Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை-கருணாநிதி

Featured Replies

சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது.

தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது.

வெடிபொருள், இரும்புக் குண்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் அனைவரையும் விடுதலைப் புலிகள் என்று கூறுவது பொருத்தமற்றது. இதை வைத்து நான் புலிகளை ஆதரிப்பதாக கூறக் கூடாது.

தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதெல்லாம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலை தூக்க தமிழ அரசு அனுமதிக்காது.

தென்காசியில இந்து முன்னணித் தலைவர் கொலை செய்யப்பட்டபோது அதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. இதன் மூலம் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் யாரையும் இந்த அரசு விட்டு வைக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுடைய நோக்கமும், குறிக்கோளும் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புலிகள் எந்தவிதமான பாதகச் செயலையும் செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள்.

அதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டால் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பிரபாகரனை கைது செய்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/26/karuna.html

  • Replies 53
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மாநிலத் தமிழ்க் குடி மக்களுக்கு உங்கள் தரை மற்றும் கடற் பரப்புகளில் பாதுகாப்பான இடம் கொடுங்கோ! அதுக்குப் பிறகு புலிகளுக்கு இடம் கொடுப்பதைப் பற்றிப் பேசலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மாநிலத் தமிழ்க் குடி மக்களுக்கு உங்கள் தரை மற்றும் கடற் பரப்புகளில் பாதுகாப்பான இடம் கொடுங்கோ! அதுக்குப் பிறகு புலிகளுக்கு இடம் கொடுப்பதைப் பற்றிப் பேசலாம்!

**************************

ஜயா கலைஞரின் அறிக்கையை ஒரு முறை திருப்பிப் பாருங்கள் அவரின் மனமும் கசியிறமாதிரித்தான் தோன்றுகிறது, தயவுசெய்து அவசரப்பட்டு தேவையில்லாத கருத்துக்களை கொட்டிவிடாதீர்கள். கருத்துக்களைப் பதிய முன்பு நீங்கள் ஒரு விளக்கத்திற்கு வர முயற்சி செய்வது நல்லது, இது எனது தனிப்பட்ட கருத்து. அதாவது யாரையும் நாம் நிரந்திர பகைவனாகவோ அல்லது நண்பனாகவோ தீர்மானிக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தானையா

25 வருடங்களுக்கு மேலாக நம்பி காத்துக்கொண்டிருக்கன்றோம்

மனம்தான் கசியுதில்லை.

ஆனாலும் இன்னும் காப்போம்

நாதியற்ற தமிழனுக்கு வேறு வழி????

தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது.

வெடிபொருள், இரும்புக் குண்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் அனைவரையும் விடுதலைப் புலிகள் என்று கூறுவது பொருத்தமற்றது. இதை வைத்து நான் புலிகளை ஆதரிப்பதாக கூறக் கூடாது.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுடைய நோக்கமும், குறிக்கோளும் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புலிகள் எந்தவிதமான பாதகச் செயலையும் செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். அதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டால் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2007/04/26/karuna.html

  • கருத்துக்கள உறவுகள்

**************************

ஜயா கலைஞரின் அறிக்கையை ஒரு முறை திருப்பிப் பாருங்கள் அவரின் மனமும் கசியிறமாதிரித்தான் தோன்றுகிறது, தயவுசெய்து அவசரப்பட்டு தேவையில்லாத கருத்துக்களை கொட்டிவிடாதீர்கள். கருத்துக்களைப் பதிய முன்பு நீங்கள் ஒரு விளக்கத்திற்கு வர முயற்சி செய்வது நல்லது, இது எனது தனிப்பட்ட கருத்து. அதாவது யாரையும் நாம் நிரந்திர பகைவனாகவோ அல்லது நண்பனாகவோ தீர்மானிக்கக் கூடாது.

