Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாற கோவத்துக்கு இவளை ......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

64514568_10212209248059986_4013799018608

காலையில் வேலை ஆரம்பிப்பது எட்டு மணிக்கு.7.30 க்கு சரியா வீட்டை விட்டு இறங்குவது. சாதாரணமாக பத்து நிமிடம் போதும் போக. ஆனால் கார் பாக் கிடைப்பது கடினம் என்பதால் வெள்ளணவே போய் பாக் செய்துபோட்டு  பத்து நிமிடம் காருக்குள்ளே இருந்துவிட்டு இறங்கிப் போய் போஸ்ட் ஒபிஸ் திறப்பது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் போய்க்கொண்டிருந்தபோது வீதியில் ஐந்தில் தான் போகமுடிந்தது. அத்தனை வாகனங்கள். திடீரென என் காரில் எதுவோ இடிக்க கால் தானாகவே பிரேக்கை அழுத்த நல்ல காலம் எனக்கு முன்னே நின்ற காருக்கு நான் இடிக்காமல் தப்பித்துக்கொண்டேன். உடனே காரை நிறுத்தி விட்டு இறங்க மற்றக் கார் காரர் கோண் அடிக்கிறாங்கள்  காரைத் தள்ளி போய் ஓரமா நிப்பாட்டுங்கோ என்று. சரி என்று ஒரு பத்து மீற்றர் தள்ளி இடமிருக்க நிப்பாட்டிப் போட்டு இறங்கிப் போய் பார்த்தால் பின்பக்க பம்பரில் ஒரு ஓட்டை.

அதன் பின்தான் யார் என்று பார்த்தால் எங்கள் இனப் பெண். மூன்று பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யூனிபோமுடன் காருக்குள் இருக்க " என்ன தங்கச்சி வேகமாகப் போனாலும் பரவாயில்லை. இப்பிடிச் சிலோவாப் போக வந்து இடிக்கிறியள்" என்று சொல்லிவிட்டு பார்க்க பதட்டமாய் கார்க் கதவைத் திறந்து இறங்குகிறாள் அவள். என்ன பெயர் என்று நான் கேட்க கீதா என்கிறாள். கணவனின் பெயரையும் தொலை பேசி எண்ணையும் வாங்கி எழுதிவிட்டு எந்த இன்சூரன்ஸ் என்கிறேன். பெயரைச் சொல்லிவிட்டு அக்கா தயவுசெய்து இன்சூரன்சுக்குப்போகவேண்டாம். எனக்கு இன்சூரன்ச் கூடிவிடும். நீங்கள் திருத்துற காசை நான் கையில தாறன் என்கிறாள். சரி பாவம் எங்கடை ஆட்கள் தானே. சரி தங்கச்சி நான் நான் வேலைக்குப் போக வேணும். அங்கே போய்நின்று உங்களோட கதைக்கிறேன் என்று கூறியபடி அவரையும் காரையும் சேர்த்துப் படம் எடுத்து என் காரையும் படமெடுத்துவிட்டு வந்து கடையைத் திறந்துவிட்டு அதன் பின் கணவருக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, சரி அந்தப் பெட்டையோட கதையன் என்றுவிட்டு மனிசன் வச்சிட்டுது.

ஒரு அரை  மணிநேரம் போகத்தான் எனக்கு நேரம் கிடைக்க அவளுக்குப் போன் செய்து என் கராச் காரரின் பெயரைச் சொல்லி இவரைத் தெரியுமா என்று கேட்கிறேன். ஓம் அக்கா எனக்கும் தெரியும் நீங்கள் அங்க கொண்டுபோய் விடுங்கோ நாங்கள் காசு குடுக்கிறம் என்கிறாள். நான்கு மணிக்கு வேலை முடிய நேரே காரச்சுக்குக் காரைக் கொண்டுபோய்க் காட்ட பின்பக்க பம்பரில் ஓட்டை விழுந்திருக்கு அக்கா. அதை முழுவதும் மாற்ற வேண்டும் என்கிறார் அவர். நான் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவருடன் கதைக்கும்படி கேட்க, அவர் அந்தக் கீதாவுக்கு 370 பவுன்ஸ் முடியும் என்று சொல்ல ஓகே என்றுவிட்டு அவள் போனை வைக்கிறாள். எனக்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலை. அதனால் வியாழன் காரைக் கொண்டுவந்து விடுகிறேன் என்றுவிட்டு நான் வந்துவிட்டேன்.

