Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் படையினர் கிலி, வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு, விமான நிலையம் மூடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிலி கொண்டு இருக்கினம் பறவைகள் பறந்தாலும் சூடுபோலதான் இருக்கு

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

  • Replies 54
  • Views 11.8k
  • Created
  • Last Reply

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

:P

பிந்திய செய்தி

வெற்றிகரமாக இரண்டு காகங்கள் சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது!

ஆதாரம்

லங்கா புவத்

அப்ப வெற்றிகரமாய் சுற்றுலாவுக்கு வாற ஒண்டு ரண்டு வெள்ளைக்காறன்களையும் இனிமேல் வராமல் பண்ணி விடுவார்கள் எண்டுறியள்.

தன் தலையிலை மண் அள்ளி போடுறதுல இது ஒரு வகை... :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

இனி வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் நிலைதான்.

இலங்கையில் பாவம் ஆந்தை இனம்தான் அழிய போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 5 வருட பேச்சுவார்த்தை காலத்தில்

எத்தனையோ ஆயிரக்கணக்கான

அறிக்கைகள்

அலசல்கள்

ஆய்வுகள்

கட்டுரைகள்

பேச்சுக்கள்

கண்ணோட்டங்கள்

எதிர்வு கூறல்கள்

என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்

தமிழர்களாலும் தமிழரல்லாதவராலும்

செய்யப்பட்டன.

இப்போ எனது வினா என்னவெனில்

இதில் எவராவது விடுதலைப்புலிகள் தமது

விமானங்களை தாமாகவே பயன்படுத்தும்வரை

விடுதலைப்புலிகள் தமது விமானங்களைப்பாவித்து இப்படியான தாக்குதலைச்செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் அல்லது வளர்வார்கள் என்ற கருத்தை

அல்லது எதிர்கூறலை முன்வைத்தார்களா?

நானறிந்தவரை இலலை

அப்படியாயின் ஏன் முடியவில்லை..

ஒரு தமிழ்ப்பத்ிரிகை ஆசிரியர் ஒருவர் தொலைக்காட்ச்சி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Airport opened after 'attack scare' - BBC SINHALA

A Srilankan airforce helicopter had crash landed in Anuradhapura :lol: moments after anti aircarft firing was carried out in Katunayake near Colombo International airport. Journalists were not allowed to visit the site of emergency landing of the MI-24 helicopter. :lol:

Government say that the airport is 'functioning as normal' after the Katunayake air force base activated the air defence system.Government say the airport was only closed temporarily.

Conflicting reports

The defence ministry says an 'enemy aircraft' was detected by the air defence staff. Katunayake Sri Lanka Air Force has engaged its air defence weapons at a suspicious air craft observed in the Katunayake sky short while ago - defence ministry

"Katunayake Sri Lanka Air Force has engaged its air defence weapons at a suspicious air craft observed in the Katunayake sky short while ago. The suspicious air move has been detected by the air defence radar around 10.45 p.m ." defence.lk website cited

However, the media centre for national security say there was no aircraft.

"No air craft move or attack occurred" said, www.rnhit.com.

Katunayake International Air Port was temporarily closed for civil aircraft movement.

flares in Trincomalee

Meanwhile residents in Trincomalee say they saw flares being fired in the air. No air craft move or attack occurred

National security

The incident comes a month after the rebels launched their first air raid on a government target, dropping bombs on a military facility at the airport. The Tamil Tigers mounted a second air raid earlier this week (on military positions in the north of the country).

Bandaranaike international airport shares a runway with the airbase. Residents in the area told the BBC, the gunfire went on for about

ten minutes.

'panic situation'

A woman passenger at the airport told the AFP news agency by telephone, "Passengers were ordered to the ground floor after we heard gun fire and some blasts,"

"It was a panic situation, but no one was hurt." She added.

Immediately after the alarm was raised at the airport, a power

failure plunged the capital into darkness

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழ்ப்பத்ிரிகை ஆசிரியர் ஒருவர் தொலைக்காட்ச்சி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

என்ன சொன்னார்

எங்கே சொன்னார.

