Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்!

லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் நாளை உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது.

நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தத் திரைப்படம், 3D மற்றும் 2D தொழில்நுட்பத்தில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அக்ஷய் குமார், எமி ஜக்ஷன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும், நிரவ் ஷா ஒளிப்பதிவையும், என்டனி படத்தொகுப்பையும், ரசுல் பூக்குட்டி ஒலியமைப்பையும் கையாண்டுள்ள இந்தத் திரைப்படமே, இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் மிகப் பிரம்மாண்டப் படைப்பாகவும் கருதப்படுகின்றது.

அதேநேரம், இந்தத் திரைப்படம்தான் உலகில் முதன்முறையாக நேரடி 4D ஒலியமைப்பில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாகவும் வரலாறு படைக்கவுள்ளது.

இவ்வாறான பல்வேறு பிரம்மாண்டத்துடன், ஹாலிவுட் சினிமா தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, 2.O. திரைப்படம் இரண்டு வருடங்கள் கடும் உழைப்பிற்கு பின்னர் நாளை உலகலவில் வெளியாகவுள்ளது.

 

http://athavannews.com/இரசிகர்களை-அதிசயிக்க-வை-2/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ரசிகர்களே பால்குடங்கள் எல்லாம் தயாரா?

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னது மொபைல் போன் பறந்து போய் கழுகாய் மாறுதாம்  சுஜாதா இல்லாத நடைமுறைக்கு சாத்தியமில்லாத கதை போல் இருக்கு கிட்டதட்ட அம்புலிமாம கதை ரேஞ்சில் ஓடும் போல் இருக்கு லைக்காவை இந்தபடத்துடன் சங்கர் ஏறகட்ட வைத்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் என்ன கொஞ்ச நாளைக்கு இவையளின் அலப்பறை தாங்க ஏலாது வசூல் சாதனை என்று வாய்கிழிய கத்தி விட்டு கடைசியில் நட்ட ஈடு கேட்காமல் இருந்தால் காணும் . மாறன் குடும்பத்துடனும் கொள்ளுபாடு எனவே கட்டாயம் தமிழ் ராக்கர்ஸ் hd தரத்தில் ரிலிஸ் செய்வான் .

  • கருத்துக்கள உறவுகள்

2.0 படம் வெற்றிகரமாக ஓட வேண்டி மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

Image

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெற்றிகரமாக ஓட வேண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர். 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும்கிறது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு 2.0 திரைப்படத்தை பார்க்கும்பொழுது ரசிகர்களுக்கு ஏற்படும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ள நிலையில் அனைவரும் திரை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த திரைப்படம் வெற்றிக்கரமாக ஓட வேண்டி, ரஜினிகாந்த் ரசிகர்கள் சிலர் திருப்பரங்குன்றம் வெயிலுகாத்த அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.. மேலும், மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சிணம் செய்தும் வழிபாடு நடத்தினர். 

http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu-cinema/28/11/2018/fans-prayed-success-20-different-way

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ரசிகர்களே பால்குடங்கள் எல்லாம் தயாரா?

Bildergebnis für H- vollmilch

பால் குடம்  கிடைக்கவில்லை. பால் பக்கற்  ரெடியாய் இருக்கு தலைவா.... ? ?
நாங்கள்,  ஒரு பெட்டி பால் ஊத்தினால்......  100 பெட்டி  பால் ஊத்தினதுக்கு  சமன். ஆங்.....:grin:  ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பால் குடம்  கிடைக்கவில்லை. பால் பக்கற்  ரெடியாய் இருக்கு தலைவா.... ? ?
நாங்கள்,  ஒரு பெட்டி பால் ஊத்தினால்......  100 பெட்டி  பால் ஊத்தினதுக்கு  சமன். ஆங்.....:grin:  

அட நான் பாலோடை நிற்பாட்டுவம் என்று பார்த்தா மண்சோறு சாப்பிடுறாங்களாமே?

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள்  மண் சோறு தின்பதுக்கு பதிலா "மலம்" சோறு தின்னலாம் ...

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

அட நான் பாலோடை நிற்பாட்டுவம் என்று பார்த்தா மண்சோறு சாப்பிடுறாங்களாமே?

 

14 hours ago, Sasi_varnam said:

உவங்கள்  மண் சோறு தின்பதுக்கு பதிலா "மலம்" சோறு தின்னலாம் ...

