Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

only hindi or english should be used to office language, dont use tamil, says southern railway

தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி.

சென்னை: அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே அதிகாரி சிவா என்பவர் நேற்று இரவு சுற்றறிக்கை அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் அருகே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு மொழி பிரச்னை தான் காரணம் என்பதால் இப்படி ஒரு உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.

ஒரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் தமிழில் ரயிலை அனுபப வேண்டாம் என சொன்னதை, இந்தி மட்டுமே தெரிந்த மற்றொரு ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சரியாக புரிந்து கொள்ள தெரியாமல் ரயிலை அதே பாதையில் அனுப்பிவிட்டுள்ளார். இதுவே விபத்து ஏற்படும் அபாயத்துக்கு கொண்டு சென்றது.

இதையடுத்து தெற்கு ரயில்வ அதிகாரி சிவா என்பவர் அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு அவரச சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அறிவிப்பில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள், ரயில்வே இயக்கம், ரயில் வந்து செல்லும் அறிவிப்பு ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் செய்ய வேண்டும். இருவரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பசி கொள்ள வேண்டு. தமிழில் பேசிக் கொள்ளக்கூடாது. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்களும், ஸ்டேசன் மாஸ்டர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிராந்திய மொழிகளை (தமிழ் உள்பட) பேசக்கூடாது பணியில் இருக்கும் போது இதனை கண்டிப்பாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நேரடியாக இந்தி திணிப்பு என கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/only-hindi-or-english-should-be-used-to-office-language-dont-use-tamil-says-southern-railway-354020.html

  • கருத்துக்கள உறவுகள்

துமாற நாம் கோன் ஹே..?

கோன் ஐஸ்ம்மா .. அது பண்டிகை காலத்துல கோயிலுக்கு வெளிய விப்பாங்க..!

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

  • கருத்துக்கள உறவுகள்

ரயில்வே துறையில் நடந்த தேர்வில் தமிழக வட்டத்தில் சுமார் 1650 இடங்களுக்கு 1500 பேர் வெளிமாநிலத்தவர் (பெரும்பாலும் வடநாட்டினர்) தேர்வு செய்யப்பட்டனர். அத்தேர்வில் தமிழ்த்தாளும் உண்டு. வடநாட்டில் இருந்து வந்து எழுதியவன், தமிழ் பேசத் தெரியாதவன் 50க்கு 48 வாங்கிய அயோக்கியத்தனங்கள் நடந்தன. இது ஐ.நா. வின்  ஒரு அமர்வில் வாசிக்கப்பட்டது. இலங்கையில் நடக்கும் இன அழிப்புக் குடியேற்றங்களோடு ஒப்பிடப்பட்டது. அந்தத் திருட்டுத்தனங்களை நியாயப்படுத்தும் வகையில் இத்தகைய சுற்றறிக்கைகள். தபால் துறையிலும் இக்குடியேற்றங்கள் உண்டு. தமிழர்களும் மற்ற மாநிலங்களில் பணி புரிகிறார்கள். ஆனால் அந்த மாநிலத்தவரை அவர்கள் மாநிலங்களிலேயே சிறுபான்மையாக்கும் அளவில் இல்லை; அவர்கள் மொழியிலேயே அவர்களைப் பேசவிடாமல் செய்யவில்லை; இவ்வாறு திட்டமிடப்பட்ட குடியேற்றங்களும் அங்கு நடைபெறவில்லை. தமிழ் மொழியின் சிறப்பும், அதன் காரணமாக தமிழனின் தனித்துவமும் பொதுவாக மற்றவர் கண்ணை உறுத்துகிறது போலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

சோம சுந்திரம்... இந்தியாவின், அரசியலை... நம்பாதேங்கோ  

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி.