எந்த ஆதாரத்தோடு சொன்னார்

ஒரு தமிழ்ப்பத்ிரிகை ஆசிரியர் ஒருவர் தொலைக்காட்ச்சி பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

இந்த யாழ் களத்தில் சிலர் புலிகள் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடாத்தும் கலம் வரும் அப்போ

சிங்கள படைகள் தலையை பிய்க்குமென்று சொன்னது என் இந்த பத்திரிகையாளனுக்கு தெரியாமல் போனது...??

இவ்வாறான ஒரு கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஒருத்தர் வந்து

வியாக்கியானம் பேசினவர் ;; எல்லோரும் சோதிடம்;; கூறுகிறார்கள் என்று..

அப்பொழுது நடந்த அந்த விhதங்களை பொய் கட்டு கதை

அதற்கு மேலாக ;; கற்பனை கதை..மிக மெத்த ;; கற்பனை; என பறையடித்'த அவர்களை

தற்போது இந்த யாழ் களத்திற்கு அழையுங்கள் அவர்களுடைய முக மூடிகள் கிழியும்....

தாம் சொல்வதே சரியென்றும் சாதரன மக்களின் கருத்துக்கள் ஊகங்கள் பிழையென வாதிட்டவர்களால் ஏன் இந்த சாதரன பாமர

மக்களது கருத்தை செவி சாய்க்க வில்லை...??

அதற்காண அடிப்படை காரணம் என்ன...??

மக்கள் பேசுகிறார்கள் மக்கள் பேசுகிறார்டகள் என திரைகளிற்கு முன்னால் அமர்ந்து தங்களது

எண்ண கருத்துகளை சொல்பவர்கள் இந்த மக்களத கருத்துகளையும் உள் வாங்க வேண்டும்..

அது தான் நீதி தாமம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறான ஒரு கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஒருத்தர் வந்து

வியாக்கியானம் பேசினவர் ;; எல்லோரும் சோதிடம்;; கூறுகிறார்கள் என்று..

அப்பொழுது நடந்த அந்த விhதங்களை பொய் கட்டு கதை

அதற்கு மேலாக ;; கற்பனை கதை..மிக மெத்த ;; கற்பனை; என பறையடித்'த அவர்களை

தற்போது இந்த யாழ் களத்திற்கு அழையுங்கள் அவர்களுடைய முக மூடிகள் கிழியும்....

தாம் சொல்வதே சரியென்றும் சாதரன மக்களின் கருத்துக்கள் ஊகங்கள் பிழையென வாதிட்டவர்களால் ஏன் இந்த சாதரன பாமர

மக்களது கருத்தை செவி சாய்க்க வில்லை...??

அதற்காண அடிப்படை காரணம் என்ன...??

மக்கள் பேசுகிறார்கள் மக்கள் பேசுகிறார்டகள் என திரைகளிற்கு முன்னால் அமர்ந்து தங்களது

எண்ண கருத்துகளை சொல்பவர்கள் இந்த மக்களத கருத்துகளையும் உள் வாங்க வேண்டும்..

அது தான் நீதி தாமம்...

உங்கள் ஊகங்களால் யாருக்கு என்ன லாபம் வந்தது?

சரி அப்படி ஊகிப்பவ்ர்கள் தமிழீழம் எப்போது என்ன தேதி கிடைக்கும் என்று எங்கே சரியாக ஊகியுங்கள் பார்ப்போம்

Edited by பண்டிதர்

வருது என்பார்கள் வராது

வராது என்பார்கள் வந்துவடும்...

இனி அடிக்கடி கிலி வான் புலி...

இனி அடிக்கடி இருள்

இனி அடிக்கடி வெற்று வேட்டுகள்...

இனி அடிக்கடி தமிழ் மக்களின் அவல அனுபவங்கள் நீயும் படத்தான் போகிறாய்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் அர்த்தம் என்னவெனில் எமது விடுதலை நெருங்குகின்றது.

