Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; கட்டுப்படுத்த திணறும் இராணுவம்!

Featured Replies

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, மடிகே மற்றும் அனுக்கான உள்ளிட்ட கிராமங்களிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்றைய தினம் சிலாபத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையால் நேற்றிரவு குளியாப்பிட்டியவிலுள்ள பள்ளிவாசல்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டபோதும் இன்றையதினமும் பல முஸ்லிம் கிராமங்களில் அசாதாரண சூழ்னிலைகள் உருவாகி வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து வடமேல் மாகாணம் முழுவதும் அவசர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிரமாக போராடிவருகின்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/119861?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

குருநாகலில் பதற்றம்: வீடுகளுக்கு தீ வைப்பு; வயல்களில் மக்கள்; பெருந்தொகை இராணுவம் குவிப்பு!

குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் வயல்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு இதுகுறித்து அங்கிருந்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவரை மேற்கோளிட்டு கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கொட்டம்பிட்டிய அரபுக்கல்லூரிக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் கூறுகிறார்.

இதேவேளை குரு நாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைக்கொண்ட வட மேல் மாவட்டத்தில் மறு அறிவித்தல்வரை உடன் அமுலுக்கு வரும்வகையில் அவசர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பெருந்தொகையான படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/119860?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் அவசர ஊரடங்கு! என்ன நடக்கிறது அங்கே?

வடமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஊரடங்கு மறு அறிவித்தல் வரையில் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குளியாப்பிட்டிய உள்ளிட்ட சில இடங்களில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஊரடங்கு தற்பொழுது வட மேல் மாகாணம் முழுவதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேவேளை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்காதபட்சத்தில் சிங்கள மக்கள் கிளர்ந்தெழ நேரிடும் என்று மல்வத்து பீடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/119859?ref=bre-news

  • தொடங்கியவர்

கம்பஹாவிலும் வன்முறை; உடன் அமுலுக்கு வந்தது ஊரடங்கு!

கம்பஹா பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறுகிறார்.

https://www.ibctamil.com/srilanka/80/119864?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, போல் said:

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, மடிகே மற்றும் அனுக்கான உள்ளிட்ட கிராமங்களிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர்.

அங்கே திணறல் ஒன்றும் இல்லை விட்டுப் பிடிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

ஹெட்டிபொல, குளியாப்பிட்டியில் ஏற்பட்ட பதற்றத்தில் எந்த உயிர்ச்சேதமும் இல்லை பொலிஸ்!

குருநாகல்-ஹெட்டிபொல-பகுதியில்-பொதுச்சொத்துக்கள்-சேதம்-ஊரடங்கு-அமுல்-720x450.jpeg

குருநாகல் – ஹெட்டிபொல மற்றும் குளியாப்பிட்டி உட்பட சில பகுதிகளில் இடம்பெற்ற பதற்றமான சூழலில் எந்தவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வடமேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் சில குழுக்களினால் கடைகள் உடைக்கப்பட்டு, பொது சொத்துக்களுக்கும் சேதமாக்கப்பட்டது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களில் பல வீடுகள் வாகனங்கள் தீமூட்டப்பட்டும் பள்ளிவாசல்களுக்கும் கடைகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/police-confirmed-there-were-no-casualties-during-tense-situation/

  • தொடங்கியவர்

இராணுவத் தளபதி படையினருக்கு கடும் உத்தரவு! சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களினையடுத்து வடமேல் மாகாணத்தில் அவசர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதால் இராணுவம் கடுமையாகப் போராடிவருகிறது.

இந்தநிலையில் இராணுவத்தளபதி மகேஸ் சேன நாயக்க வன்முறைகளைக் கட்டுப்படுத்த இராணுவத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கென இராணுவம் கடும் நடவடிக்கையினை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஊரடங்கு நேரத்தில் வன்முறையாளர்களைக் கண்டவிடத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் கூறுகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/119863?ref=bre-news

39 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கே திணறல் ஒன்றும் இல்லை விட்டுப் பிடிக்கிறார்கள்.

ஊரடங்கு சட்டம் போட்ட பிறகு பொலிஸ் பார்த்துக்கொண்டிருக்க தான் கும்பலாக வந்து தீ மூட்டுகிறார்களாம் என்று முஸ்லிம்கள் புலம்புகிறார்கள்.

