Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

தண்ணீருக்கு நிலத்தடி நீரை நம்பி இருக்கும் யாழுக்கு இப்படியான ஒன்றே மிகவும்  பொருத்தமானது .

  • Replies 63
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2019 at 1:01 PM, Jude said:

உலகில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் விசா பெற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அந்த நாடுகள் தான் விசா அலுவலகங்களை வடக்கு கிழக்கில் திறக்க வேண்டும். 

எந்தெந்த நாட்டு விசா வடக்கு கிழக்கில் பெறும் நிலையை விரும்புகிறீர்கள்?

  1. ஒருவருக்கு மற்றவர் உதவுவது ஏன்?
  2. ஈழத்தமிழனுக்கு ஏன்  ஒருத்தனும் உதவமாட்டான்?

நான் சொல்ல வந்தது .....எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை என்பது.....

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

நான் சொல்ல வந்தது .....எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை என்பது.....

ஏன் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை?

ஏன் நாம் எவருக்கும் பயனற்றவர்களாக இருக்கிறோம்?

9 hours ago, goshan_che said:

.இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

என்ன விதமான முயற்சிகள்?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

தண்ணீருக்கு நிலத்தடி நீரை நம்பி இருக்கும் யாழுக்கு இப்படியான ஒன்றே மிகவும்  பொருத்தமானது .

விவசாயத்தில் வரும் வருமானம் இன்றைய உலகில் நோய்க்கு மருந்து வாங்க கூட போதாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Jude said:

ஏன் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை?

ஏன் நாம் எவருக்கும் பயனற்றவர்களாக இருக்கிறோம்?

எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை......
பிரித்தானிய உருவாக்கிய சிறிலங்கா என்ற நாட்டை பாதுகாக்க வேணும் என்ற தற்பொழுதுள்ள வல்லாதிக்கசக்திக்களின் நிலை.....

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Jude said:

ஏன் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை?

ஏன் நாம் எவருக்கும் பயனற்றவர்களாக இருக்கிறோம்?

12 minutes ago, putthan said:

எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை......
பிரித்தானிய உருவாக்கிய சிறிலங்கா என்ற நாட்டை பாதுகாக்க வேணும் என்ற தற்பொழுதுள்ள வல்லாதிக்கசக்திக்களின் நிலை.....

எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு உருவாக மற்ற நாடுகளின் உதவி தேவை. ஆனால் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை. அதற்கு காரணம், எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை.

இந்த நிலையை Catch 22 என்று சொல்வார்கள். இந்த பிடியை உடைப்பது கடினம், ஆனால், உடைத்தால் விடுதலை நிச்சயம்.  உடைக்க முயற்சி செய்யலாமா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Dash said:

சுத்தம்

அங்கு உள்ளவர்கள் எப்படி அந்த விமான நிலையத்தை வைத்து எப்படி வெளி நாடு சென்று அசைலம் அடிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள்.

ஏன் விரைவில்  பாருங்கோ எவனாவது முகப்புத்தகத்தில் கதை கட்டுவான் அந்த விமான நிலையத்தில் இருந்து  சென்றால் இலகுவில் செல்லாம் என்றும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ என்பான் உடனே எல்லாறும் நம்பரை போட்டு விட்டு இருப்பார்கள்.

விமான நிலையத்தை வைத்து எப்படி அசூல் அடிப்பது? இப்படியான விமான நிலையம் வருவதால் எப்படி அசூல் அடிப்பது இலகுவாகும்?

5 hours ago, Jude said:

1987 - 1990 வரை இந்தியா பயன்படுத்தியது. சர்வதேச விமானநிலையமாக்கினால் தான் இந்தியாவால் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது சரியாக படவில்லை. ஏனைய நாட்டு இராணுவங்களுக்கும் இது பொருந்தும்.

இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படை பலாலி விமான நிலையத்தை அமைத்து தனது தேவைகளுக்கு பயன்படுத்தியது. 

இலங்கை சுதந்திரம் பெற்றதும் பலாலியிலிருந்து கொழும்பு, தென்னிந்தியாவுக்கு சிவில் விமானப்போக்குவரத்தை ஆரம்பித்தார்கள். 

பின் அவற்றை நிறுத்தி இலங்கை இராணுவம் பலாலி விமான நிலையத்தை இராணுவ தளமாக பயன்படுத்தியது. இந்திய அமைதிப்படையும் பயன்படுத்தியது.

பின் இராணுவம் நிலைகொண்டிருக்கவே பலாலி-கொழும்பு சிவில் விமான சேவையை நடத்தினார்கள்.

இப்பொழுது அபிவிருத்தி என்ற பெயரில் மீண்டும் பலாலி - இந்தியா விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளார்கள், சர்வதேச விமான நிலையமாக மேலும் விரிவுபடுத்துவது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் வசதியாக.