அடுத்தநாள் அந்தக் கராச் காரர் எனக்கு போன் செய்கிறார். அக்கா அந்தப் பெண்ணின் அண்ணா என்னிடம் வந்தவர்.  காசைக் குறைக்கும்படி கேட்டவர். நான் மறுத்துவிட்டேன் என்கிறார். நான் காரைக் கொண்டுவந்து விட இன்னும் இரண்டு நாட்கள் இருக்கே பார்ப்போம் என்றுவிட்டு நான் போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் மாலை அந்தக் கீதா எனக்குப் போன் செய்கிறாள். நீங்கள் சொன்ன இடத்தில காசு கூடவாக் கிடக்கு. நான் ஒரு கராச் சொல்லுறன் கொண்டுபோய் அங்கே திருத்துறியளோ என்கிறாள்.

தங்கச்சி நான் அவரிடம் தான் என்ன பிழை என்றாலும் திருத்துவது. நீங்கள் சொல்லுபவரிடம் கொண்டு போக முடியாது என்கிறேன். அப்ப நீங்கள் இரண்டுபேரும் கதைச்சுப் பேசித்தான் அவ்வளவு காசு கேட்கிறியளோ என்கிறாள்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி நீங்கள் தமிழர் எண்டதால தான் நான் உங்களுக்குத் பாவம் பார்த்தனான். இனிப் பார்க்கேலாது நன்றி வணக்கம் என்றுவிட்டு போனை வைத்துவிட்டேன். அடுத்தநாள் எனது இன்சூரன்சுக்கு அடித்து விடயத்தைக் கூறிவிட்டு இருந்துவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு மரக்கறிக் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த பெண் என்னைக் கண்டவள் உடனேயே வெளியே போய்விட்டாள். எங்கேயோ கண்ட முகமாக இருக்கே என்று யோசிக்க அதன் பின் தான் நினைவு வந்தது.  என் இன்சூரன்ஸில் இருந்து £1450 எனக்குத் திருத்த வேலைகளுக்காகச் செலுத்தும்படி கேட்டுள்ளதாக கடிதம் வந்திருந்தது. கையெழுத்திட்டு இரு வாரங்கள் ஆனபின் என் இன்சூரன்ஸில் இருந்து இன்னொரு கடிதம் வந்திருந்தது. அவள் தன் தவறை ஒத்துக்கொள்ளாமல் என் கார் தான் பின்னால் உருண்டு வந்து தனக்கு இடித்தது என்று கூறிய கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தனர்.

இவளை சும்மா விடலாமா சொல்லுங்கோ ?????

  • Replies 99
  • Views 11.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவோவுக்கு, வீட்டுக்கு வந்து வடையை திண்டு, டீயை வாங்கி குடிச்சுப் போட்டு, யாரோ ஐடியா கொடுத்திருக்கினம் போல கிடக்குது.

நடந்த சம்பவங்களை எல்லாம், நீங்கள், கராஜ் காரரிடம் போன விடயம், சொன்ன quotation எல்லாம் கோர்வையாக சொல்லுங்கள்.

இன்சூரன்ஸ் மோசடி என்று அவர்கள் விசாரித்து பிடித்தால், இனி இன்சூரன்ஸ் அவோவுக்கு கிடைக்காது, கிடைத்தாலும் மலிவா இருக்காது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவ எனக்கு தன்னை அறியாமலே சில சாட்சிகளை விட்டிட்டா 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கார் ஓட்டோமற்றிக் காராக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

மேலே நாதம் கூறியது போல....கராஜ் காரரிடம்....அங்கு நடந்த சம்பவங்களை விபரித்து ஒரு துண்டு வாங்குங்கள்! 

இறுதி வெற்றி.....உங்களுக்குத் தான்...!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

எனது கார் கியர் தான். கராச் காரரின் கடிதம் அனுப்பியிருக்கு.

2 minutes ago, Nathamuni said:

இன்சூரன்ஸ் கம்பெனிகள், கண்ணுக்குள் எண்ணையை ஊத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த பெண் தான் ஒருவர் தான் அவ்வாறு சொல்வதாக நினைத்துக் கொண்டிருப்பார். 