Image may contain: 2 people, text

உண்மையாக இருந்தால்.... நாட்டுக்கு நல்லது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒன்லைனில் மினக்கெட்டு பார்த்து நேரத்தை வீனாக்கியதுதுதான் மிச்சம் ஏகபட்ட பூ சுத்தல் ஓசோன் படலம் கதிர் வீச்சால் பாதிக்கபடுதாம் செத்தவர் வந்து பழி வாங்குவாராம் கடைசிவரை செல்போன் எப்படி பறக்குது என்று சொல்லவேயில்லை ஒருவேளை தியேட்டரில் சொல்கிறார்களோ தெரியலை . உள்ளுக்குள் ஈழதமிழனின் தயாரிப்பு வெற்றி பெறனும் எனும் நப்பாசை இருந்தாலும் அல்லிராஜா செமத்தியா ஏமாற்றபட்டுள்ளார் அது சங்கரின் ராசி அப்படி குஞ்சுமேன் எந்த கோவிலில் உண்டக்கட்டி சாப்பிடுறாரோ தெரியலை அமெரிக்காவில் இருந்து வந்து ஜீன்ஸ் படம் எடுத்தவர்களையும் தேடனும் ?

  • கருத்துக்கள உறவுகள்

"ரஜினியின் 2.0 திரைப்பட வசூல் ரூ.400 கோடி"

 
ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல்படத்தின் காப்புரிமை LYCA

ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்தப் படத்ததைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சுமார் 550 - 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதியன்று வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இரு பரிமாணத்திலும் முப்பரிமாணத்திலும் இந்தப் படம் வெளியானது.

அமெரிக்காவில் மட்டும் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 850 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. மலேசியா, பிரிட்டன், வளைகுடா நாடுகளிலும் இந்தப் படம் வழக்கமாக தமிழ் படம் வெளியாகும் திரையரங்குகளைப்போல இரு மடங்கு திரையரங்குகளில் வெளியானது.

 

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1080க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 480 திரையரங்குகளில் 3-டி தொழில்நுட்பம் உள்ளது. இந்தத் திரையரங்குகள் அனைத்துமே 3 டி முறையில்தான் 2.0 திரைப்படத்தை வெளியிட்டன.

இந்தப் படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், உலகம் முழுவதுமாக நான்கு நாட்கள் வசூல் சுமார் 400 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த வசூலில் பெரும்பகுதி, முப்பரிமாணத்தில் வெளியான திரையரங்குகளில் இருந்தே வந்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் குழும பொது மேலாளரான நிஷாந்தன் நிருதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"முப்பரிமாணத்தில்தான் அதிக ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்பதால் இந்தப் படத்தை இரு பரிமாணத்தில் வெளியிட்ட பல திரையரங்குகள் தற்போது முப்பரிமாணத்திற்கு மாற விரும்புகின்றன. அதற்குப் பணம் செலவாகும் என்றாலும்கூட, இப்படி மாற்றிய பிறகும் படம் ஓடும், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை திரையரங்க உரிமையாளர்களுக்கு வந்திருக்கிறது" என்கிறார் நிஷாந்தன் நிருதன்.

ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல்படத்தின் காப்புரிமை LYCA

எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு வசூல் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

முத்து திரைப்படத்திற்குப் பிறகு, ரஜினியின் படங்களுக்கு சீனாவிலும் ஜப்பானிலும் சந்தை உள்ள நிலையில் இந்த இரு நாடுகளிலும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. சீனாவில் படத்திற்கான தணிக்கை முடியவே மூன்று மாதங்களாகும். அதற்குப் பிறகே அங்கு படத்தை எப்போது வெளியிட முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்கிறது தயாரிப்புத் தரப்பு.

அதேபோல, ஜப்பானில் ரஜினிக்கென ரசிகர் வட்டாரம் உள்ள நிலையில், ப்ரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அதன் பிறகு ரிலீஸ் தேதி முடிவுசெய்யப்படுமெனவும் தயாரிப்புத் தரப்பு தெரிவிக்கிறது.

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவில் குறிப்பிடத்தக்க அளவு, அதாவது சுமார் 200-250 கோடி ரூபாய்வரை தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெஷல் எஃபக்ஸ் பணிகளுக்காகவே செலவழிக்கப்பட்டதாக பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-46432287

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

ரஜினியின் 2.0 திரைப்பட வசூல் ரூ.400 கோடி

ஓடாத படத்தை வீம்புக்கு தியேட்டரில் 100 நாள் ஓடவைத்த ரஜனி படங்களும் உண்டு .

