Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் என்னையும் நாசமாக்கியதால் அவரை விரட்டிவிட்டேன் : மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

slfp1.jpg

“நான் கடந்த 26 ஆம் திகதி எடுத்த தீர்மானமானது அன்றைய விட இன்றும் சரியானது.

ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.

இதேவைளை, ரணில் வடக்கு மக்களை ஏமாற்றினார். தொழிலாளிகளை ஏமாற்றினார்.

நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன்.

01.jpg

04.jpg

நாட்டின் நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்படுவதாக ஒருதரப்பு மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்

http://www.virakesari.lk/article/45747

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.

பேசாமல்.. மைத்திரி.. MeToo வில் முறையிடுவது அவருக்கும்.. நாட்டுக்கும் நல்லது.

ரணில் அவ்வளவு மோசமான ஆளா. அப்படி என்றால்.. சம் சும் மாவை கும்பல் அவருடன் ஒட்டி உறவாடினமே...???! ?

எதுஎப்படியோ.. தமிழ் இனப்படுகொலையில்.. இதுங்க எல்லாம்.. ஒன்றுக்கு மற்றது சளைத்தது அல்ல என்று.. போட்டி போட்டுக் கொலை செய்த கூட்டம். 

மகிந்தவின் ஆட்டமும்.. இப்படி ஒரு நாள்.. ஆடி அடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா நடக்குது இங்க...

ஓரின சேர்க்கையாளர் என்பதை சொல்லும், பட்டாம்  பூச்சி கூட்டம் என்றார் முதலில்... 

இப்ப தன்னையும் கெடுத்து விட்டாராம்....

இவர் இப்ப என்ன பிளானிலை  திரியிறார்? ?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என்னைச் சீரழித்தார் ரணில் - மைத்திரி.

வரவர இந்த நாட்டில ஆம்பிளைகளுக்கு பாதுகாப்பில்லாம போச்சுtw_tounge_xd:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பிழம்பு said:

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.

நாசமறுப்பு!!!!!!!!  ஒரு நல்லாட்சியின்ரை தலைவன் எண்டும் பாராமல் போட்டு சாத்தியிருக்கிறான்.......நாசமாய் போக.... :127_older_man:

 

 

கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே...:grin:

மைத்திரியும் MeToo என்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

வடக்கு மக்களை ஏமாற்றினார்.

எல்லாருக்கும் இப்பாேதுதான் வடக்கு மக்கள் மேல் கருணை பிறக்கிறது.  அதுசரி உப்பிடி பாெத்தாம் பாெதுவாய் சாென்னால் எப்பிடி? எந்த வகையில் ஏமாற்றினார் என்பதையும் விளக்கமாக சாெல்லுறது. சும்மா வடைக்காக நரி வேடம் பாேடக் கூடாது, பிரதமரை மாற்றவும் நாடாளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் உள்ள நீங்கள், அவர் ஏமாற்றுவதை  நாடாளுமன்றத்தில் தமிழ் தலைவர்களிடம் தெரிவித்திருக்கலாமே? சரி மகிந்த வடக்கு மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று சத்தியம் ஏதும் செய்து தந்திருக்கிறாரா உங்களிடம்? எப்பிடி எல்லாம் நடிக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.