Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிநந்தன் வர்தமான் ஒப்படைப்பு: எல்லா கண்களும் அட்டாரி எல்லையை நோக்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  

பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.

7:20 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவுக்குள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாகா-அட்டாரி எல்லைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.

6:55 PM:இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் இருநாடுகளுக்கிடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக பிபிசி உருது சேவையின் செய்தியாளர் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

6:20 PM: இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை சேர்ந்த வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அபிநந்தனின் வருகையை எதிர்நோக்கி பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கனோர் காத்திருக்கின்றனர்.

5:50 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பு வழக்கம் போல் தங்களது நிகழ்ச்சியை நடத்தியதாக பிபிசி உருது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அபிநந்தன் ஒப்படைப்பு

5:20 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

5:00 PM: இந்திய எல்லையான அட்டாரியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்தவுடன் அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ வாகனங்கள் இந்தியாவின் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4:40 PM: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் வாகனங்கள் வாகா எல்லையை வந்தடைந்துள்ளன. இருப்பினும், அதில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளாரா என்று தெரியவில்லை.

அபிநந்தன் ஒப்படைப்பு: எல்லா கண்களும் அட்டாரி எல்லையை நோக்கி

4:20 PM: கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களிலுள்ள விமான நிலையங்களை தவிர்த்து மற்றனைத்து பாகிஸ்தானின் வான் மார்கங்களிலும் வரும் மார்ச் 4ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்து அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாகா (பாகிஸ்தான்) எல்லை

4:15 PM: "இந்தியர்களை பெருமையடைய வைத்திருக்கும் துணிவுமிக்க இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனும், நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

4:00 PM:இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க இந்தியாவின் எல்லைப்பகுதியான அட்டாரியில் காத்திருக்கும் மக்கள்.

அட்டாரி எல்லையில் குவியும் மக்கள்  

3.40 PM: இந்தியத் தரப்பில் வாகா-அட்டாரி எல்லையில் இருந்து அரை கி.மீ. முன்பாகவே நிறுத்தப்பட்டன ஊடகங்கள். தினமும் இந்த எல்லை வாயிலை மூடும் நிகழ்வையும் அணி வகுப்பையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இன்று அணி வகுப்பு ரத்து செய்யப்பட்டாலும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவிக்க உள்ள நிலையில் அங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர்.

 

3.25 PM: அட்டாரி - வாகா எல்லை வாயிலை மாலையில் மூடும்போது தினசரி இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும். இந்தியத் தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை நடத்தும் இந்த தினசரி நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் துணை கமிஷனர் ஷிவ் கில்லார் சிங் இதனைத் தெரிவித்தார்.

ஷிவ் கில்லார் சிங்

3.10 PM: அபிநந்தனை விடுவிக்கக் கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

2.15 PM - இது வாகா எல்லையில் பாகிஸ்தானின் பகுதி ஆனால் வாகா எல்லையையொட்டிய பாகிஸ்தான் பகுதியில் பெரியளவில் ஆள்நடமாட்டம் இல்லை. ஊடகத்தினர் மட்டுமே உள்ளனர்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=9e6migtmBtM"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: பாகிஸ்தானின் வாகா எல்லையில் நிலைமை என்ன? | Abhinandan Release |" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=9e6migtmBtM~/tamil/india-47411365" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

1:50 PM - அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. எத்தனை மணிக்கு அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்பதை பாகிஸ்தான் இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

1:20 PM - பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக தனது வான் எல்லையை பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக மூடியுள்ளது.

பாகிஸ்தான் வழியாகச் செல்லும் விமானங்கள் சுற்றி, வேறு பாதையில் பயணமாகின்றன.

1:08 PM - வாகா - அட்டாரி எல்லைக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் தங்களது கேமராக்களை வாகனங்களிலேயே வைத்துவிட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

1:00 PM - இஸ்லாமிய நாடுகள் உடனான இந்தியாவின் பொருளாதார உறவு வளர்ச்சி அடைந்துள்ளது என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் அமர்வில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார். சுஷ்மா கலந்துகொள்வதால் பாகிஸ்தான் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

Image caption அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.அபிநந்தனை வரவேற்க எல்லையில் கூடியிருக்கும் இந்தியர்கள்.

