Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?. நாங்கள் சிறிலங்கனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் துடுப்பாட்டப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கலாமா?.நாங்கள் சிறிலங்கனா?

slcricketnl2.jpg

Edited by கந்தப்பு

  • Replies 123
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன கேள்வி கந்தப்பு அவர்களே நாங்கள் சிறிலங்கன் இல்லை இல்லை இல்லை :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் இல்லை.எப்பவுமே ஆதரவு தெரிவிப்பது இல்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் இல்லை.எப்பவுமே ஆதரவு தெரிவிப்பது இல்லைத்தானே

சிறீலங்கா தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வடக்குக் கிழக்கு பாடசாலைகள் இன்னும் பங்குபற்றுகின்றன தானே..??!

தமிழர்கள் நாடோடிகளாக உலகெங்கும் அடைக்கலம் தேடி வாழ்ந்தாலும் அவர்களின் Ethnic group சிறீலங்கனாகவே கருதப்படுகிறது. மருத்துவ தேவைகள் தொடங்கி அனைத்திலும்..! விசா மற்றும் சில நடைமுறைகளில் இடம்பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பிய மற்றும் சில இதர மேற்குநாடுகளின் பிரஜா உரிமைகளைக் கையில் வைத்திருப்பினும்.. சிறீலங்கன் என்பதே அவர்கள் Ethnic group.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களை தமிழ்நாட்டினர் என்று அடையாளப்படுத்த காரணம் இருந்தும் இந்தியர்கள் என்றுதான் சொல்வார்கள்..! ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை எனும் போதும் எவரும் தமிழீழத்தவன் என்று சொல்லிப் பதிவுகள் செய்வதில்லை. சட்ட அங்கீகாரமுள்ள பதிவுகள் எதுவும் அதை ஏற்றுக் கொள்ளாது..!

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தின் போது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி தடையெப்பட்ட அணியாக கருதப்பட்டது..! அங்கு சிறுபான்மையின வெள்ளையர்கள் பெரும்பான்மை இன கறுப்பர்கள் மீது மனித உரிமை மீறல்களைச் செய்ததை கண்டிக்கும் வகையில் சிறுபான்மையினரை உள்ளடக்கி இருந்த அணி தடை செய்யப்பட்டிருந்தது..! அதற்காக கோரிக்கைகள் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்டும் வந்தன.

தற்போது சர்வதேச மன்னிப்புச்சபை கூட கிரிக்கெட் நிகழ்வுத் தளத்தை சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது.. எம்மவர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஏதாவது கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனரா..??! தமிழீழத்தவன் என்று நினைப்பதே இல்லை. மாறாக தாங்கள் தாங்கள் புகலிடம் தேடிய நாடுகளுக்கு விசுவாசிகளாக மாறியுள்ளனர். இதை அல்ல எதிர்பார்த்தது. அந்த நிலையிலும் சிறீலங்கன் என்ற அடிப்படை Ethnic ஓட விளையாட்டை விளையாட்டாப் பார்க்கிறது பல மடங்கு மேல்..என்றே கொள்ளலாம்..! :):)

Edited by nedukkalapoovan

எப்படி ஆதரவளிப்பது?

சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று வாதிக்கலாம். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்த வரையில் விளையாட்டும் அரிசியலும் வேறு வேறாக இருந்ததில்லை.

தமிழர் மட்டுமன்றி சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் புறக்கணிக்கபட்டே வந்துள்ளனர்.

இதுபற்றி நான் எழுதிய கட்டுரையொன்றை சற்று நேரத்தில் இணைக்கிறேன்.

//எவரும் தமிழீழத்தவன் என்று சொல்லிப் பதிவுகள் செய்வதில்லை. சட்ட அங்கீகாரமுள்ள பதிவுகள் எதுவும் அதை ஏற்றுக் கொள்ளாது..!//

இதற்கு தானே போராட்டம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்பேச்சு கேட்காமல் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கும் மன நிலை எப்போது நமது தமிழ் இளையோருக்கு வருக்கின்றதோ அப்போது பல பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்.... நமது இளைய சமுதாயத்தில அதிகமானோர் மற்றவர் சொல்வதை செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்... தமது சொந்த விடயத்தில் கூட மற்றவர்களை வழி நடத்த விடுவார்கள்...

