Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்ய தடை: வென்னப்புவ பிரதேசசபை அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது.

நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.65557801_10216612250872980_298473386962365557801_10216612250872980_2984733869623738368_n-225x300.jpg

http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

  • Replies 65
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில்  எனக்கு  உடன்பாடில்லை

ஆனால்  எமக்கெதிராக  இவ்வாறு நடக்கும்போது

அவர்கள் விலகியாவது  இருந்திருக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் 22ம் திகதி, குண்டுகள்  வெடித்த மறுநாள் நான் பதிவு செய்திருந்தேன்....

முஸ்லீம் மக்களின் பொருளாதார வளம் இலக்கு வைக்கப்படும். அவர்களது அரசியல் பலம் தகர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். முக்கியமாக, கிழக்கின் ஹிஸ்புல்லா, றிசாட் அரசியல் முடக்கப்படும் என்றும்.... சர்வதேச நிலைமைகளினால், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான நிலைப்பாட்டினை விடுத்து, தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அடிமட்ட முஸ்லீம்கள்தான் பாதிக்க பட போகிறார்கள்  அவர்களுக்கும்  தெரியும் ஆனால் அவர்களின் பணக்காரா அரசியல் தலைமைகளில் இருந்து தப்பி அவர்களால் ஒரு இம்மியும் தூக்கி போட ஏலாது இப்படியான நடவடிக்கைகள் மூலமே அவர்களின் உண்மைத்தன்மையை அவர்கள் அறிய வைக்கலாம் ஆனால் சிங்களம் அவர்களை நோக்கி இலக்கு வைத்து விட்டது எம்மை அழித்த பட்டறிவுடன் இவர்களை அழிக்கும் அடக்கும் இதே கல்முனை பிக்குகள் நாம் அழியும்போது எங்கிருந்தவர்கள் இன்று தமிழனுக்கு நீதி இல்லாவிட்டால் தற்கொலை என்று பிக்கு அறைகூவல் விடுபவரை பார்த்து கேட்கணும் மே 18 எங்கை இருந்தவர் என்று ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

வென்னப்புவ பகுதிகளில் வாழும் கரையேர கிறிஸ்தவ சிங்களவர்கள் கடும் துவேசம் மிக்கவர்கள். இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

இத்தாலி சிங்களவ‌ர்களே அதிகம். 

இத்தாலி ????

த்தாலி ?????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இத்தாலி ????

த்தாலி ?????

Italy

  • கருத்துக்கள உறவுகள்
Just now, colomban said:

Italy

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Portuguese - ✔️

Holland   - ✔️

British - ✔️

Italy - ?

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

3 hours ago, Nathamuni said:

 தமிழ் பேசும் தமிழர்களாக சேர்ந்தால் மட்டுமே இலக்கைத்தீவில் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு...

அதுவே நடக்கின்றது.
 
தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

தயவு செய்து நடப்பதை கதையுங்கள். 

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம்.

கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே.

இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உண்மை

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நாதமுனி 

இத்தாலியில் அனேகர் சிங்களவர்கள் மேலும் இவர்கள் மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போலல்லாது. ஒருவித மதாவியர்கள், முரடர்கள், படிப்பறிவில்லாதவர்கள். கீழ்த்தட்டு மக்கள், unskilled laborers.

பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இத்தாலியில் இருப்பார்கள். இப்படி இருப்பதனால் அவர்களுக்கு ஒருவித சமூக அந்தஸ்து கிடைகின்றது. இந்த அர்த்தத்தில் தான் கூறினேன். இவர்கள் இத்தாலி சிங்களவர்கள் என்று வேறொன்றுமில்லை.  

6 minutes ago, Nathamuni said:

இப்போது நடப்பதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பின்னர் நடக்கப்போவதை நான் சொல்கிறேன்

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

அப்ப, நீங்களும், புங்கையரும் ஊருக்கு திருப்பினால், புங்குடுதீவு வாசிகள் என்று சொல்லாமல், பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று சொல்லலாமோ?

