்து வணங்குகின்றார்கள்.

No automatic alt text available.
 
No automatic alt text available.
 
நூதன சாலையில் இருக்கும்....தொன்மையான தொண்டீஸ்வரர் சிலை....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இலங்கையையும் சேர்த்தால்.... இந்த நேர்கோட்டு ...மர்மம் இன்னும் நீடிக்கிறதே

கூகிள் மப்புடன் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கொள்ளுபட்டு எனக்கு நேர் கோடு வருதில்லை நாதமுனி முகநூல் புலுடா போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

மப்புடன் எண்டதை அந்த மப்பு எண்டெல்லே வாசிச்சுப்போட்டன்.?

சிவபெருமான்....  பெருமாள் பேர் வச்ச ஆக்களுக்கு நேரா நிக்காம சோதனை செய்வார். அதுவும் எம்பெருமான் திருவிளையாடல்களில் ஒன்று.?

மப்பில, கோடப்போட்டால் சரியா வரும். ?

1 hour ago, பெருமாள் said:

கூகிள் மப்புடன் இரண்டு மணி நேரத்துக்கு மேல் கொள்ளுபட்டு எனக்கு நேர் கோடு வருதில்லை நாதமுனி முகநூல் புலுடா போல் இருக்கு .

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 

இதற்குத்தான் மலை உச்சியில் தீபம் ஏற்றினமா ? நான் கூட சிவன் பிரம்மா விஸ்ணு யார் பெரியவர்? என்ற சண்டையில் தீபமாகி வென்றவர் சிவன் என்று நினைத்து கொண்டிருந்தன்..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொண்டீஸ்வரம் முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை. பூசகர்கள் யார்?

செய்தியில் உள்ள படத்தில் தொண்டீஸ்வரம் இருந்தாலும் சிவாஜிலிங்கம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தைத்தான் தொண்டீஸ்வரத்திற்குப் பதிலாக லிஸ்ற்றில் போட்டுள்ளார்.

 

Quote

இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம்,  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டிசுட்டான் சிவன் கோவில் தான்தோன்றிஸ்வரம் இல்லையா........!  ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தொண்டீஸ்வரம் முன்னர் கேள்விப்பட்டிருக்கவில்லை. பூசகர்கள் யார்?

செய்தியில் உள்ள படத்தில் தொண்டீஸ்வரம் இருந்தாலும் சிவாஜிலிங்கம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தைத்தான் தொண்டீஸ்வரத்திற்குப் பதிலாக லிஸ்ற்றில் போட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்... லிஸ்டிலேயே  இல்லையே....

தொண்டீஸ்வரம் கதை ... 16ம் நூறாண்டில் போர்த்துகேயரினால் முடிக்கப் பட்டு விட்டது.

அது சிங்களவர் பகுதியில் இருந்ததால் புனரமைக்கப் படவில்லை... தென்பகுதியில் ஒரு நூதன சாலையில் ... தொன்மையான தொண்டீஸ்வரர் சிலை....உள்ளது. படம் மேலே...

இப்பொது உப்புல் வண்ண தெய்யோ... என்ற பெயரில் அந்த இடத்தில நீல வண்ண விஷ்ணு  கோவிலாக உள்ளது. புத்தர் உப்புல் வண்ண தெய்யோவின்  அவதாரம் எண்ட படியால் சிங்களவர்களுக்கு ஒகே.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்... லிஸ்டிலேயே  இல்லையே....

 

செய்தியில் புனித பிரதேங்களாகப் பிரகடனப்படுத்தவேண்டும் என்று சிவாஜியார் கேட்பது..

திருக்கேதீஸ்வரம்

திருக்கோணேஸ்வரம்

முனீஸ்வரம்

நகுலேஸ்வரம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"தொண்டீஸ்வரம்" இந்த கோயிலை இன்று தான் கேள்விப்படுகிறேன் 

 

இந்த ஈஸ்வரங்களை விட இன்னுமொரு தொன்மையான ஒரு ஈஸ்வரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அக் கோயிலின் பெயர் திருநந்தீஸ்வரம். அதுவும் சிங்கள சமூகத்தவர் ஒருவரின் காணிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன


---------------------------------------

41793130_2168297399910358_32107061350194

மிக முக்கிய பதிவுகள்

திருநந்தீஸ்வரம் தமிழர்களை மீண்டும் அழைகின்றது.