ஆகாயத்தை ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வென்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. செய்திகளில் இருந்து புலனாவது ஒன்று மட்டுந்தான். பயம்........பயம்........பயம்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையின்ரை பாதுகாப்பு வியூகங்கள் எந்த அளவில் இருக்கின்றன என்று பரிசோதித்து உளவுத் தகவல்களை திரட்டுவதற்காக புலிகளின் விமானங்கள் நடாத்திய ஒரு விளையாட்டுபோலதான் படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க வான்தாக்குதல் அச்சத்தினால் இந்தியாவுக்கு திருப்பப்பட்ட வானூர்திகள்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனும் அச்சம் காரணமாக சிறிலங்காவின் ஒரேயொரு அனைத்துலக வானூர்தி நிலையம் மூடப்பட்டதுடன் அதனை நோக்கி வந்த வானூர்திகளும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

ஹெங்கொங்கில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கதே பசுபிக் வானூர்தி நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் வானூர்தி இந்தியாவின் சென்னை வானூர்தி நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாக அந்த வானூர்தி நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் மர்ம வானூர்திகள் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக வானூர்தி நிலையத்தை மூடியதாகவும், கொழும்பு நகருக்கான மின் விநியோகத்தை துண்டித்ததாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்புக்கருவிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயக்கபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் வான்புலிகளின் வான் தாக்குதல் அச்சம் காரணமாக பீதியடைந்த சிறிலங்கா வான்படையினர் வானை நோக்கி வானூர்தி எதிர்ப்பு கனரக துப்பாக்கிகளினாலும், பீரங்கிகளினாலும் சரமாரியாக சுட்டதே கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

-புதினம்

இப்படி பயம் இருந்தால் இனி கத்வே பசுவிக் தொடக்கம் சிறிலங்கன் எயர்லைன்ஸ் பயனிகள் விமானம் வரை ஒரு நாள் இவங்களின் பேதியால் தாக்கபடும் குண்டுகளில் பட்டு நிச்சயம் விழும் :P

plane.jpg

கட்டுநாயக்காவை வட்டமிட்ட நிதர்சனம் வான்படையின் 4 மிக் 29 தாக்குதல் விமானக்கள்.எந்த வித சேதமும் இல்லாமல் தளம் திரும்பியது :angry: :angry: :angry: :angry:

படம்-நிதர்சனம் செய்தியாளர் ஜெயராஜா

நன்றி-http://nitharsanam.com/?art=22654

ஏன் தன்னையும் ஏமாற்றி மொத்த தமிழரையும் ஏமாற்றி இப்படி லுசுதனம் செய்யுது நிதர்சனம்

என்ன அழகா பக்கத்தில் பறக்கின்றன பாருங்கள்....

என்ன அழகா பக்கத்தில் பறக்கின்றன பாருங்கள்....

என்ன நிதர்சனம் வான்படையின் விமானங்களா இவை கொழும்பு மக்களை தமது சகஸங்களை காட்டி மகிழ்விக்க வந்தன தாக்குதலுக்கு வரவில்லையாம் துயா இதனை நிதர்சனம் வான்படையின் செய்தி தொடர்பாளர் ஜெயராஜா தெரிவித்தார் :P :angry:

பினாத்தும் பிரசாத் சமரசிங்க

நேற்று மின்சாரம் நிறுத்தப்பட்ட பொழுதே யோசிச்சனான் சில வேளை வான்புலிதானோ எண்டு விடிய செய்தி கேட்கும் பொழுது தான் சந்தோசம் வந்தது.

மெல்ல மெல்லமாக 86 ஆம் ஆண்டில இருந்து நாங்கள் பட்ட துன்பங்களை கண்களில் நினைத்து பார்க்க இப்ப மகிந்தவின்ர பட்டாளம் படக்கே வாற சந்தோசம் அளவிடமுடியாதது. இனி சிங்களச் சனமும் பங்கருக்குள் கிடக்கேக்க பாம்பு கடிக்கேக்க தான் கொஞ்சமாய் தெரியும.;

இவர்களுடைய செய்கைய்களைப் பார்த்தால் தமிழ் படங்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை போல் உள்ளது, போய் வம்பில மாட்டி அடிவாங்கிறத் போலையே இருக்கு

அப்பாட நான் பயந்தே போனேன் எங்கை 2 பேரும் ஒரே மாதிரி தான் நடிக்கிறம் என்று என்னை கேவலபடுத்தி விடுவிங்களோ என்று :lol:

அவர விட நீங்கள் நல்லாவே நடிக்கிறீங்கள்

இது செய்தி இப்படி தான் ஒரு உடகவியாளன் செய்தி அனுப்பனும்

சிங்களவனுக்கு ஒரு ரம்புகொல என்றால் தமிழனுக்கு ஒரு நிதர்சனம் என்ர நிலை யாக போச்சு

:P

அதெல்லாம் சரி மருத்துவ ஆய்வாளரா இருந்த வடிவேலு எப்போ ரிப்போட்டர் வடிவேலுவா ஆனாரு :lol:

பிந்திய செய்தி

வெற்றிகரமாக இரண்டு காகங்கள் சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது!

