Jump to content

அகதி-கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அகதி-கோமகன்

WIP-Party-Pigeon.jpg?resize=300%2C209

எனது கதை :

பாரிஸ் பெருநகரின் வடகிழக்குப் புறத்தில், ஏறத்தாழ அறுபது மைல்கள் தொலைவில், பிரான்ஸின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே செவ்ரன் என்ற வ்போ (beau sevran) செவ்ரன் நகர் அமைந்து இருந்தது. இந்த நகரில் வசிப்பவர்களை ‘செவ்ரனைஸ்’ (Sevranais) என்று சொல்வது வழக்கம். போ செவ்ரனை சரியாகத் தமிழ்ப்படுத்தினால் அழகிய செவ்ரன் என்று வரும். ஆனால் இந்த நகரில் அநேகர் குடியேற்றவாசிகளாகவே இருந்ததினால் அழகிற்கும் சுத்த பத்தங்களுக்கும் இந்த நகர் எட்டியே நின்றது. இன்றும்கூட செவ்ரன் தொடருந்து நிலையத்தின் முன்னால் குடியேற்ற வாசிகளினால் விற்கப்படுகின்ற சோளம்பொத்திகளும்  இறைச்சியில் வாட்டி விற்கின்ற சான்விச்சுகளும் பிரபலம். அதில் இருந்து வெளியாகும் தீய்ந்த புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்படுவதாக அவர்களும் உணர்வதில்லை இந்த நகரின் நகரத்தந்தையும் உணர்வதில்லை. இப்படியாக இந்த நகரின்  கதையைச் சொல்லிக்கொண்டு போகையில் பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல, எங்களுக்கு எப்படி வன்னி தடுப்பு முகாம்கள் ஒருகால கட்டத்தில் இருந்ததோ அப்படியே வரலாற்றில் கறைபடிந்த நகரான ட்ரான்ஸி(Drancy) நகர் போ செவ்ரனுக்கு  பக்கத்தில் ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாவது உலகமகாயுத்தத்தின் பொழுது இங்கிருந்த பாரிய திறந்தவெளிச்சிறைச்சாலையில் இருந்து( Camp de Drancy) பல  யூதர்கள் வகை தொகையின்றி நாஸிகளினால் ஓஸ்திரியாவில் இருந்த ஒஷ்விட்ஸ்(Auschwitz) சித்திரவதை கூடத்திற்கு புகையிரத வண்டிகளில் நாடு கடத்தப்பட்டார்கள். இது தொடர்பாக ஒரு திரைப்படமும் வெளியாகியது. இனி நாங்கள் போ செவ்ரனுக்குள் நுழைவோம்,

இந்த நகரின் மத்தியில் நான்கு பனைகளை நான்கு திசையிலும் மேல் நோக்கி நிறுத்தி வைத்த மாதிரி ஒவ்வொரு ரவரிலும் எண்பது குடும்பங்களை உள்ளடக்கிய, இருபது மாடிகளையும் நான்கு மினிக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட அந்தத் தொடர்மாடிக் கட்டிடத் தொகுதி பரந்து விரிந்திருந்தது. அதன் நடுப்பகுதியிலே மனிதர்களும் ஏன் நாங்களும் இளைப்பாறுவதற்கு ஏற்றால் போல சடைத்து மேல் நோக்கி உயர்ந்த பைன் மரங்களை எல்லைகளாகவும் அவற்றின் மத்தியிலே மனிதக்குழந்தைகள் விளையாடுவதற்கு குருமணல் பரப்பிய ஒரு பூங்காவும் இருந்தது. இந்தப் பூங்காவும் அதனைச்சுற்றியுள்ள சூழலும் காலையில் எம்மாலும் மாலையில் குழந்தைகளினாலும் அமைதியைத்தொலைக்கும். இந்த நான்கு ரவர்களில் ஒன்றான ‘சி’ரவரின் ஐந்தாவது மாடியில் 54ஆவது இலக்கக் கதவில் இருக்கின்ற வீட்டின் அகன்று நீண்ட பல்கணியில், நான் எனது மனைவி மற்றும் எமக்குப்பிறந்த 10 மக்கள்களும், ஒரு வரவேற்பறை ,சாப்பாட்டறை, நான்கு பரந்த அறைகள் மற்றும் அமெரிக்க பாணியில் அமைந்த பரந்த குசினியுடன் கூடிய வீட்டில், வீட்டின் சொந்தக்காரருமான சத்தியபாலன்  மற்றும் நிலாமதி என்ற பெயர்களை வெள்ளைகளுக்காகச் சுருக்கிக்கொண்ட ‘சத்தியா’, ‘நிலா’ தம்பதிகளும் அவர்களது 03 பிள்ளைகளும் வசித்து வருகின்றோம்.