கந்து ..உங்கடை கருத்தையும் சொன்னால் நல்லா இருக்கும் :)

நான் முன்னால் அதரவாளன் ஆனால் இன்று அவர்களை நான் புறக்கனிக்கின்றேன்..... என்என்றால் அவர்கள் வேறுநாடு நாங்கவேறுநாடு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

//எவரும் தமிழீழத்தவன் என்று சொல்லிப் பதிவுகள் செய்வதில்லை. சட்ட அங்கீகாரமுள்ள பதிவுகள் எதுவும் அதை ஏற்றுக் கொள்ளாது..!//

இதற்கு தானே போராட்டம் :)

போராட்டம் தமிழீழத்தை தமிழர்களுக்கே உணர்த்த என்று மட்டுமே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது...! தமிழீழம் என்ற ஒன்றை தமிழர்களே இன்னும் சரிவர உணராத போது தமிழீழம் என்பது எமது பாரப்பரியம் என்று உணர்ந்து அதற்காக சர்வதேச அங்கீகாரத்துக்காக போராட்டத்தை நகர்த்துவது எப்போ..?!

எம்மைப் பொறுத்தவரை சிறீலங்கா அணியின் எதிர்ப்பு என்பது புகலிட நாடுகள் சார்ந்த அணிகள் மீதான விசுவாச வளர்ப்பு அல்ல..! சிறீலங்கா தோற்றல் சிறீலங்கன் என்ற எத்னிக்கோட உலகால் அடையாளப்படுத்தப்படும் தமிழர்கள் விளையாட்டை அரசியலாக்க முனைபவர்களால் கேலிக்கும் ஆகக் கூடும்..!

தெற்காசிய பிராந்தியத்தில் விளையாட்டு அரசியலாகி இருப்பது வருந்த வேண்டிய ஒன்று. பாகிஸ்தான் தோற்றால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி..! பாகிஸ்தான் வென்றால் முஸ்லீம்களுக்கு மகிழ்ச்சி..! சிறீலங்கன் தோற்றால் தமிழர்களுக்கு மகிழ்ச்சி..! ஆக தெற்காசிய பிராந்தியத்தில் விளையாட்டு என்பது வெற்றி தோல்வி இரண்டையும் சகித்துக் கொண்டு நட்புறவோடு குழுமமாக செயற்படுதல் என்ற அந்த கோட்பாட்டையே தகர்க்கிறது..! இதுவே மக்களிடம் வளர்க்கப்படுகிறது.. அரசியல் தேவைக்காக. அதுதான் தோல்வி என்றதும் நாட்டில் வன்முறைகள் வெடிக்கின்றன..!

சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்த அறிக்கையில் தாம் சிறீலங்கா அணியினரை எதிர்க்கவில்லை.. சிறீலங்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தே பிரச்சாரம் செய்கின்றோம். அது தங்கள் கடமை என்று கூறி இருப்பதைக் காணலாம். தமிழர்களோ சிங்கள அணி என்று இனவாதமாகப் பேச முனைகின்றனரே தவிர சிறீலங்கா அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய சூழலைப் பாவிக்க முனையவில்லை..! அணியை எதிர்க்கவே முனைகின்றனர். அது சர்வதேச கவனத்தைப் பெறாது என்பதற்கு ஆண்டாண்டா இப்படி எதிர்ப்பை வைச்சிருந்தும் தமிழர்கள் சாதித்தது எதுவுமில்லை என்பது சான்றாக உள்ளது..! அணியை தடை செய்ய வேண்டும் என்பது சிறீலங்கா அரசுக்கு பணிஸ்மென்றுக்காகவே அன்றி அணியைக் குறை சொல்லமுடியாது. அணியில் மூவினத்தவரும் இடம்பெற்றுள்ளமை சிறீலங்காவுக்கு + பொயிண்ட்...! :)

Edited by nedukkalapoovan

இலங்கை அணி வென்றவுடன்.. இலங்கை இராணுவம் வெற்றிக்களிப்பைக் கொண்டாட தமிழ் மக்கள் பகுதிகள் மீது

செல்களை சராமாரியாக வீசுகிறதாம்..

தமிழ் உணர்வோடு சொல்லுங்கள் இந்த வெறியாட்டத்திற்கு துணை போவதா..

இல்லை..

நீங்களே முடிவெடுங்கள்

சிறிலங்கா அரசு இனி மேற்கிந்திய தீவுகளையும் விடுதலைப்புலிகளை தடை செய்ய சொல்லி கேட்கப்போகிறது :):o:blink:

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டப்போட்டிக்கு நாம் ஆதரவு.