  • தொடங்கியவர்

பற்றி எரியும் தென்னிலங்கை! சூறையாடப்படும் முஸ்லிம் உடமைகள்!! நேரடி வீடியோக்கள்!!

தென் இலங்கையில், குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்திற்குள் இந்த வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

 

https://www.ibctamil.com/srilanka/80/119870?ref=bre-news

  • தொடங்கியவர்

நாட்டில் ஆங்காங்கே ஏற்படும் வன்முறைகள்! பாதுகாப்பு படை பிரதானி கூறும் தகவல்

பாதுகாப்புத் துறையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதுடன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்பு படை பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

சிலாபம், பிங்கிரிய பகுதிகளிலும் இன்று செட்டிகுளம் பகுதியிலும் சிலதினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியிலும் சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

நாட்டின் அமைதியை குலைப்பதற்காகவும் படையினரால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலுமே இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே, இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு துணைபோக வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

வன்முறை சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொய்யான பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.

அதே சந்தர்ப்பத்தில் பாதுகாப்புத் துறையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதுடன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என பாதுகாப்பு படை பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/119866

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

ஊரடங்கு சட்டம் போட்ட பிறகு பொலிஸ் பார்த்துக்கொண்டிருக்க தான் கும்பலாக வந்து தீ மூட்டுகிறார்களாம் என்று முஸ்லிம்கள் புலம்புகிறார்கள்.

எப்படித் தான் எரித்தாலும் அரசு இவர்களுக்கான நஸ்டஈட்டைக் கொடுத்தே தீரும்.
அது தான் முஸ்லீம் தலைமைகள்.
எமது தலைவர்கள் மாதிரி அல்ல.

  • தொடங்கியவர்

மற்றுமொரு கறுப்பு ஜூலை கலவரம் வேண்டாம் மஹிந்த உரை

 

Mahinda.jpg

மற்றுமொரு மற்றும் ஒரு 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு முக்கிய உரையாற்றி வருகின்றார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் இளைஞர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் எனவே அனைவரும் அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://athavannews.com/மற்றுமொரு-கறுப்பு-ஜூலை-க/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இந்தநிலையில் இராணுவத்தளபதி மகேஸ் சேன நாயக்க வன்முறைகளைக் கட்டுப்படுத்த இராணுவத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

2 hours ago, போல் said:

குருநாகல் – ஹெட்டிபொல மற்றும் குளியாப்பிட்டி உட்பட சில பகுதிகளில் இடம்பெற்ற பதற்றமான சூழலில் எந்தவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை

தற்போது இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள தோட்டாக்களால் குருவி சுடவும் முடியாதென நினைக்கிறேன். லேசாகக் காயப்படுத்தி வன்முறையாளர்களுக்கு அரச நிவாரணமும் வாங்கிக் கொடுக்க வைக்கும். ஏனெனில் தற்போதைய வன்முறைக் காட்டுமிராண்டிகள் இராணுவத்தின் இரத்தத்தின் இரத்தமான சிங்களவர்கள் அல்லவா. அதனால்தான் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் உயிரச்சேதம் எதுவும் ஏற்படாது. 

 

வன்முறையில் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸ் கூறியுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

மற்றுமொரு கறுப்பு ஜூலை கலவரம் வேண்டாம் மஹிந்த உரை

 

 

Mahinda.jpg

மற்றுமொரு மற்றும் ஒரு 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு முக்கிய உரையாற்றி வருகின்றார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் இளைஞர்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் எனவே அனைவரும் அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://athavannews.com/மற்றுமொரு-கறுப்பு-ஜூலை-க/

தற்போதைய கலவரத்தைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை, “யுத்தமென்றால் யுத்தம் சமாதானமென்றால் சமாதானம்” என்று மக்களை ஊக்குவிக்க  ஜேஆர் போன்றவர்கள் தற்போது இல்லை.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் நின்றறுப்பான்.

  • தொடங்கியவர்

முஸ்லிம் குடும்பஸ்தர் படுகொலை! தென்னிலங்கை வன்முறையில் அசம்பாவிதம்!!

தென் இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.

கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் பௌசில் அமிர் என்றும் அவரது வயது45 என்றும் தெரியவருகின்றது.

