Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கண்டிப்பாக ஆயுத  போராட்டம் ஆரம்பிக்கபடவேண்டும்,

அந்த போராட்டத்திற்கு நீங்கள் தலைவராகவும், மாவை படை தளபதியாகவும், சுமந்திரன் கட்டளை தளபதியாகவும் மற்றும் உங்கள் கட்சி தொண்டர்கள் ஆயுதமேந்திய போராளிகளாகவும் மாறவேண்டும்,

சிங்கள படைகளை எதிர்த்து மூர்க்கமாக போராடுங்கள் , வாழ்வா சாவா என்று ஒரு கை பார்த்திடுங்கள் .

ஒன்று அவர்கள் வாழவேண்டும் இல்லையென்றால் நீங்கள் வாழவேண்டும்.

ஆனால் தயவு செய்து உங்கள் ஆயுத போராட்டத்திற்கு உதவி தேடி தமிழ்மக்களிடம் மட்டும்  வராதீர்கள்.

Edited by valavan

  • Replies 112
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

சாமானியனோ ...ஜஸ்டின் அண்ணையோ ..சுவையோ 
யார் கேட்டாலும் இப்போதைக்கான தீர்வு 

1.வடக்கு ,கிழக்கு என்பன வேறுபட்ட  இரண்டு மாகாணங்கள் என்பதை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளல் .

2.கூத்தமைப்பு கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பு இரண்டாவது தமிழீழம் (எப்போதுமே சாத்தியமில்லை)

3.யாழ் மையவாத அரசியல் சூழலில் இருந்துகொண்டு கிழக்கின் பிரச்சினையை அணுகவும் முடியாது 
   தீர்க்கவும் முடியாது (Cluelesness இற்கு இதுதான் காரணம்)

4. கூத்தமைப்பின் கிழக்கு மாகாண கச போக்கிலிகளுக்கும் தலைமைக்கும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் 
   செய்ய  தெரியவேண்டிய Basic Requirement முஸ்லிம்களுடனான சமாந்தர அரசியல் (சரணாகதி அரசியல் அல்ல)  

5. (தாயக மக்கள் தாமாக கண்டு கொல்வார்கள், மாடு கொல்வார்கள் என்பதெல்லாம் சுத்த அலப்பறை. விடுதலை புலிகளின் ராசதந்திரத்தையே எதிர்கொண்ட சிங்கள ராசதந்திரத்தை, மக்கள் ஒரு நிறுவன மயப்பட்ட தலைமை இலாமல் எதிர்தாடுவார்கள், வெல்லுவார்கள் என்பது வெறும் காகித படிப்பு படித்து விட்டு, ஊரில் நாலன்ஞ்சு பேரை வச்சு கலர் காட்டும் பேர்வழிகளின் அபத்த பிதற்றல்)

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினை சிங்களவர்கள் அல்ல தமிழ் தேசியமும் அல்ல அவர்களது தற்போதைய  பிரச்சினை முஸ்லிம்கள் (ஈஸ்ரர் தாக்குதலில் கிழக்கு மாகாண தமிழர்களும் ஒரு இலக்கு )

6.கல்முனை விவகாரத்தில் மக்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஒரு பிக்குவால், அதுவும் ஞானசாரர் போன்ற, மங்களராமய சுமனே போன்ற பச்சை இனவாதிகளால்தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கூட கிடைக்கும் என்பதும், தமிழ் தலைவர்களை தமிழர்களை வைத்தே விரட்டி அடிப்பதும் (குறிப்பாக மனோவை விரட்டியமை) ஈற்றில் இந்த மக்களை தலைமை அற்றவர்களாக்கி, அடையாளம் அற்றவர்களாக்கி, பிக்குகள் சொல்கேட்கும் அடிமை சமூகமாக மாற்றும் நீண்டகால நோக்கின் முதல் படியே இந்த கல்முனை நகர்வு என்பது, மூளையை அதிகம் கசக்காமலே புரியக்கூடிய விடயம்தான்

மிக இலகுவான பதில் ஒரு பிக்குவால், பச்சை இனவாதிகளால் தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கிடைக்கும் எனும் நிலைமைக்கு கிழக்கு மாகாண தமிழர்களை கொண்டுவந்த பெருமை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான கூத்தமைப்பின் கச போக்கிலிகளையே சேரும். (உ +ம் 11 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 7 உறுப்பினர் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தது கிழக்கு தமிழர்களுக்கு வாய்க்கரிசி போடுவதை துரிதப்படுத்தியமை)  

6. சுமேயை விடுங்கள், கருணாவா, ஞானசாரரா, மனோ கணேசனா, தமிழ் தேசியத்துக்கு குழிபறித்தவர்கள்? மனோக்கு எதிர்ப்பு, அவர்களுக்கு வரவேற்பு! இது மட்டுமே போதும் இந்த கல்முனை போராட்டமும் இனி வரப்போகும் இத்தகைய போராட்டங்களும், எத்தகைய நச்சு வலைபின்னல் என்பதை எடுத்துக் காட்ட.