சத்தியா, நிலா தம்பதிகளுக்கு முன்னரே பலவருடங்களாக இந்தத் தொடர்மாடிக் குடியிருப்பு எமது கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்திருக்கின்றது. அப்பொழுது இரண்டு ஆபிரிக்கர்கள் இரண்டு அல்ஜீரியர்கள்  மற்றும் ஒரு மொரோக்கியர் என்று இந்த வீட்டின் தற்காலிக உரிமைப்பத்திரம் காலத்திற்குக்  காலம் இடம்மாறி இப்பொழுது இவர்களின் கட்டுப்பாட்டில் வந்து நிற்கின்றது.  புதிதாக இவர்கள் குடியிருக்க வந்ததால் எதிலும் நுணுக்கமான நிலாவின் மேற்பார்வையால் வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது. வாடகை வீட்டிற்குக் குடிவந்தாலும்  தங்களது விலாசத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக தங்கள் சக்திக்கு மீறி வீட்டிற்குத்தேவையான பொருட்களை தேடித்தேடி வாங்கி அலங்கரித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இடத்தில் சத்தியாவையும் பற்றிச்  சொல்லியாக வேண்டும். அவர் பெயருக்கேற்ப இரக்கம் நீதி என்று மிகவும் சாதுவான குணங்களை உடையவர். நிலா அதற்கு நேர் எதிர்மாறானவள். நிலா சத்தியாவை  விட முன்னதாகவே பிரான்ஸ் வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எல்லோரும் தங்களது மனைவியரைத் தாயகத்தில் தேடிப்பிடிக்க நிலாவோ அதற்கு நேர்மாறாக இருந்தாள். இதற்கு அவளது முறை மச்சானான சத்தியா அப்பொழுது தாயகத்தில் என்ஜினியராக வேலை செய்திருந்ததும் ஒரு முக்கிய காரணமாயிற்று. நல்ல வேலையில் சத்தியா இருந்தாலும் வெளிநாட்டு ஆசை அவரை ஆட்டுவித்தது. அவர்  நிலாவோடு சேர்ந்து வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையானாலும் நிரந்தர வதிவிட உரிமை மட்டும் அவருக்கு எட்டியே நின்றது. ஏலவே சத்தியாவை நிலா முறைப்படி அழைப்பதற்கு சட்டத்தில் இடமிருந்தாலும் அவரை விரைவில் பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் குறுக்குவழியில் பிரான்சுக்கு அழைத்ததும் அவரது நிரந்தர வதிவிட உரிமை எட்ட நிற்பதற்கு முக்கிய காரணமாயிற்று.

இவர்கள் இங்கு குடிவந்து இரண்டாம் நாள் காலை வேளை ஒன்றில் சத்தியா மிஞ்சிப்போயிருந்த சோற்றை எமக்கு உணவாக தந்து கொண்டிருந்த பொழுதுதான் நிலாவுக்கும் சத்தியாவுக்குமான அந்தப் போர் முன்னெடுப்புகள் ஆரம்பமாயிற்று.

“இஞ்சை…. புறாக்களை வீட்டுக்கை அடுக்காதையுங்கோ. புறா இருக்கிறது வீட்டுக்கு கூடாது. அது தரித்திரம். என்ரை சொல்வழி கேட்டுப்பழகுங்கோ”.

