Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பியர்கள்...   சிரித்த முகத்துடன், எமக்கு மிக மரியாதை தந்து உபசரிப்பார்கள் 
அவர்களுடன்... பழகுவது... ஒரு இனிமையான அனுபவம். ❤️
அவர்களின்... சமையல் குறிப்பிற்கு, நன்றி நாதமுனி.  👆

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாத் தான் இருக்கு.
ஆனால் நிறைய நேரமும் பொருளும் அநியாயமாகுது.
இணைப்புக்கு நன்றி நாதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறிImage result for ethiopian doro wat recipe

  • 1kg கோழியினை துண்டாக வெட்டி தேசிக்காய் புளி சாறில் ஊற வைக்கவும். (Marinate)
  • 500g வெங்காயம், வெள்ளைப்பூடு, இஞ்சி, துண்டுகளாக வெட்டி பிளெண்டரில் போட்டு பசையாக அரைத்துக் கொள்ளவும். 
  • அரைத்த பசையினை ஒரு பாத்திரத்தில் போட்டு மெதுவான வெப்பத்தில், ஒரு மணி நேரம் ஒரு , இறுகிய (இனிப்பான) பசையாக வரும் வரை அவிய விடுங்கள். 
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி, (கறியின் சுவை, மணத்தினை  மாத்தக்  கூடிய ஒலிவ் ஆயில் பாவிக்காதீர்கள்), இந்த பசையினை இட்டு, எமது கறித்தூளை, உங்களது உறைப்புக்கு அமைய போட்டு, மேலும் கொஞ்சம் வெள்ளைப்பூடு, இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும். பட்டர் ஒரு கரண்டி போடுங்கள் 
  • இந்த நேரத்தில் வெட்டிய, புளியில் ஊறும் கோழி துண்டுகளை சேர்த்து, மசாலா தூள் சேர்த்து,  40 நிமிசத்துக்கு அதே மெதுவான வெப்பத்தில் சமைக்கவும். 
  • சிறிது நேரத்தில் (20வது  நிமிடம் அளவில் ) அவித்த  முட்டைகளை கறியில் சேர்க்கவும்.
  • அடிபிடியாமல் இருக்க, தேவைப்படின் தண்ணீர் சிறிதளவு சேர்த்து, அவ்வப்போது பிரட்டவும். 
  • உங்களுக்கு பிடிக்குமாயின், பச்சை மிளகாய் வெட்டி கறிக்குள்  எறிந்து விடுங்கோ.
  • கொத்தமல்லி தளை  தூவவும்.
  • ரொட்டி, சப்பாத்தி, சோறுடன் சாப்பிடக் கூடிய அருமையான கறி தயார். 

Image result for ethiopian doro wat recipe

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எதியோப்பியர்கள்...   சிரித்த முகத்துடன், எமக்கு மிக மரியாதை தந்து உபசரிப்பார்கள் 
அவர்களுடன்... பழகுவது... ஒரு இனிமையான அனுபவம். ❤️
அவர்களின்... சமையல் குறிப்பிற்கு, நன்றி நாதமுனி.  👆

54 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு.
ஆனால் நிறைய நேரமும் பொருளும் அநியாயமாகுது.
இணைப்புக்கு நன்றி நாதம்.

ரெஸிபி போட்டிருக்கு....

நான் செய்து பார்த்தது..... அருமையாக ...இருந்தது... சொல்லி வேலை இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

வாவ்!!!!

செய்து பாக்கத்தானிருக்கு. எங்கடை ஊர் சமையல்களை மாதிரியே இருக்கு...தூள் அந்தமாதிரி அள்ளிப்போடீனம்....என்ன தூளெண்டு தெரியேல்லை? 
சாப்பாடு பரிமாறேக்கை ஒரு சட்டியிலை தண்ணி கொண்டு வந்து கை அலம்ப குடுக்கினம் பாருங்கோ...... அந்த பண்பாடு கலாச்சாரம் நெஞ்சை தொட்டுட்டுது.

அதோடை சாப்பாட்டை கையாலை சாப்பிடுற மாதிரி ஒரு சந்தோசம் முள்ளுக்கரண்டியாலை சாப்பிடேக்கை வராது பாருங்கோ.