தமிழ் தேசியம் கிழக்கில்  மர்கயா ... வேண்டுமென்றால் வடக்கு மாகாணமும் ,கூத்தமைப்பின் வடக்கு மாகாண போக்கிலிகளும் வடக்கில் தமிழர்கள் இரண்டாம் தர (சிறுபான்மை ) ஆகும்/ஆக்கும்  வரை தேசிய அரசியலை முன்னெடுக்கலாம் 

7. இதை எல்லாம் ஆராய மறுத்து( அல்லது ஆராய இயலாமல்), இந்த போக்க்கின் ஆபத்துகளை மறைத்து, மக்கள் வழி கண்டார்கள் என்று வெற்றுக் கோசங்களை காவித் திரிபவர்கள், ஒன்றில் சிந்திக்கிம் திறனற்று இருக்க வேண்டும் அல்லது, ஊரில் தாம் சிங்கள முதலாளிகளுக்கு “யெஸ் சேர்” போட்டு காரியம் சாதிப்பதற்க்காக, தமிழ் இனத்துக்கு இரண்ட்கம் செய்பவர்களாக இருக்க வேண்டும். 

Very True ,கூத்தமைப்பின் மொள்ளமாரித்தனத்தை கண்கூடாக கண்டபின்னர்தான் கூத்தமைப்பின் கூடாரத்தில் இருந்து வியாழேந்திரன் வெளியேறி கிழக்கு தமிழர்களுக்கு சார்பான அவசியமான அரசியலை முன்னெடுக்கிறார், கோடீஸ்வரனின் நிலையிலும் நல்ல முன்னேற்றம் , இவர்களை இணைத்து முஸ்லிம்களை வெட்டி ஓடி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதே கிழக்கு மாகாண தமிழர்களுக்கு முன்னுள்ள அரசியல் . சிங்கள எஜமானர்களுக்கு எஸ் சேர் போடுவது யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்பதால் தான்
இந்த நிலைமைக்கும் மக்களை கொண்டு வந்தது சாட்சாத் கூத்தமைப்பு கச போக்கிலிகளே ... 
முதலில் மனோ கணேசன் துரத்தபடவில்லை ,சும்மொடு சேர்ந்து வந்ததால் அவரும் ஓட வேண்டி வந்தது 
அதனை அவரது முகப்புத்தக பதிவை பார்த்தால் விளங்கும். 

சரி இவை அனைத்தையும் கூத்தமைப்பு தடுத்திருக்கலாமா ...அவர்களது அரசியல் திறனால் முடியாது 
ஆனால் சேதத்தை குறைத்திருக்கலாம்... எப்படி...? ....ஆண்டுக்கொரு தீர்வுத்திட்டத்தை தமிழர் திருநாட்களில் ஏலம் விட்டு அவர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி தமிழர்களுக்கான மாற்றுத்தெரிவை அறவே இல்லாமல் செய்திருக்கிறார்கள் , இவர்களுக்கான மாற்றுத்தெரிவின் அவசியம் வடக்கில் உணரப்படவில்லை 
ஆனால் கிழக்கில் .....?

முதலிலேயே தங்கள் கையாலாகாத்தனத்தை மக்களின் முன் பட்டவர்த்தனமாக கூறியிருந்தால் அவசியமில்லாத எதிர்பார்ப்பும் அதனால் ஏமாற்றமும் மக்களுக்கு வந்திருக்காது. 
(மிகப்பெரிய கேள்வி அரிச்சுவடியில் ஆ வே எழுதப்படாத தீர்வு விடயத்தை எப்படி எதை வைத்துக்கொண்டு 2015 இலிருந்து கூவி கூவி விற்றீர்கள் இங்கே நீங்கள் வைத்த வேட்டு தான் இன்றைய  கிழக்கு மாகாண தமிழர்களின் கையறு நிலை )   

