Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைக்கிள் கடை அப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“வந்துட்டான்யா வந்துட்டான்
எழுதியே கொல்லப் போறான் “
என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது.
சீ சீ அப்படி செய்வேனா என்ன?
இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை.
ஆனாலும் பிரபல்யமான கதை.
இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம்.
இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது.

                                     யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.

                                    ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை.

                                    நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம்.

                                   சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார்.

                                  கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே.

                                அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன்.

                               சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு.

                                நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார்.

                              ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது.

                             மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது.

                             இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.

                             இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.

                            மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள்.

                             இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள்.

                               அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.
முற்றும்.
ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  காசி ஆனந்தனுக்கும்   வண்ணை  ஆனந்தனுக்கும்  பொட்டு வைத்திருக்கின்றேன்

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ---------  பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

தொடருங்கள்

Edited by நிழலி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------- ------  பணியை  செய்து  கொண்டிருந்தார்

ஜேர்மனியில் இருந்து யாழ் ஒற்றர்படை வந்தால் தெரிந்துவிடும்.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

நானும்  காசி ஆனந்தனுக்கும்   வண்ணை  ஆனந்தனுக்கும்  பொட்டு வைத்திருக்கின்றேன்

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------ ------ பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

தொடருங்கள்

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

அப்பவே அவருக்கு தெரியும் உதெல்லாம் வீண்வேலை என்று.அதை நினைத்து தான் சொல்லியிருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

                             யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது.

அப்ப நாங்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அப்ப நாங்கள் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? 😄

இல்லாட்டி அகதிகளா நாடுநாடா அலைவோமா?

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் சம்பந்தனுக்கு இரத்தத்திலகம் வைச்சனான். பிளேட் எடுத்து விரலை கீறும் போது  ஏன் தம்பி என்னத்துக்கு இதெல்லாம் எண்டு சரியாய் கவலைப்பட்டவர்.☹️

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

-------இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான்.

 -------அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது.

6 hours ago, விசுகு said:

வண்ணை  ஆனந்தன்  யேர்மனியிலிருந்து ------- --------பணியை  செய்து  கொண்டிருந்தார்

தற்பொழுது  எங்கே  என்று  தெரியவில்லை

ஈழப்பிரியன் எழுதிய  கதையின்... முழுப் பகுதியும், 
 மாணவப் பருவத்தில்  பழகிய நன்கு பரிச்சயமான இடங்கள்.
அதனால் இக்கதையை... ரசித்து வாசித்தேன். நன்றி.

வண்ணை ஆனந்தனை,  1981 களில் ...   ஜேர்மனியில் ----- என்ற இடத்தில், பலர் கண்டதாகவும்,
அதிக போதைப் பழக்கமும் இருந்ததாகவும் சொல்வார்கள்.
அதற்குப் பின்... அவரைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் கேள்விப் படவில்லை. 
இருக்கிறாரா..இல்லையா...  வேறு நாட்டிற்குப் போய் விட்டாரா தெரியாது.
இங்கு இருந்திருந்தால்... ஏதோ ஒரு வகையில், எப்படியும் செய்திகள் வந்திருக்கும்.
இல்லை என்றே நினைக்கின்றேன்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும்.

வண்ணை ஆனந்தன்ரை பேச்சு கேக்கிறதுக்கெண்டே கூட்டம் அலைமோதும். அனல்,கனல் எல்லாம் பேச்சுலை பறக்கும்.

சிங்களவன்ரை பெயரை வாசிக்க கல்லு றோட்டிலை வண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு........அவர்ரை மேடைப்பேச்சுக்கள் இருக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 
அந்த நேர பேச்சு எப்படி எல்லாம் இளைஞர்களை இரத்தம் சிந்த வைத்தது.
நல்லகாலம் நீங்க கேக்கல்ல.

5 minutes ago, குமாரசாமி said:

வண்ணை ஆனந்தன்ரை பேச்சு கேக்கிறதுக்கெண்டே கூட்டம் அலைமோதும். அனல்,கனல் எல்லாம் பேச்சுலை பறக்கும்.

