Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவனையும் புத்தரையும், சாத்தான்கள் எனும் மத நிகழ்வுக்குத் தடை…

Featured Replies

51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெள்ளையர் மதத்தை மட்டும்தான் திணித்தனர். ஆரியர் முக்கியமாக தமிழ் மொழியையும் அல்லவா சீர்குலைத்தனர். 

அப்ப ஏன் அக்கா இப்ப உலகம் முழுக்க ஆங்கிலக் கல்வி அத்தியாவசியமாக மாறிப்போச்சு?

இப்ப தமிழனே தமிழைப் பேச வெக்கப்படுறான். இதற்கெல்லாம் யார் மூல காரணம்? பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலகம் முழுக்க நிலை நாட்ட விரும்பிய ஆங்கிலேயர் தானே? அவர்களால் மதம், மொழி மட்டுமா சீர்குலைத்தது? எங்கள் நாட்டின் வளங்களைச் சுரண்டிக் கொண்டு மட்டும் அவர்கள் வெளியேறவில்லை. நாட்டில பெரும் குழப்பத்தையும் விதைத்துவிட்டல்லவா சென்று விட்டார்கள் அந்த பிரித்து-ஆண்ட பிரித்தானியர்? பிறகு வளர்்ந்து பூதாகரமான நாட்டுப் பிரச்சனை இப்ப அவங்கட நாட்டிலேயே உங்களை வசிக்கச் செய்துவிட்டது; அந்த மகாராணியின் முடிக்குக் கீழ் இன்னும் உள்ள ஒரு ஆங்கிலம் பேசும் நாட்டில் நான் மண்வாசத்தை இழந்து காலம் கழிக்கிறேன். 

ஆரியர் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் நோக்கத்துடன் இதை நான் எழுதவில்லை. ஒப்பீட்டளவில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பின் பாதிப்பு அதிகம். ஆரியர் ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் ஐரோப்பிய வருகைக்கு முன்னரும் தமிழ் மொழி அழிந்து போகும் நிலையிலா இருத்தது? ஐரோப்பியர் தான் வந்து அதை வாழ வைத்தார்களா?

7 hours ago, குமாரசாமி said:

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அபத்தம் என்றுவிட்டு......வேறு எதையோ புலம்புவதன் அர்த்தம் என்னவோ? இதற்கு பதில் எழுதினால் இன்னொரு பச்சை புள்ளிகிடைக்க இறைவனை வேண்டுகின்றேன். 🤣

நான் சொன்ன பதில் உங்களுக்கு புரியாததால் மீண்டும் சொல்ல வேண்டி உள்ளது. ஒரு தனி மனிதனோ இனக்குழுவோ எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வாழவேண்டும் என்று யாரும் ஒரு முன்மொழிவை நிர்ணயிக்க முடியாது.ஒரு தமிழன் எப்படி வாழ வேண்டும் என்று இன்னொரு தமிழன் நிர்ணயிக்க முடியாது. அவரவருக்கு தமக்கு பிடித்த lifestyle ல் வாழ்வதறகு உரிமை உண்டு. பொதுவான விமர்சனங்கள், விவாதங்களின் மூலமாக  மக்களின் வாழ்க்கை முறையில் அறிவுபூர்வமாக பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பாக நடக்கும். அவ்வாறான விமர்சனங்கள் விவாதங்களையே இங்கு செய்கிறோம். 

 கூறப்படும் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால் அது புலம்புவது போல இருப்பது வழமை.  சரி. இனி விடுமுறை நாட்களை என்ஜோய்  பண்ண வேண்டி இருப்பதால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டதாக நினைக்கவேண்டாம். 

Have a nice long weekend. 🍻🥂🍷 enjoy️ 

16 hours ago, ரஞ்சித் said:

துல்பேன்,

மதம் சார்ந்த உங்களின் கருத்துக்களை வாசித்து வருகிறேன். நான் அறிந்தவரையில் எம்மதத்தையும் நீங்கள் சார்ந்து எழுதுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? எனது நிலைப்பாடும் அப்படித்தான். தமிழருக்கு மதம் தேவையில்லை என்பதே எனது கருத்து.

நான் தாய்வழியாக கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றிவந்தாலும்கூட, அது எம்மேல் வலிந்து திணிக்கப்பட்ட மதம் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழர்களின் ஆதி மதத்தில் இருந்தால் (அது எதுவென்று தெரியவில்லை) நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறேன்.

மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பது எனது நிலைப்பாடு. அவைக்காக மனிதர் தமக்குள் அடிபட்டு அழிவது அநியாயம்.

மதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம்.

உண்மை தான் ரஞ்சித். நான் எந்த மதத்தையும் சார்ந்து எழுதுவதுல்லை. எல்லா மதங்களும் பரப்பும் மூடப்பழக்கங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு. பிறப்பால் இந்துவாக பிறந்ததாலும் இந்து மதத்தில் மூடப்பழங்கங்கள் மிக மிக அதிகம் என்பதாலும் அதை  அதிகமாக  சுட்டிக்காட்டுகிறேன். மத விடயத்தில் தெளிவாக உறுதியாக  இருப்பதால் மத மாற்றும் கும்பல்கள் என்னை அணுகவே  முடியாது. எனது தாய் தந்தையர் புலால் கூட உண்ணாத அளவுக்கு கடவுள் பக்தி கொண்டவர்கள். அன்னை தந்தை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் அவர்கள் சொல்லித்தந்த அறிவுக்கு ஒவ்வாத முடப்பழக்கங்களை கைக்கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்மீகம் என்பது தனி மனித உணர்வு.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

👍

Quote:

துல்பேன்,

மதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம்.

tulpen

உண்மை தான் ரஞ்சித். நான் எந்த மதத்தையும் சார்ந்து எழுதுவதுல்லை. எல்லா மதங்களும் பரப்பும் மூடப்பழக்கங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு. பிறப்பால் இந்துவாக பிறந்ததாலும் இந்து மதத்தில் மூடப்பழங்கங்கள் மிக மிக அதிகம் என்பதாலும் அதை  அதிகமாக  சுட்டிக்காட்டுகிறேன். மத விடயத்தில் தெளிவாக உறுதியாக  இருப்பதால் மத மாற்றும் கும்பல்கள் என்னை அணுகவே  முடியாது. எனது தாய் தந்தையர் புலால் கூட உண்ணாத அளவுக்கு கடவுள் பக்தி கொண்டவர்கள். அன்னை தந்தை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் அவர்கள் சொல்லித்தந்த அறிவுக்கு ஒவ்வாத முடப்பழக்கங்களை கைக்கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.

👍

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

துல்பேன்,

மதம் சார்ந்த உங்களின் கருத்துக்களை வாசித்து வருகிறேன். நான் அறிந்தவரையில் எம்மதத்தையும் நீங்கள் சார்ந்து எழுதுவதில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? எனது நிலைப்பாடும் அப்படித்தான். தமிழருக்கு மதம் தேவையில்லை என்பதே எனது கருத்து.

நான் தாய்வழியாக கிறீஸ்த்தவ மதத்தைப் பின்பற்றிவந்தாலும்கூட, அது எம்மேல் வலிந்து திணிக்கப்பட்ட மதம் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. தமிழர்களின் ஆதி மதத்தில் இருந்தால் (அது எதுவென்று தெரியவில்லை) நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கிறேன்.

மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்பது எனது நிலைப்பாடு. அவைக்காக மனிதர் தமக்குள் அடிபட்டு அழிவது அநியாயம்.

மதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம்.

ரஞ்சித், மதங்கள் தவிர்த்து தமிழன் என்பதற்கான அடையாளம் என்ன? 

36 minutes ago, tulpen said:

எல்லா மதங்களும் பரப்பும் மூடப்பழக்கங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு. பிறப்பால் இந்துவாக பிறந்ததாலும் இந்து மதத்தில் மூடப்பழங்கங்கள் மிக மிக அதிகம் என்பதாலும் அதை  அதிகமாக  சுட்டிக்காட்டுகிறேன்

இதுவே எனது நிலைப்பாடும். ஆனால், ஒருவருக்கும் தீங்கு தராத பண்டிகைக் கொண்டாங்களைக் கேள்வி கேட்பது மூடநம்பிக்கைக்கு எதிரான ஆரோக்கியமான போராட்டம் என நினைக்கிறீர்களா? அதனால் ஏற்படும் மனக்கசப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மூடநம்பிக்கை ஒழிக்கப்படத் தான் வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு சொல்லிக்கொண்டு மற்றவர்களை நோகடிக்கிறார்கள். அவையெல்லாம் வீண் விவாதங்கள் என நினைக்கிறேன்.