“அதுகளாலை உமக்கு என்ன பிரச்சனை? ஒருபக்கத்திலை இருந்து போட்டு போகட்டுமே. இவைக்கு சாப்பாடு குடுக்கிறதாலை நாங்கள் ஒண்டும் குறைஞ்சு போறேலை. இவையள் எல்லாம் ரெண்டு பக்கத்தாலையும் செத்துப்போன எங்கடை சொந்தக்காறர் எண்டு யோசியுமென்”.

“இஞ்சை உந்த விழல் கதையள் கதைக்காதையுங்கோ. நான்தான் பல்கணியிலை புறாவின்ரை பீயள் அள்ளி கழுவிறது. உது நல்லதுக்கில்லை சொல்லி போட்டன்”.

இருவரும் முரண் பட்டுக்கதைத்தாலும் எமக்குப் பாதகமாக ஏதும் நிகழவில்லை. இதற்குப் பிள்ளைகளும் சத்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது.

ஒருநாள் பல்கணியில் எனது சகதர்மினி குறுகுறுத்துக்கொண்டே அரக்கி அரக்கி நடைபயின்று கொண்டிருந்தாள். எனக்கு அவளது நடைமொழி புரிந்து விட்டது. இருவரும் இந்த தொடர்மாடிக்குடியிருப்புக்கு முன்னே உள்ள பூங்காவில் இரண்டு கிழமைகளுக்கு முன்பு ஒரு செக்கல் பொழுதில் முயங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அவள் முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து கொண்டிருந்தாள். நான் அவள் இருப்பதற்கு சுள்ளிகள் தேடிப்புறப்பட்டேன். நான் திரும்பியபொழுது  பல்கணி பிள்ளைகளின் சத்தத்தால் இரண்டு பட்டது. சத்தியா பிள்ளைகளை அதட்டி அடக்கினார்.

“பிள்ளையள்.. அது முட்டை போட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கப் போகுது. அதை நீங்கள் சத்தம் போட்டு குழப்ப கூடாது. பேந்து அது வேறை இடத்துக்கு போயிடும்”.

இப்பொழுது சத்தியாவினதும் பிள்ளைகளதும் முக்கியமான பொழுது போக்கு எம்மைப் புதினம் பார்ப்பதே.  இப்பொழுதெல்லாம் என்னவளால் முன்புபோல இருக்கமுடியவில்லை. அவளது பொழுதுகள் அதிகம் நாங்கள் தயாரித்திருந்த கூட்டிலேயே கழிந்தது. ஒரு கருக்கல் பொழுதொன்றில் அவள் மங்கிய வெள்ளை நிறத்தில் நான்கு முட்டைகளைப் போட்டிருந்தாள். அவளிடமிருந்து குறுகுறுப்புச் சத்தம் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தது. சத்தியாவும் தனது பங்குக்கு அரிசியும் சோறும் போட்டுக்கொண்டிருந்தார். இதனால் பல்கணி சில நாட்களிலேயே அசிங்கமானது. கூட்டைச்சுற்றி பீ கும்பியாக வளரத்தொடங்கியது. நிலா பத்திரகாளியானாள். பிள்ளைகள் தகப்பன் பக்கம் நின்றதால் அவளால் அதிகம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல என்னவளின் உடல்சூட்டால் முட்டைகளில் மாற்றங்கள் படிப்படியாக வரத்தொடங்கின. சிலநாட்கள் கழிந்ததும் அதிகாலைப் பொழுதொன்றில் குஞ்சுகளின் கிலுமுலு சத்தத்துடன் அந்தநாள் விடிந்தது. பிள்ளைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை அவைகளுக்கு கிட்ட செல்வதற்கு சத்தியா அனுமதிக்கவில்லை. குஞ்சுகள் மஞ்சள் நிறத்தில் கண்கள் திறக்காதும் சிறகுகள் முழைக்காதும் கிடந்தன.