கொழும்பான் ஏதோ போட்டிருக்கிறார். அவர் வந்து விளப்பம் தருவார் என்று நினைக்கிறேன். 

நான்  உண்மை  என்று  சொன்னது இத்தாலியில் சிங்களவர்பெரும்பான்மை  என்பதற்கே  ராசா

அப்புறம்

முன்பு  சிங்கப்பூர் பென்சினியர்மார் என்று  இருந்தது போல்

இனி  பிரான்ஸ் தமிழர், ஆஸ்திரேலிய தமிழர் என்று வரும்  போலத்தான் கிடக்கு

ஏனென்றால் இனி  பென்சினியர்மார்   மட்டும் தான் 

புங்குடுதீவில்   இருக்கப்போகிறார்கள்  என உணரமுடிகிறது

21 minutes ago, Dash said:

அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Dash said:

நடக்க போவதே இல்லை, அவர்களது இலக்கு முழு வடக்கு கிழக்கையும் இஸ்லாமிய மயப்படுத்துவது‌..... நாம் வடக்கை இஸ்லாமிய மயப்படுத்தலுக்கு அனுமதித்தால் மட்டுமே அது சாத்தியம்

இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழ் முகவர்களை  வைத்தது  காணி வாங்குவது. இப்படி ஒருவர் அறியாமல் காணி விற்று இப்பொழுது சுன்னாகத்தில் பள்ளி வாசல் வருகுதாம் என கேள்வி..‌.. அதை விட வவுனியாவில் நடக்கும் இஸ்லாமிய மத மாற்றங்களை பார்த்தால் எவ்வளவு காலம் எமது இனத்தால் தாக்கு பிடிக்க முடியும் என்ற கவலை எழுகிறது ..!!

அதெல்லாம் கவலைப்படாதீங்க.

நம்ம ஞானசேரர், சும்மா அதிர வைப்பார். கல்முனை விசயம் போல, இந்த விசயங்களையும் காதில் போட்டு வைக்க வேண்டும்.

சம்பந்தர் கோஸ்டிக்கு, ரவூப் கக்கீம் என்ற தலையை காட்டிக் கொண்டு, ஹிஸ்புல்லா, ரிசாத் போன்ற வால்கள், அதே சுத்துமாத்துக்களை தமிழர்களுக்கு எதிராக செய்வது இனி கஸ்டமான வேலை.

சும்மாவா சொன்னார்கள், சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் பார்க்க, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று.

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள்..

தமிழ் பெண்களை மதம்மாற்றி இரண்டாவது அல்லாது மூன்றாவதாக   மணம் முடித்து பிள்ளை பெறும் இயந்திரங்களாக முஸ்லிம்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என அதுரலியே ரதனன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்களில் அடிப்படையில் 90 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்னிக்க தொடர்பில் வாத விவாதம் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

தான் வடக்கு பகுதிக்கு சென்ற போது இது விடயமாக அங்கு மக்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளா

https://www.madawalaenews.com/2019/06/blog-post_914.html

6 minutes ago, Nathamuni said:

வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டால் பல விட்டுக் கொடுப்புகள் சாட்சிக்காரர் கோரினர்.

இப்போது, வடக்கு, கிழக்கு இணைப்பு தானே நடக்கும். காரணம் அவர்கள் பாதுகாப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

10 minutes ago, Lara said:

வறுமையிலுள்ள மக்களுக்கு பண உதவி செய்வதாக கூறி தான் பல மதமாற்றங்கள் நடக்கின்றன. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உதவி செய்திருந்தால் பல மதமாற்றங்களை தவிர்த்திருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்த கூட்டமைப்பு இதில் எங்கே கவனம் செலுத்தப்போகிறது?