1. நீங்கள் மேலே கூறியவற்றில் முரண்பட பெரிதாக ஒன்றும் இல்லை. சுற்றி வளைச்சு நீங்கள் சொல்ல வருவது யாதெனில், கிழக்கில் இனி சலுகை/சமாந்திர அரசியலே சரிவரும். வடக்கில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு உரிமை அரசியல் இழுபடும்(அங்கேயும் தமிழர் பலம் குறையும் வரை). பின்பு அங்கேயும் அதே நிலைதான் என்பது. இது என்னை பொறுத்த மட்டில் ஒரு தெளிவான புரிந்து கொள்ளலல்தான். அப்படியாயின் இதை மக்கள்முன் வைத்து, வியாழேந்திரன், கோடீஸ்வரன், கருணா இன்னும் பலரைச் சேர்த்து ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, இதுவரை முஸ்லீம்கள் செய்த சலுகை அரசியலே இனி நாம் செய்வோம், வடக்கு-கிழக்கு இணைப்பு தேவையில்லை, என்பதை மையமாக வைத்து ஒரு விஞ்ஞாபனத்தை வைத்து - தேர்தலில் ஏன் போட்டியிடக் கூடாது? 

2. கிழக்கில் தமிழர்களுக்கு என்று ஒரு பிரதியேக தலைமை உருவாகி, அது கிழக்கு தமிழர் நலன் சார்ந்து முடிவெடுக்கும் போது, கிழக்கில், காணி, அரச உத்தியோகம், மாடு மேச்சல் உரிமை என எல்லா வழிகளிலும் எம்மக்கள் தரம் உயரும். இந்த தலைமை கிழக்கு தமிழர்களிடமே இருக்க வேண்டும், ஞானசாரவிடம் அல்ல. (அவரையும் உள்ளே எடுத்து பயன் படுத்தலாம்).

3. இருக்கும் அரசியல்வாதிகளையும் சேர்த்து, இப்படி ஒரு தலைமையை கிழக்கில் உருவாக்க வேண்டியது, கிழக்கு இண்டலெக்சுவள்சின் கடமை அல்லவா? கூடிய விரைவில் இதை செய்யுங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை தூக்கி எறிந்து விட்டு, சலுகை அரசியல் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்தும், நேர்மையான அரசியல் கட்சிக்கு எப்போதும் மக்கள் நலத்தை விரும்பும் சக தமிழர்களின் ஆதரவு இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப என்ன பிரச்சனை புதுசாக வந்தது.சம் சும் +குட்டமைப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது என்டது இங்கு ஏகமனதாக தீர்மானித்தாச்சு.இப்ப அடுத்த கட்டம்.யார் எமக்கு சரியான தலமை என்டது.அதைப்பற்றி கதைக்கலாம்.எனது தனிப்பட்ட கருத்து விக்கியர் சரிவரார்.புதுக்கட்சி என்டால் கொள்கை என்ன என்பது தான் அலசலாமே.இப்படியே போனால் தேசிய கட்டச்சிகள் ஆட்ச்சிக்கு வருவதை தடுக்க முடியாது.அண்மையில் ஊரில் பலரை கேட்டேன் உங்கள் வாக்கு யாருக்கு என்டு உடன் பதில் வீட்டுக்கு என்டு வந்தது.இங்கை இருந்து ஒன்டும் பிடுங்க முடியாது என்டதுக்கு இது ஒரு சின்ன உதாரனம்.

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

இன்னுமா இந்த உலகம் நம்புது .....எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .....என்னத்த  சொல்ல ...அப்படியே அடிச்சு விடுங்க ...

என்ன 2015 இல் சம்பந்தரின் ராஜதந்திரம் அது இது என்று புகழ்ந்து விக்னேஸ்வரனை எதிர் புகழ் பாடியதை மறந்து விடடீர்களா ?  அப்பவே தெரியும் இந்த சாம் சும் வெறும் வெற்று வேட்டுக்கள் என்று ....

காலம் கடந்து அறிவு வந்ததுக்கு நன்றி ....அப்படியே புலிகளுக்கு முன்னாள் எவ்வளவு சவால்கள் இருந்ததையும் உணரும் காலம் வரும்.  

அப்பப்ப அடிச்சு விடக்கூடாது ....