ஆனால், இன்சூரன்ஸ் கொம்பனிக்கு, பல மில்லியன் பேர்களின் அனுபவம் உண்டு என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

என்றாலும் இத்தனை துணிவாக எப்படிப் பொய் சொல்கின்றனர் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

அவ்வாறெனில்....அது பின்னால் உருளும் சாத்தியம் இல்லையே ! அத்துடன் விபத்து நடந்த இடம் சமதளமாக இருக்குமெனநீங்கள்  புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தலாமே...!

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம். Safety Gab விடவேண்டும் எண்டு சட்டம் சொல்லுது. தமிழில சொல்லுறது எண்டா, முன்னால போன காரின், குண்**** கில பின்னால வாற கார் போக கூடாது.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உருளுதோ, இல்லையோ, பின்னால இடித்தால், பின்னால வந்த காரில் தான் பிழை எண்டது எப்பவோ முடிவான விசயம்.

இப்பவெல்லாம், dashboard, rearview காமெராக்களோட சனம் திரியுது.

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

உங்கட கராஜ் காரர், அவர்கள் தொடர்பு கொண்டதையும், காசு விடயமாக பேரம் பேசியதையும், தமது கராஜுக்கு போக சொன்னதையும் சொல்லுங்கோ.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் accept பண்ணினால்... அவவுக்கு செலவு இல்லை தானே. உங்கட இன்சூரன்ஸ் கொம்பனி தானே கட்டும். உங்கட பிரீமியம் கூடும்.

அட நாசமாய் போக

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )😀😀😀😀

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒரு விபத்து நடந்து 24 மணி நேரத்துக்குள் உங்கள் காப்புறுதி நிறுவனத்துக்கு உங்களில் பிழை இல்லை என்றாலும் அறிவிக்கனும் என்பதை அநேக காப்புறுதி நிருவனம்கள் வலியுறுத்து கின்றனர் அதனால் உங்கள் பிரிமியம் கூடபோவதில்லை மேல் சொன்னவாறு தவறான கிளைம்களை தடுக்கவே அப்படியில்லாத பட்சத்தில் நீங்கள் நிறைய ஆதரம்களை தேட வேண்டி இருக்கும் .(இண்டைக்கு நித்திரை துலன்சுது இவேக்கு )

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவ உங்களுக்குத் தெரிஞ்ச ஆளாகவும் இருப்பா. இவற்ற  நித்திரையும் துலைஞ்சுது  😀

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியது போல் எனில் எப்படி அவளின்  இன்சூரன்ஸ் அவள் சொன்னதை நம்பி எனக்குக் கடிதம் போட்டிருக்கு. ????

அவர்களுக்கு உழைப்புத்தானே அவன்ரை பக்கமும் 7.5 சனி இனி வரும் ஐந்து வருடத்துக்கு சிப்பிலி ஆட்டும் இந்த கேசில் அவ  வெல்ல போவதில்லை வெண்டாலும் ஏலரைதான் அவவுக்கு ஒவ்வொரு வருடமும் காப்புறுதி புதுபிக்க போகையில் அழகாய் கேட்ப்பார்கள் "Have You Had An Accident In Last 5 Years? "? ஓம் உங்களில் பிழை இல்லை என்றாலும்  நடந்தால் yes தான் சொல்லணும் .அதன் பின் தொடங்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

உவையள், உந்த ரேடியோ விளம்பரத்தை கேட்டு, சன்னதம் கொண்டாடுற ஆக்கள், கண்டியளோ.

முந்தி காருக்குள ஏறின, ibc, ஆதவன் தான். இப்ப அந்த பக்கமே போறதில்லை.

இன்னமும், இலங்கைக்கிலேயே வைத்திருக்கினம் எண்ட மாதிரி தான் நிகழ்வுகள். ஒரு செய்தியாவது வாழும், புலம் பத்தினது எண்டால் இல்லை.

இதில வாற விளம்பரம் தான், 'வாகன விபத்தா'... வாகனங்களை அப்புறப்படுத்துவது மட்டுமல்ல.... 'காப்புறுதி நிறுவனத்துக்கு எப்படி சொல்வது என்றும் சொல்லி தருவோமாம்'.