இதற்கு கூட்டமைபை தவறு சொல்ல வேண்டாம்; வறிய மக்களுக்கு உதவ வேண்டியதே புலம்பெயர் மக்கள் இலகுவாக  செய்ய கூடியது

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களுக்குத் தடை

வென்னப்புவ, தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தங்கொட்டுவ-சந்தையில்-முஸ்லிம்களுக்குத்-தடை/175-234561

வென்னப்புவ , தங்கொட்டுவ ... அடுத்து ...

  • கருத்துக்கள உறவுகள்

பொருட்கள் வாங்க வருகின்ற, முஸ்லிம்களை தடுப்பீர்களா..? தடுமாறிய வென்னப்புவ தவிசாளர்

unnamed.jpg
 
வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடன் தொலைபேசியில் உரையாடக்கிடைத்தது.

முஸ்லிம் வியாபாரிகள் சந்தையில் வியாபாரம் செய்வது தொடர்பாக தற்காலிக தடை விதித்து கடிதமொன்றை பொலிசுக்கு அனுப்பினீர்களா?

ஆம், அனுப்பினேன். எனது பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.

இந்த கடிதம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினீர்களா?

இல்லை, இது நான் தனிப்பட எடுத்த முடிவு.

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் இவ்வாறான தடையொன்றை கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா?

( கதையை மாற்ற முயற்சித்தார்) .... இல்லை. அவ்வாறான தடை ஒன்றும் விதிக்க முயலவில்லை. எனது பிரதேச மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களது பாதுகாப்பை பொலிசார் உத்தரவாதப்படுத்தினால் முஸ்லிம்கள் கடைகளை வைப்பதில் பிரச்சினை இல்லை.

அது வரை இது தற்காலிக தடை.

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை இவ்வாறான தீர்மானம் ஒன்றை சபையில் நிறைவேற்றிய போதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் அதன் தவிசாளரை அழைத்து பொலிசார் அந்த தீர்மானம் தொடர்பில் எச்சரித்ததை அறிவீர்களா?

ஆம், ஆம் இது பொலிசார் எடுக்க வேண்டிய தீர்மானந்தான்.... மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே நான் இந்த கடிதத்தை அனுப்பினேன் ( பிறகு கேள்விக்கு சம்பந்தமில்லாத பலதையும் பேசினார்)

இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கும் ஆட்சியில் வெறுப்படைந்து மஹிந்த ராஜபக்‌ஷ பக்கம் சாயத்தொடங்கியிருந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அதற்கு பாதகமாக அமையாதா?

நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதனைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாட்டில் நடந்த சம்பவங்களை பார்த்தீர்கள்தானே இதற்கு யார் பொறுப்பு.... யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்று அரசு கண்டுபிடித்து சொல்ல வேண்டும். எங்களது கார்டினலும் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்றே சொல்கிறார்.

( நான் என்னமோ கேட்டால் அவர் என்னமோ சொல்கிறார்)

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

Speechless என்றும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து சட்ட ரீதியாக பிரித்தது JVP.

ஆம்...

வடக்கு, கிழக்கு இணைந்தால், தாம் சிறுபான்மையாகி, அதிகாரமற்றவராவோம் என ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாத் கோஸ்டிகள் கூறின.

கிழக்கின் அதிகாரம் கையில் வந்த நிலையில் நடந்த அவலத்தை ஏப்பிரல் மாதம்  நாடும், உலகமும் பார்த்தது...

இதன் காரணாகவே, வடக்கு கிழக்கு இணைப்பை சிங்களம் நடாத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Nathamuni

3 minutes ago, colomban said:

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.

Speechless என்றும் சொல்லலாம்.

பிரபல்யமான ( விலை கூடிய) கடைகளுக்கு வருபவர்களை அவர்களின் பைகளை சோதித்து தானே அனுமதிக்கிறார்கள், அவர்கள் சிங்களவர்கள் என்றாலும் கூட ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.