Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்..

April 21, 2019

கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில்  தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்…

Bomb-Blast-all.jpg?resize=663%2C484

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்  450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன், கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்காவில் இரு வெடிப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில்  29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய 13 பேர் இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, தெமட்டகொடைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 காவற்துறையினர் உயிரிழந்துள்ளனர்.  இச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்…

இலங்கையின் குண்டுவெடிப்பகளில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக போலந்து, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, மொறோக்கோ, மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை  தகவல்கள்  தெரிவித்துள்ளன.

எந்த அமைப்புகளும் உரிமை கோரவில்லை…

இலங்கையில்  இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்போ அல்லது எந்த அமைப்போ உரிமைகோரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில்  தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்…

கொழும்பு சங்கரில்ல விடுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சி-4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடுதியில்  இரு நபர்கள் நேற்றையதினம் (20.04. 2019) அறை இலக்கம் 616 இல் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த இரு நபர்களே இவ்வாறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தற்கொலை தாக்குதல் தாரிகளின் செயற்பாடுகள் விடுதியின் உணவகப்பகுதி மற்றும் விறாந்தைப் பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது. எனினும்  வெளிநாட்டவரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா விடுதியின் தற்கொலைத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இது வரை தெரியவரவில்லை.

சமூக வலைத்தளங்கள் முடக்கம்..

இலங்கையின்  பாதுகாப்புக் கருதி சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூகவலைத் தளங்களின் செயற்பாடுகுள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. குறிப்பாக முகப்புத்தகம், இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாடளாவிய ரீதியில்காவற்துறை  ஊரடங்கு இன்னு மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பாக கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான உயிர்ப்பு ஞாயிறு தினமான இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்ப்பு ஞாயிறு வழிபாகளில் ஈடுபட்டிருந்த தருணம் குறித்த குண்டுத்தாக்குதல்கள் ஆலயங்களில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதுமான செயல் என பல உலகநாடுகளும் அரசியல் தலைவர்களும்  கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பரிசுத்த பாப்ரசரும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை 2 ஆம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறைநாளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து காவற்துறை  உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல தேவாலயங்களுக்கு ஆயுதமேந்திய காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனை இலங்கையின் அரசியல்வாதிகள் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர். வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

நாட்டின் நிலைமை கருதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது, காவற்துறையினர், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்தியவர் இவரா? வெளியானது புகைப்படம்..

Attacker.jpg?resize=700%2C400நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகத்தில் ஒருவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த நபரே தனது பையில்கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2019/118872/

சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது என ஊடகவியலாளர் சரவணன் சொல்லியிருக்கின்றார் இன்று. மிகவும் திட்டமிடப்பட்ட நிகழ்வு  இது

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது என ஊடகவியலாளர் சரவணன் சொல்லியிருக்கின்றார் இன்று. மிகவும் திட்டமிடப்பட்ட நிகழ்வு  இது

55444967_2449291008437535_7154739062081847296_n.jpg?_nc_cat=106&_nc_ht=scontent-frt3-2.xx&oh=336c88cc7f790a83f8024adfed80e4ca&oe=5D4BC998

1915ஆம் ஆண்டு...... தமிழன் சேர் பொன்னம்பலம் இராமநாதனை சிங்களத் தலைவர்கள், 
குதிரை வண்டியில் இழுக்கும் காட்சி. 

இப்ப.... சேர் பொன் ராமநாதனும், சேர் பொன்  அருணாசலமும் இல்லை.
இதற்கு... தீர்வு காண, சம்பந்தன் ஐயாவைதான் கூப்பிட வேணும்.

சம்பந்தருக்கு... இன்று,  குண்டு வெடித்த விஷயம் தெரியுமோ, எண்டும்  தெரியவில்லை.
ஏனென்றால்... 27 உலகத் தலைவர்கள், கண்டனம் தெரிவித்து,  அறிக்கை விட்டு விட்டார்கள்.

சம்பந்தன் அய்யாவினதும், அவரின் கூட்டாளிகளினதும்   அறிக்கையை... இன்னும் காணவில்லை. 
யாரை... கண்டித்து, அறிக்கை விடுவது என்று, தமிழரசு கட்சி  குழம்பிப் போயுள்ளது போலிருக்கு.

அப்படி.. அவர்கள் அறிக்கை, விட்டிருந்தாலும்... இது, இப்ப முக்கியமில்லை இல்லை என்று,
செய்தி ஊடகங்கள்... பிரசுரிக்கவில்லைப் போல் தெரிகின்றது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை மட்டுமே சொல்லகூடியதாக உள்ளது  

  • கருத்துக்கள உறவுகள்

57686537_326836954911430_536459119125594

31 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் அய்யாவினதும், அவரின் கூட்டாளிகளினதும்   அறிக்கையை... இன்னும் காணவில்லை. 

நாளையான் வீரகேசரி வாசிக்க முன்னரே அவரும் அறிக்கை விட்டுவிட்டார்!
குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நிறுத்தவேண்டும் என்று கடும்தொனியில் அறிக்கை விட்டுள்ளார்!

இல்லையென்றால் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சொல்லியிருக்கார்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

நாளையான் வீரகேசரி வாசிக்க முன்னரே அவரும் அறிக்கை விட்டுவிட்டார்!
குற்றவாளிகளை சட்டத்தின் முன்னர் நிறுத்தவேண்டும் என்று கடும்தொனியில் அறிக்கை விட்டுள்ளார்!

