Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Featured Replies

வணக்கம் வாருங்கள்

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • Replies 73
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த தளத்திற்குள் இருப்பது நீங்கள் மட்டும் தானா விரும்புகிறீர்கள்?

நாங்கள் என்றால் யார்?

வல்வைக்கு என்னதான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

மை டியர் மைந்தா...

நீங்க (நீர் என்று சொல்லக் கூடாதாம் விதி செய்த சதிப்படி)

ஒரு மகாப்பெரிய ஜெகஜ்ஜால வாந்தி மன்னரா இருக்கணும்னு நெனைக்கிறேன்...

ஒரு இடம் விடாம..(கனடா, ஜெர்மனி) ஒரு ஊடகம் விடாம..(வானொலி,கையொலி(பத்திரிக

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில கருத்துக்கள் எழுதிய பின்பு, விதி முறையை மீறவில்லை என்றால் உங்களை எல்லாப்பகுதிக்கும் எழுத விடுவார்கள்.

இன்னும் சில கருத்துக்கள் எழுதிய பின்பு, விதி முறையை மீறவில்லை என்றால் உங்களை எல்லாப்பகுதிக்கும் எழுத விடுவார்கள்.

ஆண்டியப்பா....

இது வரை செதறி அடிச்சதில் , யாழ் வயித்துக்குச் சேராத எதுனா அடிச்சிருக்கேனா ?

அப்படி எதுனா இருந்தா சொல்லுங்கப்பா...

உங்களுக்கு ஒரு மலைக்கும், வேட்டித்துணிக்கும் இலவசமா ஏற்பாடு பண்றேன்

ஆண்டியப்பா....

இது வரை செதறி அடிச்சதில் , யாழ் வயித்துக்குச் சேராத எதுனா அடிச்சிருக்கேனா ?

அப்படி எதுனா இருந்தா சொல்லுங்கப்பா...

உங்களுக்கு ஒரு மலைக்கும், வேட்டித்துணிக்கும் இலவசமா ஏற்பாடு பண்றேன்

சத்தியமா..யாரையும் குத்தி மூஞ்ச கிழிக்கணும்னு

எதுவுமில்ல..ஏதோ யாழ் கள மேயர்களுக்கு

கொஞ்சம் சேரி சாப்பாடு போடலாம்னுதான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குப்புடு அண்ணாவுக்கு ஒரு பெரிய நன்றி..எவ்வளவோ நல்ல விடயங்களை நகைச்சுவையாக விசுக்கிறீங்க...ஆகா என்ன அருமை...இந்தத்தளத்தின் விதிமுறையைத் தான் சகோதரன் கந்தப்பு சொன்னாரே தவிர மற்றும்படி நீங்கள் ஏதும் தப்பாக இதில் எழுதியதாக யாரும் கருதவில்லை..தொடருங்கள் உங்கள் பணியை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா அவர்களே நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கிறமாதிரி தோன்றுகிறது..உங்களுக்கு லண்டனில் இருந்து பயமுறுத்தல் தொலைபேசி வந்ததாக பரிசிசில் ஒரு வதந்தி, இந்த செய்தியில் ஏதாவது உண்மையிருக்கிறதா? நீங்கள் எதற்க்கும் பயப்பிடால் தொடருங்கள் உங்கள் பணியை..உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.

தமிழ்த்தேசியத்தின்(தமிழீழ விடுதலைப்புலிகளின்)ஊடக வளர்ச்சியைப்பற்றி ஒரு விமர்சனம் எழுதுங்களேன்.

Edited by eelanila

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பல்பயணியின் வரவேற்புக்களும் வாழ்த்துக்களும்

- கப்பல்பயணி

வணக்கம் சகோதரா !

நீங்கள் பழைய வல்வை மைந்தன் தானே???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரா !

நீங்கள் பழைய வல்வை மைந்தன் தானே???

**********************************************

வணக்கம் சகோதரன் வேலவன் அவர்களே, நான் இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்து கொண்டது மாசி16,2007. ஆனால் என்னை அறிமுகப்படுத்தாமலே நுழைந்துவிட்டேன். அது தப்பு என்று இப்போது புரிந்துகொண்டேன். உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி.

நன்றி என்பதுதான் சரியான பதம்.

இன்னொரு அங்கத்தவர் கோவம் என்று எழுதியுள்ளார்.

கோபம் என்பதுதான் சரியான பதம் என்பதை தாழ்மையுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

நிலைபரம் என்ற சொல் பிழையாக ஊடகங்களில் நிலவரம் என்று பாவிக்கப்படுவதை கண்டு வேதனையடைகின்றேன். "நிலவரம்" நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அவர்கள் மாற்றம் செய்யவில்லை. அவர்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்கள். இதை அவர்களுக்கு உணர்த்தவும். கனடிய "TVI" ல் நிலைவரம் என பாவிக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கத்து.

இன்னொரு பிழையாக பாவிக்கப்படும் சொல் கிருஸ்ணன். சரியான பதம் கிருஷ்ணன் என்பதாகும். இலக்கிய புத்தகங்கள் இதற்கு சான்று. அண்மைய சில வருடங்களாக இளைஞர்கள் கிருஸ்ணன் என்று பிழையாக பாவிப்பது வேதனையை அளிக்கிறது.