இலங்கை அணிக்கு இல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

எமக்கு இனத்துவேசம் இருக்கக்கூடாது

எவர் விளையாட்டில் வெற்றிபெற்றாலும் வாழ்த்தவேண்டும்

ஆனால் சிறீலங்கா எமது நாடு அதற்காக அது வெல்லவேண்டும் என்று எந்தத்தழிழனாவது ஆதரவளிப்பானாகில் அதைவிட முட்டாள்தனம் இருக்கமுடியாது

எவனும் செய்யதுணியாத காரியத்தை செய்த அந்த சகோதரனுக்கு நன்றிகள் இனியாவது யோசிப்போம் சிங்க கொடியுடன் கிரிக்கட் பார்கலாமா என

  • கருத்துக்கள உறவுகள்

ஜானக பெரேரா முந்திய காலங்களில் யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளையும் விக்கிரமசிங்க விபரித்ததோடு அந்த வகையில் பெரேரா போர் வீரர்களால் மட்டுமன்றிஇ சிங்களஇ பௌத்த மக்கள் பிரிவினராலும் வெகுவாக போற்றப்படுவர் என்றும் பாராட்டுத் தெரிவித்தார். மணலாறு பகுதியை அண்டிய கிராமம் ஒன்றிற்கு ஜானக பெரேராவை பாராட்டும் முகமாக ஜானகப்புர என பெயரிடப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இது ரணில் விக்கிரமசிங்க இறுதியாக கூறியது

சிங்களஇ பௌத்த மக்கள் பிரிவினராலும் வெகுவாக போற்றப்படுவர் என்றுதான் அவர்சொல்கின்றார்

இதை கிரிக்கட:; ரசிகர்களின் பார்வைக்கு விடுகின்றேன்.

புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர்.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழத் தாயக உறவுகளின் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கை:

தாயகத்தில் தமிழினத்தை கொன்றொழித்து கொடூரமாக வதைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள அரசாங்கத்தின் முகத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் உலகக்கிண்ண துடுப்பாட்டத்தில் சிறிலங்கா விளையாடும் தொடரும் போட்டிகளில் இத்தகைய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகின்றோம்.

தொடரும் துடுப்பாட்டப் போட்டிகளில் இன்னும் அதிகமாக எமது உறவுகள் எங்கள் தமிழீழ தேசியக்கொடியை மைதானத்திலும் அரங்கிலும் காட்டுவதோடு சிங்கள அரசாங்கத்தின் கொடூரத்தை சித்தரிக்கும் படங்களையும் காட்டி மகிந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

இதனை புலம்பெயர் மக்களால் செய்யமுடியும். இதுவே செய்வதற்கான சந்தர்ப்பம் என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

aaaaaaes7.jpg

pulixy6.jpg

(Photos:-Cricinfo)

Edited by யாழ்வினோ

நல்ல ஒரு கேள்வி .

இதுல என்னடா அம்பி இருக்கு விளையாட்டில் அரசியல் கூடாதாம்

***********************

இப்படியே வாழ்ந்தோம் என்றால் எம்மிடம் இருக்கும் மிச்ச துண்டை மட்டும் இல்லை எமது தாய்மாரின் புடவைகளை கூட எமது கண்னுக்கு முன்னனல் உருவி கொண்டு போய்விடுவார்கள் சிங்களவெறியர்களும் இந்திய ஆதிக்க வாதிகளும்..........

****** நீக்கப்பட்டுள்ளது. -யாழ்பாடி.

Edited by yarlpaadi

நமது பள்ளி பருவத்தில் இலங்கை அணி எல்லோருரிடமும் அடி வாங்கிய அணி, தற்போது நன்கு விழையாடும்போது எம்மை அறியாமல் தன்வசம் இழுத்து செல்லும் காந்த சக்திபோல் இவ் இலங்கை அணி உள்ளது. அத்துடன் தென் இலங்கை அணிகள், யாழ் கல்லூரிகள் அணிகளிடம் அடிவாங்கி சென்ற சம்பவமும் உண்டு.

கிரிக்கெட் எம்முடன் நன்கு கலந்து விட்டது. ஆனாலும் கிழக்கில் எமது மக்கள் எல்லாவற்ரையும் இழந்து தவிக்கும்போது நாம் இலங்கை அணிக்கு பகிரங்கம்மாக ஆதரவு தெரிவிப்பது நல்லது அல்ல.