இனி மத்திய அரசு கிந்தி சட்டம் எதுவும் தமிழ்நாட்டில் கொண்டவர தேவையில்லை.
தானாகவே தமிழர்கள் கிந்திக்காரர் ஆகிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இனி மத்திய அரசு கிந்தி சட்டம் எதுவும் தமிழ்நாட்டில் கொண்டவர தேவையில்லை.
தானாகவே தமிழர்கள் கிந்திக்காரர் ஆகிவிடுவார்கள்.

ஏங்க.. ஓரளவு தனித்துவமா, நல்லா இருக்குறது பிடிக்கலையா..? :oO:

`புரியும் மொழியில் பேசிக்கொள்ளுங்கள்!' - தி.மு.க எதிர்ப்பால் பணிந்த ரயில்வே #SouthernRailway

ரயில்வே அதிகாரிகள், தங்களுக்கு புரியும் மொழியில் தகவல் தொடர்பை மேற்கொள்ளலாம் என தென்னக ரயில்வே, ஏற்கெனவே வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் திருத்தம்  மேற்கொண்டிருக்கிறது. முன்னர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று கூறி மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தென்னக ரயில்வே பொதுமேலாளரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

WhatsApp_Image_2019-06-14_at_2.06.53_PM_14258.jpeg

திருமங்கலம் சிக்னல் செயலிழப்பு சம்பவத்தை அடுத்து அங்கு நடக்க இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே துறை அதிகாரிகள் இருவர் தங்களுக்குள் மேற்கொண்ட தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமே இந்த நிலைக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர்க்கச் சொல்கிறதா தென்னக ரயில்வே என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேபோல், ரயில்வே துறையின் பணிநியமனக் கொள்கையால்தான் இந்தநிலை ஏற்பட்டது என்றும், தென்னக ரயில்வேயில் பணிபுரிய வருபவர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என பணிநியமனக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் டி.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் வலியுறுத்தியது.  

WhatsApp_Image_2019-06-14_at_2.46.29_PM_

அதேபோல், இந்த விவகாரத்துக்கு தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. தி.மு.க தலைவர் ஸ்டாலின், `தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது, இந்தி பேசு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல, மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு' என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதேபோல், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான தயாநிதி மாறன் தென்னக ரயில்வே துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். கனிமொழி, வைரமுத்து உள்ளிட்டோரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

அதேபோல், தென்னக ரயில்வேயின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்னக ரயில்வே அதிகாரிகள், சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்படி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து டி.ஆர்.எம்.யூவின் செயல் தலைவர் இளங்கோவன், `ரயில்வேயின் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கவுன்டரில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட மக்களோடு தொடர்பில் இருக்கும் ரயில்வே பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும். திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் பணியாளர்களுக்கு இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தப் பயிற்சி மையத்தில் தமிழ் மொழி தெரியாத ரயில்வே அதிகாரிகள், பணியாளர்களுக்குத் தமிழ் மொழியும் பயிற்றுவிக்க வேண்டும்' என்றார். 

இந்த நிலையில், ரயில்வே கட்டுப்பாட்டு அறை மற்றும் ரயில்நிலைய அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு ஆங்கிலம், இந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை தென்னக ரயில்வே மாற்றியிருக்கிறது. அதில், `அதிகாரிகள் குழப்பம் இல்லாமல் புரியும் மொழியில் பேசிக்கொள்ளலாம்' என மாற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2019 at 5:16 AM, ஈழப்பிரியன் said:

இனி மத்திய அரசு கிந்தி சட்டம் எதுவும் தமிழ்நாட்டில் கொண்டவர தேவையில்லை.
தானாகவே தமிழர்கள் கிந்திக்காரர் ஆகிவிடுவார்கள்.