திருகோணமலை துறைமுகத்தை எதிர்காலத்தில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா கடற்படை தளமாக பயன்படுத்தும், பலாலி விமான நிலையத்தை அதே நாடுகள் வான்படைத்தளமாக பயன்படுத்தும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தண்ணீருக்கு நிலத்தடி நீரை நம்பி இருக்கும் யாழுக்கு இப்படியான ஒன்றே மிகவும்  பொருத்தமானது .

தண்ணீருக்கு நிலத்தடி நீரைக்கூட நம்பி இருக்க முடியாத இடங்களிலும் கூட சூழலியலை கருத்திலெடுத்து நல்ல முறையில் அபிவிருத்தி நடந்துள்ளது.

என் கருத்துப்படி, யாழில் ஆலைகள், விவசாயம் போன்ற அதிகம் தண்ணீர் செலவு ஆகும் தொழில்களை விட்டு விட்டு, வணிகம், global finance, IT போன்ற துறைகளுக்க்கான ஒரு regional hub ஆக கொண்டுவருவதே பொருத்தம். 

இப்படி செய்தால், குடிக்க, குளிக்க மட்டுமே நீர்பாவனை எனும் போது - நிலத்தடி நீர் மேலும் தேங்க ஒரு அவகாசமும் கிடைக்கும்.

இலங்கையில் பெய்யும் மழைக்கும், ஓடும் ஆறுகளுக்கும், நாட்டின் அளவோடு ஒப்பிட்டால், மனித தேவைக்கான நீர் ஒரு பிரச்சனையாகவே இருக்க கூடாது.

சென்னையின் வீராணம் குழாய்கள் போல, மத்திய மலைநாட்டில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் 150 மைலில் யாழை அடையலாம். தம்புள்ளவுக்கெ வடக்கே முழுதும் தட்ட்டையான நிலம் வேறு.

இதற்க்கெல்லாம் தூர நோக்குள்ள மத்திய அரசும், உரிமையுள்ள மாகாண அரசும் அமையவேண்டும். இங்குதான் இருக்கு பிரச்சனை.

7 hours ago, Jude said:

எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு உருவாக மற்ற நாடுகளின் உதவி தேவை. ஆனால் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை. அதற்கு காரணம், எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை.

இந்த நிலையை Catch 22 என்று சொல்வார்கள். இந்த பிடியை உடைப்பது கடினம், ஆனால், உடைத்தால் விடுதலை நிச்சயம்.  உடைக்க முயற்சி செய்யலாமா?

உண்மைதான். இந்த பிடி22 ஐ எப்படி உடைக்கலாம் என்கிறீர்கள்?

பலாலியை இலங்கையும் அது அனுமதிக்கும் நாடுகளும் ராணுவ விமானதளமாக பாவிக்கும் என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பில்லை.

இப்போ கட்டுநாயக்காவிலும் கூட இதுதானே நடைமுறை?

4 hours ago, goshan_che said:

பலாலியை இலங்கையும் அது அனுமதிக்கும் நாடுகளும் ராணுவ விமானதளமாக பாவிக்கும் என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பில்லை.

இப்போ கட்டுநாயக்காவிலும் கூட இதுதானே நடைமுறை?

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இலங்கையின் முதலாவது சர்வதேச விமான நிலையம். அனேகமாக அது சிவில் விமான நிலையமாக தொடர்ந்தும் இயங்கும்.

மத்தல இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம். மத்தலவில் ஆரம்பத்தில் 6 விமானங்களை ஓட விட்டனர். பின் பயணிகள் வீழ்ச்சி ஏற்பட்டதும் ஒரு விமானத்தை மட்டும் ஓட விட்டனர். பின் நெற்களஞ்சியமாகவும் பயன்படுத்தினர். விமானம் ஓட்டுவதை நிறுத்தியும் வைத்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற போது மாற்றாக மத்தலவை பயன்படுத்தினர். பின் இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்து இந்தியாவுடன் சேர்ந்து இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இப்பொழுது என்ன நிலை என தெரியவில்லை. மத்தல விமான நிலையமும் தேவைப்பட்டால் விமானப்படைத்தளமாக மாறும் சந்தர்ப்பம் உள்ளது.

பலாலி இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கில் தான் அதிக ஆர்வம். அமெரிக்க படை இலங்கைக்குள் காலடி வைப்பதாக இருந்தால் இலங்கையின் வடக்கு கிழக்கினுள் தான் முதலில் இறங்கும் என நினைக்கிறேன்.

அபிவிருத்திக்கு நான் எதிர் கிடையாது. பின்னணி காரணங்கள் பற்றியே கதைக்கிறேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Lara said:

நீங்கள் பிண்ணணி காரணங்களை அலசுவது புரிகிறது. 

நான் சொல்ல வந்தது என்னெவென்றால் கட்டுநாயக்க கூட ஹீத்ரோ, சென்னை, போல ஒரு தனி சிவில் விமான நிலையம் இல்லை என்பதைத்தான். கட்டுநாயக்கவின் ஓடுபாதையிம் ஒரு புறம் சிவில் மறுபுறம் விமானப்படைத் தளம். 

இரெண்டு பகுதியும் ஒரே, ஓடுபாதை, ஒரே கட்டுப்பாட்டு அறையத்தான் பயன்படுத்துவது.

