Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானே சிறிலங்காவின் பிரதமர் – என்கிறார் ரணில்

Featured Replies

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்சவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டின் பிரதமராக தான் இன்னமும் பதவியில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33695

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி.tw_blush:

  • தொடங்கியவர்

ஜனநாயகத்துக்கு விரோத ஆட்சிக் கவிழ்ப்பு – மங்கள சமரவீர

mangala-samaraweera1-300x200.jpg

சிறிலங்காவில் இன்று மாலை ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம், ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நிதியமைச்சரான மங்கள சமரவீர.

அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு விரோதமானது. சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சிக் கவிழ்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33697

Edited by போல்

8 minutes ago, போல் said:

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தானே இப்போதும் பிரதமராக இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்சவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டின் பிரதமராக தான் இன்னமும் பதவியில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33695

நானும் ரவுடி தான் நானும் ரவுடிதான் Moment இது

  • கருத்துக்கள உறவுகள்

44881843_1886939154735258_39895150415891

44794789_1886939278068579_30024764353580

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிலை நடக்கிற அரசியல் கூத்துக்கள் மாதிரியே ஸ்ரீலங்காவிலையும் நடக்க வெளிக்கிட்டுது...

  • தொடங்கியவர்

ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர தேவை உண்டு.

இவர்கள் அடித்த கொள்ளையில் ஒருபகுதி பல பினாமிகள் பெயரில் இலங்கையில் 25கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உயர் மாடிக் கட்டிடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றை அமைத்து வருவது சீன அரச பொறியியல் துறை.  

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல ராஜபக்ச பயங்கரவாதிகள் கும்பலின் பினாமிகளாக உள்ள முன்னாள் முப்படைப் பயங்கரவாதிகளின் அதிகாரிகள் சிலரின் நிர்வாகத்தில் இயங்கும் கட்டுமான குழுமங்கள் (ACCESS, RR, MAGA) உதவியுடன் முதலிடப்படுகின்றன.

இவர்கள் அடித்த கொள்ளையில் இன்னொரு பகுதி பல வெளிநாடுகளில் (சீனா, ஆபிரிக்க நாடுகள், சீசெல்ஸ், எத்தியோப்பியா, யப்பான், தென்கொரியா, உட்பட) பல்வேறு வடிவங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.  

குள்ளநரி ரணில் அடுத்த தேர்தலில் இந்த உண்மைகளை ஆதாரங்களுடன் அவிழ்த்து விடுவார் என்ற பின்னணியில், ராஜபக்ச பயங்கரவாதிகள் தமிழர்களை கடத்தி, அபிவிருத்தித் திட்டங்களில் அடித்த பெருமளவு கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசர நிலைமை இறுகி வருவதன் காரணமாக முன்னாள் நெல்லு மாபியா மைத்திரியுடன் இணைந்து இந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.

  • தொடங்கியவர்

சர்வதேச அரங்கில், குறிப்பாக ஜனாயகம் கதைக்கும் மேற்குலகில், தமிழர் தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வை முன்நகர்த்த இன்னொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

காலம் காலமாக கைக்கூலி அரசியல் செய்துவரும் சம்மந்தன், சுமந்திரன், டக்ளஸ், ஆனந்தசங்கரி, மாவை,  சித்தார்த்தன், அடைக்கலம் செல்வநாதன், சரவணபவன், .... போன்ற பேர்வழிகள் இந்த சூழலையும் நக்கிப் பிழைப்பு நடத்தும் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ரவூப் ஹக்கீம் ..

 

  • தொடங்கியவர்

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்

Ranil-300x199.jpg

சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கூட்டம் ஒன்றை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதேக தலைவரும், கூட்டு அரசின் பிரதமருமான, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதேவேளை, ஐதேக அமைச்சர்கள் பலரும், மகிந்த ராஜபக்சவின் நியமனம் சட்டரீதியானது அல்ல என்றும், அரசியலமைப்புக்கு முரணானது என்றும்,கூறியுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33704

Edited by போல்

  • தொடங்கியவர்

சிறிலங்காவில் பாரிய அரசியல் குழப்பம் – மகிந்தவின் நியமனம் செல்லுமா?

mahinda-maithri-300x200.jpg

மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் பிரதமராக இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதால், அரசியல் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பது செல்லாது என்றும், ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்கிறார் என்றும், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டு விட்டதாகவும், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சிறிலங்கா அதிபர் செயலகம் கூறியுள்ளது.