12:44 PM: விமானி அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஷோயப் ரஜாக் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.

12:30 PM - அபுதாபியில் இன்று தொடங்கவுள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தைத் தாம் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷேக் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறப்பு அழைப்பாளராக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.

12:00 PM - அபிநந்தன் வாகா - அட்டாரி எல்லையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசி இடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வாகா - அட்டாரி எல்லை பரப்பரப்பாகியுள்ளது.

இந்தியத் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் அட்டாரி - பாகிஸ்தான் தரப்பிலுள்ள கிராமத்தின் பெயர் வாகா.

அட்டாரி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும், வாகா பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் உள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அபிநந்தன் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கே விளக்குகிறோம்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் புகுந்து இந்திய விமானம் செவ்வாய்க்கிழமை குண்டு வீசியதை அடுத்து, பதிலடியாக மறு நாளே இந்திய எல்லையில் புகுந்து பாகிஸ்தான் விமானம் தாக்குதல் நடத்தியது. அப்போது நடந்த மோதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், ஒரு விமானத்தை தாங்கள் இழந்ததாகவும், ஆனால், பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாங்கள் வீழ்த்தியதாகவும் இந்தியா கூறியது.

அபிநந்தன்

இந்தியாவின் விமானி ஒருவரை சிறைப்படுத்தியுள்ளோம் என்றும் அவரிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்தார்.

இந்திய விமானியை சிறைப்பிடித்துள்ளதாக விவரிக்கும் ஒரு காணொளி காட்சியையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

கண்கள் கட்டப்பட்ட நிலையில், முகத்தில் ரத்தத்தோடு அபிநந்தனைக் காட்டும் காணொளியை புதன்கிழமை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டது.

மோசமான முறையில் அவரைக் காட்சிப்படுத்திக் காட்டியதாக இந்தியா குற்றம்சாட்டியது.

இந்தியாவிலுள்ள சமூக ஊடகப் பதிவர்கள் அபிநந்தனை நாயகனாக சித்தரித்தனர்.

#SayNoToWar என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் பதிவிட்டனர்.

இந்திய விமானிக்கு என்ன நடந்தது?

இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவரை இந்த நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த விமானி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், உள்ளூர்வாசிகளால் தாக்கப்படுவதாக தோன்றுகின்ற படங்கள் பகிரப்பட்டுள்ளதை இரு நாடுகளும் கண்டித்துள்ளன. அந்த தாக்குதலில் இருந்து விமானியை காப்பாற்றிய பாகிஸ்தான் சிப்பாய்கள் தலையிட்டது புகழப்பட்டுள்ளது.

கண்கள் கட்டப்பட்டநிலையில் தண்ணீர் கேட்கின்ற விமானியின் காணொளியை வெளியிட்ட பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம், பின்னர் அதனை நீக்கிவிட்டது.

பிந்தைய காணொளியில் குவளையில் இருந்து தேனீர் குடித்து கொண்டிருப்பது போலவும், கண்கள் கட்டப்படாமல், முகம் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விங் கமேண்டர் காட்டப்படுகிறார்.

அவரது பெயர், ராணுவ பதவி, இந்தியாவின் தெற்கு பகுதியை சேர்ந்தவர் என பல தகவல்களை அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகி உள்ளது.

PAKISTAN INFORMATION MINISTRYபடத்தின் காப்புரிமை PAKISTAN INFORMATION MINISTRY

அதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.

இந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.

அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார். அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் அவர், "என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது" என்கிறார்.

ராணுவ அறநெறிகளுக்கு ஏற்றபடி இந்த விமானி நடத்தப்படுவதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிஃப் கபூர் தெரிவித்திருக்கிறார்.

அபிநந்தன் யார்?

 

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்தியா முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

யார் இந்த அபிநந்தன்? விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.

அபிநந்தன்

விங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அபிநந்தன், 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது, விங் கமாண்டர் பதவியை வகிக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது விங் கமாண்டர் பதவி. இவர் இயக்கியதாக சொல்லப்படும் மிக்21 பைசன் ரக விமானம் இந்திய விமானப்படையின் 3ஆம் அணியை சேர்ந்தது. இந்தப் பிரிவை கோப்ரா பிரிவு என்றும் அழைக்கிறார்கள்.