நாத்தாண்டிய என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்திற்கு சற்று முன்னர், நாத்தாண்டியவில் உள்ள, 'இயலமோதர' பகுதியில் வன்முறைகள் கட்விழ்த்துவிட்டிருந்த கும்பல், முஸ்லிம் பள்ளிவாயலுக்கு எதிரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் தச்சுவேலை செய்பவர் என்றும், பலமாகத் தாக்கப்பட்டு, வாள்களினால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மரணமடைந்ததாகத் தெரியவருகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/119885?ref=bre-news

  • தொடங்கியவர்

சூறையாடப்படும் முஸ்லிம் உடமைகள்!!

 

 

மினுவாங்கொடவை சேர்ந்த Faisul Hameed என்றவரும் கொல்லப்பட்டுள்ளதாக முஸ்லிம் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்!

3-11-720x450.jpg

ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும் மீறி வன்முறைகளில் ஈடுபடும் கலகக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களினைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள், அலரி மாளிகை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த கலந்துரையாடல்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டத்தைக் கையிலெடுக்கின்ற நாசகாரக் கும்பல்களுக்கு தலைமைதாங்கும் சிலரின் பெயர்கள் குறித்தும், இன்றைய தினம் இடம்பெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘சில இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் வன்முறைகள் நடைபெற்றமைக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தேன்.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

கலகக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு சில இடங்களில் போதியளவு படைவீரர்கள் இல்லாமையினால் சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது. அவ்வப்போது நிலைமைகளை கவனத்திற்கொண்டு, இவ்வாறான பிரதேசங்களுக்கு மேலதிக படை வீரர்களை அனுப்பவதற்கு இதன்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதம் எங்களுக்கு தரப்பட்டது.

ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடைபெறும்போது, அதனை அறியத்தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/துப்பாக்கிச்சூடு-நடத்து/

  • கருத்துக்கள உறவுகள்

எனி இவ்வளவும் ஒரேயடியா ஓடியந்து வடக்குக் கிழக்கில் தமிழர்களின் நிலத்தை தான் ஆக்கிரமிப்பார்கள். ஹிஸ்புல்லாவும்.. ரிசாத் பவுதீனும் அதைத்தான் செய்வார்கள்.

தமிழ் மக்கள் இந்தச் சூழலில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

1983 கலவரத்தின் போது.. சிங்களவர்களைச் சாட்டி முஸ்லீம்களும் நிறைய தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடினர். அதேபோல்.. கிழக்கில்.. கல்முனை.. மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. அம்பாறை.. மட்டக்களப்பு.. மன்னார் என்று ஏலவே முஸ்லிம் மதவாதப் பயங்கரவாதிக் காடைகளாலும்.. முஸ்லீம் ஊர்காவல் படையாலும் தமிழ் மக்கள் துரத்தப்பட்டு உயிரிழந்து.. சொத்திழந்துள்ள நிலையை எளிதில் மறக்க முடியாது.

இப்போ வடக்கு மாகாணமும் இவர்களால் குறிவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகிறது.. சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புக்கு மேலதிகமாக. 

  • தொடங்கியவர்

உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை: பிரதமர் அதிரடி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையிலேயே இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது. “கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் தடுக்கும் செயற்பாடாகவே இந்த கலவரம் அமைந்துள்ளது.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு நிலைமைகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்து வருகின்றோம். ஆனால் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தி சில குழுக்கள் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுவே வட மேல் மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான மோதல்களினால் நாட்டில் அமைதி நிலை ஏற்படாது. அத்தோடு பாதுகாப்புப் படையினரின் விசாரணைக்கு இதுபெரும் இடையூறாக அமைந்துவிடும்.

தற்போது வடமேல் மாகாணத்தில் பல பகுதிகளில் கடும் பதற்றநிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன இதனால் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இருப்பினும் பொலிஸ் மற்றும் இராணுவம் அங்கு தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

பொதுமக்கள் வன்முறைக்கு செல்ல வேண்டாம், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவி செய்யவேண்டும். இதற்காவே நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு சட்டத்தை பாதுகாக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க படையினருக்கும் பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

http://athavannews.com/தற்போதைய-சூழ்நிலை-தொடர்ப/

  • தொடங்கியவர்

குளியாபிட்டி, நிக்கவரட்டி பகுதிகளில் நடந்தது என்ன?