இதனால், இந்த ஆட்சிமாற்றம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா – யார் இப்போது ஆட்சியில் இருப்பது என்ற குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருக்கிறார் என்றும், அரசியலமைப்பு ரீதியாக அவரை அகற்ற முடியாது என்றும், ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்காவில் ஒரு பாரிய அரசியல் குழப்ப நிலையும், நிச்சயமற்ற சூழலும் தோன்றியிருக்கிறது.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுள்ளதை அடுத்து சிறிலங்காவின் தென்பகுதியில் பல இடங்களில் பட்டாசுகள் கொளுத்திக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சிறிலங்காவில் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கு, 2015இல் கொடுக்கப்பட்ட மக்கள் ஆணைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டார் என்று செயற்பாட்டாளரான, நாலக குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33699

  • தொடங்கியவர்

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில்

 

பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார்.

அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிரிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

 

ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் மைத்ரிபால சிரிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னதாக ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவரது பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்பின.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த சந்திப்பு நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்

 

தற்போது மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளமையானது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அடுத்துவரும் நாட்களில் அரசியலில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் எனக் கேட்டபோது, புதிய பிரதமரும், ஜனாதிபதியும் பேச்சு நடத்தி அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பார்கள் எனக் கூறினார்.

அடுத்து தேர்தல் நடக்குமா அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிருபிக்கப்படுமா என்பது குறித்து கேட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எனினும், இறுதித் தீர்மானத்தை பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் பேச்சு நடத்தி அறிவிப்பார்கள் எனவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை இலங்கையில் நடத்தி வந்தன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தென் இலங்கை அரசியல் ஆய்வாளர் சிவராஜா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றுக் கொண்டது தொடர்பாக பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவேதான் இலங்கையின் பிரதமர் என கேபினட் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னெ பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், கேபினட் கலைக்கப்பட்டு விட்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கிறது என பிபிசி சிங்கள செய்தியாளர் அசம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரணில், தானே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 19வது அரசியல் அமைப்பின் திருத்தத்தின் 49வது பிரிவின்படி தான் பிரதமராக தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கவே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள்தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.

ஒரு பிரதமர் இருக்கும்போது மற்றொருவரை நியமித்தது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் முப்படைகளின் அதிகாரங்களும் ரணிலிடமே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மங்கள சமரவீர கண்டனம்

ராஜகபக்ஷவை பிரதமராக நியமித்தது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசுக் கவிழ்ப்பு கிளர்ச்சி என்று இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்து

 

"இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள். உறுதிமிக்க இலங்கையினை இன்றுமுதல் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்" என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 42(4) பிரிவுக்கு அமைய இலங்கை பிரதமராக உங்களிடம் இருந்த அதிகாரங்களை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உங்களை விலக்கிக் கொள்கின்றேன் என இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று ரணில் விக்கிரமசிங்கவேவிற்கு இலங்கை அதிபர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு தன் இல்லத்திற்கு சென்ற மஹிந்த ராஜகபக்ஷவை அவரது தொண்டர்கள் வரவேற்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45996021

 

  • தொடங்கியவர்

புதிய அமைச்சரவை நியமனம் உடனடியாக இல்லை

sri-lanka-emblem-300x198.jpgசிறிலங்காவின் புதிய அமைச்சரவை நியமனம், உடனடியாக இடம்பெறாது என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். எனினும், அமைச்சர்கள் எவரும் இன்று பதவியேற்கவில்லை.

பதவியேற்பு நிகழ்வு முடிந்த கையுடன், சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடி விட்டு, ஹிணுப்பிட்டிய கங்காராமய விகாரைக்குச் சென்று மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர், அவர் விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பியிருக்கிறார். இதனால்,இன்றிரவு  உடனடியாக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஏதும் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளையும், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறாது என்று மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான சகாக்களில் ஒருவரான, மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் நியமனம், அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியானதா என்ற சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில், உடனடியாக அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்சவுடன் இன்றிரவு 10 மணியளவில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகப் பதிவு ஒன்றில், ‘என்ன ஜனநாயகம் இது திருவாளர் சிறிசேன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33711

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அடுத்த சில நாட்களில், புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைய ராஜபக்சக்களை எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

நாட்டு நிலைமை குறித்து வாய் திறந்தார் கரு

karu_jauasoorya.jpg

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன்.