மனைவியும் முன்னாள் விமான படை வீரர்

அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

 

மணி ரத்னம் படத்திற்கு உதவிய அபிநந்தனனின் தந்தை

இந்திய விமானப்படையில் மிக மூத்த அதிகாரியாக இருந்தவர் சிம்மகுட்டி வர்தமான். 1974ல் இந்தியா விமானப்படையில் பணியில் சேர்ந்த அவர், 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய பணிக் காலத்தில் மொத்தம் ஏழு பதவி உயர்வுகளைப் பெற்று ஏர் மார்ஷலாக ஓய்வு பெற்றார். 2017ல் வெளியான இயக்குநர் மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசராக செயல்பட்டுள்ளார். அபிநந்தனின் தாய் ஷோபனா வர்தமான் சென்னையில் மருத்துவம் பயின்றவர். விங் கமாண்டர் அபிநந்தனின் தாத்தா இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்ததகாவும் கூறப்படுகிறது.

அபிநந்தன்படத்தின் காப்புரிமை AFP

அபிநந்தன் பிடிபட்டது எப்படி? பாகிஸ்தானில் நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

இலியாஸ் கான், பிபிசி

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் எவ்வாறு பாகிஸ்தானில் தரையிறங்கினார், எப்படி அவர் இந்தியர் என்று அவர்களுக்குத்தெரிய வந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரிக்கிறார், பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் உள்ள ஹொரன் கிராமத்தை சேர்ந்த மொஹமத் ரசாக் சௌத்ரி. இவருக்கு வயது 58.

அவரது வார்த்தைகளில்…

"விமானி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றுதான் நான் தனிப்பட்ட முறையில் எண்ணினேன். அவரது பாராசூட்டில் இந்தியக் கொடி இருந்ததை வைத்து, அவர் இந்தியர் என்பது தெரிய வந்தது. அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து, அவர் பறந்து நிலத்தை அடைவதை நான் பார்த்தேன். அவரைப் பார்த்து அங்கு விரைந்த உள்ளூர் மக்கள், அவரைத் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினேன்.

அவர் தரையிரங்கிய இடத்தில் ஏற்கனவே சில இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் தான் இந்தியாவில் இருக்கிறேனா என்று அபிநன்தன் கேட்டுள்ளார். அவர்கள் பதில் கூறியவுடன், பாராசூட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், இந்திய தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக முழக்கம் எழுப்பினார். அதற்கு எதிராக லாங் லிவ் பாகிஸ்தான் என்று அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்களை பயமுறுத்த, தன் துப்பாக்கியை எடுத்து வானத்தை பார்த்து சுட்டார் அபிநந்தன். ஆனால், அந்த இளைஞர்கள் கோபமடைந்து கல்லைத் தூக்கி எறிய ஆரம்பித்தனர். அதனால், வானத்தை பார்த்து சுட்டுக் கொண்டே அவர் ஓடத் தொடங்கினார்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓர் ஓடையில் குதித்தார். அப்போது எனது மைத்துனர்களில் ஒருவர், அவரது காலில் சுட்டார். அபிநந்தனை பார்த்து அவரது துப்பாக்கியை கீழே போடும்படி அவர் சொல்ல, அபிநந்தனும் அதை செய்தார்.

அப்போது ஓர் இளைஞர், அபிநந்தனை பிடித்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த சில காகிதங்களை எடுத்து அபிநந்தன் கிழித்ததோடு, சிலவற்றை அவரது வாய்க்குள் அடைத்துக் கொண்டார். ஆனால், அந்த இளைஞர்கள், சில காகிதங்களை அவரிடம் இருந்து பறித்து, பின்பு அதனை ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

எங்கள் இளைஞர்கள் கோபமாக இருந்தனர். அவரை அடித்தும், அறையவும் அவர் அருகில் சென்றனர். சிலர் அதனை தடுக்க முயன்றனர். நானும், அவரை தாக்க வேண்டாம் என்றும் ராணுவம் வரும்வரை அவரை தனியாக வைக்கவும் கூறினேன்" என்றார்.

