Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காளிகோயிலை இடித்து மீன் மார்க்கட் கட்டிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கை ஒப்படைத்த மைத்திரி!

Featured Replies

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டமாவடி காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை கட்டியது நீதிபதியை மாற்றி நீதிமன்ற தீர்ப்பை மாற்றியது தமிழர்களின் காணி அபகரிப்பிற்கு துணைபோனது மத ரீதியான பல்கலைகழகத்தை அமைத்தது புல்லுமலை பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு உதவியமை ரிதிதென்ன பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமான இயந்திரங்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரை ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதன் ஊடாக யுத்தத்தாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மேலும் துன்பத்திற்குள் தள்ளியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதற்காக அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/111860?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

இதை சம் ...சும்மிடம் கேளுங்கோ...அவைதான் மைத்திரி வேணும்...வேறை திரி வேண்டாம் என்றாவை...இனி கிழக்கு மாகாணம் இல்லை..கிஸ்புஸ்தான்....விரைவில் கிழக்கு மாகாண மக்கள் அகதியாவர்.....

புல்லுமலை ஹிஸ்புல்லாவின் பூர்வீகமா? நித்திரையா தமிழா? நிலம் காக்க அணிசேர்!

Eravur-Pullumalai-Tamil-Traditional-Land

 

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர்.

அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் தனியார் காணி என்று கூறி சுமார் 100 ஏக்கர் காணியை அடைத்து அதில் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியில் முஸ்லிம் இனவாத அமைச்சர் ஹிஸ்புல்லா பெரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த பாரிய தொழிற்சாலைக்கு சவூதி அரேபியாவின் நிதி உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை செங்கலடி பிரதேச செயலாளரோ அல்லது அரசாங்க அதிபரோ வழங்கவில்லை என்பதுடன் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்த விதமான அனுமதிகளும் பெறப்பட வில்லை என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமன்றி குறித்த தொழிற்சாலை அமையும் போது பிரதேசத்தின் ஒட்டுமொத்த நீர்வளமும் பாதிக்கப்படும் என சூழலியல் அக்கறையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது ஹிஸ்புல்லா காணியை அபகரிப்பு செய்வதிலேயே முழு மூச்சாக உள்ளார்.

காலம் காலமாக தமிழ் மக்களால் ஆளப்பட்டு வரும் பாரம்பரிய நிலங்களை சவூதி போன்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அபகரிப்பு செய்யும் திட்டமிட்ட சதி வேலைகளுக்கு முடிவு தான் என்ன?

இது தொடர்பில் கிழக்கு தமிழ் தரப்புகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் முஸ்லிம் இனவாதிகளிடம் கிழக்கை தாரைவார்த்து கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும். இது தொடர்பில் தமிழ் மக்கள் சிரத்தையுடன் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவே.

http://cinema.tamilnews.com/2018/06/04/eravur-pullumalai-tamil-traditional-lands-illegally-takeover-issue/

கிழக்குத் தமிழர்களும் ஆளுநர் நியமனமும்

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Dias அவர்களால் வழங்கப்பட்டு 05 Jan 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Dias என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

ஜனாதிபதியின் இன்றைய நியமனங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பலர் தெரிவித்து வருகின்றனர்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளை மாகாண ஆளுநர்களாக இலங்கை நிர்வாக சேவையிருந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களைத் தான் நியமிப்பேன் என்று அடம்பிடித்த அதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனக்கு வேண்டிய, விசுவாசமாக இருப்பார்கள் என்று கருதிய அரசியல்வாதிகளை மாகாண ஆளுநர்களாக நியமித்து இருக்கின்றார் என ஜனாத்தன் அல்ப்ரெட் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

அதிலும் குறிப்பாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலியை மேல்மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தனது செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டவருமான பேசல ஜெயரட்ணவை வட மேல் மாகாண ஆளுனராகவும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களினால் நிராகரிக்கப்பட்டும், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கியதோடு அமைச்சர் பதவியும் வழங்கியிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராகவும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதுவரை காலமும், தான் மக்களின் ஜனாதிபதி என்ற போர்வையை போர்த்தியபடி இருந்த ஜனாதிபதி அண்மைக்காலமாக அப்போர்வையை விலக்கி தன் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஒரு முறைதான் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் இன்று மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கான காய் நகர்த்தல்களை மேற்கோண்டு வருகின்றாரோ? என்ற சந்தேகத்தை தற்கால நியமனங்கள் எமக்கு எழுப்புகின்றன.