ஆதாரம்

லங்கா புவத்

தற்போது பிந்திக் கிடைத்த செய்தி, குண்டுச்சத்தத்தால் பயந்து ஓடிய காகங்கள் இரண்டு மோதித்தான் விழுந்ததாக அரச புலனாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்

ஆதாரம்

லங்காதீப

அப்ப வெற்றிகரமாய் சுற்றுலாவுக்கு வாற ஒண்டு ரண்டு வெள்ளைக்காறன்களையும் இனிமேல் வராமல் பண்ணி விடுவார்கள் எண்டுறியள்.

தன் தலையிலை மண் அள்ளி போடுறதுல இது ஒரு வகை... :P :P :P

இப்பவே அவங்கள் போறதில்லை

மண்டைக்குள்ளையும் களிமண்தான் இருக்கு சோ கவலைப் படத்தேவையில்லை :)

விமான நிலையத்தை வட்டமடித்த மர்ம விமானங்கள்: கொழும்பில் பீதி - மின்சாரம் துண்டிப்பு

ஏப்ரல் 27, 2007

கொழும்பு: கொழும்பு அருகே உள்ள கட்டுநாயகே விமானதளத்தை சில மர்ம விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்ததால் கொழும்பில் பெரும் பீதி ஏற்பட்டது. விமான தளத்திலும், கொழும்பு நகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் தற்போது வான்வழித் தாக்குதலில் குதித்துள்ளனர். முதலில் கட்டுநாயகே விமானப்படை தளத்தில் அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்னர்.

புலிகளின் இந்த விமானத் தாக்குதல் இலங்கை அரசை நிலை குலைய வைத்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இலங்கை அரசு விலகுவதற்குள் பலாலி விமான தளம் மீது புலிகள் சரமாரியாக குண்டு வீசி விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். விமான தளத்திலும் சேதம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பெரும் பீதி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கட்டுநாயகே விமான தளத்தின் மீது நேற்று நள்ளிரவு 3 மர்ம விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்தன. இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக விமானதளம் மூடப்பட்டது. அருகில் இருந்த சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது.

இரு விமான நிலையங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல கொழும்பு நகரிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன.

ராணுவம் மற்றும் விமானப்படைகள் உஷார்படுத்தப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் தாக்குதல் எதையும் நடத்தாமல் அந்த மர்ம விமானங்கள் மூன்று முறை வட்டமடித்து விட்டு போய் விட்டன.

அவை எங்கிருந்து வந்தன, என்ன வகையான விமானங்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை. மர்ம விமானங்கள் கட்டுநாயகே விமான தளத்தை வட்டமடித்த தகவல் கொழும்பு முழுவதும் பரவி மக்கள் பீதியில் மூழ்கியுள்ளனர்.

தற்ஸ்தமிழ்

புலிகளின் விமானங்கள் மீண்டும் வந்ததாகக் கிலி! கட்டுநாயக்கா, கொழும்புப் பகுதிகளில் பெரும் பதற்றம்!! ஒரு மணிநேரம் இருளடையச் செய்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கின. கொழும்பு,ஏப்.27

.விடுதலைப் புலிகளின் விமானங்கள் மீண்டும் கட்டுநாயக்கா நோக்கி வந்துவிட்டதாகக் கிலி கொண்டு, விமானத் தளத்தில் இருந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் ஷெல்களும் தொடர்ச்சி யாக அரை மணிநேரத்துக்கும் அதிகமாக நேற்றிரவு முழுங்கின.

