Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief

 
 
 
 
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்
 
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.
 
விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
 

My Sufi Ensemble and I will perform a benefit concert in Toronto on 24 Dec at Metro Toronto Convention Centre Part of the proceeds will go to for Gaja Cyclone relief in TN I will be joined by Javed Ali, Sivamani & Sana Moussa

Log on to https://t.co/dQwCs6TNu0 for details/tickets

— A.R.Rahman (@arrahman) November 20, 2018
https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/21092128/1214072/AR-Rahman-contribution-for-Gaja-Cyclone-Relief.vpf
  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

17 hours ago, ரதி said:

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

இவ்வளவு காலமும் உழைத்த  கோடிகள் எங்கே .......?????

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

எனக்கும் இதே கேள்வி தான்.உள்ளதில் கொடுத்தால் என்ன குறைந்தா போயிடுவார்.
இனி அடுத்த நிகழ்ச்சி நடந்து அந்தப்பணம் வந்து சேரும் வரை அந்த மக்கள் என்ன செய்வது?

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இனி வருவதை என்றாலும் கொடுப்பேன் என்கிறார் 

படங்களில் தமிழ் கத்திரிக்காய் என்று உசுப்பேத்தி 
படங்களை ஓடவைக்கும்  விஜய் போன்ற கோடி வாங்குவோர் 
சுவிஸ் பாங்கில் பதுக்கி கொண்டுதானே இருக்கிறார்கள் 

அவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்ளவோ மேல் 
எந்த அரசியல் நோக்கமும் இல்லை ... இனி வருவதை கொடுப்பேன் என்கிறார். 

பெரிய பணக்காரர்களின் பணம் எடுத்தவுடன் கொடுக்க முடியாது 
அவர்கள் எங்காவது முதலீடு செய்திருப்பார்கள் ..... எங்கே எப்படி 
செய்துள்ளார்கள் என்பதை பொறுத்தது அது.

விஜய் வேண்டுமானால் அடுத்த படத்தில் வரும் பணத்தை 
பாதிக்க பட்ட மக்களுக்கு கொடுப்பேன் என்று சொல்லலாமே? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

விஜய் வேண்டுமானால் அடுத்த படத்தில் வரும் பணத்தை 
பாதிக்க பட்ட மக்களுக்கு கொடுப்பேன் என்று சொல்லலாமே? 

தற்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார் என்று செய்திகள் சொல்லுகின்றன ஆனால் உன்மையென்பது தெரியாது 

 

அதுசரி இந்த நிகழ்ச்சி கனடாவில் எந்த மாநிலத்தில் நடக்க இருக்கிறதாம்:35_thinking:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோ, ரொரன்டோவில் நடைபெற இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

ஒன்ராறியோ, ரொரன்டோவில் நடைபெற இருக்கிறது.

ஈழத்தமிழரிடம் ஒரு  நல்ல  பழக்கமுண்டு

இவ்வாறு  எவர்  சொன்னாலும் கொஞ்சம்   அதிக  கவனமெடுப்பார்கள்

அதை  இவர் பிடித்துள்ளார் போலுள்ளது

பணம்  கொடுக்கணும்  என்றால்

இவரும் இந்தியாவில் முதல் தர  கோடீசுவரர் தான் தற்பொழுது..

அதுவும்   ஈழத்தவிரிடமிருந்து பெற்று

தமிழகத்துக்கு......????:(

2 hours ago, விசுகு said:

ஈழத்தமிழரிடம் ஒரு  நல்ல  பழக்கமுண்டு

இவ்வாறு  எவர்  சொன்னாலும் கொஞ்சம்   அதிக  கவனமெடுப்பார்கள்

அதை  இவர் பிடித்துள்ளார் போலுள்ளது

பணம்  கொடுக்கணும்  என்றால்

இவரும் இந்தியாவில் முதல் தர  கோடீசுவரர் தான் தற்பொழுது..

அதுவும்   ஈழத்தவிரிடமிருந்து பெற்று

தமிழகத்துக்கு......????:(

இங்கு ரஹுமானின் இசை நிகழ்ச்சிக்கு ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களை விட இந்தியாவில் இருந்து இங்கு குடியேறியிருக்கும் இந்தியர்கள் தான் அதிகமாக செல்வர். அவருக்கென்று ஹிந்தி பாடல் ரசிகர்கள் பல இலட்சம் இங்குண்டு.

அத்துடன் இந்த நிகழ்ச்சி சினிமா பாட்டு நிகழ்சி அல்ல. இஸ்லாமிய மதம் / இஸ்லாமிய ஆன்மீக சிந்தனை தொடர்பான ஒரு நிகழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.