Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கை முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம்": அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
முகத்தை மூட வேண்டாம்படத்தின் காப்புரிமை NurPhoto

"இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேலும் கூறியுள்ளது.

சிலோன்

இந்த நிலையில், "முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா ஆடை தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலினுடைய நிலைப்பாடு என்ன" என்பது குறித்து, அந்த அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீனிடம் பிபிசி தமிழ் வினவியது.

"அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இந்த விடயத்தில் எடுக்கும் தீர்மானத்தை நாங்கள் அங்கிகரிப்போம். எங்கள் சமய விவகாரத்தில் அவர்கள்தான் அதிகாரமுள்ள பிரதான சபையாக உள்ளனர். எனவே, ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் பின்பற்ற வேண்டும்" என்றார் என்.எம். அமீன்.

இதேவேளை, நெருக்கடியான தற்போதை சூழ்நிலையில், முகத்தை மூடி, ஆடை அணிகின்றமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசயைப் பின்பற்றுவதே, பொருத்தமாகும் என்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் வலியுறுத்தினார்.

என்.எம். அமீன்.

ஏற்கனவே, முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் 'புர்கா' ஆடையினை இலங்கையில் தடைசெய்யக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வரவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

புர்காவை தடைசெய்யக் கோரும் பிரேரணையைக் கொண்டு வர வேண்டுமென்று, செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் - தான் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடக சந்திப்பில் ஆஷு மாரசிங்க கூறினார்.

நாட்டின் பாதுகாப்புக் கருதி 'புர்கா'வை தடை செய்ய வேண்டுமெனத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாரசிங்க; முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இது தொடர்பில் - தான் வினவியபோது; 'புர்கா' என்பது சம்பிரதாய பூர்வமான இஸ்லாமிய ஆடையல்ல எனக் கூறினார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், சில பயங்கரவாத குழுக்களின் அனுசரணையுடன் புர்கா ஆடை புழக்கத்துக்கு வந்ததா? என்கிற கேள்வி எழுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க அந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48062156

இஸ்லாம் பயங்கரவாததிற்கு வசதியாக உள்ள முகமூடி ஆடைகளுக்கு முழுமையான தடை அவசியம் என்டு பல சம்பவங்கள் சொல்லிற்று. பரீட்சைகளில் பல்வேறு திருட்டுத்தனங்களுக்கும் இந்த உடை உதவியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  சிறிலங்காவிலை  இனி கொஞ்ச நாளைக்கு நெற்றி நிறைய வீபூதியும்...... பெரிய குங்குமப்பொட்டோடையும் திரியிறதுதான் பாதுகாப்பு போலை கிடக்கு....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

  சிறிலங்காவிலை  இனி கொஞ்ச நாளைக்கு நெற்றி நிறைய வீபூதியும்...... பெரிய குங்குமப்பொட்டோடையும் திரியிறதுதான் பாதுகாப்பு போலை கிடக்கு....:cool:

Flags were lowered to half mast on government buildings, and people bowed their heads and reflected silently on the violence that has caused international outrage

https://www.dailymail.co.uk/news/article-6950223/ISIS-claim-responsibility-Sri-Lanka-terror-attack-police-say-Christchurch-retaliation.html?ito=social-facebook&fbclid=IwAR1F04fdZ3LXFxtr-jYkSLRpGc1QkZSZIMNrGa84Qrp-8jG3eCqHzfvVqp0

A woman fainted while praying for the victims of the Easter Sunday attacks in the country's capital Colombo earlier today

https://www.dailymail.co.uk/news/article-6950223/ISIS-claim-responsibility-Sri-Lanka-terror-attack-police-say-Christchurch-retaliation.html?ito=social-facebook&fbclid=IwAR1F04fdZ3LXFxtr-jYkSLRpGc1QkZSZIMNrGa84Qrp-8jG3eCqHzfvVqp0

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

  சிறிலங்காவிலை  இனி கொஞ்ச நாளைக்கு நெற்றி நிறைய வீபூதியும்...... பெரிய குங்குமப்பொட்டோடையும் திரியிறதுதான் பாதுகாப்பு போலை கிடக்கு....:cool:

சிங்களவர்கள்.... சோடா போத்திலை  திறக்கும் போது  வரும், 
நுரை மாதிரி.... உடனே பொங்கி எழக்  கூடிய, மனப்பான்மையில் உள்ளவர்கள்.

ஆராவது..  ஒரு  புத்த பிக்கு,  சிறுபான்மை இனத்தை எல்லாம்....
அடித்து... நொருக்கு, என்று சொன்னால்... எல்லாச்  சிங்களமும்,
நெருப்புப் பெட்டியுடன்.... வீதிக்கு  வந்து விடும்.

அதனால்... நாங்கள் தமிழர்கள், வழக்கம் போலை... பாதுகாப்பாக நடப்பதே நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பது எல்லாம் நன்மைக்கே இத்தோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள அடாவடி முஸ்லிம்களது கொட்டம் அடக்கப் பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் தமிழரின் சிதையில் குளிர்காய்ந்த முஸ்லீம்களுக்கு, சிதைத் தீயின் உண்மையான அனுபவம் கிடைக்கவிருக்கிறது. முதுகில் குத்தும் கைக்கரியத்திற்கான விலையை இப்போது அவர்கள் செலுத்துவார்கள்.

இஸ்லாமியப் பயங்கரவாதம் எந்த வழியிலாவது அழிக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

  சிறிலங்காவிலை  இனி கொஞ்ச நாளைக்கு நெற்றி நிறைய வீபூதியும்...... பெரிய குங்குமப்பொட்டோடையும் திரியிறதுதான் பாதுகாப்பு போலை கிடக்கு....:cool:

ஜே வி காலத்தில் தமிழ் அடையாள அட்டை பொக்கெரில் 
இருந்தால் கொழும்பில் ராஜா மாதிரி திரியலாம் 

பின்பு 1990 கடைசியில் ********
ரஞ்சன் விஜயரட்னவுக்கு குண்டை வைக்க எல்லாம் முடிஞ்சு போச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.