நவீனம் வந்த கதை :

மூன்று மாதங்களைக் கடந்த நிலையில் நாங்கள் இருந்த கட்டிடத்திற்கும் சத்தியா குடும்பத்தாருக்கும் புனருத்தாரணம் என்ற பெயரில் வினையொன்று மையங்கொண்டது. குளிர் காலங்களில் ஏற்படுகின்ற மின்சாரகட்டணத்தை குறைக்கவும் குளிர் பல்கணிக்கு ஊடாக வீடுகளில் நுழைவதால் வீடுகளின் உட்பகுதியை சூடாக்குவதற்கு ஏற்படுகின்ற செலவுகளைக் குறைக்கவும் பல்கணியை மூடி இரட்டைக்கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள் பொருத்துவதற்கும் வெளிக்கட்டிடத்தில் குளிரைத் தாங்கும் விதத்தில் நுரைப்பஞ்சுகளை வைத்து கட்டிடத்திற்கு வெண்சீமெந்தினால் பூசி அதன்மேல்  வண்ணம் பூசுவதற்கும் கட்டிட நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி எல்லோருக்கும் சுற்று நிருபம் அனுப்பபட்டது.  அதேவேளையில் வீட்டிற்குளே இன்னுமொரு வினை பிரஜாவுரிமை என்ற பெயரில் நிலாவிடம் வந்து சேர்ந்தது.  நிலாவிற்கான பிரஜாவுரிமை விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கடிதம் அனுப்பி இருந்தது. கடிதத்தைப் பார்த்தும் நிலா பத்திரகாளியானாள். பல்கணியில் வைத்து சத்தியா எங்களை ஆதரித்ததினாலேயே  தனது விண்ணப்பம் பிற்போடப்பட்டது என்பது அவள் தரப்பு வாதம் என்பதுடன் நில்லாது, ‘இந்த ராசியில்லாத வீட்டில் இருக்க முடியாது. கஸ்ரத்துடன் கஸ்ரமாக வேறு இடத்தில் வீடு வாங்குவோம்’ என்று சத்தியாவிற்கு உருவேற்றினாள்.

புனருத்தாரண வேலைகளுக்கு நாள் குறித்து தளபாடங்களும் ஆளணிகளும் வந்து இறங்கத்தொடங்கின. பணியாளர்கள் கட்டிடத்தைச்சுற்றி இரும்பினாலான சாரங்கள் கட்டினார்கள். அவர்கள் முதலில் கட்டிடத்தின் வெளிச்சுவரில் இருந்த ஊத்தைகளை காற்றுடன் கூடிய தண்ணீரால் கழுவினார்கள். தண்ணீர் அடித்த வேகத்தில் தண்ணீருடன் ஊத்தைகள் எல்லாம் வழிந்தோடிக் கட்டிடம் புதுப்பொலிவாக இருந்தது. பின்னர் வெளிச்சுவரில் நுரைப்பஞ்சை வைத்துக் ஒட்டிக் கொண்டு வந்தார்கள். நாங்களும் கட்டிடத்தில் ஒவ்வொரு இடமாக ஒதுங்கிக் கொண்டோம். குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்து சிறகுகள் முளைத்து விட்டன. அவைகள் மரகதப்பச்சை நிறத்திலும் சாம்பல் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் என்று பலவர்ணங்களுடன் இருந்தன. நுரைப்பஞ்சு வைத்தகையுடன் அதன்மேல் வேகமாக வெண் சீமெந்தினால் பூசத்தொடங்கினார்கள். இதற்கிடையில் ஜன்னல்களுக்கு அளவு எடுப்பதற்காக இருவர் வந்து கட்டிடத்தைப் பிரட்டிப் போட்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கான இடம் குறுக்கிக்கொண்டே வந்தது.