சிங்களவன்ரை பெயரை வாசிக்க கல்லு றோட்டிலை வண்டில் போற சத்தம் மாதிரி இருக்கும் எண்டு........அவர்ரை மேடைப்பேச்சுக்கள் இருக்கும்...

உண்மை தான்.வண்ணையின் பேச்சுக்கென்றே கூட்டமும் விசிலடியும் இரத்தத் திலகமிட வரிசைகளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் எழுதிய  கதையின்... முழுப் பகுதியும், 
 மாணவப் பருவத்தில்  பழகிய நன்கு பரிச்சயமான இடங்கள்.
அதனால் இக்கதையை... ரசித்து வாசித்தேன். நன்றி.

நாங்கள் பழகிய இடங்கள்.
ஆனால் சுவியர் பிறந்து வளர்ந்த இடம்.

30 minutes ago, தமிழ் சிறி said:

வண்ணை ஆனந்தனை,  1981 களில் ...   ஜேர்மனியில் ----- என்ற இடத்தில், பலர் கண்டதாகவும்,

போன உடனேயே அகதி அந்தஸ்தும் கிடைத்திருக்கும்.நல்ல காசும் புழங்கியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ரதி said:

நீங்களும் அவருக்கு இரத்த பொட்டு இட்டு விட்டு இங்க ஓடி வந்து விட்டீங்கள்😂 
 
 நீங்கள் சொன்ன விடயம் சம்பந்தமாக நீண்டகாலம் என் மனதை உறுத்தியதும் பெரிய கவலையுமாக இருந்தது.

ஆனால் இன்று ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு நடந்தும் அல்லது ஒடுங்கியும்/ஒடுக்கப்பட்ட பின்னரும் சிங்களத்தின் கோரமுகம் அப்படியே அன்று போல் இன்றும் இருக்கின்றது. எமது அரசியல் தலைவர்களை ஏதோ ஒருவகையில் ஊதாசீனம் செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.அல்லது ஏதோ ஒரு வகையில் தமிழினம் சம்பந்தப்பட்ட ஒருவரை வளைத்துப்போட்டு சகலதையும்  உலகளாவிய ரீதியில் தாம் விரும்பியதை சாதித்து  முடிக்கின்றனர்.

கடந்த 30 நாட்களின் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்தாலே சிறு பிள்ளைக்கும் புரியும்.

இதை சேர்.பொன் ராமநாதன் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வருவது என்னவெனில்......

புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். ஆதலால் இன்னொரு யூலை வந்தால் அதன் விளைவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகையால் இன்றைய இலங்கை அரசியலை பொறுத்த வரை புலம்பெயர் தமிழன் ஒரு வைரக்கல்.

பாதுகாப்பாக இருந்து பேசும் பலம் அவனிடம் நிறையவே வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு அந்த அயலை சேர்ந்தவர்தான்.அவரது கடையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் வரை யாருக்கும் எதுவும் தெரியாது.பழகுவதற்கு இனிமையானவர்.பின்பு கட்சி கூட்டங்கள் என்று பிசியாகி விட்டார்.அப்போது நீராவியாடியில் ஒரு விளையாட்டு ரீம் இருந்தது.அவர்கள் எங்கள் ரீமுடன் வந்து மாட்ச் விளையாடுவார்கள். விளையாட்டு முடிந்ததும் எல்லோரும் இருக்கிற காசு போட்டு ரோஸ்சும் ரொட்டியும் பிளவ்ஸில் வாங்கி சாப்பிடுவோம். (அப்ப அதெல்லாம் வீட்டுக்கு தெரியாமல் மாட்டிறைச்சி சாப்பிட்டது).....!  😁

என்ன பழைய நினைவெல்லாம் கிண்டுறீங்கள் ஈழப்பிரியன்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

என்ன பழைய நினைவெல்லாம் கிண்டுறீங்கள் ஈழப்பிரியன்....!