தவிர, சமகாலத்துக்குத் தேவையான பல விடயங்கள் எவ்வளவோ உள்ளன. முடிவு காணப்பட முடியா ஆராய்ச்சிகளாலும், விவாதங்களாலும் எவருக்கும் பயனில்லை என்பதே என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் நினைக்கிறேன் அவருக்கு எது உண்மையான மூட நம்பிக்கை என்று  தெரியவில்லை  அல்லது புலத்தில் இருப்பதால் இப்படி எழுதுவதால் தன்னை மற்றவர்கள் புத்திசாலிகள் என்று நினைக்க  வேண்டும் என  எண்ணுகிறாரோ தெரியவில்லை...வேறு மதத்தில் உள்ள மூட  நம்பிக்கை பற்றி எழுதியதை நான் காணவில்லை...இந்த திரியில் கூட இந்த நிகழ்வை ஜஸ்ட்டின் தொடங்கி நிழலி வரை கண்டித்து எழுதின பிறகு தான் தான் எழுதா விட்டால் தப்பாய் போய் விடும் என்பதால் வந்து பேருக்கு கண்டித்து விட்டு போனவர்...இங்கு எழுதும் சிலர் மூட நம்பிக்கை களைய வேண்டும் என்ட நோக்கில் எழுதுகிறார்கள். ஆனால் இவருக்கு இருப்பது அப்பட்டமான மதக் காய்ச்சல்  

1 hour ago, மல்லிகை வாசம் said:

இதுவே எனது நிலைப்பாடும். ஆனால், ஒருவருக்கும் தீங்கு தராத பண்டிகைக் கொண்டாங்களைக் கேள்வி கேட்பது மூடநம்பிக்கைக்கு எதிரான ஆரோக்கியமான போராட்டம் என நினைக்கிறீர்களா? அதனால் ஏற்படும் மனக்கசப்புகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மூடநம்பிக்கை ஒழிக்கப்படத் தான் வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு சொல்லிக்கொண்டு மற்றவர்களை நோகடிக்கிறார்கள். அவையெல்லாம் வீண் விவாதங்கள் என நினைக்கிறேன்.

மல்லிகை வாசம், ஒரு திரியில் நிகழ்ந்த வற்றை இன்னொரு திரியில் காவுவது ஆரோக்கியமான போக்கு அல்ல, அத்துடன் தவறும் ஆகும்.

அந்த திரியில் ஏற்கனவே நன்கு விவாதித்தாயிட்டு, இதில் அதை தொடர வேண்டிய அவசியம இல்லை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ரஞ்சித், மதங்கள் தவிர்த்து தமிழன் என்பதற்கான அடையாளம் என்ன? 

எமது மொழியும், அதனோடு இணைந்த பாரம்பரியமும். கலைகள் மற்றும் பண்பாடு  கலாசாரம்......இவை யாவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

நான் சொன்ன பதில் உங்களுக்கு புரியாததால் மீண்டும் சொல்ல வேண்டி உள்ளது. ஒரு தனி மனிதனோ இனக்குழுவோ எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வாழவேண்டும் என்று யாரும் ஒரு முன்மொழிவை நிர்ணயிக்க முடியாது.ஒரு தமிழன் எப்படி வாழ வேண்டும் என்று இன்னொரு தமிழன் நிர்ணயிக்க முடியாது. அவரவருக்கு தமக்கு பிடித்த lifestyle ல் வாழ்வதறகு உரிமை உண்டு. பொதுவான விமர்சனங்கள், விவாதங்களின் மூலமாக  மக்களின் வாழ்க்கை முறையில் அறிவுபூர்வமாக பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பாக நடக்கும். அவ்வாறான விமர்சனங்கள் விவாதங்களையே இங்கு செய்கிறோம். 

 கூறப்படும் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாவிட்டால் அது புலம்புவது போல இருப்பது வழமை.  சரி. இனி விடுமுறை நாட்களை என்ஜோய்  பண்ண வேண்டி இருப்பதால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டதாக நினைக்கவேண்டாம். 