வெண் சீமெந்தினால் பூசப்பட்ட வெளிச்சுவர் வெள்ளையும் பச்சையும் கலந்த வர்ணத்தின் ஊடாக வெண்பச்சை நிறமாக மாறத்தொடங்கியது. எங்கள் இருப்புக்கு சாவுமணியடித்த அந்த நாளும் வந்து சேர்ந்தது. பார ஊர்திகளில் இரட்டைக்கண்ணாடிகள் பொருத்திய ஜன்னல்கள் வந்து இறங்கத்தொடங்கின. ரவர்களின் நடுவே இருந்த பைன் மரங்கள் வேருடன் புடுங்கப்பட்டு அந்த இடத்தில் புதியபாணியில் அமைக்கப்பட்ட மின்சாரக்கம்பங்கள் முளைத்தன. சிறுவர் பூங்கா இடிக்கப்பட்டு அவற்றை சமத்தளமாக்கிக் கற்கள் பதிக்கப்பட்டன. இடைக்கிடை புற்தரைகழும் பதிக்கப்பட்டன. அந்த இடமே பழையவைகளைத் துலைத்து நவீனத்திற்கு மாறத்தொடங்கியது. ஜன்னல்களும் கட்டிடத்தின்  வெளிச்சுவரில் மேலிருந்து கீழாக அலங்கரித்துக்கொண்டு வரத்தொடங்கின. எமது பல்கணிக்கு ஜன்னல்கள் வந்த பொழுது நாங்கள் ஒவ்வொரு திசையில் எமது இலக்கற்ற பயணத்தை ஆரம்பித்தோம்.

அகதியான கதை :

ஒவ்வொருநாளும் நிலா கொடுத்த மூளைச்சலவை சத்தியாவையும் ஆட்டப்பார்த்தது. அவளின் வாதமானது, புறாக்கள் இருந்த வீட்டில் தாங்கள் குடிவந்ததினால்தான் இவ்வளவு தொல்லைகளும் சகுனப்பிழைகளும் வந்தன என்றும் இந்த வீடே இராசியில்லாத வீடு என்பதாக அமைந்தது. நிலாவின் சொல் தட்டியறியாத சத்தியா இறுதியில் நிலாவின் சொல்லுக்கு பணிய வேண்டியிருந்தது. அவர்கள் கையிருப்பில் இருந்த தொகையுடன் வங்கியில் வீட்டுக்கடன் எடுத்து பாரிஸ் பட்டணத்தில் இருந்து 143 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த ஒர்லியன் (Orléan)  நகரில், 120 சதுர மீற்றர் பரப்பளவில் பரந்த வளவுடனும் 5 அறைகளுடனும் கூடிய தனி வீட்டிற்கு(Villa) குடி வந்து மாதங்கள் ஐந்தைத் தொலைத்து இருந்தனர்.

இந்த ஒர்லியன் நகரின் வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தோமானால் ஏறத்தாழ எமது சோகக்கதைகளை ஒத்ததாகவே இருக்கும். போரும் அதன் விளைச்சலும் இந்த நகரத்தை விட்டு வைக்கவில்லை. இந்த நகரில் புதிய கட்டிடங்களை காண்பது அரிது. 20கள் அல்லது 30 களின் கட்டிடக்கலையையே இங்கு காண முடியும். இரண்டாவது உலகப்போரில் இந்த நகரம் பலமுறை தாக்கப்பட்டது. பல கட்டிடங்களும் மக்களும் வகைதொகையின்றி ஜெர்மன் நாஸிகளால் வேட்டையாடப்பட்டதாக ஒரு கதையுண்டு. அத்துடன் வன்னிப்பெருநிலம் எப்படி சரத்  பொன்சேகாவின் தலைமையிலான படையணிகளால் மீட்கப்பட்டதோ அவ்வாறே இந்த ஒர்லியன் நகரை நாஸிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்த பெருமை ஜெனரல் பத்தோன்(général Patton) தலைமையிலான படையணியையே சார்ந்ததாக வரலாற்றுக்குறிப்பேடுகள் சொல்கின்றன.