 

உலெகங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்குமான முக்கிய வேண்டுகோளும் பதிவும் ஆகும் இந்த பதிவும்.எமது உரிமைகளை கேட்டு கொண்டு இருக்கும் நாம் எஞ்சிய எமது உடமைகளை பாதுகாக்க தவறி விடுகின்றோம்.

சொல்ல போனால் எமது பார்வை வட கிழக்கை மட்டும் மட்டுப் படுத்தி நிற்கின்றது.

ஆறாம் பராகிரம பாகு காலத்தில் தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட சைவக்கோவில் தான் இந்த திருநந்தீஸ்வரம்.கொழும்பு நகரில் இரத்மலானை பகுதியில் அமைந்துள்ளது.

1980களில் இக்கோயிலின் புராதன அம்பாள் விக்கிரகம் ஓரளவு சிதைவின்றிய நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருட்திணைக்களம் இதை எடுத்துச்சென்றது. பழைய சிவாலயத்தின் ஆவுடையார் உள்ளிட்ட தொல் பொருட்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொன்மையான சிவாலயத்தின் போர்த்துக்கேயரால் உடைக்கப்பட்டு பின் அகழ்ந்தெடுக்கப்பட்ட நந்தியின்தலை சிதைந்த நிலையில் தொல்பொருளிற்குரிய எவ்வித பாதுகாப்புமின்றி உள்ளது. கல்வெட்டுகள் இருக்கலாம் என்று ஊகிக்கக்கூடிய கற்றூண்களுக்கும் இதே நிலை தான்.

இப்போது ஆலயச்சூழலில் நிற்கின்ற ஆலமரம் கூட இற்றைக்கு ஆயரம் வருடங்கள் பழைமையானது என்று நம்பப்படுகின்றது.

ஆறாம் பராக்கிரமபாகுவின்(கோட்டை மன்னன் குமார அழகேஸ்வரன் தான் ஆறாம் பராக்கிரம பாகு) காலத்தில் கோட்டையில் நகருக்குப் புறத்தே அழகிய ஈஸ்வரன் ஆலயமொன்று இருந்ததாகவும் அங்கு தினமும் வாத்தியஇசைகளுடன் தமிழில் பக்திப் பாசுரங்கள் பாடப்பட்டதாகவும் சலலிஹினிசந்தேஸய (பூவை விடுதூது)(Salavikini Sandesaya – ராகுல தேரர் என்னும் பௌத்த பிக்குவால் எழுதப்பட்டது) மூலம் அறிய முடிகிறது.

இந்த ஆலயம் பல்லவர் ஆட்சி துணையுடன் அமைக்கப்பட்டது.(1454 காலப்பகுதி)

கோட்டை இராச்சியத்தை ஆண்ட ஆறாம்
பராக்கிரமபாகு, ஒன்பதாம் பராக்கிரமபாகு
என்போரால் முன்னேச்சரம் பரிபாலிக்கப்பட்டதாக
முன்னேச்சர ஆலயத்திற் காணப்படும் கல்வெட்டுக்கள்
மூலம் அறிய முடிகின்றது.

Capture.png

இவ்வாலயம் 1518 இல் போர்த்துகேயரால் அழிக்கப்பட்டமைகான ஆதாரங்களும் வரலாற்று குறிப்புகளும் உண்டு.

2011 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

Sivan-Kovil-Leaflet.jpg

 

ஆனால் பரிதாபம் இன்று இந்த கோவில் கொனாகோவில என்று சொல்லப்டுகின்றது.கொனா என்றால் நந்தி. கொனா கோவில் என்றால் நந்திக்கோயில் . நந்தீஸ்வரம் . திருநந்தீச்சரம் .

தற்போதைய இரத்மலான புகையிரத நிலையம் இருக்கிற நிலங்களும் இக்கோயிலின் உரித்துடைய நிலங்களே என்று சொல்லபடுகின்றது.

பிரச்சனை என்ன வென்றால் இந்த கோவிலை தமிழர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை.