நட்சத்திர கோட்டலில் பட வெற்றி விழா கொண்டாடி விட்டு படம் தோல்வி படம் என்று புறங்கையால் துடைத்து அழுதவர்கள் கதையும் தெரியும் .

படம் வெளிவந்து அட்டர் பிளாப் என்று பெயர் வாங்கி ஒரு வாரம் முடிந்தபின் ஹவுஸ் புல்லாய் ஓடின படம்களும் உண்டு .

நான்கு நாளில் 400 கோடி எனும் அறிக்கை கடைசியில் எப்படி வருது என்று பார்ப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நான்கு நாளில் 400 கோடி எனும் அறிக்கை கடைசியில் எப்படி வருது என்று பார்ப்பம்

இன்னும் 200 கோடி வந்தால்த் தான் செலவு செய்த பணம் வரும்.அதன் பின் தான் லாபம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தியேட்டரில் பார்த்தேன்...படம் டப்பா ...அக்சய் குமாருக்காய் படம் பார்க்கவே போனது...அவரது நடிப்பு வீண் போகவில்லை.மேக்கப்,வயோதிபக் கதாபாத்திரம் அப்படியே பொருந்துகிறது.ரஜனியினதும்,எமியினதும் மேக்கப் அசிங்கம்...இவ்வளது காசு கொடுத்து படம் எடுத்தவர்கள் ஒழுங்கான மேக்கப் போட வேண்டாமா?

சுஜாதா இப்ப இருந்திருந்தால் கண்ணீர் விட்டு அழுது இருப்பார்...இந்தப் படம் கிருபனை போன்ற விஞ்ஞான வாலாக்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்...நம்பினால் நம்புங்கள் பகல் காட்சிக்கு போனது..எங்கள் இருவருக்காக மட்டும் படம் போனது ?

சங்கர் தான் புரடியூஸ் பண்ணுவது என்டால் லோ பட்ஜெட் படம் எடுப்பார்...அடுத்தவர் காசு என்டால் தண்ணீர் மாதிரி செலவழிப்பாராம்...பாவம் சுபாஷ்கரன் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

எங்கள் இருவருக்காக மட்டும் படம் போனது ?

உந்த இருவரிலை மற்ற ஆள் ஆராய் இருக்கும்???   confused0006.gif
ஒரு வேளை அவராய் இருக்குமோ? rolleye00171.gif

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2

திசெம்பர் 11, 2018

ஜனகராஜ் குரலில் மிமிக்ரி செய்து, நடிகர் மயில்சாமி வெளியிட்ட பிரமாதமான காமெடி ட்ராக் ஒன்று உண்டு. இனிப்புக் கடைக்கு போகும் ஜனகராஜ், கடைக்காரரிடம் லட்டு ஒரு கிலோ போடு, ஜாங்கிரி ஒரு கிலோ போடு, என்று ஒவ்வொரு இனிப்பிலும் ஒரு கிலோ போடச் சொல்வார். கடைக்காரரும் மகிழ்ச்சியோடு போடுவார். கடைசியில், “கலக்கு” என்பார் ஜனகராஜ். “சார்…” என்று புரியாமல் விழிப்பார் கடைக்காரர். மீண்டும் “கலக்கு…” என்பார் ஜனகராஜ். கடைக்காரரும் புரியாமல் கலக்குவார். “அதுல இருந்து ஒரு 100 கிராம் போடு,” என்பார் ஜனகராஜ்.

சங்கரின் 2.0 படமும் அதுபோலத்தான் இருக்கிறது. கோஸ்ட் பஸ்டர்ஸ், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், டெர்மினேட்டர், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், எக்ஸ்பெண்டபில்ஸ், அவென்ஜர்ஸ், இரும்பு மனிதன் (Iron Man), எறும்பு மனிதன் (Ant Man), விஞ்ஞானப் புனைவிற்கு ஐசக் அசிமோவின் பெயர் உதிர்ப்பு, அஞ்ஞானத்துக்கு “aura” என்ற சொல் உதிர்ப்பு, திருக்கழுக்குன்றத்து கழுகு, என்று ஏகப்பட்ட விஷயங்களை உருவி, ஒரு கலக்கு கலக்கி, அவற்றிலிருந்து ஒரு 100 கிராமை தமிழ் சினிமா ரசிகர்களின் தலையில் கொட்டியிருக்கிறார்கள்.