ஊடகம் ஒரு வலிமை மிகு சாதனம். ஊடகவியயாளர்கள் விடும் பிழைகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதில் பிழையான எண்ணத்தை தோற்றுவித்துவிடும். பிழையான சொற்களை சரியென எண்ண வைக்கும்.

இங்கு பதிவை இடும் பலர் அவசரத்தில் தட்டச்சில் ஏற்படும் பிழைகளை சரிபார்க்காமல் பதிவை இட்டு விடுகிறார்கள். இதனால் பலரது பதிவுகளில் சொற்பிழைகளும் கருத்து மயக்கமும் ஏற்படுகிறது. எனவே பதிவை இடுமுன் இருமுறையாவது வாசித்து பார்த்து பிழை திருத்தி இடும்படி அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு பிழையாக பாவிக்கப்படும் சொல் கிருஸ்ணன். சரியான பதம் கிருஷ்ணன் என்பதாகும். இலக்கிய புத்தகங்கள் இதற்கு சான்று. அண்மைய சில வருடங்களாக இளைஞர்கள் கிருஸ்ணன் என்று பிழையாக பாவிப்பது வேதனையை அளிக்கிறது.

கிருஸ்ணன் கிருஷ்ணன் இரண்டுமே தமிழல்ல. அதில் எது சரியாயிருந்தால் நமக்கென்ன?

கிருச்ணன், கிருசுணன் இதில் எது சரி? அதைச் சொல்லுங்கள் பாவிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவகுரு அவர்களே உங்கள் அறிவுரைக்கு நன்றி. நான் ஏற்கெனவே இந்த தவறை திருத்திவிட்டேன். ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்ச்சித்தேன், அது தப்பென்றவுடன் உடனே நிறுத்திவிட்டேன். தமிழ்ச் சொற்பதத்தில் விளையாடக்கூடாதல்லவா?

வல்வை மைந்தன் அவர்களே!

பொதுவாகத்தான் எழுதினேன். உங்களை மாத்திரம் நினைவில் நிறுத்தி அல்ல. கவலை வேண்டாம். தொடருங்கள் உங்கள் பணியை.

உளம் நன்றாகவே கனிந்த அன்புடன் உங்களை இம்மன்றம் வரவேற்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் வரவேற்கின்றேன்

பண்டிதர் அவர்களே!

பல நூற்றுகணக்கான சமஸ்கிருத சொற்கள் தமிழ் மொழியில் ஊடுருவி பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கிறது. அவைகள் சம்ஸ்கிருத சொற்கள் என தெரியாமலே நாம் அவற்றை பாவித்துக்கொண்டு வருகின்றோம். சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து பிரிக்க முயன்று வெற்றி பெற்றவர் யாருமில்லை. உதாரணம் : கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற இயக்கம் வெற்றியளிக்கவில்லை.பண்டிதர் என்ற சொல்லே சமஸ்கிருத சொல் என நினைக்கின்றேன். சமஸ்கிருதத்தை விட அதிகம் பாதிப்பை தமிழுக்கு அண்மைய மூன்று நூற்றாண்டுகளாக் ஏற்படுத்துவது ஆங்கிலம். எனவே அதன் மேல் தான் முதலில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னன்---கிருட்டினன்; என எழுதலாம் என நினைக்கின்றேன்.

கிருஷ்னன் என்றால் கருமை நிறத்தவன் என்று அர்த்தம்.

இருட்டு----கிருட்டு ( முதற்போலி).

கிருட்டினன்--- கிட்டினன்( ரு--மயக்கம்).

(தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்). :):lol:

மீன்டும் வாழ்த்துக்கள். வல்வைமைந்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தளத்தில் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது. யாழ்த்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

சுவி, தேவகுரு இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தமிழ் தளத்தில், விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.

தளத்தில், தமிழ் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.

இரண்டிற்கும் உள்ள் வித்தியாசத்தை கூர்ந்து கவனிக்கவும்.

முதலாவது வசனத்தில் கருத்து மயக்கம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மைந்தன் அவர்களே நீங்கள் என்ன பெரிய அரசியல்வாதி என்ற நினைப்பா? உங்கள் சாதனைகளை தாயகத்தில் இருந்துகொண்டே செய்திருக்கலாம் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ஈழநிலா அவர்களே இப்போது உங்களுக்கு என்னதான் பிரச்சினை? நான் ஒரு பெரிய அல்லது சிறிய அரசியல்வாதியென்று எப்போதாவது சொன்னேனா? இந்தத்தளத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எவருமே கேட்காத கேள்வியை நீங்கள் கேட்கிறீங்கள். பல பகுதிகளில் உங்களின் கருத்துக்களை அவதானித்தேன், நீங்கள் என்னைத் தாக்கவென்றே வந்தமாதிரி தெரிகிறது. நான் யாரினதும் மனதைப் புண்படுத்தியமாதிரி ஞாபகமில்லை, அப்படியிருக்கும்போது நீங்கள் இப்படி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் வல்வை மைந்தன் அவர்களே உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்

கொள்ளுங்கள்.

நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்ற அனைவருக்கும் பலகோடி நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த வாழ்த்துகள்

ஆமா - ந் - ஸ்ரீ = ர்

ஆனால் நான் பழகியதோ ற -= ஸ்ரீ

Edited by abi_natan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.