உங்கள் தனிப்பட்ட கருத்து நூறு வீதம் உண்மை. ஆனால் அனுபவப் பாடம் என்று ஒன்றும் இருக்கிறதே! எத்தனையோ வளங்கள் இந்தத் தமிழ்த் தலைவரின் கையில் இருந்தும் ஈழத்தமிழ் மக்கள் அல்லல் படும் இக்காலத்தில் ஒரு துரும்பைக் கூட இவர் நகர்த்தவில்லையே? நாம் ஆயுதமோ இருக்க இடமோ அல்ல எதிர்பார்த்தது. மக்களைக் கொல்லப் பயிற்சியும் ஆயுதங்களும் சிங்களப் படைக்கு வழங்காதிருக்க வேண்டும் என மட்டும் தானே கேட்கிறோம்? அதற்குக் கூட எதுவும் இயலவில்லை. அறிக்கை விடவும் இரத்தக் கண்ணீர் வடிக்கவும் பலர் எம்மிடையே இல்லையா? சக்தியிருப்பவர்கள் அதனை மனிதாபிமான நோக்கத்திலாவது பயன் படுத்த வேண்டுமல்லவா? மேலும் முதல்வரின் புலி ஆதரவும் எதிர்ப்பும் தனது அரசியல் மற்றும் பதவி நோக்கங்களுக்கானது என்பது வெள்ளிடை மலை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தனிப்பட்ட கருத்து நூறு வீதம் உண்மை. ஆனால் அனுபவப் பாடம் என்று ஒன்றும் இருக்கிறதே! எத்தனையோ வளங்கள் இந்தத் தமிழ்த் தலைவரின் கையில் இருந்தும் ஈழத்தமிழ் மக்கள் அல்லல் படும் இக்காலத்தில் ஒரு துரும்பைக் கூட இவர் நகர்த்தவில்லையே? நாம் ஆயுதமோ இருக்க இடமோ அல்ல எதிர்பார்த்தது. மக்களைக் கொல்லப் பயிற்சியும் ஆயுதங்களும் சிங்களப் படைக்கு வழங்காதிருக்க வேண்டும் என மட்டும் தானே கேட்கிறோம்? அதற்குக் கூட எதுவும் இயலவில்லை. அறிக்கை விடவும் இரத்தக் கண்ணீர் வடிக்கவும் பலர் எம்மிடையே இல்லையா? சக்தியிருப்பவர்கள் அதனை மனிதாபிமான நோக்கத்திலாவது பயன் படுத்த வேண்டுமல்லவா? மேலும் முதல்வரின் புலி ஆதரவும் எதிர்ப்பும் தனது அரசியல் மற்றும் பதவி நோக்கங்களுக்கானது என்பது வெள்ளிடை மலை அல்லவா?

*****************************

நடந்தவை அப்படியா இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய கலைஞரைப் பொறுத்தவரை அவரே ஒரு பலமில்லாத அரசியல் வாதியாகத்தானே இருக்கிறார் அப்படியிருக்கும்போது எப்படி அதிகமாக எதிர்பார்க்க முடியும்?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சனையில் முதல்வர் கலைஞருக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவு இருக்கிறது என்று சொன்னாலும் கூட வெளிப்படையாக அதனைத் தெரிவித்தால் மீண்டும் தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தின் கீழ் ஆட்சி நடத்த வேண்டிய பிடியின் கீழ் இருக்கும் நிலை அவருடையது என்று கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி கறுப்பி அவர்களே உங்களுடைய கருத்துத் தான் எனது கருத்தும் கூட, அதாவது கலைஞரின் ஆசையும், தான் உயிரோடு இருக்கும்போதே தமிழீழம் கிடைக்கவேண்டும் என்பது தான். அதாவது தமிழனுக்கென்றொரு நாடு வேனுமென்பதில் அவர் உறுதியாகத் தான் இருக்கிறார் ஆனால் இந்த அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகளைப் பார்த்து நாங்கள் ஒரு முடிவுக்கு வரக்கூடாது அது தான் எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் ஏமாற்று

மீண்டும் மீண்டும்காத்திருப்பு

தமிழனின் தலைவிதியை மாற்றுதலைவா...

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இல்லை- கருணாநிதி

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் எந்தவித பாதக செயலிலும் ஈடுபடவில்லை என, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக, கொங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஞானசேகரன் நேற்று சபையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும்போது முதல்வர் கருணாநிதி இவ்வாறு கூறியிருக்கின்றார்.

தமிழ்நாட்டில் செயற்பட வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை எனவும், அவர்களது குறிக்கோள் வேறு எனவும் கூறிய முதல்வர் கருணாநிதி, தான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட எவரையும் தமது அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் மேலே உள்ள கருத்தினை வாசித்துப்பாருங்கள். தமிழ்னாட்டில் பெருகிவரும் ஈழ ஆதரவு உணர்வைக் குறைப்பதற்காக, இந்தியா உளவு அமைப்பும், தமிழீன எதிர்ப்பாளர்களும் திட்டமிட்டபடி தமிழ் நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு புலிகள் தான் காரணம். உடனே கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இல்லை. கலைஞர் புலி ஆதரவு உடையவர். அதனால் அவரது ஆட்சியை கலையுங்கள் என்று புராணம் பாடுவார்கள். சென்ற குழுதம் இதழில் சுப்பிரமண்யம் சுவாமியின் பேட்டி வந்தது. அவர் மீண்டும் கலைஞர் புலி அதாரவுடன் செயற்படுகிறார் என்று பொய்ப்பேட்டி ஒன்றைக் கொடுத்தார். இப்படி பல முட்டுக்கட்டைகள் அங்கே இருக்கிறது. கறுப்பி, வல்வைமனிதனின் கருத்துக்களுக்கு நானும் உடன்படுகிறேன்.