நாம் மேற்குஇந்தியா சென்று இலங்கைக்கு எதிரான பதாதைகளை காண்பிக்கவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை

எமக்கு இனத்துவேசம் இருக்கக்கூடாது

எவர் விளையாட்டில் வெற்றிபெற்றாலும் வாழ்த்தவேண்டும்

ஆனால் சிறீலங்கா எமது நாடு அதற்காக அது வெல்லவேண்டும் என்று எந்தத்தழிழனாவது ஆதரவளிப்பானாகில் அதைவிட முட்டாள்தனம் இருக்கமுடியாது

அப்போ ஏன்ப்பா தென் ஆபிரிக்காவை மட்டும் தடை செய்தார்கள்?

விளையாட்டு தானே என்று(சாப்பாட்டை மட்டும் தடைசெய்து போட்டு)

விட்டு இருகலாமே :P :P

எங்களை எல்லாம் அடித்து கலைத்து அகதிகளாக அலைய விட்டிருக்கும் ஒரு துவேச நாட்டுக்கு ஆதரவாக இருப்பதா.

மானம் கெட்ட தமிழரராகி விட்டோமா.

இதே சிங்ககொடி பொறித்த இராணுவ சீருடை தான் எங்களை தின்கிறது.

எங்களை பொறுத்தவரையில் சிங்கக் கொடி நாசி கொடிக்கு சமனானது.........

சிங்கள ஸ்ரீஇலங்கா தோற்று வீடு போகும் போது தமிழர் எல்லாம் சந்தோசப்பட வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியக் கொடியுடன் கிறிக்கெற் மைதானத்தை வலம்வந்த ரசிகர்

மேற்கிந்தியத்தீவு பிரிச்டவுணில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த உலககிண்ண கிறிக்கெற் போட்டியில் நேற்றைய தினம் சிறிலங்காவிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வேளையில் ரசிகர் ஒருவர் தமிழீழத்தேசியக் கொடியை ஏந்தியவாறு மைதானத்தை வலம்வந்தார்.

சர்வதேச சமூகத்தினரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பலரும் கலந்துகொண்ட இவ்வுலகக் கிண்ண கிறிக்கெற்போட்டியில் சிறிலங்கா அணியினர் மைதானத்தில் நின்றுகொண்டிருந்த பொழுது இவ் ரசிகர் அவர்களுக்கு முன்பாக தமிழீழத் தேசியக் கொடியுடன் வலம்வந்துள்ளமை உலகத்தமிழர்களை மகிழ்சிக்குள்ளாக்கியுள்ளதா

எமது உறவு ஒன்று இப்படி செய்ததை நினைக்கும் போது மிகவும் மகிழ்சியாய் இருக்கின்றது எனவெ அந்த உறவுக்கு எமது முத்தங்கள் உரித்தாகட்டும் எனது அரிகில் இருந்தால் நிச்சயம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மேண்மைப் படுத்தி இருப்பேன் !

எமது தேசியக்கொடியை தூக்கியதற்காக வும் அவ்விடத்தின் இடர்கள் நடுவில் நீர் எவ்வளவு இடர் பட்டு இருப்பீர் என்பதை நினைத்தும் உமக்கு ஆயிரம் நன்றிகள் ( நீர் நீடூழிகாலம் வாழ்க)

நன்றியுடன்

நாதன் தோமஸ்

சிறிலங்கா அரசு இனி மேற்கிந்திய தீவுகளையும் விடுதலைப்புலிகளை தடை செய்ய சொல்லி கேட்கப்போகிறது :huh::lol::lol:

இந்தத்தளத்தில் இருந்தவை ஆனால் என்னால் இந்தப்படத்தின் கதை இப்பொழுதுதான் அறிந்தேன் வாசித்தேன் நீங்களும் வாசித்து இதனைப்பற்றிய உண்மையை எடுத்து உரையுங்கள் நன்றி

மண்ணாங்கட்டியாகிவிட்ட "மண்" - சுப்பு தாசன் (யேர்மனி)

ஈழத் தமிழன் தலையிலே மண்ணள்ளிப் போட்டு அவனை சர்வதேச அரங்கிலே இழிவுபடுத்தியிருக்கிறது மண் என்கிற ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாயினும், இந்த படத்தைப் பார்க்கும் துரதிர்ஸடம் எனக்கு இப்பொழுதுதான் கிட்டியது.