இவர்கள் தான் அந்த, வடை, தேத்தண்ணி ஆலோசகர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

எனக்கு தெரிந்ச ஆட்கள் லண்டனில் கூட உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் பிழை செய்தால் பேசாமல் இருப்பது உங்கள் இயல்பாக்கும்  நம்மை பொறுத்தவரை பிழை யார் விட்டாலும் அதிலும் இப்படியனதுகளை சும்மா விட்டால் நாளைக்கு அதுகளின்ரை சொறி குணத்தை எல்லாரிடமும் காட்ட வெளிக்கிடுங்கள் அப்படி குற்றம் அவர்கள் செய்வதுக்கு நாங்களும் ஒரு காரணமாய் இருக்கக்கூடாது .

நன்றி பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

அதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

2 hours ago, MEERA said:

அதே!

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கார் பின்பக்கமாக உருள வாய்ப்பில்லை என்றாலும் படத்தைப் பார்க்க மிச்சம் ஜங்சன் ஏற்றமாக இருக்கு! கார் பின்னுக்கு உருண்டிருக்குமோ🤔

மிச்சம் ஐங்சனில் இருந்து ஒரு ஐம்பது மீற்றரில வலது பக்கம் இரண்டு றோட்டுகள் திரும்புமல்லோ அதுக்குப் பக்கத்திலதான் நடந்தது. அதில் உருள ரு வாய்ப்பே இல்லை.

8 hours ago, குமாரசாமி said:

என்னாடா மேடத்தை அஞ்சாறு நாளாய் காணேல்லையே எண்டு பாத்தன்? இதே பிரச்சனை? ஆக்களுக்கு சேதம் இல்லாதவரைக்கும் சந்தோசம்.
வந்து வாய்க்கிறதெல்லாம் தலையிலை சம்பல் அரைக்கிற கும்பலாய் எல்லே கிடக்கு...🤠

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

9 hours ago, MEERA said:

அதே!

😡😡

6 hours ago, Nathamuni said:

குழப்பாதீங்கோ, பாவம், இரா முழுக்க, அக்காவும், அத்தாரும் நித்திரை இல்லாமல் அல்லாடி போட்டினம். 

டிராபிக் இருக்கிற ரோட்டில, பின்னால் உருண்டாலும், 'உம்மா' தான் கொடுக்கும் வேகம் இருக்குமே தவிர, உதை கொடுத்து, £350 க்கு வேலை செய்ய வேண்டின காயம் வராது எண்டு, படத்தை பார்த்து சொல்ல, இன்சூரன்ஸ் கொம்பனி வித்துவான்கள் இருக்கினம் கண்டியளே. :grin:

நல்லாச் சொல்லுங்கோ உவர் மீராவுக்கு.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
spelling

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இன்ஸ்சூரன்சுக்குள் போனால் இரண்டு வாகனமும் ஒரே இன்சூரன்ஸ் என்றால் அதிகம் பிரச்சினை இல்லை.வெவ்வேறு இன்சூரன்ஸ் என்றால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் கதைத்துத்தான் முடிவெடுப்பினம்.....!