உங்கள் கருத்துக்கு நன்றி சுவி.
இதைப்பற்றிய ஞாபகமே இல்லை.ஆனால் உங்களின் கதையில் சிறி பதிலெழுதும் போது ஏதோ ஒரு சைக்கிள்கடையைத் தெரியுமா என்று கேட்டார்.
அப்போது தான் அப்புவின் சைக்கிள்கடை ஞாபகம் வந்தது.
அந்த நால்வரின் கைதும் அந்தநேரம் பெரிதாக பேசப்பட்டதும் விடுதலையாகிவர அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட விதமும் நினைத்தே எழுதினேன்.
மீண்டும் நன்றி.

4 hours ago, suvy said:

அப்பு அந்த அயலை சேர்ந்தவர்தான்.அவரது கடையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் வரை யாருக்கும் எதுவும் தெரியாது.பழகுவதற்கு இனிமையானவர்.பின்பு கட்சி கூட்டங்கள் என்று பிசியாகி விட்டார்.அப்போது நீராவியாடியில் ஒரு விளையாட்டு ரீம்

வேறு யாரோ கொண்டுவந்து வைத்த இடத்தில்த் தான் இவர் மாட்டுப்பட்டதாக தம்பியார் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் நின்றதை வாசித்து மகிழ்ந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நினைவில் நின்றதை வாசித்து மகிழ்ந்தேன்.

70 க்கு பின் பிறந்தவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.இருந்தும் மாவை இன்னமும் பிரபல்யமாக இருப்பதால் முற்றாக ஒதுக்கிவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
  • ஈழப்பிரியன்அண்ணா ,இது போன்ற பல மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் 
21 hours ago, குமாரசாமி said:

 நீங்கள் சொன்ன விடயம் சம்பந்தமாக நீண்டகாலம் என் மனதை உறுத்தியதும் பெரிய கவலையுமாக இருந்தது.

ஆனால் இன்று ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு நடந்தும் அல்லது ஒடுங்கியும்/ஒடுக்கப்பட்ட பின்னரும் சிங்களத்தின் கோரமுகம் அப்படியே அன்று போல் இன்றும் இருக்கின்றது. எமது அரசியல் தலைவர்களை ஏதோ ஒருவகையில் ஊதாசீனம் செய்த வண்ணமே இருக்கின்றார்கள்.அல்லது ஏதோ ஒரு வகையில் தமிழினம் சம்பந்தப்பட்ட ஒருவரை வளைத்துப்போட்டு சகலதையும்  உலகளாவிய ரீதியில் தாம் விரும்பியதை சாதித்து  முடிக்கின்றனர்.

கடந்த 30 நாட்களின் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை பார்த்தாலே சிறு பிள்ளைக்கும் புரியும்.

இதை சேர்.பொன் ராமநாதன் காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

நான் சொல்ல வருவது என்னவெனில்......

புலம்பெயர் தமிழர்களின் பலம் சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். ஆதலால் இன்னொரு யூலை வந்தால் அதன் விளைவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆகையால் இன்றைய இலங்கை அரசியலை பொறுத்த வரை புலம்பெயர் தமிழன் ஒரு வைரக்கல்.

பாதுகாப்பாக இருந்து பேசும் பலம் அவனிடம் நிறையவே வந்து விட்டது.

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டாலே போதும்.வெளியே இருந்து கொண்டு எவ்வளவு நையாண்டி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு சைக்கிள் கடைக்கு பக்கத்தில், சிவலோகநாதன் என்பவர் பலசரக்கு கடை வைத்திருந்தார்....

நல்ல மனிதர்.... வேறு விடயங்களில் பலவீனமானவர்.... ஒரு வடிக்கையாளரான பெண்ணுக்கும் அவருக்கும் தொடுப்பு.... கடைக்கு பின்னால் ஒதுங்க, வந்த பெடியள் கடை, திறந்திருக்கு, ஆளைக் காணவில்லை என்று தேட, பெடியள் பின்னால வரபோகினம் எண்டு, பின்னால் இருந்து அவர் ஓடி வர, பின்னால் பெண்ணும் வர... பெடியளுக்கு விளக்கீட்டுது..