நாம் கட்டிக் காத்த பண்பாட்டையும் நெறி முறைகளையும் சிங்களவன் சிதைத்துக் கொண்டிருக்கும் இவ் வேளையிலே நம்வர்களும் சேர்ந்து இந்தக் கைங்கரியத்திலே ஈடுபடுவது என்பது மன்னிக்க முடியாத ஒரு பெரும் குற்றம்.

அந்தப் பணியை இந்த மண் திரைப்படம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது.

இலங்கைத் தமிழன் திறமைகளுக்கு தடை போட சிங்கள அரசு ஆரம்பித்த போது தான் அவன் அத் தடைகளை முட்டி மோதி உடைத்து தனது திறமைகளை சர்வ தேச எல்லைக்கு அறிவிக்க முயன்றான். விளைவு ஒவ்வொரு துறையிலும் அவன் கால் பதித்து தனது முத்திரையினை பதித்துக் கொண்டு வருகிறான்.

இலக்கியம் என்றாலும் சரி, உழைப்பியம் என்றாலும் சரி, எமது படைப்பாளர்களையும் கலைஞர்களையும் அதற்காக உழைப்பவர்களையும் ஊக்குவிக்க வேண்டிய கடப்பாட்டிலே நாம் இருக்கிறோம். ஆனால் அதுவே நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்க சென்று நச்சுக் களைகளை வளர்த்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது கடமையே

எமது போராட்டத்தை விற்று பணம் பண்ணும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர். அவர் ஏற்கனவே பல படங்களை பண்ணியிருப்பதாகவும் படு ஆர்ப்பட்டமாக விளம்பரப்படுத்தியிருந்தார்.

வயது வந்தவர்களுக்கென்று அறிவிப்புச் செய்து காட்டவேண்டிய இப்படத்தை „இயக்கப் படம்“ என்ற ஓரு மாயையினை மக்கள் மத்தியிலே பரவவிட்டு ஜரோப்பாவிலே வியாபாரம் பண்ண முயற்சித்திருக்கிறார்கள் இப்படத்தோடு தொடர்புள்ளவர்கள். இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு துணை புரிந்திருக்கிறது „றமி“ நிறுவனம்.

பணம் கிடைத்தால் இவர்கள் எதையும் வெளியீடு செய்வார்கள் எனும் நிலைக்கு கீழிறங்கி விட்டார்களோ எனும் வருத்தமான கேள்வியே இதில் எழுகிறது.

கதைப்படி மலையகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இலங்கை இராணுவத்தாலே உயிர் உடமை இழப்புகளுக்கு ஆட்பட்டு வன்னியிலுள்ள கனகராயன் குளத்துக்கு இடம் பெயர்கிறது. அங்கே வைத்து அவர்களின் வாழ்க்கையானது எப்படியெல்லாம் அந்தப் பகுதி மக்களாலே இழிவு படுத்தப்படுகிறது என்பதே கதையாம்.

அந்தக் குடுத்பத் தலைவன் வேலைக்குப் போகும் இடத்திலும் சரி மது அருந்தும் இடத்திலும் சரி வார்த்தைக்கு வார்த்தை „வடக்கத்தையான் வடக்கத்தையாள்“ என்று அவர்கள் இழிவு படுத்தப் படுகிறார்களாம். பாடசாலையிலே படிக்கும் சக மாணவர்களாலும் ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப் படுகிறாளாம் அந்த குடும்பத்தின் மகள்.

கதையின் காலமோ சமகாலமாக இருக்கிறது. கனகராயன் குளமோ புலிகளின் கட்டுப் பாட்டிலே இருக்கிறது. இதிலே வேடிக்கை என்னவெனில் உயர் சாதிப் பையனுடன் சேர்ந்து காதலில் ஈடுபட்ட அப் பெண் கற்பமாகி விடுவதால் பையனின் குடும்பத்தவரால் ஏற்க மறுக்கப்பட்ட போது இறுதியிலே காவல் துறையிடம் முறைப்பாடு செய்யப்படுகிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள்ளே .விசாரணை செய்வதற்கு வருகின்ற காவல் துறையோ இலங்கைப் பொலிஸாம். எப்படி இருக்கிறது கதை.?