குறிப்பாக மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இதுவரை சிங்களவர்களே ஆளுநர்களாக இருந்து வந்துள்ளனர். அதற்கு பின்னர் இன்று முதன்முறையாக ஓர் தமிழ் பேசும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

நல்ல விடயம், இருந்தும் இந்நியமனம் தமிழ் பேசும் மக்களின் மீதான ஜனாதிபதியின் அன்பினால் எழுந்தது என்று கருதினால். அது இல்லவே இல்லை. ஏனெனில் தமிழ் பேசும் சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி, இன நல்லுறவை பேணும் வகையில் ஆழக்கூடிய, நிர்வாக திறமை மிக்கவர்கள் தமிழ், முஸ்லிம் சமுகங்களில் பலர் உள்ளார்கள்.

அவ்வாறு இருக்க இந்நியமனமானது தனது அரசியல் இருப்புக்காவும், தமிழ் மக்களையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையும் பழிவாங்கும் நோக்கோடும் வழங்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

ஏனெனில், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிர்ப்தியையும், வெறுப்பையும் சம்பாதிப்பனவாகவே அமைந்துள்ளன.

குறிப்பாக ஓட்டமாவடி காணி அபகரிப்பு, புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கூறலாம். இருந்தும் கிழக்கில் 23.15% வீதமாக வாழும் சிங்களவர்கள் தமிழர்களை விட புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக திரும்புவார்கள் என்பது உறுதி.

இது இவ்வாறு இருக்க மாகாண ஆளுநர் என்பவர் யார் அவருக்கான அதிகாரங்கள் என்ன? அதில் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் வகிபங்கு என்ன என்பது தொடர்பில் ஆராய வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இதன்படி ஜனாதிபதியின் விருப்பத்தின்படி தனது பிரதிநிதியாக மாகாணமொன்றின் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். ஆதலால் தனித்துவமான பல அதிகாரங்களையும் அவ் ஆளுநர் தன்வசம் கொண்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தின் 154C, 154Fஇன் ஒன்று தொடக்கம் ஆறு வரையான பந்திகள், மற்றும் 164 போன்ற சரத்துகளில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குவிக்கப்பட்டனவாகவுள்ளன.

ஜனாதிபதியைப் போன்ற நிறைவேற்று அதிகாரங்கள், மாகாண சபையின் முதலமைச்சருடன் நான்கிற்கு அதிகமில்லாத எண்ணிக்கையிலான அமைச்சரவை நியமனம், அவ்வமைச்சரவைக்கு கீழ் வரும் திணைக்களங்கள் மீதான அதிகாரங்கள், சட்ட உருவாக்கங்கள் மீதான கடப்பாடுகள் என பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சபையில் நிதி சார்ந்த எந்த ஒரு சட்ட மூலத்தையும் கொண்டு வருவதாக இருந்தாலும் அதை ஆளுநருடைய அதிகாரம் இல்லாமல் கொண்டுவர முடியாது. இது 90 இற்கும் மேற்பட்ட சட்டமூலங்களை பாதிக்கின்றது. அதாவது 90இற்கும் மேற்பட்ட சட்டமூலங்களை ஆளுநரின் அனுமதியின்றி கொண்டு வருவது சாத்தியமற்று போகின்றது. இது சட்டவாக்கத்துறையில் ஆளுநர் கொண்டுள்ள அதிகாரத்தின் தாக்கத்தினை காட்டுகின்றது.

இது தவிர நிறைவேற்று துறையினை பொறுத்தவரை குறிப்பாக மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு என்பதும் முழுமையாக ஆளுநருடைய கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பொது சேவைக்கான ஒருவரை நியமிக்கின்ற, விலக்குகின்ற மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கின்ற அதிகாரம் இவருக்கு உண்டு. இதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் என்பது இவரது கரங்களில் குவிந்திருப்பதனை காணமுடிகின்றது.

