Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dps-9QYV4AAcGo9.jpg

இலங்கை படைகளின் பாலியல் குற்றங்களையும் அம்பலப்படுத்துகிறது #MeToo!

இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பெண் விடுதலை புலி உறுப்பினர்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்றாக #MeToo பரப்புரையில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்தியா, இலங்கை உட்பட உலகம் முழுவதும் தற்போது பெரும் பூதாகரமான பிரச்சினையாக #MeToo விவகாரம் காணப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக #MeToo பதிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகள் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அந்தவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைக்கபட்டடிருந்த  A. உஜாலினி என்ற பாடசாலை மாணவி, யுத்தம் நிறைவடைந்த இறுதித் தருணங்களில் பொதுமக்களுடன்  சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.

இவ்வாறு சரணடைந்த குறித்த மாணவி அன்று பாதுகாப்பு செயலராக இருந்த கோட்டபாயவின் உத்தரவின் பேரில் 58 ஆவது பிரிவினரால் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என டிவிட்டரில் அம்சவள்ளி என்ற பெண் ஒருவர்  #MeToo  பரப்பு்ரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இராணுவத்தினர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், மேலும் நெருக்கடி குடுக்கும் வகையில் இந்த புதிய சர்ச்சை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்திருக்கின்றது.

எனவே, இதுவரை பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்த  #MeToo  பரப்பு்ரையில் இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவலங்களை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலை புலிகளுடனான இறுதி போரின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தற்போது வரை பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற போதும் அதற்கான நீதி இன்னமும் நிலைநாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்த சந்தர்ப்பங்களை உபயோகிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு நடந்ததிற்கு இப்ப முறைப்பாடு செய்யலாமோ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, ரதி said:

2009ம் ஆண்டு நடந்ததிற்கு இப்ப முறைப்பாடு செய்யலாமோ? 
 
எதை எதுக்கை கொண்டு வந்து திணிக்க வேண்டுமென்ற மனப்பான்மை அற்றவர்கள்.

புலிகளை அழிப்பதாக நினைத்து மொத்த இனத்தையே அழிக்கும் நாதாரிகள்.

**

Edited by நியானி
மேற்கோள் ஒன்றும் பதிலும் நீக்கப்படுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

எதை எதுக்கை கொண்டு வந்து திணிக்க வேண்டுமென்ற மனப்பான்மை அற்றவர்கள்.

புலிகளை அழிப்பதாக நினைத்து மொத்த இனத்தையே அழிக்கும் நாதாரிகள்.

**

அண்ணா,அதிகமாய் உணர்ச்சி வசப்படாதிங்கோ உடம்புக்கு கூடாது....எதையும் எழுதும் முன் யோசித்து எழுதுங்கோ...உங்களை போல ஆட்களால் தான் புலியே அழிந்தது என நான் சொல்கிறேன்.?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2018 at 12:30 PM, ரதி said:

2009ம் ஆண்டு நடந்ததிற்கு இப்ப முறைப்பாடு செய்யலாமோ? 
 
அக்கிக்கு வர வர பகுத்தறியுறது குறைஞ்சிட்டு வருகுது.

2005 இல சுனாமி பாட்டுப்படிக்கப் போன.. சிம்மையி மீருன்னு கிளம்பலான்னா... ஏன்.. 2009 இல் பாதிக்கப்பட்ட பெண்கள் கிளம்ப முடியாது...??! ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

அக்கிக்கு வர வர பகுத்தறியுறது குறைஞ்சிட்டு வருகுது.

2005 இல சுனாமி பாட்டுப்படிக்கப் போன.. சிம்மையி மீருன்னு கிளம்பலான்னா... ஏன்.. 2009 இல் பாதிக்கப்பட்ட பெண்கள் கிளம்ப முடியாது...??! ?

நெடுக்ஸ்,விஷயம் தெரியாமல் இடையில் வரக் கூடாது...என்ட அண்ணர் சின்மயின் திரியில் அவவுக்கு சொன்ன பதிலை நான் அவருக்கே திருப்பிப் போட்ட்டேன்....அது தான் அவருக்கு சொன்னேன் எழுதும் போது யோசித்து எழுத சொல்லி?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நெடுக்ஸ்,விஷயம் தெரியாமல் இடையில் வரக் கூடாது...என்ட அண்ணர் சின்மயின் திரியில் அவவுக்கு சொன்ன பதிலை நான் அவருக்கே திருப்பிப் போட்ட்டேன்....அது தான் அவருக்கு சொன்னேன் எழுதும் போது யோசித்து எழுத சொல்லி?

அப்ப உங்க சச்சரவை இந்த திரிக்குள்ளும்.. தொடர்கிறீர்கள் என்றீங்க. ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

அப்ப உங்க சச்சரவை இந்த திரிக்குள்ளும்.. தொடர்கிறீர்கள் என்றீங்க. ?

இது ரத்த பூமி சார்  குறி வச்சால் எங்கயும் அடிப்பம் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்பம்  எப்பவும் வெயிட்டிங்தான் :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, குமாரசாமி said:

எதை எதுக்கை கொண்டு வந்து திணிக்க வேண்டுமென்ற மனப்பான்மை அற்றவர்கள்.

புலிகளை அழிப்பதாக நினைத்து மொத்த இனத்தையே அழிக்கும் நாதாரிகள்.