  • தொடங்கியவர்

ம் இந்த கலைஞ்சரின் கருத்தில் நெகிழ்சி போக்க்கை கடைபிடித்திருகிரார்

*****************************

நடந்தவை அப்படியா இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய கலைஞரைப் பொறுத்தவரை அவரே ஒரு பலமில்லாத அரசியல் வாதியாகத்தானே இருக்கிறார் அப்படியிருக்கும்போது எப்படி அதிகமாக எதிர்பார்க்க முடியும்?

அவர் ஒரு பலமில்லாத அரசியல்வாதி அல்ல வல்வை மைந்தன் மத்திய அரசை தஞ்சாவூர் பொம்மை போல ஆட்டும் சக்தி அவ்ருக்கு இருக்குது அதுதான் 40 பா.உ நிச்சயம் பேரம் பேசும் சக்தி அவருக்கு அதிகளாவில் இருக்குது அவர் அண்மையில் ஆயுதக்கொடுப்பனவு சம்பந்தமான பிர்ரச்சினைக்கு தன்ணியூற்ரி அணைத்திருகிறார் சட்ட மன்றத்தில்.நிச்சயம் அவர் காலத்தில் தமிழீழம் உருவாகினால் அவருக்கும் பெருமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

what tamilnadu cm is doing correct if he loses power then aryan race kundamma(jeyalalitha) will come to power then both in center and state aryan race will be in power

கலைஞரின் அரசியல் காய் நகர்த்தல் சரியாகவே இருக்கிறது.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று கொட்டக்கொட்ட விழித்து கொண்டிருக்கும் தமிழ் தேசியத்திற்கு விரோதமான எதிரணி இருக்கும் போது கலைஞர் நிதானமாகத்தான் காய் நகர்த்த வேண்டும்.

எமது போராட்டத்திற்க்கு இந்தியாவை நம்பிக்கொண்டிருப்பது ஒரு மடத்தணம் அவர்கள் எல்லாம் ஒரே மட்டையில் ஊறின குட்டைகளே, எவர் ஆட்சிக்கௌ வந்தாலும் எமக்கு அவர்கள் உதவி செய்யப் போவதில்லை, ஆட்ச்சியில் இருக்கும் போது எதிர்ப்பதும், எதிர்க்கட்ச்சிக்கு வந்த பின்னர் ஆதரிப்பது போல் பேசுவதும் கலைஞருக்கும், அம்மாக்கும் கை வந்த கலை, அவர்களை நம்பி பிரயோசனமில்லை எமது போரட்டத்தை நாங்கள்தான் பார்க்க வேண்டும்

இந்தியாவை நம்பிக்கொண்டு புலிகளின் போராட்டம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ்விரோத போக்கு கொண்டவர்களின் ஆட்சியில் இருந்ததைவிட கலைஞர் ஆட்சியில் தமிழீழ எதிர்ப்பாளர்களின் வலிமை குறைந்தே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கலைஞர் ஆட்சியில் இருப்பது ஸ்ரீலங்கா அரசுக்கும், இந்திய ரோ விற்கும் இனிப்பான விடயம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஆட்சியில் இருப்பது ஸ்ரீலங்கா அரசுக்கும், இந்திய ரோ விற்கும் இனிப்பான விடயம் அல்ல.

உண்மைதான். கலைஞரின் ஆட்சியை அகற்ற , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துள்ளது என்ற கதைகளை பரப்பி வருகிறார்கள்

போற போக்க பார்த்த புளிக்கே தமிழகத்தில் இடமில்லைன்னு சொல்லிடுவார் போல

விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எந்தவிதமான பாதகச் செயல்களிலும் ஈடுபடவில்லை, ஈடுபடவும் மாட்டார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அனைவரையும் விடுதலைப் புலிகளெனக் கூறுவது தவறென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கருணாநிதி மேலும் கூறியதாவது;

இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் "தீவிரவாதிகளை விடுதலைப் புலிகள்" என்று குறிப்பிட்டார். அவருடைய பார்வைக்கு அப்படித் தெரியலாம். விடுதலைப் புலிகள் நோக்கம் வேறு. அதற்காக அவர்களை நான் ஆதரிப்பதாக அர்த்தம் அல்ல.