பிறகென்ன.... இனிப்பு போத்தலுக்க கையை போடுவதும், சாமானை எடுக்கிறதும், அண்ணை, கணக்கில போடுங்கோ... எண்டு கடைசீல, கடையை பூட்டி, சொந்த மனிசியின்ர கண்ட்ரோலில் கந்தர்மடம் சந்தில கடையை மூவ் பண்ணி,  குடும்பம் கடை பின்னால் இருந்ததால், அப்பாவி மாதிரி குந்தி இருந்தார்.

மனிசி கல்லாவில் விறைப்பாக நிக்க, பெடியள் அங்க கணக்கு வைக்க முடியவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

இப்படித் தான் புலிகள் இருக்கும் போது அவர்கள் தலையில் பொறுப்பை இறக்கி வைத்து விட்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்டார்கள்...

6 hours ago, ரதி said:

இப்ப புலம் பேர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறீர்கள் 🤔

இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அப்பு சைக்கிள் கடைக்கு பக்கத்தில், சிவலோகநாதன் என்பவர் பலசரக்கு கடை வைத்திருந்தார்....

நல்ல மனிதர்.... வேறு விடயங்களில் பலவீனமானவர்.... ஒரு வடிக்கையாளரான பெண்ணுக்கும் அவருக்கும் தொடுப்பு.... கடைக்கு பின்னால் ஒதுங்க, வந்த பெடியள் கடை, திறந்திருக்கு, ஆளைக் காணவில்லை என்று தேட, பெடியள் பின்னால வரபோகினம் எண்டு, பின்னால் இருந்து அவர் ஓடி வர, பின்னால் பெண்ணும் வர... பெடியளுக்கு விளக்கீட்டுது..

பிறகென்ன.... இனிப்பு போத்தலுக்க கையை போடுவதும், சாமானை எடுக்கிறதும், அண்ணை, கணக்கில போடுங்கோ... எண்டு கடைசீல, கடையை பூட்டி, சொந்த மனிசியின்ர கண்ட்ரோலில் கந்தர்மடம் சந்தில கடையை மூவ் பண்ணி,  குடும்பம் கடை பின்னால் இருந்ததால், அப்பாவி மாதிரி குந்தி இருந்தார்.

மனிசி கல்லாவில் விறைப்பாக நிக்க, பெடியள் அங்க கணக்கு வைக்க முடியவில்லை.

நன்றி நாதம்.
கந்தர்மட சந்தியில் இருந்து இந்து மகளீர் பாடசாலைப் பக்கம் செல்லத்துரை மாஸ்ரர் என்பவர் பெரியதொரு ரியூசன் வகுப்பு நடாத்தியவர் தெரியுமா?
69-70 களில் அவரிடமும் வீட்டார் அனுப்பியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி நாதம்.
கந்தர்மட சந்தியில் இருந்து இந்து மகளீர் பாடசாலைப் பக்கம் செல்லத்துரை மாஸ்ரர் என்பவர் பெரியதொரு ரியூசன் வகுப்பு நடாத்தியவர் தெரியுமா?
69-70 களில் அவரிடமும் வீட்டார் அனுப்பியிருந்தனர்.

கேள்விப்பட்டிருக்கிறேன், பெரியண்ணர் போனவர். நான் சொன்ன கதை, அவற்ற சிநேகிதர் சொன்னது.

  • கருத்துக்கள உறவுகள்

70 களில் இந்த இரத்தத்திலகம் இடுவது ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கு. இஞ்ச பார்றா எங்கட யாழ்க்கள செம்பட்டைகளும் கியூவில நிண்டதை🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 4:45 AM, வல்வை சகாறா said:

70 களில் இந்த இரத்தத்திலகம் இடுவது ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கு. இஞ்ச பார்றா எங்கட யாழ்க்கள செம்பட்டைகளும் கியூவில நிண்டதை🤣

அந்த நேரம் கூட்டங்களுக்கு பெண்களையே காணமுடியாது.இல்லை என்றால் நீங்களும் அடித்துபிடித்து வந்திருப்பீர்கள்.

என்ன நம்ம தலைவன் வரல்லை என்றால் இன்னமும் அடுப்பு ஊதலோ தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.