அங்காலை ஒருத்தர் நேரம் கூடிப்போச்சுதெண்டு கடுப்பாகிறார்.:grin:

எங்கடை சாப்பாடுகள் என்ன கம்பேக்கர் ரேஞ்சிலை டக்கண்டு வந்து...டக்கெண்டு சாப்பிட்டு....டக்கண்டு வருத்தம் வந்து......டக்கெண்டு மேலை போற மாதிரியான சாப்பாடுகளோ எண்டு  தெரியாமல் கேக்கிறன்? ஆசிய ஆபிரிக்கன் அரேபியர்ரை சாப்பாடுகள் எல்லாம் சமைக்க நேரம் செல்லும். ஆனால் உடம்புக்கு விக்கனமே இருக்காது. அது எண்ணைச்சாப்பாடாக இருந்தாலும் சரி.....
இவங்கடை திடீர் சாப்பாடுகள் எல்லாத்தின்ரை பின் விளைவுகளும் திடீரெண்டுதான் இருக்கும் கண்டியளோ.:)

நாதமுனி! தாங்ஸ்பா..:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

எங்கண்ட மிளகாத் தூள் தான்...

காரணம்: எங்களுக்கு மிளகாய், மிளகாய்த்தூளை   அறிமுகப்படுத்திய அதே போர்த்துக்கேயர் தான் அங்கேயும் மிளகாய்த்தூளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நான் செய்து பார்த்தது..... அருமையாக ...இருந்தது... சொல்லி வேலை இல்லை.

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

இணைப்புக்கும் ரெசிப்பிக்கும் நன்றி நாதம். 12 நாட்கள் கொண்ட விடுமுறை வருகுது அப்ப செய்து பார்க்கத்தான் இருக்கு

1 hour ago, ஈழப்பிரியன் said:

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஆனால்

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இணைப்புக்கும் ரெசிப்பிக்கும் நன்றி நாதம். 12 நாட்கள் கொண்ட விடுமுறை வருகுது அப்ப செய்து பார்க்கத்தான் இருக்கு

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

4 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

அதுதான் தெரியுதே..... உங்க ஒருத்தர்... எத்தியோப்பியன்ஸ் அந்த மாதிரி.. சிரிப்பும்.... மரியாதையும்.... எண்டு சொல்லுறார்.

கறியை கொடுத்துட்டாங்கள்..போல தெரியுது....நல்லா ஆளை கொண்டெழுப்பி..... மனேஜரிடமும் இழுபறிப்பட்டு, டாக்குத்தர் கடதாசி அனுப்பி லீவு போடவேண்டியதா போட்டுது.

நிழலி மாதிரி லீவுக்க செய்து பார்கிறது தான் புத்தி...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க வேர்த்து விறுவிறுக்குது , சொல்லி வேல இல்ல.வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது செய்து பரிமாறத்தான் இருக்கு.......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

8 hours ago, நிழலி said:

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

8 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

4 hours ago, Nathamuni said:

அதுதான் தெரியுதே..... உங்க ஒருத்தர்... எத்தியோப்பியன்ஸ் அந்த மாதிரி.. சிரிப்பும்.... மரியாதையும்.... எண்டு சொல்லுறார்.

கறியை கொடுத்துட்டாங்கள்..போல தெரியுது....நல்லா ஆளை கொண்டெழுப்பி..... மனேஜரிடமும் இழுபறிப்பட்டு, டாக்குத்தர் கடதாசி அனுப்பி லீவு போடவேண்டியதா போட்டுது.

நிழலி மாதிரி லீவுக்க செய்து பார்கிறது தான் புத்தி...

அருமையான  கோழிக்கறி  அடன்ஸ் ஒன்லியாய் மாறப்போகுது....👙

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

Mark Wiens, சமையல் செயல் முறை மற்றும் உணவுகளை, அந்தந்த கலாசாரத்தின் தனித்துவத்தோடும் இரசனையுடனும் பகிர்வது, ஓர் சிறு அளவிலேனும் ஏனையோரின் கலாசாரத்தை பற்றி சகிப்பு தன்மையை வளர்க்க உதவுகிறது.  

DORO WAT சமையலுக்கு hard chicken (அதிலும் சேவல்) மிகவும் உகந்தது.  நேரமெடுத்து, ஊறி வேகவேண்டும் என்பதால்.