இல்லையென்றால் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் சொல்லியிருக்கார்!

Ãhnliches Foto

போல்.... நாளையான்... வீரகேசரியின், படமும் இப்ப வந்திட்டுது.
இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும்...  வலியுறுத்தி இருப்பதாகவும்,
இல்லையேல்... போர் வெடிக்கும் என்று, ஆவேசமாக சொல்லிவிட்டு, சிரித்து விட்டு... வந்து விட்டார் சம்பந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

சியோன் தேவாலயத்தில் சண்டே ஸ்கூல் முடிந்து காலை ஆராதனை தொடங்கு முன்னர் ஒரு பருத்த முஸ்லீம் மனிதர் ஆலயத்திற்கு வந்து வாசலில் நின்றதாகவும்  அந்த சேர்ச்சை சேர்ந்த பெண் ஒருவர் அவரிடம்  போய் ஏன் வாசலில் நிக்கிறிர்கள் என்று கேட்ட போது அம்மாவுக்கு சுகமில்லை அதான் வந்தேன் என்று சொன்னவராம்...உள்ளுக்கு வரச் சொன்ன போதுஉள்ளே  போகவில்லையாம்...அப் பெண்  சேர்ச்சை சேர்ந்த இரு ஆண்களிடம் சொன்ன போது அவர்கள் இருவரும் சேர்ந்து  தூக்கிக் கொண்டு போகும் போது வாசலில் தான் வெடித்ததாம்..தூக்கிக் கொண்டு போனவர்கோடு சேர்த்து வெடித்தது...வாசலில் வாகனங்கள் நின்றதால் வெடித்து சிதறியிருக்கும் ....இதே ஆராதனை தொடங்கின பிறகு உள்ளுக்குள்ள வெடித்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாய் இருந்திருக்கும் 😭

36 minutes ago, ரதி said:

Father இது தொடபாக கதைக்கும் வீடியோ ஒன்று இருக்கின்றது. YouTube இல் தரவேற்றம் செய்து தான் இங்கு இணைக்க முடியும் என்பதால் இணைக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

57686537_326836954911430_536459119125594

பாரதம் வரப்போகுது போல தெரியுது....😀

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

Father இது தொடபாக கதைக்கும் வீடியோ ஒன்று இருக்கின்றது. YouTube இல் தரவேற்றம் செய்து தான் இங்கு இணைக்க முடியும் என்பதால் இணைக்கவில்லை

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது!

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர், இன்று காலை ஆராதனை நடப்பதற்கு முன்னதாக பையொன்றை சுமந்துகொண்டு தேவாலயம் அருகில் நடமாடியுள்ளார். இதனை அவதானித்த ஆலயத்தின் குருமார் அவரை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர். அதனை மறுத்த அவர் வெளியே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் சென்று தேவாலயத்தை நோட்டம் விட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் அங்குள்ள கடையொன்றிலிருந்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல இடங்களில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 207 பேர் உயிரிழந்த நிலையில் 450இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டுவெடிப்பு-சூத்திரத/

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

சியோன் தேவாலயத்தில் சண்டே ஸ்கூல் முடிந்து காலை ஆராதனை தொடங்கு முன்னர் ஒரு பருத்த முஸ்லீம் மனிதர் ஆலயத்திற்கு வந்து வாசலில் நின்றதாகவும்  அந்த சேர்ச்சை சேர்ந்த பெண் ஒருவர் அவரிடம்  போய் ஏன் வாசலில் நிக்கிறிர்கள் என்று கேட்ட போது அம்மாவுக்கு சுகமில்லை அதான் வந்தேன் என்று சொன்னவராம்...உள்ளுக்கு வரச் சொன்ன போதுஉள்ளே  போகவில்லையாம்...அப் பெண்  சேர்ச்சை சேர்ந்த இரு ஆண்களிடம் சொன்ன போது அவர்கள் இருவரும் சேர்ந்து  தூக்கிக் கொண்டு போகும் போது வாசலில் தான் வெடித்ததாம்..தூக்கிக் கொண்டு போனவர்கோடு சேர்த்து வெடித்தது...வாசலில் வாகனங்கள் நின்றதால் வெடித்து சிதறியிருக்கும் ....இதே ஆராதனை தொடங்கின பிறகு உள்ளுக்குள்ள வெடித்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாய் இருந்திருக்கும் 😭

ம்ம் உண்மைதான் 

கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலிருந்தே  ... தற்கொலை குண்டுதாரிகள். 

http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_192.html

காத்தான் குடியை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தில், காலாகாலமாக செயற்பட்டுவரும் முஸ்லீம் அடிப்படைவாதிகளின்  நடவடிக்கைகள்,  கிழக்கு ஆளுனர் முஸ்லீம் இனவாதி ஹிஸ்புல்லாவிற்கு தெரியாமல்/அறியாமல் நடந்தேறியிருக்கின்றனவா?

https://www.google.com/maps/place/Kattankudy,+Sri+Lanka/@7.6856575,81.7143887,14z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ae5331e2f99b853:0x82d52f9481a1211d!8m2!3d7.6853695!4d81.7260123

17 minutes ago, Nellaiyan said:

சாத்தியமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.