நச்சிகேட்டாபடத்தின் காப்புரிமை Getty Images Image caption முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பேயுடன் கைகுலுக்கும் குரூப் கேப்டன் கம்பம்படி நசிகேதா. அருகில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி

முன்னதாக, அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டதுபோல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ. ஒய். டிப்னிஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "கார்கில் போரின் போதும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அபோதும்கூட விமானி நசிகேதா, விமானத்திலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. எதிரியின் நடவடிக்கையால் அவர் வெளியேறவில்லை. அவரது விமான என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் அவர் வெளியேற நேர்ந்தது. பாகிஸ்தான்வசம் பிடிப்பட்ட அவர், சிறிது காலம் அங்கு வைக்கப்பட்டப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டார். எனவே அதே முன்மாதிரி அடிப்படையில் தற்போது பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ள இந்திய விமானியும், சம்பவம் உண்மையாக இருக்குமானால், விடுவிக்கப்படுவார் என்றே நம்புகிறேன்," என்றார்.

நிலைமை கைமீறினால் நானோ மோதியோ கூட கட்டுப்படுத்த முடியாது - இம்ரான் கான்

தப்புக் கணக்குப் போடுவதால் ஏற்படும் ஆபத்து அதிகம். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆயுதங்கள் உள்ள நாடுகளில், பதற்ற நிலை அதிகரித்தால், நிலைமை கையை மீறிப் போகும். நானோ, மோதியோ கூட அந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, உட்கார்ந்து பேசுவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று புதன்கிழமையன்று (பிப்ரவரி 27) தெரிவித்தார் இம்ரான்.

எனவே, இனிமேலாவது கொஞ்சம் நடைமுறை அறிவுடன், ஞானத்துடன் நடந்துகொள்வோம். நம்மிடம் இந்திய விமானிகள் உள்ளனர். ஆனால், இங்கிருந்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதுதான் முக்கியமானது என்றார் இம்ரான் கான்

''அபிநந்தன் விடுதலை ஆவார்''

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று நேற்று (வியாழக்கிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

டுவிட்டர் இவரது பதிவு @PTVNewsOfficial: "In our desire of peace, I announce that tomorrow, and as a first step to open negotiations, Pakistan will be releasing the Indian Air Force officer in our custody." - Prime Minister @ImranKhanPTIபுகைப்பட காப்புரிமை @PTVNewsOfficial @PTVNewsOfficial <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @PTVNewsOfficial: &quot;In our desire of peace, I announce that tomorrow, and as a first step to open negotiations, Pakistan will be releasing the Indian Air Force officer in our custody.&quot; - Prime Minister @ImranKhanPTI " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/PTVNewsOfficial/status/1101076495529885697~/tamil/india-47411365" width="465" height="509"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @PTVNewsOfficial</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@PTVNewsOfficial</span> </span> </figure>

அபிநந்தனை விடுதலை செய்வதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்றால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார். இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.

அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.

மகனை வரவேற்க சென்னையில் இருந்து வரவேற்க புறப்பட்டார் தந்தை

சென்னையில் அபிநந்தன் வீடு இருக்கும் பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.

விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் நேற்று டெல்லிக்கு புறப்பட்டார்.

செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.

ஆர்.ஜி.கே. கபூர்படத்தின் காப்புரிமை DD

நேற்று மாலை பத்தரிகையாளர்களை இந்திய முப்படை தளபதிகள் சந்தித்தனர்

வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.

அபிநந்தன் திரும்புவது பற்றி கேட்டபோது, இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் "மகிழ்ச்சி" அடைவதாக கூறினார். ஆனால், அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதுபற்றி கேட்டபோது, அவர், "ஜெனிவா ஒப்பந்தத்தின்படியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்".

பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை வழங்கியது. முதலில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்தினோம், மூன்று பேரை கைது செய்தோம் என்றது. பின் இரண்டு பேர் என்றது. இறுதியில் ஒரு விமானி மட்டுமே தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தது என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/india-47411365

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன்

 

 
Abhinandanjpg

அபிநந்தன் வர்தமானன் வாகா எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் நிற்கும்போது..| ஏ.என்.ஐ.

 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

 

அவருடன் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர் ஆகியோர் வந்தனர்.

அவரை வாகா எல்லைக்கு அழைத்து வந்த பிறகு ஆவணங்கல் சரிபார்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டன.

அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானன் இந்தியாவுக்கு இன்று திரும்பினார்.