குறிப்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதம செயலாளர் நியமனங்களை கருதமுடியும். இவ்விடத்தில் முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாது போனாலும் சரி அதே அதிகாரம் அப்படியே இருக்கும். ஆதலால் மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளை கேட்டு செயல்படும் நிலை என்பது முற்றாக இல்லாது போகும்.

ஆளுநர் சட்டவாக்கத் துறையிலும், நிறைவேற்றுத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சூழ்நிலையில் அதிகாரங்கள் உண்டு என்பது தவிர இருக்கின்ற அதிகாரங்கள் அனைத்தும் இவருடைய கைகளில், இதற்கு அப்பால் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண சபையில் ஆளுநர் இருப்பதால் மத்திய அரசின் அதிகாரங்களை கூட ஆளுநரே செயற்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் மாகாண, மத்திய அரசினுடைய அதிகாரங்கள் ஓர் ஆளுநரின் கைகளில் உள்ள சந்தர்ப்பத்தில் தெர்ந்தெடுக்கப்படப் போகும் மாகாண சபையினால் எதனையும் சாதிக்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

அதிலும் பொதுவாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்கள் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவி வருகின்றது.

அதிலும் யார் முதல்வர் என்கின்ற போட்டி வேறு. இவ்வாறிருக்க முஸ்லிம்கள் சார்பாக மாத்திரமே கடந்த கால செயற்பாடுகளை பதிவு செய்திருக்கும் ஹிஸ்புல்லா போன்ற ஒருவர் தமிழ் மக்களினதும், அவர்கள் சார்பாக மாகாண சபைக்குள் செல்லும் பிரதிநிதிகளதும் அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்வார்? என்பது ஐயமே!

https://theworldnews.net/lk-news/killlkkut-tmilllrkllum-aallunr-niymnnnmum

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்கிளப்பை காப்பாற்ற அம்மானோ,பிள்ளையானோ தான் மீண்டும் வர வேண்டும் 

நாம் தமிழ்த்தேசிய அரசியல் நடத்துகிறார்கள் என்றார்கள்!  ... எமது அரசியல் இறுதி இலட்சியத்தை நோக்கியது என்றார்கள்? 

... இல்லை இல்லை உதெல்லாம் தீவிரவாத அரசியல்! சர்வதேசம் அங்கீகாரிக்காது! என்றார்கள்!

சரி, இணக்க அரசியல் தொடங்கி விட்டோம், 2008இற்கு பின்! இந்தா சர்வதேசம் எம் பின்ன்னாள்! இந்தியா எம் முன்னாள்! இந்தா தீர்வு! அந்தா வருட இறுதிக்குள்? 

ஆஆஆஆஆ.... கொட்டாவி விட்டதுதான் மிச்சம்!

தமிழ் தேசியமும் இல்லை, இணக்கத்தினால் கொணர்ந்ததும் ஒன்றுமில்லை!

கண்டது என்ன????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கெதிரான இரு இனவாதங்கள் இணைகின்றன.

ஆனால் தமிழர் தரப்போ எல்லாவற்றுக்கும் கால அவகாசம் எனும் பெயரில்  தன் இனத்தையே அழிக்க துணை போகின்றது..

எதிர்க்குரல் கொடுக்கும் தமிழர்களை  தீவிரவாத தமிழர்கள் என பட்டம் சூட்டி தன்னினத்தையே அழிக்க சோரம் போகின்றது சம்பந்தன் சுமந்திரன் போன்ற காக்கைவன்னியன் கும்பல்கள்.

  • தொடங்கியவர்
3 hours ago, குமாரசாமி said:

தமிழர்களை  தீவிரவாத தமிழர்கள் என பட்டம் சூட்டி தன்னினத்தையே அழிக்க சோரம் போகின்றது சம்பந்தன் சுமந்திரன் போன்ற காக்கைவன்னியன் கும்பல்கள். 

