Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவிரவாத புலம்பெயர் தமிழர்கள் என்று சுமந்திரன் யாரைச் சொல்கிறார்?

Featured Replies

புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்புறவுக் குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்திய சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியதையும் எடுத்துரைத்தார்.

பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு தாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் அரச கட்டமைப்புக்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

இதன்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள சம்பந்தன், புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்படமுடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை மக்களும் பிராந்திய, மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த சம்பந்தன், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு மற்றும்பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நாட்டினதும், மக்களினதும் நன்மை கருதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என கூறியுள்ளார்.

எனினும் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் தாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/111796

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் புலிகள் மேடைக்கு வரவும்  சிறிய எண்ணிக்கையில் தானாம் இருக்கிறீர்கள் 

5 hours ago, போல் said:

கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன் ஓர்டனுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் எவ்வளவு இலஞ்சம் பெற்றுக்கொண்டு இது போன்ற கூடங்களில் கலந்துகொள்வதில்லை? என்று அறிய ஆவல்.

ஜனநாய விரோதியான சம்பந்தன் புலிகளை தீவிரவாதிகள் என்று பயங்கரவாத முத்திரை குத்த உதவினார். இப்ப சம்பந்தனும் சுமந்திரனும் சேர்ந்து புலம்பெயர் தமிழர்களை பயங்கரவாதிகள் ஆக்க பாடுபடுகின்றனர்.

5 hours ago, போல் said:

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் தாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

 

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சும் என்ற சிங்களாபிமானிக்கு.. இவர் சொல்லவதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாவர்.

ஆனால் தேர்தல் நேரம் உண்டியல் குலுக்க மட்டும்.. வெளிநாட்டுக்கு கிளம்பிடுவாங்க. 😊

  • தொடங்கியவர்
19 hours ago, போல் said:

அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியதையும் எடுத்துரைத்தார். 

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைவில் நீதியை வலியுறுத்திய சர்வதேச அமைப்புகளின் குரல்களை அடக்கி, தமிழின படுகொலைகாரர்கள் காலத்தைக் கடத்த உதவிய எட்டப்பர்கள் கோஷ்டி தற்போது போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிமான்களின் பங்களிப்பு அவசியம் இல்லை என்ற கோணத்தில் அடுத்த எட்டப்ப வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் கோஷ்டி எண்ட பட்டம் முடிஞ்சுது....இப்ப தீவிரவாத புலம்பெயர் தமிழர் எண்ட  பட்டம் சூட்டுறார்.

இதெல்லாம் சிங்கள இனத்திற்கும்/அரசிற்கும் அரசுக்கும் சாதகமான ஒரு சொல்..... ஊர்ப்பாசையிலை சொல்லப்போனால் தூக்கி குடுக்கிறார்.

அன்று தொடக்கம்   நாய்த்தமிழன் தான்  தன் இனத்துக்கு எதிராக சிங்களவனுக்கு ஒவ்வொரு துரும்பு துரும்பாய் எடுத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறாங்கள்.

இனி வெளிநாடுகளிலை எங்கடை சனத்துக்கு சார்பாக ஊர்வலம் போராட்டங்கள் செய்தாலும் தீவிரவாத தமிழர் எண்ட பட்டம் நிச்சயம்.

  • தொடங்கியவர்

இரா. சம்பந்தன் - 'கடும்போக்கு புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம் செல்வாக்கு செலுத்தாது'

_105049132_a0a5d533-e78f-4408-ae6b-ab59bb4661aa.jpg

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, புதன்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையை இரா.சம்பந்தன் எடுத்துக்காட்டினார் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பிப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சம்பந்தன் புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

_105049131_tna-2.jpg

ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்ன் மற்றும் ஊடக பேச்சளார் எம்.ஏ.எசுமந்திரனை கொழும்பில் சந்தித்தார்.

மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்றபோது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த இரா.சம்பந்தன் ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தார்.

மேலும் "நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது," எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார். 

_105052283_d6795ee9-366e-4236-b61f-f1e6f1c4978a.jpg

மஹிந்த ராஜபக்ஷ

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பதிலளித்த சுமந்திரன் தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என தெரிவித்த அதேவேளை இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா.சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரனுக்குப் பின் இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன் நாங்கள் அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்க்கிறோம். மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தினையும் கலாசாரத்தினையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன் 2009 இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-46750427

  • கருத்துக்கள உறவுகள்

விசுவாசிகளுக்கு அணில் அள்ளிக்கொடுத்திட்டுது...இப்ப கரு காலாலை மிதித்து விழுத்திட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்....  அமெரிக்காவிற்கோ,  ஐரோப்பாவிற்கோ..... வந்தாலும்,
அவுஸ்திரேலியாவில்...... நடந்தது...  தான், மீண்டும் நடக்கும்.

2 hours ago, போல் said:

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் முடிவோடு புலம்பெயர் தமிழர்களின் கடும்போக்கும் முடிந்துவிட்டது. கடும்போக்கு என்பதன் பொருள் தமிழர்களுக்கான தனிநாடு என்பதுதே. அதற்கு மக்கள் எழுச்சியும் போராட்டமும் அவசியமானது. அதற்கான வலு தாயகத்தில் உள்ள மக்களிடமும் புலம்பெயர் மக்களிடமும் தற்போது இல்லை. ஆகக் குறைந்தது  போர்குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போரட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை என எதிலும் புலம்பெயர் மக்கள் ஈடுபடவில்லை. அதே நேரம் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பும் எந்தவொரு ஆக்கபுர்வமான போராட்டக் குரலையும் இந்த விடயத்தில் கொடுக்கவில்லை. இந் நிலையில் கடும்போக்கு என்பதற்கு எந்த பொருளும் எங்கும் இல்லை. சிங்களப் பேரினவாதம் எதை தர விரும்புகின்றதோ அதையே போராடிப் பெற்ற உரிமையாக ஆறுதல் படுவதே தற்போதைய அரசியல் முன்னெடுப்பு. எம்மை நாமே எதற்கு இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களால் ஏமாற்றவேணும் என்பது புரியவில்லை. 