கட்டுநாயக்காவை அண்டிய பகுதிகளான ஜா.எல, சீதுவ, வத்தளை, பேலியகொட மற்றும் நீர்கொழும்புப் பிரதேசங்களில் இடியோசை போன்ற பெரும் சத்தங்கள் கேட்டதால் அப் பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். என்ன நடக்கப் போகின்றதோ எனத் திகிலுற்றனர்.

விமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தலைநகர் கொழும்பு உட்படப் பல பிரதேசங்கள் இருளடையச் செய்யப்பட்டன. அதனால் பல பிரதே சங்களைச் சேர்ந்த மக்கள், என்னவோ, ஏதோ என்று பதற்றமுற்றனர்.

நேற்றிரவு சுமார் 10.55 மணிக்குத் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் சுமார் 11.45 மணிக்கு கிடைத்த பின்னரே கட்டுநாயக்கா வில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் மற்றும் ஷெல்கள் முழங்கியதன் கார ணம் மக்களுக்கு தெரியவந்தது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, கட்டுநாயக்க விமானத் தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம், இராணுவத் தலைமையகம் உட்பட பிரதான இடங்களில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளடையச் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

புத்தளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மூன்று விமானங்கள் வடக்கிலிருந்து தெற்குப் பக்கமாக கடலை முட்டிச் செல்வது போன்று பறப்பதைக் கண்டதாக விமானப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனால் உண்டான சந்தேகத்தின் அடிப்படையில் அவசரத் தடுப்பு பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டன. அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என்ற அபாய நிலையைக் கருத்தில்கொண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. மின்சாரமும் துண் டிக்கப்பட்டது என்று மூத்த படை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு கூறியிருந்தார்.

விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் வானத்தில் விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டன என்பதை பாதுகாப்புத் தரப்புகள் உறுதிப்படுத்தின. கட்டுநாயக்காவைச் சூழ உள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வானத்தை நோக்கி நீண்ட நேரம் எரிபந்தப் பரசூட்டுகள் ஏவப்பட்டதைத் தாம் கண்டதாகக் கூறினர்.

அங்கிருந்து எச்சரிக்கை வேட்டுக்கள், குண்டுகள் வெடித்ததைக் கேட்க முடிந்ததாகவும் அவர்கள் மேலும்தெரிவித்தனர்.

இதேவேளை

நேற்றிரவு சுமார் 11 மணிக்கு புத்தளம் கடற்பகுதிக்கு மேலாக இரண்டு சந்தேகத்துக்கு இடமான இனந்தெரியாத விமானங் கள் பறந்ததாகக் கிடைத்த எச்சரிக்கையாக தற்காப்பு பீரங்கி வேட்டுகளைத் தீர்த்ததாக மற்றொரு செய்தி தெரிவித்தது.

நேற்றிரவு 10.50 மணியளவில் மர்ம விமானம் பறக்கும் சத்தம் கேட்டதைய டுத்து விமானத் தளத்தில் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஷெல்களும் ஏவப்பட்டன.

இதனால் விமான நிலையத்துக்குச் சென்ற பயணிகளிடையேயும் பதற்றம் ஏற்பட்டது.

இடிமின்னல் சத்தத்துடன் சேர்ந்து குண்டு வெடிக்கும் சத்தங்களும் கேட்ட தாக கட்டுநாயக்காவுக்குச் சமீபமாகவுள்ள கிராம வாசிகள் தெரிவித்தனர்.

சுமார் 45 நிமிடங்களின் பின் நிலைமை வழமைக்குத் திரும்பியது.

விமான நிலையம் செல்லும் பாதை கள் உடனடியாக யாவும் மூடப்பட்டிருந்த போதிலும் நேற்று நள்ளிரவு 12.30 மணி யளவில் விமானப் பறப்புக்கள் ஆரம்பமா கின. விமான சேவைகள் வழமைக்குத் திரும்பின.

கடந்த மாதம் 25ஆம்திகதி நள்ளிரவு 1.20 மணிக்கு விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் கட்டுநாயக்க விமானத் தளம் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி யிருந்தமை தெரிந்ததே.

உதயன்

விமானப் படையினர் தற்காப்புத் தாக்குதல்!