மயில்சாமியின் காமெடி ட்ராக்கை இன்றைக்கு கேட்டாலும் ரசிக்க முடியும், சிரிக்க முடியும். இந்த “திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு” படத்தை பார்த்த பிறகும் சிரிப்பு வருகிறது. ஆனால், அச்சிரிப்பு பரிதாபமான ஒரு படத்தை பார்த்த சலிப்பை உதறுவதற்கான சிரிப்பாகவே இருக்கிறது.

படத்தின் கதை, வில்லனின் ஃப்ளாஷ் பேக் மட்டுமே. கதாநாயகனாக வரும் ரோபோ ஒரு கார்ட்டூன் காரக்டர் என்ற அளவிலேயே இருக்கிறது (கார்ட்டூன்களை திரைப்படமாக்கிய மேலே குறித்துள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் கார்ட்டூன் காரக்டர்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது உயிர்ப்பை ஊட்டியிருப்பார்கள் என்பதோடு இதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்). விஞ்ஞானியாக வரும் ரஜினியும் கதாநாயக பாத்திரமாக இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதல் காட்சியில் தோன்றி கடைசி காட்சியில் மீண்டும் வரும் “விஞ்ஞானி முருகன்” எம் ஜி ஆர் கதாபாத்திரம் போல தொட்டுக்க ஊறுகாயாக அவ்வப்போது தலைகாட்டி, நீதி போதனை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்படும் நீதிபோதனைக்கு காரணமாக அமையும் வில்லனின் கதையோ வழக்கமான சங்கர் பாணிக் கதை. ஏதோ ஒரு ‘நியாயமான’ காரணத்திற்கான முயற்சியில் தோல்வியுற்ற அப்பாவியான கதாநாயகன், குறுக்கு வழியில் அதை நிறைவேற்ற போராடுவான், பழிவாங்குவான் (ஜென்டில்மேன், இந்தியன், அன்னியன்). இப்படத்தில் அது வில்லன் பாத்திரமாக ‘உல்டா’ செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவே. (ஒரே கதையை ‘உல்டா’ செய்து, மீண்டும் மீண்டும் எடுப்பதில் வல்லவரான பாலச்சந்தரின் வாரிசுகளாக மணிரத்தினம், கௌதம் மேனன், சங்கர் போன்றோரை சொல்லலாம்).

இப்படத்தின் வேடிக்கை என்னவென்றால், உல்டா செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாலோ என்னவோ, உண்மையிலேயே நல்லதொரு காரணத்திற்காக பாடுபட்டவனை சாகடித்ததோடு நிற்காமல், வில்லனாகவும், கொடூரமான தீய ஆவியாகவும் மாற்றியிருப்பதுதான். இந்தப் புள்ளியில்தான் விஞ்ஞானப் புனை கதை (science fiction), அஞ்ஞானத்தை ஊற்றாகக் கொண்ட அசட்டு மூட நம்பிக்கைக் கதையாக மாறுகிறது.  அது, படத்தின் மையகருவாக இருக்கும் “aura” என்ற மூடநம்பிக்கை.

மனிதர்களுக்கு “aura” என்பதாக ஒன்று இருக்கிறது என்பதெல்லாம் அசட்டு மூடநம்பிக்கை. தமிழில் இதை “ஒளிவட்டம்” என்பார்கள். சாமி படம் போட்ட காலண்டர்களில், சாமியின் தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒரு வட்டம் இருக்குமே அது. அல்லது சிவாஜி கணேசனை வைத்து ஏ. பி. நாகராஜன் எடுத்த சாமி படங்களில் இந்த ஒளிவட்டம் சாமிகளின் தலைக்குப் பின்னால் சக்கரம் போலச் சுழலுவதை பார்க்கலாம்.

இந்த ஒளிவட்டம் தெய்வங்களுக்கும் “தெய்வப் பிறவிகளுக்கும்” இருக்கும் என்பது மத நம்பிக்கை. சில “மேதைகளை” தலைக்குப் பின்னால் தகதகக்கும் ஒளிவட்டத்தோடு சித்தரிக்கும் “நாத்திக மத நம்பிக்கையாளர்களும்” உண்டு. இந்த ஒளிவட்டம் புனிதத்தன்மையைக் குறிப்பது.

மத நம்பிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாதவையாக கலைகள் இருந்த நவீன காலம்வரை கலைப் பொருட்களும் இவ்வாறு ஒளிவட்டம் பொருந்திய புனிதமான படைப்புகளாகவே பார்க்கப்பட்டுவந்தன. சாதாரண மக்கள் பயபக்தியுடன் அணுகவேண்டிய புனிதமான பொருட்களாக பார்க்கப்பட்டன. அது இலக்கியமாகட்டும், நாடகமாகட்டும், ஓவியமாகட்டும், சிற்பக்கலையாகட்டும் அனைத்து படைப்புகளும் ஒளிவட்டம் பொருந்திய புனிதமான பொருட்களாகவே பார்க்கப்பட்டன.