பாகிஸ்தான் விமானப்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ ஜெட் மிக்-21 விமானத்தின் விமானியான அபிநந்தன் பிப்ரவரி 27, 2019 அன்று பாகிஸ்தான் வான்வெளி விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

கைதுக்குப் பிறகு அவர் பன்னாட்டுச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க மரியாதையாக நடத்தப்பட்டார்.  அவர் இந்தியா திரும்புவதை நல்லெண்ணச் செய்கையாகவும் இந்தியாவுடனனா பதற்றத் தணிப்புச் செயலாகவும்  பிரதமர் இம்ரான் அறிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் மிகச் சுருக்கமாக அவர் “திரும்பியதில் மகிழ்ச்சி” என்றார்.  அவர் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வார்.

இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அபிநந்தனை வரவேற்றார். அவர் முறையான வழக்கப்படி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/india/article26411960.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

 

25  வருடமாக சிறையில் வாடும் அப்பாவியான நளினி என்பவரைப்பற்றி எந்த பார்ப்பன ஊடகமும் வாய் திறக்காது.

பார்ப்பனப் பண்டமான அபிநந்தனின் விடுதலைக்கு, பார்ப்பன மிருக ஊடகங்கள் அலறியடித்தலின் விளைவு 2 நாள்களில் விடுதலை.

பார்ப்பன இனத்தை, பார்ப்பன மிருகங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

25  வருடமாக சிறையில் வாடும் அப்பாவியான நளினி என்பவரைப்பற்றி எந்த பார்ப்பன ஊடகமும் வாய் திறக்காது.

பார்ப்பனப் பண்டமான அபிநந்தனின் விடுதலைக்கு, பார்ப்பன மிருக ஊடகங்கள் அலறியடித்தலின் விளைவு 2 நாள்களில் விடுதலை.

பார்ப்பன இனத்தை, பார்ப்பன மிருகங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.

துளசி... நீங்கள் இதுவரை, எழுதிய :110_writing_hand: பதிவுகளில்... 
இந்தப் பதிவு, எனக்கு மிகவும் பிடித்த  அருமையான பதிவு. :)

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் போன்ற போராளி அமைப்போடும்.. அப்பாவி ஈழத்தமிழர்கள் மீதும்..  காட்டின வெட்டி வீரத்தனத்தை ஹிந்தியா... பாகிஸ்தானிடம் காட்டப் போய் இப்படி அவமானப்பட்டு நிற்கிறது. ஹிந்தியாவுக்கு இது உலக அரங்கில் அவமானம் என்பதற்கும் அப்பால்.. அதன் பிராந்திய வல்லரசுக் கனவை பாகிஸ்தான் ஒரே நாளில் அடித்துத் தூள் தூளாக்கி விட்டது. ரெம்ப மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகள் போன்ற போராளி அமைப்போடும்.. அப்பாவி ஈழத்தமிழர்கள் மீதும்..  காட்டின வெட்டி வீரத்தனத்தை ஹிந்தியா... பாகிஸ்தானிடம் காட்டப் போய் இப்படி அவமானப்பட்டு நிற்கிறது. ஹிந்தியாவுக்கு இது உலக அரங்கில் அவமானம் என்பதற்கும் அப்பால்.. அதன் பிராந்திய வல்லரசுக் கனவை பாகிஸ்தான் ஒரே நாளில் அடித்துத் தூள் தூளாக்கி விட்டது. ரெம்ப மகிழ்ச்சி.

நெடுக்ஸ்.... இம்ரான்கான் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, 
அரசியலிலும்... மோடியின் பந்திற்கு,  சிக்ஸர் அடித்து... உயர்ந்து விட்டார். 
ஆனால்... இந்திய ஊடகங்கள், செய்யும் அலப்பரையை... தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... இம்ரான்கான் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, 
அரசியலிலும்... மோடியின் பந்திற்கு,  சிக்ஸர் அடித்து... உயர்ந்து விட்டார். 
ஆனால்... இந்திய ஊடகங்கள், செய்யும் அலப்பரையை... தாங்க முடியவில்லை.

People hold depiction of captured Indian Air Force Pilot Wing Commander Abhinandan, as they shout anti-India slogans during a protest in Lahore, Pakistan, 28 February 2019.