உலக தமிழர்களே நீங்கள் இலங்கை வரும் போது ஒருமுறை தானும் அரை நாளையாவது ஒதுக்கி இந்த ஆலயத்துக்கு போகுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் இதனை பற்றி சொல்லுங்கள்.

ஈழத்தமிழர்களை கோட்டை ராட்சியத்து இந்த சிவன் கோவில் மீண்டும் அழைக்கின்றது.

ஒரு தடவையாவது தரிசிப்பீர்களா ? தமிழர்களே ?

திருநந்தீச்சரம்

http://thuruvi.com/திருநந்தீஸ்வரம்-தமிழர்க/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

செய்தியில் புனித பிரதேங்களாகப் பிரகடனப்படுத்தவேண்டும் என்று சிவாஜியார் கேட்பது..

திருக்கேதீஸ்வரம்

திருக்கோணேஸ்வரம்

முனீஸ்வரம்

நகுலேஸ்வரம்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்

முதலில் வட மாகாணத்தில் இருக்கும் நகுலேஸ்வரத்தையும், திருகேதீஸ்வரத்தையும், வடமாகாணசபை பிரகடனம் செய்ய்டும். திருகோணமலையும் கிழக்கு மாகாணசபை செய்யட்டும். 

மத்திய அரசு செய்யிறதை செய்யட்டும்.

திருநந்தீஸ்வரம் கண்டேன்

 
1.jpgஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை. இவற்றுள் திருக்கோணஸ்வரமும், திருக்கேஸ்தீஸ்வரமும் திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பையும் தாங்கி நிற்பவை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் முருகக்கடவுளாக இருந்தால் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஸ்கந்த தெய்வோ என்று கருணை காட்டும். மற்றய இந்துக் கடவுள் என்றால் இரண்டாம் பட்சம் தான் என்ற சூழ்நிலையில் இலங்கையின் தெற்கிலே இப்போது "திருநந்தீஸ்வரம்" என்றதோர் வரலாற்றுத் தொன்மைமிக்க ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அதுவும் பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவரின் காணிக்குள் இது இருக்கின்றது என்ற செய்தியை இந்தமுறை இலங்கைப் பயணத்தில் அறிந்து கொண்டேன். இந்தமுறைப் பயணத்தில் திருநந்தீஸ்வரம் காணவேண்டும் என்று முனைப்பெடுத்து ஒரு நாளும் குறித்துக் கொண்டேன். இனிமேல் தான் சிக்கல்.

திருநந்தீஸ்வரம் என்ற ஆலயம் கொழும்புக்கு அண்மித்திருக்கும் இரத்மலானை என்ற இடத்தில் இருக்கின்றது என்ற தகவலைத் தவிர இந்த ஆலயத்து எப்படிப் போவது என்ற தகவல் கொழும்பில் இருக்கும் பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கின்றது. சரி எதற்கும் ஒரு டாக்ஸி பிடித்துக் காலையிலேயே இரத்மலானை சென்று அங்கே விசாரிப்போம் என்று நினைத்து, டாக்ஸிக்காரருடன் காலை வேளை கொழும்பு நோக்கிப் பரபரப்பாக ஓடும் காலைவேளை வேலைப்படைக்கு எதிர்த்திசையில் பயணப்படுகின்றோம். இரத்மலானை வந்தாச்சு, இந்தப் பிரதேசம் சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதி. சாரதி இப்போது என் முகத்தைப் பார்க்கிறார். சிங்கள மொழியில் நந்தி என்றால் கொனா , ஆலயம் என்றால் கோவிலய இந்த இரண்டையும் இணைத்துப் பொருத்தினால் கொனா கோயிலய என்ற பெயர் கிட்டுகிறது. காரை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த பேக்கரிக்காரரிடம் கேட்டோம். அவர் எதிர்த்திசையைக் காட்டி இந்தக் கோயிலுக்கான பாதையைச் சொல்கிறார் சிங்களத்தில். டாக்ஸிக்காரரும் புரிந்ததும் புரியாததும் மாதிரி தலையாட்டி விட்டு காரை இயக்குகிறார். இப்போது வாகனம் இரத்மலானை கடற்கரைப்பக்கமாகத் திரும்பி சந்து பொந்துகளை முத்தமிட்டுப் பயணிக்கிறது. வழியெங்கும் மிகவும் வறிய, அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையைக் காட்டும் சின்னஞ்சிறு வீடுகளும், பொதுக்குடிநீர்க் குழாயில் காலைக்குளியலிக்குக் கியூ நிற்கும் குழந்தைகளும். சாரதி இடையில் ஒன்றிரண்டு பேரை விசாரித்து ஒருவாறு "கொனா கோவியலய" என்ற ஆலயத்தைக் கண்டுபிடித்தார்.