கலைப் பொருட்களுக்கு இருப்பதாக நம்பப்பட்ட இந்த புனிதத்தன்மையைக் கலைத்துவிட்டு தோன்றிய முதல் கலையே சினிமாதான். சினிமா பார்க்கும்போது நொறுக்குத்தீனி திங்கலாம், சிகரெட் பிடிக்க எழுந்து போகலாம், விசில் அடிக்கலாம், நாராசமான கமெண்ட் அடிக்கலாம், காதலர்கள் முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளலாம், திரையில் தோன்றும் நாயக – நாயகிகளை மனசுக்குள் காதலிக்கலாம், இன்னும் விரும்பிய எதையும் செய்யலாம். நூற்றாண்டுகளாக கலைப்படைப்புகளை பிரமிப்போடும் பயபக்தியோடு பார்க்கும் அனுபவத்தை, அதன் நுகர்வு நிலையிலேயே தகர்த்து நொறுக்கிவிட்டு உருவானது சினிமா. கலைகளுக்கு இருப்பதாகக் கருதப்பட்ட ஒளிவட்டத்தை – “aura”வைக் கலைத்தது சினிமா.

சினிமா எவ்வாறு ஒளிவட்டத்தை தகர்த்த கலை என்பதைப் பற்றி தத்துவ ஆசிரியராகவும், பண்பாட்டு விமர்சகராகவும் அறியப்பட்ட வால்டர் பெஞ்சமின் என்பார் எழுதிய The Work of Art in the Age of Mechanical Reproduction என்ற புகழ் பெற்ற கட்டுரை இது தொடர்பில் கட்டாயம் வாசிக்கவேண்டியது. தமிழில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மொழியாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.

அத்தகைய தன்மை பொருந்திய சினிமா என்ற கலைவடிவத்தில் “aura”-வைக் கருவாக கொண்டு ஒரு திரைப்படத்தை எடுத்தால், அந்த அபத்தத்தை என்னென்பது?

இந்த அபத்தம் போதாதென்று, ஒரு பேய் கதையை – ஒரு மீ-இயற்கைச் சக்திக் (super natural force) கதை என்றுகூட சொல்லமுடியாது – விஞ்ஞானப் புனை கதையின் முலாம் பூசி கொடுத்திருப்பது இன்னொரு அபத்தம். சரி அந்த பேய் என்னதான் செய்கிறது? சென்னையின் லட்சோப லட்சம் மக்களின் செல்ஃபோன்களைத் திருடுகிறது அல்லது பிடுங்கிக்கொள்கிறது அல்லது உருவிக்கொள்கிறது. செல்ஃபோன்களை உருவிக்கொள்வதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களையும் கூண்டோடு கொல்லப் பார்க்கிறது. ஆகையால்தான் கதாநாயக ரோபோவும், விஞ்ஞானி வசீகரனும் அதை முறியடிக்கிறார்கள். இறுதியில் விஞ்ஞானி வசீகரன் நீதிபோதனையும் செய்கிறார். ரசிகர்களின் போதைக்கு தீனியாக, ஜிகினாக் கலர்களில் ரோபோ டூயட்டுடன் படம் முடிகிறது.

ஆனால், துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பல படங்களில் இருந்து உருவி உல்டா செய்திருக்கும் காட்சிகளுக்கு வசீகரனும் அவரது ரோபோவும் தண்டனை ஏதாவது தருவார்களா? 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைந்தது 100 படங்களாவது எடுத்திருக்கலாம். அதில் ஒரு 10 நல்ல தமிழ் படங்களாவது தேறியிருக்கலாம். அந்த வாய்ப்புகளை கூண்டோடு கொன்ற பாவத்திற்கு என்ன கழுவாய்?

இவற்றை அசைபோட்டால் பேசாமல் படத்திற்கு “திருக்கழுங்குன்றத்துத் திருட்டுக் கழுகு” என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்திருந்தாலும், எவ்வளவு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாக பெருமை பேசிக்கொண்டாலும், ஊர் குருவி எவ்வளவு உயரப் பறந்தாலும், ஒருநாளும் பருந்தாகிவிடமுடியாது.

 

https://vinaiyaanathogai.wordpress.com/2018/12/11/திருக்கழுங்குன்றத்து-தி/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.