போர்காலத்தில் சுப்பர் ஸோனிக் விமானங்கள் கட்டுநாயக்கவில் இருந்தே ஏறின.

புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, ஒன்றில் விமானப்படைத் தளத்தை மாற்றுங்கள் அல்லது இன்சூரஸ் பிரிமியம் கூடும் என காப்புறுதிக் கம்பெனிகள் கூறியதாக வாசித்த நினைவு:

இதே நிலைதான் பலாலியிலும் இருக்கும்.

1 hour ago, goshan_che said:

கட்டுநாயக்காவில் விமானப்படைத்தளம் இருப்பது தெரியும். ஆனால் அமெரிக்காவுக்கு வடக்கு கிழக்கில் தான் ஆர்வம் அதிகம். காரணம் தெற்கிலுள்ளது போல் வடக்கு கிழக்கில் சீன ஆதிக்கம் இல்லை, பலாலி விமான நிலைய அமைவிடம், திருகோணமலை துறைமுக அமைவிடம் காரணமாக அவற்றில் ஆர்வம் காட்டுகிறது.

சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கடற்படைத்தளத்தை அமைக்கும் எண்ணம் உள்ளது.

இப்போதைக்கு பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனாலும் வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக வருவதானால் தென்பகுதிக்கே செல்லும் வாய்ப்பு அதிகம். அங்கு சுற்றுலாப்பகுதிகள் அதிகம் உள்ளன. இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வருவோர் பலாலியை பயன்படுத்தலாம். ஆனால் பயணிகள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டால் பலாலியும் மத்தல விமான நிலையம் போலாகி விடும். 

எப்படியோ பொறுத்திருந்து பார்ப்பம். 

பலாலியிலிருந்து முதற்கட்டமாக பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத்துக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என்று அர்ஜுனா ரணதுங்க கூறியிருந்தாராம்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, மதுரை, சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதற்கமைய, கடந்த 05ஆம் நாள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

2.25 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டத்துக்கு இந்தியா 300 மில்லியன் ரூபாவை கொடையாக வழங்கவுள்ளது.

முதற்கட்டமாக, 950 மீற்றராக உள்ள பலாலி விமான நிலையத்தின்  ஓடுபாதை மீளமைப்புச் செய்யப்படவுள்ளது. இரண்டாவது கட்டமாக பெரிய விமானங்களை தரையிறக்கக் கூடிய வகையில் ஓடுபாதையின் நீளம் 2.3 கி.மீற்றராக  விரிவாக்கப்படவுள்ளது.

இதையடுத்து, பலாலி விமான நிலையத்துக்கு மத்தல மற்றும் கொழும்பு விமான நிலையங்களில் இருந்து  உள்நாட்டு மற்றும் வாடகை விமானங்கள் இயக்கப்படும்.

அத்துடன், முதற்கட்டமாக பெங்களூரு, கொச்சின், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்படும் என்றும்,  75 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைக் கொண்ட விமானங்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கே அதிகளவானோர் பயணம் மேற்கொள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும், தமிழ்நாட்டின், சென்னை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களைத் தவிர்த்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கே முதலில் பலாலியில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2019 at 11:22 PM, Jude said:

எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு உருவாக மற்ற நாடுகளின் உதவி தேவை. ஆனால் எமக்கு உதவி செய்வதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு எந்த லாபமும் இல்லை. அதற்கு காரணம், எமக்கு என்று ஒர் இறையான்மையுள்ள நாடு அல்லது பிரதேசம் இல்லாமை.

இந்த நிலையை Catch 22 என்று சொல்வார்கள். இந்த பிடியை உடைப்பது கடினம், ஆனால், உடைத்தால் விடுதலை நிச்சயம்.  உடைக்க முயற்சி செய்யலாமா?

On 7/8/2019 at 6:42 AM, goshan_che said:

.உண்மைதான். இந்த பிடி22 ஐ எப்படி உடைக்கலாம் என்கிறீர்கள்?

ஒரு அணுகுமுறையை பலமுறை பயன்படுத்தியும் வெற்றி கிடைக்காத நிலையில் மீண்டும் அதே அணுகுமுறையை பயன்படுத்துவது முட்டாள்தனமானது என ஐயன்ஸ்ரைன் சொல்லி இருப்பதை இவ்விடத்தில் நினைவு கூருதல் பொருத்தமானது. இந்த பிடி22 யை வெற்றி பெற இரண்டு வழிகள் உள்ளன.

  1. பிடி22 யை உடைப்பது. 
  2. பிடி22 யை தவிர்த்து வேறு பாதை வழியாக சென்று வெற்றி பெறுவது.

பல முறை முயன்றும் உடைக்க முடியாத பிடி22 யை உடைக்க மீண்டும் முயல்வது முட்டாள்தனமானது. பிடி22 யை உடைக்க முயற்சிக்கலாமா என்று கேட்டதும் நானே. அதற்கு காரணம் கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பதே.

இரெண்டாவது வழியே சரியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.