சுற்றிலும் குடிமனைகள் சூழ்ந்த அந்த ஆலயப்பகுதியில் முன்னே எதிர்ப்படுவது பாரிய அரசமரம், அதைத் தாண்டி வந்தால் புதிதாகக் குடமுழுக்கு செய்ப்பட்ட "திருநந்தீஸ்வரம்" ஆலயம் மிடுக்காக நிற்கின்றது.
திருநந்தீஸ்வரம் ஆலயம் வரலாற்றுத் தொன்மை மிக்க, ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய ஈழத்தின் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்று. இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்தனர். அவருடைய மகனை மதம் மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலைப் பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்களே பரம்பரை பரம்பரையாக இன்றுவரை கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.

போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.

2.jpg1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ எனும் காவியத்தை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.

இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு தலத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்து கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.

பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 களில் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிகால எழுத்துக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று தீர்த்தமாக இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்க 2005 ஆம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு சிவன்கோயில் குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.

(வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: இராமானுஜம் நிர்ஷன், வீரகேசரி)


IMG_6449-1.JPGIMG_6448-1.JPGIMG_6447-1.JPGIMG_6446-1.JPGIMG_6453-1.JPGIMG_6443-1.JPGIMG_6439-1.JPGIMG_6437-1.JPGIMG_6436-1.JPGIMG_6445-1.JPG
வெள்ளிக்கிழமை நாளில் வந்திருக்கின்றோம். உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு காலைப்பூசை பார்க்கவேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கிறோம். கோயிலுக்குப் பக்கத்தில் இன்னொரு
நூதனசாலை அமைந்திருக்கின்றது.

IMG_6457-1.JPG
IMG_6456-1.JPG
IMG_6455-1.JPG
IMG_6454-1.JPG4.jpg
அந்த மண்டபத்துக்குள் நுழையும் வாய்ப்பு அப்போது கிட்டவில்லை ஆனாலும் வெளியில் நின்று கமாராவுக்குள் அங்கே இருக்கும் அரும்பொருட் காட்சிகளைப் படம் பிடிக்கின்றேன். மிக அமைதியான ஆலயச்சூழலில் வெள்ளிக்கிழமை நாளில் பத்துப்பேரை உள்ளடக்கிய கூட்டம். பூசை ஆரம்பிக்க முன்னர் ஒரு முதியவரும், பெண்மணியும் தேவார திருப்பதிகங்களைப் பாடிச் சிறப்பிக்கின்றார்கள். ஒரு முதிய பெண்மணியும், இன்னொரு நடுத்தர வயதுப்பெண்ணும் கோயிற் சுற்றுப்பிரகாரத்தைச் சுத்தம் செய்வதிலும், பூசைக்குத் தேவையான ஆயத்தங்களிலும் முனைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் அந்த ஆலயத்தினைப் பராமரிப்பவர்கள்.

ஐயர் அவசரமாக வந்து காலைப்பூசையை ஆரம்பிக்கின்றார். திரைச்சீலை விலக திருநந்தீஸ்வரரை இலிங்க உருவில் கண்ணாரக் கண்டு துதித்துப் போற்றுகிறேன். திருநந்தீஸ்வரர் ஆலயத்தைக் கண்ட மனநிறைவோடு அந்த வெள்ளிக்கிழமை அமைகின்றது.
 
http://www.madathuvaasal.com/2011/09/blog-post.html
  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் புதைக்கப்பட்ட 100 சைவ ஆலயங்கள் மற்றும் 400 கிராமங்கள் பற்றிய ஓர் நூல் சமீபத்தில் கொழும்பில் வெளியிடப்பட்டது.

அந்த நூலின் பெயரை, அதன் எழுத்தாளரை யாரவது அறியத்தர முடியுமா?

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.