ஒருமுறை ஒரு பொடியன் ஒரு மொபைலட்டில் (அது ஓட லைசென்ஸ் தேவையில்லை) எனது காருக்கு பின்னால் வேகமாய் வந்து பிழையான பக்கத்தால் முந்தும்போது எனது காரின் சைட் கண்ணாடியை உடைத்து பாலன்ஸ் தவறி வேலிக்குள் விழுந்து அவரது மொபைலட்டின் முன் பாகம் முழுதும் நொறுங்கி போட்டுது. எனது காருக்கு கண்ணாடி மட்டும்தான் சேதம்.மற்றும்படி ஒரு கீறலும் விழவில்லை. நான் ஓடிப்போய் அவரையும் சைக்கிளையும் தூக்கி விட்டன்.பலமுறை மன்னிப்பு சொன்னான். அவன் அழுவாரைப்போல் நின்றான். பார்க்க பாவமாய் இருந்தது.  நான் கேட்டன்  இப்ப என்ன செய்யலாம் என்று.அவன் சொன்னான் தன்னில் பிழை என்று எழுதித் தாறன் எண்டு. நான் அதற்குரிய படிவத்தை எடுத்து படமெல்லாம் கீறி நிரப்பி கையெழுத்து வாங்கி  விட்டு சொன்னன் உனக்கு விருப்பமெண்டால் சொல்லு நான் இதை இன்சூரன்சுக்கு கொடுக்கவில்லை. எனது காரை நான் திருத்தி கொள்ளுறன், நீ உனது வண்டியை திருத்தி கொள்  என்று. அவன் சொன்னான் தன்னுடையது புது வண்டி. முன்னுக்கு முழுதும் சேதமாய் போட்டுது. ஆனால் தன்னுடையது" தூ ரிஸ்க் இன்சூரன்ஸ்" full insurance  (அதாவது அவரின் வண்டிக்கு அவரோ அன்றி மற்றவர்களோ அடித்தாலும் இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது இன்சூரன்ஸ் எப்பொழுதும் மினிமம்தான். நான் யாரையாவது அடித்தால் அவர்களது வாகனத்தை இன்சூரன்ஸ் செய்து குடுக்கும். எனது வாகனத்தை நான்தான் திருத்த வேண்டும். வேறு யாரும் எனது வாகனத்தை இடித்தால் இன்சூரன்ஸ் எனது வாகனத்தை திருத்தித் தரும்.) அதனால் நீங்கள் படிவத்தை உங்களது இன்சூரன்ஸில் குடுங்கோ என்கிறார். நானும் சரி என்டு போட்டு அவரையும் சைக்கிளையும் ஏற்றிக்கொண்டு போய் அவரிடத்தில் விட்டு விட்டு எனது இன்சூரன்ஸில் விடயத்தை சொல்லி படிவத்தை குடுத்து விட்டு வந்தேன். 

சில நாளில் எனக்கு கடிதம் வருகுது. பிழை 50/50 என்றும் எனக்கு போனஸ் கூடும் என்றும் வருது. நான் நேரில் போய் கேட்டன்  எண்ணில் ஒரு பிழையும் இல்லை எப்படி 50/50 வரும் என்று. அது தாங்கள் அவர்களின் இன்சூரன்சுடன் கதைத்தது என்று சொன்னார்.நான் சொன்னன் நான் போய் என்ர லோயருடன் வாறன், பிறகு நீ என்னுடைய கார்கள் (மகன், மகளுடையது ) எல்லா இன்சூரன்சும் இங்குதான் இருக்கு நான் எல்லாத்தையும் நிப்பாட்ட போறன் என்று வெளிக்கிட அவர் என்னை இருக்க சொல்லிவிட்டு  மற்றும் கூட வேலை செய்யும்  இருவருடன் கதைத்து விட்டு போனில் மேலிடத்துடன் கதைச்சினம். பிறகு வந்து சொன்னார் நாங்கள் எல்லாம் கதைசிட்டம் உன்னில் பிழை இல்லை என்று. நான் விடேல்ல என்ர  சைட் மிரர் உடைந்திட்டுது என்ன செய்யிறது என்று கேட்க , அவர் ஒரு கராஜ் விலாசம் தந்தார் அங்கு கொண்டுபோய் காட்ட  சொல்லி கடிதமும் தந்தார். நானும் அதை வாங்கி கொண்டுபோய் அந்த கராஜில் குடுத்து சில நாளில் புதிதாக போட்டு தந்தார்கள். போனஸும் ஏறவில்லை......!  

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கோட்டுக்குப் போய்த்தன்னும் அவளுக்கு    நிரூபிக்காமல் விடுறேல்லை.😄

எதுவானாலும் கதைக்க வேண்டும்.....!  😄

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த காப்புறுதி மெடிக்கல் அது இது அந்த நோவுக்கு 5000 ஆயிரம் குடும்பமே போய் செட்டப்  இடிபட்டு கிளைம் எடுக்கும் கள்ள முறையால் (தொடக்கம் கனடா ) இப்ப சின்ன விடயத்துக்கும் அதிகமாய் பிரீமியத்தை கூட்டுகிறார்கள் இந்த இன்சூரன்ஸ் கொம்பனிகாறர் முன்பெல்லாம் நோ கிளைம் போனஸ் புரட்டக்சன் என்ற ஒன்று இருந்தது இப்ப அது பேருக்குத்தான் இருக்குது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.