On 1/4/2019 at 8:13 AM, போல் said:

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் தாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது

கடும்போக்குடைய (மகாநாயக்க தேரர்கள், ஐ.தே.க., சு.க., பொதுபல சேன, ............ உட்பட) சிங்கள இனவெறியும் பௌத்த மதவெறியும் பிடித்த பல்வேறு அமைப்புகளின் சிந்தனைகளுக்கு அமையவே 1948 முதல் சொறிலங்காவின் அரசுகள் நடந்து வந்துள்ளன.

இந்த கடும்போக்குடைய சிங்கள இனவெறியும் பௌத்த மதவெறியும் பிடித்த பல்வேறு அமைப்புகளின்  செயற்பாடுகள் தாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என்று சொறிலங்காவின் அரசுகள் ஒருபோதும் சொன்னதில்லை.

மாறாக சொறிலங்காவின் அரசுகள் அவர்களை காரணம் காட்டியே பல்வேறு தீர்வுகளை நிராகரித்துள்ளன.

அது அப்பிடி இருக்க,தமிழரசுக்கட்சின் இந்த இரண்டு வெங்காய அரசியல்வாதிகள்  "கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது" என கூறிவருகின்றனர்.

"நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும்" என்டு ஒரு பழமொழி இருக்கு!

  • தொடங்கியவர்
On 1/4/2019 at 8:13 AM, போல் said:

பிரிக்கப்படமுடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் என்று கூறியுள்ளார்.

On 1/4/2019 at 8:13 AM, போல் said:

ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கடந்த 3 வருடங்களாக சம்மந்தன் - சுமந்திரன் கும்பல் வெறுமனே காலத்தை கடத்தியுள்ளனர் என்பதுவும், அரசியல் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதையும், கீழே 3 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்துக்கள் சொல்கின்றன.

 

 

  • தொடங்கியவர்

 

 

இது போன்ற முறையற்ற கையூட்டுகளை சம்மந்தன் சுமந்திரன் ரணிலிடம் அல்லது தமிழினப் படுகொலைகாரர்களிடம் பெற்றுக் கொண்டனரா என்பதை தெளிவுபடுத்தாமல் மௌனமாக இருப்பது ஏன்?

அது இல்லையென்றால் தமிழர்களின் உரிமைகளை அடகுவைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை தாமதப்படுத்தும் விதத்தில், போர்க்குற்றவாளிகள் தப்பும் விதத்தில் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுத்து வருவது ஏன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

On 1/6/2019 at 8:31 AM, போல் said:

 

 

இது போன்ற முறையற்ற கையூட்டுகளை சம்மந்தன் சுமந்திரன் ரணிலிடம் அல்லது தமிழினப் படுகொலைகாரர்களிடம் பெற்றுக் கொண்டனரா என்பதை தெளிவுபடுத்தாமல் மௌனமாக இருப்பது ஏன்?

அது இல்லையென்றால் தமிழர்களின் உரிமைகளை அடகுவைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை தாமதப்படுத்தும் விதத்தில், போர்க்குற்றவாளிகள் தப்பும் விதத்தில் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு கொடுத்து வருவது ஏன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓடியோ; சிக்கலில் சிக்கிக்கொண்ட மஹிந்த குடும்பம்?!

https://youtu.be/A-52DZI8-So

மேல் மாகாணசபை உறுப்பினர் சண் குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் ,அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையம் இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணியதால் கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலதுகரம் சஜீவானந்தன், அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய குரல் பதிவினை ராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணிவந்ததால், ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையுடன் முரண்பட்டிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் , இலஞ்சம் பெற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அரசில் சேரும்படி, அமைச்சர் மனோ கணேசனுடன், அரசியல் நெருக்கடி வேளையான அக்டோபர் 31ம் திகதி, ரூபா 65 கோடிக்கு பேரம் பேசிய இந்த ஐந்தேமுக்கால் நிமிட குரல் பதிவினை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் வெளியிட்டுள்ளது.

குறித்த குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின், இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன் கட்சி விரோத செயற்பாடுகளால் வெளியேற்றப்பட்டவர் ஆகும்.

குறித்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர், இன்னமும் சிலகாலம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின் மிக நெருங்கிய ஆதரவாளர், சஜீவானந்தன் ஆவார்.

கடந்த திங்கட்கிழமை, அமைச்சர் மனோ கணேசனுக்கு எதிராக, சண். குகவரதன் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில், சண். குகவரதனுடன் மேடையில், குரல் பதிவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன் ஒன்றாக அமர்ந்திருந்தார். எனவும் சண். குகவரதன் தலைமையில் இவர்கள் புதிய அரசியல் பயணம் போவதாக ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளனர்.

சண் குகவரதனின் வலதுகரமான சஜீவானந்தன், குரல் பதிவில், “நீண்டகாலமாக ப்ரோசசில் இருக்கும் மதில்மேல் பூனை” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் போட்டுக்கொடுத்துள்ளார்.அமைச்சர் மனோ கணேசன், நெருக்கடி வேளையில் தன்னுடன் பேசிய ஏனையவர்களை பற்றி சொல்கிறார்.

இந்த குரல் பதிவில், பேசப்பட்ட பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவும், இது குற்றப்புலனாய்வு பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/111899?ref=recommended2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.