**

நான் எழுதின கருத்து ஒன்றை நியாயினி வந்து வெட்டிக்கொத்தியிருக்கு.  2,3 நாளைக்கொருக்கால் யாழ்களத்தை வந்து வாசிக்கிறவன் என்ன நினைப்பான்? குமாரசாமி ஏதோ குண்டக்கமண்டக்கவாய் எழுதிப்போட்டுது எண்டுதான் கூடாதமாதிரி நினைப்பினம். இதைத்தான் ஊரிலை சொல்லுவினம் நுள்ளுறவை நுள்ளிப்போட்டு அமசடக்காய் வெளியிலை போய்விடுவினம். அவைக்கு எப்பவும் எப்பவும் நல்லபெயர். இடையிலை நிண்டு கதைச்சவனுக்குத்தான் எப்பவும் கெட்ட பெயர். நான் பதில் கருத்து எழுதின மூலகர்த்தர் பெரிய இடத்தோடை கதைச்சு அலுவலை பாத்திட்டார். இடையிலை கருத்து எழுதின எனக்கு வெட்டுக்கொத்து......நான் கனகாலமாய் அவதானிச்சதிலை இப்பிடித்தான் கன இடங்களிலை கன பேருக்கு நடந்திருக்கு.
நியாயினி! பெயரில் மட்டும் நியாயினி. நடவடிக்கைகளில் இல்லை.

நான் எழுதினதையும் தூக்குங்கோ. உங்களுக்கு நல்லபெயர் வரட்டும்.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎19‎/‎2018 at 10:53 AM, குமாரசாமி said:

உதை வாசிக்கும் நெடுக்ஸ் போன்றவர்கள் உது நான் எண்டல்லோ நினைப்பினம் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/18/2018 at 12:30 PM, ரதி said:

2009ம் ஆண்டு நடந்ததிற்கு இப்ப முறைப்பாடு செய்யலாமோ? 

A group of women, who survived being forced into brothels set up by the Japanese military during World War II, protesting in front of the Japanese Embassy in 2000, demanding an apology for their enslavement. (Credit: Joyce Naltchayan/AFP/Getty Images)

கொஞ்சம் வெளியாலையும் எட்டிபார்க்கனும் சரித்திரங்களில் பலதசாப்த்தம்கள் கடந்த பின்னரும் பெண்கள் மீதான வல்லுறவுக்கு மன்னிப்பு கோரிய சம்பவங்கள் நிறையவே உள்ளன இப்படி ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை .(கிருபனிடம் நான் சொன்னது உண்மையாகின்றது) இங்கு நிறையவே தகவல்கள் உள்ளன https://www.history.com/news/comfort-women-japan-military-brothels-korea.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ரதி said:

உதை வாசிக்கும் நெடுக்ஸ் போன்றவர்கள் உது நான் எண்டல்லோ நினைப்பினம் ?

என்ரை தங்கச்சி தங்கப்பவுண் எல்லே! :grin:

ஆரும் கூடாமல் நினைப்பினமே? :grin:  :grin:  :grin:

உங்க ஒரு சிலபேர் வந்து  ஒருத்தருக்கும் தெரியாமல் நுள்ளுவினம்.......

நுள்ளு வாங்கினவன் குளறவெளிக்கிட நுள்ளினவையள் ஒண்டும் தெரியாதமாதிரி வெளிக்கிட்டு வந்த சுவடே இல்லாமல் வெளிக்கிட்டு போடுவினம். ?

இஞ்சை இருக்கிறவன் செம்புள்ளி கரும்புள்ளி வாங்கிக்கொண்டு சீவியத்தை நடத்த வேண்டியதுதான். :(

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

உதை வாசிக்கும் நெடுக்ஸ் போன்றவர்கள் உது நான் எண்டல்லோ நினைப்பினம் ?

யாழுறவு ஒருவர் யாழைவிட்டு நீங்கியதுபோல் நீங்கள் நீங்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ☺️ 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

A group of women, who survived being forced into brothels set up by the Japanese military during World War II, protesting in front of the Japanese Embassy in 2000, demanding an apology for their enslavement. (Credit: Joyce Naltchayan/AFP/Getty Images)

கொஞ்சம் வெளியாலையும் எட்டிபார்க்கனும் சரித்திரங்களில் பலதசாப்த்தம்கள் கடந்த பின்னரும் பெண்கள் மீதான வல்லுறவுக்கு மன்னிப்பு கோரிய சம்பவங்கள் நிறையவே உள்ளன இப்படி ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை .(கிருபனிடம் நான் சொன்னது உண்மையாகின்றது) இங்கு நிறையவே தகவல்கள் உள்ளன https://www.history.com/news/comfort-women-japan-military-brothels-korea.

நீங்கள் கிருபனோட என்னைப் பற்றி என்ன கதைத்த்ருந்தாலும் அது பற்றி எனக்கு அக்கறை இல்லை....இந்த திரியில் என்ன எழுதியிருக்கு என்று வாசிக்காமல் குறைந்த பட்சம் நெடுக்கருக்கு நான் எழுதின பதிலையாவது வாசித்திருக்கலாம் ...அப்படி வாசித்திருந்தால் இப்படி மொக்கையினைப் பட்டு இருக்கத் தேவையில்லை  

உங்களை போன்றவர்கள் உங்களை மட்டுமே அறிவாளி என்று புகழ்ந்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

உங்கள் கருத்திற்கு என்ர அண்ணர் பச்சை குத்தினத்தைப் பார்க்க சிரிப்பாய் இருக்குது...நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்து அவருக்குத் தான் எழுதினது.அவருக்கு நன்றாகத் தெரியும்...இப்படியும் மனிதர்கள் இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்கள் அளவுக்கு நான் அறிவாளி கிடையாது மன்னித்துகொள்ளுங்கள் .

On 10/19/2018 at 3:25 AM, குமாரசாமி said:

எதை எதுக்கை கொண்டு வந்து திணிக்க வேண்டுமென்ற மனப்பான்மை அற்றவர்கள்.

புலிகளை அழிப்பதாக நினைத்து மொத்த இனத்தையே அழிக்கும் நாதாரிகள்.

மெத்தச் சரியா சொன்னீங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.