இராமநாதபுரம் அகதிகள் முகாம் அருகே கடலில், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தினர் 8 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட சில பிளாஸ்டிக் குழாய்களைக் கண்டெடுத்துள்ளனர். இதுபற்றி மதுரைக்கு தகவல் கொடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்துள்ளனர். அப்போது அது வெடிகுண்டு அல்ல என்றும், அதனால் ஆபத்து எதுவும் கிடையாது. கப்பல்களில் பயன்படுத்தப்படும் `சிக்னல் தோட்டா' என்றும் தெரிய வந்தது.

இதில் ஒன்றை வெடிக்க வைத்தபோது உயரே சென்று வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இது கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிக்னல் தோட்டா தான் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அது பற்றி பீதி அடையத் தேவையில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறிவிட முடியாது. வெடிபொருள், இரும்புக் குண்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் அனைவரையும் விடுதலைப்புலிகள் என்று கூறுவது பொருத்தமற்றது. இதை வைத்து நான் புலிகளை ஆதரிப்பதாக கூறக்கூடாது.

தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதெல்லாம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலை தூக்க தமிழக அரசு அனுமதிக்காது.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுடைய நோக்கமும் குறிக்கோளும் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புலிகள் எந்தவிதமான பாதகச் செயலையும் செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள்.

அது போன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டால் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றார்.

தினக்குரல்

ட அம்பி மாரே வடிவா தமிழை வாசியுங்கோட அண்ணனுக்கு எழுதுறதில பிரச்சனை என்றால் எனட அம்பி மாருக்கு அர்த்தம் புரிவதில் பிரச்ச்னை போல.

அவர் அபப்டி என்ன சொல்லிட்டார்?

புலிகளுக்கு தமிழ்நாட்டில் தனிநாடு இல்லை ஆனா தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லை தனது மனதிலும் இடம் உண்டு அடுத்து இந்த ஜெயா அம்மா காங்கிரஸ்காரர் சொல்லுவது போல இல்லை புலிகள் அவர்கள் நோக்கம் தனிநாடு தமிழர்களுக்காக போராடுவது சும்ம சைய்க்கிள் போல்ஸ் கடத்தி இலங்கையில் சையிக்கிள் பாட்ஸ் சாமான் தட்டுப்பாட்டை இல்லாம பன்னுவது அல்ல கருனாநிதிக்கு தெரியும் 40.000 ஆர்மி நிக்கும் இடத்துக்கே பாதுகாப்பாக விமானம் ஒட்டி போய் அடிச்சு போட்டு திரும்ப்பி போனவர்கள் தமிழ்நாட்டில் சையிக்கிள் போல்ஸ் கடத்துவது இல்லை என்று என்ன சயிக்கிள் போல்சை இரும்பு குண்டு என்று சொல்லுவதால் கொஞ்சம் புலிகளோ கடத்துகிறார்கள் என்று எங்கட ரோ சந்தேகப்படுது அவர்களுக்கு என்ன ஒழுங்கா எதும் செய்து இருகிறார்களா? நாட்டை சுற்றி ஒரே பகை ஒரு நாட்டையாவது தமது கட்டுபாட்டில்( அன்பால்) வைத்து இருக்கிறார்களா? இல்லை

என்னத்தை புலன்நாய்வு செய்கிரார்கள் என்றே தெரியவில்லை

இதை எல்லாம் முந்தி குறுக்காலபோனவர் நிண்டு பன்னாடை என்று சொல்லி சொல்லி ஆய்வுகள் எழுதி தெரிய படுத்தினார்.

அவரையும் சண்டை பிடிச்சு பிடிச்சு அனுப்பி போட்டு(டோம்)

இப்ப என்னை விட்டா இதை எல்லாம் யார் செய்வது?

ஜோவ் வடிவு என்னப்ப குழப்பம் இது

ஈழச்சகோதரர்களே அவசரப்பட்டு கருணா நிதியை குறை கூறவேண்டாம் கருணா நிதி அரசியல் வாதி அவருக்கு அவரது ஆட்சி தான் முக்கியம்....... ஆனால் ஜெயலலிதாவை விட கருணா நிதி மோசமில்லை...இப்படித்தான் இந்த பிரச்சனையை நோக்க வேண்டியுள்ளது... நீங்கள் அவர் கூற்றை கூர்ந்து நோக்கினால் ..... ஞானசேகரன் தமிழகத்தில் நடந்த அனைத்து கடத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு புலிகளை தொடர்பு படுத்தியதை பொறுக்கமுடியாமல் தான் கருணா நிதி இந்த கடத்தல்களோடு புலிகளை தொடர்பு படுத்த வேண்டாம் என்று கூறினார்.ஆனால் இந்த கருத்தை மட்டும் கூறினால் தமிழர் விரோத ஜெயா கருணா நிதியை புலிகளுடன் தொடர்புபடுத்தி அரசியல் ஆதாயம் பெற முற்படுவார்.எனவே தான் அவர் மழுப்புகிறார் மேலும் அவர் காங்கிரசயையும் அண்டி பிழைக்க வேண்டியுள்ளது..........உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