சத்தியா நிலா பிள்ளைகளுக்குப் புதிய இடம்,மனிதர்கள் என்று அவர்கள் அந்த நகரத்துடன் ஒட்டுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். பிள்ளைகளுக்கு ஓரளவு நண்பர்கள் சேரத்தொடங்கினார்கள். ஒர்லியன் நகர் கிராமத்து பாணியில் அமைந்து இரவு எட்டு மணியுடன் அடங்கியதுடன் அல்லாது அதிக அமைதியை கொடுத்தது சத்தியாவிற்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

ஒருநாள் அதிகாலைப்பொழுதொன்றில் வீட்டின் முன்பக்கத்தில் நின்றிருந்த பூக்கண்டுகளுக்குத் தண்ணீர் விடுவதற்கு வெளியே வந்த நிலாவின் வாய் தன்னையறியாது,

“இஞ்சரப்பா ……………… இங்கை ஒருக்கால் வாங்கோப்பா ” என்று ஆச்சரியத்தில் சத்தியாவை அழைத்தது. என்னவோ ஏதோவென்று வாயிலுக்கு ஓடிவந்த சத்தியாவின் கண்கள் வெளியே பிதுங்கின. அங்கே வீட்டு கேற்ரடியில் மரகதப்பச்சை நிறத்தில் இருந்த நான், எனது தலையை ஒருபக்கத்தில் சாய்த்தவாறே குறுகுறுத்துக்கொண்டேயிருந்தேன்.

கோமகன்-பிரான்ஸ் 

 

 

http://www.naduweb.net/?p=8621

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கோமகன் எண்டுறவர் யாழ்களத்திலை முந்தி இருந்தவரோ??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/17/2018 at 11:05 PM, குமாரசாமி said:

இந்த கோமகன் எண்டுறவர் யாழ்களத்திலை முந்தி இருந்தவரோ??? 

ஆமாம். கதையைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு புறாவின் பார்வையில் அசத்தலாக எழுதியுள்ளார். புறாக்கள் பெரும்பாலும் தேவாலயங்கள்  ஆளரவமற்ற கட்டடங்களில்தான் வாழ்ந்து வரும். மக்கள் போருக்கு முகம் குடுத்த அன்றைய காலங்களில் தமது வீடுகளுக்கு அருகிலேயே புறாக்கள் வந்திருந்து பல்கிப் பெருகுவதற்கு ஏதுவாக சிறிய கற் கட்டிடங்களை அமைத்திருப்பார்கள். அது அவர்களது உணவுத் தேவைகளையும் தீர்த்து வைத்தது.

Image associée Résultat de recherche d'images pour "pigeon tower"

இவை பல வடிவங்களில் இருக்கும். பாரிஸில் இவற்றைக் காண்பது அரிது. ஆனால் கிராமங்களில் இன்றும் அவற்றை செப்பனிட்டு பராமரித்து வருகின்றார்கள்.

இரு வருடங்களுக்கு முன்பு எனது நண்பரின் விட்டு பால்கனியிலும் வெளியே இருந்த பூந்தொட்டியிலும் ஒரு புறா வந்திருந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து சென்றது......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமாக இருக்கிறது கதை கோமகன்

On 11/17/2018 at 11:05 PM, குமாரசாமி said:

இந்த கோமகன் எண்டுறவர் யாழ்களத்திலை முந்தி இருந்தவரோ??? 

உங்கடை ஆட்கள் எல்லாம் சேர்ந்து கலைத்த கோதான்

Posted
On 11/25/2018 at 10:19 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வித்தியாசமாக இருக்கிறது கதை கோமகன்

உங்கடை ஆட்கள் எல்லாம் சேர்ந்து கலைத்த கோதான்

ஆரும் அவரை கலைக்கேல்ல.. அவர் பார்த்த வேலையால தொடர்ந்து இங்க முகம் காட்ட முடியல.. அவருக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்ததே இக்களம் என்பதை அவர் மறந்தது தான் எல்லாவற்றிற்கும காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/25/2018 at 3:19 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வித்தியாசமாக இருக்கிறது கதை கோமகன்

உங்கடை ஆட்கள் எல்லாம் சேர்ந்து கலைத்த கோதான்

தாயே! கோமகனை கலைத்ததிற்கான ஆதாரம் ஏதாவது எங்காவது இருக்கின்றதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/17/2018 at 9:39 PM, கிருபன் said:

நிலாவின் சொல் தட்டியறியாத சத்தியா இறுதியில் நிலாவின் சொல்லுக்கு பணிய வேண்டியிருந்தது

இதின்ர அர்த்தம் என்ன.. வசனம் சுயமுரணாக உள்ளதே.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இல்லை.. எல்லாத்தையும் சொல்லனும் என்ற அவசரத்தில் சீரான.. கதையோட்டத்தில் கோட்டை விட்டுவிட்டார்.. இந்தக் கோமகன்.?