Have a nice long weekend. 🍻🥂🍷 enjoy️ 

உங்களுக்கும் உங்களைப்போன்ற சீமான்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

நீங்கள் சொல்வது போல் எனக்கும் மூட நம்பிக்கைகளில் ஈடுபாடில்லை தான்.குறிப்பாக கடவுள் சம்பந்தப்பட்ட பல அவசியமற்ற செலவுகள்.

நீங்களும் உங்கள் கூட்டுகளும் இங்கிருந்து அரைச்சமாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். இதனால் ஏதும் ஆகப்போவதில்லை. யாழ்களத்திற்கும் "அரைச்சமா களம்" என்ற பட்டப்பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎

எனவே உங்கள் போன்றோருக்கு ஒரு வேண்டுகோள்.👈

தாயகத்தில் உள்ள பாடசாலைகளில் மதம் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்பிப்பதை நிறுத்த முயற்சிசெய்யுங்கள்.

பாடப்புத்தகங்களில் பிட்டுக்கு மண்சுமந்த கதை,திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட கதை,இரண்டு பொண்டாட்டிக்காரன் சுந்தரமூர்த்தி நாயனார் மோதிரம்  எடுத்த கதை திருநாவுக்கரசர் உளவாரம் செய்த கதை எல்லாவற்றையும் அகற்றச்சொல்லுங்கள்

பரீட்சை பெறுபேறுகளில் இந்துசமய சைவசமய புள்ளிகளை கணக்கில் எடுக்கக்கூடாதென ஆலோசனை வழங்குங்கள்.

இங்கிருந்து தாயக மக்களுக்கு கோவில் நற்பணிமன்றங்கள் மூலமாக அனுப்பப்படும் உதவிகளை தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

சாமிக்கு பால் ஊற்றும்,சிதறுதேங்காய் அடிக்கும் கோவில்களின் நற்பணி மன்றங்களை மூடச்சொல்லுங்கள்.

அனாதை சிறுவர் இல்லங்கள்.....முதியோர் இல்லங்களில் தொங்கும் கடவுள் படங்களை அடித்து நொருக்க சொல்லுங்கள்.

பாடசாலை கல்லூரிகளில் தினசரி காலையில் நடக்கும் இறைவணக்க நிகழ்வுகளை இடிஅமீன் பாணியில் நிறுத்துங்கள்.

பாடசாலைகளில் நடக்கும் அர்த்தமற்ற சரசுவதி பூசைகளை அடாவடியாக நிறுத்துங்கள்.

அதன் பின் வாருங்கள் சுத்தம் சுகாதாரமாக விவாதிக்கலாம்.

இது உங்களுக்கு மட்டும்.
இன்றைய இளைய தமிழ்  சமுதாயம் வெகுதூரம் சென்று விட்டார்கள்.அவர்களுக்கு எது செய்யவேண்டு எது செய்யக்கூடாது நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள்.அவர்களின் எதிர்காலம் மூடநம்பிக்கையற்ற உலகமாக ஒளிர இருக்கின்றது.ஆனால் உங்களைப்போன்ற ஜாம்பவான்களும் பெரியார் தாசர்களும் அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் நின்ற இடத்திலேயே நின்று சுழன்று கொண்டிருக்கின்றீர்கள்.

எனக்கு எல்லா நாட்களும் ஒரேமாதிரித்தான்.பிரத்தியேகமாக வார இறுதி நாட்களை கொண்டாடுவதில்லை.:grin:

2 hours ago, நிழலி said:

மல்லிகை வாசம், ஒரு திரியில் நிகழ்ந்த வற்றை இன்னொரு திரியில் காவுவது ஆரோக்கியமான போக்கு அல்ல, அத்துடன் தவறும் ஆகும்.

அந்த திரியில் ஏற்கனவே நன்கு விவாதித்தாயிட்டு, இதில் அதை தொடர வேண்டிய அவசியம இல்லை.

நன்றி

நிழலி, நானும் அங்கு தெளிவாகப் பதில் தந்துள்ளேன். இங்கு மட்டுமல்ல எங்குமே இது பற்றிப் பேசி வீணடிக்க விருப்பமில்லை. ருல்பென் சில கருத்துக்களை இங்கு முன்வைத்தார். அதற்குப் பதிலளிக்கையில் நானும் அந்தத் திரிபற்றி குறிப்பிடவேண்டியிருந்தது. 

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.