உங்களை போலன்றி, நான் ஒரு தனிமனிதனின் தாசன் கிடையாது. எனக்கு அந்தந்த தறுவாயில் சரியெனப்படுவதை சொல்வேன். என் கணிப்பு பிழைக்கும் போது, அல்லது நான் கணித்திருந்த பாதையில் நான் சுட்டிய ஆள் போகாதபோது, என் கருத்தை மாற்றி, அவர் மீது விமர்சனமும் வைப்பேன். நான் பிரபாதாசனும் இல்லை, சுமந்திரதாசனும் இல்லை.

சும்-சீவி குடுமிபிடியில் நான் யார் பக்கமும் பாடியதில்லை. இவர்கள் வெளிப்பூச்சுக்கு சண்டை போல காட்டுகிறார்களோ? என்று சில சமயம் யோசித்தேன். ஆனால் சும்முக்காக விக்கியையோ, அல்லது விக்கிக்காக சும்மையோ நான் திட்டவில்லை.

ஒற்றுமை இல்லாமல் போகிறேர்களே என இருவரையும் திட்டி உள்ளேன்.

புலிகளுக்கு முன்னால் எத்துணை பெரிய சவால்கள் இருந்தன என்பது, புலிகள் இருக்கும் போதே எனக்குத் தெரியும். அதனால்தான் 2009 வரை யாழ் போன்ற ஒரு சிறு தளத்தில் கூட, அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை எழுதியதில்லை. 2012 ற்கு பின் அவர்களை விமர்சித்தது, அதே பிழைகளை நான் மீண்டும் விடக்கூடாது என்பதற்க்காக. இப்போ அதற்க்கான தேவையும் இல்லை. விமர்சனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

2 நீன்ட நாள் இலக்கு என்டு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.எனது நிலைப்பாடும் இது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

2 நீன்ட நாள் இலக்கு என்டு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.எனது நிலைப்பாடும் இது தான்.

உண்மைதான். 2ம் 3ம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவை எதையும் தமிழர்  இதுவரை  செய்து  பார்க்கவில்லை  என்பது  போலிருக்கிறது 

உங்களது  கருத்தும்  பார்வையும்.

இவை  அனைத்தையும் 40 களிலிருந்து மீண்டும்   பொருத்திப்பாருங்கள்  புரியும்

இவை  அனைத்தும்  தோல்வியடையத்தான்

பிரபாகரன்  சிறு  வலுவோடு  பேச  ஆயுதம்  எடுத்தார்

அதுவும்  முடியாது போனது

அதன்  அடுத்த  நகர்வான

சர்வதேசத்திடம் வலுவான இன  அழிப்பு ஆதாரத்தோடு  விட்டுச்சென்றார்

அதிலிருந்து தான்  தொடரணும்

அதற்கு  எவுரமே தயாரில்லை

அப்படியென்றால்

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

அது தான் நடக்கும் நடக்கிறது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

 அது தான் நடக்கும் நடக்கிறது

நாலவதுக்கும் கீழே.
முஸ்லீம்கள் பெட்டி பெட்டியாக வாங்கி தமது மக்களுக்கு நல்லதைச் செய்கிறார்கள்.

எமது தலைவர் பெட்டியை வாங்குவதோடு மட்டுமே நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்பது எவ்வளவு பெறுமதியானது என்பது கூட தெரியாத சாணக்கியர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாலவதுக்கும் கீழே.
முஸ்லீம்கள் பெட்டி பெட்டியாக வாங்கி தமது மக்களுக்கு நல்லதைச் செய்கிறார்கள்.

எமது தலைவர் பெட்டியை வாங்குவதோடு மட்டுமே நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்பது எவ்வளவு பெறுமதியானது என்பது கூட தெரியாத சாணக்கியர்.

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

1 hour ago, goshan_che said:

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

1ஐ  பிரபாகரன்  செய்யவில்லை  தொடக்கவில்லை

கூட்டணியினர்  தந்தை  செல்வா  வழியில் ஆரம்பித்தது தான்

அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

இதற்காகத்தான்  மேலே  குறிப்பிட்டேன்

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

அது தான் நடக்கும் நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

ஒபாமாவால் தடுக்கப் பட முடியாத இனப் படுகொலையை ஜோன்சனும், ட்ரம்பும், ஐரோப்பாவில் பெருகி வரும் வலது சாரிகளும் இனித் தடுக்கார் என்பது மட்டுமல்ல, நடந்தால் ஊக்குவிப்பார்கள் என்று இங்கு பல தடவை எழுதப் பட்டு விட்டது!

இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச தலையீட்டை நம்பி எதுவும் செய்வது, 9/11 இற்குப் பின்னான நிலைமை தெரியாமல் புலிகளின் தலைமை ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்த தவறுக்கு ஒப்பானது! அந்தத் தவறின் விளைவையே ஏற்றுக் கொள்ளாத பலர் இங்கே இருக்கும் போது, இந்த சர்வதேச தலையீடு கோரும் வாதம் இருப்பதில் ஆச்சரியமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

சர்வதேச தலையீடு வேலைக்காவாது என்று சொல்பவர் தான் தீர்வும் சொல்ல வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

ஜஸ்ரின் அவர்களது நடைமுறையை வைத்தே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஊகிக்க முடியவில்லையா?

யாராவது இவ்வளவு பிரச்சனைகள் தமிழருக்கு இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போட்டுக் கொண்டே இருப்பார்களா?

நாங்கள் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை.ஆனால் படித்த உங்களால் சிலசில கீறிட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

சர்வதேச தலையீடு வேலைக்காவாது என்று சொல்பவர் தான் தீர்வும் சொல்ல வேண்டுமா?

யாரது???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜஸ்ரின் அவர்களது நடைமுறையை வைத்தே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஊகிக்க முடியவில்லையா?

யாராவது இவ்வளவு பிரச்சனைகள் தமிழருக்கு இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போட்டுக் கொண்டே இருப்பார்களா?

நாங்கள் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை.ஆனால் படித்த உங்களால் சிலசில கீறிட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

ஈழப்பிரியன் அண்ணை, ஊகிப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் இப்ப சில விடயங்களை நானும் ஊகித்து இங்கு எழுத முடியும், அதை விடுங்கள்!

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

ஆனால் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்குது. சம்பந்தரையும் சுமந்திரனையும் திட்டும் சிங்களவர்களோ எதிர் தமிழ் தரப்போ கூட அவர்களுடைய ஊழலின்மை பற்றி மதிப்புத் தான் வைத்திருக்கிறார்கள். சம்பந்தனுக்கெல்லாம் அரசியலுக்கு வந்து பெட்டி வாங்கித் தான் உழைக்க வேண்டுமென்ற தேவை இல்லை என்பது என்னை விட வயதில் அனுபவத்தில் கூடிய உங்களுக்கு தெளிவாக விளங்கும்!தமிழ் தரப்பில் இருந்து எம்.பி யானால் காசு வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுத்தல், தம் பிள்ளைகளை உறவுகளை diplomatic கவரில் வெளிநாடு கூட்டிச் சென்று அசைலம் எடுத்துக் கொடுத்தல் போன்ற நிலைமை தான் பல முன்னாள் போராளிகள் எம்.பி யான போது நடந்தது. இப்படியில்லாமல் நேர்மையாக இருப்பதே சுமந்திரன் மீது மதிப்பு வர எனக்கு ஒரு காரணம். சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

 சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

சரி

அப்படியானால்

கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான  சொத்துக்களும்

சொகுசு  வாகனங்களும்  எப்படி  வந்தது?????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சரி

அப்படியானால்

கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான  சொத்துக்களும்

சொகுசு  வாகனங்களும்  எப்படி  வந்தது?????

அது பா.உ எல்லோருக்கும் அரசு வழங்கிறதெல்லோ?!😋

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அது பா.உ எல்லோருக்கும் அரசு வழங்கிறதெல்லோ?!😋

அண்மையில்

செல்வம் அடைக்கலநாதன்

மற்றும்  மாவை சேனாதிராசா ஆகியவர்களது தாயக வீடுகள் சார்ந்து

படங்கள்வெளியாகி  தாயக  மக்களால் விமர்சிக்கப்பட்டன

எனக்கே  தனிப்பட  சிறீதரனிடம் அனுபவமுண்டு

எந்த அனுபவத்தில்  அல்லது  ஆதாரத்துடன்

Justin அவர்களை  அப்படி  சொல்வது  தவறு  என்கிறார்??