அதுஇருக்க.. இவரை யாரும் யாழில் இருந்து விரட்டி அடிக்கவில்லை. ஒரு பொதுத்தளத்தில் பக்குவமில்லாமல்.. நடந்து கொண்டு விலக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். ஏன் எம்மவர்கள் உண்மையைப் பேசி.. தமது தவறுகளை ஒத்துக்கொண்டு.. திருத்தி.. திருந்தி வாழ மாட்டன் என்று அடம்பிடிக்கிறார்கள். வீண்.. வீராப்பு. ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/3/2018 at 2:45 PM, nedukkalapoovan said:

இதின்ர அர்த்தம் என்ன.. வசனம் சுயமுரணாக உள்ளதே.

கதை சொன்ன விதம் சுவாரசியமாக இல்லை.. எல்லாத்தையும் சொல்லனும் என்ற அவசரத்தில் சீரான.. கதையோட்டத்தில் கோட்டை விட்டுவிட்டார்.. இந்தக் கோமகன்.?

அதுஇருக்க.. இவரை யாரும் யாழில் இருந்து விரட்டி அடிக்கவில்லை. ஒரு பொதுத்தளத்தில் பக்குவமில்லாமல்.. நடந்து கொண்டு விலக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். ஏன் எம்மவர்கள் உண்மையைப் பேசி.. தமது தவறுகளை ஒத்துக்கொண்டு.. திருத்தி.. திருந்தி வாழ மாட்டன் என்று அடம்பிடிக்கிறார்கள். வீண்.. வீராப்பு. ?

தவறு செய்து மீண்டும் தவறு செய்து பத்துத் தரம் மன்னிப்புக் கேட்டு...... மீண்டும் அதே தவறைச் செய்து பெண்டில் பிள்ளைகளை இழுத்து, பெண்களை கேவலமாகக் கதைத்து, சூடு சுரணை இல்லாமல் மீண்டும் தூசணம் கதைத்து ...... மன்னிப்புக் கேட்டால்  அவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்றால் அப்பிடியான இடத்தில் கோமகன் தவறே செய்யவில்லை என்றுதான் நான் கூறுவேன். அது கோமகன் எனக்குத் தெரிந்தவர் என்பதற்காக அல்ல. மனச்சாட் சி உள்ள யாரும் அதைத்தான் சொல்வார்கள்.

On 12/3/2018 at 1:49 AM, குமாரசாமி said:

தாயே! கோமகனை கலைத்ததிற்கான ஆதாரம் ஏதாவது எங்காவது இருக்கின்றதா? 

ஆதாரத்தை யாருமே காட்டிட முடியாது என்ற துணிவில் கேட்கிறீர்கள்.உங்கள் மனத்தைக் கேளுங்கள் கூறும்.

On 11/27/2018 at 1:53 AM, அபராஜிதன் said:

ஆரும் அவரை கலைக்கேல்ல.. அவர் பார்த்த வேலையால தொடர்ந்து இங்க முகம் காட்ட முடியல.. அவருக்கு ஒரு அறிமுகத்தை கொடுத்ததே இக்களம் என்பதை அவர் மறந்தது தான் எல்லாவற்றிற்கும காரணம்

நீங்களும் ஒரு சாதாரண மனிதர் தானே. வேறு எப்படி உங்களால் எழுத முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/19/2018 at 7:52 AM, கிருபன் said:

ஆமாம். கதையைப் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லுங்கோ.

நீங்கள் கு சா வை கேட்டாலும் எனக்கு விழங்கிய வரைக்கும் நாசிகளிடம் இருந்து பிரான்ஸை மீட்டதையும் புலிகளிடம் இருந்து வன்னியை மீட்டதையும் ஒரே தராசில் வைத்திருக்கிறார.சரி பிழைக்கு அப்பால்.

