Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன  தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

srisena5.jpg

எங்களை அடுத்த இரண்டுமூன்று நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் கருஜெயசூரிய எழுதிய கடிதத்தினை நிராகரித்து ஜனாதிபதி பதில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மேலும் சிறிசேனஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடனான சந்திப்பையும் இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார்.

இதேவேளைரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.. இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. நேற்று எனக்கு சொன்ன எதனையும் ஐ தே  க இன்று பாராளுமன்றத்தில் செய்யவில்லை. அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று..அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.”

இவ்வாறு தற்போது நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி

 

http://www.virakesari.lk/article/44633

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை அழிப்பதிலும் அவ்களின் உரிமையைப் பறிப்பதிலும் ஒன்று சேர்ந்து நின்றீர்கள். இப்பாே ஒருவர் மற்றவரின் சிண்டைப் பிடிச்சுக்காெண்டு நியாயம் கேட்டுப் பாேராடுகிறிர்கள். எங்களுக்கு தராத, தர மறுக்கும், நியாயம் உங்களுக்கு கிடைக்க வேணுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? உங்கள் இருவரில் ஒருவர் நம்மைப்பாேல் அழியுங்கள், அல்லது இருவருமே அழிந்து பாேங்கள். நாட்டுக்கு ஒன்றும் நஷ்ரமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

அப்படிச்  சொன்னால்.... இந்தியாவுக்கு... கோவம்  வந்து விடும்.  கவனமப்பு.
நடந்தது... நடந்து விட்டது. இனி... சூதனமாக நடக்கப் பாருங்கள்.

சரவணபவன் வீட்டுக்கு போய்...  "கேக்"  வெட்டுற மாதிரியான செயலை செய்வது தான்.... 
ஒரு நாட்டின், ஜனாதிபதிக்கு அழகு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பழுவூர் கிழான் said:

அப்பன்ட (விஜயன்) புத்தி இன்னமும் அப்படியே இருக்கு...

மா.... புளிக்கிறது, அப்பத்துக்கு... நல்லது,  
என்ற படியால்... மைத்திரியின்  கருத்தை வரவேற்போம். regular.png

  • கருத்துக்கள உறவுகள்

tortoise4.jpg

இப்போ  வெளியார் யாரவது புத்தி சொன்னால் இலங்கை இறை "ஆமை"  உள்ள நாடு . யாரும் புத்தி சொல்லபடாது என்பினம் பாருங்கவேன் ..?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

tortoise4.jpg

இப்போ  வெளியார் யாரவது புத்தி சொன்னால் இலங்கை இறை "ஆமை"  உள்ள நாடு . யாரும் புத்தி சொல்லபடாது என்பினம் பாருங்கவேன் ..?

இப்ப,  நோ.... புத்திமதி.  வீ   ஒன்லி,   உன்னிப்பாக..  லுக்கிங்  சார். :grin:  ?

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாள் தந்தையோடு கோவிச்சுக் கொண்டு வயலைக் கொழுத்தின கணக்கா.. இப்ப நாட்டைக் கொழுத்தாமல் போகாது போலக் கிடக்கு.

சொறீலங்காவின் சர்வாதிகார சனாதிபதி முறை என்பது அங்கொடை கேசுகளின் கைக்குப் போனால்.. இது தான் நிகழும்.

அதற்கு மகிந்த.. மைத்திரி.. சந்திரிக்கா..  நல்ல உதாரணம். ?

  • கருத்துக்கள உறவுகள்

 

கோழிக்கறி சமைக்கச் சொன்ன மைத்திரி, கருவாடுதான் கிடைத்ததால் 7 கோழிகளை அறுத்து வீசினார்

 

8 மணிக்கு வேலைக்கு செல்வதற்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தாயும் கூடவே எழுந்து இன்று என்ன கறி சமைக்கவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுவிட்டு   சமையல்கட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே அம்மா அப்பாவிடம் கேட்கவும் அப்பா கோழிக்கறி சமைக்கச் சொன்னார். அம்மாவும் சரியென சொல்லிவிட்டு சமைக்கச்  சென்றார். அம்மாவும் வீட்டில் கோழி இல்லாத காரணத்தால் கருவாட்டுக்கறியை சமைத்து பொதிகட்டி அப்பாவுக்கு கொடுத்து அன்பாக வேலைக்கு அனுப்பி வைத்தார்..
 
மதியநேரம் வந்ததும் தான் பிரச்சினை ஆரம்பமானது. அப்பா மதிய உணவை உண்பதற்காக சாப்பாட்டு பொதியை திறந்ததும்தான் அவருக்கு தெரிந்தது கோழிக்குப் பதிலாக கருவாடு சமைக்கப்பட்டிருப்பது. அப்பா சாப்பிடவில்லை, #உடனேகிராமசேவகர் #அலுவலகத்தைமூடிவிட்டு வீட்டுக்கு வந்தார்...
 
ஏன் இன்று கோழிக்கறி சமைக்கவில்லை என்று கத்திக்கொண்டே அம்மாவைத் தேடினார். அம்மா பயத்தால் அலுமாரிக்குப் பின்னால் ஒளித்துக்கொண்டார். அப்பாவால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது அவ்வளவுதான்...
 
சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போனார். எங்கள் வீட்டில் கோழி இல்லாததால் எமது வீட்டு முற்றத்திலும் பக்கத்துவீட்டு தோட்டத்திலும் சுற்றிக்கொண்டிருந்த ஏழு எட்டு #கோழிகளைதாறுமாறாக அறுத்து_வீசினார்...
 
ஊரே கூடி அப்பாவின் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி ஏற்கனவே எல்லோரும் அறிந்துவைத்திருந்ததால் அவரை எல்லோரும் அவர்பாட்டில் விட்டுவிட்டு கடந்து சென்றனர்...
 
எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சிரித்தார் ஒரு சிரிப்பு அதை இன்றும் மறக்கமுடியாது. அப்பாவின் குறும்புகளை நினைத்தால் எமக்கு இன்றும் சிரிப்பு தான்.
 
- சதுரிகா சிரிசேன எழுதிய "ஜனாதிபதி தாத்தா" புத்தகத்திலிருந்து (பக்கம் 501,502)
 
  • கருத்துக்கள உறவுகள்

அட டுபுக்கு பய பெத்த தேஞ்ச வெளக்குமாரே, 
ஊரான் வீட்டு ஏழு எட்டு கோழியை அறுத்து எரிஞ்சது ஒன்னும் உன்கோப்பனோட குறும்புத்தனமில்லடி ...அதுக்கு பேரு சுத்த அயோக்கியத்தனம், காட கடப்புளி செய்யிற வேலை அது!!! 
இதெல்லாம் ஒரு ஜனாதிபதி ... அதுக்கு ஒரு புஸ்தகம் .. த்தூ...தூ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.