முழுவதுமாக இருப்பது இன்னும் கறியை சுவையூட்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்டிறைச்சியின், வலித்த பகுதிகளை, அதாவது shank மற்றும் பாயவை(trotters) சமைப்பதற்கும் இது உகந்த குறிப்பாகவே தென்படுகிறது.  

வெண்ணிற bowl இல் இருப்பது doro wat  ஆட்டிறைச்சி காறியா?

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அருமையான  கோழிக்கறி  அடன்ஸ் ஒன்லியாய் மாறப்போகுது....

நான் உள்ளுக்கை வரலாமோ அப்படி என்னதான் இருக்கு இந்த கோழிகறியில ஆ ஆ தெரியாமத்தான் கேட்கிறன் 

பெரிய வெங்காயம் தானே போட்டார்கள் இவர் ஏன் துள்ளிக்குதிக்கிறார்:):unsure::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

வெண்ணிற bowl இல் இருப்பது doro wat  ஆட்டிறைச்சி காறியா?

சிறிய துண்டுகளாக.... கோழி தான்.

இந்த முறையில் ஆட்டிறைச்சி கூட செய்து பார்க்கலாம்.

வித்தியாசமானது என்னவென்றால்.... வெங்காயத்துக்கு நடக்கும் அலுவல் தான்.... அதுதான் கறியை அந்த மாதிரி தூக்குது. மேலும் முட்டை  வேற சேருவது அருமை தான்.

எத்தியோப்பியா, ரோமர், கிரேக்க (யவனர்கள்), அரேபியர்  காலத்தைய spice கடல்வழிப் பாதையின் வழியில் இருந்ததால்.... நிச்சயமாக தமிழர் கறி  பாரம்பரியம் பரவி இருக்கும் என்பது என் கருத்து. 

https://www.google.co.uk/maps/place/Ethiopia/@12.4337526,51.5352282,5.49z/data=!4m5!3m4!1s0x1635d0cedd6cfd2b:0x7bf6a67f5348c55a!8m2!3d9.145!4d40.489673?hl=en

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் உள்ளுக்கை வரலாமோ அப்படி என்னதான் இருக்கு இந்த கோழிகறியில ஆ ஆ தெரியாமத்தான் கேட்கிறன் 

பெரிய வெங்காயம் தானே போட்டார்கள் இவர் ஏன் துள்ளிக்குதிக்கிறார்:):unsure::)

இதுக்கு தான் சொல்லுறது, காலா காலத்திலே  கலியாணத்தைக் கட்டிர வேண்டும் எண்டு..... சின்ன புள்ளையாவே இருக்கீங்களே முனிவர். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

சிறிய துண்டுகளாக.... கோழி தான்.

இந்த முறையில் ஆட்டிறைச்சி கூட செய்து பார்க்கலாம்.

வித்தியாசமானது என்னவென்றால்.... வெங்காயத்துக்கு நடக்கும் அலுவல் தான்.... அதுதான் கறியை அந்த மாதிரி தூக்குது. மேலும் முட்டை  வேற சேருவது அருமை தான்.

எத்தியோப்பியா, ரோமர், கிரேக்க (யவனர்கள்), அரேபியர்  காலத்தைய spice கடல்வழிப் பாதையின் வழியில் இருந்ததால்.... நிச்சயமாக தமிழர் கறி  பாரம்பரியம் பரவி இருக்கும் என்பது என் கருத்து. 

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

Edited by Kadancha
add info.

1 hour ago, Kadancha said:

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

நல்ல ஐடியா... நானும் மகனும் ஆட்டுக் குடல் கறி என்றால் அந்த மாதிரி வெட்டுவம். சமைக்க தான் நேரம் எடுக்கும், அதுவும் அதை கழுவி எடுக்க கனக்க நேரம் போகும். மாட்டுக் குடல் என்றால், கழுவி சுத்தப்படுத்தி பக்கற்றுக்குள் வைத்து இங்கு சில இடங்களில் விற்கின்றார்கள்.