Posted
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தவறு செய்து மீண்டும் தவறு செய்து பத்துத் தரம் மன்னிப்புக் கேட்டு...... மீண்டும் அதே தவறைச் செய்து பெண்டில் பிள்ளைகளை இழுத்து, பெண்களை கேவலமாகக் கதைத்து, சூடு சுரணை இல்லாமல் மீண்டும் தூசணம் கதைத்து ...... மன்னிப்புக் கேட்டால்  அவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்றால் அப்பிடியான இடத்தில் கோமகன் தவறே செய்யவில்லை என்றுதான் நான் கூறுவேன். அது கோமகன் எனக்குத் தெரிந்தவர் என்பதற்காக அல்ல. மனச்சாட் சி உள்ள யாரும் அதைத்தான் சொல்வார்கள்.

ஆதாரத்தை யாருமே காட்டிட முடியாது என்ற துணிவில் கேட்கிறீர்கள்.உங்கள் மனத்தைக் கேளுங்கள் கூறும்.

நீங்களும் ஒரு சாதாரண மனிதர் தானே. வேறு எப்படி உங்களால் எழுத முடியும்.

அக்கா நான் சாதாரண மனிதன் தான் எங்கேயும் என்னை ஒரு இலக்கியவாதி, கதாசிரியர் சகலகலாவல்ல்வன் என நிறுவ முயற்சிக்காத மனிதன், ஆனால் என் நண்பன் தவறு செய்தாலும் நீ செய்தது தவறு என அவனுக்கு சொல்லி அவன் பக்கமே நிற்பவன், நண்பனை நியாயபடுத்துவேன் அவன் செய்த தவறை அல்ல..நீங்கள் எப்பிடி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/8/2018 at 1:56 AM, அபராஜிதன் said:

அக்கா நான் சாதாரண மனிதன் தான் எங்கேயும் என்னை ஒரு இலக்கியவாதி, கதாசிரியர் சகலகலாவல்ல்வன் என நிறுவ முயற்சிக்காத மனிதன், ஆனால் என் நண்பன் தவறு செய்தாலும் நீ செய்தது தவறு என அவனுக்கு சொல்லி அவன் பக்கமே நிற்பவன், நண்பனை நியாயபடுத்துவேன் அவன் செய்த தவறை அல்ல..நீங்கள் எப்பிடி?

நான் உங்களை சாதாரண மனிதன் என்று குறிப்பிட்டதன் காரணம் வேறு. அதற்கும் இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் ஒரு விடயத்தைத் தீர அலச முடியாதவர். சூதுவாது தெரியாதவர். எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவர். இங்குள்ள சிலர் தொடர்ந்தும் விலாங்குமீனாய் இருப்பதை நீங்கள் உணரவே போவதில்லை. உங்களுக்கு எப்படிச் சொன்னாலும் புரியாது ஏனெனில் உங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/7/2018 at 9:08 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆதாரத்தை யாருமே காட்டிட முடியாது என்ற துணிவில் கேட்கிறீர்கள்.உங்கள் மனத்தைக் கேளுங்கள் கூறும்.

சாத்திரியின் மனப்பக்குவம் உங்கள் இருவரிடமுமில்லை. 

Posted
On 12/9/2018 at 10:47 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் உங்களை சாதாரண மனிதன் என்று குறிப்பிட்டதன் காரணம் வேறு. அதற்கும் இலக்கியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் ஒரு விடயத்தைத் தீர அலச முடியாதவர். சூதுவாது தெரியாதவர். எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புபவர். இங்குள்ள சிலர் தொடர்ந்தும் விலாங்குமீனாய் இருப்பதை நீங்கள் உணரவே போவதில்லை. உங்களுக்கு எப்படிச் சொன்னாலும் புரியாது ஏனெனில் உங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

நான் எழுதும் கருத்துகளின் மூலம் என் பற்றிய உங்களின் கணிப்புகளிற்கு நன்றி, கோமகன் நண்பியிடம் இதைவிட மேலாக எதை எதிர்பார்க்கமுடியும் 😄

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.