இந்தப் படம் ஒன்றே போதும் ஹிந்தியர்கள் எல்லாரும் இந்து சமுத்திரத்துக்குள் குதிச்சு தற்கொலை செய்துக்க. 😋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏப்ரல் மாதம் வரும்  தேர்தலுக்காக மோடி செய்யும் திருக்கூத்துக்கள் இவை என வெளிநாடுகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் வெளிநாட்டு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கும் கிந்தியனுக்கு ஒரு  பொய்யான பழி தீர்ப்பு தேவைப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை பெற்ற அபிநந்தனுக்கு அமெரிக்கா, சீனா வாழ்த்து

abinanthan-2-720x450.png

பாகிஸ்தானினால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், விடுதலை பெற்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

அபிநந்தனின் விடுதலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய விமானி விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதுடன் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.

மேலும் இரு நாடுகளிலும் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கைகளை விரைந்த மேற்கொள்ளுங்கள்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் மற்றும்  அவர்களுக்கான நிதியுதவியை தடுப்போமென ஐ.நா.பாதுகாப்பு சபையில் வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றுமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கின்றோம்” என செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் குறிப்பிட்டுள்ளதாவது, “பாகிஸ்தான் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கையை பாராட்டுவதுடன் அதனை வரவேற்கின்றோம்.

அந்தவகையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/விடுதலை-பெற்ற-அபிநந்தனுக/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தனுக்கு புகழராம் சூட்டிய டெண்டுல்கர்

தனது செயல்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்ற சிறந்த பாடத்தை அனைத்து மக்களுக்கும் இந்திய விமானி அபிநந்தன் புகட்டியுள்ளதாக இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடாமுயற்சி ஆகியவற்றினால் அனைத்து மக்களுக்கும் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்.

sasem.jpg

தனது செயல்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும் அவர் உணர்த்தியுள்ளார்” என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பிரபலங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/50997

 

இம்ராம்கானை ஆட்டமிழக்க செய்ய இந்திய பந்துவீச்சாளர் வீசிய பந்தை ஓங்கி அடித்த இம்ராம் கான்  அடித்த சிக்ஸரில் பந்து எல்லைக் கோட்டைத்தாண்டி வந்து விழுந்தது. இந்திய வீரர களால் கட்ச் செய்ய முடியவில்லை.  மைதானத்தில் பலத்த கைதட்டல் இம்ராம் கானுக்கு. இந்திய அணிப் பயிற்சியாளர்  மோடியை மாற்றினால்  இந்திய அணி வெற்றி பெறலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சகலதுறை ஆட்டக்காரர் .. 😍

53057926_2572417772820415_78763055335887

53352430_2365670836799239_24761069803898

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தத்தால் அல்ல; அமைதி வேண்டியே அபிநந்தனை விடுதலை செய்தோம்: பாகிஸ்தான்

Published :  02 Mar 2019  17:04 IST
Updated :  02 Mar 2019  17:38 IST

ஐ.ஏ.என்.எஸ்

இஸ்லாமாபாத்
 
pakjpg

பாக்.பிரதமர் இம்ரான் கான், இந்திய வீரர் அபிநந்தன் : கோப்புப்படம்

இந்திய விமானி அபிநந்தனை அழுத்தத்தால் அல்ல, அமைதி வேண்டி விடுதலை செய்தோம் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விடுதலை செய்யப்பட்டார். சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் அழுத்தத்தால்தான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்ததாகக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மொகமது குரேஷி பிபிசிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ''அபிநந்தனை நாங்கள் விடுவித்ததற்கு யாருடைய அழுத்தமும் காரணமில்லை. எந்த நாடும் எங்களைக் கட்டுப்படுத்தவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவின் துன்பத்தை அதிகப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இந்தியக் குடிமக்களை துயரத்தில் ஆழ்த்த நாங்கள் ஆசைப்படவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அரசியல் காரணமாக பிராந்தியத்தின் அமைதி ஆபத்துக்கு உள்ளாவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால்தான் அபிநந்தனை விடுதலை செய்தோம்.

ஜெய்ஷ் - இ - முகமதுக்கு எதிராக ஆதாரங்கள் பகிரப்பட்டால், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் தேச விரோத சக்திகளை என்றுமே பாகிஸ்தான் அனுமதிக்காது'' என்றார் குரேஷி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.