இவர்கள் நவீன எட்டப்பர்கள்!
இந்த சமகால உண்மைகளை கூறுவது சிலருக்கு கசப்பாகவே இருக்கும். அதற்கு ஒரு காரணம் அவர்களும் இந்த வகைக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும். தம்மைக் காப்பற்றிக்கொள்ள / நியாயப்படுத்த அவர்கள் அடிக்கடி "ஜனநாயகம்",  "(அரசியல்) நாகரீகம்", "இராஜதந்திரம்" போன்ற முகமூடிகளை முன்னிறுத்திக் காட்டுவார்கள். அவர்கள் அகராதியில் நீண்ட வரலாற்றுச் சொற்களான "எட்டப்பர்கள்", "காக்கை வன்னியர்கள்",  உட்பட "போர்க்குற்றவாளிகள்", "தமிழினப் படுகொலைகாரர்கள்", "தமிழின விரோதிகள்", "அரச பயங்கரவாதிகள்" போன்ற தற்கால யதார்த்தத்தை குறிக்கும் சொற்களும் கசப்பானவை.

  • கருத்துக்கள உறவுகள்
 

"ஹிஸ்புல்லாவை தமிழர்கள் எதிர்ப்ப‌து, முழுக்க‌முழுக்க‌ முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌மாகும்"

Muba%2B%257Bpto.jpg

சில‌ த‌மிழ் ச‌கோத‌ர‌ர்க‌ளும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ரும்  சொல்கிறார்க‌ள், ஹிஸ்புல்லா ம‌த‌வாதியாம்,ச‌ந்த‌ர்ப்ப‌வாதியாம். அத‌னால் அவ‌ரை ஆளுன‌ராக‌ ஏற்க‌ முடியாதாம் என‌. இது த‌மிழ் ம‌க்க‌ளை உசுப்பேற்றும்  இவ‌ர்க‌ளின் இன‌வாத‌,ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ க‌ருத்தாகும்.
 
 த‌மிழ் கூட்ட‌மைப்பு ஹாபிசை முத‌ல‌மைச்ச‌ராக‌ ஏற்ற‌தாம். ஹிஸ்புல்லாவை ஏற்க‌ முடியாதாம்.
 
முத‌லில் த‌மிழ் கூட்ட‌மைப்பும் முஸ்லிம் காங்கிர‌சும் ட‌ய‌ஸ்போராவின் அடிமைக‌ள் என்ப‌தை நாம் புரிய‌ வேண்டும்.
 
த‌மிழ் கூட்ட‌மைப்பு ஆத‌ரித்த‌ ஹாபிசும் ச‌ந்த‌ர்ப்ப‌வாதிதான். மு.காவை க‌டுமையாக‌ எதிர்த்த‌வ‌ர். மு. காவில் நின்றால் வெல்ல‌லாம் என‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து மாறிய‌வ‌ர். அவ‌ர் மு. காவை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தாலும் ஹாபிசை ஏற்ப‌தால் உங்க‌ளுக்கு அமைச்சு ப‌த‌விக‌ள் கிடைக்கும் என்ப‌தாலும் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ர் நீங்க‌ள் அவ‌ரை ஆத‌ரித்தீர்க‌ள்.
 
உல‌க‌ ம‌கா ப‌ய‌ங்க‌ர‌வாதியான‌ புலியுட‌ன் இருந்த‌ பிள்ளையான் கூட‌ கிழ‌க்கின் முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்துள்ளார்.  அவ‌ரை முன்னாள் புலி  என‌  முஸ்லிம் காங்கிர‌ஸ் எதிர்த்த‌ போது அத‌னை நாம் க‌ண்டித்தோம். முன்னாள் ப‌ய‌ங்க‌ர‌வாதியான‌ ப‌சீர் முஸ்லிம் காங்க்ர‌சின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ இருக்கும் போது ஆயுத‌த்தை கைவிட்டு ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு வ‌ந்த‌ பிள்ளையான் தேர்த‌லில் நிற்ப‌து அவ‌ர‌து ஜ‌ன‌நாய‌க‌ உரிமை என்ப‌தை உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே ப‌கிர‌ங்க‌மாக‌ கூறிய‌து.
 