கட்டுநாயக்கா விமானத் தளத்தை அண்டிய வான் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமான விமானம் ஒன்று அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானப் படையினர் விமான எதிர்ப்பு தாக்குதலை நடத்தினர்

இரவு 10.45 மணியளவில் சந்தேகத்துக்கு இடமான விமானம் ராடரில் அவதானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே வான் பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு நேற்று நள்ளிரவு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

சந்தேகத்துக்கு இடமான விமானம் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நடவடிக்கையாகவே பாதுகாப்புத் தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டன.

கட்டுநாயக்கா விமானத் தளம் மீது வான் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் விமானப் படைத்தளம் மிகவும் பதுகாப்பாக உள்ளதாகவும் விமானப்படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.

உதயன்

மர்ம விமானங்களினால் நள்ளிரவு பெரும் பரபரப்பு- கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டது; கொழும்பு மாநகரில் மின்சாரம் துண்டிப்பு

தென்பகுதி வான் பரப்பில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு சந்தேகத்திற்கிடமான சில வானூர்திகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து வானத்தை நோக்கித் தொடர்ச்சியாக கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் புத்தளம் வான் பரப்பில் சந்தேகத்திற்கிடமான மூன்று விமானங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பறந்து சென்று கொண்டிருப்பதை சிலர் அவதானித்துள்ளனர்.

கடற்பரப்பின் ஊடாக தென்பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் குறித்த தகவல்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்கும் கொழும்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும் இதையடுத்து, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் வான் பாதுகாப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதுடன் உடனடியாக கொழும்பு மாநகரின் சகல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து வானத்தை நோக்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை ஏவிய அதேநேரம், வடக்கிலிருந்து தெற்கு வரையான அனைத்து படைமுகாம்களும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் வடக்கின் சில படைமுகாம்களிலிருந்து வானத்தை நோக்கி சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை, கட்டுநாயக்க விமானப்படைத் தளப் பகுதிக்கு வந்த இரு வானூர்திகள் அப்பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் வட்டமிட்ட நிலையில் விமானப் படைத்தளத்திலுள்ள விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் தொழில்பட்டு பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் பாரிய சத்தத்துடன் வானத்தை நோக்கி குண்டுகளை ஏவியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டு பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு விமானப்படையினர் அறிவித்ததுடன் அவ்வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானங்களும் திசை திருப்பப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான நிலையத்தை விட்டுப் பயணிகள், ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவரும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வெளியேற்றப்பட்டு அப்பிரதேசத்தின் பாதுகாப்பு முழு அளவில் பலப்படுத்தப்பட்டது.

இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விமானப்படைத் தளம், விமான நிலையம் உட்பட கொழும்பு மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேவேளை, கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி வளைத்த படையினர் அவற்றை நோக்கிச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் உடனடியாக மூடியதுடன் எவரும் உள்ளே செல்ல முற்றாக அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்டுநாயக்க பகுதிக்கு வந்ததாகக் கூறப்படும் இரு விமானங்களும் எதுவித தாக்குதல்களையும் நடத்தாது திரும்பிச் சென்று விட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் விமானப்படைத் தளத்திலிருந்த விமான எதிர்ப்புக் கருவிகள் அடுத்தடுத்து 10 இற்கும் மேற்பட்ட தடவைகள் குண்டுகளை ஏவியதால் அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுப்பதாக செய்திகள் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியது.

கட்டுநாயக்க மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து பெரும் அச்சத்துடன் நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை, வவுனியா வான்படைத் தளப் பகுதியில் நள்ளிரவு 11.30 மணியளவில் பாரிய சத்தம் கேட்டதாகவும் அதைத்தொடர்ந்து வவுனியாவில் அனைத்து படைமுகாம்களிலிருந்தும் வானத்தை நோக்கி சுமார் அரை மணிநேரம் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்தப் பரபரப்புகள் சுமார் 40 நிமிடத்தின் மின் சற்று தணிந்த நிலையில் கொழும்பு மாநகரமெங்கும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டதுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கட்டுநாயக்கவிற்கு வந்த மர்ம விமானங்கள் கொழும்பில் ஏதாவது தாக்குதல்களை நடத்துவதை தவிர்ப்பதற்காகவே கொழும்பு மாநகரில் மின்சார விநியோகம் சில மணிநேரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.