தற்போது தமிழகத்தில் உள்ள கட்சிகளில் ம.தி.மு.க, தி.முக,பா.ம.க ஆகிய கட்சிகளில் தான் ஈழ ஆதரவாளர்கள் மிகுதியாக உள்ளனர் எனவே தயவு செய்து தமிழக தலைவர்களை விமர்சிக்க வேண்டாம்...

கருணா நிதியின் மகள் கனிமொழி தமிழீழ தீவிர ஆதரவாளர்........மீண்டும் சொல்கிறேன் கருணா நிதி போராளியல்ல சந்தர்ப்பவாத அரசியல்வாதி தான்.

கறுப்பி ,வல்வைமைந்தன், கந்தப்பு போன்றோர் பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

தற்போது தமிழகத்தில் உள்ள கட்சிகளில் ம.தி.மு.க, தி.முக,பா.ம.க ஆகிய கட்சிகளில் தான் ஈழ ஆதரவாளர்கள் மிகுதியாக உள்ளனர் எனவே தயவு செய்து தமிழக தலைவர்களை விமர்சிக்க வேண்டாம்...

கருணா நிதியின் மகள் கனிமொழி தமிழீழ தீவிர ஆதரவாளர்........மீண்டும் சொல்கிறேன் கருணா நிதி போராளியல்ல சந்தர்ப்பவாத அரசியல்வாதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கலைஞர் கருணாநிதி தன்னை ஒரு பொறுப்புமிக்க தலைவராகக் காட்டிக்கொள்வதில் எடுக்கும் அக்கறையை அத்தகைய பொறுப்புக்களை செயற்றிறனுடன் கையாள்வதில் எடுப்பதில்லை. தன்னுடைய இமேஜை டெல்லியில் உயர்த்தி வைத்திருக்கக்கூடிய வகையில்தான் அவர் செயற்பாடுகள் அமையுமேயொழிய துணிவுடன் தன் தகைமையையும் ஈழத்தமிழினத்திற்காக அவர் ஆற்றவேண்டிய கடமையையும் சார்ந்து ஒன்றும் அமைவதில்லை. ஈழத்தமிழர் தமிழ்நாட்டுத் தமிழரின் தொப்பூழ் கொடி உறவுகள் என்பதோடு தனது ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில நயமான வார்த்தைகளோடு தன் கடமையை முடித்துவிடும் பாங்குதான் அவரின் அரசியலில் நெடுங்காலமாகக் காணப்படுகின்றது. அல்லாவிடில் அவர் மத்திய அரசின் கொள்கைவகுப்பாளர்களின் தாளத்துக்கெல்லாம் டெல்லியுடன் சேர்ந்து ஆடவேண்டியதில்லை. ஒரு தேசிய இனத்தின் தனிப்பெரும் தலைவன் அதேவேளை முழு இந்தியதேசியத்தின் பிரிக்கமுடியாதவோர் அங்கத்துவத்தின் பலம் மிக்க பிரதிநிதி என்றவகையில் புலனாய்வாளர்களையும் கொள்கைவகுப்பாளர்களையும் தட்டிக்கேட்கவோ அல்லது அடக்கி வாசிக்குமாறுகூறவோ முழுத்தகுதியும் வலிமையும் அவரிடமுண்டு. ஆனால் எந்தச்சந்தர்ப்பத்திலும் அவவை பாவிக்கப்படவில்லை. எம் ஜி ஆர் காலத்தில் அவர் பயமின்றித் தன்பின்னாலிருந்த மக்கள் சக்தியின் துணையோடு மத்திய அரசுடன் முட்டிமோதியிருக்கிறார். ஒரு தடவை இந்திராகாந்தி தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க முயன்றபோது எம் ஜி ஆரின் ஆதரவு அதற்குப் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்திய தேசியம் தமிழ்நாட்டின் தமிழத் தேசிய உணர்வை விழுங்கிவிடக்கூடாது என்பதில் அவர் கூடுதல் அக்கறை செலுத்தினார். கலைஞரின் அரசியலில் இத்தகைய உறுதிமிக்க அணுகமுறையைக் காணமுடியவில்லை. ஒருவகை இரட்டைத்தன்மையே காணப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.