இது தொடர்பான சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்வற்கான நடவடிக்கையயும் எடுத்துள்ளேன்.

அத்துடன் இது தொடர்பானதொரு விரிவானதொரு விளக்கத்தை நாளைய தினம் அறிவிப்பதாக சபாநாயகர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/43297

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரவூப் ஹக்கீம் ..

 

ஹக்கீம்.... இப்போ... மதில்  மேல், பூனை.  
இவர்... விழுங்கி.. விழுங்கி... சொல்லும்.. வசனங்கள்,  இனத்தின் அடையாளம்.

  • தொடங்கியவர்

ரணிலிடமிருந்து மைத்திரிக்கு சென்ற அவசர கடிதம்; கொழும்பில் தொடரும் பரபரப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக தாம் தொடர்ந்தும் நீடிப்பதாக ரணில் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் 42 சரத்தின் 4ம் பிரிவின் அடிப்படையில் தாமே நாட்டின் பிரதமர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றின் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தாமே பிரதமர் என ரணில் விக்ரமசிங்க இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/108113?ref=rightsidebar

அரசியலமைப்பை சுட்டிக்காட்டி ரணில், மைத்திரிக்கு கடிதம்!

In இலங்கை     October 26, 2018 6:46 pm GMT     0 Comments     1100     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

19 ஆவது அரசியலமைப்பின் 42 இலக்கம் 4 ஆம் சரத்தின் படி தன்னை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் அரசியலமைப்பின் பிரகாரம் பதவியேற்ற ஒரு பிரதமர் எனவும் அதற்கு அமையவே தான் அந்த பதவியில் நீடிப்பதாகவும் அவர் உறுதிப்படக் கூறினார்.

அதற்கமைய தான் பிரதமருக்குரிய உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்தும் கடமையாற்றுவதாகவும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

இதற்கு ரணில் விக்ரமசிங்க எழுதியுள்ள பதில் கடிதத்தில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DqdEh9TWsAYlP0i.jpg

http://athavannews.com/அரசியலமைப்பை-சுட்டிக்கா/

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

BD7-CD567-70-AC-4-E03-973-B-5-CAD112603-

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

BD7-CD567-70-AC-4-E03-973-B-5-CAD112603-

காலத்துக்கு ஏற்ற.. படத்தை உருவாக்கிய, கவி அருணாச்சலம் அவர்களுக்கு, பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
25 minutes ago, Kavi arunasalam said:

BD7-CD567-70-AC-4-E03-973-B-5-CAD112603-

சூழ்நிலைக்கேற்ற கேலிச்சித்திரம்!

  • தொடங்கியவர்

ரணில் தலைமையில் இரண்டாவது அவசர கூட்டம்!

Dqdbu_8W4AEK4Ao.jpg

ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது அவசர கூட்டம் சற்று முன்னர் அலிமாளிகளியில் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருக்கும் ஆதவன் செய்தியாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில் தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

http://athavannews.com/ரணில்-தலைமையில்-இரண்டாவத/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

ரணில் தலைமையில் இரண்டாவது அவசர கூட்டம்!

Dqdbu_8W4AEK4Ao.jpg

ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது அவசர கூட்டம் சற்று முன்னர் அலிமாளிகளியில் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருக்கும் ஆதவன் செய்தியாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில் தலைமையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

http://athavannews.com/ரணில்-தலைமையில்-இரண்டாவத/

ஆதவன்... இதனை, வேண்டுமென்றே...  எழுதினானா என்று தெரியவில்லை. :grin:
ஆனால்... அது. உண்மை. ?

  • தொடங்கியவர்

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளேன் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

my1.jpg

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தமக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

44911894_131881827694846_674846709325706

இன்று இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/43295

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

#fb

  • தொடங்கியவர்
54 minutes ago, அபராஜிதன் said:

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

 

கூட்டு அரசு கவிழ்ந்தது – சிறிலங்கா பிரதமராக பதவியேற்றார் மகிந்த

சிறிலங்காவின் பிரதமராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.  ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்தே, இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

கூட்டு அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலக்கிக் கொள்வதாக, அதன் பொதுச்செயலர் மகிந்த அமரவீர இன்று மாலை அறிவித்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.

இதையடுத்து, அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது மற்றும் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தற்போது அதிபர் செயலகத்தில் கலந்துரையாடல் நடந்து வருகிறது.

http://www.puthinappalakai.net/2018/10/26/news/33687

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.