அங்கிருக்கும் பாடசாலையிலே கற்பிக்கும் ஒரு பெண் ஆசிரியர் பாலியல் கல்வியை தரக்குறைவாக மாணவர்களிடையே போதிக்கிறார். அது சம்பந்தமாக படு கேவலமாக நகைச் சுவை வேறு விடுகிறார். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற ஆசிரியர் மீது நாம் வைத்திருக்கும் பய பக்தி என்பது எவ்வாறானது என்பது இங்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அந்த ஆசிரியை தான் இப்படி தரக்குறைவாகக் கதைக்கிறார் என்றால் மாணவிகளே அதையும் மிஞ்சி விடுகிறார்களாம்.

உதாரணத்திற்கு ஒரு காட்சி. ஒரு இடத்திலே சில இளைஞர்கள் கூட்டமாக வருகிறார்கள் அங்கே ஒரு சக பாடசாலை தோழி அவர்களைப் பார்த்து கேட்கிறார் நீங்கள் ஏன் அங்கை போறியள் எண்டு தெரியும் அதிலை போற வாற பெட்டையளின்ரை ஆற்றை பெரிசு சின்னன் எண்டு பார்க்கத் தானே போறியள் எண்டு சொல்கிறார் உண்மையிலேயே எம் இளம் பெண்கள் அந்தளவு நிலைக்கு கீழ் இறங்கி விட்டார்களா?

பாடல் ஒன்று படு விரசமாக எழுதப்பட்டும் காட்சி அமைக்கப்பட்டும் உள்ளது. இந்தப் படலின் முடிவிலே நாயகி நயகனின் சட்டை பொத்தானைக் கழற்ற நாயகன் நாயகியின் சட்டையை கழற்றுகிறார். விட்டால் மிகுதியையும் எடுத்து விடுவார்கள் போலிருக்கிறது. கல்லெறிக்குப் பயந்து விட்டார்கள் போலும்.

பின் எல்லா விடயங்களும் நடந்து முடிந்த பின்னே இளைஞன் கேட்பான் நாம் அவசரப்பட்டு விட்டோம் என்று அதற்கு பெண் சொல்கிறாள் மனசைக் கொடுக்கத் தான் யோசிக்க வேணும் அதுக்குப்பின்னாடி உடம்பைக் கொடுக்க ஏன் யோசிக்கணும் ஆகா என்னவொரு தத்துவம்.

அத்துடன் கருவைக் கலைப்பதற்கு அந்தப் பெண்ணே பப்பாசி உண்ணலாம் என்று வழியும் சொல்கிறாள். ஒரு நண்பருடன் இந்தப் படம் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, „பப்பாசிப் படத்தையா சொல்கிறீர்கள்“ என்று கேட்டார். அந்தளவிற்கு இந்தத் திரைப்படத்தின் பெயர் நாறிப் போய்க்கிடக்கிறது.

தகப்பனுக்கு பயந்த மகனாக இருப்பவர் வெளி நாட்டுக்கு தப்பி ஓடும் போதிலே பேருந்து வண்டியிலே தனது தந்தைக்கு முன்னால் தந்தையின் நண்பரோடு உரையாடுவது இன்னும் கேவலமானது „நிறையப் பேர் அந்தப் பெட்டைக்குப் பின்னாலை திரிஞ்சம், ஆர் முதல்லை …………எண்டு எனக்குத் தான் அது வாச்சிது“. ஒரு தகப்பனுக்கு முன்னால் மகன் கதைக்கும் கதையா இது?

மலையக மக்கள் வடபகுதி மக்களாலே இழிவு படுத்தப் படவில்லை என்று நான் நியாயப்படுத்த வரவில்லை ஆனால் அது தற்போதும் அதுவும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிலே நடக்கிறது என்பதையே ஏற்க முடியாதுள்ளது.

இந்தியாவின் மசாலா சினிமாவை மனப் பால் குடித்துக் கொண்டு அதை ஈழத்திலே அரங்கேற்றி பணம் பண்ண முனைந்திருக்கிறார்கள் இலண்டனில் இருக்கும் புதியவன் குழுவினர். (புதியவன் லண்டனிலே ஒரு பேராசிரியராம்)

இங்கொரு வேடிக்கை என்னவெனில் ஊர் ஊராக இப்படத்தை "இயக்கப்படம்" என்று கதையைப் பரப்பி திரையிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இதை இந்தியாவிலும் திரையிட்டு எமது மானத்தை ஏலம் போட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயா தொலைக்காட்சியும் நிறையவே உதவியுள்ளது.

ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு அரசியல் சதி நடைபெற்று இருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.