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

அது பொன்சேகாவின் நேர்மை அல்ல  சைக்கிள் கப்புக்குள் அவரின் எதிர்கால அரசியலுக்கு தேவையான துண்டு போட்டு இடம் பிடிக்கும் விளயாட்டு நாங்க டமில்ரசு கட்சி யாகினும் சரி அதுக்கு வால் பிடிக்கும் கூட்டமாகிலும் சரி நாலு இங்கிலுசு சொல் போட்டு தாங்கள் படித்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு சொல்லும் விதம் இருக்கே தாங்க முடியலைடா சாமி .(integrity என்பதை நேர்மை என்று தமிழில் தமிழ் களத்தில் சொல்ல உங்களால் ஏன் முடியவில்லை ?)

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, ஊகிப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் இப்ப சில விடயங்களை நானும் ஊகித்து இங்கு எழுத முடியும், அதை விடுங்கள்!

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

ஆனால் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்குது. சம்பந்தரையும் சுமந்திரனையும் திட்டும் சிங்களவர்களோ எதிர் தமிழ் தரப்போ கூட அவர்களுடைய ஊழலின்மை பற்றி மதிப்புத் தான் வைத்திருக்கிறார்கள். சம்பந்தனுக்கெல்லாம் அரசியலுக்கு வந்து பெட்டி வாங்கித் தான் உழைக்க வேண்டுமென்ற தேவை இல்லை என்பது என்னை விட வயதில் அனுபவத்தில் கூடிய உங்களுக்கு தெளிவாக விளங்கும்!தமிழ் தரப்பில் இருந்து எம்.பி யானால் காசு வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுத்தல், தம் பிள்ளைகளை உறவுகளை diplomatic கவரில் வெளிநாடு கூட்டிச் சென்று அசைலம் எடுத்துக் கொடுத்தல் போன்ற நிலைமை தான் பல முன்னாள் போராளிகள் எம்.பி யான போது நடந்தது. இப்படியில்லாமல் நேர்மையாக இருப்பதே சுமந்திரன் மீது மதிப்பு வர எனக்கு ஒரு காரணம். சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

ஜஸ்ரின் உங்கள் மனச்சாட்சியை வைத்து சொல்லுங்கள் 

நல்லாட்சி அரசு அமைந்த போது இவர்கள் செயல்பட்ட விதம் சரியா?

மக்களை கொண்டு போராட்டம் நடாத்த வேண்டியவர்கள் மக்கள் தாமாக போராட்டங்கள் நடாத்தும் போது கூட அவர்களுக்கு ஆதரவாக இல்லையே?

இன்னமும் சொந்த வீடுகளில் இருந்த தமிழ் மக்கள் முகாம்களில் இருக்கையில் எப்படி சிங்கள முஸ்லீம் மக்களை கொண்டுவந்து தமிழர் நிலங்களில் பெருவாரியாக குடியேற்றுகிறார்கள்?

உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியுது.வாதாடக் கூடிய திறமையும் இருக்குது.அதை வைத்து யாரும் ஒன்று என்றால் இல்லை இது இரண்டு என்கிறீர்கள்.சரி இது இரண்டு என்றால் இல்லை இல்லை இது ஒன்று தான் என்கிறீர்கள்.

நீங்கள் டாக்ரராக இருப்பதை விட வக்கீலாக வந்திருந்தால் இன்னும் திறமையாக இருந்திருக்கலாம்.
நன்றி.சகோதரம்.

1 hour ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

தன் கையே தனக்குதவி. ஒவ்வொருவரின் எதிர்காலம் அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. ஈழத்தமிழரின் எதிர்காலம் ஈழத்தமிழரின் கையிலேயே தங்கியுள்ளது. 

நாம் எப்படி பலமுள்ள வளமுள்ள மக்கள் கூட்டமாக எழுகின்றோமோ அப்போது எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பவர்களாக இருப்போம். அதுவரை நாம் இலகு பார்த்த கிளிகளே

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, manimaran said:

தன் கையே தனக்குதவி. ஒவ்வொருவரின் எதிர்காலம் அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. ஈழத்தமிழரின் எதிர்காலம் ஈழத்தமிழரின் கையிலேயே தங்கியுள்ளது. 

நாம் எப்படி பலமுள்ள வளமுள்ள மக்கள் கூட்டமாக எழுகின்றோமோ அப்போது எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பவர்களாக இருப்போம். அதுவரை நாம் இலகு பார்த்த கிளிகளே

அதைத்தான்  சகோ  நானும்சொல்கின்றேன்

நான்  புலத்திலிருந்து சொல்வதால்

அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பார்க்கிறார்கள்

இது  புலத்தின் பலம்  என்பது  எமது பெரும் சக்தி என்பதை  அறியாதவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.