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Mosque-attaked-Sri-Lanka-__1_.jpg

இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய சுமார் 30 முஸ்லிம் கிராமங்களில் இன்றிரவு 7 மணிவரையான 48 மணிநேர தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், பெருமளவு முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன.

Muslim-owned-shops-attaked-Sri-Lanka-1-3

இந் நிலையில் இந்த வன்முறை சூழல் குருணாகல் மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அளவுக்கு தீவிரமடைந்தமையால் அதனைக் கட்டுப்படுத்த இன்று மாலை 4.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் முழு வட மேல் மாகாணத்துக்கும் மறு அறிவித்தல் வரை  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.

அதன்படி வட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் கீழ் உள்ள 47 பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.  

ஊரடங்கின் போது வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்க பிரதேசத்தின் பொலிசாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பாதுகாப்பு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குருணாகல் பொலிஸ் வலயத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாபிட்டிய பொலிச் வலயத்தில் உள்ள 8 பொலிஸ் பிரிவுகளிலும், நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்தில் உள்ள 10 பொலிஸ் பிரிவுகளிலும்,  புத்தளம் பொலிஸ்  வலயத்தில் உள்ள 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் வலயத்தின் 7 பொலிஸ் பிரிவுகளிலும் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. 

நேற்று குளியபிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெட்டிபொல வீதியில் நான்கு முஸ்லிம் கடைகள் மீது கும்பல் ஒன்று நடத்திய தககுதல்களுடன் குளியாபிட்டிய பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்மாகியிருந்தன.  

D6byOjRWAAA8WzO.jpg

குறித்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்போரில் நலவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய  மற்றும் ஹெட்டிபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிற்பகல் 2.00 மணியாகும் போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

நிலைமை மோசமடிந்ததை அடுத்து பின்னர் நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கொபேய்கனே மற்றும் ரஸ்னாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவற்றையும் மீறி வன்முறைகள் கட்ட விழ்த்துவிடப்படலாம் எனும் அச்சம் மற்றும் சில உளவுத் தகவல்களை மையப்படுத்தி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய முழு வட மேல் மாகாணத்துக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

D6c4k_xUIAAxih_.jpg

நேற்று குளியாபிட்டிய பொலிஸ் வலயத்துக்குட்பட்ட, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் குளியாபிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பிங்கிரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்முறைகள் பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/55875

  • கருத்துக்கள உறவுகள்

D6c4k_xUIAAxih_.jpg

அநியாயம் இந்த வாழைப்பழங்கள். 

இதே 10 வருடத்துக்கு முன்... தமிழர்கள் மரண ஓலத்தோடு அழிந்து கொண்டிருந்த போது.. இதே கூட்டத்தோடு சேர்ந்து வெடிகொழுத்தி.. பாற்சோறு உண்டவர்களுக்கு... ஒருவேளை அல்லாவே தண்டனை கொடுக்கிறானோ என்னவோ.

  • தொடங்கியவர்

இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை: இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

SRI-LANKAN-BLAST

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 250 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக பதற்றமான சூழல் நிலவி வந்தது. 

இந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) இஸ்லாமியர்களின் கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் எஸ்.பி. ருவான் குணசேகரா தெரிவித்தார். 

அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இதுகுறித்து தெரிவிக்கையில்,

"பயங்கரவாதிகளை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் அயராது உழைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் உள்நாட்டில் வன்முறை ஏற்படுத்தி, அவர்களது விசாரணையில் கூடுதல் சுமையை கொடுக்கிறோம். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். வீண் வதந்திகளை நம்பவேண்டாம்" என்றார். 

https://www.dinamani.com/world/2019/may/13/sri-lanka-imposes-nationwide-curfew-as-riots-spread-3150916.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தைப்பற்றி  எல்லாம் தெரிந்த ஒரேயொரு இனமென்றால் அது ஈழத்தமிழினம் மட்டுமே.

ஆகையால் சொல்கிறேன்.........சோனகர்கள் பொறுத்த இடத்திலைதான் மாட்டுப்பட்டிருக்கினம்.

சங்கீதம் பாடின வாயும் சிரங்கு சொறிஞ்ச கையும் சும்மா இருக்காது எண்டது போலை .......

சிங்களம் மற்றவருக்கு கெடுதல் செய்யாட்டி அதுகளுக்கு பத்தியப்படாது.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.