என் நண்பன் ஒருவன் இங்கு Chef ஆக இருக்கின்றான். அவன் சொன்னது வெங்காயத்தை கொஞ்சம் இப்படி நல்லா அவித்து விட்டு அதையும் தயிரையும் போட்டு  slow cooking இல் சமைத்து எடுத்தாலும் நல்ல சுவையாக வருமாம். கடஞ்சா சொல்வது போன்று இவற்றுக்கு hard chicken தான் சரிவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியர்கள், தோலையும் சேர்த்து போடுவதால், சிக்கினுல் காத்தடிப்பது, கழுவ அதிக நேரம் எடுப்பதுடன், ஈஸ்ட் உட்பட பல பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

தோல் நாம் சேர்பதில்லையாதலால்..... மினக்கெட தேவையில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இதுக்கு தான் சொல்லுறது, காலா காலத்திலே  கலியாணத்தைக் கட்டிர வேண்டும் எண்டு..... சின்ன புள்ளையாவே இருக்கீங்களே முனிவர். :grin: 

ஹாஹா  அடுத்த வருசம் பார்க்கலாம் இந்த சங்கதிகளை 

5 hours ago, Kadancha said:

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

நாங்கள் மீன் குடல் கூட சமைத்து இருக்கிறோம் தற்போது அது அதிக விலைகள் கொடுத்து பெரிய ஹோட்டல்கள் வாங்கி செல்கின்றன தளப்பத்து மீன் குடல் அதனால் கிடைப்பது அரிதாக உள்ளது கடஞ்சா

3 hours ago, நிழலி said:

நல்ல ஐடியா... நானும் மகனும் ஆட்டுக் குடல் கறி என்றால் அந்த மாதிரி வெட்டுவம். சமைக்க தான் நேரம் எடுக்கும், அதுவும் அதை கழுவி எடுக்க கனக்க நேரம் போகும்

அண்மையில் ஆடு ஒன்றை வாங்கி வெட்டி மட்டக்களப்பில் உன்னிச்சை குளத்தில் குளியலை போட்டு குடலை வெளியாக்கி ஓடையில் இறங்கினோம் நாங்கள் வெளியாக்கிய குடலை மீன் கொண்டு போனது தெரியாமல் .

அவ்வளவு நேரம் எடுத்தது நிழலி அண்ணேய்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் மீன் குடல் கூட சமைத்து இருக்கிறோம் தற்போது அது அதிக விலைகள் கொடுத்து பெரிய ஹோட்டல்கள் வாங்கி செல்கின்றன தளப்பத்து மீன் குடல் அதனால் கிடைப்பது அரிதாக உள்ளது கடஞ்சா

இதை நான் அறிந்துளேன். ஆனால், ஒரு போதும் சுவைப்பதத்திற்கு வாயுப்புக்கள் கிடைக்கவில்லை.

பொதுவாக, பெரிய மீன்களின்  குடல், தனிப்பட்ட முறையில் சமைப்பதத்திற்கு உகந்தது.

ஆனாலும் , சிறிய மீன்களின் குடல் கூட சமைக்கலாம், ஆனால் சுவை தெரியாது.

ஹோட்டல்கள் எந்த விதத்தில் இந்த பெரிய மீன்களின் குடலை பாவிக்கிறார்கள்?

அல்லது, அவர்கள் பெரிய மீன்களை வாங்குவதால், அந்த குடல்கள் அரிதாக உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

சுவை வந்து கணவாய் பிரட்டல் , ஏன் இறைச்சி பிரட்டல் போலவே இருக்கும் சில பகுதிகள் வலுவாகவும் சில பகுதிகள் மென்மையாகவும் இருக்கும்  பெரிய மீனின் குடல்களையே பாவிக்கிறார்கள். சிங்களவர்கள் அதிகம் தற்போது மீன்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி வருவதால் அதிக கிராக்கியும் விலையும் அதிகம் அதனால் அந்த விலைக்காக வியாபாரிகள் அவர்களிடமே கொடுத்து காசாக்கிறார்கள் அந்த மீன்களையும் அதன்குடலையும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதைப்பற்றி எம்மவர்களின் எத்தனை பேருக்கு தெரியுமோ?

எம்மவர்களின் பலருக்கு கடல் வளத்தாய் பற்றி தெரியாது.

புலிகள், மீனவர்களை பற்றி கடுமையாக வலியுறுத்திய போதெல்லாம், அதில் பின்னுள்ள உண்மையான நோக்கத்தை புரியவும் இல்லை, அக்கறை இருந்ததும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

இதைப்பற்றி எம்மவர்களின் எத்தனை பேருக்கு தெரியுமோ?

கன பேருக்கு தெரியாது என நான் நினைக்கிறன் கடஞ்சா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.