சென்னை விமான‌ நிலைய‌த்திலும் கூட‌ ஹிந்தி எழுத்து தான் அண்ணா , பார்க்க‌ எரிச்சலா இருந்த‌து / 

மொழி போரில்  மாண‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரை தியாக‌ம் செய்த‌ த‌மிழ் நாட்டில் , மீண்டும் ஹிந்தி எப்ப‌டி வ‌ந்த‌து என்று என‌க்கு தெரியாது / மொழி போர‌ வைச்சு ஆட்சியை பிடிச்ச‌ திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் தான் இதுக்கு ப‌தில் சொல்ல‌னும்  😠

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பையன்26 said:

சென்னை விமான‌ நிலைய‌த்திலும் கூட‌ ஹிந்தி எழுத்து தான் அண்ணா , பார்க்க‌ எரிச்சலா இருந்த‌து / 

மொழி போரில்  மாண‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உயிரை தியாக‌ம் செய்த‌ த‌மிழ் நாட்டில் , மீண்டும் ஹிந்தி எப்ப‌டி வ‌ந்த‌து என்று என‌க்கு தெரியாது / மொழி போர‌ வைச்சு ஆட்சியை பிடிச்ச‌ திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் தான் இதுக்கு ப‌தில் சொல்ல‌னும்  😠

ஒரு நாட்டில் ஒரே மொழி ஒரே மதம் இருந்து விட்டால் பிரச்சனை இல்லையென நினைக்கின்றார்கள் போலும்......🤠

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாட்டில் ஒரே மொழி ஒரே மதம் இருந்து விட்டால் பிரச்சனை இல்லையென நினைக்கின்றார்கள் போலும்......🤠

அது ஒரு போதும் ந‌ட‌க்காது தாத்தா / மேற்கு வ‌ங்காள‌த்தின் முத‌ல‌மைச்ச‌ர் ( ம‌ம்தா பான‌ர்ஜி ) அன்மையில் சொன்னா த‌ங்க‌ளின் மானில‌த்துக்கு வ‌ரும் யாரா இருந்தாலும் த‌ங்க‌ளின் மொழியில் தான் க‌தைக்க‌னும் என்று அங்கை ஹிந்திக்கு இட‌ம் இல்லை 👌💪/

ஹிந்தி மொழியை தினித்தா இந்தியா என்ர‌ நாடு இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருக்குமோ தெரியாது / 
கொல்க‌ட்டா பெண் புலியோட‌ மோடின்ர‌ ப‌ருப்பு வேகாது / 

த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ர‌ போல‌ இல்ல அந்த‌ வ‌ய‌து போன‌ மூதாட்டி / எதையும் துனிஞ்சு செய்ய‌ கூடிய‌வா , ஊழ‌ல்லுக்கு அப்பால் ப‌ட்ட‌வா , த‌மிழ் நாட்டிலையும் ஒரு அலுக்கோசு முத‌லமைச்ச‌ரா இருக்குது , வ‌ட‌ நாட்டானுக்கு ஆமாம் போட‌ தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாட்டில் ஒரே மொழி ஒரே மதம் இருந்து விட்டால் பிரச்சனை இல்லையென நினைக்கின்றார்கள் போலும்......🤠

ஜேர்ம‌ன் டென்மார்க் நாட்டில் , ஆங்கில‌ எழுத்து மாதிரி தாத்தா அத‌ நாம் சீக்கிற‌ம் எழுத‌ ப‌ழ‌கிடுவோம் / ஹிந்தி எழுத்து  அப்ப‌டியா ஒன்றும் புரியாது தாத்தா / 

ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்குமாம் / ஹிந்தி தெரிஞ்ச‌வ‌ன் த‌மிழ் நாட்டில் வ‌ந்து வாழ்க்கையை ஓட்டுறான் அவ‌னின் மானில‌த்தில் வேலை இல்ல‌ என்று / த‌மிழ் நாட்டு விஜேப்பி க‌ட்சி கார‌ங்க‌ள் சொல்லுவ‌து எல்லாம் சுத்த‌ பொய் தாத்தா 😁 /

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2019 at 4:48 AM, தமிழ் சிறி said:

தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி.

எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்குது நல்லகாலம் மோடி மறுபடியும் பதவிக்கு வந்தது  தமிழ்நாட்டு தமிழனுக்கு இனி சீமான் கத்தி குழறி சொல்லதேவையில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.