பிள்ளையானை ஹ‌க்கீம் கோஷ்டியின‌ர் எதிர்க்க‌  கார‌ண‌ம் த‌மிழ‌ர் கூட்ட‌மைப்பும் அவ‌ரை எதிர்த்த‌தால். இத்த‌னைக்கும் கூட்ட‌மைப்பில் உள்ள‌ த‌மிழ் க‌ட்சிக‌ளும் உல‌க‌ ம‌கா கொலைஞ‌ர்க‌ள், கொள்ளைக்கார‌ர்க‌ள்.
 
ஆனாலும் ஜ‌ன‌நாய‌க‌த்துக்கு வ‌ந்த‌ கிழ‌க்கான் என்ப‌தால் நாம் பிள்ளையானைக்கூட‌ முத‌ல‌மைச்ச‌ராக‌ ஏற்ற‌வ‌ர்க‌ள்.
 
எந்த‌வொரு கொலையும் செய்யாத‌, ஊழ‌ல் செய்யாத‌, ஹிஸ்புல்லாவை ஏன் தமிழ‌ர்க‌ள் எதிர்க்க‌ வேண்டும் என்று கேட்கிறோம். த‌மிழ‌ர்க‌ளை கொன்றொழித்த‌ சிங்க‌ள‌ மேஜ‌ர்க‌ள்க‌ள் ஆளுன‌ர்க‌ளாக‌ இருந்த‌தை ஏற்றுக்கொண்ட‌ த‌மிழ் க‌ட்சிக‌ள் ஆயுத‌ம் தூக்காத‌, ஜ‌ன‌நாய‌க‌ அர‌சிய‌ல் மூல‌ம் அறிமுக‌மான‌ ஹிஸ்புல்லாவை எதிர்ப்ப‌து முழுக்க‌ முழுக்க‌ முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ இன‌வாத‌மாகும்.
 
-உல‌மா க‌ட்சி

இலங்கையில் முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்யும் இணக்க அரசியலை குறைகூறக்கூடாது!  முஸ்லீம் மக்கள் அதில் பயன்பெறுகிறார்கள். அது மற்றய சமூகத்திரனரை பாதிக்கும் அளவிற்கு இருக்ககூடாது!

அண்மையில் மட்டக்களப்பு சென்று வந்தேன்,  தமிழ் கிராமங்கள் இன்றும் அழிந்த நிலையில்! இவ்வழிவுகள் போரின் வடுக்கள்! உண்மையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாழ்விடங்கள்/வாழ்வாதரங்கள் அழித்தொழிக்கப்பட்டதில், சிங்கள இராணுவத்தினரை விட, பல மடங்கு முஸ்லீம் அரசியல்வாதிகளால், குறிப்பாக ஹிஸ்புல்லா போன்ற மதவெறி கொண்ட அரசியல்வாதிகளினால் இயக்கப்பட்ட துணை இராணுவ குழுக்களே பிரதாரன காரணமாகும். இன்று பல பல கிராமங்கள், யுத்தம் முடிந்தும் பல வருடங்களின் பின் கூட, தமிழ் மக்கள் திரும்ப முடியாத சூழ்நிலை!

இத்தனைக்கும், கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் தமிழ் தரப்பு அதிக ஆசனம் பெற்றும், முஸ்லீங்களுக்கு மாகாண முதலமச்சர் பதவியை வழங்கியது. ஆனால் முஸ்லீங்களுக்கு கிழக்கை தாரை வார்த்த தமிழ் தலைமைகள், எம்மக்களின் அடிப்படை தேவைகள்,மீள்குடியேற்றம் எதனையும் இன்றுவரை கண்டு கொள்ளவில்லை. 

ஹிஸ்புல்லா இனி செய்யப்போகும் கூத்துக்களை ... காணிப்பறிப்புகள், தமிழ்ப்பகுதிகள் புறக்கணிப்பு ... பார்க்கத்தான் போகிறோம். நம் சும்சம்க்கள், அவற்றை கவணிக்க நேரமிருக்காது, புலிவாந்தி எடுக்கத்தான் நேரம் சரி!

...

இந்தா ஹிஸ்புல்லாவின் கூட்டொன்று ... சில நாதளுக்கு முன் கொட்டிய தமிழ்/முஸ்லீம் இனவெற்றுமை கருத்து..

மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!!

http://www.battinaatham.net/description.php?art=17964

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.